திங்கள், 7 நவம்பர், 2011

80. மொஹஞ்சதாரோ அல்லது மோஹனஸ்ய தரு?ஏறு தழுவும் வழக்கம் தமிழ் நாட்டு மதுரையிலும் இருந்திருக்கிறது.
கிருஷ்ணன் வாழ்ந்த மதுராவிலும் இருந்திருக்கிறது.
அந்த வழக்கம் சிந்து சமவெளிப்பகுதியிலும் இருந்திருக்கிறது என்பதை,
மொஹஞ்சதாரோவில்  கிடைத்துள்ள சின்னம் மூலம் அறிகிறோம்.


மொஹஞ்சதரோ என்னும் இடம் இன்று பாகிஸ்தானில் உள்ளது.
இந்த இடத்தில் ஒரு பழைய நாகரிகம் இருந்தது என்று 1920 களில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த இடம் சிந்து நதிக் கரையில் உள்ளது.
இதே காலக்கட்டத்தில் சிந்து நதியின் ஒரு கிளை நதியான
ராவி நதிக்கரையில் ஹரப்பா என்னும் இடத்திலும்,
இதே நாகரிகம் இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது

சிந்து நதிக்கரையில் இவை காணப்படவே,
இங்கு காணப்பட்ட நாகரிகத்தைச் சிந்து சமவெளி நாகரிகம் என்கின்றனர்.
இந்தப் படத்தில் அந்த இரு இடங்களும் சிவப்பு நிறத்தில் அடிக்கோடிடப்பட்டிருக்கின்றன.
இங்கு காணப்படும் நாகரிகத்தின் காலம் சுமாராக,
இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பிருக்கலாம்
என்பது ஆராய்ச்சியாளர்களது கருத்து

அதாவது கி.மு.3000 வருட காலத்தில் இந்த நாகரிகம் இங்கு இருந்திருக்கிறது.
அதே காலக்கட்டத்தில் ஆரிய- திராவிடப் போரைப் பற்றி
உச்சக் கட்டமாக ஆங்கிலேய மொழியியலார் பேசிக் கொண்டிருக்கவே,
இங்கு கண்டுபிடிக்கப்பட்ட நாகரிகம் திராவிடர்கள் நாகரிகமாக இருக்க வேண்டும் என்றும்,
மத்திய ஐரோப்பாவிலிருந்து வந்த ஆரியர்கள்
அவர்களை வென்று, விரட்டி விட்டு,
அவர்கள் இடங்களில் தாங்கள் குடியேறினார்கள் என்றும் சொன்னார்கள்.

அப்பொழுது அவர்களிடமிருந்து தப்பிய மக்கள்
தமிழ் நாட்டுப் பகுதிகளில் குடியமர்ந்தார்கள்.
அதனால் சிந்து சமவெளி மக்களான திராவிடர்களே,
தமிழ் நாட்டுத் தமிழர்கள் என்பது ஐரோப்பியர்கள் செய்தகண்டுபிடிப்பாகும்’.


அதை அப்படியே நம்பினவர்கள் நம் தமிழ் நாட்டு திராவிடவாதிகள்.
நம் தமிழ்ப் பாரம்பரியத்தில் உள்ள கதைகளை அலட்சியப்படுத்திய அவர்கள்,
தமிழில் இல்லாத திராவிடம் என்னும் சொல்லைப் பிடித்துக் கொண்டு,
ஆங்கிலேயன் சொன்ன திராவிடக் கதையை நம்பி,
திராவிடர் சங்கம், திராவிடர் இயக்கம் என்றெல்லாம் ஆரம்பித்தார்கள்.
முதன் முதலாக திராவிடர் என்ற பெயரைக் கொண்ட
திராவிடர் சங்கம் என்னும் ஒரு அமைப்பு 1912 இல் ஆரம்பிக்கப்பட்டது.

அது முதல்
திராவிடன் என்றால் யார், திராவிடம் என்பது என்ன
என்ற எந்த ஒரு விவரத்தையும் ஆராயாமல்,
ஆராயும் முயற்சியும் இல்லாமல்,
சமூகத்தைப் பிரித்தாளும் ஒரு கருத்தாகவே திராவிடவாதிகள் பயன்படுத்தி வந்தனர்.
அதன் தாக்கத்திலிருந்து இன்னும் பலர் விழித்தெழவில்லை.

ஆங்காங்கே சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட சில விவரங்களைக் கொண்டு,
அவற்றுக்கும், தமிழ் வழக்கங்களுக்கும் உள்ள ஒற்றுமைகளைக் கண்டு
அங்கிருந்துதான் தமிழன் வந்தான் என்று நினைக்கிறார்கள்.
அப்படி நினைக்கச் செய்யும் ஒரு விவரம்,
ஏறு தழுவுதல் ஆகும்.
ஏறு தழுவும் முத்திரை கிடைத்த இடம் மொஹஞ்சதாரோ ஆகும்.
இதைக் கொண்டு மொஹஞ்சதாரோவில்
அதாவது சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்த ஒரு வழக்கம்தான்,
கிருஷ்ணன் கதையில் வரும் வழக்கம் என்று சொல்லலாமல்லவா என்றும்,
இதன் மூலம்
கிருஷ்ணாவதாரத்தையே சிந்து சமவெளி நாகரிகத்துக்குப் பின்னால்
தள்ளவும் செய்கிறார்கள்.


ஆனால் அவர்கள் கருத்து தவறு என்று காட்டும் விதமாக
ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன.

அதிலும் மொஹஞ்சதாரோவில் கிடைத்த ஆதாரங்கள் சுவாரசியமானவை.
ஏறு தழுவுதல் சின்னம் கிடைத்த அதே மொஹஞ்சதாரோ பகுதியில்
கிருஷ்ணாவதாரத்தைப் பறை சாற்றும் இன்னொரு ஆதாரம் கிடைத்துள்ளது

அது ஒரு குழந்தை உருவம் கொண்ட முத்திரை ஆகும்.
இது கிருஷ்ணன் உருவமாகும் என்று
ஆராய்ச்சியாளார் திரு என்.எஸ். ராஜாராம் அவர்கள் கூறுகிறார்.

,ஜெ,ஹெச். மாக்கே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த முத்திரையில்
ஒரு சிறுவன் இரண்டு மரங்களைப் பிளப்பது போலவும்,
அதிலிருந்து இரண்டு மனிதர்கள் வெளி வருவது போலவும் இருக்கிறது.
இதைப் போன்ற ஒரு சம்பவம் கிருஷ்ணன் கதையில் இருக்கிறது.

உரலில் கட்டப்பட்ட கிருஷ்ணன்,
மரங்களில் சிறைப்பட்டிருந்த நளகூபரன், மணிக்ரீவன்
என்னும் இருவரை சாப விமோசனம் செய்த காட்சியை
இது ஒத்திருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.


கி.மு 2600 ஆண்டில் இந்த முத்திரை உருவாக்கப்பட்டிருக்கலாம்
என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.         குழந்தை கிருஷ்ணன் மரத்தைப் பிளந்த நிகழ்ச்சி.சிந்து சமவெளி நாகரிக காலம் என்பது
கிருஷ்ணன் மறைவுக்குப் பிறகு,
அதாவது மஹாபாரதப் போர் முடிந்த பிறகு  
தொடங்கிய நாகரிகமாக இருந்தால்தான்
இப்படிப்பட்ட சின்னத்தை உருவாக்கியிருக்க முடியும்.


ஏறு தழுவுதல் சின்னம் கிடைத்த,
அதே மொஹஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட 
ஒரு சிலையைப் பாருங்கள்.
இந்தப் படத்தை, திராவிடஇனத்துக்காக உழைத்துக் கொண்டிருப்பதாகச்
சொல்லிக் கொண்டிருக்கும்திராவிடத்தலைவர்களிடம் காட்டுங்கள்.
பூணூல் போட்ட பார்ப்பான் படத்தை ஏன் காட்டுகிறீர்களே 
என்பார்கள் அல்லவா?

முகத்தில் தாடி, தலையில் ஒரு பட்டை,
கையில் தாயத்து போல ஒரு கயிறு,
தோளில் அங்கவஸ்திரம்
இவற்றையெல்லாம் பார்த்தால் இந்த உருவம் ஒரு அர்ச்சகர் போல இருக்கிறது.
திராவிடவாதிகள் நோக்கில் சொன்னால் இது ஒருஆரியன்உருவம்


இந்த உருவத்தின் பின்புறத்தைப் பாருங்கள்.தலையில் ஒரு கொண்டை போன்ற அமைப்பு இருந்த அடையாளம் தெரிகிறது.
காதருகே மாலை செருகவென்று ஓட்டை இருக்கிறது.
இந்த உருவம், ஒரு முனிவராகவோ, அல்லது மதிப்புக்கிரியவராகவோ,
அல்லது ஒரு குருவாகவோ இருக்க வேண்டும்.
இந்த உருவத்துக்கும், திராவிடவாதிகள் உண்டாக்கி வைத்துள்ள 
திராவிட உருவகத்துக்கும்
ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா?இன்னொரு விவரத்தையும் பார்ப்போம்.
மொஹஞ்சதாரோ என்ற பெயரைப் பாருங்கள்.
இந்தப் பெயருக்கு என்ன அர்த்தம்?

இதை மோஹஞ்ஜ- தாரோ (Mohanjo- daro)  என்றும்,
மோயென்ஞ-தாரோ (Moenjo – daro)  என்றும் பிரித்துப் பொருள் கொள்ளலாம் என்று
சிந்து சமவெளிக் கண்டுபிடுப்புகளைப் பதிவு செய்துள்ள
ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

மோஹஞ்ஜ- தாரோ (Mohanjo- daro)  என்றால்மோஹனுடைய மேடு என்றும்
மோயென்ஞ-தாரோ (Moenjo – daro)  என்றால் இறந்தவர்களது மேடு
என்றும் பொருள் கொள்கிறார்கள்.

விவ்ரங்களுக்கு இந்த இணைப்பைப் பார்க்கவும்.

இறந்தவர்களது மேடு என்ற பெயர் தோன்றியிருக்க முடியாது.
இங்கு இறந்தவர்களது கல்லறைகளும் இல்லை,
பலரும் இறந்ததற்கான அடையாளங்களும் இல்லை.


ஆனால் மொஹஞ்சதாரோ என்னும் பெயரில்
மோஹன் என்ற சொல் இருப்பதை மறுக்க முடியாது.
மோஹன் என்பது கிருஷ்ணனது ஒரு பெயர்.

மோஹன் என்றால் வசீகரிப்பவன் என்பது பொருள்.

வட மதுரையிலும், பிருந்தாவனத்திலும் சுற்றிக் கொண்டிருந்த பால கிருஷ்ணனுக்கு
மோஹன் என்ற பெயரும், கோபால் என்ற பெயரும் உண்டு.

கிருஷ்ணனது கொள்ளுப் பேரனான வஜ்ரன் என்பவன்
கிருஷ்ணனைப் போலவே 16 உருவங்கள் செய்து கோவில் கட்டி ஸ்தாபித்திருக்கிறான்.
அதில் மோஹன் என்ற பெயர் கொண்ட உருவமும் இருக்கிறது.இங்கு இந்த வஜ்ரனைப் பற்றி ஒரு விவரத்தைச் சொல்ல வேண்டும்.
கிருஷ்ணன் தமிழ் நாட்டு மாப்பிள்ளை என்று முந்தின கட்டுரையில் சொன்னோம்.
இந்த வஜ்ரன், தமிழ் நாட்டின் பேரப்பிள்ளை ஆவான்.

அது எப்படி என்றால், கிருஷ்ணனுக்கும், ருக்மிணிக்கும் பிறந்த மகனான
ப்ரத்யும்னனது மகன் வழிப்பேரன் வஜ்ரன் ஆவான்.
ப்ரத்யுமனது மகனது பெயர் அநிருத்தன்.
இவன் மனைவி மஹாபலிபுரம் பகுதியைச் சேர்ந்தவள்.
இவர்களுக்குப் பிறந்த மகனே வஜ்ரன் ஆவான்.


மஹாபலிபுரம் என்பது மஹாபலியின் ஊராகும்.
மஹாபலியின் வழி வந்த பாணாசுரனது மகளான உழை (உஷா)
என்பவளை அநிருத்தன் காதலித்தான்.
அதை ஒத்துக் கொள்ளாத பாணாசுரன், அநிருத்தனைச் சிறையில் அடைத்தான்.


தன் பேரனான அநிருத்தனை விடுவிக்க கிருஷ்ணன் பாணாசுரனது நகருக்கு வந்தான்.
பாணாசுரனது தலைநகரமானசோ என்னும் நகர வீதியில்,
உலோகத்தாலும், மண்ணாலும் செய்யப்பட்ட குடங்களைத்
தலை மீது வைத்துக் கொண்டு நடனம் ஆடினான்.
இந்த நடனம் குடக் கூத்து என்ற பெயர் பெற்றது


வினோதமான இந்த ஆட்டத்தை
அனைவரும் தம்மை மறந்து பார்த்துக் கொண்டிருக்கும்போது,
அநிருத்தனை மீட்கிறான்.
பிறகு அவனுக்கும், உழைக்கும் திருத்தங்காலில் மணம் செய்து வைக்கிறான்.
இந்த அநிருத்தனுக்கும், உழைக்கும் பிறந்த மகனே வஜ்ரன் ஆவான்.
கிருஷ்ணன் உலகை விட்டு நீங்கிய பிறகு
கிருஷ்ணனது வாரிசாக வட மதுரை நகர் உள்ளிட்ட பகுதிகளை
இந்திரப் பிரஸ்த்தத்திலிருந்து (இன்றைய டில்லி) வஜ்ரன் ஆண்டான்.இங்கு சொன்ன பாணாசுரன் கதை
உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் நடந்ததாக
ஆங்காங்கே சொல்லிக் கொள்வார்கள்.
ஆனால் அந்தக் கதையுடன் தொடர்பு கொண்ட இடங்களெல்லாம்
தமிழ் நாட்டில்தான் உள்ளன.

பாணாசுரன் என்பவன் மஹாபலியின் வம்சத்தில் வந்தவன்.
இவன் நரசிம்ம அவதாரத்தில் வரும் பிரஹல்லாதன் வம்சத்தில் வந்தவன்.
மஹாபலி ஆண்டதால் அந்த இடம் மஹாபலிபுரம் என்ற பெயர் பெற்றது.
அதைக் கடல் கொண்டது என்றும்,
பாணாசுரன் காலத்திலும்,
கடல் ஊழி ஏற்பட்டது என்றும் புராணச் செய்திகள் உள்ளன.
இதனால் பாணாசுரனது நகரம் கடற்கரையை ஒட்டி இருந்தது என்று தெரிகிறது.
அது உத்தரப் பிரதேசமாக இருக்க முடியாது.


கடல் ஆராய்ச்சி செய்து வரும் க்ரஹாம் ஹான்காக் அவர்கள்,
இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன்
மஹாபலிபுரப் பகுதிகள் கடலுக்குள் அமிழ்ந்தன என்கிறார்.
கடல் மட்ட ஆராய்ச்சி செய்து வரும் க்ளென் மில்னே அவர்களது ஆராய்ச்சியும்,
இன்றைய மஹாபலிபுரம் பலமுறை கடல் அழிவைச் சந்தித்திருக்கிறது
எனபதை உறுதிபடுத்துகிறது


கிருஷ்ணன் குடக்கூத்து ஆடிய மஹாபலிபுரம்
இன்று கடல் கொண்ட இடத்தில் இருக்க வேண்டும்.
மஹாபலிபுரம் பகுதியில் ஆறு கோவில்கள்
ஒன்றன் பின் ஒன்றாகக் கடலில் இருக்கின்றன என்று
காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது.
க்ரஹாம் ஹான்காக் அவர்கள், அந்தப் பகுதி மீனவர்கள் உதவியுடன்,
கடலுக்குள் சென்று முழுகின அடையாளங்களைப் பார்த்த்தாகச் சொல்கிறார்.
அதைப் பற்றிய விவரங்களைப் பகுதி 45 இல் கண்டோம்


பாணாசுரன் பேரூரில் கிருஷ்ணன் ஆடிய குடக் கூத்தைச்
சிலப்பதிகாரமும் சொல்கிறது
(கடலாடு காதை - “வாணன் பேரூர் மறுகிடை நடந்து
நீணிலம் அளந்தோன் ஆடிய குடமும்) 

அது மட்டுமல்ல, இந்த நடனம்,
தமிழ் மரபில் உள்ள 11 நடனங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது.
முந்தின கட்டுரையில் கண்ணன் ஆடிய அல்லியக் கூத்து என்பது,
தமிழ் நாட்டுக் கூத்து என்று பார்த்தோம்.

கிருஷ்ணன் ஆடிய இன்னொரு கூத்தான குடக்கூத்தும்,
தமிழ்க் கூத்துகளில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது.
அதை மாதவி ஆடினாள் என்று சிலப்பதிகாரம் சொல்கிறது.
தமிழ் நாட்டுக்கே உரிய கரகாட்டம் எனப்படும் நடன வகை
இந்த குடக் கூத்திலிருந்து உருவானது.
இந்தக் கூத்து, இந்தியாவில் வேறு எங்கும் இல்லை.

கிருஷ்ணனும், வஜ்ரனும் இவ்வாறு தமிழ் நாட்டுடன் தொடர்பு கொண்டிருந்தனர்.
அந்த வஜ்ரன் ஆட்சியில் அமர்ந்தபோது, அவன் மனம் வருத்தத்தில் இருந்தது.
அதற்கு முக்கியக் காரணம், கிருஷ்ணன் இருந்தபோது
மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த வட மதுரையில்
வஜ்ரன் காலத்தில் மக்கள் இல்லை.

அதனால் அவன் வருத்தமுடன் இருந்ததைப் பார்த்த பரீக்ஷித்து அரசன்
(அர்ஜுனன் பேரன். இவனே பாண்டவர்கள் வாரிசாக ஹஸ்தினாபுரத்தில்
ஆட்சியில் அமர்கிறான்)
சாண்டில்ய மஹரிஷியை அழைக்கிறான்.
சாண்டில்யன் என்ற பெயரை முன்பே கண்டோம்
என்பதை நினைவுபடுத்திக்கொள்வோம். 

பகுதி 64 இல், கடம்பனூர்ச் சாண்டில்யன் என்பவர் எழுதிய பாடல் (307)
குறுந்தொகையில் இருக்கிறது என்று கண்டோம். 


சாண்டில்ய மஹரிஷிக்கும், கிருஷ்ணனுக்கும் தொடர்புண்டு.
இவர் கிருஷ்ணனது வளர்ப்புத் தந்தையான நந்த கோபனது குடும்ப குரு
என்று புராணங்கள் சொல்கின்றன.
வஜ்ரனுக்கு ஆலோசனை சொல்ல சாண்டில்ய ரிஷியை அழைத்ததால்,
இந்தத் தொடர்பு உறுதியாகிறது.
இந்தத் தொடர்பு உறுதியாவதால், நமக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது.
இந்த சாண்டில்ய ரிஷி 12 ஜோதி லிங்கங்களில் முதல் ஜோதி லிங்கமான
சோமநாதரை, பிரபாச க்ஷேத்திரத்தில் நிறுவினார்
என்று பல நூல்களில் கூறப்பட்டுள்ளது.
கஜினி முகம்மதுவால் 17 முறை படையெடுக்கப்பட்டு அழிக்கப்பட்ட
சோமநாதர் ஆலயம் இது.

இந்த ஆலயம், நாம் இந்தத் தொடரில் தேடுகிறோமே,
தமிழர்கள், மற்றும் எல்லா பாரதீயர்களது மூலம்- அது வந்த வழியைக் காட்டும்
ஒரு ஆதாரத்தைக் கொண்டுள்ளது.
அதைத் தக்க இடத்தில் இந்தத் தொடரில் காண்போம்.
இங்கு நாம் சொல்லவருவது, சாண்டில்ய ரிஷி, இந்தக் கோவிலை அமைத்தார் என்பதே.

தக்ஷனால் சபிக்கப்பட்டு, அதனால் தேய்ந்த சந்திரன், சிவனிடம் அடைக்கலாகி,
சாப விமோசனம் பெறுகிறான்.
சிவன் முடியில் பிறைச் சந்திரனாகத் தங்கி விடுகிறான்.
சந்திரனால் வழிபடப்பட்ட அந்த சிவ ரூபமே,
சோமநாதர் என்றழைக்கப்பட்டது.  
இங்கு பிறைச் சந்திரனை வழிபடுவது விசேஷம்.இதில் நமக்கு ஆச்சரியம் தரும் விவரம் என்னவென்றால்,
குறுந்தொகையில் கடம்பனூர்ச் சாண்டில்யனார் என்னும் பெயரில்
இடம் பெற்றுள்ள பாடலில்,
பிறைச் சந்திரனைக் கன்னிப் பெண்கள் தொழும் விவரம் 
கொடுக்கப்பட்டுள்ளது என்பதே.

வளையுடைத் தனையதாகிப் பலர் தொழச்
செவ்வாய் வானத் தையெனத் தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே யன்னா” (கு-தொ 307)
என்னும் அவரது பாடலில்
பெண்களது உடைந்த வளையலைப் போல
உருவத்துடன் பிறைச் சந்திரன் வானத்தில் தோன்றும் காட்சியையும்,
அதைப் பெண்கள் வழிபட்டதையும்
உவமையாகச் சொல்கிறார்.


சாண்டில்யருக்கும், சந்திரன் வழிபட்ட சோமநாதருக்கும் தொடர்பு இருக்கவே,
சாண்டில்யர் பெயரில் இயற்றபட்டுள்ள இந்தப் பாடலிலும்,
பிறைச் சந்திரனைப் பற்றிய விவரம் வருவது தற்செயலானது
என்று நம்ப முடியவில்லை.
ஏன் அப்படி என்பதை இந்தத் தொடரின் போக்கில் காண்போம்.


இனி வஜ்ரனிடமிருந்து தொடருவோம்.
அந்தச் சாண்டில்ய மஹரிஷி வஜ்ரனுக்கு ஆலோசனை சொன்னார்.
அவர் சொன்னவாறு கிருஷ்ணனைப் போன்ற தோற்றம் கொண்ட சிலைகள்
பதினாறினை வஜ்ரன் உருவாக்கினான்.
அவற்றுள் ஒன்று மதன் மோஹன் என்ற பெயர் கொண்டது!
அதாவது, மதுரா மக்கள் அறிந்த இளம் வயது கிருஷ்ணனுக்கு
மோஹன் என்பது பெயர்.


அந்த மதுரா நகர மக்கள் துவாரகைக்குக் கிருஷ்ணன் சென்ற போது,
அவனுடன் சென்றார்கள்.
துவாரகை, மற்றும் அந்த நகரம் இருக்கும் குஜராத் மாநிலமெங்கும்,
சிந்து சமவெளி நாகரிக அடையாளங்களே தென்படுகின்றன.
மதுராவிலிருந்தோ,  அல்லது துவாரகையிலிருந்தோ,
ஒரே மூலத்திலிருந்து வந்த மக்கள்,
சிந்து நதியைக் கரை ஓரத்திலும் குடியமர்ந்திருக்கின்றனர்.
கிருஷ்ணன் உலகை விட்டு நீங்கிய பிறகு,
அவன் நாட்டு மக்கள், சிந்து நதிக் கரையில்
குடியமர்ந்திருக்கக்கூடிய சாத்தியமும் இருக்கிறது.
அதையும் இந்தத் தொடரில் பார்ப்போம்.


மொஹஞ்சதாரோ என்னும் பெயரை ஆராயும் போது,
மோஹன் எனப்பட்ட கிருஷ்ணனுடன் தொடர்பு கொண்ட மக்கள்
குடியமர்ந்ததால் மொஹஞ்சதாரோ என்ற பெயர் பெற்றதோ
என்ற சந்தேகம் எழுகிறது.
மொஹஞ்சதாரோ என்ற பெயரில் மோஹன் என்ற சொல் எப்படி வந்தது?
கிருஷ்ண லீலைகளான ஏறு தழுவுதலும்,
மரத்தைப் பிளந்ததும்
முத்திரைகளில் எப்படி இடம் பெற்றன?


அது மட்டுமல்ல, மொஹஞ்சதாரோ என்னும் பெயருக்கான 
சமஸ்க்ருத அர்த்த்த்தைப் பாருங்கள்.
அந்தப் பெயர்,
மோஹனஸ்ய தாரு (Mohanasya daaru) அல்லது
மோஹனஸ்ய தரு (Mohanasya tharu) என்று சொல்லப்பட்டிருக்கலாம். 


மோஹனஸ்ய தாரு எனபது, நாளாடைவில் மோஹனச தாரு என்றாகி,
மொஹஞ்சதாரோ என்றாகி இருக்க சாத்தியம் இருக்கிறது.
அஸ்யஎன்னும் 6 ஆம் வேற்றுமை உருபு (சமஸ்க்ருத மொழியில் உள்ளது),
பிராகிருதத்தில்என்று உருமாறும் என்று மொழியியலார் கூறுகிறார்கள்.
மோஹனுடைய என்னும் பொருள் கொண்ட மோஹனஸ்ய என்னும் சொல்,
நாளடைவில் அதே பொருளில்மோஹனசஎன்றாகி
மொஹஞ்சஎன்றாகி இருக்கிறது.


மோஹஞ்சதாரோ என்பதில் தாரு என்பதும்,
தரு என்பதும் சமஸ்க்ருத்த்தில் ஏறத்தாழ ஒரே பொருளில் வருவது.
தாரு என்றால் மரத்துண்டுகள். (timber, lumber)
தரு என்றால் மரம்.
இந்த இரண்டு சொற்களுமே பொருந்தும் வண்ணம்
மொஹஞ்சதாரோவில் விவரங்கள் இருக்கின்றன. 

உரலில் கட்டப்பட்ட கிருஷ்ணன்,
மரத்தை இரண்டாகப் பிளந்த அமைப்பில் முத்திரை ஒன்று
மொஹஞ்சதாரோவில் கிடைத்துள்ளது என்று பார்த்தோம்.
அதைத்தான் மோஹனுடைய மரத்துண்டுகள் என்னும் பொருளில்
மோஹஞ்சதாரு என்றிருக்கலாம்.
அது நாளடைவில்மொஹஞ்சதாரோ என்றாகி இருக்கலாம்.


தரு என்ற சொல்லையும் பாருங்கள்.
மோஹஞ்சதரு என்றால் மோஹனுடைய மரம் என்னும் பொருள் தரும்.
இதைக் காட்டுகின்ற ஒரு சான்று மொஹஞ்சதாரோவிலும்,
மற்றொரு சான்று அகநானூற்றுப் பாடலிலும் இருக்கிறது.

அது என்ன என்று அடுத்த கட்டுரையில் காண்போம்.
 

35 கருத்துகள்:

 1. //மோயென்ஞ-தாரோ (Moenjo – daro) என்றால் ’இறந்தவர்களது மேடு’
  என்றும் பொருள் கொள்கிறார்கள்.

  விவ்ரங்களுக்கு இந்த இணைப்பைப் பார்க்கவும்.
  http://www.mohenjodaro.net/mohenjodaroessay.html

  இறந்தவர்களது மேடு என்ற பெயர் தோன்றியிருக்க முடியாது.
  இங்கு இறந்தவர்களது கல்லறைகளும் இல்லை,
  பலரும் இறந்ததற்கான அடையாளங்களும் இல்லை...//

  ஏனோ தெரியவில்லை அந்த சிலையை பார்த்தவுடன் எனக்கு எகிப்தியர்கள் தான் நினைவுக்கு வந்தனர். பிறகு இந்த இறந்தவர்களது மேடு என்று வந்தவுடன் எகிப்தின் பிரமிடை இது குறிப்பது போல் உள்ளது.
  உங்கள் ஆராய்ச்சி நன்றாக உள்ளது தொடருங்கள்.

  ஒரு சந்தேகம் சிவன் வாழ்ந்த காலம் மற்றும் ராமர், கிருட்டினர் வாழ்ந்த காலங்களை தர இயலுமா.
  அல்லது அதற்க்கான சுட்டியை தாருங்கள் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 2. சிவன் வாழ்ந்த காலம் என்று சொல்வதைவிட, மீனாட்சி - சுந்தரேச்வரர் வாழ்ந்த காலம் என்று சொன்னால், அது தமிழ்ச் சங்கம் ஆரம்பித்த 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. திரிபுர வதம் என்பது இந்தோனேசியாவில் உள்ள தோபா எரிமலை வெடித்த சம்பவம். காலக்கட்டம், மரபணு ஆராய்ச்சிகள், மனித இடப்பெயர்வுகள் என பலவிவரங்களும் அதனுடன் ஒத்துப் போகின்றன.


  மீனாட்சி- சுந்தரேசர் மகனாகப் பிறந்தவன் உக்கிரகுமாரன் என்னும் குமரக் கடவுள். முன்பே ஒரு கருத்துரையில் சொன்னது போல முருகனை cosmological, divine, and born entity ஆக மூன்று நிலைகளில் சொல்லலாம் முருகனும், ராமனும், கிருஷ்ணனும் மக்களிடையே நடமாடியவர்களே. இவர்களுள், மீனாட்சி, சுந்தரேச்வரர், முருகன் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் எங்கோ தென் பகுதியில் இருந்த தென் மதுரையில் ஆகும். அவை இன்று கடலுக்குள் முழுகி விட்டன. ஆஸ்திரேலியப் பழங்குடி கலாசாரம், முருகன் தொடர்பு கொண்டவை. அவற்றை இந்தத் தொடரில் எழுதுவேன்.

  ராமனும், கிருஷ்ணனும் இன்றைய பாரத தேசத்தில் வாழ்ந்தவர்கள்.

  50,000 வருடங்களுக்கு முன், சுந்தாலாந்து என்று இப்பொழுது சொல்லப்படும் இந்தோனேசியப் பகுதிக்கும், கிழக்கு ஆப்பிரிக்காவுக்கும் இடையே, இந்தியக் கடலில் ஆங்காங்கே தீவுகள், மலைத்தொடர்கள் இருந்தன. அவற்றில் தென்னன் தேசம் இருந்தது. அந்தத் தென்பகுதி எங்கிலும் இருந்த மக்கள் பேசிய மனித மொழி, தமிழ் ஆகும். 12,000 வருடங்களுக்கு முன் அதற்கு எழுத்து வடிவம் கொடுக்கப்பட்டது. ஆங்காங்கே இருந்த தீவுகளிலும், மலைகளிலும் மக்கள் வாழ்ந்திருக்கின்றனர். அப்படி ஒரு அமைப்பில் ஒரு குழு, அரேபியக் கடலில், இந்தியாவின் மஹாராஷ்டிரத்திற்கு மேற்கில் இருந்த நிலநீட்சியில் வாழ்ந்தது. பனியுகம் முடிந்த போது (13,000 ஆண்டுகளுக்கு முன்) கடல் மட்டம் திடீரென்று எழும்பவே அவர்கள் துவாரகையில் கடலில் கலந்த சரஸ்வதி நதி வழியாக இந்தியாவில் நுழைந்தனர். அவர்களது தலைவன் திராவிடேஸ்வரன் எனப்பட்ட வைவஸ்வத மனு. அவனுடன் வந்த மக்களும், தென்னன் தேசத்திலிருந்து வந்த மக்களும், இன்றைய இந்தியாவை ஆக்கிரமித்துள்ளனர்.

  இந்த இரண்டு வழிகளிலும் வந்தவர்களுக்கு மூலம் ஒன்றே, பேச்சு மொழி ஒன்றே (மதுரத் தமிழ்) கலாசாரம் ஒன்றே.

  40,000 ஆண்டுகளுக்கும் முன்னால் சம்ஸ்க்ருதம் ஏற்படுத்தப்பட்டு விட்டது. அதைப் பேசிய தேவர்கள் என்பவர்கள், 40,000 ஆண்டுகளுக்கு முன் உலகின் வட கோடியில் - சைபீரியா போன்ற பகுதிகளில் வாழ்ந்தனர். இன்றைக்கு அந்த மக்கள் இல்லை.

  ஆனால் சமஸ்க்ருதம், வழிபாட்டுக்கென பல காலமாக இருந்திருக்கிறது. வேதங்கள் மிகப் பழையவை. வேதங்களில் மிகப் பழையது சாமவேதம். அது தென்னன் தேசப் பகுதிகளில் தழைத்தது. ராவணன் சாமவேதத்தில் சமர்த்தன். அந்த வேதத்திலிருந்து இசை உண்டானது. இசைத் தமிழ், சாமவேதததிலிருந்து உண்டானது. இதைப் பற்றி நான் அறிந்த வரை, இந்தத் தொடரில் சொல்வேன்.

  ரிக் வேதம், சரஸ்வதி நதிப் பகுதியில் வந்த மனுவைச் சேர்ந்தவர்கள் உண்டாக்கியது. யஜூர் வேதமும், தென்னன் தேசத்தில் மிகப் பழையகாலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது. அந்தப் பழைய வேதங்களில் பலவும் இன்று இல்லை.

  இன்றைக்கு மக்களிடையே இருக்கும் பெரும்பாலான கேள்விகளுக்கும், இந்தத் தொடரின் போக்கில் விளக்கம் தரலாம் என்று இருக்கிறேன்.

  ****

  நீங்கள் கேட்ட இணைப்புகள்.

  ராமனைப் பற்றி இரண்டு விண்கோள் ஆராய்ச்சிகள் உள்ளன. அவற்றுள் பட்நாகர் அவர்கள் செய்த ஆராய்ச்சி ஏற்புடையது என்பது என் கருத்து. இவற்றைப் பற்றி இந்தச் சுட்டிகளில் படிக்கலாம்.
  இவற்றுடன், ராமன் 11,000 ஆண்டுகள் ஆண்டான என்ற கேள்விக்கும் பதில் கொடுத்துள்ளேன். தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்ட காலத்து அரசனான மாகீர்த்தி, 24,000 வருடங்கள் ஆண்டான் என்று நச்சினார்க்கினியர் உரையில் எழுதியுள்ளார். அதனால் இப்படி சொல்லப்படும் வருடக்கணக்கில் உள்ள அர்த்தத்தைத் தெரிந்து கொண்டு படிப்பது தெளிவைத் தரும்.

  http://jayasreesaranathan.blogspot.com/2009/07/did-rama-rule-for-11000-years.html

  http://jayasreesaranathan.blogspot.com/2010/10/rama-lived-7000-years-ago.html

  http://jayasreesaranathan.blogspot.com/2010/10/ramas-birth-date.html

  http://jayasreesaranathan.blogspot.com/2010/10/when-was-rama-born.html

  கிருஷ்ணந்து காலம் பற்றி இந்தத் தொடரிலேயே இரண்டு செப்புப்பட்டய ஆதாரங்கள் தர இருக்கிறேன்.

  இவற்றையும் படியுங்கள்.

  http://jayasreesaranathan.blogspot.com/2009/01/krishna-reality-archeological-proof.html


  http://jayasreesaranathan.blogspot.com/2008/12/krishna-lived-for-125-years.html

  பதிலளிநீக்கு
 3. @jayasree
  தங்களின் கருத்துரைக்கு மிக மிக நன்றி அம்மா.
  மேலும் சில சந்தேகங்கள் தவறாக என்ன வேண்டாம்.
  ௧. மீனாட்சி சுந்தரரும் -சிவபெருமானும் ஒன்றுதானே?

  ௨. //மீனாட்சி, சுந்தரேச்வரர், முருகன் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் எங்கோ தென் பகுதியில் இருந்த தென் மதுரையில் ஆகும்.// அப்படி என்றால் இவர்கள் இமயமலையில் வசிக்க வில்லையா?

  ௩. //40,000 ஆண்டுகளுக்கும் முன்னால் சம்ஸ்க்ருதம் ஏற்படுத்தப்பட்டு விட்டது. அதைப் பேசிய தேவர்கள் என்பவர்கள், 40,000 ஆண்டுகளுக்கு முன் உலகின் வட கோடியில் - சைபீரியா போன்ற பகுதிகளில் வாழ்ந்தனர்.//
  40000 ஆண்டுகளுக்கு முன்பு சமஸ்கிருதம் பேசப்பட்டது என்கிறீர்களா அல்லது எழுத்து வடிவிற்கு வந்துவிட்டது என்கிறீர்களா?

  ௪. மனித மொழி தமிழ், தேவர்கள் மொழி சமஸ்கிருதம் என்பதன் காரணம் என்ன? தேவர்கள் எனப்பட்டவர்களும் மனிதர்கள்தானே?
  ௬. சைபீரிய மக்கள் இந்தியாவிற்கு எப்பொழுது வந்தார்கள்? இவர்கள் தான் ஆர்யர்களா?

  உங்களின் பதிலுக்காக காத்திருக்கின்றேன்.
  மிக்க நன்றி
  என்றும் அன்புடன்
  இராச.புரட்சிமணி

  பதிலளிநீக்கு
 4. and here one peson told like this

  http://jayabarathan.wordpress.com/2011/07/15/kumari-kandam-3/

  //1960 ஆம் ஆண்டு இந்து மாக்கடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த ஆராய்ச்சியில் தமிழகத்தின் கன்னியாகுமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாகச் சொல்கிறார்கள். முதலாக கப்பலில் சென்று ஒலிச்சமிக்ஜை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். 1960-1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாக்கடல் கடற்தள வரைபடங்களில், குமரிக் கண்டத்தின் பூர்வீக அமைப்பு நிலை காணப்படுகிறது. அரபிக் கடலுக்குத் தெற்கில், லட்சத் தீவுகள் நீட்சியில் மால்டிவ் தீவின் வடக்குப் பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ [Chagos, Archipelago] வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த [கி.மு.8000] பனி யுகத்தின் போது [During the Ice Age] இந்து மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.//

  But till now I can't get that ultrasonic probing chart. did you know any information about this?

  பதிலளிநீக்கு
 5. @ புரட்சி மணி.

  1. சுந்தரேச்வரரும், சிவனும் ஒன்று என்றாலும், சுந்தரேஸ்வரர் என்பது உலகில் நடமாடிய ஒரு அவதாரம். ராமன், கிருஷ்ணன் என்பவர்கள் விஷ்னுவின் அவதாரங்கள் என்பது போல. ஆனால் ராமன், கிருஷ்ணனது பிறந்து, வளர்ந்த விவரங்கள் இலக்கியத்திலும், வாய் வழிக் கதையிலும் பதிந்துள்ளது போல, சுந்தரேச்வரரைப் பற்றி நம்மிடம் விவரங்கள் இல்லை.

  2. 68 ஆவது கட்டுரையின் அடியில் நான் இட்டுள்ள கருத்துரைகளைப் படிக்கவும். அதில் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும். இந்திரன் குறித்த கட்டுரையில் சொன்னது போல சிவன், விஷ்ணு, முருகன் போன்ற தெய்வங்கள் மூன்று நிலைகளில் பேசப்படுகின்றன. physical, cosmological and divine. இதை பூ, புவர். ஸ்வர் என்று 3 ஆகச் சொல்வார்கள். சிவனது cosmological உருவை ருத்ரன் என்பார்கள். இதன் ஒரு கோணத்தை தமிழ்ஹிந்துவில் வந்த என் கட்டுரையில் காணலாம். இந்த இணைப்பில் படிக்கவும்.
  http://www.tamilhindu.com/2010/01/adimudi-kaanaa-athisayam-a-dimension-of-the-universe/

  பூமியைப் பொறுத்தமட்டில், வடபாகத்தில் துருவப் பகுதில் சிவன் cosmological உருவகமாக இருந்ததே, புராணங்கள் காட்டும் ஆதி ரூபம். அதற்குப் பிறகு, இமய மலைப் பகுதி அவருக்கு வாச்ஸ்தலமாயிற்று.. These are all divine-cum-energy level manifestations of the highest order that can be caught up by the one / devotee who also graduates to that energy / vibration level. சிவன் அதீத வெப்பத்தை உடையவன் ஆதலால், அவன் இருப்பிடம் அதீதக் குளுமையான இடமாக இருக்கும். இல்லாவிட்டால் இந்த உலகம் தாங்காது.(இந்தத் தொடரில் இந்தக் கோணத்தில் இருக்கும் விவரங்களையும் விளக்குகிறேன்.). இதனால் துருவப்பகுதியிலும், இமயமலைப் பகுதியிலும் அவன் குடியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

  அழித்தல் தொழிலில் ஈடுபடும் சிவன், ஆக்கத்திலும் ஈடுபடுகிறான். அழித்தலில் ஆக்கம் நடக்கும் போது, அவனது உடுக்கை ஒலி மூலம் உருவகப்படுத்தி உள்ளார்கள். அதாவது எங்கு ஒரு அழிவு, உடுக்கை ஒலியுடன் நிகழ்கிறதோ, அங்கு உயிர்த் தோற்றம் இருக்கும். இமயமலை உண்டானபோது அப்படி விவரிக்கப்படுகிறது. இமயமலை என்பதே ஒரு நிலப்பகுதி, மற்றொரு நிலப்பகுதியை இடித்து, முட்டியபோது உண்டானது. அங்கிருந்த கடலையே முட்டி அது உயர்ந்திருக்கிறது. இமயமலையின் உச்சிகளில், ஆழ்கடல் விலங்குகளின் அடையாளங்கள் தென்படுகின்றன என்பது இதை மெய்ப்பிக்கிறது. இமயமலை இன்னும் உயர்ந்து கொண்டிருக்கிறது. அதாவது அந்த இடத்தில் மோதல் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அது தொடரும் வரை அங்கு சிவன் குடிகொண்டிருப்பதாகச் சொல்ல வேண்டும். அதாவது, மோதலும் உராய்வும், அதனால் கல்லும், மண்ணும், கண்ணுக்குத்தெரியாத உயிரினமும், அந்த மோதலினால் நிலநடுக்கங்கள் உண்டாகி, மனிதர்களும் அழிகிற காரணத்தினால்,இமயமலைப் பகுதியில் அழிவும் நடந்து கொண்டிருக்கிறது.மலை உயரந்து கொண்டிருப்பதால், ஆக்கமும் நடந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பான சில விவரங்கள் உமை, கங்கை பற்றின கட்டுரைகளில் உள்ளன. அவற்றை இந்தத் தொடரில் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் தேடுதல் பெட்டியின் மூலம் தேடவும்.

  துருவப்பகுதியிலும், இமயமலைப் பகுதியிலும் உறைந்த சிவன் தென்னாட்டுக்கு வந்தது எப்படி என்பதை இந்தத் தொடரில் விளக்குவேன். இந்தக் கருத்துரையில் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், துருவப் பகுதி, இமயமலைப் பகுதியை மேலே சொல்லியுள்ளேன். இவை தவிர ருத்ர தாண்டவம், திருபுர வதத்தில் காணப்படுகிறது. தக்ஷன் கதையைப் பற்றிச் சொல்லும்போது அதை விவரிக்கிறேன். அந்தத் திரிபுரம் என்பது தோபா எரிமலை என்பது என் கருத்து. அது உண்டாக்கின அழிவுக்குப் பிறகு, ஆக்கமும் ஏற்பட்டது. அதனால் அது நடந்த தென்னாட்டில் சிவன் குடி கொண்டு விட்டான். தென்னாடு என்பது பூமியின் தென்கோடியில் இருந்த ரிஷப மலையில் இருந்த தென் மதுரை.

  (தொடரும்)

  பதிலளிநீக்கு
 6. (தொடர்ச்சி)

  3. மனிதகுல வளர்ச்சியும், இடப்பெயர்வும் எப்படி நிகழ்ந்தன என்று மரபணு ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. அவை காட்டும் விவரங்கள் புராண விவரங்களுடன் ஒத்துப் போகின்றன. அதன் அடிப்படையில் இதைச் சொல்கிறேன். 40,000 ஆண்டுகளுக்கு முன்னால், இந்தியா வழியாக ஒரு இடப்பெயர்வு, ஐரோப்பாவுக்கு நடந்திருக்கிறது. காஸ்பியன் கடலைத்தாண்டி (காஸ்யப முனிவர் தொடர்பு) ரஷ்யா, சைபீரியா பகுதிக்குச் சென்றிருக்கிறது. அப்பொழுது பூமியின் சாய்மானம், இன்று உள்ளது போல 23=1/2 பாகைகள் அல்ல. வட துருவப்பகுதி வாழ உகந்ததாக இருந்தது. இன்றைக்கு 25,000 ஆண்டுகள் வரை அங்கு மக்கள் (தேவர்கள்) இருந்தனர். இன்னும் பல விவரங்கள் இந்தத் தொடரில் வரும். இதுவரை எழுதியுள்ளதைத், தேவலோகம் / தேவர் உலகம் /உத்தரகுரு என்று தேடுக பெட்டியில் தேடிப் படிக்கவும்.

  ரஷ்யாவில் ஒரு தொல்பொருள் புதையலே இருக்கிறது. இது வரை கண்டுபிடித்ததன் அடிப்படையில், லட்சம் வருஷத்துக்கும் முன்பே அங்கு மக்கள் நாகரிகத்துடன் இருந்தனர் என்று சொல்லத்தக்க வண்ணம் விவரங்கள் இருக்கின்றன என்கிறார்கள்.

  அதுவும் புராணக் கருத்துடன் ஒத்துப் போகிறது. துருவப் பகுதிகளின் தட்பவெப்ப நிலை மாறுவதால், மக்கள் இனம் பூமியின் வடக்குக்கும், தெற்குக்கும் மாறி மாறி இடம் பெயர்ந்திருக்கிறது. கடந்த ஒரு லட்சம் வருஷத்தில் தெற்கில் இருந்த மக்கள் வடக்குக்கு இடம் பெயர்ந்திருக்கிறார்கள். அதற்கு முன்னால் வடக்கிலிருந்து தெற்குக்கு இடம் பெயர்ந்திருக்கிறார்கள். வட, தென் கோடியில் மக்கள் இருந்த போது அவர்களிடம் சம்ஸ்க்ருதம் இருந்திருக்கிறது. தெற்கில் தட்பவெப்ப நிலை சாதகமாக இருந்த போது, தெற்கைத் தேவ லோகம் என்றிருக்கிறார்கள். அதற்கு இந்திரன், நாகநாதன் என்ப்பட்டான். தெற்கில் இருக்கும் போது பூமிக்கடியில் வாசம், வடக்கில் இருந்த போது, பூமிக்கு மேலே வாசம். சமஸ்க்ருதமும், வேதமும், தெற்கு, வடக்கு துருவ அச்சில் வாழ்கின்றன. அந்த அச்சில்தான் சனாதன தர்மம் என்று சொல்லப்படும் ஹிந்து தர்மமும் வாழும். இதை ஒரு வரைபடமாக ஒரு கட்டுரையில் இட்டிருந்தேன்.

  4. இதுவரை சொன்னதே உங்கள் 4 ஆவது கேள்விக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். ஆரியர்கள் என்பது மக்கள் இனமல்ல. குறளில் சான்றாண்மை என்று ஒரு அதிகாரம் இருக்கிறது. அதில் விவரிக்கப்படும் சான்றாண்மை என்பது, ஆரியன் என்பதன் அச்சு அசலான விளக்கமாகும்.
  சான்றோர்கள் அல்லது ஆரியர் என்பவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். உதாரணத்துக்கு நான் அண்ணாதுரை அவர்களை ஆரியன் என்பேன். பதவிக்கு வந்தவுடன், எம்-எல்-ஏ க்களது சம்பளம் ரூ.1000 என்று இருந்ததை அவர் ரூ 500 என்று குறைத்தார். மக்கள் பணிக்கு வந்தவர்களுக்கு எதற்குச் சம்பளம், அதிலும் 1000 ரூபாய் அதிகம் என்று அவர் 500 ஆகக் குறைத்தார். அப்படிச் சொல்பவன் ஆரியன் ஆவான். நீதி, நேர்மை, நியாயம் இவை எவனிடம் குடி கொண்டிருக்கிறதோ, எவன் இவற்றிலிருந்து தவறாமல், ஒரு துலாக் கோல் போல் இருக்கிறானோ அவன் ஆரியன். அவன் எங்கும் இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 7. @ புரட்சி மணி,
  68 ஆவது கட்டுரையில் பூமியின் அச்சில் நகரும் இடப்பெயர்வு பற்றிய படம் இருக்கிறது. பார்க்கவும் படிக்கவும். இதற்கு ஆதாரமாக பிரபஞ்சம் உற்பத்தி, உயிர் உற்பத்தி பற்றி வேதாந்தம் கூறும் வழியில் விளக்கம் தர முடியும். அதை இந்தத் தொடரில் எழுதப்போவதில்லை. ஆங்கிலத்தில் எழுதுவேன். அதையும், இப்பொழுது எழுதப் போவதில்லை. எழுதும் பொழுது, இந்தக் கட்டுரையின் கீழ் இணைப்பைக் கொடுக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. @ சுப்ரமணி.
  மீனாட்சி - சுந்தரேஸ்வரரது மகனான உக்கிர குமாரனே வள்ளியை மணந்த முருகன் ஆவான். அவன் காலத்தில், முதல் சங்கம் ஆரம்பித்த்து. அதன் காலம் இன்றைக்கு 12,000 ஆண்டுகளுக்கு முன். Asio-Australoid ஆக இருக்க வேண்டும். ஆப்பிரிக்கன் கிடையாது. ஆனால் அவரது கணங்கள் ஆப்பிரிக்கர்களாக இருக்கலாம்.

  யுகம் பற்றி பல விவரங்கள் இருக்கின்றன. 15 ஆவது கட்டுரையைப் படிக்கவும்.

  பதிலளிநீக்கு
 9. @ சுப்ரமணி,

  //http://jayabarathan.wordpress.com/2011/07/15/kumari-kandam-3////

  மார்ச் மாதமே இந்தக் கருத்தை நான் சொல்லி விட்டேன். மார்ச் கட்டுரைகளான, 41 முதல், 47 வரை படிக்கவும்.

  அல்ராசானிக் ஆராய்ச்சிகள் நடக்கவில்லை. கடல் மட்ட ஆராய்ச்சிகள் மட்டுமே நடந்துள்ளன. அதிலும் உலகம் முழுமைக்கும் முடிக்கப்படவில்லை. ஆனால் இந்தியாவைச் சுற்றியுள்ள கடலிலும், இந்தியக் கடலிலும் கடல் மட்ட ஆராய்ச்சி நடந்துள்ளது. இந்தத் தொடரில் ஆங்காங்கே எழுதி வந்துள்ளேன். திராவிடேஸ்வரன் என்னும் வைவஸ்வத மனு இருந்த திராவிடத்தை அந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் ஆராய்ந்துள்ளேன். இனி வரும் கட்டுரைகளில் வரும். காப்பி அடித்து விடுவார்கள் என்று தோன்றுகிறது. பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 10. //திராவிடேஸ்வரன் என்னும் வைவஸ்வத மனு இருந்த திராவிடத்தை அந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் ஆராய்ந்துள்ளேன்.இனி வரும் கட்டுரைகளில் வரும். காப்பி அடித்து விடுவார்கள் என்று தோன்றுகிறது. பார்க்கலாம்.//

  மனுவை கும்ரிவெள்ளத்தோடு தப்பியவர்களை ஏற்கனவே ஒருவர் ''பக்றுளி முதல் யூப்ரட்டீஸ் வரை'' என்ற புத்தகத்தில் ஒப்பிட்டுவிட்டார்.

  I think this isn't copy. These statements were already in books. But according to my knowledge you are the 1st person in internet to share these things.

  பதிலளிநீக்கு
 11. பஃறுளி முதல் யூப்ரடிஸ் வரை - என்ற புத்தகம் என்ன சொல்கிறது என்று என்க்குத் தெரியாது. ஆனால் அது சொல்லக்கூடிய ரூட் அரேபியா வழியாக இருக்க வேண்டும். நான் சொல்லப்போகும் ரூட் வேறு. ஏனெனில் இதை உறுதிப்படுத்தும் விஞ்ஞான ஆராய்ச்சி வந்து ஓரிரு வருடங்களே ஆகியுள்ளன. அந்த ஆராய்ச்சியைப் படித்தபிறகே, பல புதிர்கள் விடுபட ஆரம்பித்தன. அதற்கப்புறம்தான் இந்தத் தொடர் எழுத ஆரம்பித்தேன்.

  பதிலளிநீக்கு
 12. @jayasree
  தங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி. பெரும்பாலானவற்றை நான் புரிந்து கொண்டுவிட்டேன் என்றுதான் நினைக்கின்றேன். இருப்பினும் இன்னும் சில சந்தேகங்கள். பழைய சந்தேகங்கள் தான் அதற்க்கு விடை நீங்கள் தரவில்லையா அல்லது எனக்கு புரியவில்லையா என தெரியவில்லை. புரியாததால் மீண்டும் கேட்கிறேன்.
  ௧.சைபீரியாவில் வாழ்ந்த மக்கள் சமஸ்கிருதம் பேசினார்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த மக்கள் அல்லது சமஸ்கிருதம் எப்பொழுது இந்தியாவிற்கு வந்தது?

  ௨.. மனித மொழி தமிழ், தேவர்கள் மொழி சமஸ்கிருதம் என்பதன் காரணம் என்ன? தேவர்கள் எனப்பட்டவர்களும் மனிதர்கள்தானே?
  தங்களின் விளக்கங்கள் மிகவும் பயனுடையதாக இருந்தது. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 13. @ புரட்சிமணி,

  மொழிகள் பற்றிய விவரங்கள் இனிமேல்தான் இந்தத் தொடரில் வருகின்றன. அப்பொழுது உங்கள் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
 14. மேடம், யாதவர் இனம் தமிழ்நாட்டில் இருக்கும் கோனார் சமூகமும் ஒரே இனமா அல்லது வேறு வேறா? அல்லது கோனார் சமூகமும் என்பது தாங்கள் கூறும் தமிழக ஆயர் குலமா? ஐயத்தை தெளிவக்கவும்....

  பதிலளிநீக்கு
 15. @ பெயரில்லா சொன்னது…

  ஆயர் குலத்தில் நிறைய பிரிவுகள் இருக்கின்றன. பசுக்களை மட்டும் பராமரிப்பவர்கள் ஒரு தனி குலம். பசுக்கள், எருமைகளைப் பராமரிப்பவர்கள் ஒரு தனி குலமாக இருந்திருக்கின்றனர். அதுபோல ஆடுகளை மட்டும் மேய்ப்பவர்கள் தனிக் குலம் என்றும், ஆடு, மாடு என எல்லாவற்றையும் மேய்த்தவர்கள் ஒரு குலம் என்று இருந்திருக்கிறது. இவர்களைத் தவிர இந்தக் கால்நடைகளைச் சொந்தமாகக் கொண்டவர்கள் ஒரு குலம், சொந்தமில்லாமல், பிறருக்காக மாடுகளைப் பராமரிப்பவர் ஒரு குலம் என்று இருந்திருக்கிறது. தமிழ் நாட்டில் மட்டுமல்ல, கிருஷ்ணன் வாழ்ந்த வட இந்தியாவிலும் அப்படியே.

  அவர்கள் அனைவருக்கும் பொதுவானது, வைச்ய குலம் அல்லது யாதவ குலம் என்பதே. சங்க காலம் வரை மேற்சொன்ன பிரிவுகளுக்கிடையே தொழில் முறையில் மட்டுமே பிரிவுகள் இருந்தன. ஆனால் ஒருவரோடு ஒருவர் இணைந்து திருமண உறவுகள் இருந்திருக்கின்றன. அதாவது மாடுகளுடன் சம்பந்தப்பட்டவனாக இருந்தால் போதும். அவர்கள் தங்கள் இனத்தவரே என்று மண உறவு கொண்டிருக்கின்றனர்.

  இதற்கு ஒரு உதாரணமாக, கலித் தொகையில், முல்லைக் கலியில் சொல்லப்படும் ”பொதுவர்”களாச் சொல்லலாம்.
  அவர்கள் மாடுகளுக்குச் சொந்தக்காரர்கள் அல்லர். ஆனால் மாடு மேய்த்தோ , அல்லது ஏறு தழுவுதல் முடிந்த பிறகு நடைபெறும் குரவைக் கூத்தில் கூத்தாடியோ இருந்திருக்கின்றனர். அவர்களுக்குத் தங்கள் பெண்களை ஆயர்கள் தரமாட்டார்கள். ஆனால் அந்தப் பொதுவன், ஏறு தழுவுதலில் பங்கெடுத்துக் கொண்டு வெற்றி பெற்றாலும், வெற்றி பெறாவிட்டாலும், அவனது அந்த எறு தழுவும் குணத்தினால், அவனைத் தங்களுள் ஒருவனாக எற்றுக் கொண்டு, மருமகனாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். ஏறு தழுவும் திறனும், மாடு மேய்க்கும் தொழிலும் இருந்தால் போதும், அவன் வைஸ்யனான யாதவனே என்பது அன்றைய கருத்து. வர்ணத்தால் மட்டுமே தாங்கள் ஒரே இனம் என்றனர். மொழியாலோ, வாழும் இடத்தாலோ அல்ல. இது எல்லா வர்ணத்துக்கும் பொருந்தும். மொழியால் இனம் என்று சொல்லப்படுவது, திராவிடம் பேசும், தமிழ் நாட்டவர்களால் ஏற்படுத்தப்பட்ட கருத்து.

  இதன் மூலம், நாம் சொல்ல வருவது, கோனார், இடையர், கோவலர், பொதுவர், ஆயர் ஆகிய மக்கள் தங்களுக்குள் உறவு வைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே ஓரினமாக, ஒரே வர்ணமாக (வைஸ்யர்) ஆரம்பத்தில் தங்களை அடையாளம் சொல்லியிருக்கின்றனர். காலப்போக்கில்தான் பிரிவுகளாக ஆகி விட்டனர்.

  யாதவர் என்ற சொல், கிருஷ்ணாவதாரத்துக்குப் பின் தான் வழக்கில் வந்தது. கிருஷ்ணனது மூதாதையர் பெயர் யது என்பதால், யாதவர் என்ற பெயர் பெற்றனர். இந்த யாதவ மக்கள்,கிருஷ்ணன் காலத்தில் (5000 ஆண்டுகளுக்கு முன்)மதுரைப் பகுதிக்கு இடம் பெயர்ந்திருக்கின்றனர். மதுரையைச் சுற்றியுள்ள ஆயர்கள், இடையர்கள், கோனார்கள் அனைவருமே, அந்த யாதவர்களுடன் கலப்பு கொண்டவர்கள். இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்பும் ஒரு பகுதி யாதவர்கள், தமிழ் நாட்டுக்கு வந்தனர். அவர்கள், தருமபுரி, கிருஷ்ணகிரி, மைசூர், வயநாடு, கோயம்புத்தூர், பழனி, நாகர்கோவில் போன்ற இடங்களில் குடியேறினர். காங்கேயம் காளை அவர்கள் வழியாகத்தான் தமிழ் நாட்டுக்கு வந்தது. அந்தப் பகுதிகளில் வாழும் மக்கள், நேர் வம்சாவளி யாதவர்களாக இருக்க சாத்தியக் கூறுகள் அதிகம். அவர்கள் தமிழ் நாட்டில் ஏற்கெனெவே இருந்த ஆயர்களுடன் கலந்திருக்கிறார்கள்.

  நீங்கள் குறிப்பாக ஓரிடத்திலுள்ள கோனார்களைப் பற்றி அறிய வேண்டுமென்றால், அவர்கள் குல தெய்வம், குலத்தொழில், அவர்கள் பூர்வ குடியிருப்பைச் சொல்லவும். திருமணத்தை, மாலை நேரத்தில் செய்வார்களா என்றும் சொல்லவும். அதைக் கொண்டு அவர்கள், தமிழ் நாட்டிலேயே ஆதியிலிருந்து இருந்தவர்களா, அல்லது, வடக்கிலிருந்து வந்த யாதவர்களா, அல்லது, அந்த யாதவர்களுடன் கலப்பு கொண்டவர்களா என்று சொல்ல முடியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  3. //kulatheivam sri krishnan and periyandavar kulathozhil vivasayam and aadu maadu valarpavargal maniyakkara idaiyar poorva kudi thirumanam kalaiyil seivargal enaku//

   மணியக்காரர், இடையர் என்பவர் தமிழ் நாட்டுக் குடிகளே. காலையில் திருமணம் தமிழ் நாட்டு வழக்கமே. ஆனால் மேலே நான் எழுதியுள்ள பகுதிகளில் உங்கள் சொந்த ஊரோ, அல்லது குல தெய்வமோ இருந்தால், வடக்கிலிருந்து வந்தவரோ, அல்லது வடக்கிலிருந்து வந்தவர்களுடன் சம்பந்தம் செய்து கொண்டவரோ ஆவர்.

   ஆடு, மாடு வளர்ப்பை மட்டுமே செய்து வந்தவர்கள்தாம், கோதூளி முஹூர்த்தம் என்று, சூரிய அஸ்தமனத்தில் திருமணம் செய்வர். துவாரகை, சௌராஷ்டிரா மக்கள் இவ்வாறு செய்வர் என்று ஒரு ரிஷியின் வாக்கே இருக்கிறது. அந்தப் பாரம்பரியத்தில் வந்தவர்கள், அதை விடவில்லை. திருமணம் காலையில் என்பதாலும், தொழில் மாறியுள்ளதாலும் (விவசாயம்), நீங்கள் சொல்லும் குடிகள் கலப்புக் குடிகளே.

   பிரிடிஷ் ரெகார்டுகளில், யாதவர் என்ற குடிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம் பேசுபவர் என எல்லா மொழிகளிலும் இருந்திருக்கின்றனர். இந்த மொழிப் பிரிவு கிருஷ்ணன் காலத்தில் இல்லை. அதனால் யாதவர் என்பவர் கிருஷ்ணன் காலத்திலிருந்தே தென் இந்தியாவுக்கு வந்தவர் எனலாம். அதனால் நந்தகோபன் கோத்திரம் , கிருஷ்ணன் குலதெய்வம் என்றாகி, ஆனால் திருமணம் காலையில் என்றாகி, தொழிலும் மாறியிருப்பதால், யாதவக் கலப்பு குடிகளாக இருக்கலாம். தமிழ் நாட்டிலேயே இருந்த பூர்வ குடிகள் தென் கிழக்குத் தமிழ் நாட்டில் இருப்பவர்கள், ஆயர், இடையர் என்பவர்கள். அவர்களுக்குக் கள்ளழகர் குல தெய்வம்.

   தமிழ் நாட்டு ஆயர் / யாதவர் / கோனார் குடிகளைப் பற்றி மரபணு ஆராய்ச்சி நடந்ததாகத் தெரியவில்லை. அந்த ஆராய்ச்சி நடந்தாலும், தமிழ் மக்களுக்கும், வட இந்திய மக்களுக்கும் மூலத்தில் ஒரே மரபணுக் குழுமம் என்றே வரும். அவரவர் வர்ணக் கலப்பு பாரதம் முழுவதும் நடந்திருக்கிறது. அதாவது, தென்னிந்திய இடையர், வட இந்திய இடையருடன் திருமண உறவு கொண்டிருந்திருக்கின்றனர்.

   நீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  8. //avargal anaivarum king yadhuvin vali thondrala???//

   யதுவின் வழித்தோன்றல்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் வட மதுரை, துவாரகை போன்ற இடங்களில் இருந்தவர்கள் என்று சொல்லலாம்.

   யதுவின் நேர் வழித்தோன்றல்கள் அரச பரம்பரையினர். துவாரகையில் இருந்த அவர்களும், கிருஷ்ணனுடன் தொடர்பு கொண்ட பலரும், வேளிர்கள் என்னும் பெயருடன் தமிழ் நாட்டுக்கு வந்தார்கள். அது இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அரச பரம்பரையினர் 1800 ஆண்டுகளுக்கு முன்பே பெரும்பாலும் அழிக்கப்பட்டு விட்டனர். பாரி, பேகன், ஓரி முதலான கடை எழு வள்ளல்கள் அனைவருமே அப்படி வந்தவர்கள்தான். அரச பரம்பரையினர் மட்டுமல்லாது,கிருஷ்ணன் காலத்தில் வாழ்ந்து, அவனிடம் பக்தி கொண்ட பிற மக்கள் கூட்டத்தினர் பெருவாரியாகத் தமிழ் நாட்டுக்கு வந்தனர். இன்று நாம் கொண்டாடும், போகிப் பண்டிகை, பொங்கல், மாட்டுப் பொங்கல் ஆகியவை அவர்களால் ஏற்படுத்தப்பட்டவையே. அவர்களே முல்லை நில மக்களாகத் தொல்காப்பியத்தில் பேசப்பட்டனர். பெரும்பான்மையான ஆயர், யாதவ மக்கள் அந்த வட நாட்டு மக்கள் வழியில் வந்தவர்களே. அவர்கள் மட்டுமல்ல, இன்று OBC, MBC என்றிருக்கும் மக்களில் பெரும்பாலானவர்களும் கிருஷ்ணன் தொடர்புடன் வட இந்தியாவிலிருந்து வந்தவர்களே. இன்று வட்டார வழக்கு என்று பேசப்படும் தமிழைப் பேசுபவர்கள் அனைவருமே அப்படி வந்தவர்கள்தான்.

   நீக்கு
  9. ஆனால் யதுவின் வம்சமே யாதவர்கள் என அழைக்கப்பட்டனர்.என்று சொல்கிறார்களே???
   மேடம் ஐயத்தை தெளிவக்கவும்

   நீக்கு
  10. யாதவ என்னும் சமஸ்க்ருதச் சொல்லுக்கு ’relating to or descended from yadu’ என்றும் ”stock of cattle” என்றும் பொருள்.

   http://spokensanskrit.de/index.php?script=HK&beginning=0+&tinput=+yadava&trans=Translate&direction=AU

   அதனால் மாடு மேய்த்தவர்களுக்கும் யாதவ என்றே பெயர். யதுவுடன் தொடர்பு கொண்ட மக்களுக்கும் யாதவ என்று பெயர். அவன் நாட்டு மக்கள் யாதவர்கள் என்று அழைக்கப்பட்டனர். யது மன்னன் பரம்பரை இன்று இல்லை.

   நீக்கு
  11. மேடம் தங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி

   நீக்கு
 16. Mr Puratchi mani,

  My recent article in my Engish blog deals with issues that include 'Devas' also. If interested, you may read it in this link:

  http://jayasreesaranathan.blogspot.com/2011/11/indus-girl-and-indra-loka-have-remnants.html

  Read the comments too, where I have hypothesized the now extinct 'Denisovian' genome with Devas.

  பதிலளிநீக்கு
 17. விளக்கத்திற்கு நன்றி ஜெயஸ்ரீ மேடம்....

  பதிலளிநீக்கு
 18. தொல்காப்பியம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் மற்ற காப்பியங்கள் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது. உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு