வியாழன், 6 டிசம்பர், 2012

121. இன்காவின் ஐய்மாரும், தமிழ் ஆயரும், ஐயும்.

 

இன்கா மக்களது முக்கியத் தெய்வமான பச்சமாமா என்பவளது உருவமும், இந்தியக் கோயில்களில் காணப்படும் ஒருவமும் ஒத்து இருக்கின்றன என்று முந்தின கட்டுரையில் கூறினோம். பச்சமாமா என்பதை, மாமா பச்ச என்றும் அழைக்கிறார்கள். அம்மா என்பதை அவர்கள் மாமா என்கிறார்கள். இதனால்  பச்சமாமா என்பது பச்சையம்மா என்பதன் திரிபு என்று தெரிகிறது. பூமியை அவர்கள் அன்னையாக் கொண்டு அப்படி அழைக்கிறார்கள். பூமியின் மேலாடை போல இருப்பது பச்சை பசேலென்று இருக்கும் தாவர இனங்களே. இதன் காரணமாக இந்தப் பெயர் ஏற்பட்டிருந்தால் அது நிச்சயமாக தமிழ் பேசிய சமுதாயத்திலிருந்து  வந்திருக்க வேண்டும்.


பச்சை என்பது இளமையையும், வளரும் நிலையையும் குறிக்கும். பச்சைக் குழந்தை என்கிறோமே, அந்தச் சொல்லில் பச்சை என்பது அப்பொழுதுதான் பிறந்த இளம் குழந்தை என்னும் பொருளில் வருகிறது. இந்தப் பச்சமாமாவின் கருத்தும், பச்சைக் குழந்தையைப் பிரசவிக்கும் தோற்றத்தில் இருக்கிறது. வயிற்றில் செடி போன்ற அமைப்பு காணப்படுவது இதை ஊர்ஜிதப்படுத்துகிறது. எந்த விவசாய முயற்சியையும் மனிதன் செய்யாமல், தானாகவே பூமியானது விளைபொருட்களைத் தரும் தோற்றமே பிரசவிக்கும் தோற்றமாகக் காட்டப்பட்டுள்ளது. இந்தக் கருத்தைக் காட்டும் வேத மரபுத் தெய்வம் எது என்று பார்க்கும் முன், இந்தப் பச்சமாமாவைப் பற்றிய சில விவரங்களை அறிவோம். 


 


இன்கா மக்களும் இந்தத் தெய்வத்தை, பூமியாகவும், பயிர்களைப் பிரசவிப்பவளாகவும் கருதுகின்றனர். பயிரிடும் போதும், அறுவடையின் போதும் இவளை வணங்கி விட்டே ஆரம்பிகின்றனர். இவளே நிலநடுக்கங்களை உண்டாக்குகிறாள் என்றும் நினைக்கின்றனர். இவளுக்குச் செலுத்தும் நன்றியாகவும், இவளால் நிலநடுக்கம் போன்ற கெடுதல் எதுவும் வரக்கூடாதென்பதற்காகவும், பூமி சம்பந்தப்பட்ட எந்த செயலைச் செய்வதற்கு முன்பும், இவர்கள் பூமிக்குப் படையல் செய்து விட்டுத்தான் துவங்குகின்றனர். தினசரி வாழ்க்கையிலேயே ஏதேனும் சாப்பிட ஆரம்பிப்பதற்கு முன் அதில் கொஞ்சம் எடுத்து பூமியில் அல்லது தரையில் போட்டு விட்டு, அதற்குப் பிறகுதான் சாப்பிட ஆரம்பிக்கின்றனர்.


பல சமயங்களில் தாங்கள் படையல் தரும் பொருட்களைப் பூமியைத் தோண்டி அதில் இட்டுப் பூஜை செய்கின்றனர். இவ்வாறு அவர்கள் படைக்கும் பொருளுக்கு 'சல்லா' அல்லது சல்லகு ('ch'allay'  / 'ch'allakuy') என்று பெயர். இவற்றையே நீரிலும் தெளிப்பார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் சல்லா என்று இவர்கள் பூமிக்குள் புதைக்கும் பொருளுக்கு  சமஸ்க்ருத்ததில் சல்யா (SALYA) என்று பெயர். பொதுவாகவே பூமியில் ஏதேனும் புதைபட்டிருந்தால் அதற்குச் சல்யம் அல்லது சல்லியம் என்று பெயர்.


இவர்கள் நீரில் தெளிக்கும் சல்லாவும் சலம் அதாவது ஜலம் என்னும் சமஸ்க்ருதச் சொல்லை ஒட்டி இருக்கிறது. இதையே சலம், சலிலம் என்று தமிழிலும் கூறுகிறோம். சல்லா என்று இவர்கள் படையல் செய்வதை, ஹோமம் செய்வது போல யாத்திரி (yatiris) என்று அழைக்கப்படுபவர்களை வைத்துச் செய்கிறார்கள். யாத்திரி என்றால் யாத்திரை செய்பவன் என்று சமஸ்க்ருதத்தில் பொருள். அதே பொருளில் இந்தச் சொல் தமிழிலும் இருக்கிறது. எனவே இன்கா மக்களது 'யாத்திரி'யும் நமது ஆர்வத்தைத் தூண்டுகிறார். இன்றைக்கு இருக்கும் அவர்களது மொழியில் இதற்கு ஒரு அர்த்தத்தை அவர்கள் சொன்னாலும், யாத்திரையுடன் அந்த யாத்திரி தொடர்பு கொண்டவர் என்பது ஒரு அதிசயமான ஒற்றுமை.


அதாவது 'யாத்திரி'யாக ஆக விரும்புபவர், ஒரு குருவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இதற்காக அவர்கள் பயணம் செய்து ஒரு குருவை அடைந்து தங்களுக்குக் கற்றுத் தருமாறு கேட்டுக் கொள்வார்கள். ஆனால் அந்த குரு இவர்களை எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டாராம். இதனால் இவர்கள் மீண்டும் மீண்டும் குருவின் இருப்பிடத்துக்குப் பயணம் செய்து அவரது கவனத்தைக் கவர்ந்து, தங்களை சீடர்களாக ஏற்றுக் கொள்ளுமாறு செய்வார்களாம். இது இந்தியாவின் வேத  மரபிலும் இருப்பது , ராமானுஜர் போன்றவர்கள் தங்களுக்குக் கற்றுத் தரும்படி மீண்டும் மீண்டும் குருமாரை அணுகினதற்கு ஒப்பாக இருக்கிறது. அடிக்கடி பயணம் செய்ததால் யாத்திரி என்ற பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும், இதை உறுதிப் படுத்தும் வண்ணம், இன்கா யாத்திரிகளும் தங்களது சடங்குக்  கல்வியைக் கற்பதற்காகப் பலமுறை பயணம் செய்தனர் என்பது கவனிக்கத்தக்கது.


இவர்களைப் பற்றிய இன்னொரு செய்தியும் தமிழ்- வேத மரபுடன் பொருந்தி வருகிறது. ஒருவனை யாத்திரி என்று அங்கீகாரம் செய்பவர், ஒரு குருவோ அல்லது தெய்வப் பெற்றோரோ ஆவர். தெய்வப் பெற்றோர் என்று இன்கா மக்கள் சொல்லும் பெயர்கள் இச்சுதாதா, இச்சுமாமா (ichutata ichumama) என்பவை. இவற்றில் தாதா, மாமா (அம்மா) என்பவை தமிழுடன் ஆச்சரியமான ஒற்றுமை கொண்டவை. ஈஸ்வரன் என்று தெய்வத்தைக் குறிப்பிடுவதே ஈசு என்றாகி இச்சு என்றானதோ என்று எண்ணும் வண்ணம் இந்தப் பெயர்கள் இருக்கின்றன.


இந்த யாத்திரிகள், ஆயர்மார் அல்லது ஐயர்மார் அல்லது ஐமாரா மக்களைச் சேர்ந்தவர்கள். ஆயர் என்றால் கூடவே மாடு, கன்றுகள் இருக்க வேண்டும். ஆனால் இன்கா மக்களிடம் ஆடுகள் இருக்கின்றன. அவர்கள் வாழும் மலைப் பகுதியில் காணப்படும் ஆடுகளை அவர்கள் வளர்த்தனர். அந்த ஆடுகளை பூஜையில் பலியும் இட்டனர். இது சிலப்பதிகார வேட்டுவ வரியில் வரும் வேட்டுவர்கள் செய்யும் எருமை பலியை ஒத்திருக்கிறது.


வேட்டுவ வரியில், வேடர்களது தெய்வத்துக்குப் பெயர் ஐயை. 'ஐயை செய்யவள் வெய்யவாள் தடக்கைப் பாய்கலைப் பாவை" என்று ஐயையை திருமகள் முதலான எல்லாப் பெண் தெய்வங்களாகவும் வேடர்கள் அழைத்தனர். அவளே மயிடன் (மஹிஷன்) என்னும் எருமைத் தலை அசுரனைக் கொன்றவள் என்று வேடுவர்கள் கொண்டாடி, அவளுக்குப் பலி இடுகின்றனர். அது என்ன பலி என்று சிலப்பதிகாரம் வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆனால் அதில் சொல்லப்படும் பிற விவரங்கள் மூலம் அது எருமைப் பலி என்பது புலனாகிறது.


தங்கள் தேவைக்காக பிற இடங்களிலிருந்து ஆநிரையை கவர்ந்து வருவதை அந்த வேடர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அவ்வாறு கவர்ந்து வரச் செல்லும் போது, தங்கள் வெற்றிக்காகவும், துணை புரியவும், ஐயை என்னும் இந்தத் தேவியை வணங்கிச் சென்றார்கள். கவர்ந்து வந்த பின், பசுக்களை ஊரில் உள்ளவர்கள் அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுத்து விட்டு, நன்றி அறிவித்தலாக ஐயை என்னும் தேவிக்குப் பூஜையும், பலியிடுதலும் செய்திருக்கின்றனர். இந்த ஐயையை மஹிஷாசுர்மர்தினி என்றும், அவள் மஹிஷன் என்னும் எருமையின் தோள் மீதும், தலை மீதும் நின்று அவனைக் கொன்றவள் என்றும் அவர்கள் பாடுவதாகச் சிலப்பதிகாரம் சொல்வதால், அவளுக்கு எருமையைப் பலியிட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது, இன்றும் மஹிஷாசுமர்தினியைக் காளியாக வழிபடும் நேபாள நாட்டில் அவளுக்கு எருமை மாடுகளைப் பலி கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. சிலப்பதிகாரக் காலக் கட்டத்தில் தென் தமிழ் நாட்டில் வேட்டுவர்களால் வழிபடப்பட்ட மஹிஷாசுரமர்தினிக்கும், நேபாளம், மற்றும் கல்கத்தா காளிக்கும் உள்ள தொடர்பை வேறு ஒரு கட்டுரையில் காண்போம்.



ஆனால் மஹிஷாசுரமர்தினையை முன்னிட்டு, நவராத்திரியின் முடிவில்  கொண்டாடப்படும் துர்கா பூஜை, தமிழர் பண்டிகையே அல்ல என்றும், 'ஆரியர்களால்' திணிக்கப்பட்டது என்றும் திராவிட 'இனத்' தலைவர் கூறுவதை, சிலப்பதிகார வேட்டுவ வரி முறியடிக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வோம். வேடர்கள் வழிபட்ட தெய்வம் மஹிஷாசுரமர்த்தினி என்பதையும், அந்த வழிபாடு 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலங்களில் இருந்திருக்கிறது என்பதையும் சிலப்பதிகாரம் காட்டுகிறது



(வேடர்கள் வழிபட்ட தெய்வமாகத் துர்கையைக் காட்டும் 19 ஆம் நூற்றாண்டு கல் சித்திரம்)


ஐயை  மஹிஷாசுரனை அழித்தாள். அவள் உண்மையில் வாழ்ந்த ஒரு பெண்ணாகவும் இருக்கலாம். அதிக பலசாலியாகவும், மக்களைத்  துன்புறுத்துபவர்களை அழிப்பவளாகவும் இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட பெண்களை  ஐ அல்லது ஐயை என்று அழைத்திருக்கலாம். இந்த ஐ என்பதே ஆய்தாய் என்று மருவியிருக்கலாம். '' என்று பெண் முனிவர்களையும், யோகினிகளையும் அழைப்பார்கள் என்று அக்னிபுராணம் (348) கூறுகிறது.


ஐ என்பதே ஆதிப் பெயர் என்று சொல்லும் வண்ணம் ஐகா என்னும் பெயர் பாலினேசிய சமோவா மக்களிடையே இருக்கிறது. அவர்களை மடை (matai ) என்றும் அழைப்பார்கள் என்று 118 ஆவது கட்டுரையில் கண்டோம். அந்தச் சொல் மாதா என்பதன் திரிபாகவும் இருக்கலாம். மாதா, மடா, மடை என்று திரிந்திருக்கலாம். முற்கால சூழ்நிலையில், ஆண்கள் உணவு தேட வெளியில் சென்றிருக்கும் போது, வீட்டில் இருக்கும் பெண்கள் காட்டு விலங்குகளிடமிருந்து தங்கள் குழந்தைகளைக் காப்பாற்றும் வீர, தீரச் செயல்கள் நிறைய நடந்திருக்கும், தமிழ் வழக்கிலும், சங்க காலப் பெண்கள் புலியை முறத்தால் அடித்து விரட்டினர் என்று சொல்லப்படுகிறது. இந்த தீரச் செயல்களை தாய் அல்லது ஆய் செய்ததால், அந்த ஆய் என்பதன் ஆதிச் சொல்லான என்னும் பெயர் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களை அழைக்கும் பெயராக ஆகியிருக்கும்.


இப்படிப்பட்ட சூழ்நிலை, ஆடு, மாடு மேய்க்கும் ஆயர் மக்களிடையே தான் உருவாகி இருக்கும். ஏனெனில் அவர்கள் வீடுகளில் கட்டப்பட்டிருக்கும் ஆடு, கன்றுக் குட்டிகளைக் குறி வைத்துக் காட்டு விலங்குகள் அடிக்கடி தொந்திரவு கொடுத்

திருக்க்கூடிய வாய்ப்புகள் அதிகம்.


அது மட்டுமல்ல, ஐயன் என்னும் சொல் ஆயர் மக்களிடையே வழங்கி வந்திருக்கிறது என்பதை முல்லைக் கலியில் காணலாம். கலித்தொகை 107 இல் தமையன் (தன் ஐயன்), அண்ணன் என்ற பொருளில் வருவதைக் காணலாம். ஐ என்னும் பெயர் பெண்பால் பெயராக மாடு மேய்க்கும் ஆயர் மக்களிடையேதான் இருந்திருக்கிறது.  சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை ஆடும் மாதரியின் மகள் பெயரும் ஐயை ஆகும்.  இதனால் ஆதியில் ஐ, ஐயர், ஐயா ,ஐயன் ஆகிய பெயர்கள் ஆடு, மாடு, எருமை போன்றவற்றை வளர்த்தவர்களிடத்தில் புழங்கி வந்திருக்கிறது என்று தெரிகிறது. நாளடைவில் ஐ என்னும் சொல்லே ஐயா, ஐயன், ஐயர் என்றானது. சிலப்பதிகாரத்தில் தந்தை, மூத்தோர், உயர்ந்தோர்  என்ற பொருளில் ஐயர் என்ற சொல் வருவதைக் காணலாம்.  


இந்தக் கட்டுரைக்குத் தேவையான விவரம் என்னவென்றால், ஆண்டிஸ் மலைப் பகுதியில் டிடிகாகாவில் நுழைந்த ஐயர்மார் அல்லது ஐமார் ன்னும் மக்கள் ஆயர் தொழிலில் ஈடுபட்ட மக்களாகவும், அங்கு வருவதற்கு முன் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்களாகவும் இருந்திருக்க வேண்டும் என்பதே.  

டிடிகாகா ஏரிக்கருகே குகைப் பாதையில் முதன் முதலில் வந்தவர்கள் நான்கு ஐயர்மார்களே. அவர்கள் வந்தபோது அங்கு ஏற்கெனெவே மக்கள் இருந்திருக்கின்றனர். அவர்களை விரட்டி விட்டே அங்கு ஐமாரா மக்கள் குடியமர்ந்திருக்கின்றனர். அப்படி விரட்டி அடித்த ஐமாரா, ஒரு பெண்ணாவாள். குகை வழியாக டிடிகாகா பகுதிக்கு வந்த பெண்ணான மாமா ஹுவாகோ (MAMA HUACO)  என்பவள் (http://www.sourcememory.net/veleda/?p=48) தங்களை எதிர்த்தவர்களை அடித்துத் துரத்தியிருக்கிறாள். நாம் கிட்டிப்புள் என்கிறோமே அப்படிப்பட்ட ஒரு கருவியால்தான் கல்லால் அடித்து விரட்டியிருக்கிறாள். கையில் கிடைத்தவர்களது நெஞ்சைப் பிளந்திருக்கிறாள். இவையெல்லாம் தமிழ் மரபில் ஐயையின் செயல்களே.


மேலே தொடர்வதற்கு முன்னால் இங்கு இன்னொரு விவரத்தையும் சொல்ல வேண்டும். ஐ என்பதும் ஐலா என்பதும், வேத மரபில் சமஸ்க்ருதத்திலும் வரும் சொற்கள்.  முன்பே 52 ஆவது கட்டுரையிலும், 61 ஆவது கட்டுரையிலும், ஐலன், ஐலா, இளா போன்ற பெயர்கள் பாரத மரபில், மனுவின் வழியில் வழங்கி வந்தன என்று கண்டோம். வைவஸ்வத மனுவின் பெண்ணுக்கு இளா என்று பெயர். அவளுக்கும் புதனுக்கும்  பிறந்தவன் புரூரவஸ்.



புதனும், இளாவும்.


(இந்த புதன், சந்திரனுக்கும், பிருஹஸ்பதியின் மனைவி தாராவுக்கும் பிறந்தவன் என்று விஷ்ணு புராணம் போன்ற நூல்கள் தெரிவிக்கின்றன. இவற்றையெல்லாம் கட்டுக்கதை என்று சொல்ல முடியாதபடி, புதனும், தாராவும் ஐயர்லாந்து ட்ரூயிட் கதைகளில் இருக்கிறது. அவற்றைத் தக்க இடத்தில் பார்ப்போம்)


புரூரவஸ் வழியில் வந்தவர்கள் தான் ஆரியதஸ்யு போராட்டத்தில் வரும் பஞ்ச மானவர்கள். ளாவுக்குப் பிறந்தவன் என்பதால் புரூரவஸுக்கு ஐலன் என்று பெயர். ளாவின் வழியில் பிறந்தவர்களுக்கு ஐலன் என்றே பெயர். இங்கும் '' வருகிறது என்பதைக் கவனத்தில் கொண்டு மேலே தொடர்வோம்.

ளா என்னும் பெயரில் ஒரு நதியே ஓடிற்று. சரஸ்வதி போன்ற நதிகளைப் பற்றிப் பேசும் போது, இளா நதியும் சேர்த்துச் சொல்லப்படுகிறது. அந்த நதியின் பெயரால் இளாவ்ருதம் என்னும் நிலப்பகுதியை இந்தியாவுக்கு வடக்குப் புறத்தில் சுட்டிக் காட்டியுள்ளனர். அந்த விவரங்களை 52 ஆவது கட்டுரையில் கண்டோம்.



படத்தில் இளா நதி. இந்த நதி ஓடும் பகுதியை உள்கட்டப் படத்தில் இந்தியாவுக்கு வடக்குப் புறத்தில் கட்டத்தில் காட்டப்பட்டுள்ளது. இதையே இளாவ்ருதம் என்று சொல்லியிருக்க வேண்டும். சரஸ்வதி, ளா, பாரதி என்னும் நதிகளை ஒருங்காக ரிக் வேதம் போற்றுகிறது. இதனால் வேதம் புழங்கிய இடங்கள் இன்றைய பாரதத்தில் மட்டுமல்லாமல் பாரதத்துக்கும் வடக்கே, சைபீரியாவின் தென் பகுதி வரை பரவியிருந்தது என்று தெரிகிறது.

மேலே காட்டப்பட்டுள்ள இளா நதிப் பகுதிக்கு வட கிழக்கில் வைகாஸன ஏரி எனப்படும் பைகால் ஏரி இருக்கிறது. அந்த விவரங்களை 35 ஆவது கட்டுரையில் திருப்பிப் பார்க்கவும். பாரதப் புராணங்களிலிருந்து கிடைக்கும் இந்த விவரங்களைக் கொண்டு கீழ்க்காணும் அமைப்பைச் சுட்டிக் காட்டலாம்.


இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள இடங்கள் இந்தியாவுக்கு வடக்கில் இருப்பவை. இந்தப் படத்தின் கீழ்ப் பகுதியில் திபெத் என்ற அம்புக் குறியை வட்டத்துக்குள் காட்டியுள்ளோம். அதைக் கொண்டு இந்தியாவின் இருப்பிடத்தை ஊகித்துக் கொள்ளவும்.


இந்தப் படத்தின் நடுவில் ஆல்டாய் மலைத் தொடர் வட்டத்துக்குள் காட்டப்பட்டுள்ளது. அங்குதான் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த டெனிசோவன் மனிதனின் மரபணு அடையாளம் கிடைத்துள்ளது என்று 113 ஆவது கட்டுரையில் கூறினோம். அவன் ஆஸ்திரேலியபாலினேசிய மரபணுவுடன் தொடர்பு கொண்டவன் என்றும் கூறினது நினைவில் இருக்கட்டும். மக்கள் இனம் தெற்கிலிருந்து வடக்குக்குச் சென்றபோது இந்த இட்த்தில் 40,000 ஆண்டுகளுக்கு முன் சஞ்சரித்திருக்கிறது. இதை ஒரு படமாக 113 ஆவது கட்டுரையில் காட்டியது நினைவில் இருக்கட்டும். அந்தப் படம் கீழே:-



இந்தப் படத்தில் 1 – 2 என்று காட்டியுள்ள வழித்தடம் தெற்கு- வடக்கு என்று மாறி மாறி மக்கள் சென்ற வழித்தடம். இந்த்த் தடத்தில் வடக்கில் இன்னும் சற்று இடப்புறமாகச் சென்றால், ஆல்டாய் மலைப் பகுதிக்குச் செல்லும்.


அதற்கு இன்னும் மேற்கில் (இடப்புறமாகச் சென்றால் இளா நதிப் பகுதி. கீழுள்ள படத்தில, இளா நதிக்குச் செல்லும் வழியை பாரதம் வழியாகவும் காட்டியுள்ளோம்.



இந்தப் படத்தில் எண் 2 காட்டும் சுந்தாலாந்து பகுதியிலிருந்து மஞ்சள் நிற அம்புக் குறி இந்தியாவுக்கு வடக்கே செல்கிறது. அங்குதான் ஆல்டாய் மலைத் தொடர் இருக்கிறது. அதற்கு வட கிழக்கில் இருக்கும் பைகால் ஏரியை மஞ்சள் நிற வட்டத்தில் காணலாம். அதற்குத் தென் மேற்கில் காட்டப்பட்டுள்ள மஞ்சள் நிற வட்டம் இளா நதி வந்து சேரும் பகுதியைக் காட்டுகிறது. அது இருக்கும் இளாவ்ருதத்துக்கு பாரதத்தில் இருந்தவர்கள்  வட மேற்கு வழியாக இமய மலையின் மேற்குப் புறத்தைக் கடந்து செல்ல முடியும். இந்த வழியே அடிக்கடி சென்ற வழியாக இருந்தது.


மீண்டும் முந்தின படத்துக்கு வருவோம்.  மேலே சொன்னவற்றை நுணுக்கமாகப் பார்ப்போம்.



இதில் நடுவிலுள்ள வட்டத்தில் ஆல்டாய் மலை.

அதற்குத் தென் மேற்கில் கட்டத்துக்குள் இருப்பது இளா நதிப் பகுதி (ளாவ்ருதம்). அதற்கு வட கிழக்கில் மேலே இருக்கும் கட்டத்தில் வைகானஸ ஏரி எனப்படும் பைகால் ஏரி. இந்த மூன்று பகுதிகளிலும் (ளா, ஆல்டாய், வைகானச ஏரி) வேத மதம் தழைத்திருக்கிறது. இங்கெல்லாம் ரிஷிகள் சென்றிருக்கிறனர். குறிப்பாக இளாவ்ருதத்தில் மனுவின் மகளான இளாவின் வம்சாவளியினர் ஐலர்கள் இருந்திருக்கின்றனர்.


ளா அல்லது ஐலர்கள் சென்ற வழி காஷ்மீர், வட மேற்கு இந்தியா, இமய மலையைச் சுற்றிக் கொண்டு இளா நதியை அடைதல் என்று சென்றிருக்கிறது. (இளாவின் பெயரால் அந்தப் பெயர் நதிக்கு ஏற்பட்டிருக்கிறது). இந்தப் பகுதியில் இருக்கும் அமுதார்யா நதியே சக்ஷுஸ் என்று வேத மரபில் சொல்லப்படுவது. மேலே காட்டப்பட்ட இடங்களிலிருந்துதான், ஐரோப்பாவுக்கு மக்கள் பெயர்வு நடந்திருக்கிறது. வேத மரபில் ஏற்றுக் கொள்ளப்படாத மிலேச்சர்கள் சக்ஷுஸ் நதிக்கு அப்பாற்பட்டு வாழ்ந்தனர். யயாதியின் மகன்கள் காலத்தில் சிந்து நதிக்கு அப்பால் இருக்கும் இடங்களே மிலேச்ச இடங்களாயின. மஹாபாரதக் காலத்தில் சிந்து நதிப் பகுதியில் மிலேச்சர்கள் இருந்தனர். (இந்த விவரம் மஹாபாரத்தில் காணப்படுகிறது) ஆனால் மஹாபாரதப் போரில் அந்த இடங்களில் இருந்தவர்களை வென்றும், விரட்டி விட்டும், புதுக் குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டன. அவற்றின் அடையாளங்களையே இன்று நாம் சிந்து சமவெளி நாகரிகம் என்று அழைக்கிறோம்.


இந்த விவரங்களை இங்கு சொல்வதற்குக் காரணம், ளா என்னும் பெண்ணின் வம்சாவளி சென்றடைந்த இடம் எது என்பதைக் காட்டவே.

ளா என்பவளைப் பசுக் கூட்டங்களுக்குத் தலைவியாக ரிக் வேதம் கூறுகிறது. (ரிக் வேதம் 5-41)


இளா என்னும் சொல்லையும், இடா என்னும் சொல்லையும் ஒன்றுக்கொன்று மாற்றியும் வேதங்கள் கூறுகின்றன. மனுவின் பெண் இளாவை வேறு இடங்களில் இடா என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த இடா என்னும் பெயர், பசுக் கூட்டங்களுடன் இணைத்துச் சொல்லப்பட்டுள்ளது. பசுக் கூட்டங்களைப் பெற விரும்புகிறவன், இடாவைத் துதிக்க வேண்டும் என்றும் யஜூர் வேதம் சொல்கிறது. (யஜூர் வேதம் 1-7)


இதே இளாவின் வம்சத்தில் வந்தவன் ஐலன் எனப்படுவான். 'இ' என்பது 'ஐ' ஆக மாறுகிறது. இந்த மாற்றம் சமஸ்க்ருத மொழியில் அமைவது. உதாரணமாக இந்திரன் என்கிறோம். இந்திரனிடமிருந்து கிடைத்தை ஐந்திரம் என்று சொல்ல வேண்டும், இந்திரம் என்று சொல்லக்கூடாது. இது சமஸ்க்ருத மொழியியலில் வருவது.


இதனால் இலா, இளா, ஐலா, ஐலன் ஆகிய சொற்கள் ஒரே கருத்தைச் சுற்றி எழுந்தவை என்று தெரிகிறது. இதையெல்லாம் சொல்வதற்குக் காரணம், இளா என்னும் சொல் தமிழ்ச் சொல்லாக இருக்கிறது. சமஸ்க்ருத்த்தில் லகர ளகர வேறுபாடு இல்லை. ஆனால் தமிழில் வேறுபாடு உண்டு. இளா, இளை என்பது தமிழிலும் வழங்கப்படும் சொல். இளையவள், இளமை என்னும் பொருளில் வருவது. இங்கு '' என்பது ளகரத்துக்கு முன்னால் சேர்க்கப்படும் எழுத்தல்ல. அந்தச் சொல்லே இளா, இளமை என்பதாகும்.


இந்தச் சொல் சித்தன்ன வாசலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பிராம்மி கல்வெட்டில் காணப்படுகிறது. அதில் 'இளயர்' செய்த தானத்தைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. யார் இந்த இளயர் என்றால் 'எருமி நாடு குமிழ் ஊர்' (எருமை நாடு குமிழூர்) என்னும் இடத்தைச் சேர்ந்தவர். எருமை நாடு என்பது ஐயை எனப்பட்ட மஹிஷாசுமர்த்தினியால் கொல்லப்பட்ட எருமை என்னும் மஹிஷனால் ஏற்பட்ட பெயர். அது இன்றைய மைசூர் (மஹிஷூர்) என்னும் கருத்து இருக்கிறது. அந்த இடத்தைச் சேர்ந்தவர், இளயர் என்பது நமது ஆராய்ச்சி ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கிறது. இளாவின்  வழித்தோன்றல்கள் இளையர் அல்லது இளயர் என்று அழைக்கப்பட்டார்களா?


ளா என்று வடக்கில் இருக்கும் பெயர், இளை என்று தமிழிலும் இருப்பது சிந்தனைக்குரியதாக இருக்கிறது. இந்த இளயர் என்பவர் (அல்லது மக்கள் கூட்டம்) ஐலன் என்பவர்களைப் போலவே மனுவின் மகளான இளாவின் வழி வந்தவர்களா? மனுவின் கூட்டத்தினரே தென் கடலிலிருந்து துவாரகை வழியாக வட இந்தியாவுக்குச் சென்றனர் என்பதே நாம் கண்ட கருத்து. எனவே தென் கடல் தொடங்கி, வட இந்தியா, அதற்கும் அப்பால் என்று இந்த இளா என்னும் பெயர் இருந்திருக்க வேண்டும்.


இளா, இடா (இடபம் / ரிஷபம்?) என்னும் பெயர்கள் எல்லாம் வேதத்தில் பசுவுடன் தொடர்பு படுத்திச் சொல்லவே ஆயர்களை ஆரம்பத்தில் இளையர் என்றும் இளை என்றும் அழைத்தார்களா?


அந்த 'இ'கரம் ஐகாரமாக மாறும் போது, ஐ, ஐயை, ஐயா, ஐய்மார் என்றானதா?


வடமொழியின் ளகரமே, பேச்சு மொழியான தமிழிலிருந்த ளகரத்தை எடுத்துக் கொண்டதா? மாடு மேய்க்கும் (ஆயர்) மக்கள் சாதாரண மக்களாக, பேச்சு மொழியாகத் தமிழைப் பேசிய மக்கள் ஆவார். அவர்களில் இளா, இளை போன்ற பெயர்கள் அதிகமாக இருந்திருக்கவேதான், வேதங்களும் அந்தப் பெயரையே பசுக்களைக் காப்பாற்றும் இளாவாக வரித்தனவோ? இல்லையெனில் லகரத்துக்கு மட்டுமே எழுத்தைக் கொண்ட  சமஸ்க்ருதத்தில் ளகரம் கொண்ட இளா எப்படி நுழைந்தாள்?


ள, ற, ழ என்னும் மூன்று எழுத்துக்களும் தமிழில் மட்டுமே இருக்கின்றன. இவற்றை உச்சரிக்கும் வழியிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. ளகரம், ழகரம் ஆகியவற்றை உச்சரிக்க, மெல்லிய நாக்கு உடையவர்களால் மட்டுமே முடியும். நாக்கை நன்றாக உருட்டி இவற்றை உச்சரிக்க வேண்டும். இவற்றைக் கொண்ட பேச்சைப் பேசின மக்களிடையேதான் இளா என்னும் அழுத்தம் திருத்தமான பெயர் உண்டாகியிருக்க முடியும். அது போல வள்ளி என்னும் பெயரும் இருக்கிறது. அதை வல்லி என்றே சமஸ்க்ருதத்தில் கூறி விடுகிறார்கள். கல்லன், மல்லன் என்னும் சமஸ்க்ருதச் சொற்கள் எல்லாம் தமிழில் அழுத்தமாகக் கள்ளன், மள்ளன் என்றே ஆகியிருக்கிறது. ஆனால் இளாவை, இலா என்னாமல், அதற்கான எழுத்து இல்லாமலேயே, அதே உச்சரிப்பில் இளா என்று சமஸ்க்ருதம் ஏன் ஏற்றுக் கொண்டது?


அந்தப் பெயர் கொண்டவள் அல்லது அந்தப் பெயருடன் சேர்ந்த கருத்து, பொருள், தத்துவம் என்று ஏதோ ஒன்று முக்கியத்துவம் வாய்ந்தாக இருந்திருந்தால் மட்டுமே இப்படி ஏற்றுக் கொண்டிருக்க முடியும்.


சித்தன்ன வாசல் பிராமி கல்வெட்டில், மஹிஷனுடன் தொடர்பு கொண்ட எருமையூரைச் சேர்ந்இளயன் என்பவரைப் பற்றிச் சொல்வதாலும், அந்த இளயன் ஐயையுடன் (மஹிஷாசுர மர்தினி) தொடர்பு கொண்ட ஊரைச் சேர்ந்தவன் என்பதாலும், அவன் இளா வம்சத்தைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என்ற எண்ணம் எழுகிறது.


இளா என்னும் பெயர் மனுவுக்கும் முன்னால், ஆதி மனித வர்கம் தொடங்கினபோதே வந்து விடுகிறது. பெண் வழி மரபணுவாக திதி, தானு என்று நாம் 107 ஆவது கட்டுரையில் சொன்னோம். தக்ஷப்ரஜாபதியின் 13 மகள்களில் திதி, அதிதி, தானு என்னும் பெயர்கள் சொல்லப்பட்டுள்ளன. அவர்களுள் ஒருத்தி இடா என்னும் இளா! .இதனால் அவளும் ஒரு தனி மரபணு வர்கம் என்றாகிறது. இந்த வர்கங்கள் உலகின் தென்பகுதியில்தான் தோன்றின. இந்த இடாவே ஐ என்றும் ஐயை என்றும் ஆகி இருக்க வேண்டும் என்பதை, அந்தச் சொற்கள் குறித்த பல விவரங்களாக நாம் மேலே ஆராய்ந்தோம். அந்த வழியில் வந்த பெண்ணே மனுவின் மகளான இளாவாகவும் இருக்க வேண்டும்.


அந்த ஐ வழித் தோன்றல்கள் ஆண்களைப் போல உடல் பலம் கொண்டவர்களாகவும், வீரம் மிகுந்தவர்களாகவும் இருந்திருக்கின்றனர். அதாவது அவர்களிடம் சற்று ஆண்மையும் இருந்திருக்கிறது.


முல்லைக் கலியில் ஆயர் பெண்களைப் பற்றி சொல்லப்படும் வர்ணனைகள் ப்பெண்கள் உரமேறிய உடலைக் கொண்டவர்கள் என்று தெரிவிப்பதாக இருக்கிறது.  ஆயர் பெண் வளர்க்கும் காளையை அடக்குபவனே, அவளை அடக்குபவனாவான் என்று சொல்லியே ஏறு தழுவுதல் செய்து, காளையை அடக்கினவனைக் கணவனாக முடிவு செய்தனர்.


ளா பெண்களுக்குச் சற்று ஆண்மை இருப்பது உண்மையே என்று சொல்லும் வண்ணம் மனுவின் மகள் இளாவின் கதையும் இருக்கிறது. பெண்ணாகப் பிறந்த அவள் ரு சமயம் ஆணாக மாறி விடுகிறாள். சுத்யும்னன் என்னும் ஆணாக ஆகி, அந்த நிலையில், குழந்தை பெற்றுத் தந்தை ஆனாள். ளா என்னும் பெண்ணாக இருக்கும்போதும், புரூரவஸைப் பெற்று தாயானாள் அவள். இந்த விவரங்களை எல்லாம் ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது, தென் கடலில் தமிழ்ப் பததியில் நாம் காணும் ஐ, ஐயை என்பவளே இளா என்னும் மரபணு இனத்தவளாக, மனு வாயிலாக, வட இந்தியாவிலும் உருவாகி, அங்கிருந்து அவள் வம்சாவளியினர் இளாவ்ருதம் வரை பரவியிருக்கின்றனர் என்று தெரிகிறது.


தமிழ் மரபைப் பொறுத்தவரை இளை, இளம் என்னும் பெயர்கள் சங்க காலத்தில் அதிகப் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. அவை இளை வம்சாவளியை ஒட்டி எழுந்தனவோ என்பதைத் தனி ஆராய்ச்சியாகவே செய்ய வேண்டும். இந்தத் தொடரில் நாம் சொன்ன பெயர்களில் தொண்டை மண்டலத்தை நிறுவின ஆதொண்டையை ஒரு உதாரணமாகச் சொல்லலாம். (49 ஆவது கட்டுரை).


அவனுக்கு இளந்திரையன் என்று பெயர். அவன் தண்ணீரில் விடப்பட்டு, கரையேறினவன். திரை தருதலால் திரையன் எனப்பட்டான் என்று நச்சினார்க்கினியர் கூறுவார். திரையன் என்ற பெயர்க் காரணம் சரியே, ஆனால் அவன் ஏன் இளந்திரையன் எனப்பட்டான்? இளாவின் மகனாதலால் அவன் இளந்திரையன் எனப்பட்டானா? அவன் தாய் யாரென்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவள் 'நாக லோகத்தில் இருந்தவள் என்பது மட்டுமே தெரியும். நாகப்பட்டினத்தில் ஒரு குகைத் துவாரத்தில் அவளைக் கண்டு மோகித்த சோழனுக்குப் பிறந்தவனே இந்த இளந்திரையன். நாக லோகம் என்றால் என்ன என்று பல முறை சொல்லி விட்டோம். தென்னிந்தியக் கடலில் கடலுக்குக் கீழே செல்லும் குகைப் பாதைகள், இருப்பிடங்கள் இருந்திருக்கின்றன. அங்கிருந்த ஐலா அல்லது இலா / இளா இனப் பெண்ணுக்குப் பிறந்ததால் இவன் இளந்திரையன் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.


இவ்வாறாகப் பலவிதமாக ஐ, ஐலா, இளா என்னும் பெயர்கள் ஒருங்கிணைந்து உள்ளதைக் காணலாம். இவை எல்லாம் மாடு மேய்க்கும் ஆயர் மக்களுடனும், அத்துடன் வீரமும், தலைமைப் பண்பும் கொண்ட பெண்களுடனும் தொடர்பு கொண்டிருப்பதையும் காணலாம். அவர்களது ஆதி இடம் தென் கடலில் இருப்பதையும், அங்கிருந்து ஒரு தடம், தென்னிந்தியாவிலும், அரபிக் கடல் வழியாக வட இந்தியாவிலும் புகுந்து, அங்கிருந்து ரஷ்யாவுக்குத் தென்பகுதி வரை (ளாவ்ருதம் வரை) சென்றிருக்கிறது. அதற்குப் பிறகு, மேற்காசியா, ஐரோப்பா முழுவதும் அந்த மரபணு சிதறியிருக்கிறது. ஐரோப்பா என்னும் பெயரிலும் ஐ இருப்பது ஆராயத் தக்கது


ஆச்சரியத்தைத் தரும் வகையில், ஐரோப்பா என்னும் பெயர்க் காரணமே யூரோப்பா என்னும் பெண் தான். இவள் தனது காளையுடன் இருப்பதைப் போல ஒரு சித்திரம் பொ.மு 480 ஆவது வருடத்துக் கிரேக்கக் குடுவையில் காணப்படுகிறது.



http://en.wikipedia.org/wiki/Europe#Etymology


அதிலும் அந்தக் காளையின் கொம்பைப் பிடித்து அடக்குவது போல இருப்பது, தனக்கென ஒரு காளையை வளர்க்கும் ஆயர் பெண்ணை ஒத்திருக்கிறது. ஆயர் மரபில் ஐ, ஐயை என்னும் பெயர்கள், பெண்களுக்கான பெயர்கள். இந்தப் பெண்ணும் ஐ என்பவளோ? அல்லது இளாவின் வம்சத்தில் வந்த ஐலாவோ? ஏனெனில் இன்றும் ஐரோப்பாவில் பல இடங்களில் ஐலா என்னும் பெயர் பெண்களுக்கு இருக்கிறது. ஐரோப்பா என்பதே ஐ-ரூபா, ஐ-ரூபம் (ஐயையின் உருவம்) என்பதாக இருக்கலாம்.


இந்த ஐ அல்லது இளை, தென்னிந்தியக் கடலில்தான் முதன் முதலில் இருந்தாள் என்று சொல்லும் வண்ணம் தக்ஷப் பிரஜாபதியின் மகளாகச் சொல்லப்படுவதும் ஒரு ஆதாரம். இன்கா கலாசாரத்தை ஆரம்பித்து வைத்தவர்களுக்கும் ஐய்மாரா, ஐயர்மார், ஆயர்மார் என்னும் பெயர்கள் இருந்த்தும் மற்றொரு ஆதாரம்.


இந்த ஐய்மாரா மக்கள் பேசும் மொழியை ஆராய்த ஒருவர் சொல்லும் ஒரு விவரமும், தமிழ் மொழிக்கும், அந்த மக்களுக்கும் ஆதியில் தொடர்பிருந்தது என்று சொல்லும் ஆதாரமாக இருக்கிறது. அந்த ஆராய்ச்சியில் ஐய்மாரா மொழியின் வித்தியாசமான லாஜிக் என்று ஒரு கருத்து சொல்லப்படுகிறது. அது என்னவென்றால், நமக்கு முன்னால், நமக்குப் பின்னால் என்று சொல்லப்படும் சொற்களை, கடந்த காலம், எதிர்காலம் என்று சொல்லும் இடங்களில் மாறுபாட்டாகச் சொல்கிறார்கள் அந்த மக்கள் என்பதே. அதாவது இனி வரப்போவதை, பின்னால் என்றும், நடந்து முடிந்ததை முன்னால் என்றும் சொல்கிறார்கள். இது அச்சு அசலாகத் தமிழ் மொழியில் பின்பற்றப்படும் கருத்தாகும்.


கடந்த காலத்தில் நடந்ததை, முன்பு அல்லது முன்னால் நடந்தது என்கிறோம். இந்த முன்னாலுக்கு நம் முன் இருப்பது (Front) என்று அர்த்தமல்ல. அது போல இனி வரப்போகும் காலத்தைப் பின்னால் வருவது என்று பின் புறம் (Back) என்னும் சொல்லில் கூறுகிறோம். இந்த வழக்கு ஐய்மாராவில் மட்டும் காணப்படுவதாகும் என்றும், உலகின் வேறு எந்த மொழியிலும் காணப்படவில்லை என்றும் அந்த ஆராய்ச்சி கூறுகிறது. (இந்த இணைப்பில் காணவும்: - http://phys.org/news69338070.html ) இந்த ஆராய்ச்சி சொல்லும் முடிவு தவறு. தமிழ் மொழியில் இப்படித்தான் சொல்கிறோம். இதுவும், இன்கா மக்களுக்கும், தென்கடலில் இருந்த தென்னன் தேசத் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகிறது. 


தென் கடலில் இருந்த ஒரு பகுதி மக்கள், ஐ, ய்மாரா, ஐயர்மாரா என்ற பெயரில் பசிஃபிக் கடலைத் தாண்டி ஆண்டிஸ் மலையை அடைந்திருக்கின்றனர். முன்பே ஏற்பட்டு விட்ட கருத்துக்களையும் வழக்கங்களையும ஐய்மாரா  எடுத்துச் சென்றுள்ளர் என்றே அவர்கள் கதைகள் கூறுவதால், இந்த மக்கள் தென்னிந்தியக் கடலில் ஆங்காங்கே இருந்த தமிழ் பேசிய மக்களாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.