செவ்வாய், 7 டிசம்பர், 2010

14. ராமனும் , ராவணனும் சரித்திர உண்மைகளே!

சோழர் பரம்பரையையும், ராமன் பரம்பரையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சிபி மன்னன் காலம், ராமனுக்கு முன்னாலேயே வந்து விடுகிறது. அயோத்தியை ஆண்ட இக்ஷ்வாகு மன்னர்களில், யயாதியின் மகள் வயிற்றுப் பேரன் சிபி என்று தெரிகிறது. அதே யயாதியின் மகன் வழியில் ராமன் எள்ளுப் பேரனாகிறான். அந்த ராமன் பிறந்து பல லட்சக் கணக்கான ஆண்டுகள் ஆகி விட்டன என்று ஒரு கருத்து இருக்கிறது. அது உண்மையென்றால், அவனுக்கு முன்னால் பிறந்த சிபியின் காலமும் பல லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் என்றாகிறது. சிபி என்னும் ஒருவன் வாழ்ந்தான் என்பது சங்கப் புலவர்களால் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. அந்த சிபி வாழந்தது உண்மை என்றால் அவனுக்குப் பின்னால் வந்த ராமனும் உண்மையாகத் தான் இருக்க முடியும்.

அந்த ராமன் ஆரியன் என்றால் சிபியும் ஆரியனாகத் தான் இருக்க முடியும். சிபி ஆரியன் என்றால் அவன் வழி வந்த சோழ மன்னர்களும்  ஆரியர்களே. சோழ மன்னர்கள் ஆரியர்கள் என்றால், அவர்கள் ஆண்ட தமிழ் மக்களும் ஆரியர்களாக  இல்லாமல், திராவிடர்களாக எப்படி ஆக முடியும்?

திராவிடவாதிகளின்  ஒரு வாதம், ராவணன் ஒரு திராவிடன் என்பது. ராவணன் இருந்தான் என்று அவர்கள் ஒத்துக் கொண்டால், ராமனும் உண்மையில் வாழ்ந்தான் என்பதை ஒத்துக் கொண்டதாக அல்லவா ஆகிறது? 

திராவிடன் என்று சொல்லிக் கொள்ளவாவது  ராவணன் என்ற ஒருவன் திராவிடவாதிகளுக்குத் தேவைப்படுகிறான் என்றால, அந்த ராவணனுக்கும், தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று பார்ப்போமா?

பாண்டியர்கள் எழுதிய செப்பேடுகளில்  ராவணனைப் பற்றி ஒரு குறிப்பு வருகிறது. மதுரையில் உள்ள பெரியகுளம் பகுதியில் சின்னமனூர் என்னும் இடத்தில் உள்ள விஷ்ணு கோவில் திருப்பணியின்  போது பாண்டியர்களது செப்பேடுகள் கிடைத்தன. அவற்றில் பாண்டிய வம்சத்தின் பெருமை எழுதப்பட்டுள்ளது. (1) 
 

முற்காலப் பாண்டிய மன்னர்கள் பெயர்கள்  அதில் காணப்படவில்லை. ஆனால் முற்காலப் பாண்டிய மன்னர்கள் செய்த செயல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பொங்கி எழுந்த கடலை அடக்கின பாண்டியன் முதலாக வந்த மன்னர்கள் பற்றிய குறிப்பு அதில் உள்ளது. அப்படிக் கடலை அடக்கிய பாண்டிய மன்னன் பெயர் உக்ரபாண்டியன் என்பதை நாம் சங்க நூல்கள் மூலம் அறிகிறோம். அந்த நிகழ்ச்சிகளை நாம் பிறகு பார்க்கலாம். இங்கே நாம் கவனிக்க வேண்டிய பாண்டிய அரசன் ஒருவன் இருக்கிறான். அவன் பத்துத் தலை கொண்டவனை அடக்கி அமைதியை நிலை நாட்டினான் என்று இந்தச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. 

பத்துத் தலைகளைக் கொண்டவன் என்று சொல்லப்படுபவன் இலங்கையை ஆண்ட இராவணன் ஒருவனே.. உண்மையில் அவனுக்குப் பத்துத் தலைகள் இருந்திருக்காது. அது ஒரு சிறப்பு அடையாளமாக இருந்திருக்கக் கூடும். பத்துத் தலைகள் கொடுக்கக்கூடிய அறிவினை ஒருங்கே உடையவனாக இருந்திருக்கலாம். அல்லது தர்மம் தலை காக்கும் என்பார்களே, அவன் செய்த புண்ணிய காரியங்களும், தருமமும், பத்து மடங்கு அதிகமாக இருந்திருக்கும். பத்து முறை அவன் தலையைக் காக்கும் வண்ணம், அதாவது மரணத்திலிருந்து பத்து முறை அவனைக் காப்பாற்றக்கூடிய  அளவுக்கு அவன் புண்ணியம் செய்திருப்பான்.

அப்படிப்பட்ட ராவணனை ஒரு பாண்டிய மன்னன் அடக்கி, நாட்டில் அமைதியை நிலை நாட்டினான் என்று சின்னமனூர் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. அவன் பெயர் குறிப்பிடப்படவில்லை. சங்கப் பாடல்களிலோ அல்லது பிற்காலப் பாடல்களிலோ, அப்படி ஒரு பாண்டியன் ராவணை வெற்றி கொண்டான் என்று சொல்லப்படவில்லை.

ஆனால் அந்தச் செய்தி வட மொழி இலக்கியத்தில் காணப்படுகிறது!

கி-பி- முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த விக்ரமாதித்தன் என்னும்  மன்னனது  சபையில் இருந்த காளிதாசர் என்பவர் ரகு வம்சம் என்னும் பாடலை எழுதி உள்ளார். அதில்  ராமனது  மூதாதையரான ரகு என்னும் மனன்னின் வரலாற்றைப் பற்றியும், அந்த மன்னனுக்குப் பிறகு வந்த அரசர்களைப் பற்றியும், ராமன் மற்றும் அவனுக்குப் பின் வந்த சந்ததியரைப் பற்றியும் எழுதியுள்ளார். ரகுவின் வம்சத்தில் வந்ததால் ராமனுக்கு ராகவன் என்று ஒரு பெயரும் உண்டு. அந்த ராமனின் தாத்தா பெயர் அஜன். பாட்டியின் பெயர் இந்துமதி. அவர்கள் திருமணம் பற்றிச் சொல்லுமிடத்தில் (ரகு வம்சம், 6 -ஆவது அத்தியாயம் ) ஒரு பாண்டிய மன்னனைப் பற்றிய விவரம் வருகிறது.

இளவரசி இந்துமதியை, சுயம்வரத்தின் மூலம் அஜன் மணம் புரிகிறான். அந்த சுயம்வரத்தில் போட்டியிட வந்த பல மன்னர்களுள்   பாண்டிய மன்னனும்  ஒருவன். அவன எப்படிபட்டவன் என்று இந்துமதியின் தோழி சுனந்தா விவரிக்கிறாள்.

"மலையிலிருந்து கொட்டும் அருவிகளைப் போல, சிவந்த சந்தனம் பூசப்பட்ட மலை போன்ற மார்பில் தொங்கும் முத்துச் சரங்கள் பல உடையவன் இந்தப் பாண்டிய மன்னன். அகத்திய முனிவர் வழி நடத்த, அஸ்வமேத யாகங்கள் பல செய்ததால் அபிஷேக நீர் அவன் உடலில் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. 
இந்தப் பாண்டிய அரசனது வலிமை எப்படிப்பட்டதென்றால், இலங்கையை ஆண்ட ராவணன் பாண்டியர்களிடம் சமரசம் செய்து கொண்டவன். 
அப்படி அவன் சமரசம் கொள்ளவில்லை என்றால் பாண்டியர்கள் சிவ பெருமானிடமிருந்து பெற்ற 'பிரம்மா சிரோ அஸ்திரத்தினால்' ராவணனுக்கு என்றோ அழிவு நேர்ந்திருக்கும். 
தக்ஷிண திசை என்று சொல்லப்படும் தென் திசையிலிருந்து வரும் இந்தப் பாண்டிய மன்னனை  மணந்து  கொண்டால் உனக்கு ஒரே ஒரு சக்களத்திதான் இருப்பாள்.  
அவள் தென் திசையில் உள்ள பாண்டிய நாடு என்னும் நாடுதான்." என்று சுனந்தா விவரிக்கிறாள்.


இதில் சில விஷயங்கள் தெரிய வருகின்றன.
ராமனது தாத்தா காலத்துக்கு முன்பே, தென் தமிழ் நாட்டில் பாண்டிய வம்சம் சிறப்பாக இருந்து வந்திருக்கிறது. ராமனை ஏக பத்தினி விரதன் என்பார்கள். ஒருவனுக்கு ஒருத்தி  என்று வாழ்ந்தவன் ராமன். அவனைப் போலவே பாண்டிய மன்னும் ஏக பத்தினி விரதம் கொண்டவனாக வாழக் கூடியவன். அவனுக்கு ஒரு காதலி இருக்ககூடும் என்றால் அது அவன் ஆளும் நாடே ஆகும்.

இன்றைய திராவிடவாதிகளால் ஆரிய வழக்கங்களாகச் சொல்லப்படும் அஸ்வமேதம் போன்ற யாகங்கள் பலவற்றை பாண்டிய மன்னர்கள் செய்து வந்தனர்.

எந்த ராவணன் திராவிடன் என்று திராவிட வாதிகளால் அழைக்கப்படுகிறானோ, அந்த ராவணனுக்கும், பாண்டியர்களுக்கும் பகைமை இருந்திருக்கிறது. பூகோள ரீதியாக பாண்டிய நாடும், இலங்கையும் அருகருகே உள்ளன. அதனால் அவர்களுக்குள் சண்டை வந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கின்றது. செப்பேடுகளிலும், ராவணன் தொந்திரவு கொடுத்தான் என்று சொல்லும் வண்ணம் எழுதப்பட்டிருக்கிறது. பிரம்ம சிரோ அஸ்திரம் என்னும், தலை கொய்யும் அஸ்திரம் பாண்டியர்களிடம் இருக்கவே, ராவணனால் அவர்களிடம்  வாலாட்ட முடியவில்லை. எனவே சமரசம் செய்து கொண்டிருக்கிறான். இதையே செப்பேடுகளில்,  அமைதியை நிலை நாட்ட பத்துத் தலைக் கொண்டவனை அடக்கினான்  ஒரு பாண்டியன் என்று வருகிறது.

இங்கே ஒரு கேள்வி எழுகிறது. ராவணன் வாழ்ந்தது ராமனது காலக்கட்டத்தில். இந்த சுயம்வரம் நடந்ததோ ராமனது தாத்தா காலத்தில். அப்பொழுதே ராவணன் எப்படி இருந்திருக்க முடியும்? 

ராமனது தாத்தா மணம் முடிந்து, அவனுக்கு தசரதன் பிறந்து, அவனுக்கும் வயதான பிறகுதான் ராமன் பிறந்ததாக ராமாயணம் கூறுகிறது. எனவே, அஜன் காலத்திலோ அல்லது அதற்கு முற்பட்டோ ராவணன் இருந்திருக்க முடியாது. அதனால் ராவணனைப் பற்றிய விவரம் பொய் என்று சொல்ல முடியாது. ராவணன் பற்றிய  விவரம், சின்னமனூர் செப்ப்டுகளிலும் எழுதப் பட்டுள்ளது. அதனால் இந்த விவரம் உண்மையாகத் தான் இருந்திருக்க வேண்டும். மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு இருந்திருக்க வேண்டும். அதன் அடிப்படையில், காளிதாசர் அவர்கள் ரகு வம்சம் எழுதிய போது, பாண்டியர்கள் குலப் பெருமையை எழுதும் போது, கால வித்தியாசம் பாராமல், ராவணனை அடக்கிய கதையைக் குறிப்பிட்டுள்ளார் என்று தெரிகிறது.

 காளிதாசர் காலம் வரையிலும், அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை, இந்த விவரம் மக்களுக்கிடையே பேசப்பட்டிருக்க வேண்டும்.

இங்கும் ஒரு கேள்வி எழலாம். கடவுளே அவதாரம் எடுத்து ராவணனை வெல்ல வேண்டியதாயிற்று. அப்படி  இருக்க பாண்டியர்களிடம் அந்த ராவணன் அடங்கி இருந்த செய்தியை ஏன் எந்தப் புலவரும் பாடவில்லை. சிபியைப் பற்றியும், தூங்கெயில் எறிந்தவனைப் பற்றியும் பாடிய புலவர்கள், ராவணனை ஒரு பாண்டியன் அடக்கிய தீரச் செயலை ஏன் பாடாமல் விட்டார்கள்? 

இதற்கு ஒரு காரணம் சொல்லலாம். பாண்டிய மன்னர்களும் சிவ பக்தர்கள். ராவணனும் சிவ பக்தன். ஆனால் அவன் அசுரப் பண்புகளைப் பெற்றிருந்ததால், அருகில் உள்ள மனன்ர்களைச் சீண்டியிருப்பான். பாண்டியர்களையும் சீண்டியிருப்பான். சிவ பக்தியால் பாண்டியர்கள் பெற்ற அஸ்திரத்தைப் பாண்டியர்கள் ஒரு சக- சிவ பக்தன் மீது பிரயோகிக்க யோசித்திருக்கலாம். ஆனாலும் , நாட்டு நன்மைக்காக அவனை ஒரு தட்டு தட்டி அடக்கி இருக்கலாம். ராவணன் ஒரு சிவ பக்தனாக இருக்கவே, அவனை வென்றதை அவர்கள் பெருமையாகப் பேசிக் கொள்ள விரும்பியிருக்க மாட்டார்கள். 

பெரிய புராணம் கூறும் நாயன்மார்கள் சரித்திரத்தில்,  மெய்ப் பொருள்நாயனார் சரித்திரத்தில் இதே போல ஒரு கொள்கையைக் காண்கிறோம். சிவ வேடம் தாங்கிய சிவனடியார் எவருக்கும் அந்த நாயனார் (அவர் ஒரு நாட்டு மன்னன்) தீங்கு செய்ய மாட்டார். அதை அறிந்த  நாயனாரது எதிரியான முத்தநாதன் என்பவன், ஒரு சிவனடியார் போல வேடமிட்டு வந்து, அவரைத் தனிமையில் சந்திக்கிறான். அப்படியே அவரைக் கொன்றும் விடுகிறான். அவன் பொய் வேடம் தரித்தவன், தனது எதிரி என்று தெரிந்தும், சாகும் தருவாயிலும், அந்த நாயானார் அவன் ஜாக்கிரதையாக நாட்டை விட்டு வெளியேற ஏற்பாடு செய்கிறார். பொய்யான சிவ பக்தன் என்றால் கூட அந்த வேடம் தரித்தவனுக்குத் துன்பம்  செய்யவில்லை. இந்தக்  காரணமே பாண்டியர்களுக்கும் பொருந்தும். ராவணன் சிவ பக்தனாக இருக்கவே, அவனை வென்றதை அவர்கள் பெருமையாகக் கூறிக்கொள்ளவில்லை எனலாம்.

ஆனால், ராவணனை அடைக்கியது செப்பேடுகளிலும், ரகுவம்சத்திலும் காணப்படவே, ராவணன் என்ற ஒருவன் வாழ்ந்தது உண்மை என்று தெரிகிறது. அவன் வாழ்ந்தபோது, பாண்டியர்களும் தமிழ் மண்ணை ஆண்டிருக்கின்றனர் என்று தெரிகிறது. அவர்கள் இருப்பிடம் தக்ஷின பகுதியில் என்று அழுத்தம் திருத்தமாகக் காளிதாசர் கூறி இருக்கிறார்.

அந்த ராவணன் இருந்த காலம் தெரியவில்லை.
ஆனால் ராமன் வாழ்ந்த காலம் இன்று தெரிய வந்துள்ளது.
அகழ்வாராய்ச்சி, கல்வெட்டு ஆராய்ச்சி போன்றவை உதவுவது போல, இன்று விண்வெளி ஆராய்ச்சியும், நம் சரித்திரத்தைத் தெரிந்து கொள்ள உதவுகிறது. 

ஆயிரக்கணக்கான வருடங்களில் செல்லும்  காலத்தை ஆராய விண்வெளி அமைப்புகள் தான் உதவுகின்றன. Astronomy software மூலமாக இன்று நம் பழமையை ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இராமாயண, மஹா பாரதத்தில் வானில் தெரியும் கிரக அமைப்புகள், கிரகணம் போன்றவை ஆங்காங்கே சொல்லப்பட்டுள்ளன. ராமன் பிறந்த நேரத்தில் இருந்த கிரக அமைப்பும் வால்மீகி ராமாயணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பை விண்வெளி மென்பொருள் துணையுடன் தேடின போது, அந்த அமைப்பு நடந்த வருடம், மாதம் தேதி என்று எல்லாமே சொல்ல முடிகிறது.


அபப்டி ஒரு ஆராய்ச்சியை புஷ்கர் பட்நாகர் என்பவர் செய்துள்ளார். அதன்படி, ராமாயணத்தில் காணப்படும் பல கிரக அமைப்புகளும் உண்மையே என்று தெரிய வந்துள்ளது. ராமன் பிறந்த நேரமும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அந்த நாள், கி.மு. 5,114, ஜனவரி மாதம் 10 -ஆம் தேதி ஆகும்.

 இது ஒருமுக்கியக் கண்டுபிடிப்பு. இதுபோல, கிருஷ்ணனது பிறப்பும், மஹாபாரதப் போர் ஆரம்பித்த நாளும் கண்டு பிடித்துள்ளனர். இராமாயண, மகாபாரதத்தில் வரும் எல்லா விண்வெளிக் குறிப்புகளும் உண்மையில் இருந்திருக்கின்றன என்று தெரிய வந்துள்ளது. அதனால் அந்த நூல்கள் சொல்லும் கதைகள் கற்பனையாக இருக்க  முடியாது.

ராமன் கி.மு. 5,114 -இல் பிறந்தவன் என்றால் இன்றைக்கு 7,100 வருடங்களுக்கு முன் பிறந்திருக்கிறான் என்று ஆகிறது. 
சிபி அதற்கு முன்னால் பிறந்திருக்கிறான். 
கிட்டத்தட்ட 7000 ஆண்டுகளுக்கு முன் சோழ வம்சம் தமிழ் நாட்டில் ஊன்றி விட்டிருக்கிறது. 
அதற்கு முன்பே பாண்டிய வம்சமும், அவர்கள் ஆண்ட தமிழர்களும் தெற்குப் பகுதியில் வாழ்ந்திருக்கின்றார்கள். 


3500 வருடங்களுக்கு முன்னால் நடந்ததாகச் சொல்லப்படும் ஆரியப் படையெடுப்பு எங்கே, 7000 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த சோழ பாண்டியர்கள் எங்கே? 
எங்கிருந்து யார் வந்தார்கள்?
தமிழரின் தொன்மைக்கும், பாரதக் கலாச்சாரத்தை ஒட்டி அவர்கள் வாழ்ந்த திறத்துக்கும் ஒத்து வராதது திராவிடவாதம்.


அகில உலக தமிழ் ஆராய்ச்சி மையத்தின் தலைவராக இருந்து, திராவிடத் தலைவர்களது தமிழ் வியாபாரத்தால் நொந்து, தன் பதவியை ராஜினாமா செய்த ஜப்பானிய தமிழ் அறிஞர் நொபொரு கரஷிமா அவர்கள் சொல்கிறார், அறிவுக்குப்  புறம்பானது திராவிட வாதம் என்று.
 
அறிவு சார்ந்த ஆராய்ச்சி செய்தால், தமிழன் காலம் மிகவும் தொன்மையானது, அவன் வாழ்ந்த இடம், தென் பாரதத்திலேயே என்று தெரிய வருகிறது. அது மட்டுமல்ல பாரத கலாச்சாரத்துடன் இணைந்ததாகவே தமிழன் கலாச்சாரமும் இருந்திருக்கின்றது. 


இந்தக் கட்டுரையிலேயே, ராவணன் வாழ்ந்தது உண்மை என்று கண்டோம்.
ராமன் வாழ்ந்த காலம் எது என்றும் கண்டோம்.
ஆயினும் வாதம் செய்பவர்கள், இந்தக் காலத்தைப் பற்றிக் கேள்வி எழுப்பலாம்.
ராமன் த்ரேதா யுகத்தில் வாழ்ந்தவன் என்றே பல நூல்களும் சொல்கின்றன.
அந்தத் த்ரேதா யுகம் பல லட்சம் முன்னால் வந்தது அல்லவா?
அப்படி என்றால் ராமனது காலம் பல லட்சம் வருடங்களுக்கு முன்பாகவே இருந்திருக்க வேண்டும்.
அப்படி பல லட்சம் வருடங்களுக்கு முன்னால் இருந்த சுவடுகள் எப்படி இன்னும் இருக்கும் என்றெல்லாம் கேட்கலாம். கேட்கிறார்கள்.

இந்தக் கேள்விகளுக்கும் விடை காணலாம்.


(1) சின்னமனூர் செப்பேடுகளில் உள்ள செய்திகளின் ஆங்கில மொழி பெயர்ப்பை இங்கே காணலாம்:- 

19 கருத்துகள்:

  1. i have a question here.. when rama came to the south for recovering sita, why did not he approach pandya king?

    As far as i have heard so far, that the entire south was dandakarunya, and that there was no king at that time here.

    when rama could seek vaali's help, why he did not seek pandya's help ?

    பதிலளிநீக்கு
  2. The entire South India was not Dandakaranya.
    Dandakaranya was the forests in the south of the Vindhyas. You have a reference to it in the pathigam of Pathirtuppatthu of the 6th patthu, on Aadu kot paattuch cheralaathan by the poetess Kaakkaip paadiniyaar

    தண்டாரணியத்துக் கோள்பட்ட வருடையைத்
    தொண்டியுள் தந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்குக்
    கபிலையொடு குடநாட்(டு) ஓரூர் ஈத்து
    வான வரம்பன்எனப் பேர்இனிது விளக்கி

    The Cheran king had gone to the Dandakaranya and got the "varudai" (varaiyaadu or Nigiri Tahr which we now find in Munnar in Kerala). It is because of this, he got the title 'aadu kot paattuch cheralaathan'. The pathigam says he got the name "vaana varamban" - meaning the one for whom the sky is the limit. The reference is to the Vindhya mountains to which he went to get the gost. The talk of dandakaranya is in conenction with the Vindhya mountains. The forests are on the southern slopes of the mountains.

    This apart, there is straight reference to the exact location of Dandakaranya and the kingdoms of the south in Valmeeki Ramayana.
    Please refer the following verses where Shugreeva directs the vanaras who are going to the south to search for Sita.

    tathaa vangaan kalingaam ca kaushikaan ca sama.ntataH |
    anviikSya daNDaka araNyam sa parvata nadii guham || 4-41-11
    nadiim godaavariim caiva sarvam eva anupashyata |
    tathaiva aandhraan ca puNDraan ca colaan paaNDyaan keralaan || 4-41-12

    "Like that Vanga, Kalinga territories shall be searched along with Kaushika territories available on their fringes, then cast about the Dandaka forest all over its mountains, rivers, and its caves, then River Godavari that courses through Dandaka forest, and then the provinces of Andhra, Pundra, Chola, Paandya, Kerala are to be searched thoroughly. [4-41-11, 12]

    Here it is said that the river Godavari passes through Dandaka forests. So that would tell you where exactly Dandaka forests were situated.

    Then the verse goes on to say the counties of Cholas and Pandyas.

    The Cholas at that time had Pukar (poompukaar) as their Capital. This will be further discussed in part 16 of this series. The Pandyans were further South.(You can guess it by linking it to Kumari lands)

    There of course comes a reference to Rama linking to Pandyan lands in Aga nanooru.


    வென்வேற் கவுரியர் தொல்முது கோடி
    முழங்குஇரும் பௌவம் இரங்கும் முன்துறை
    வெல்போர் இராமன் அருமறைக்(கு) அவித்த
    பல்வீழ் ஆலம் போல
    ஒலிஅவிந் தன்(று)இவ் அழுங்கல் ஊரே”. (அகநானூறு:70:5-17)

    கவுரியர்

    பதிலளிநீக்கு
  3. கவுரியர் refers to Pandyans - those who came in the lineage of Gowri (Meenakhi)

    'powvam' refers to the land swallowed. The explanation for a similar term is given by Adiyaarkku nallar in Silapapdhikaara urai. That will be discussed in this series when I come to the talk on Kumari khandam.

    In this song from Aga nanooru, the poet refers to a banyan tree near the sea in the land of Pandyas where Rama was seated when he came in search of Sita.

    Rama came to the Mahendragiri mountains and from there decended down to the plains and raeched the sea shore, according to Valmeeki ramayana. The Pandyan capital was further South and not in Madurai of today. Before he could go further south, Rama had met Shugreeva and got his help. Had he not met him, there is scope to say that he got help from Pandyans. Because like Vaali, Pandyans also were known to have overpowered Ravana. This inofrmation is brought out in this article.

    பதிலளிநீக்கு
  4. உங்கள் எழ்த்துகள் நன்றாக உள்ளது, அனைத்தும் ஆரைச்சிக்கு உரியதே ,நான் கூட எது பற்றி ஆராயிந்து வருகிறேன்,வளர்க உங்கள் பணி வாழ்த்துக்கள்

    விஜயகுமார் ,சென்னை

    பதிலளிநீக்கு
  5. நன்றி திரு விஜயகுமார் அவர்களே.உங்கள் ஆய்வுகளை அறிய ஆவலாக உள்ளேன். ஏதேனும் வலைப்பதிவில் எழுதுகிறீர்கள் என்றால் தெரியப்படுத்துங்கள். படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. இங்கே ஒரு கேள்வி எழுகிறது. ராவணன் வாழ்ந்தது ராமனது காலக்கட்டத்தில். இந்த சுயம்வரம் நடந்ததோ ராமனது தாத்தா காலத்தில். அப்பொழுதே ராவணன் எப்படி இருந்திருக்க முடியும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ ramprasath,
      இந்தக் கட்டுரையிலேயே உங்கள் கேள்விக்குப் பதில் இருக்கிறது. மீண்டும் ஒருமுறை கட்டுரையைப் படிக்கவும்.

      நீக்கு
  7. Dear mam,

    10 head is mentioned for Great king ravanaa becoz he is familiar with Four vedas and six vedantas.

    Am i right? mam

    Everybody got grew up watching ramayana and mahabharatha. Both stories were way way back.
    So directors and all of us thought that is too old and no advance technologies or machines at that time.
    But this is totally wrong.

    That period was the higher most modern world than the nowadays.
    Nuclear and atomic bomb was used at that time. Flying chariot. we all were thinking that all are magic or myth. Its Purely dealt the science.

    Regards
    Kalidasan

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Dear Mr Kalidasan,

      First, my apologies for late response. As I was traveling for the past 10 days, I could not get down to work on the blog these days. I will start shortly.

      Ravana was called as 10 headed due to his capacity to think 10 fold more than a single brain. The Thiruvalangadu copper plate inscription mention him as தசவதனன் - 10 faced.

      On the other part of your comment, I would rather say that our ancients did not have factories and manufacturing units for making artillery and flying machines. They have made them with power of mind and yoga.

      To substantiate this, let me narrate an incident from the famous story of Rama breaking the Shiva dhanush to marry Sita. This bow was too heavy that none could even lift it up. Ravana also took part in that contest but failed to lift it up. Infact we can say that it was due to the hurt-ego he got in that swayamvar contest, Ravana wanted to take revenge of Rama by abducting Sita. Because at every occasion that he talked to Sita, he used to first talk degradingly about Rama and his valour and then only about his desire for Sita.

      The background for this contest is that Sita, when she was barely 6 years old, lifted up this bow as she found it hindering her way while playing and running around. Every one was amazed how such a small girl could lift up a heavy bow. It might be to do with some inner strength. It is because Sita lifted it up, her father Janaka thought it to be a good idea to use that bow to choose the right match for her.

      There were two kinds of weapons, astra and sastra. Sastra is weapon that is shot with practice and physical prowess. But astra is a different category that can be shot by mantras. The person must be trained in mantra and yoga sastras to be able to use them. By that, Rama turned a blade of grass into a weapon (astra) in kakasura vadham. Like this there were methods of warfare and war weapons in olden days. They did not depend on physical aspects of weapons.

      நீக்கு
  8. Ravana lived in a period of Rama but was mentioned during Indumathi's marriage. What you mean is Pandyas defeated Ravana is the well known fact and Poet mentioned this to say Pandya's fame without considering the period. Am i correct?
    Since it is a well known fact how Ravana considered as Dravida if He has conflicts with dravida. It is really a good point to say dravida concept is a pure lie. Thanks Jayashree. You have done a very good analysis. Eager to read further concepts.
    I have one doubt here. I heard people in previous yugas have lived many years. like more than 150 years. If its the case can it be considered like during ramayana, Rama can be of younger age and Ravana is in old age? Please explain in tamil itself. you tamil is good. I dont ve fonts right now so typing in English.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி திரு முத்து அவர்களே.
      15 ஆவது கட்டுரையில் (அடுத்தது)யுகங்களைப் பற்றி சொல்லியிருப்பேன். மேலும் விவரங்களுக்கு எனது ஆங்கிலக் கட்டுரைகளைப் படிக்கலாம். அவை

      http://jayasreesaranathan.blogspot.in/2011/01/on-yuga-classification-and-what-causes.html

      http://jayasreesaranathan.blogspot.in/2008/04/rama-in-treta-yuga-yuga-is-defined-on.html

      இவற்றுள் முதலாவதாகக் கொடுக்கப்பட்ட இணைப்பில் ஒரு நாள் = 1 வருடம் என்று சொல்லப்பட்ட உலக வழக்கைக் கொடுத்துள்ளேன். அதன் அடிப்படையில் ராமன் எவ்வாறு 11000 வருடங்கள் வாழ்ந்தான் என்று சொல்லும் கட்டுரை இங்கே.

      http://jayasreesaranathan.blogspot.in/2009/07/did-rama-rule-for-11000-years.html

      நீக்கு
    2. hi friend it is possible to live many years.our ancient siddhas found the way to live for ever.i mean like immortals.u can find how in this website.
      http://www.siththarkal.com/search/label/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D

      நீக்கு
  9. Hi Madam,

    Your work is amazing. While i was hearing Ramayana and Mahabharatha stories in my childhood, I was asking more doubts to my parents about Rama and Ravana. Now your articles cleared most of my doubts. Let me ask my questions in the Ramayana

    1. Could u mention the Rama and lakshman's travelling path (Especially in TamilNadu) after Sita had been taken away by Ravanna.

    2. Could u mention at which place did Rama meet Sabari?

    3. At which place did Rama kill the Ravana's uncle (Mareechan) who came like Deer?

    4. At which place sita has been kept by Ravana in Sri Lanka

    5. Where was Hanuman's birth place?

    All questions are related to the places... If u can pls, mention the places in ur reply.. else do a separate post.. Its my request. Keep posting madam. All the best.

    (As I dont know how to type in tamil, I asked my questions in English... Pls reply ur answer in Tamil.)

    Regards,
    Manikandan Bharathidasan

    பதிலளிநீக்கு
  10. excellent article. i want to record my views about the age difference of rama n ravana. ramayana clearly states that ravan got wish from ishwar so he lived long when compared to ordinary human beings , so there nothing surprising about his existence during the age of indumathi. not only the pandya king ppl like vali, kartha veriyaarjun also defeated ravan n he was clever enough to settle with peace treaty

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thanks for sharing other info Mr Senthil Kumaran. On my part let me point to my my recent article in English where I have given additional information on the historicity of Rama and Ravana. Please the article and the comments under that in this link:-

      http://jayasreesaranathan.blogspot.in/2013/02/all-tamils-must-unite-to-save-ram-setu.html

      நீக்கு
    2. Dear Madam,
      In one yuga what happened will take place again in the next same yuga,this is mentioned in siddhar padalkal.kagapujander says to vashita muni ,"vashitare you had come back 8 th time to meet me",that brings to rama period may be 1 lach or 12000 years ,whatever may be both are correct.
      vijayakaumar.N
      tbmvijayakuamr@gmail.com

      நீக்கு
  11. In Valmiki Ramayana, Sri Lanka where Sita was kept in captivoity, was stated to be at a distance of 100 yojanas (about 1000 miles or 1600 kms.) from Rameswaram. If so how the present day Ceylon which is hardly 100 kms from Rameswaram can be the Sri Lanka?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Analyzed this earlier in my English blog. Read

      http://jayasreesaranathan.blogspot.in/2008/10/continuing-civilization-from-harappa-to.html

      The relevant parts are

      //Regarding distances, there had been different types once again.

      The popular form of measurement of distances was 'yojana'.

      We find different measurements for yojana in

      Mayamata and Vishwakarma prakashika.



      While Maya says that one yojana is equal to 32,000 hastas

      (1 hasta /muzham = 24 amgulas), Vishvakarma says

      that one yojana is equal to 16,000 hastas.

      From the huge disparity, we can guess

      that each of them meant the yojana for a separate purpose.



      One interesting observation is that

      the application of the system that was prior to the advent of the British in India

      exactly fits in measuring the distance between India and Srilanka

      as told in Valmiki Ramayana.


      The system in vogue prior to the British is this.

      24 amgula = 1 muzham (hasta)

      4 muzham = dhanus

      2 dhanus = 1 danda

      50 danda = 1 koopidu

      4 kooppidu = 1 yojana.

      Or the distance at which a call can be heard.



      From valmiki Ramayan we know that Hanuman traveled for 100 yojanas

      for crossing the sea.

      That is, the Nala-Sethu was built for 100 yojanas.

      (Nala belonged to Vishwakarma lineage)

      The sound travels a distance of 300 metres = 1 yojana

      For 100 yojanas 300 x 100 = 30,000 mt = 30 km

      This is the distance of Ram- sethu! //

      நீக்கு
  12. வணக்கம்
    ராமன் பிரந்தது ஜெனவரி பத்து அதாவது மார்கழி பிர்பகுதி சூரியன் தனுசு ராசியில் பிரவேசிக்கும் காலம்
    ராமனுடைய ஜாதகத்தில் சூரியன் மேஷ ராசியில் உச்சம் ஆக சித்திரை மாசம் பிரந்ததாக தெரிகிரது April மாதம்
    தங்கல் ஆய்வை மேம்படுத்த வேண்டுகிரேன் நன்றி

    பதிலளிநீக்கு