செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

ராவணன் தமிழனா? ('தேசிய சிறகுகள்' காணொளியில் எனது பேச்சு)

ராமர்  பிறந்த இடத்தில் கோயில் கட்டுவதற்காக  பிரதமர் திரு  நரேந்திர மோடி  
அவர்கள் பூமி பூஜை செய்த அன்றுட்விட்டர் தளத்தில்  #LandofRavana  #TamilPrideRavana மற்றும் #LandOfRavanan என்ற ஹாஷ் டேக் மூலம் ராவணன் ராமரால் அநீதி இழைக்கப்பட்ட ஒரு தமிழ் மன்னன் என்ற கருத்து பரப்பப்பட்டது.

பாஜக அரசுக்கு விரோதமான தமிழ்நாட்டின் சில அமைப்புகளும், கட்சிகளும் ராமர்  கோயிலுக்கு மறுப்பு தெரிவிக்கும் வழிமுறையாக இந்த அபத்தமான "ட்வீட் போர்" நடத்தின. இதன்  பின்னால்  அனைத்து இந்துக்கள் மீது அவர்களுக்கு உள்ள வெறுப்பு வெளிப்படுகிறது. மற்றும் தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்ற கருத்தையும்  ஊக்குவிக்கும் திட்டமாக  உள்ளது. இதற்காக அவர்கள் ராவணனைத்  தமிழ் மக்களின் அடையாளமாக எடுத்துக் கொண்டனர்.

இந்தப் பின்னணியில்'தேசிய சிறகுகள்என்ற தனியார் யூடியூப் சேனலில் ஒரு குறுகிய உரையைக் கொடுத்துள்ளேன்.

ராமர் மீதான வெறுப்பு இந்துக்கள் மீதான வெறுப்பிலிருந்து உருவாகிறது என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டிய பின்னர், “எதிரியின் எதிரி தனக்கு  நண்பன்” என்ற தர்க்க அடிப்படையில்  இந்த வெறுப்பு எவ்வாறு நியாயப்படுத்தப்பட்டது என்பதை விவரிக்கிறேன் . இந்துக்கள் எதிரிகளாக கருதப்படுவதால்அவர்களது  கடவுளான ராமர்,  இவர்களது  எதிரியாக மாறுகிறார்எனவே ராமரின் எதிரி இராவணன் தங்கள் நண்பன் என்ற நோக்கில் இராவணன் தமிழன் என்ற பிரசாரம் செய்யப்பட்டதுசெய்யப்படுகிறது.

ராவணனை உயர்த்திக் கூற அவர்கள் எடுத்துக் கொண்ட விவரங்களை இங்கே கொடுக்கிறேன்

இராவணன்  'அனுமதியின்றிசீதையைத் தொடவில்லை.
ராம - லக்ஷ்மணர்கள் அநியாயமாக  சூர்ப்பனகையின் மூக்கை வெட்டினர் .
ராமன் வாலியை 'அநியாயமாக'க் கொன்றான்.
ராமன்சீதையை தீக்குளிக்க கட்டாயப்படுத்தினான்.

இவற்றுக்கெல்லாம் சிகரமாக ராவணன் தமிழன் என்றும், ராமன் ராவணனுக்கு இழைத்த அநீதியால் தமிழர்கள் ராமனைக் கொண்டாடக்கூடாது என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

ராவணனை உண்மையிலேயே ஒரு தமிழ் நபராகக் கருத முடியுமா என்ற கேள்வியை எழுப்பி  இவை அனைத்திற்கும் நான் பதிலளித்துள்ளேன்திருக்குறள்  தமிழ் கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதால்இவர்கள் மதிப்பதாகச் சொல்லும் திருக்குறளை நான் எடுத்துக்கொண்டேன்.

ஒருவர் தமிழ் பேசுவதன் மூலமாகவோ அல்லது திருக்குறள்  விவரித்த தமிழ் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதன் மூலமாகவோ தமிழராக மாறுகிறாரா? ' என்ற கேள்வியை எழுப்பி ஆராய்ந்தேன்.

ராவணன் தமிழ் பேசினான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, மாறாக சீதாவும் ராமரும் தமிழ் பேசினார்கள் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன .
திருக்குறள்  வலியுறுத்திய கலாச்சாரத்திற்கு ஏற்ப ராவணன் வாழவில்லை.

மற்றொரு ஆணின் மனைவியை விரும்புவது தவறு என்று திருக்குறள்   அறிவுறுத்துகிறதுராவணன் பிறன் மனைவியை விரும்பினான் - அவன் சீதையை விரும்பியதை, திருக்குறள் ஏற்காதுஅவனைப் போலவே  வாலியும் தனது சகோதரனின் மனைவியை ஆசைப்பட்டான் .

புலால் உண்ணுதலைத்  திருக்குறள்  கண்டிக்கிறதுபுலாலுக்கு பல படி மேலே போய் இராவணனும்சூர்பனகையும் நர மாமிசம் உண்பவர்களாக இருந்தனர்அவர்கள் மனிதனையே  உண்பவர்கள்இருவருமே சீதையை உண்ணத்  துணிந்தவர்கள்.

பழிச் சொல் இல்லாத வாழ்க்கை வாழ்வதை திருக்குறள் வலியுறுத்துகிறது.  தனக்கு ஏற்பட்ட பழியைத் துடைக்க சீதை நெருப்பில் நடக்க முடிவு செய்தாள்ராமன் அவளை நெருப்பில் இறங்கச் சொல்லவில்லை. மகாபாரதப் போரின் முடிவில் திரௌபதியும்  இதைச் செய்தாள்இதன் எதிரொலியாக திரௌபதி அம்மன்  கோயில்களில் தீ மிதித்தல் ஒரு  விழாவாக இன்றுவரை நடை பெற்று வருகிறது.

இறுதியாக நான் ராவணனின் வம்சாவளியை,  தந்தைவழி மற்றும் தாய்வழி தரப்பில் கொடுத்துள்ளேன்பிறப்பினாலோ  அல்லது இருப்பிடத்தினாலோ ராவணன் தமிழன்  அல்லன்  என்பதை இதன் மூலம் நிரூபிக்கிறேன்இலங்கை  கூட ராவணனுடையது அல்லஅவன் தந்தையின் மூத்தாள் மகனானஅதாவது  ராவணனது  சகோதரரான குபேரனிடமிருந்து  இலங்கையைப் பறித்துக் கொண்டான்

விவரங்களை  இந்த வீடியோவில் காணலாம்: