ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

ராமன் பரம்பரையில் வந்தவர்கள் சோழர்கள்- இலக்கியச் சான்றுகள் (பகுதி-2) (காணொளி)


சோழர்கள் ராமன் பரம்பரையில் வந்தவர்கள் என்று சொல்லும் இலக்கியச் சான்றுகளைக் காட்டும் இந்தக் காணொளி, அந்தச்  சான்றுகள் தசரதன் பெயர்க் காரணம், முதுமக்கள் சாடியை முதலில் அறிமுகப்படுத்தியவன் நாபாகன் என்னும் இக்ஷ்வாகு அரசன்தான் என்பது போன்ற செய்திகளையும் தருகிறது.ராமனைக் குறிக்கும் இலக்கியச் சான்றுகள் அவனைத் தூங்கெயில் இருந்தவன் என்றே கூறுகிறது. இதற்கு, தொங்கும் மதிலை அழித்தவன் என்று பொருள். புறநானூறு முதல் உலா இலக்கியங்கள் வரை சொல்லப்படும் இந்தக் கருத்து, மூன்று மதில்களை உடைய ராவணன் நகரத்தைக் குறிக்கிறது என்ற செய்தியை ஆதாரத்துடன் விளக்குகிறது இந்தக் காணொளி

மேலும் திரேதா யுகத்தில் பிறந்த ராமன் எவ்வாறு சோழர் பரம்பரையினன் ஆனான் என்பதையும், துஷ்யந்தன் மகன் பரதனுக்குப் பிறந்த முதல் சோழன் எவ்வாறு ராமன் பரம்பரையுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டான் என்பதையும் விவரிக்கிறது.

அந்த விவரங்கள் மூலம் தமிழகம் உட்பட நம் பாரத தேசமே தந்தை வழியில் ஒன்று பட்ட மக்களைக் கொண்டது என்பதையும் விளக்குகிறது.