செவ்வாய், 26 ஏப்ரல், 2011

51. திராவிடம் என்றால் என்ன?


திராவிடன் யார் என்பதையும், திராவிடம் எது என்பதையும்
பற்றிக் கூறும் மற்ற உள்ளுறைச் சான்றுகளைப்
(INTERNAL EVIDENCE) பார்ப்போம்.
பஞ்ச திராவிடர்கள் வாழ்ந்த பஞ்ச திராவிடம்
இருந்த இடத்தைப் பற்றி
கி.பி. 11 ஆம் நூற்றாண்டு நூலான ராஜ தரங்கிணி
சொல்லியுள்ளதென்று முந்தின கட்டுரையில் கண்டோம்.
அதே ராஜ தரங்கிணியில் திராவிட மந்திரவாதி என்று
ஒருவனைப் பற்றிய கதையும் வருகிறது.
5000 ஆண்டுகளுக்கு முன் நடந்த மஹாபாரதப் போரில்
பங்கு கொண்ட திராவிடர்களுக்குப் பிறகு,
திராவிடன் என்பவனைப் பற்றிய ஒரு விவரம் காணப்படும் நூல்
1000 வருடங்களுக்கு முன் எழுந்த ராஜ தரங்கிணி மட்டுமே.


ராஜ தரங்கிணி சொல்லும் திராவிடன் ஒரு மந்திரவாதி ஆவான்.
அந்தத் திராவிடனைப் பர்றிச் சொல்லும் காலக்கட்டம்,
இந்தத் தொடரில் பகுதி 33 இல்
ஸ்த்ரி ராஜ்ஜியம் என்னும் இடத்துக்குச் சென்றான்
என்று விவரிக்கப்பட்ட அரசனான ஜெயபீடன் ஆண்ட காலக்கட்டமாகும். 
கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காஷ்மீர அரசனான
இந்த ஜெயபீடனைப் பற்றிச் சொல்கையில்,
சந்திரபுரம் என்னும் ஏரியைக் காப்பாற்றி
அதன் நீர்வளம் குறையாமல் செய்த அவனது செயலுக்குப் பின்னால்
ஒரு பரம்பரைக் கதை இருந்து வந்தது என்கிறார் கல்ஹணர்.


அந்தக் கதையின் படி, மஹாபத்ம நாகன் என்னும் நாக அரசன் இருந்தான். (கிருஷ்ணாவதாரத்தில் காளிங்கன் என்னும் நாகம் இருந்தாற்போல,
இவனும் ஒரு நாகன். இந்த நாகர்கள் பற்றிய விளக்கங்கள் இந்தக் கட்டுரையில் வருகின்றன.).
அவனும், அவனைச் சேர்ந்தவர்களும் சந்திரபுர ஏரியில் வசித்து வந்தனர். அவனை ஒரு திராவிட மந்திரவாதி தொந்திரவு செய்து வந்தான்.
நாகர்கள் வசிக்கும் ஏரியில் உள்ள நீரை வற்றச் செய்து விடுவதாக
அவன் பயமுறுத்தி வந்தான்.
அதனால் மாஹபத்ம நாகன், ஜெயபீட மன்னனின் கனவில் தோன்றித் தங்களை அந்தத் திராவிட மந்திரவாதியிடமிருந்துக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.
அதற்குப் பிரதி உபகாரமாக,
தங்கச் சுரங்கம் இருக்கும் இடத்தைக் காட்டுவதாக நாகன் கூறுகிறான்.


இதனால் ஜெயபீட மன்னன் அந்தத் திராவிடனைக் கூப்பிட்டு விசாரித்தான். அவனுக்குத் தெரிந்த மந்திர வித்தையைச் சோதித்துப் பார்க்க வேண்டும்
என்று நினைத்து, ஏரித் தண்ணீரை வற்றச் செய்து காட்டச் சொன்னான். திராவிடனும் அவ்வாறே செய்ய,
ஏரியின் நீர் மட்டம் குறைய ஆரம்பித்தது.
இதைக் கண்ட மன்னன் உடனே அதைத் தடுத்து விடுகிறான்.
மீண்டும் ஏரியில் நீரை நிரப்ப வைத்து விடுகிறான்.
எனினும் முதலில் நீரை வற்றச் செய்ததால்
மனம் வருந்திய மஹாபத்ம நாகன், 
தான் உறுதி அளித்தது போல தங்கச் சுரங்கத்தைக் காட்டாமல்,
செப்புச் சுரங்கத்தைக் காட்டினான்.
இதுதான் அந்தக் கதை.


இதில் சில அதிசய ஒற்றுமைகள் உள்ளன.
நீரை வற்றச் செய்தும், பிறகு மீட்கச் செய்தும் காட்டக் கூடிய ‘மந்திர வித்தைதெரிந்தவன் திராவிடன் என்பதும்,
நீரை வற்றச் செய்ததன் தொடர்பாகச்
செப்புச் சுரங்கம் இருந்த இடம் தெரிய வந்தது என்பதும்
இயற்கையில் இருக்கக்கூடிய சில விவரங்களுடன் ஒத்துப் போகின்றன.


முதலில் ஜெயபீடனின் அரசாட்சி என்று எடுத்துக் கொண்டால்,
அவன் அதிக அளவு செப்பு நாணயங்களை வெளியிட்டுள்ளான்
என்று கல்ஹணர் கூறியுள்ளார்.
அவன் ஆட்சிக் காலத்தில் க்ரம ராஜ்ஜியம் என்னுமிடத்தில் உள்ள
செப்புச் சுரங்கத்திலிருந்து அதிக அளவில் செப்பு எடுக்கப்பட்டு
இந்த நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன என்றும் அவர் கூறுகிறார்.
இந்தச் செப்புச் சுரங்கத்தை அவன் அடையாளம் கண்ட நிகழ்ச்சியை
ஒரு கதையாக காஷ்மீர மக்கள் சொல்லி வந்திருக்கிறார்கள்.


அதில் ஒரு மஹாபத்ம நாகன் என்னும் பாம்பைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது.
இதே நாகனைப் பற்றி காஷ்மீர நாட்டு மற்றொரு பழம் இலக்கியமான
‘நீலமத புராணத்திலும்சொல்லப்பட்டுள்ளது.
விஸ்வகஸ்வன் என்னும் அரசனை வேண்டி
அவனது உதவியுடன் மஹாபத்ம நாகனும்,
அவன் கூட்டத்தினரும் தாங்கள் வசிப்பதற்காக
சந்திர புர ஏரியில்
குடி புகுந்தனர் என்று வழி வழியாக மக்கள் சொல்லி வந்துள்ளன்ர்
என்று சொல்லப்பட்டுள்ளது.
அந்த சந்திர புர ஏரியை வற்றச் செய்வதாகச் சொன்னவன்
திராவிட மந்திரவாதி என்பது ராஜ தரங்கிணி சொல்லும் விவரமாகும்.


காஷ்மீர வரலாற்றைத் தோண்டினால்,
அந்த நாடே ஒரு சமயம் ஏரியாக இருந்தது என்பது தெரிய வரும்.
அங்கு காஸ்யப முனிவர் வாழ்ந்து வரவே,
அதற்குக் காஸ்யப க்ஷேத்திரம் என்ற பெயர் இருந்தது.
அந்தப் பெயரே உருமாறி காஷ்மீர் என்றானது.
அந்த ஏரி மறைந்து நில பாகங்கள் மேலெழும்பின.
அதாவது லாவா எனப்படும் பூமிக் குழம்புகள்
பூமியிலிருந்து வெளிப்பட்டு மேலெழும்பி இருக்கின்றன.
அப்படி வெளிப்படும் பூமிக் குழம்புகளை
நாகம் என்று சொல்லும் வழக்கம் நம் நாட்டில் இருந்திருக்கிறது.


பாம்புகள் பூமிக்கடியில் வசிப்பதாலும்,
பூமியைக் குடைந்து அடி மண்ணைப் புரட்டிப் போட்டு
எறும்புகள் கட்டும் புற்றுக்குள் பாம்புகள் வசிப்பதாலும் இந்தப் பெயர்.
பூமியைப் புரட்டிப்போட்டாற்போல வெளிப்பட்டு,
பிறகு நிலபாகமாக மாறும்
பூமிக் குழம்புகள் உள்ள பகுதிக்கு
நாகர்கள் வசிக்குமிடம் என்று பெயரானது.


இப்படி எங்கெல்லாம் நிலபாகங்கள் ஏற்பட்டனவோ
அங்கு வசிப்பவர்களுக்கு நாகர்கள் என்னும் பெயரும் ஏற்பட்டது. நாகர்களுக்குத் தலைவன் ஆதி சேஷன் ஆவான்.
அவன் இந்தப் பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கிறான்
என்பதே பாரத நாட்டின் பரம்பரிய எண்ணம்.
தலைமை தாங்கும் சேஷன், பூமியின் நடுப் பாகத்தில்
CORE என்று மைய அச்சாக இருக்கிறான்.
இரும்புக் கோளமான அந்த மையப் பகுதி,
இந்தப் பூமியை, அதனைச் சார்ந்த காந்த மண்டலம் வரை
தன் பிடிக்குள் வைத்திருக்கவே,
ஆதி சேஷனே பூமியைத் தாங்குகிறான் என்று சொல்லப்படுகிறது.


பூமியின் உள் அமைப்பு.


அடுத்த முக்கிய நாகம், வாசுகி ஆகும்.
மேரு மலையை அச்சாகக் கொண்டு,
வாசுகியை நாணாகக் கொண்டு
தேவர்களும், அசுரர்களும் கடலைக் கடைந்தனர்
என்பது பல புராணாங்களிலும் சொல்லப்படும் கருத்து.
மேரு என்பது வடக்கு தெற்காகச் செல்லும் பூமியின் அச்சாகும்.
அதன் உச்சி வட துருவமாகும் என்பது சூரிய சித்தாந்தம் தரும் செய்தி.
இந்த அச்சு இடை விடாமல் சுழன்று கொண்டிருக்கிறது.
அந்த சுழற்சி காரணமாக,
பூமியின் வட பகுதியிலும், தென் பகுதியிலும்,
பருவ காலங்கள் மாறி மாறி வருகின்றன.
அந்தச் சுழற்சி காரணமாக,
கடலுக்கடியில் இருக்கும் பூமிக் குழம்புகள்
கடையப் படுவது போல அலைக்கழிக்கப்படுகிறது.


இதனால், பூமியடியில் உள்ள வாயுக்களும்,
கனிமங்களும், நிலப்பகுதிகளும்
மேலும், கீழுமாகப் புரட்டிப் போடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
இதுவே ‘சமுத்திர மந்தன்  என்னும் கடலைக் கடைதல் கதை.
இது மறை பொருளாகச் சொல்லும் இயற்கை வர்ணனையாகும்.
இந்த வருணனையில், பூமியின் அச்சு மேரு மலையாகும்.
வடபாகம் தேவர்கள், தென் பாகம் அசுரர்கள் ஆவார்கள்.
கடையப்படும் பூமிக் குழம்பு வாசுகி ஆவாள்.
இந்தக் கடைதலில் இரண்டு புறமும் நகர்ந்து கொண்டிருப்பது
ராகு, கேது என்னும் இரண்டு பாம்புகள். 


 அட்லாண்டிக் கடல் அடிவாரத்தில்,
கடைவது போல வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் பூமிக் குழம்பு.


இதை இன்னும் விவரித்துக் கொண்டே போகலாம்.
ஆனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது  
நாகர்கள் என்று யாரைச் சொல்லி இருக்கிறார்கள் என்பதுதான்.
எங்கெல்லாம், பூமிக் குழம்பு வெளிப்பட்டு,
குளிர்ந்து, நிலமாக ஆகி இருக்கிறதோ,
அங்கு வசிக்கும் மக்கள் நாகர்கள் எனப்பட்டிருக்கிறார்கள்.
அங்கு நாக வழிபாடும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதனால் காஷ்மீரிலும் நாகர்கள் இருந்திருக்கிறார்கள்.
இமயமலைப் பகுதிகள் பலவற்றிலும் நாகர்கள் இருந்திருக்கிறார்கள்
என்பதை மஹாபாரதம் மூலம் அறிகிறோம்.காண்டவப்ரஸ்தத்தில் அர்ஜுனனால் நாகர்கள் விரட்டப்பட்டு
விந்திய மலைக்குத் தெற்கே குடியேறினார்கள் என்றும் பாரதம் சொல்கிறது.
கிருஷ்ணனது சகோதரனான பலராமன்,
சேஷனது அவதாரம் என்று சொல்லப்படுபவன்.
அவனது அடையாளம் கலப்பையாகும்.
பூமியை உழுது, புரட்டி எடுக்கும் வேலையைச் செய்ததால்
அவன் நாகன் எனப்பட்டிருக்க வேண்டும்.

மஹாபாரதம் 13- 132 இல் பலராமன் ஒரு நாகன் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஆரிய - தஸ்யூக்கள் என்ற ஐந்து மகன்களைப் பார்த்தோமே (பகுதி 30)
அவர்களது தாத்தாவான நஹுஷனை,
ஆரிய அரசர்களது சந்திர வம்சத்தில் வந்த நாகன்என்கிறது
மஹாபாரதம் (3-178)
அவன் ஆண்ட பகுதி பூமிக்குள்ளிலிருந்து
வெளிப்பட்ட பகுதியாக இருந்திருக்க வேண்டும்.

இவ்வாறே குந்தியின் கொள்ளுப் பாட்டனாரை
ஆர்யகன்என்ற நாகன் என்கிறது பாரதம் (1-128)


வடக்கில் இருப்பது போல, தென்னிந்தியாவிலும் நாகர்கள் உண்டு.
நாமிருக்கும் தக்காணப் பீடபூமியே,
பூமிக் குழம்பு வெளிப்பட்டு உண்டானதுதான்.
தொண்டை மண்டலத்தை நிறுபிய ஆதொண்டையின்
தாய் ஒரு நாக கன்னியாவாள்.
நாகர்கோவிலிலும் நாகர்கள் இருந்திருக்கிறார்கள்.
இந்தியக் கடலில் முழுகிய பகுதிகளிலும் நாகர்கள் இருந்திருக்கிறார்கள்.


இந்தியாவில் உள்ள பல இடங்களும்
இப்படி பூமிக் குழம்பு வெளிப்பட்டு நிலமானதுதான்.
பூமிக் குழம்பு வெளிப்பட்ட இடஙக்ளில்,
பாம்புகளும் அதிகம் வாசம் செய்கின்றன.
அங்கு நாக வழிபாடும் நடந்திருக்கிறது.
அந்த இடங்களில் இருந்த மக்களும் நாகர்கள் என்று அழைக்கப்பட்டிருக்கின்றனர்.


இந்தியர்களை ஆரியர், திராவிடர் என்று அழைத்திருப்பதற்குப் பதிலாக, நாகர்கள் என்று அழைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
நாகன் என்ற அடையாளத்தால் அவர்கள் ஒன்றுபட்டிருக்கின்றனர்.
உதாரணமாக கர்நாடகாவில்
ஹஸன் பகுதியில் ஹெரகு என்னுமிடத்தில் கிடைத்துள்ள கல்வெட்டில், 
ஹொய்ஸள மன்னன் ஆட்சியில் (கி.பி 1217)
காஷ்மீர க்ரம ராஜ்ஜியத்தில் இருந்த மக்கள்
ஹொய்ஸளத்துக்கு வந்து குடியேறினர் என்றும்
வந்த இடத்தில் இருந்த மகக்ளுடன் திருமண உறவுகள் வைத்துக் கொண்டனர் 
என்றும் எழுதப்பட்டுள்ளது.
நாகர் என்பது போல ஏதோ ஒரு ஒற்றுமை இருந்திருந்தால்தான்  
திருமண உறவு வைத்துக் கொள்வது போன்றவை சாத்தியமாகும்.


நமது முக்கிய ஆராய்ச்சிக்கு வருவோம்.
முழுவதுமே பூமிக் குழம்பு வெளிப்பட்டு உண்டான இடம் காஷ்மீரம் ஆகும். 
இமயமலை உண்டான காலம் தொட்டே,
அங்கிருந்த கடலை முட்டி மோதி, நிலப்பகுதி எழும்பியிருக்கிறது.
அதன் உச்சியில் ஏரியாக இருந்த பகுதி உடைந்து,
அதனால் வெளிப்பட்ட நிலமே காஷ்மீர்
என்பது நீலமத புராணம் சொல்லும் காஷ்மீர வரலாறு.
அதனால் அங்கு வாழ்ந்த பலவித மக்களுக்கும்
நாகர் என்ற சிறப்புப் பெயர் உள்ளது.
ஜெயபீட அரசனை எடுத்துக் கொண்டால்
அவன் கார்க்கோடக வம்சாவளியில் வந்தவன்.
கார்க்கோடகன் என்பது ஒரு பாம்பின் பெயர்.
பிரம்ம கருட சாஸ்திரம் என்று ஒரு நூல் உள்ளது.
அதில் ‘அஷ்டபணி நிதானம்என்ற ஒரு பகுதி
பாம்புக் கடிக்கு நிவாரணங்களைத் தருகிறது.
அதில் சொல்லப்பட்டுள்ள பாம்புகள் பெயரில்
நாக இன மக்கள் இருந்திருக்கின்றனர்.
அவர்களுள் பலரும் காஷ்மீரப் பகுதிகளில் இருந்திருக்கின்றனர்.


காஷ்மீரத்தில் உள்ள ஆனந்த நாக் என்னும் பகுதிக்கும்
அப்படியே பெயர்க் காரனம் ஏற்பட்டுள்ளது.
ராஜ தரங்கிணி எழுதப்பட்ட காலத்தில் காஷ்மீர் இரண்டு பகுதிகளாக இருந்தது.
ஸ்ரீநகர், ஆனந்த்நாக் போன்ற பகுதிகள் உள்ள தெற்குப் பகுதி
மதவ ராஜ்ஜியம் என்றும்,
பாரமூலாஉள்ள வட பகுதி
க்ரம் ராஜ்ஜியம் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.
க்ரம ராஜ்ஜியத்தின் பல பகுதிகள்
இன்றைக்குப் பாகிஸ்தானியக் கட்டுப்பாட்டில் உள்ளது.
அந்தக் க்ரமராஜ்ஜியத்தில் செப்புச் சுரங்கங்கள் கண்டுபிடிகக்ப்பட்ட வரலாறே, முதலில் சொன்ன கதை ரூபமாகச் சொல்லப்பட்டிருக்கிறது..


நாகர் உண்டான வர்ணனை போல,
எங்கெல்லாம் நீருக்குள்ளிருந்து நிலமானது எழுகிறதோ,
அங்கே வராஹ அவதாரம் நடப்பதாகக் கொள்வார்கள்.
காஷ்மீரில் அப்படி எழும்பிய ஒரு இடம்
‘வராஹ மூலம் என்று அழைக்கப்பட்டது.
அதுவே பாரமூலா (Baramulla) என்று திரிந்தது.
அந்த பாரமூலா பகுதியே ஜெயபீடன் காலத்தில்
க்ரம ராஜ்ஜியம் என்றழைக்கப்பட்டது.
அப்படி நிலம் வெளிப்பட்ட இடங்களில் செப்புச் சுரங்கம் வெளிப்பட்டிருக்கிறது. 
அப்படிப் பட்ட ஒரு சம்பவம் ஜெயபீடனின் காலத்தில் நடந்திருக்கிறது.
சந்திர புர ஏரிப் பகுதியில் நீர் மட்டம் குறைந்து,
அங்கு வெளிப்பட்ட நிலத்தில் செப்புச் சுரங்கங்களைக் கண்டிருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியைத்தான் மஹாபத்ம நாகன்
கதையாகச் சொல்லி வந்திருக்கிறார்கள்.


இந்த இயற்கை நிகழ்வில் திராவிடன் பெயர் ஏன் அடிபடுகிறது?
அதிலும் அவன் மந்திரம் மூலமாக
ஏரித் தண்ணீரை வற்றச் செய்தும்,
பிறகு நிரப்பச் செய்தும் காட்டும் வித்தை என்று சொல்லப்பட்டுள்ளதே,
எந்தத் தமிழனாவது அப்படி ஒரு மந்திர வித்தை அறிந்திருந்தான்
என்று தமிழ் நூல்களில் எங்காவது செய்தி உண்டா?
இல்லையே. 

மூவேந்தர்கள் ஆண்ட தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டால், 
அவரவர்களுக்கென்று நதிகள் இருந்தன. 
கிடைத்த மழையின் அளவில் திருப்திப்பட்டுக் கொண்டு, 
வறட்சிக் காலங்களில், வறண்டு போன நிலங்களைப் பாலை நிலம் 
என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். 
ஆனால் நிலத்தடி நீரை அறிந்து அதை சேமிக்கும் விதமாகக் 
குளம், குட்டை, ஏரிகள் என்று அபரிதமாக வெட்டியது 
காஞ்சிபுரம் பகுதிகளில்தான் என்பதை நாம் நினைவு கூற வேண்டும். 
அந்தப் பகுதிகள் மூவேந்தர் ஆளுகையில் இருந்திருக்கவில்லை, 
அந்தப் பகுதிகளில் திராவிடர்கள் குடியேறவே பின்னாளில்,
அங்கு நிலத்தடி நீரைத் தேடிச் சேமிக்கும் வழக்கம் வந்திருக்கிறது என்று தெரிகிறது. இவ்வாறு நிலத்தடி நீருக்கும், திராவிடனுக்கும் தொடர்பு காணப்படுகிறது.


மனு வாழ்ந்த திராவிட தேசத்துக்கு அந்தத் தொடர்பு உண்டு. 
மனுவும், ஸரஸ்வத ரிஷியும் மட்டுமே
நிலத்தடி நீர் சாஸ்திரம் தெரிந்தவர்கள்
என்ற விவரமும் உண்டு.  (பகுதி 49)
பரசுராமர் தயவால் நீரில் முழுகிய நிலங்களை மேலே வந்து,
அவை திராவிட அடையாளம் பெற்றன என்ற செய்தியும் உண்டு (பகுதி 49)
மனு வாழ்ந்த திராவிட நாட்டில், பனியுகம் காரணமாக மழை இல்லை.
ஆயினும், நிலத்தடியில் நீர் ஓடும் மார்கங்களை அறிந்திருக்கவே,
அந்த அறிவின் மூலம்
குளம், ஏரி ஆகியவற்றை வெட்டித்
தங்கள் நீர்த்தேவைகளைப் பூர்த்தி செய்திருக்கின்றனர்.

‘திராவிடம் என்னும் சொல்லே இதன் அடிப்படையில்தான்
எழுந்திருக்க வேண்டும்.
திராவிடம் என்பது வட மொழிச் சொல் ஆகும்.
அதை த்ரவ் + இட என்று பிரிக்கலாம்.
த்ரவ் என்றால் திரவம்.
ஓடுவது திரவமாகும்.
இடா என்றால் ஒடும் விதம் என்று பொருள்.
மூச்சுப் பயிற்சியில் இடகலை, பிங்கலை என்று சொல்கிறார்களே,
அந்த இட என்பது அது.
அது ஓடும் வழி அல்லது நாடி எனப் பொருள்படும்.
எனவே த்ரவ் + இட என்றால் திரவம் அல்லது
நீர் ஓடும் நாடி என்று பொருள் கொள்ளலாம்.
நிலத்தடி நீர் சாஸ்திரம் பயன்படும் பூகோள அமைப்பாக இருக்கவே
மனு இருந்த நாடு திராவிடம் என்ற பெயர் பெற்றிருக்கக்கூடும்.


த்ராவிட என்பதன் வேர்ச் சொல் ‘த்ரு அல்லது ‘த்ரா என்பதாகும்.
இதற்கும் ஓடுதல், ஓட்டம் என்றே பொருள்.
இது த்ராவதித்ராவ்ணா என்றெல்லாம் அதே பொருளில் வரும்.
எனவே திராவிடம் என்பது நீரோடும் இடம்என்று
பொருள் கொள்வதே சரியாக இருக்கும்.
நிலத்தடி நீரோட்டத்தை நம்பியே இருந்த இடமாக இருந்ததால்
அது திராவிடம் என்று அழைக்கப்பட்டது.
அவ்வாறு நிலத்தடியில் ஓடும் நீரை,
அந்தப் பகுதியில் உள்ள பாறைகள்,
அவற்றின் நிறம்,
அங்கு வளரும் மரம்,
அந்த மரத்துக்கு அருகில் உண்டாகும் புற்று போன்றவற்றின் அடிபப்டையில்
ஸரஸ்வத ரிஷியும்,
மனுவும் நிலத்தடி நீர் கண்டு பிடிக்கும் சாஸ்திரத்தைக் கொடுத்துள்ளனர் என்று
வராஹமிஹிரர் கூறுகிறார்.


அந்த நீரோட்டத்துக்கு ‘ஜல நாடி என்றே பெயரிட்டிருக்கிறார்கள்.
மேலும் பாறைக்குக் கீழ் ஓடும் நீரோட்டங்களையும்
கண்டு பிடிக்கும் முறைகளும்,
அந்த நீரைக் கொண்டு வர, பாறைகளை எவ்வாறு உடைக்க வேண்டும் என்னும் முறைகளும் ஜல நாடி சாஸ்திரத்தில் உள்ளன.
மறைந்து போன அந்த சாஸ்திரம் இன்று நமக்கு
வராஹமிஹிரரது பிருஹத் சம்ஹிதை (அத்தியாயம் 54)
மூலமாகத்தான் கிடைத்துள்ளது.
பாறைகளுக்குக் கீழே நீரோட்டம்
உள்ள இடத்தைப் பற்றி சொல்கையில்,
அத்தகைய பாறைகள் நாகர்கள், யக்ஷர்கள் வசிக்கும் இடங்களில் காணப்படுகின்றன என்று வராஹமிஹிரர் சொல்வது
முக்கியமான ஒரு துருப்பாகும்.


அந்த சாஸ்திரத்தை அறிந்த திராவிடன்,
மந்திரவாதி எனப்பட்டிருக்க வேண்டும்.
நீரில்லாத இடத்தில் நீர் கிடைக்குமா என்பதையும்,
நீர் இருக்கும் இடத்திலிருந்து, அது வடிந்து போகக் கூடிய
நிலத்தடி நாடிகள் உள்ளனவா என்றும்
காலம் காலமாக அறிந்து வைத்தவர்கள் அந்தத் திராவிடர்கள்.
அப்படி ஒருவன் கொடுத்த துப்பின் மூலமாக
சந்திரபுர ஏரியின் நீர் மட்டம் இறங்கியும், பிறகு ஏறியும் இருக்கும்.
அதை அந்தத் திராவிடன் செய்த மந்திரச் செயல் என்று
மக்கள் நினைத்திருக்கிறார்கள்.
மேலும் இந்த இடமே காஷ்மீர நாகர்கள் வாழ்ந்த இடம்.
அங்குள்ள பாறைகளைக் கொண்டு நீர் நாடியைக் கண்டுபிடிகக் முடியும்.
எனவே அந்தப் பகுதிகளில்
நிலத்தடி சாஸ்திரம் தெரிந்த திராவிடனுக்கு வேலை இருந்தது.
அதனால்தான் குறிப்பாக, திராவிட மந்திரவாதி என்று
நிலத்தடி நீர் சாஸ்திர நிபுணனை அழைத்திருக்கிறார்கள்.


ராஜ தரங்கிணியின் மூலம் இவ்வாறு நாம்
இரண்டு துப்புகளைப் பெற முடிகிறது.
முதலாவது, பஞ்சத் திராவிடம் என்னும் பகுதிகளும்,
அங்கு வாழ்ந்து வந்த பஞ்சத் திராவிட மக்களும்.  
அவர்கள் அனைவரும் பிராம்மணர்கள்.
இந்த விவரங்களை முந்தின கட்டுரையில் பார்த்தோம்.
இரண்டாவது, நிலத்தடியில் ஓடும்
ஜலநாடி சாஸ்திரம் அறிந்தவன் திராவிடன்
என்ற செய்தியை இந்தக் கட்டுரையில் ஆராய்தோம்.
அதன் மூலமாக, திராவிடம் என்னும் வடமொழிச் சொல்லின் பொருள்
எவ்வாறு பொருத்தமாக இருக்கிறது என்றும் பார்த்தோம்.

இன்னும் ஒரு இடத்தில்
திராவிடர் என்னும் மக்களைப் பற்றி விவரங்கள் வருகின்றன.
அது மனு ஸ்ம்ருதி.
அந்த விவரத்தையும் ஆராய்ந்து விட்டு,
வராஹமிஹிரர் கூறும் திராவிட நாடு எது என்று பார்ப்போம்.

17 கருத்துகள்:

 1. Scientifically researched historical analysis of the Dravidar, now throws light has to how ill informed or apparently ignorant we are about the origin of the word, the meaning the people and the land of Dravidars.Thank you Jayashree we are indebted to you .

  பதிலளிநீக்கு
 2. It is interesting article and tempting me to read more on this topic. Can you share the source book title & author information? I am looking forward to buy & refer them for enrichment.

  பதிலளிநீக்கு
 3. @Y.V.Raman
  Thanks.

  @Computer Junkie
  This is a work entirely done by me which I conceived through years in my acquaintance with Hindu texts, Tamil texts and astrology. At some stage I found things falling together in place and I am giving them in a plan. I am confident that this work is right as I find genetics concurring with my findings. That will also be written in the series. The references have been given then and there.

  பதிலளிநீக்கு
 4. Mr M.Krishnaswamy writes:-

  Many more will benefit and the knowledge discovered by you
  will become known to a larger audience if you can publish an
  English language version of your article.

  krishnaswamy

  பதிலளிநீக்கு
 5. @ M.Krishnaswamy

  I agree.

  But I started this series in Tamil as I felt that Tamil reading public are the misguided ones and they have to be drawn to read this material. If I write it in English, the hardcore Dravidianists of Tamilnadu would never read. At the same time I know that rest of the world could not get a chance to read what I write. I want to bring out the English version of this. Due to lack of time, I won't be doing that in the near future. I will be grateful if some one comes forward to do the English translation of this.

  A rough translation would do as and when they get time. I will polish it and post in a separate blog. All this is voluntary and non- profit work only. Hope someone will come forward.

  பதிலளிநீக்கு
 6. //முதலாவது, பஞ்சத் திராவிடம் என்னும் பகுதிகளும்,
  அங்கு வாழ்ந்து வந்த பஞ்சத் திராவிட மக்களும்.
  அவர்கள் அனைவரும் பிராம்மணர்கள்.//

  உங்க கட்டுரை காமடியா இருக்குது

  பதிலளிநீக்கு
 7. //jaisankar jaganathan சொன்னது…

  //முதலாவது, பஞ்சத் திராவிடம் என்னும் பகுதிகளும்,
  அங்கு வாழ்ந்து வந்த பஞ்சத் திராவிட மக்களும்.
  அவர்கள் அனைவரும் பிராம்மணர்கள்.//

  உங்க கட்டுரை காமடியா இருக்குது//

  நீங்க இதுக்கு முந்தின கட்டுரையப் படிக்கலன்னு தெரியுது. அதைப் படிங்க. அதன் ஆரம்பப் பத்தியில உங்கள மாதிரி நினைக்கறவங்களைக் பற்றி சொல்லிட்டுதான் கட்டுரையை ஆரம்பிச்சிருக்கேன்.

  பதிலளிநீக்கு
 8. It may be of great interest to people like Michael Cremo (he is a Hare Krishna Devotee - doing some fundamental research on the human antiquity based on the facts that can be read in vedas, bhagawadam etc.) If you are interested to share your research with him it may be of great benefit to all.

  பதிலளிநீக்கு
 9. @ Baskaran,
  You mean Michael Danino?

  //If you are interested to share your research with him it may be of great benefit to all. //

  Of course. I have no problem sharing with others and would be happy if my work helps in taking further the research. The VeLir connection is yet to come in this series. That would be most crucial input to explain the caste conflicts in the past several centuries which the Dravidianists blame on Brahmins.

  பதிலளிநீக்கு
 10. Dear Mam,
  'Michael Cremo' co authored a book called "Forbidden Archeology" and authored another one by "The humand Devolution".The skeptics say that whatever the authors claims with with antiquities need substantial evidence, further study needs to be done on the evidences provided by them.

  They try to disapprove Darwin's idea with Archeological and other evidences.

  பதிலளிநீக்கு
 11. Dear Mr Chalam,

  Darwin's idea has no support from Hindu thought also. Evolution happens with evolution of conscience. This is a vast topic which is beyond the scope of writing here. I will read Michael Cremo's work. But from your and Mr Bhaskaran's comment I guess that it is about a very antiquated origin for man. If so, my answer is yes which I say from Hindu Thought.

  பதிலளிநீக்கு
 12. You will get more information in this web page
  http://archive.org/details/OriginsOfChristianityAndOtherReligionsAsToldInTheWorldsOldest

  பதிலளிநீக்கு
 13. தங்கள் கட்டுரை மிகவும் அருமை. பிராமண கருத்துக்கு ஆதரவாக இருந்தாலும் பல சிந்திக்கும் விடயங்களும் இருக்கின்றன. நாகர்கள் யார் என்று தீவிரமாக ஆரய்ந்தால், திராவிடர்களும் நாகர்களும் திருமண உறவில் கலந்து விட்ட பல்லவ வம்சம் என்று தெளிவாக தெரியும். காரணம் நாகர் என்பதும் திராவிடர் என்பதும் பல்லவரை குறித்த சொல். ஆதாரம் வேண்டுமானால் காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலிலும் சீர்காழி வைதீசுவரன் கோவிலிலும் இதற்கு ஆதாரம் இருக்கிறது. ஆய்வு செய்து பாருங்கள் உண்மை விளங்கும். பல்லவர்களும் தங்களை பிராமணர் என்று கூறும் கல்வெட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இருக்கிறது.கடம்பரையும் பல்லவரையும் பங்காளிகள் என்றும் சொல்லலாம்.

  பதிலளிநீக்கு
 14. # நாகர் என்பதற்கான அடையாளம் வேறு. நாகர்கள் மற்றி ஆங்காங்கு சொல்லி வந்துள்ளேன். படிக்கவும்.

  # திராவிடர்கள் என்ற இனக் குறிப்புச் சொல்லே கிடையாது, அது தவறு என்பதே என் தொடர் சொல்லும் செய்தியாகும்.

  # பல்லவர்கள் மஹாபாரத கால அஸ்வத்தாமனது வம்சாவளியினர். கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கின்றன. அவர்கள் விஷ்ணு பக்தர்கள். அவர்கள் க்ஷத்திரியம் விட்டு (அஸ்வத்தாமன் காலத்துக்குப் பிறகு) கல்லர்களாகி, பிறகு மல்லர்களானவர்கள். திருவல்லிக்கேணி கல்வெட்டு பல்லவர்களை பிராம்மணர்கள் என்று சொல்லவில்லை. அந்தக் கல்வெட்டு பல்லவ மன்னன் தந்திவர்மன் காலத்தது. வர்மன் என்பதே க்ஷத்திரியர் / போரிடுபவர்கள் குறித்த சொல். பிராம்மணப் பெயரல்ல. அந்தக் கல்வெட்டு பற்றிய குறிப்பை ஒரு கட்டுரையில் எழுதியுள்ளேன். படிக்கவும்:-

  http://thamizhan-thiravidana.blogspot.in/2012/03/were-brahmins-bad-sequel-to_898.html

  பதிலளிநீக்கு
 15. இந்த வலைப்பூவில் மஹாபாரம் குறித்து அதிகம் அலசப்படுவதால், இந்த லிங்க்கை இங்கே விடுகிறேன். அதில் கிசாரி மோகன் கங்குலி அவர்களின் ஆங்கில "The Mahabharatha" வை தமிழில் மொழி பெயர்க்கும் பணி நடைபெறுகிறது. இதுவரை ஆதிபர்வத்தில் 122 பகுதிகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி திரு அருட்செல்வ பேரரசன் அவர்களே. ஜெயஸ்ரீ அவர்களின் எழுத்துக்கள் ஆழமாக ஆராயப்பட்டால் நாம் படித்த இந்திய வரலாறு நிச்சயமாக மாற்றி அமைக்கப்பட வேண்டியது. அதனினும் முக்கியம் சமஸ்க்ருதம் மற்றும் தமிழ்(ஆதிகால பெயர் என்னவென்று தெளிவாக எனக்கு தெரியவில்லை) இவற்றில் உள்ள விஞ்ஞானம் மற்றும் மருத்துவக் குறிப்புகள் இயற்கைக்கு ஊறு விளைவிக்காத வகையில் மக்கள் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட வேண்டும்.

   நீக்கு