சிபியும், ராமனும், ராவணனும், சோழனும், பாண்டியனும் வாழ்ந்த அடையாளங்கள் நமது நூல்களிலும், அரசர்கள் எழுதி வைத்த செப்ப்பெடுகளிலும் இருக்கிறது என்று பார்த்தோம். இவர்களுள் ராமனை ஒதுக்கினால், சோழர்களையும் தமிழர்களிலிருந்து ஒதுக்குவதற்குச் சமமாகும். ராமனை எங்கோ வடக்கில் இருந்த ஆரியன் என்று சொன்னால், அதே அடையாளம் சோழனுக்கும் பொருந்தும் - என்றெல்லாம் பார்த்தோம்.
ஒரு நூறு வருடங்களுக்கு முன்வரை இவர்களுக்குள் வேறுபாட்டினை, நம் மக்கள் எண்ணியும் பார்த்ததில்லை. ஆனால் என்றைக்குத் தமது பூர்வீக படிப்பான, குரு குலப் படிப்பையும், குடும்பம் அல்லது குலம் சார்ந்த தொழில் படிப்பையும் ஒதுக்கி விட்டு, ஆங்கிலேயன் கொடுத்த படிப்பில் முழுவதும் ஒன்றினார்களோ, அன்றிலிருந்து பாரதம் முழுவதும் நிலவிய பாரம்பரிய சரித்திரத்தையும், மற்றும் பல துறை அறிவையும் மறந்து விட்டனர். அப்படி மறந்ததில் ஒன்றுதான் காலம் பற்றிய அறிவு.
அணுவுக்குள் அணுவாய், அப்பாலுக்கப்பாலாய் சுருங்கியும், விரிந்தும் இருந்த கோட்பாடுகளையும் அவற்றை ஊடுருவிய காலத்தையும் நம் பாரத நாட்டு மக்கள்தான் அறிந்திருந்தனர். பிரபஞ்சம் முழுவதும் விரிந்த காலத்தை பல் வேறு நிலைகளில் யுகம் என்று பகுத்திருந்தனர். அவர்கள் பலவிதமாகப் பகுத்த விவரங்கள், ஆங்கிலக் கல்வி முறையாலும், திராவிடவாதிகள் பிரசாரத்தினாலும் நாளடைவில் மறைந்து போனது. மறக்கடிக்கப்பட்டும் விட்டது.
இன்று அவற்றைத் தேடும் போது, அந்த விவரங்கள் துண்டு துண்டாக நமக்குக் கிடைக்கின்றன. அவற்றை ஆராயும் போது, எவ்வளவு அறிவு சார்ந்ததாக அவை இருக்கின்றன என்றும் தெரிகிறது. அவற்றைப் பற்றித் தெரிந்து கொண்டால், நம்முடைய பண்டைய சரித்திரத்தின் கால வீச்சினை ஓரளவேனும் தெரிந்து கொள்ள முடியும்.
முதலில் ராமன் பல லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தான் என்பதை எடுத்துக் கொள்வோம். லட்சக்கணக்கான வருடங்கள் அளவில் சதுர் மஹா யுகம் என்ற பகுப்பு வழங்கி வருகிறது. இது பிரபஞ்சத்தில் நாம் இருக்கும் பால் வெளி கலக்சியின் மையத்தை, நமது சூரிய மண்டலம் சுற்றி வருவதன் அடிப்படையில் பகுக்கக்ப் பட்டது.
இந்தப் படத்தில் நமது கலக்சியில் சூரியன் இருக்குமிடம் காட்டப்பட்டுள்ளது. மையப் பகுதியை சூரியனும், அதனுடன் சேர்ந்து நாமும் சுற்றி வருகிறோம்.
இந்த சுழற்சிக்காகும் காலத்தை பின்வருமாறு நம் முன்னோர்கள் பகுத்துள்ளார்கள்: -
12 மாதம் = 1 சூரிய வருடம் (சூரியன் நாம் பார்க்கும் 360 டிகிரி கொண்ட வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்.
அதாவது
இதே போல 14 மன்வந்திரங்கள் உள்ளன. (ஒவ்வொரு மன்வந்திரத்திலும் குறிப்பிட அடையாளங்களை உடைய மக்கள் தோன்றுவார்கள். )
இதையே இப்படியும் சொல்லலாம் :-
4,31,82,72,000 சூரிய வருடங்கள் = 1 கல்பம்
= 8,64,00,00,000 வருடங்கள்
அதாவது, மேற்சொன்ன 8,64,00,00,000 வருடங்களை ஒரு நாளின் காலமாகக் கொண்டு, அதன் அடிப்படையில் 100 வருடங்கள் எவ்வளவோ அவ்வளவே நாம் இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் மொத்தக் கால அளவு என்பது பாரதப் பாரம்பரிய நூல்களிலும், ஜோதிட சித்தாந்தங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இது சாத்தியம் என்று விண்வெளி அறிவியலும் சொல்கிறது. பிரம்மனின் கல்பம், அதாவது ஒரு பகல் அல்லது ஒரு இரவுப் பொழுது நேரத்தில், நாம் இருக்கும் சூரிய மண்டலம், நமது கலக்சியின் மையத்தை 20 முறை சுற்றி வந்து விடுகிறது என்று அறிவியல் காட்டுகிறது. இந்தக் காலக் கணக்கு, பிரபஞ்ச அளவில் உள்ள காலத்தின் கணக்கு.
இதில் இப்பொழுது நடக்கும் பிரம்மனின் பகல் பொழுது என்று சொல்லப்படும் கல்பம், வராஹ கல்பம் எனப்படும். இந்தக் கல்பம் ஆரம்பித்து ஆறு மன்வந்திரங்கள் ஆகி, ஏழாவது மன்வந்திரத்தில், 28 -ஆவது சதுர் மஹா யுகத்தில், கலி யுகம் ஆரம்பித்து இன்று 5112 -ஆவது வருடத்தில் நாம் இருக்கிறோம்.
இந்தக் கணக்கெல்லாம், யாரோ ஆரியன் கொடுத்தார்கள் என்று திராவிடவாதிகள் சொல்லலாம். முன்பு பார்த்தோமே, கரிகாலன் போன்ற தமிழ் அரசர்களும், மக்களும், இந்தக் காலக் கணக்கைத்தான் பின் பற்றினர். சங்க நூலான பரிபாடலில் பிரபஞ்சமும், உலகங்களும் தோன்றின விதத்தை எப்படி இன்றைக்கு அறிவியல் சொல்கிறதோ அதே போல விவரிக்கின்றன. அது மட்டுமல்ல, இந்தக் கல்பம் ஆரம்பமான போது பூமி நீரில் மூழ்கி இருந்தது என்றும், அதைத் தன் கொம்பினால், வராஹமானது வெளியே கொண்டு வந்தது என்றும் பரிபாடல் செய்யுள்கள் சொல்கின்றன. (பரிபாடல் - 2 & 4 )
ஒரு சமயம் எங்கும் கடலே இருந்தது. நிலப்பகுதி வெளியில் தெரியவில்லை. பிறகு நிலப்பகுதிகள் மேலே எழும்பியதை வராஹ அவதாரம் என்கிறோம். நிலம் வெளியே எழுந்த அறிவியல் உண்மையை வராஹ அவதாரம் விவரிக்கிறது.. அப்படி நிலப் பகுதி வெளி வந்த காலத்தில் இந்தக் கல்பம் ஆரம்பித்தது. அன்று முதல் இந்தக் கட்டுரை எழுதும் இந்நாள் வரையில், 196,08,53,111 வருடங்கள் ஆகி விட்டன. இப்படி பிரபஞ்ச அளவில் நாம் வாழும் காலத்தின் கணக்கைத் தருவதுதான் இந்த கல்பத்தையும், சதுர் மஹா யுகங்களையும் அடக்கிய கால அளவு.
சதுர் மஹா யுக அளவில், விண்வெளி சார்ந்த விவரங்களைத் தருவார்கள். உதாரணமாக, கலி யுகம் எப்பொழுது ஆரம்பித்தது என்று கேட்டால், நவகிரகங்களும் மேஷ ராசியில் பூஜ்யம் பாகையில் ஒன்றாகக் கூடினால் அன்று கலி யுகம் ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். இந்தக் கலி யுகத்தின் கால அளவு, 4,32,000 வருடங்கள். இது அடிப்படை அளவு.
இதைப் போன்ற இரண்டு மடங்கு கால அளவு, அதாவது 8,64,000 வருடங்கள் உள்ளது துவாபர யுகம்.
கலி யுக அளவைப் போன்ற மூன்று மடங்கு கால அளவு கொண்டது த்ரேதா யுகம் (12,96,000 வருடங்கள்)
கலி யுக அளவைப் போன்ற நான்கு மடங்கு கால அளவு கொண்டது கிருத யுகம் (17,28,000 வருடங்கள்)
இந்த காலக் கணக்கின் அடிப்படையில், ராமன் த்ரேதா யுகத்தில் பல லட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்தான் என்று இன்று மக்கள் நினைக்கின்றனர். அதனால் ராமன் வாழ்ந்தான் என்பது கட்டுக் கதை என்றும் முடிவு கட்டுகின்றனர்.
பிரபஞ்ச அளவிலான கணக்கை, மக்கள் வாழ்க்கையுடன் முடிச்சு போடவே இந்தக் குழப்பம வருகிறது. ஆனால் இந்தப் பிரபஞ்சக் கணக்கு, சூரியனும், சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களும் அவ்வப்பொழுது ஒவ்வொருவிதமான சேர்க்கையில் வருவதன் அடிப்படையில் எழுந்தது. கலி யுகம் ஆரம்பிக்கும் போது எப்படிப்பட்ட சேர்க்கை இருக்கும் என்று பார்த்தோம், அது போல ஒவ்வொரு யுகம் ஆரம்பிக்கும் போதும், நம் கலக்சீக்கு அப்பால் உள்ள மண்டலத்தின் அடிப்படையிலும் சேர்க்கை நடப்பதைக் கொண்டு சொல்லியுள்ளார்கள். உதாரணமாக, கிருத யுகம் ஆரம்பிக்கும் போது, இந்தச் சேர்க்கை மேஷ ராசியில் நடப்பதில்லை. கடக ராசியில் உள்ள பூச நட்சத்திரத்துக்கு நேராக அமைகிறது. யுகம் என்று, பொது வார்த்தையாகச் சொல்வதனால், குழப்பம் வந்து விட்டது எனலாம்.
எனவே யுகம் என்றால் என்ன என்று பார்ப்போம். 'யுக்மா ' என்ற சொல்லிலிருந்து யுகம் என்ற சொல் வந்தது. யுக்மா என்றால், இரட்டை அல்லது இரண்டு விஷயங்கள் ஒன்றாக இருத்தல் என்று பொருள். யோகா என்பது எல்லோருக்கும் தெரியும். இந்தச் சொல்லும் யுக்மா என்பதிலிருந்துதான் வந்தது. யோகாசனம் செய்யும் போது, உடலும், உள்ளமும் ஒருங்கிணைத்து செய்யப்பட வேண்டும். அதனால்தான் சாதாரண உடற்பயிற்சியிலிருந்து யோகாசனம் வேறுபடுகிறது. இப்படி உடல், உள்ளச் சேர்க்கை இருப்பதால் அது யோகா என்றாயிற்று.
இப்படிச் சேர்வதைப் பலவிதமாகக் காணலாம். வானில் சூரியனும், சந்திரனும் சேர்ந்தால் அது அமாவாசை எனப்படும். அப்படி ஒரு குறிப்பிட்ட வானப் பின்னணியில், ஒரு முறை சூரியனும், சந்திரனும் சேர்ந்த பிறகு, மீண்டும் அதே இடத்தில் சேர்வதை ஒரு யுகம் என்றார்கள்.
இதற்கு ஆரம்பம் மேஷ ராசியின் பூஜ்யம் பாகை என்று எடுத்துக் கொண்டார்கள்.
அந்தப் புள்ளியில் சூரியனும் சந்திரனும் சேர்ந்ததற்குப் பிறகு, அவை இரண்டும் வெவ்வேறு வேகத்தில், வானத்தைச் சுற்றுகின்றன. அந்த இடத்தில் மீண்டும் அவை இரண்டும் சந்திக்க ஐந்து வருடங்கள் ஆகின்றன. அதை ஒரு யுகம் என்றனர். ஆனால் அதற்குள் சந்திரனது வேகமான ஓட்டத்தால், ஒரு மாதம் அதிகம் வந்து விடுகிறது. அது இரண்டரை வருடங்களிலேயே வந்து விடுகிறது. எனவே இரண்டு, இரண்டரை சேர்த்து ஒரு யுகம் என்றானது. இதில் முதல் இரண்டரை ஏறு முகம், (ஆரோஹணம்) அடுத்த இரண்டரை இறங்கு முகம் (அவரோஹணம்) என்று கணக்கு செய்தனர்.
இதுதான் யுகம் என்பதன் அடிப்படை. ஒரு யுகத்தில் ஒரு ஏறு முகம், ஒரு இறங்கு முகம் - என்றும் இருக்கும். இது அடிப்படை கால அளவீடு. இதைப் பஞ்ச வருஷாத்மிக யுகம் என்றனர். இந்தக் கால அடிப்படையில்தான் வேத யாகங்கள், ஹோமங்கள் போன்றவற்றைச் செய்தனர். இந்த அடிப்படைக் கால அளவீட்டினை படிப்படியாக ஒவ்வொரு நிலைக்கும் கொண்டு போய, நாம் மேலே பார்த்தோமே அப்படிப் பிரபஞ்ச அளவிலான யுகங்கள், காலம் என்று பகுத்தனர்.
அப்படி ஐந்து வருடங்கள் கொண்ட யுகங்கள் 12 - ஐக் கொண்டது வியாழன் அல்லது ப்ரஹச்பதி என்று சொல்லப்படும் குருவின் காலச் சுற்று.
அதன் மொத்த அளவு 5 X 12 = 60 வருடங்கள்.
பிரபவ, விபவ என்று ஆரம்பிக்கும் வருடங்களின் பெயர்கள் இருக்கின்றனவே, அவை குருவின் அறுபது வருட காலத்திற்குத்தான் முதலில் இருந்தது.
ஆனால் அது பிரபவ என்னும் பெயரில் ஆரம்பிக்கவில்லை.
'விஜய' என்னும் வருடத்தின் பெயரில் ஆரம்பித்தது.
இதைப் பற்றிய விவரங்களை ஜோதிட நூல்களில் காணலாம். இங்கு நமக்குத் தேவையான விவரங்களை மட்டும் பார்ப்போம்.
மனித வாழ்கையின் முக்கிய அடிப்படை தர்மமும், கர்மமும் ஆகும். ஒருவர் முன் ஜன்மத்தில் செய்த தர்ம, கர்மத்தின் அடிப்படையில்தான் இந்த ஜன்மம் அமைகிறது என்பதாலே இப்படி சொல்லப்படுகிறது. ராசிச் சக்கரத்தில் தர்மம், கர்மம் ஆகியவற்றின் அதிபதிகள் குரு கிரகமும், சனி கிரகமும் ஆகும். அதனால் அந்த குரு, சனி கிரகங்களின் சேர்க்கை ஒரு யுகம் ஆயிற்று. அதாவது, இந்த இரண்டு கிரகங்களும், ஒருமுறை ஓரிடத்தில் சந்தித்துவிட்ட பிறகு, மீண்டும் அதே இடத்தில் சந்திக்க 60 வருடங்கள் ஆகின்றன. இதுவே மனிதனது வாழ்க்கையின் அளவு.
குருவின் சுற்றுக்கான வருடப் பெயர்கள், மனித வாழ்கையின் கால அளவுக்கும் பொருந்தும். நாம் சூரியனது சுழற்சியின் அடிப்படையிலான வருடக் கணக்கைக் கொண்டுள்ளதால் அந்தப் பெயர்கள் சூரிய வருடத்துக்கும் வந்தன. இதில் ஆரியத் தனம் எதுவும் கிடையாது. என்றைக்கு ஆரம்பித்தது என்று தெரியாமல், என்றென்றும், பாரதம் முழுவதும், தமிழ் நாடு உட்பட- இந்தக் கால அளவீடு நடை முறையில் இருந்திருக்கிறது.
இதில் ஒரு ஏறு முகம், ஒரு இறங்கு முகம் வருவது ஒரு முழு சுற்று ஆகும். ஒரு மனிதனின் முதல் 60 வருடங்கள் ஏறு முகம். அது வளரும் காலம். அது முடிந்தவுடன், மனிதன் மீண்டும் பிறப்பதாகக் கொண்டு அறுபதாம் கல்யாணம் என்று செய்கிறார்கள். இது உண்மையில் ஆயுள் விருத்திக்குச் செய்யும் ஹோமம் ஆகும். அடுத்த 60 வருடங்கள் இறங்கு முகம். 60 + 60 = 120 வருடங்கள் கொண்டது மனிதனின் முழு ஆயுள். இதன் அடிப்படையில் கிரக தசைகள் 120 வருடங்களுக்கு வருகின்றன.
தர்ம யுகம்
இது தவிர யுகம் என்பது அரசாளும் மன்னனைப் பொருத்தது என்று மஹாபாரதம் மீண்டும் மீண்டும் கூறுகிறது. நாட்டில் நல்லாட்சி நடந்தால், அதாவது தர்மம் தழைத்தோங்கினால் அது கிருத யுகம். தர்மத்தை ஒரு பசுவின் நான்கு கால்களாக பாவித்து, அது கிருத யுகம் என்று சொல்லப்பட்டுள்ளது. கால் பங்கு தர்மம் குறைந்தால் பசுவின் ஒரு கால் உடைத்து விட்டது என்றும், அது த்ரேதா யுகம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. தர்மம் அரை பங்கே இருந்தால் அது துவாபர யுகம் என்றும், கால் பங்கு இருந்தால் கலி யுகம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இது குறித்த எனது ஆங்கிலக் கட்டுரையை இங்கே படிக்கவும். Yuga Classification and how Yuga must be understood
இந்த தர்ம யுகத்தின் அடிப்படையில் ராமன் த்ரேதா யுகத்தில் பிறந்துள்ளான். முதலாம் ராஜேந்திர சோழனது திருவாலங்காட்டுச் செப்பேட்டில் இந்த யுகம் அடிப்படையில் சோழர் வம்சாவளி கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி 2000 ஆண்டுகளுக்கு முன்தான் கலி யுகம் (தர்ம அடிப்படையில்) ஆரம்பித்தது. விண்வெளி அடிப்படையில், கிரக அடிப்படையில் கலி மகா யுகம், கிருஷ்ணன் இறந்த அன்று ஆரம்பித்தது. அந்தக் கணக்கை நாம் சங்கல்ப மந்திரத்தில் கூறுகிறோம்.
இந்த விவரங்களிலிருந்து நமக்குக் கிடைக்கும் சில கருத்துக்கள்

1 வருடம் = 12 மாதம்
43,20,000 வருடங்கள் = 1 சதுர் யுகம் = 4 யுகங்கள் (சத்ய யுகம் + திரேதா யுகம் + த்வாபர யுகம் + கலி யுகம் )
71 சதுர் யுகம் = 30,67,20,000 சூரிய வருடங்கள் = 1 மன்வந்திரம்
இதே போல 14 மன்வந்திரங்கள் உள்ளன. (ஒவ்வொரு மன்வந்திரத்திலும் குறிப்பிட அடையாளங்களை உடைய மக்கள் தோன்றுவார்கள். )
ஒவ்வொரு மன்வந்திரமும் ஒரு சத்ய யுக காலம் 'சந்தி' என்னும் இடைப்பட்ட காலத்தைக் கொண்டு வரும். எனவே
1 மன்வந்திரம் + 1 சந்தி = 30,67,20,000 சூரிய வருடங்கள் .
14 சந்தி + 14 மன்வந்திரம் = 4,31,82,72,000 சூரிய வருடங்கள்
இதையே இப்படியும் சொல்லலாம் :-
4,31,82,72,000 சூரிய வருடங்கள் = 1 கல்பம்
1 கல்பம் + 1 கல்ப சந்தி = 4,32,00,00,000 சூரிய வருடங்கள்
4,32,00,00,000 சூரிய வருடங்கள் அல்லது 1 கல்பம் = நான்முகப் பிரம்ம தேவனின் ஒரு பகல் பொழுது.
அதே கல்ப அளவு பிரம்ம தேவனின் ஒரு இரவு ஆகும்
ஆக 1 பகல் கல்பம் + 1 இரவு கல்பம் = பிரம்ம தேவனின் ஒரு நாள்
= 8,64,00,00,000 வருடங்கள்
இந்த நாட்கள் 360 கொண்டது பிரம்மனின் ஒரு வருடம்.
அப்படிப்பட்ட வருடங்கள் 100 கொண்டது பிரம்மனின் ஆயுள்.
அதாவது, மேற்சொன்ன 8,64,00,00,000 வருடங்களை ஒரு நாளின் காலமாகக் கொண்டு, அதன் அடிப்படையில் 100 வருடங்கள் எவ்வளவோ அவ்வளவே நாம் இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் மொத்தக் கால அளவு என்பது பாரதப் பாரம்பரிய நூல்களிலும், ஜோதிட சித்தாந்தங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இது சாத்தியம் என்று விண்வெளி அறிவியலும் சொல்கிறது. பிரம்மனின் கல்பம், அதாவது ஒரு பகல் அல்லது ஒரு இரவுப் பொழுது நேரத்தில், நாம் இருக்கும் சூரிய மண்டலம், நமது கலக்சியின் மையத்தை 20 முறை சுற்றி வந்து விடுகிறது என்று அறிவியல் காட்டுகிறது. இந்தக் காலக் கணக்கு, பிரபஞ்ச அளவில் உள்ள காலத்தின் கணக்கு.
இதில் இப்பொழுது நடக்கும் பிரம்மனின் பகல் பொழுது என்று சொல்லப்படும் கல்பம், வராஹ கல்பம் எனப்படும். இந்தக் கல்பம் ஆரம்பித்து ஆறு மன்வந்திரங்கள் ஆகி, ஏழாவது மன்வந்திரத்தில், 28 -ஆவது சதுர் மஹா யுகத்தில், கலி யுகம் ஆரம்பித்து இன்று 5112 -ஆவது வருடத்தில் நாம் இருக்கிறோம்.
இந்தக் கணக்கெல்லாம், யாரோ ஆரியன் கொடுத்தார்கள் என்று திராவிடவாதிகள் சொல்லலாம். முன்பு பார்த்தோமே, கரிகாலன் போன்ற தமிழ் அரசர்களும், மக்களும், இந்தக் காலக் கணக்கைத்தான் பின் பற்றினர். சங்க நூலான பரிபாடலில் பிரபஞ்சமும், உலகங்களும் தோன்றின விதத்தை எப்படி இன்றைக்கு அறிவியல் சொல்கிறதோ அதே போல விவரிக்கின்றன. அது மட்டுமல்ல, இந்தக் கல்பம் ஆரம்பமான போது பூமி நீரில் மூழ்கி இருந்தது என்றும், அதைத் தன் கொம்பினால், வராஹமானது வெளியே கொண்டு வந்தது என்றும் பரிபாடல் செய்யுள்கள் சொல்கின்றன. (பரிபாடல் - 2 & 4 )
ஒரு சமயம் எங்கும் கடலே இருந்தது. நிலப்பகுதி வெளியில் தெரியவில்லை. பிறகு நிலப்பகுதிகள் மேலே எழும்பியதை வராஹ அவதாரம் என்கிறோம். நிலம் வெளியே எழுந்த அறிவியல் உண்மையை வராஹ அவதாரம் விவரிக்கிறது.. அப்படி நிலப் பகுதி வெளி வந்த காலத்தில் இந்தக் கல்பம் ஆரம்பித்தது. அன்று முதல் இந்தக் கட்டுரை எழுதும் இந்நாள் வரையில், 196,08,53,111 வருடங்கள் ஆகி விட்டன. இப்படி பிரபஞ்ச அளவில் நாம் வாழும் காலத்தின் கணக்கைத் தருவதுதான் இந்த கல்பத்தையும், சதுர் மஹா யுகங்களையும் அடக்கிய கால அளவு.
சதுர் மஹா யுக அளவில், விண்வெளி சார்ந்த விவரங்களைத் தருவார்கள். உதாரணமாக, கலி யுகம் எப்பொழுது ஆரம்பித்தது என்று கேட்டால், நவகிரகங்களும் மேஷ ராசியில் பூஜ்யம் பாகையில் ஒன்றாகக் கூடினால் அன்று கலி யுகம் ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். இந்தக் கலி யுகத்தின் கால அளவு, 4,32,000 வருடங்கள். இது அடிப்படை அளவு.
இதைப் போன்ற இரண்டு மடங்கு கால அளவு, அதாவது 8,64,000 வருடங்கள் உள்ளது துவாபர யுகம்.
கலி யுக அளவைப் போன்ற மூன்று மடங்கு கால அளவு கொண்டது த்ரேதா யுகம் (12,96,000 வருடங்கள்)
கலி யுக அளவைப் போன்ற நான்கு மடங்கு கால அளவு கொண்டது கிருத யுகம் (17,28,000 வருடங்கள்)
இந்த காலக் கணக்கின் அடிப்படையில், ராமன் த்ரேதா யுகத்தில் பல லட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்தான் என்று இன்று மக்கள் நினைக்கின்றனர். அதனால் ராமன் வாழ்ந்தான் என்பது கட்டுக் கதை என்றும் முடிவு கட்டுகின்றனர்.
பிரபஞ்ச அளவிலான கணக்கை, மக்கள் வாழ்க்கையுடன் முடிச்சு போடவே இந்தக் குழப்பம வருகிறது. ஆனால் இந்தப் பிரபஞ்சக் கணக்கு, சூரியனும், சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களும் அவ்வப்பொழுது ஒவ்வொருவிதமான சேர்க்கையில் வருவதன் அடிப்படையில் எழுந்தது. கலி யுகம் ஆரம்பிக்கும் போது எப்படிப்பட்ட சேர்க்கை இருக்கும் என்று பார்த்தோம், அது போல ஒவ்வொரு யுகம் ஆரம்பிக்கும் போதும், நம் கலக்சீக்கு அப்பால் உள்ள மண்டலத்தின் அடிப்படையிலும் சேர்க்கை நடப்பதைக் கொண்டு சொல்லியுள்ளார்கள். உதாரணமாக, கிருத யுகம் ஆரம்பிக்கும் போது, இந்தச் சேர்க்கை மேஷ ராசியில் நடப்பதில்லை. கடக ராசியில் உள்ள பூச நட்சத்திரத்துக்கு நேராக அமைகிறது. யுகம் என்று, பொது வார்த்தையாகச் சொல்வதனால், குழப்பம் வந்து விட்டது எனலாம்.
எனவே யுகம் என்றால் என்ன என்று பார்ப்போம். 'யுக்மா ' என்ற சொல்லிலிருந்து யுகம் என்ற சொல் வந்தது. யுக்மா என்றால், இரட்டை அல்லது இரண்டு விஷயங்கள் ஒன்றாக இருத்தல் என்று பொருள். யோகா என்பது எல்லோருக்கும் தெரியும். இந்தச் சொல்லும் யுக்மா என்பதிலிருந்துதான் வந்தது. யோகாசனம் செய்யும் போது, உடலும், உள்ளமும் ஒருங்கிணைத்து செய்யப்பட வேண்டும். அதனால்தான் சாதாரண உடற்பயிற்சியிலிருந்து யோகாசனம் வேறுபடுகிறது. இப்படி உடல், உள்ளச் சேர்க்கை இருப்பதால் அது யோகா என்றாயிற்று.
இப்படிச் சேர்வதைப் பலவிதமாகக் காணலாம். வானில் சூரியனும், சந்திரனும் சேர்ந்தால் அது அமாவாசை எனப்படும். அப்படி ஒரு குறிப்பிட்ட வானப் பின்னணியில், ஒரு முறை சூரியனும், சந்திரனும் சேர்ந்த பிறகு, மீண்டும் அதே இடத்தில் சேர்வதை ஒரு யுகம் என்றார்கள்.
இதற்கு ஆரம்பம் மேஷ ராசியின் பூஜ்யம் பாகை என்று எடுத்துக் கொண்டார்கள்.
அந்தப் புள்ளியில் சூரியனும் சந்திரனும் சேர்ந்ததற்குப் பிறகு, அவை இரண்டும் வெவ்வேறு வேகத்தில், வானத்தைச் சுற்றுகின்றன. அந்த இடத்தில் மீண்டும் அவை இரண்டும் சந்திக்க ஐந்து வருடங்கள் ஆகின்றன. அதை ஒரு யுகம் என்றனர். ஆனால் அதற்குள் சந்திரனது வேகமான ஓட்டத்தால், ஒரு மாதம் அதிகம் வந்து விடுகிறது. அது இரண்டரை வருடங்களிலேயே வந்து விடுகிறது. எனவே இரண்டு, இரண்டரை சேர்த்து ஒரு யுகம் என்றானது. இதில் முதல் இரண்டரை ஏறு முகம், (ஆரோஹணம்) அடுத்த இரண்டரை இறங்கு முகம் (அவரோஹணம்) என்று கணக்கு செய்தனர்.
இதுதான் யுகம் என்பதன் அடிப்படை. ஒரு யுகத்தில் ஒரு ஏறு முகம், ஒரு இறங்கு முகம் - என்றும் இருக்கும். இது அடிப்படை கால அளவீடு. இதைப் பஞ்ச வருஷாத்மிக யுகம் என்றனர். இந்தக் கால அடிப்படையில்தான் வேத யாகங்கள், ஹோமங்கள் போன்றவற்றைச் செய்தனர். இந்த அடிப்படைக் கால அளவீட்டினை படிப்படியாக ஒவ்வொரு நிலைக்கும் கொண்டு போய, நாம் மேலே பார்த்தோமே அப்படிப் பிரபஞ்ச அளவிலான யுகங்கள், காலம் என்று பகுத்தனர்.
அப்படி ஐந்து வருடங்கள் கொண்ட யுகங்கள் 12 - ஐக் கொண்டது வியாழன் அல்லது ப்ரஹச்பதி என்று சொல்லப்படும் குருவின் காலச் சுற்று.
அதன் மொத்த அளவு 5 X 12 = 60 வருடங்கள்.
பிரபவ, விபவ என்று ஆரம்பிக்கும் வருடங்களின் பெயர்கள் இருக்கின்றனவே, அவை குருவின் அறுபது வருட காலத்திற்குத்தான் முதலில் இருந்தது.
ஆனால் அது பிரபவ என்னும் பெயரில் ஆரம்பிக்கவில்லை.
'விஜய' என்னும் வருடத்தின் பெயரில் ஆரம்பித்தது.
இதைப் பற்றிய விவரங்களை ஜோதிட நூல்களில் காணலாம். இங்கு நமக்குத் தேவையான விவரங்களை மட்டும் பார்ப்போம்.
மனித வாழ்கையின் முக்கிய அடிப்படை தர்மமும், கர்மமும் ஆகும். ஒருவர் முன் ஜன்மத்தில் செய்த தர்ம, கர்மத்தின் அடிப்படையில்தான் இந்த ஜன்மம் அமைகிறது என்பதாலே இப்படி சொல்லப்படுகிறது. ராசிச் சக்கரத்தில் தர்மம், கர்மம் ஆகியவற்றின் அதிபதிகள் குரு கிரகமும், சனி கிரகமும் ஆகும். அதனால் அந்த குரு, சனி கிரகங்களின் சேர்க்கை ஒரு யுகம் ஆயிற்று. அதாவது, இந்த இரண்டு கிரகங்களும், ஒருமுறை ஓரிடத்தில் சந்தித்துவிட்ட பிறகு, மீண்டும் அதே இடத்தில் சந்திக்க 60 வருடங்கள் ஆகின்றன. இதுவே மனிதனது வாழ்க்கையின் அளவு.
குருவின் சுற்றுக்கான வருடப் பெயர்கள், மனித வாழ்கையின் கால அளவுக்கும் பொருந்தும். நாம் சூரியனது சுழற்சியின் அடிப்படையிலான வருடக் கணக்கைக் கொண்டுள்ளதால் அந்தப் பெயர்கள் சூரிய வருடத்துக்கும் வந்தன. இதில் ஆரியத் தனம் எதுவும் கிடையாது. என்றைக்கு ஆரம்பித்தது என்று தெரியாமல், என்றென்றும், பாரதம் முழுவதும், தமிழ் நாடு உட்பட- இந்தக் கால அளவீடு நடை முறையில் இருந்திருக்கிறது.
இதில் ஒரு ஏறு முகம், ஒரு இறங்கு முகம் வருவது ஒரு முழு சுற்று ஆகும். ஒரு மனிதனின் முதல் 60 வருடங்கள் ஏறு முகம். அது வளரும் காலம். அது முடிந்தவுடன், மனிதன் மீண்டும் பிறப்பதாகக் கொண்டு அறுபதாம் கல்யாணம் என்று செய்கிறார்கள். இது உண்மையில் ஆயுள் விருத்திக்குச் செய்யும் ஹோமம் ஆகும். அடுத்த 60 வருடங்கள் இறங்கு முகம். 60 + 60 = 120 வருடங்கள் கொண்டது மனிதனின் முழு ஆயுள். இதன் அடிப்படையில் கிரக தசைகள் 120 வருடங்களுக்கு வருகின்றன.
தர்ம யுகம்
இது தவிர யுகம் என்பது அரசாளும் மன்னனைப் பொருத்தது என்று மஹாபாரதம் மீண்டும் மீண்டும் கூறுகிறது. நாட்டில் நல்லாட்சி நடந்தால், அதாவது தர்மம் தழைத்தோங்கினால் அது கிருத யுகம். தர்மத்தை ஒரு பசுவின் நான்கு கால்களாக பாவித்து, அது கிருத யுகம் என்று சொல்லப்பட்டுள்ளது. கால் பங்கு தர்மம் குறைந்தால் பசுவின் ஒரு கால் உடைத்து விட்டது என்றும், அது த்ரேதா யுகம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. தர்மம் அரை பங்கே இருந்தால் அது துவாபர யுகம் என்றும், கால் பங்கு இருந்தால் கலி யுகம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இது குறித்த எனது ஆங்கிலக் கட்டுரையை இங்கே படிக்கவும். Yuga Classification and how Yuga must be understood
இந்த தர்ம யுகத்தின் அடிப்படையில் ராமன் த்ரேதா யுகத்தில் பிறந்துள்ளான். முதலாம் ராஜேந்திர சோழனது திருவாலங்காட்டுச் செப்பேட்டில் இந்த யுகம் அடிப்படையில் சோழர் வம்சாவளி கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி 2000 ஆண்டுகளுக்கு முன்தான் கலி யுகம் (தர்ம அடிப்படையில்) ஆரம்பித்தது. விண்வெளி அடிப்படையில், கிரக அடிப்படையில் கலி மகா யுகம், கிருஷ்ணன் இறந்த அன்று ஆரம்பித்தது. அந்தக் கணக்கை நாம் சங்கல்ப மந்திரத்தில் கூறுகிறோம்.
இந்த விவரங்களிலிருந்து நமக்குக் கிடைக்கும் சில கருத்துக்கள்
- லட்சக்கணக்கான ஆண்டுகளில் வரும் மஹா யுகம் விண்வெளியில் சூரியன் செல்லும் சுழற்சி சம்பந்தப்பட்டவை.
- அறிவியலார் ஆராய்ச்சியின்படி, பனி யுகம் முடிந்து, இன்றைய மனித நாகரீகம் வளர ஆரம்பித்தது. ரிக் வேத, இராமாயண, மகாபாரத , புராணக் கதைகள் ஆரம்பமானது இதற்குப் பிறகுதான். இது தர்ம யுகம் பாற்பட்டது.
- கிருத யுகம் என்று மேல சொல்லப்பட்ட காலக்கட்டத்தில், மக்கள் சாதுக்களாக, ஆன்மீக வளர்ச்சி அடைந்தவர்களாய் இருந்திருக்கின்றனர். மகாபாரதத்தில் அனுமன், பீமனைச் சந்திக்கும் சம்பவம் ஒன்று வருகிறது. (மஹா பாரதம் - 3- 148) . அதில் அனுமன் யுகங்களை விவரிக்கிறார். அவர் சொல்லும் கிருத யுகத்தில் தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், நாகர்கள் என்ற பிரிவுகள் இல்லை. பணமோ, பொருளோ கொடுத்து சாமான்களை விற்பதும், வாங்குவதும் இல்லை. இயற்கையில் கிடைத்ததைக் கொண்டு மக்கள் திருப்தியுடன் இருந்தனர். எல்லா மக்களும், ஆன்மீகத்தில் நிலை பெற்றிருந்தனர். ரிக் வேதம் அப்பொழுது எழுந்தது. அதன் பிறகு வந்த த்ரேதா யுகத்தில் இந்த மக்கள் பிரிவுகள் வந்தன. அப்போழுது சாம, யஜூர் வேதங்கள் வந்தன. அதற்குப் பிறகு வந்த துவாபர யுகத்தில் வேதங்கள் நான்காகப் பிரிக்கப்பட்டன என்கிறார்.
- ஐரோப்பியப் பகுதிகளில் பனி உருகியதால், மக்கள் ஆங்காங்கே இடம் பெயர்ந்துள்ளனர். உதாரணமாக, இங்கிலாந்தும் பிரான்சும் முன்னாளில் நிலத் தொடர்பு கொண்டிருந்தது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கி-மு- 6,500 வாக்கில் கடல் எழும்பி வரவே அந்த நிலத் தொடர்பு வழி கடலுக்குள் மறைந்து விட்டது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
- பனி யுகம் முடிந்ததால், உலகெங்கும், பனி உருகி, நிலப் பகுதிகள் தெரிய ஆரமபித்தன. பனி உருகியதால், கடல் மட்டம் உயர்ந்து கொண்டே வந்தது. அதனால் கடலை ஒட்டிய நிலப்பகுதிகள் நீரில் மூழ்கின. அப்படி மூழ்கிய பகுதிகள் இந்தியாவைப் பொறுத்த மட்டில், குஜராத், தென்னிந்தியா ஆகிய பகுதிகள் ஆகும். இது அறிவியல் செய்தி.
- அதில் முக்கிய இடம் பூம்புகார்.
- மற்ற பகுதிகள் குமரிக் கண்டம் என்று சங்க நூல்கள் தெரிவிக்கின்றன.
- ஆரியப் படையெடுப்பு நடந்தது என்று சொல்லப்படும் காலத்துக்கு முன்பே ராமாயண, மகாபாரதம் நடந்து விட்டது என்பது வராஹ மிஹிரர் கொடுக்கும் சப்த ரிஷி அமைப்பின் மூலம் தெரிகிறது.
- சிந்து சமவெளி நாகரீகம் ஆரம்பித்தது என்று மாக்ஸ் முல்லர் அவர்களால் சொல்லப்பட்டது கி-மு- 3000 ஆண்டுகளில். அந்தக் காலக் கட்டத்தில் மகாபாரதப்போர் முடிந்து விட்டிருக்கிறது. எனவே சிந்து சமவெளி நாகரீகம் என்பது மகாபாரதக் காலத்திற்குப் பிற் பட்டது அல்லது அப்பொழுது இருந்த மக்களின் தொடர்ச்சியே என்றும் தெரிகிறது.
திருமதி ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களே,
பதிலளிநீக்குஎனக்கு இதுவரை பிரபஞ்ச சதுர யுகம் மட்டுமே தெரிந்திருந்தது.இப்பொழுது தான் மானிட அளவிலான சதுர்யுகம் பற்றி தெரிந்து கொண்டேன்.மிகச் சிறந்த பிரமிப்பூட்டும் பதிவு .அறிவியலின் காலக் கணக்கும், நம் காலக்கணக்கும் மிகுந்த இணக்கத்துடன் இருப்பதை பற்றியும் நன்றாகக் கூறியிருக்கிறீர்கள்.இந்த நம் காலக்கணக்கை கண்டு பல வெளிநாட்டு அறிஞர்கள் வியந்து குறிப்பிட்டுள்ளனர்.எடுத்துக்காட்டாக..
1 ."கல்பம்" என்ற ஆண்டுக் கணக்கை பயன்படுத்திய இந்திய தத்துவ அறிஞர்களுக்கு, "ஒளி ஆண்டு" கணக்கு எப்படி வியப்பூட்டும் விஷயம் அல்லவோ, அதே போல "சார்பு கோட்பாடு " கண்டு பிடிப்பும் அவர்க்களுக்குப் புதிதல்ல.- ஆலன் வாட்ஸ் - ( 1915 - 1973 ),பிரிட்டன் தத்துவ அறிஞர்.
2 .பிரபஞ்சம் ஆழ்ந்த , எண்ணற்ற பிறப்பு , இறப்புக்களைக் கொண்டிருக்கிறது என்ற கோட்பாட்டின் மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒரே மதம் இந்து மதம் தான்.நவீன பிரபஞ்ச கோட்பாடுகளுடன் ஒத்துப் போகும் கால அளவுகளைக் கொண்ட ஒரே மதமும் அது தான்.-- டாக்டர் கார்ல் ஷாகன்( 1934 -1996 ), வான் இயற்பியலாளர்.
3 .இந்தப் பூமியின் வயது, உலகின் கால அட்டவணை ஆகியவை குறித்த அறிவியல் பூர்வமான சிந்தனைகளை பழங்கால ரிஷிகள் உருவாக்கினர்.-ஆர்தர் ஹோம்ஸ் (1895 - 1965 ), புவியியலாளர், துர்ஹம் பலகலைக் கழக பேராசிரியர்.இங்கிலாந்து.
(மேற்கண்ட 3 மேற்கோள்கள், தினமலர்,மதுரை பதிப்பில், இது இந்தியா என்னும் தலைப்பில் முறையே அக். 28 ,நவ 17 ,மற்றும் 22 ஆகிய தேதிகளில் வந்தவை).
///கி.மு. 17,476 முதல் கி.மு.11, 716 வரை = கிருத யுகம்
கி.மு. 11,716 முதல் கி.மு.7,396 வரை = த்ரேதா யுகம்
கி.மு. 7, 396 முதல் கி.மு.4,516 வரை = துவாபர யுகம்
கி.மு. 4,516 முதல் கி.மு.3,076 வரை = கலி யுகம்///
இந்தக் காலக் கணக்கு எனக்குப் புரியவில்லை.கலியுகம் கிமு 3076 வரை மட்டுமா?.அப்படியென்றால் இப்பொழுது நடப்பது கலியுகமில்லையா?
நம் இந்த காலக் கணக்கு இந்த ஆரிய படைஎடுப்புக் கொள்கையை வீழ்த்தும் கோடாரியாகும்.மீண்டுமொரு அருமையான பதிவு. நன்றி.
Anbulla Jayasree Amma,
பதிலளிநீக்குYou have explained this article something extraordinary. There is no words to praise your hard work in doing research in this. You have saved our time by giving the essence of the information. Moreover, even if we would have read the reference books, it would have taken more years to map all these points in one point.
I pray the God to bless you with a very healthy, long life to write more information about the Indian tradition.
My humble request is, you have to make it as a book and to publish this. Unless you publish, this, it will not reach to all people of India. I hope you can publish in English, Tamil and Hindi.
Actually i have done M.Sc in Physics and also interested in Astronomy and all physics related journals. Mostly i always feel very proud of being a Physics graduate. After reading your articles, i think i am nothing done special in Physics.
In addition to this one more request from me. if possible, you can arrange for a get to gather with all the friends who reads your blog regularly. Hearing a news in face to face is better than reading.
Nanri
Siva
நீங்கள் கொடுத்துள்ள தினமலர் தகவல்களுக்கு நன்றி திரு தனபால் அவர்களே.
பதிலளிநீக்குஇந்த யுகக் கணக்கைப் பற்றிக் கேட்டிருக்கிறீர்கள்.
லௌகீக யுகம் புது சுற்று ஆரம்பித்த வருடம் கி-மு- 3076 என்று ராஜ தரங்கிணி மூலம் தெரிகிறது. இது சந்திர மாத வருடத்தில், சைத்த்ர மாதத்தின் பிரதமையில் ஆரம்பித்தது என்றும், அப்பொழுது கலி மஹா யுகம் ஆரம்பித்து 25 ஆண்டுகள் ஆகி இருந்தது என்றும் அந்தப் புத்தகம் தெரிவிக்கின்றது. அந்த நேரத்தில் யுதிஷ்டிரர் வானுலகம் சென்றார் என்றும் கூறுகிறது. யுதிஷ்டிரரை முன்னிட்டுத் தான் வராஹ மிஹிரரும் சப்த ரிஷி சுற்றைப் பற்றி ப்ருஹத் ஸம்ஹிதையில் குறிப்பிடுகிறார். அதனால் அந்த வருடம் ஒரு cut-off வருடம். அப்படி என்றால் முந்தின சுற்று அந்த வருடத்தில் முடிகிறது என்று அர்த்தம்.
அந்தக் கோணத்தில் அதற்கு முந்தின 14,400 வருடங்களைக் கூட்டி அந்த லௌகீக யுகம் ஆரம்பித்த வருடத்தைச் சொன்னேன். அது பனி யுகம் முடிந்து மக்கள் தொகை பெருக ஆரம்பித்த நேரமாக இருப்பதைச் சுட்டிக் காட்டினேன்.
அந்த 14,400 வருடங்களை 4:3:2:1 என்ற யுகக் கணக்கு விகிதத்தில் பிரித்துக் காட்டியுள்ளேன். இந்த விகிதம் ஆதாரமானது.
சதுர் மஹா யுகத்தில் வருவது.
இதன் அடிப்படையில் தசாவதராங்களும் ஒவ்வொரு யுகத்திலும் முறையே 4,3,2,1 அவதாரங்களாக வருகின்றன.
அதாவது கிருத யுகத்தில் 4 அவதாரங்கள், திரேதா யுகத்தில் 3 .... இப்படிப் போகிறது.
கட்டுரையில் அடுத்த வரியிலேயே. சதுர் மஹா யுகத்தின் கலி மஹா யுகம் ஆரம்பித்துள்ளதை எழுதியுள்ளேன். அது பிரபஞ்ச அளவிலான சூரியச் சுழற்சி ஆகும்.
உதாரணமாக, மாயன் வருடம் டிசம்பர் 2012 பற்றி பலருக்கும் தெரியும். அந்த நேரமும், சூர்யனின் சுழற்சியில் ஒரு முக்கிய இடம்.
அதாவது சூரியன் நமது பிரபஞ்ச மையத்தை ஒரே நேர்க்கோட்டில் சுற்றவில்லை. sine curve போல மேலும் கீழுமாக சென்று கொண்டிருக்கிறது. கடைசியாக மிக மேலாகச் சென்ற போது, டினோசார்கள் அழிந்தன என்பது ஒரு உண்மை. அதாவது மையப் பகுதியைத் தாண்டி மிக மேலாகவோ, அல்லது, கீழாகவோ செல்லும் போது சுற்றிலும் அதிக நட்சத்திரக்கூட்டம் இருப்பதில்லை. அதனால் காஸ்மிக் கதிர் வீச்சுகள் கடுமையாக இருக்கும். அதன் காரணமாக அப்படி இருந்த காலக் கட்டத்தில் டினோசார்கள் அழிந்திருக்கலாம் என்று ஒரு எண்ணம்இருக்கிறது.
தற்சமயம், சூரியன் மேலிருந்து கீழாக நமது பிரபஞ்சத்தின் மையப் பகுதியை கடந்து கொண்டிருக்கிறான். அதன் நடு மையம் 2012 -இல் மாயன் சொல்லும் காலக் கட்டத்தில் வருகிறது. இந்தக் காலக்கட்டத்தில் நம்மைச் சுற்றி அடர்த்தியான (dense) நட்சத்திரக் கூட்டங்கள் இருக்கின்றன. அதனால் தீங்கு தரும் காஸ்மிக் கதிர் வீச்சிலிருந்து நாம் பாதுகாக்கப்படுகிறோம்.
அது மட்டுமல்ல. சில வினோத நிகழ்வுகள் இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றன. சூரியனின் கரும் புள்ளிகள் (sun spots) ஆரம்பிக்க வேண்டிய காலம் இது. ஆனால் அதிசயமாக ஒரு புள்ளி கூடத் தென்படவில்லை. அதாவது சூரியன் அமைதியாக, "குளிர்ந்து' இருக்கிறான். சூழ்நிலை வெப்பமாகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தோம், அதையும் மீறி, சென்ற வருடத்திலிருந்து அதிகக்குளிர் உலகை வாட்டி எடுக்கிறது. இதற்க்குக் காரணம், அடர்த்தியான மையப் பகுதியை நாம் கடந்து கொண்டிருப்பதால் இருக்கலாம்.
இந்த மாயன் கணக்கு, சுக்கிர மானம் என்று நம் நாட்டிலும் முன்னர் இருந்தது. ஆனால் அது உலகின் தென் பாகத்தில் இருப்பவர்களுக்குப் பயனாவது. எனவே காலப்போக்கில் நம்மிடையே அழிந்து விட்டது.
Thanks for your encouraging comments and wishes Mr Siva.
பதிலளிநீக்குI want to translate this into English immediately and post it in my main blog. If someone can help me by translating every article after I finish the Tamil one, it is most welcome. After finishing this series, I want to take it to some Tamil dailies for publishing it on daily basis or whatever is there. I want to publish this as a book also.
I consider this series as my life's mission that God has ordained me.
I would like to meet like-minded people and discuss these issues with them. If we can form a group, we will plan about the meeting. But this article is very long and there are other major issues which I have not yet started. Perhaps we can meet after I finish this series.
Thanks again for your goodwill.
திரு தனபால் அவர்களே,
பதிலளிநீக்கு// இந்தக் காலக் கணக்கு எனக்குப் புரியவில்லை.கலியுகம் கிமு 3076 வரை மட்டுமா?.அப்படியென்றால் இப்பொழுது நடப்பது கலியுகமில்லையா?//
இப்பொழுது நடக்கும் இந்தக் கலியுகம் பிரபன்ஜ அளவில் அமைவது.
எந்த சடங்கிலும், வழிபாட்டிலும் முதலில் சொல்லப்படும் சங்கல்ப மந்திரம் இதை நிரூபணம் செய்கிறது.
முன்பு தமிழ் ஹிந்துவில் நான் எழுதிய நடராஜர் கட்டுரை உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். அதில் நடராஜர் தலை மேல் உள்ள பகுதியில் தற்போது நாம் இருக்கிறோம்.
மஹா காலம் எனப்படும் மொத்த காலக் கட்டத்தில் பாதியை நாம் கடந்து கொண்டிருக்கிறோம். அதாவது பிரம்மனின் ஆயுளில் பாதி கடந்து விட்டோம்.
அந்தக் கால அமைப்பிலிருந்து சங்கல்ப மந்திரம் ஆரம்பிக்கிறது.
“த்விதீய பரார்தே” = பிரம்மனின் இரண்டாவது பாதி ஆயுளில்
”ச்வேத வராஹ கல்பே” = ச்வேத வராஹம் என்னும் கல்பத்தில்.
“வைவச்வத மன்வந்த்ரே” = வைவச்த மன்வந்த்ரம் என்னும் மன்வந்த்ரத்தில்
”அஷ்ட விம்ஷதி தமே” அதில் 28 - ஆவது சதுர் மஹா யுகத்தில்
”கலியுகே” = கலி யுகத்தில்
“ப்ரதமே பாதே” - முதல் பாதத்தில் (கலி யுகத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்துள்ளார்கள். அதில் முதல் பகுதியில் நாம் இருக்கிறோம்.)
இதுவரை வந்தது எல்லாம் மஹா கால அளவில் வந்த பகுப்பு. இதில் மனிதன் வந்தது மிகச் சிறிய கால அளவே. அவன் வருவதையும், வாழ்வதையும் நிர்ணயிப்பது, சூழ்நிலை, வானிலை, மற்றும் வேறு காரணிகள். அதைபோல மனித வாழ்வை நிர்ணயிப்பது வேறு யுகக் கணக்குகள்.
சதுர் மஹா யுகத்தையும் சேர்த்து கிட்டத்தட்ட 12 விதமான யுகங்கள் உள்ளன. அவை வேறு வேறு சூழ்நிலைகளுக்குச் சொல்லப்பட்டுள்ளன. எந்த சூழ்நிலைக்கு எது என்பதை முடிவு செய்ய discriminatory knowledge and application of mind வேண்டியிருக்கிறது.
உதாரணமாக, மஹா பாரதத்தில் குந்தி, தன் மகன் யுதிஷ்டிரனிடம் ஒரு யுகக் கணக்கு சொல்கிறாள். அதன்படி அரசன் எப்படி இருக்கிறானோ அதன்படி யுகம் அமையும். நேர்மையான அரசன் அரசாளும் போது க்ருத யுகம் அமையும் என்கிறாள்.
பிரபஞஜ அளவிலான கலி யுகம் க்ருஷ்ணன் மேலுலகம் சென்றவுடன் ஆரம்பமானது. அப்பொழுது யுதிஷ்டிரர் ஆட்சிக்கு வந்தார். அப்பொழுது கலியுகம் ஆரம்பித்தாலும், கலி தாண்டவமாடவில்லை. அவருக்குப் பிறகு பரீக்ஷத் அரசராகிறார். அப்பொழுது கலி புருஷனைத் தன் நாட்டில் அண்டவிடவில்லை என்று வருகிறது. கலி யுகம் ஆரம்பித்தவுடன் வந்ததுதான் சிந்து சமவெளி நாகரீகம். அவர்கள் வாழ்க்கை அமைதியாகச் சென்றிருக்கிறது. ஆரியப் படையெடுப்பு நடந்தது என்று சொல்லும் காலக் கட்டத்தில் நீர் ஆதாரங்கள் வற்றி விட்டன. (அந்த விவரங்கள் பின்னால் வருகின்றன.) அப்பொழுது எந்த யுகம் நடந்தது? கொடுமையான கலியுகம் என்றால் அது ஆரம்பித்து மூவாயிரம் ஆண்டுகள் எப்படி அமைதியாக வாழ்ந்தார்கள்?
முடிவாகச் சொல்ல எண்டும் என்றால், இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஐந்து வருட யுகமே அடிப்படை. அது வேதாஙக ஜோதிடத்தில் வருகிறது. முன்பு ஒரு கட்டுரையில் கரிகாலன் சடன்கவிகளைக் கொண்டு வேத யாகங்கள் என்று செய்தான் என்று புறநானூறு சொல்கிறது என்று கொடுத்திருப்பேன். அந்த யாகஙகள் இந்த ஐந்து வருட யுகத்தின் காலக் கணக்கைத் தான் எடுத்துக் கொள்கின்றன.
மேல் நாட்டு ஜோதிட முறையில் Aquarian Age வருகிறது என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். சூரியன் precession முறையில் Aquarius எனப்படும் கும்ப ராசிக்குச் சென்று கொண்டிருக்கிறான். அந்த ராசியின் குண நலம், பலன் ஆகியற்றைப் பொறுத்து மக்கள் இனம் அறிவியல், ஆன்மிகம் ஆகியவற்றில் மிகுந்து இருக்கும் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஒரு வகையில் இது சப்த ரிஷி யுகத்தைப் போன்றதே. இந்த யுகத்தின் படி, சூரியன் ராசிகட்டத்தைக் கடப்பதால், மனித வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் நிகழ்சிகள் அதை ஒட்டி நடக்கின்றன என்னும் கருத்துப்படி, இந்த சப்த ரிஷி யுகம் , லௌகீக யுகம் எனப்படுகிறது
பதிலளிநீக்குதிருமதி ஜெயஸ்ரீ சாரநாதன் அம்மா அவர்களே,
பதிலளிநீக்குமிக சிறப்பாக, விரிவாக விளக்கியிருக்கிறீர்கள்.
///கொடுமையான கலியுகம் என்றால் அது ஆரம்பித்து மூவாயிரம் ஆண்டுகள் எப்படி அமைதியாக வாழ்ந்தார்கள்?///
நல்ல சிந்தனைக்குறிய கேள்வி.
(நீங்கள் பதிலிட்ட நேரத்தைப் பார்த்தேன்.அது நள்ளிரவு 12 மணியைத் தாண்டியிருந்தது.எனக்காக அதிக சிரத்தை எடுத்து பதிலிட்டதற்கு மிகவும் நன்றி.திருமதி ஜெயஸ்ரீ சாரநாதன் அம்மா அவர்களே)
//(நீங்கள் பதிலிட்ட நேரத்தைப் பார்த்தேன்.அது நள்ளிரவு 12 மணியைத் தாண்டியிருந்தது.எனக்காக அதிக சிரத்தை எடுத்து பதிலிட்டதற்கு மிகவும் நன்றி.திருமதி ஜெயஸ்ரீ சாரநாதன் அம்மா அவர்களே) //
பதிலளிநீக்குகேள்வி கேட்டதற்கு நான் உஙளுக்கு நன்றி சொல்ல வேண்டும் திரு தனபால் அவர்களே.
நீங்கள் கேள்வி கேட்கவேதான் இந்த பதில்களை எழுத வாய்ப்பு கிடைக்கிறது.
நேரம் ஒரு பொருட்டல்ல. எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் பதில் எழுதவும், அடுத்த கட்டுரையைத் தயாரிக்கவும் கணினி முன் உட்கார்ந்து விடுவேன்.
மதிப்பிற்குரிய ஜெயஸ்ரீ அவர்களே,
பதிலளிநீக்குதங்கள் கட்டுரைகளை படித்து நான் அறிவு தெளிவு பெற்றேன். யூகங்கள் பற்றிய எனது நீண்ட நாள் கேள்விக்கு இப்பொழுது விடை கிடைத்தது. வலை தளம் என்ற ஒன்று இருந்திரா விட்டால், இந்த திராவிட திருடர்கள் நம்மை ஊறுகாய் போட்டு இருப்பார்கள். உங்கள் சேவை மென்
மேலும் தொடர வேண்டும். இத்தகைய தரவுகள் எப்படி பாமர மக்களுக்கு எடுத்து செல்வது. என்னால் முடிந்த வரை இந்த கருத்துக்களை எனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி திரு ஸ்ரீ ஹரி அவர்களே. உங்கள் ஆர்வம் ஊக்கமளிப்பதாக இருக்கிறது.
பதிலளிநீக்குoof: Mind blowing. I had followed the prapancha yuga to some extent and was able to relate to it, as I regularly perform the rites. Though I would rigouraously defend our our traditions, I always had this doubt about the periodicity of Ramayana and Mahabharatha being lakhs of years old and how did they arrive at the magical figure of the Kaliyuga, from where the entire calculations starts upwards.
பதிலளிநீக்குThough It was confusing the way you linked the loukika yuga to the kaliyuga of of the prpancha cleared the air. Vazhga Valamudan.
இந்தத் தொடரில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும் என்னும் ஊக்கத்தைத் தரும் தங்கள் உரைகளுக்கு நன்றி திரு வெங்கி அவர்களே.
பதிலளிநீக்குவேத மரபுகளைக் கடைப்பிடிப்பவர் என்று நீங்கள் சொல்லியுள்ளதால், (rites) வைணவ குரு பரம்பரை பிரபாவத்தைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அதில் ஆழ்வார்கள் கிருத யுகத்திலும், திரேதா யுகத்திலும் பிறந்தனர் என்று எழுதியிருப்பார்கள். ஆழ்வார் காலத்து சரித்திர விவரங்கள் எல்லாம், சமீப காலக்கட்டத்துடன் ஒத்துப்போகும், ஆனால் இந்த யுக விவரம் மட்டும் ஒத்துப்போகாது. இதனால், அதை எழுதியவர்கள், பிரபஞ்ச அளவிலான யுகத்தைச் சொல்லவில்லை என்பதை நாம் உணர வேண்டும், ஆனால் அதை எழுதியவர்கள் உயர்ந்த ஆன்மீக சிந்தனை உடையவர்கள். எனவே அவர்கள் உண்மைக்குப் புறம்பாகச் சொல்லியுருக்க முடியாது என்றும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த ஆழ்வார்கள் இருந்த காலக்கட்டத்தில் நடைபெற்று வந்த தர்ம அரசாங்கத்தைப் பொறுத்தே இன்னின்ன யுகம் என்று சொல்லப்பட்டிருக்க வேண்டும், அப்படிச் சொல்லும் வழக்கம் நம் தமிழ் நாட்டிலும் இருந்திருக்கிறது என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
மஹாபாரதம் சாந்தி பர்வத்தில் பீஷ்மர், தர்மத்தின் அடிப்படையில்தான் யுகத்தைப் பிரிக்கிறார். ஒரு பசுவாக தர்ம தேவதையை உருவகித்து, அந்தப் பசுவின் நான்கு கால்களாக நான்கு யுகத்தைச் சொல்லும் வழக்கம் இருந்தது என்பதை, பாகவதம் சொல்லும் பரீக்ஷித்து கதையின் மூலம் அறியலாம்.
கால் பங்கு அளவாவது தர்மம் இருப்பதுதான் கலியுகம். இன்றைக்கு அதுவும் இல்லை என்பதால் தர்மமே இல்லாத மிலேச்ச சூழ்நிலையில் நாம் இருக்கிறோம் எனலாம்.
ஆழ்வார்கள் வாழ்ந்த காலத்தில் அரசர்கள் மாறி மாறி வந்த போது, சில அரசர்கள் காலத்தில் தர்மம் முழு வீச்சில் நிலை நாட்டப்பட்டிருக்கலாம். அப்படிப்பட்ட காலக்கட்டத்தைக் கிருத யுகம் என்றும், அந்த ஆழ்வார் கிருத யுகத்தில் வாழ்ந்தார் என்று சொல்லி இருக்கிறார்கள்.
சரித்திரப் புத்தகங்களில், குப்தர்கள் காலம் பொற்காலம் என்று சொல்கிறார்களே, அது போல இந்த அரசன் காலம் கிருத யுகம், அந்த அரசன் காலம் திரேதா யுகம் என்று, தர்மத்தின் அடிப்படையில் சொல்லியிருக்கிறார்கள்.
இவற்றைத் தவிர பல காலமாகவே காஷ்மீர லௌகீக யுகம் வழக்கில் இருந்து வந்திருக்கிறது. முஸ்லீம் படையெடுப்பு ஆரம்பித்தது முதல், இவை எல்லாம் மறைய ஆரம்பித்து விட்டன. அழிந்தும் விட்டன.
ராமாயண காலம் பற்றி ராமாயணத்தில் காணப்படும் விண்கோள்கள் விவரங்கள் அடிப்படியில் ஆராய்ச்சிகள் நடந்து விட்டன. அவை நாம் இங்கு சொல்லும் யுகக் கணக்குடன் ஒத்துப் போகின்றன. அவற்றைப் பற்றி இந்தத் தொடரில் எழுதப்பட்டுள்ளது.
விண்கோள் ஆராய்ச்சி்(based on astronomy software), கடல் நீர் மட்ட ஆராய்ச்சிகள், கடல் வெள்ள ஆராய்ச்சிகள், பல்வேறு காலக்கட்டத்தில் இந்தியாவில் இருந்த தட்பவெப்ப நிலை ஆராய்ச்சிகள்(உயிரினம் வாழ்ந்த சாத்தியக் கூறுகளை இவற்றின் மூலம் அறியலாம்) மரபணு ஆராய்ச்சிகள், அகழ்வாராய்ச்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த விவரங்களை எழுதி வருகிறேன்.
விண்கோள் ஆராய்ச்சியின் அடிபப்டையில் ராமர் பொ.மு 5114 இல் பிறந்தார் என்று சொல்லும் ஆராய்ச்சியை கீழ்க்காணும் பதிவில் காணலாம். பல விஞ்ஞானிகளும் இதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
http://jayasreesaranathan.blogspot.com/2010/10/ramas-birth-date.html
யுகம் என்பது தர்மத்தின் அடிப்படையில் சொல்லப்படுகிறது என்னும் என் கட்டுரைகள் இங்கே:
http://jayasreesaranathan.blogspot.com/2008/04/rama-in-treta-yuga-yuga-is-defined-on.html
http://jayasreesaranathan.blogspot.com/2011/01/on-yuga-classification-and-what-causes.html
ராமன் 11,000 ஆண்டுகள் ஆண்டான் என்று வால்மீகீ ராமாயணம் சொல்லும் கணக்கின் அடிப்படை இங்கே:-
http://jayasreesaranathan.blogspot.com/2009/07/did-rama-rule-for-11000-years.html
நாம் இப்பொழுது இறங்குமுகம் (அ) அவரோஹண) யுக கதியில் இருக்கிறோம். இதில் பொ,மு 1662 முதல் பொ.பி 4098 வரை கிருத யுகம் என்னும் சத்யட் யுகத்தில் இருக்கிறோம். கிருத யுகமான இருப்பதால் அறிவு வளர்ச்சி இருக்கும், ஆனால் இறங்குமுகத்தில் இருப்பதால், ஆன்மீகத்துக்குப் புறம்பான விஷயங்களில் அறிவு வளார்ச்சி இருக்கும். இந்த யுகத்தின் முடிவில் கங்கை முழுதும் மறைந்து விடும். ஏறு முகத்தில் ஏற்பட்ட விஷயங்களின், எதிர்ப்பாடாக இறங்கு முகத்தில் அமையும்.
பதிலளிநீக்குஎன்னுடைய
“Rama in Treta yuga – Yuga is defined on the basis of dharma and not the number of years”
என்னும் கட்டுரையிலிருந்து:-
http://jayasreesaranathan.blogspot.com/2008/04/rama-in-treta-yuga-yuga-is-defined-on.html
On the descending side,
from 1662 BC to 4098 AD satya yuga,
from 4098 AD to 8418 AD Thretha yuga,
from 8418 AD to 11,298 AD Dwapara yuga
and
from11,298 AD to 12,738 AD Kali yuga.
The cycle also ends.
the rotation of the sun around the zodiac also ends.
The first of the 4 pole stars come in place.
இதுவரை மரபணு ஆராய்ச்சிகள் கண்டு பிடித்துள்ள மனித குல வளர்ச்சியில், இந்த சுழற்சி பொருந்தி வருகிறது. புராணக் கதைகள் அவற்றுடன் பொருந்துகின்றன. இந்தத் தொடரில் அவை சொல்லப்படும்.
தங்கள் கட்டுரைகளை படித்து நான் அறிவு தெளிவு பெற்றேன். யுகங்கள் பற்றிய எனது நீண்ட நாள் கேள்விக்கு இப்பொழுது விடை கிடைத்தது
நீக்குஇந்தப் பதிவையே ஒரு புத்தகமாக வெளியிடலாம். அபாரம்!
பதிலளிநீக்குநன்றி திரு செல்வ குமார் அவர்களே. இதுவரை 101 கட்டுரைகள் இட்டுள்ளேன். ஆகஸ்டு முதல் அவை இன்னும் தொடரும். படிக்கவும்.
பதிலளிநீக்குnice 10ks for info Madam!!!..:)'
பதிலளிநீக்குயூகங்கள் பற்றிய எனது நீண்ட நாள் கேள்விக்கு இப்பொழுது விடை கிடைத்தது.நன்றி உங்கள் சேவை மென்
பதிலளிநீக்குமேலும் தொடர வேண்டும்.
நன்றி திரு கமலக் கண்ணன் அவர்களே.
நீக்குயுகங்களைப் பற்றிப் பலருக்கும் குழப்பங்கள், சந்தேகங்கள் இருப்பதால், ஒரு சுருக்க்கமான விளக்கத்தைகே கேட்பவர்களுக்கு அனுப்பி வருகிறேன். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த விளக்கத்தை இங்கு தருகிறேன். Copy-paste செய்து எடுத்துக் கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும் - இந்தப் பதிவின் முகவரியுடன்.
(continued)
Yuga in Sanskrit means Yugma – a double or duo or twin.
நீக்குWhenever an ascent and a corresponding descent exist together, it is known as a Yuga, as per Vedas.
A day is a Yuga, because it constitutes a day time and a night time.
A month (lunar) is a Yuga, because it constitutes waxing and waning moon
(shukla and Krishna pakshas)
A year is a Yuga, because it constitutes 2 ayanas.
The 5 year period having two 2 and a half year period of extra lunar month, is a Yuga.
This is based on equalizing the solar and lunar months.
The sun takes 365.25 days to move from one star and to reach the same star which makes a year.
But the moon finishes this round in 354 days in a year.
The difference between these two is 11.25 days.
In this way, for every two and a half years, the moon finishes an extra month of 29.15 days.
This is known as Adhika masa.
One round of Adhika masa coupled with another round of adhika masa, makes it a Yuga,
known as “Pancha varshathmaka Yuga”-
the yuga of 5 years.
{ This is the yuga identified by Vedanga Jyothisha,- for fixing the time for doing rituals. This is the basis of Jupiter cycle of 60 years where the years are names as Prabhava, Vibhava etc. A completion of 7 rounds of this yuga (7 X 5 = 35) makes one cycle. On the 36th year Jupiter will be in Kumbha rashi starting a fresh cycle with Kumbha Mela. It is because a fresh cycle starts on the 36th year, Gandhari’s curse on Vrishnis came into effect on the 36th year. She specifically says so to Krishna. The Pancha Vimsa Brahmana of Sama veda also talks about a yajna done on every 36th year which heralds a new Era. }
The details of the Pancha Varshatmaka Yuga can be read in 7 & 8 mantras of 103 sukta at 7th mandala of Rig veda and in Rig and Yajusha Jyothisha.
The Arohana – Avarohana or ascending and descending pair of anything is a Yuga.
It is from the principle of ‘Ahorathra’ (day-night pair), the yugas such as satya and Treta are drawn, says Rig veda samhita (1-103-4)
Sayanacharya in his commentary to these mantras says that the yuga classification (Pancha varshathmaka Yuga)is for use by human beings. Satya and treta yuga are at sun’s level.
That is better known as ‘Divya’ yuga.
‘Div’ means light. It is about the stars that emit light.
At the level of stars, 2 kalpas make 1 day of Brahma deva
It is like this:-
1 souramana (year) = 12 month sojourn of the Sun around the zodiac.
43,20,000 souramana = 1 chathur Yuga = 4 yugas (satya + treta + dwapara + kali)
71 Chathur Yuagas = 30,67,20,000 souramana = 1 Manvanthra
(since every manvanthra is followed by a period called sandhi which is equivalent to 1 satya yuga),
1 manvanthra + 1 sandhi = 30,67,20,000 souramana.
Like this,
14 sandhi + 14 manvanthra = 4,31,82,72,000 souramna
1 kalpa = (14 sandhi + 14 manvanthra) + 1 kalpa sandhi
= 4,32,00,00,000 souramana
1 kalpa = a day of Brahma deva = a night of Brahma deva.
This is roughly equivalent to 20 rounds of the Sun around the Galactic center
(Modern science calculates 1 round to be roughly around 220 million years)
At this level of reckoning only, treta yuga contains 17 lakh years!
(continued)
The basic unit is 4,32,000 years.
நீக்குThis is the duration of Kali yuga.
Double of it is Dwapara yuga.
Three times of it is Treta yuga and
4 times of it Satya yuga.
The major geological and cosmic events are related to this yuga classification.
(The avatars such as matsya, koorma and varaha are related to these yugas)
There are many levels of classification at human level of reckoning.
One such classification based on Saptha rishi round is made of 28,800 years.
According to Varahamihira, the retrograde movement of sun in the zodiac,
around the pole star takes 28,800 years.
At the present rate of precession by which the sun moves back 1 degree in 72 years,
it will take 26,920 years to complete this round.
We take into account sandhi, which makes it 28,800 years,
which are divided into 2 groups of 4 yugas each.
2 groups, because only then the cycle of yuga is complete.
The division of 4 yugas is in the ratio of 4:3:2:1.
So far I have not come across any pramana for when the current yuga started.
But it looks logical that the beginning of Kali yuga at cosmic scale (divya yuga)
coincided with the kali yuga at this saptha rishi mandala scale.
(continued)
நீக்குThere are quite many verses to say that Kali yuga started after the departure of Krishna.
First let me make a split –up detail of the mini yugas on the basis of 4:3:2:1
One half of this 1 cycle, namely 28,800 years is day and the other half is night.
In other words, it could be equated to ascending and descending phase of this cycle.
This number is 14,400 years.
Splitting this into 4 mini yugas,
we get 5760, 4320, 2880 and 1440 as the number of years
in the order from satya yuga to kali yuga
Taking the year 3102 BC as the cut-off year as it has been accepted
(scripturally and astrologically / astronomically)
as the year of Krishna’s departure and the advent of Kali,
let us calculate the years of the previous mini-yugas.
3102 + 2880 = 5982 BC when Dwapara yuga started.
5982 + 4320 = 10,302 BC when Thretha yuga started.
10,302 + 5,760 = 16,062 BC when Krutha yuga started.
That is, the present cycle of 28,800 years (in our words, the mini chatur yuga)
started in the year 16,062 BC,
assumed to be the day time of the cycle (ascending).
By deducting the years for mini kali yuga, 1440,
we arrive at the year (3102 BC - 1440 = 1662 BC)
That is, from the year BC 1662 one ascending phase got over
and the descending phase started.
From this the duration of yugas, current and future are like this.
1662 BC + 5760 Years = 4098 AD (satya yuga ends)
4098 AD + 4320 years = 8418 AD (Thretha yuga ends)
8418 AD + 2880 years = 11,298 AD (Dwapara yuga ends)
11,298 AD + 1440 years = 12,738 AD ( Kali yuga ends, The cycle ends)
At AD 2008, we are now in Satya yuga
in the descending phase of Saptha rishi yuga mandala.
One crucial correlation drawn from the above calculation is that
the decline of Vedic religion and the landmass of Bharathavarsha where Vedic /Aryan society flourished started from BC1662. (The time Indus – saraswati civilisation ended / the so-called Aryan invasion happened)
The yuga classification is applicable to Aryavartha only, as per texts.
Sanjaya says this while explaining the nature of landmass and people
to the king Dhritharashtra, after getting the divine eye to see the war.
(Jhambhoo dweepa nirmana patalam in Bheesham parva)
From this analysis we can deduce thatTreta yuga when Rama was born,
happened between BC 10,302 to BC 5982
The astrological and cosmic map deducing Rama’s times fall within this period.
There may be some differences in the computations to arrive at an exact date of Rama’s birth.
But it does come within this period as per Saptha rishi mandala classification.
(continued)
{Given below is the compilation of Yuga classification as found in Mahabharata. You will find that the above explained 28,800 years of Sapta rishi yuga has been told by Sage Markandeya in Mahabharata. That fits with Ramavathara 7000 years ago which also fits with astronomical dating of Ramayana and the dating of inner substances of Ram Sethu which DK Hari has explained in his works}
நீக்குOn yugas, in several places in Mahabharata it is said that Yuga is formed by the King / by the dharma.
The yuga classification of Surya Siddhantha is astronomy.
But in human life, dharma and danda neeti determine the Yugas.
Proof from Mahabharata:-
• (Shanti parva -140)
'O bull of Bharata's race, that Krita, Treta, Dwapara, and Kali, as regards their setting in, are all dependent on the king's conduct.'
• (Shanti parva – 68)
'Whether it is the king that makes the age, or, it is the age that makes the king, is a question about which thou shouldst not entertain any doubt. The truth is that the king makes the age.
The king is the creator of the Krita age, of the Treta, and of the Dwapara. The king is the cause of the fourth age called Kali. '
• Krishna to karna (Udyoga parva 142)
'when thou wilt hear the twang of Gandiva piercing the welkin like the very thunder, then all signs of the Krita, the Treta, and the Dwapara ages will disappear but, instead, Kali embodied will be present.'
•
Kunti (Udhyoga parva -132)
'When the king properly abides by the penal code, without making any portion of it a dead letter, then that best of periods called the Krita Yuga sets in. Let not this doubt be thine, viz, whether the era is the cause of the king, or the king the cause of the era, for know this to be certain that the king is the cause of the era. It is the king that creates the Krita, the Treta, or the Dwapara age. Indeed, it is the king that is the cause of also the fourth Yuga viz, the Kali'
• Markandeya (vana parva – 187) Yuga calculation very well detailed
• Vana parva 148 – Hanuman also gives a good explanation on yuga
****************
I rely on Markandeya's version.
According to him the years of yugas are
400 + 4000 + 400 = 4,800
300 + 3000 + 300 = 3,600
200 + 2000 + 200 = 2,400
100 + 1000 + 100 = 1,200
= 12,000
Add 10-% sandhi for this before and after
1,200 + 1,200 = 2,400
Total = 12,000 + 2,400 = 14,400 years.
The ascending and descending of this = 14,400 + 14,400 = 28,800 years
15 times of this 28,800 = kali maha yuga duration at cosmic level (4,32,000 )
150 times this 28,800 = 1 chathur maha yuga
150,000 times this 28,800 = 1 kalpa.
On the other side, let us see the split up of 28,800 years = precession of the sun around the zodiac (Sapta rishi mandala yuga)
60 years is the basic unit.
This is equal to the years in one conjunction of the planets of dharma (Jupiter) and karma (saturn)
Jupiter's 1 revolution = 12 years
Saturn's 1 revolution = 30 years.
They conjunct in the same place in the same sign once in 60 years. So this is the basic life of dharma - karma of a man.
The ascending and descending part = 60 +60 = 120 years.
120 times 120 = 14,400
14,400 + 14,400 = 28, 800
அருமையான தகவல்
பதிலளிநீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குதங்களுக்கு வாழ்த்துக்கள்
15/04/2020 நல்ல தகவல்
பதிலளிநீக்குநன்றி
அம்மா வணக்கம் அருமையான தெளிவான விளக்கங்கள் உண்மையாக அறிவு கண்ணை திறந்து உள்ளீர்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்டது இதை புத்தகமாக வெளியிட்டு உள்ளீர்களா?
பதிலளிநீக்கு