செவ்வாய், 12 ஜூலை, 2011

61. தமிழ்ப் பார்ப்பனர்.



பாலை நிலத்துக்குரிய வாகைத்திணையில்
அறு வகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐ வகை மரபின் அரசர் பக்கமும்
இரு மூன்று மரபின் ஏனோர் பக்கமும்
மறு இல் செய்தி மூ வகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்
நால் இரு வழக்கின் தாபதப் பக்கமும்
பால் அறி மரபின் பொருநர் கண்ணும்
அனை நிலை வகையொடு ஆங்கு எழு வகையான்
தொகை நிலை பெற்றது என்மனார் புலவர்

என்கிறார் தொல்காப்பியர். (புறத்திணை இயல் 74) 


இதில் அறுவகைப்பட்டப் பார்ப்பனப் பக்கமும்என்று சொன்னதைக் கொண்டு
பார்ப்பனர்கள் உள்ளிட்ட வர்ணங்களை
மனுவாதிகள்தான் தமிழ் மண்ணில் புகுத்தி விட்டனர்
என்று பலரும் நினைக்கிறார்கள்.
அவர்கள் அப்படி நினைக்க முக்கியக் காரணம்,
மனுவாதி வர்ணத்தில் பார்ப்பனர் உள்ளிட்ட நான்கு வர்ணங்கள் ஒவ்வொன்றுக்கும்
ஆறு தொழில்கள் சொல்லப்பட்டுள்ளன.
அதே விதமான ஆறு தொழில்களையும்
தொல்காப்பியம் சொல்கிறது.
ஆனால் இந்த்த் தொல்காப்பியச் சூத்திரத்தில் உள்ள
ஒரு மாறுபாட்டைப் பலரும் கவனித்ததில்லை.
எல்லோருக்குமே அறு வகைதான் என்றால்,
அந்தச் சூத்திரத்தின் இரண்டாவது வரியில்
ஐவகைமரபின் அரசர் பக்கம்
என்று அரசர்களுக்கு ஐந்து வகைகளை மட்டுமே தொல்காப்பியம் சொல்கிறதே,
அது எப்படி?
அரசர்களுக்கு ஐந்து வகை என்றால்,
இந்த வர்ணப்பகுப்பை மனுவாதிகள்தான் திணித்தார்கள்
என்று எப்படிச் சொல்ல முடியும்?


தொல்காப்பியம் கூறுவது மனுவாதி வர்ணம்தான்
என்று எண்ணும் எத்த்னை பேர்
இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பார்கள்?
கேட்டிருந்தால், இந்த வர்ணப்பகுப்பு, தமிழ் மக்களுக்கிடையே,
தமிழ் மக்களுக்காக எற்படுத்தப்பட்டது என்பதை அறிந்திருப்பார்கள்.
ஐவகை என்று அரசர்களுக்குச் சொல்லவே,
அது க்ஷத்திரியர்களுக்கான ஆறு தொழில்களைப் பற்றியது அல்ல என்று தெரிகிறது.
அது போலவே அறு வகை என்று பார்ப்பனர்களுக்குச் சொன்னது
ஏதோ ஆறு வகைகளைப் பற்றியது என்றும் தெரிகிறது.

இந்தச் சூத்திரத்துக்கு உரை எழுதியுள்ள நச்சினார்க்கினியார்,
ஆறு பார்ப்பியல் என்று சொல்லாமல், ஆறு வகை என்று
தொல்காப்பியர் சொல்லியுள்ளதைச் சுட்டிக் காட்டுகிறார்.
அந்த வகைகள் என்னவென்றும் அவர் விளக்குகிறார்.
அவை மனுவாதி வர்ணாஸ்ரமத்தில் இல்லை.
அவரது உரையிலிருந்துஇந்த வர்ணப்பகுப்பு என்பது
தமிழர்களது வாழ்க்கை முறையை ஒட்டி எழுந்த்து என்பது தெளிவாகிறது.  


அவர் சொல்லும் விவரத்தை அறியும் முன் பார்ப்பனன் என்கிறாரே,
பார்ப்பனன் என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று பார்ப்போம்.
பார்ப்பனர்களைக் குறிக்கும் வேறு சொற்களும் இருக்கின்றன.
அவற்றின் அர்த்தத்தையும் பார்ப்போம்.

சூடாமணி நிகண்டு தரும் விவரத்தின்படி,
பார்ப்பார் = வேதங்களைப் பார்ப்பவர்.
மறையவர் = மறை நூல் ஓதுதல் உடையவர்.
வேதியர் = வேதம் ஓதுதல் உடையவர்.
அந்தணர் = அழகிய தண்ணளி உடையவர்.
(வேதாந்தத்தை அணவியவர் என்பது நச்சினார்க்கினியர் தரும் விளக்கம்)

இந்தப் பார்ப்பனர்களுக்கான தொழில்கள் ஆறு.
அவை
ஓதல், (கற்றல்)
ஓதுவித்தல், (கற்பித்தல்)
வேட்டல் (வேள்விகள் செய்தல்)
வேட்பித்தல் (வேள்விகள் செய்து வைத்தல்)
ஈதல் (தானம் கொடுத்தல்)
ஏற்றல் (தானம் பெற்றுக் கொள்ளுதல்)

இந்த ஆறு தொழில்களில்ஓதல்ஓதுவித்தல்என்று சொல்லப்பட்டுள்ளதே,
எதை ஓதினார்கள், எதை ஓதுவித்தார்கள்
என்று பார்க்கும் போது அதில் ஆறு வகை வருகிறது.
அந்த ஆறு வகைகள்
தலை, இடை, கடை என்று மூன்றாகப் பிரியும்.
அவை சமஸ்க்ருத்த்தில் தலை, இடை, கடை எனவும்,
தமிழில் தலை, இடை, கடை எனவும் ஆகும்.
இந்த் ஆறு வகைகளைக் குறித்து நச்சினார்க்கினியர் தரும் விளக்கத்தைக் காண்போம்.

(1)  தலை என்பது இலக்கியமும், இலக்கணமும் ஆகும்.
சமஸ்க்ருத ஓதல், ஓதுவித்தலில், தலை என்பதுயஜூரும், சாமமும்ஆகும், வேள்வி முதலியவற்றை விதித்தலின் இலக்கணமுமாய், வியாகரணத்தான் ஆராயப்படுதலின் இலக்கியமும் ஆயின

(2)  இடை என்பதுஅதர்வமும், ஆறங்கமும் (ஆறு வேதாங்கங்கள்) தரும நூலும்ஆகும்.
(3)  கடை என்பது இதிகாசமும் (ராமாயணம், மஹாபாரதம்), புராணமும், வேதத்துக்கு மாறுபடுவாரை மறுக்கும் உழற்சி நூலும், அவரவர் அதற்கு மாறுபடக் கூறும் நூல்களும் ஆகும்.
இப்படி மூன்று வகையினர் சமஸ்க்ருத நூல் ஓதலில் ஈடுபடுபவர். ஒவ்வொரு வகையில் இருப்பவர்களும் ஓதல், ஓதுவித்தல், வேட்டல் உள்ளிட்ட ஆறு தொழில்களைச் செய்வர்.

தமிழ்ப் பார்ப்பனர்கள் சமஸ்க்ருதத்தை மட்டும், கற்றும், கற்பித்தும் வரவில்லை.
அவர்கள் தமிழையும் கற்றும், கற்பித்தும் வந்தனர்
அதிலும் முதல், இடை, கடை என்ற மூன்று வகைகள் இருந்தன.
தமிழ் ஓதல், ஓதுவித்தலில் தலை என்பது சமஸ்க்ருத்த்தில் சொல்லப்பட்டது போல இலக்கண, இலக்கியங்கள் என்று நச்சினார்க்கினையார் சொல்லவில்லை
எழுத்து, சொல்லும் பொருளும் ஆராய்ந்து இம்மைப்பயன் தருதலின், அகத்தியம், தொல்காப்பியம் முதலிய தமிழ் நூல்களும் இடையாய ஓத்து ஆம் என்று உணர்க. இவையெல்லாம் இலக்கணம். ராமாயணமும், பாரதமும் போல்வன இலக்கியம்என்று தமிழ் இலக்கணப் படிப்பை இடை என்றும்,
சமஸ்க்ருதப் படிப்பில் கடையான ராமாயண, மஹாபாரத்த்தைத்
தமிழில் படிப்பது இடை என்று கூறுகிறார்.

(4)  தமிழ் ஓதுதலில் அவர் சொல்லும் தலை, தமிழ்ச் செய்யுட் கண்ணும் இறையனாரும், அகத்தியனாரும், மார்க்கண்டேயனாரும், வான்மீகனாரும், கவுதமனாரும் போலார் செய்தன தலைஎன்கிறார்
(5)  இடை என்பது, மேலே மேற்கோளிட்ட எழுத்து முதலானவையும், ராமாயண, மஹாபாரதம் படிப்பதும் ஆகும். இவை தவிர இடைச் சங்கத்தார் செய்தனவும் இடை ஓதல் என்கிறார் நச்சினார்க்கினியர்.
(6)  கடை என்பதுகடைச் சங்கத்தார் செய்தனஎன்றும் விவரிக்கிறார்

ஆக மொத்தம் ஆறு வகையான ஓதல், ஓதுவித்தல் செய்பவர்கள் பார்ப்பனர்கள்.
இந்த வகைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வகையில்
ஒருவருக்கு ஆர்வமும், திறமையும் இருக்கலாம்,
ஆனால், அவர் எதில் மிகுந்து காணப்படுகிறாறோ
அந்த வகையைச் சேர்ந்தவர் என்று கொள்ள வேண்டும் என்கிறார்

இவற்றிலிருந்து நாம் தெரிந்து கொள்வது வருமாறு:-

  • ·         எல்லாப் பார்ப்பனரும் சமஸ்க்ருதம் கற்கவில்லை, அல்லது கற்பிக்கவில்லை. அவரவர் பரம்பரையாகவோ அல்லது தங்கள் ஆர்வத்தினாலோ சமஸ்க்ருதம், அல்லது தமிழ் ஓதல் என்று கொண்டிருக்கிறார்கள்.

  • ·         ஒருவருக்கே இரண்டு மொழியும் தெரிந்திருக்கலாம், ஆனால் ஒன்றில் மட்டுமே ஓதுவிக்க்கூடிய பாண்டித்தியம் பெற்றிருக்கலாம். அதுபோல தலை, இடை, கடை என்ற வகைகள் ஒவ்வொன்றும் விரிவானவை என்பதால், ஒன்று அல்லது இரண்டில் பாண்டித்தியமும், பிறவற்றில் ஒரளவு தெரிந்தும் வைத்திருக்க முடியும்.
  • ·         சொல்லப்பட்ட ஆறு வகையுமே ஆன்மீகம், தர்மம் வாழும் முறைமை என்று நல்வழி புகட்டக்கூடிய கல்வியாகும். இவை பொருளாதார முன்னேறத்துக்கான கல்வி அல்ல.

  • ·         இந்தக் கல்வியைப் பயில்வதற்கு மற்றவர்களுக்கு வாய்ப்பு தராமல் பார்ப்பன்ன் தடுத்தான் என்று சொல்ல முடியாது. ஏனெனில் இந்தக் கல்வியை சொல்லிக் கொடுப்பதைத் தொழிலாகக் கொண்டவன் பார்ப்பனன் ஒருவன் தான். தன்னைத் தேடி சிறந்த மாணவன் வரமாட்டானா என்று காத்துக் கொண்டிருப்பான் இவன். அதனால் இவன் மற்ற வர்ணத்தவர்களுக்குப் போட்டியாக இருக்க முடியாது.


  • ·         மற்ற வர்ணத்தவருக்கு இந்தக் கல்வி கற்பித்தல் தொழிலாகச் சொல்லப்படவில்லை. அவர்கள் இவனிடமிருந்துதான் கற்றுக் கொண்டனர். பார்ப்பன வகைகளுக்குள்ளேயே ஒரு வகை, இன்னொரு வகையிடம் கற்றுக் கொண்டனர்.

  • ·         இந்த ஆறு வகைகளில் முதல் இரண்டு வகைகள் மட்டுமே வேதக் கல்வியாகும். மற்றவை வேதமொழிந்த கல்வி என்ப்பட்டது.

  • ·         வேதக் கல்வி என்பது பார்ப்பனர்களுக்குள்ளேயே தகுதி பார்த்து கொடுக்கப்பட்டது. க்ஷத்திரிய, வைசிய வர்ணத்தவரும் வேதம் கற்றுக் கொண்டனர். அவர்களுக்கும் தகுதி பார்த்துத்தான் சொல்லித்தரப்பட்டது. அதற்குக் காரணம், வேதம் பயில கடுமையான பயிற்சியும், நாவளமும் தேவை.

·         வேதம் பயில விரும்புவர்களுக்கு நாவளமும், ஞாபக சக்தியும், வேள்விகளைப் பற்றிய அறிவும், கடும் பயிற்சியைச் செய்யும் மனோதிடமும் வேண்டும்.  
பதிற்றுப்பத்தில் இவ்வாறு சொல்லப்படுகிறது:- 
அறங்கரைந்து வயங்கிய நாவிற் பிறங்கிய உரைசால் வேள்வி முடித்த கேள்வி அந்தணர் (பதிற் -64) அதாவது அந்தணர்களுக்கு நாக்கு வளம் இருக்கும்
 அவர்கள் கேள்வி அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.


·         நாவன்மை என்கிற போது, சுத்தமான உச்சரிப்பு. அதில் வரும் ஏற்ற இறக்கங்கள், அந்த ஏற்ற இறக்கங்களைச் சொல்லும் போது, தலை ஆடாமல் இருத்தல், குரல் கமறாமல் இருத்தல், பயிற்றுவிக்கப்பட்ட வேகத்துக்குக் கூட்டியும், குறைத்தும் சொல்லாமல் இருத்தல் என பல கட்டுதிட்டங்கள் இருக்கின்றன. அந்த ஏற்ற இறக்கங்களை எங்கு எப்படிச் சொல்ல் வேண்டும் என்பதை மறக்காமல், பிறழாமல் சொல்ல வேண்டும். உதாரணமாக, இன்றைக்கு எளிதாகக் கடைகளில் கிடைக்கும் தைத்திரிய உபநிஷத்துப் புத்தகத்தை வாங்கி, அதன் ஓலி நாடாவையும் வாங்கி எப்படி உச்சரிக்கிறார்கள் என்று பாருங்கள்.  







உதாரணத்துக்குஆகாச என்னும் சொல்லைக் கவனியுங்கள். சில இடங்களில் ஆகாச என்பதில் உள்ள ஆகாஎன்பதை இறக்கியும், சில இடங்களில்காவை மட்டும் இறக்கியும், சில இடங்களில் அதை ஏற்றியும் உச்சரிப்பார்கள். ஒவ்வொரு இட்த்திலும் ஏதோ ஒரு காரணத்துக்காக, ஏதோ ஒரு பலனுக்காக அப்படி உச்சரிக்கப்படுகிறது.

வேத மந்திரத்தின் பலம் அதன் உச்சரிப்பில் இருக்கிறது.
அதைத் தவறாக உச்சரித்து விட்டால் நாசம் விளையும்.
இதற்கு ஒரு உவமை சொல்வதுண்டு.
இந்திரனை அழிப்பதற்காக ஒரு எதிரியை உருவாக்க வேண்டும் என்பது குறித்து ஒரு மந்திரத்தை த்வஷ்டா சொல்கிறான்.
ஆனால் அதைத் தவறாக உச்சரித்ததால், இந்திரனால் அழிக்கப்படக்கூடிய ஒரு எதிரியை அந்த மந்திரம் உருவாக்கித்தந்தது.

ஒரே வார்த்தையை. ஒரே எழுத்தை வேறு வேறு விதமாக உச்சரிக்கும் பாணி இந்தக் கல்வியில் இருக்கிறது.
இதற்கு நாக்கு கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும்,
நாக்கு நன்கு பிறழ வேண்டும்,
அதற்கு நாக்கு தடிமனாக இல்லாமல் இருக்க வேண்டும்.
தடித்த நாக்கால், நாக்கை வளைத்துச் சொல்லும் உச்சரிப்புகளைச் செய்ய முடியாது.
இதற்குப் பிறப்பால் அமைந்த நாக்கின் அமைப்பும் ஒரு காரணமாகும்.
வேதம் ஓதுதலுக்குத் தேவையான இந்த நாக்கு வளம்,
தமிழ் பேசி வந்த மக்களிடம் இருந்த்து.
தமிழுக்கே உரியது என்று மார் தட்டிக் கொள்கிறோமேழகாரம்’,
அதை உச்சரிக்க நாக்கு நன்கு பிறழ வேண்டும்

தமிழ் பேசும் எத்தனை பேருக்கு ழகாரம் உச்சரிக்க வரும்?
கொஞ்சம் சுய பரிசோதனை செய்து பாருங்கள்
அப்படிச் சொல்ல வராதவன் தமிழன் இல்லை என்கிறீர்களா என்று கேட்கிறீர்களா? ஒருவகையில் ஆம் என்பதே எனது பதில்.

இன்றைய தமிழ் நாட்டில் பார்ப்பான் வெளியிலிருந்து வந்தானா என்பது கேள்வியல்ல
தமிழ் மக்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மக்களில் எத்தனை பேர்
வெளியிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்தவர்கள் என்பதே கேள்வி
அதை இந்தத் தொடரின் க்ளைமாக்ஸில் தெரிந்து கொள்வோம்.   


ழகாரம், போல இன்னொரு உச்சரிப்பு இருக்கிறது.
அது ங், ஞ் ஆகும்.
இவை இரண்டும் வேத உச்சரிப்பில் முக்கியத்துவம் உடையவை.
அதிலும் தமிழ்ப் பார்ப்பனர்களிடையே பெயர் போன
கிருஷ்ணா யஜூர் வேத்த்தில் இந்த மெல்லின எழுத்துக்கள் உச்சரிப்பு தனித்து ஒலிக்கும்.

உதாரணமாக வேதத்தில் விஷ்ணு சூக்தம் என்ற ஒரு பகுதி இருக்கிறது

அதில் ஒரு வரி
த்த் விஷ்ணோ: பரமம் பதம்என்பது.
இதை ரிக் வேதிகள் அப்படியே உச்சரிப்பார்கள்.
ஆனால் யஜூர் வேதிகள் மெல்லின எழுத்துக்களை,
அவற்றுக்கான ஓசை மூக்கிலிருந்து பிறக்கும் வண்ணம் உச்சரிப்பார்கள்.
அந்த யஜூர் வேதிகள் தமிழ்ப் பார்ப்பனர்கள் என்பதுதான்
ஒரு மறைந்து போன உண்மையை வெளிக் கொணரும் ஒரு துருப்புச் சீட்டாகும்!
எப்படி என்று பார்ப்போம்.

தமிழில் மெல்லின எழுத்துக்கள் , , , , , ஆகும்.
தொல்காப்பிய எழுத்த்திகார சூத்திரங்கள்,
இந்த எழுத்துக்கள் காற்றாக, நாபியிலிருந்து எழுந்து,
தொண்டை வழியாகவும், மூக்கு வழியாகவும் பிறக்கின்றன என்று கூறுகின்றன.
மூக்கின் வழியாக அந்தக் காற்று வெளிப்படும் போது
இந்த மெல்லின எழுத்துக்கள் பிறக்கின்றன.
ஆனால் உண்மையில் நாம் உச்சரிக்கும் போது
, என்னும் எழுத்துக்களை உதடுகளாலே உச்சரிக்கிறோம்.
முழுவதும் மூக்கிலிருந்து அவை பிறப்பதில்லை.
ஆனால் மெல்லின எழுத்துக்களாக இருக்கவே,
அவற்றுக்கு ஒரு தனி அழுத்தம் கொடுத்து மூக்கிலிருந்து ஒலி உண்டாக்குவார்கள்.

த்த் விஷ்ணோ: பரமம் பதம்என்று முன்னம் சொன்னோமே
அதே வரியை,
யஜூர் வேதிகள் சொல்லும் போது,
பதம்என்ற சொல்லில் உள்ள
என்ற வல்லின எழுத்தை அடுத்து வரும் மகாரத்தை உச்சரிப்பதில்
ஙுஎன்று மூக்கிலிருந்து எழும் ஒலியையும் சேர்த்து உச்சரிப்பார்கள்.
இது சமஸ்க்ருத்த்தில் சொல்லப்பட்ட வழக்கம் என்று சொல்லி விட முடியாது.
இந்த ஒலி அமைப்புகளைக் கொண்ட கிருஷ்ண யஜூர் வேதம் என்பதைத்
தமிழ்ப் பார்ப்பனர்கள் தான் சொல்லி வருபவர்கள்.
அவர்கள் எழுத்து பிறக்கும் இல்லக்கணா விதிப்படி மாத்திரைகளைக்
கூட்டவோ, குறைக்கவோ, இவ்வாறு செய்யலாம்.
இதைத் தொல்காப்பியம் கூறுகிறது.

இதற்கு முன் முதலில் சொன்ன சில விவரங்களைத்
தொல்காப்பியம் ஏற்றுக் கொள்கிறது என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்வோம்

முதலில் உச்சரிக்க இயலாதவர்களுக்கு நாக்கு தடித்திருக்கும்
என்று சொன்னேன் அல்லவா?
என்னும் இடத்தில்என்பார்கள்.
பழம் என்பதற்குப் பதிலாகபளம் என்பார்கள்.
ளகாரம் உச்சரிக்க,
நாக்கைத் தடித்து மேலணத்தில் வருட வேண்டும்
என்கிறது தொல்காப்பியம்.
நா விளிம்பு வீங்கி (பிறப்பியல் 14) சொல்லப்படுவது ளகாரமாகும்
என்கிறது தொல்காப்பியம்
தடித்த நாக்குடையவர்களால் ளகாரத்தை உச்சரிக்க முடியும்.
ழகாரத்தை உச்சரிப்பது கடினம்.
அவர்கள் ழகாரத்தை, ளகாரம் என்பார்கள்.

அடுத்து, , , , , , என்னும் மெல்லின எழுத்துக்கள்
மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும்என்கிறது பிறப்பியல் 18ஆம் சூத்திரம்.
மூக்கின் கண்ணுடையதான காற்றினால் மெல்லினங்கள் பிறக்கின்றன
என்று இதற்கு அர்த்தம்.

அடுத்து ஒரு முக்கியமான சூத்திரம் வருகிறது.
எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி யெழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உழற்ச்சி வாரத்
தகத்தெழு வளியிசை யரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே
(பிறப்பியல் – 20)

இதன் பொருள்:-

எல்லா எழுத்துக்களும் உண்டாகின்ற இடம் என்று சொல்லப்படுகின்ற இடத்தின் கண்ணே எழுகின்ற வளியானே, தாம் பிறக்கும் தொழிலுடையலாதலொடு, தம்மைச் சொல்லும் இடத்து திரி தரும் கூற்றை உடைய, உண்ணின்று எழும் வளியாய இசையை பிணக்கமற ஆராய்ந்து மாத்திரை வரையறையால் கோடல் அந்தணர் வேதத்தின் கண்ணது.

இதை எளிமையாகச் சொல்வோம்

ஒரு எழுத்து பிறக்கிறது.
அது உள்ளிருந்து காற்றாகப் பிறக்கிறது.
பிறந்து வெளியில் ஓசையாக வரும் போது
மாறுபாட்டை அடைகிறது.
அது எந்தவித மாறுபாட்டை அடையலாம் என்பதை
எழுத்துக்களை அளக்கும் மாத்திரை என்பதன் அடிப்படையில்
ஆராய்ந்து செய்ய வேண்டும்.
அப்படிச் செய்வதை அந்தணர்கள் சொல்லும் வேதத்தைக் கொண்டே முடிவு செய்ய வேண்டும்.

இதை நச்சினார்க்கினியர் விளக்கும் போது,
ஆரம்பத்திலிருந்து , , , என்று உயிரெழுத்து முதல் எல்லா எழுத்துக்களும்
பிறத்தல், திரிதல் எல்லாம்
அந்தணார் வேதத்தின் கண் உள்ளது என்று
ஒரே சூத்திரமாகத் தொல்காப்பியர் சொல்லி விட்டார் என்கிறார்

அதாவது எந்த எழுத்தின் பிறப்பாக இருந்தாலும்,
ஏதேனும் சந்தேகம் இருந்தால்
அந்தணர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியது என்கிறார்

இதையே அடுத்த சூத்திரமான இறுதி சூத்திரத்தில்
மெய் தெரி வளியிசை அளபு நுவன்றிசினே என்று
ஐயம் இருந்தால் அந்தணரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் என்று
மீண்டும் ஒரு முறை  
தொல்காப்பியர் கை காட்டி விடுகிறார்.

அந்தணரிடம் கை காட்டி விடுவதற்குக் காரணம்,
அவர்கள் அதை வேதத்தை எப்படி உச்சரிக்கிறார்களோ
அதைப் பொருத்தே முடிவு செய்ய வேண்டும் என்கிறார்

இதன் மூலம் தெரியவரும் மற்றுமொரு விவரம், 
தொல்காப்பியர் தன்னை, ஐந்திரம் நிறைந்தவன் என்று 
தொல்காப்பியப் பாயிரத்தில் ஏன் அறிமுகம் செய்து கொண்டார் என்பதே.

ஐந்திரம் என்பது ஆறு வேதாங்கங்களில் ஒன்றான வியாகரண நூல்.
அது இலக்கண நூல்.
அந்த நூலில் அவர் தேர்ச்சி பெற்று இருந்தார் என்பதே, 
தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலை எழுதுவதற்கான தகுதியாகும்.
அந்தத் தகுதியை தெரிவித்து விட்டு 
அவர் தொல்காப்பியம் எழுத ஆரம்பிக்கிறார்.
அந்த நூல் சமஸ்க்ருத இலக்கியத்துக்கான இலக்கண நூல்.
வேதத்துக்கான இலக்கண நூல். 
அதுவும், வேதங்களும் தலையான ஓத்து என்று 
நச்சினார்க்கினியர் சொன்னதை (இக்கட்டுரையின் ஆரம்பத்தில்) 
இங்கு நினைவு படுத்திக் கொள்வோம். 



அவற்றை அறிந்திருந்தால், 
காற்றாகக் கிளம்பும் ஒரு எழுத்து, அதிலும் தமிழ் எழுத்து,
எங்கு ஆரம்பித்து, எப்படித் திரிந்து, எப்படி ஓசையாக வெளிப்படும் 
என்பதை மிகத் தெளிவாகச் சொல்ல முடியும் என்பதைத்
தொல்காபிப்பியர் பிறப்பியல் 20 ஆவது சூத்திரத்தில் 
தெளிவு படுத்தி விட்டார்.
தமிழுக்கும் வேத நூல்களது இலக்கணமே ஆதாரமாகும்
என்பதையும் 
இந்தச் சூத்திரம் காட்டுகிறது.




இதை விளக்கும் நச்சினார்க்கினியர்,
ஒரு எழுத்துக்கு மூன்று நிலை உண்டு என்று ஒரு மேற்கோள் கொடுக்கிறார்.
நிலையும், வளியும், முயற்சியும் மூன்றும் இயல் நடப்பது எழுத்தெனப்படுமேஎன்கிறார்.
எழுத்து பிறக்கும் நிலை,
காற்று,
எனபவற்றுடன் அந்தக் காற்றை வெளிப்படுத்தும் முயற்சியால்
எழுத்து பிறக்கிறது
(அந்த முயற்சிக்கான ஒரு உதாரணம்
பதம் என்பதில் பதங்ம் என்று கிருஷ்ண யஜூர் வேத்த்தில் சொல்வது.) 



ஒரு எழுத்து பிறக்கும் நிலையையும், வளியையும் எளிதாகக் கண்டு பிடித்து விட முடியும்.
ஆனால் அது எந்த வித ஓசையுடன் பிறக்க வேண்டும் 
என்பதற்கான முயற்சியைத் தெரிந்துக் கொள்வதில் சந்தேகம் வரலாம்.
அப்படிச் சந்தேகம் வந்தால், 
அதை நிவர்த்தி செய்துக் கொள்ள 
வேதத்தைப் பார்க்க வேண்டும்.
அதில் எப்படிப்பட்ட விதமாக அந்த முயற்சி செய்யப்பட்டு, 
ஓசை எழும்புகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
(அதனால்தான் வேதம் ஓதுதலை
மிக மிகக் கவனமாகப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள் என்றும் தெரிகிறது)
எழுத்து, சொல் போன்றவற்றின் இயல்பை விளக்ககூடிய திறமை, 
அந்த வேதத்தை ஓதும் அந்தணர்களால் முடியும் என்பதை
இந்தத் தொல்காப்பியச் சூத்திரம் தெரிவிக்கிறது.



வேதம் அறிந்தவனால்தான், தமிழ் எழுத்திலக்கணத்தைச் சொல்ல முடியும்.
அதன் காரணமாகவே தொல்காப்பியரும் 
ஐந்திரம் படித்தார்.
எழுத்திலக்கண விளக்கங்களை
வேதம் அறிந்த பார்ப்பனால் மட்டுமே சொல்ல முடியும் என்பதை
இந்தத் தொல்காப்பியச் சூத்திரம் தெளிவு படுத்துகிறது.



இங்கு ஒரு விஷயம் கவனித்தீர்களா?


·         வேதம் என்பது சமஸ்க்ருதத்தில் இருப்பது.
ஆனால் தமிழ் எழுத்தின் பிறப்பைப் பற்றிய எந்த சந்தேகத்துக்கும்,
அந்த வேதம் அறிந்த அந்தணர்களைக் கேளுங்கள் என்கிறாரே தொல்காப்பியர்,
அது ஏன்?  
எப்படி?  
அதற்கு என்ன அர்த்தம்

  • ·         எழுத்திலக்கணம் என்பது தமிழுக்கும், சமஸ்க்ருதத்துக்கும் ஒன்றே என்பதல்லவா?
  • ·         சிவ பெருமான் ஒரு பக்கம் பாணினிக்கும், ஒரு பக்கம் அகத்தியருக்கும் முறையே சம்னஸ்க்ருதம், தமிழ் இலக்கணம் கற்பித்தார் என்று புராணங்கள் சொல்வது உண்மையே என்றும், தமிழும், சமஸ்க்ருதமும், வேதப் பிரம்மத்தின் இரு கண்கள் என்றும் காட்டுகிறதல்லவா?
  • ·         எழுத்தின் மூலம், வெளிப்பாடு ஆகியவற்றுக்கு ஆதாரம் வேதம் என்று காட்டுகிறதல்லவா?
  • ·         அந்த வேதம் அறிந்தவன் தமிழ்ப் பார்ப்பனன் என்று காட்டுகிறதல்லவா?
  • ·         அந்த வேதம் என்பது தமிழ் மரபிலேயே வந்திருந்தால்தானே இது சாத்தியப்படும்?
  • ·         அதனால்தான் ஆறு வகை என்று சமஸ்க்ருதம், தமிழ் என்று இரண்டையும் தமிழ்ப் பார்ப்பனர்கள் படித்தார்களா?
  • ·         வேதம் ஓதுதல் தெரிந்தால் தான், தமிழ் எழுத்திலக்கணம் தெரியும் என்பதை இது காட்டுகிறதல்லவா?
  • ·         அப்படியென்றால், வேதம் முதலில் வந்து அப்புறம் தான் தமிழ் இலக்கணம் உருவாகி இருக்க முடியுமல்லவா?
  • ·         அந்த வேதத்தை ஆரம்பத்திலிருந்து தமிழ்ப் பார்ப்பனர்கள் ஓதியிருந்தால் தானே, இந்த எழுத்திலக்கணத்தை அவர்கள் உருவாக்கி இருக்க முடியும்?
  • ·         தமிழ்ப் பார்ப்பன்னுக்கு அவ்வாறு எழுத்தின் பிறப்பியல் தெரிந்த்தால்தான், அவன் ஓதிய யஜூர் வேத்த்தில் இந்த ஒலி அமைப்புகளைச் செய்தானோ?
  • ·         அப்படியென்றால், முதல் தமிழ் இலக்கண நூலான அகத்தியம் எழுந்த தலைச் சங்கம் பிறந்த காலம் தொட்டு, வேதம் முழங்கி இருப்பான். சமஸ்க்ருதத்துக்கும், தமிழுக்கும் இலக்கணம் சீர் திருத்து இருப்பான் என்பது உண்மையல்லாவா?
  • ·         அப்படியென்றால் அவன் தோற்றம், தென் கடலில் இருந்த தென்னன் தேசத்தில் செல்கிறது என்பது உண்மைதானே?
  • ·         அங்கு தான் சாகத்தீவும் இருந்தது என்பதால், தென்னன் பாண்டியன் அரசை அமைப்பதற்கு முன்பே அங்கிருந்த மக பிராம்மண வழியில் வேதமும், தமிழும், சமஸ்க்ருதமும் இருந்திருக்கிறது என்று சொல்லலாமல்லவா?

இதை மெய்ப்பிக்கும் வண்ணம் ஒரு விவரம் இருக்கிறது.
எந்த துவாரகை வழியாக வைவஸ்வத மனு சரஸ்வதி நதிப் பகுதிக்குச் சென்றானோ,
அந்தத் துவாரகையைக் கொண்ட குஜராத் இருக்கும் சௌராஷ்டிரம் என்று
சொல்லப்பட்ட பகுதி மக்களது பேச்சில்
இன்றும், அழுத்திச் சொல்லும் இந்த ந்ங், க்ம் என்பதும் இருக்கிறது.

சொல்கிற சொல்லை சுத்தமாகச் சொல்ல் வேண்டும்.
மெல்லினம் என்றால் அதில் ஒரு NASAL ஒலி, மூக்கால் சொல்கிற ஓசை வர வேண்டும்.
அது மூக்கிலிருந்து வெளிப்பட வேண்டும்.

இதைச் செய்பவர் தமிழ்ப் பார்ப்பனர்.
வேத்த்தின் அடிப்படையில் எழும்பும் ஒலியைக் கொண்டே,
தமிழ் எழுத்துக்களது உச்சரிப்பையும் சொல்ல வேண்டும்.
அதை நன்கு அறிந்தவர் தமிழ்ப் பார்ப்பனர்.
அதே ஒலிக் கோட்பாட்டைக் கொண்டவர்கள்  சௌராஷ்டிர மக்கள்.
இவர்கள் இருவருக்குமே ஒரே பொது மூலம் தான் இருக்க முடியும்.
அது தென்னன் தேசம் இருந்த சாகத்தீவாகும்.


இதில் இன்னொரு விவரமும் வெளிப்படையாக இருக்கிறது.
சமஸ்க்ருத்த்தில் தலை ஓதல் என்று சொல்லுமிடத்தே,
தமிழ்ப் பார்ப்பனர்கள் யஜூரும் சாமமும்ஓதினார்கள் என்கிறார் நச்சினார்க்கினியர்.
அவர் ரிக் வேதத்தைச் சொல்லவில்லை?
ஏனெனில் ரிக் வேதம் எழுந்தது சரஸ்வதி தீரத்தில்.
ரிக் வேதத்தைத் தந்தவன் சரஸ்வதி பிராம்மணன்.
அதைத் தமிழ் நாட்டுப் பார்ப்பனன் ஓதவில்லை.
படையெடுத்து வந்த ஆரியனாகத் தமிழ் நாட்டுப் பார்ப்பனன் இருந்திருந்தால்,
அவன் தமிழ் நாட்டுக்கு வந்தபின் ஏன் ரிக் வேதத்தை ஓத வில்லை?
காரணம், அவன் அங்கிருந்து வந்திருந்தால் தானே
அவனுக்கு ரிக் வேதம் தெரிந்திருக்கும்? .


அதுபோலவே மனு வாதித் திணிப்பும்.
மனுவாதிப் பார்ப்பனர்கள் திணித்திருந்தால்,
தமிழ்ப் பார்ப்பனர்கள் ரிக் வேதம் கற்றிருப்பார்கள்.
அவர்கள் கற்கவில்லை என்பதால்,
மனுவாதித்திணிப்பு நடக்கவில்லை என்று தெரிகிறது.


இன்றைக்கும், ரிக் வேதப் பார்ப்பனர்கள் என்று
அடையாளாம் காட்டப்படும் தமிழர்கள் மிகவும் குறைவு.
ரிக் வேதம் தெரிந்தவர்கள் வட இந்தியாவில்தான் இருக்கிறார்கள்.
பரசுராமர் மீட்ட இடங்கள் என்று நாம் பார்த்தோமே
அந்த அரபிக் கடலோரப் பகுதிகளில் இருக்கிறார்கள்
தமிழ்நாட்டில் ரிக் வேதிகள் யாரேனும் இருந்தால்,
அவர்கள், சரஸ்வதி பிராம்மணர்கள் வழித்தோன்றலாகவோ,
அல்லது சரஸ்வதி பிராம்மணர்களிடம் படித்தவர்கள் பரம்பரையிலோ வந்திருக்க வேண்டும்.


மனு வந்த பிறகுதான் ரிக் வேதம் வந்தது.
ஆனால் அதற்கு முன்பே யஜுர் வேதம் இருந்திருக்கிறது.

வைவஸ்வத மனுவுக்கு முதலில் பிறந்த குழந்தை,  
இளை என்று பெண்ணாகவும், பிறகு இளா என்று ஆணாகவும் மாறவே,  
இந்த மாறுபாடு இல்லாமல் அடுத்த குழந்தை ஆணாகப் பிறக்க  
ரிஷிகள் யாகம் செய்தார்கள் என்று ஸ்ரீமத் பாகவத்த்தில் சொல்லியுள்ளதால், (பகுதி 52)  
யஜூர் வேதம் அப்பொழுதே இருந்திருக்க வேண்டும்


அந்த யஜூர் வேதத்தைத் தமிழ்ப் பார்ப்பனர்கள் ஓதியிருந்தால்தான்,  
கபாடபுரத்துப் பல்யாக சாலைப் பாண்டியனால் யாகங்கள் செய்திருக்க முடியும்
மனுவின் காலத்தில் செய்யப்பட்ட யாகங்கள்,  
அவர்கள் சரஸ்வதி தீரத்துக்கு வருவதற்கு முன்னால்  
அவர்கள் தெரிந்து வைத்திருந்த யாகங்களாக இருக்க வேண்டும்.

அதைத் தமிழ்ப் பார்ப்பனர்கள் ஓதியிருக்கிறார்கள்.
கடைச் சங்கத்தின் இலக்கண நூலான தொல்காப்பியம்
முதல் இரு சங்கங்களின் தொடர்ச்சியான இலக்கண நூலாகும்
தமிழ் எழுத்தியியலை அறிந்துக் கொள்ள வேதம் தேவையென்றும்,
அதை ஓதும், தமிழ்ப் பார்ப்பனர்கள் தேவை என்றும்
தொல்காப்பியச் சூத்திரம் காட்டியுள்ளதால்,
அந்த ஓதல்
முதற் சங்கம் தொட்டே இருந்து வந்திருக்க வேண்டும்.
அதனால் 10,000 வருடங்களுக்கும் முன்னால் எழுந்த 
முதல் சங்கம் காலம் தொட்டே
தமிழ்ப் பார்ப்பனனும், 
அவன் ஓதிய வேதமும் இருந்திருக்க வேண்டும்.


தொல்காப்பியம்
அந்தணர்களிடம் சந்தேகங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள் என்கிறதே, ஏன்?
இடைச் சங்க காலத்திலும்,
அதற்கு முன் தலைச் சங்க காலத்திலும்,
வேதம் இருந்தது.
அதைத் தமிழ்ப் பார்ப்பனன் ஓதினான்.
அந்த 10,000 வருடங்களுக்கும் மேலாக அவர்கள் ஓதி வந்ததால்
பரம்பரை, பரம்பரையாக ஓதி வந்ததால்,
கடும் பயிற்சியுடன், தவறில்லாமல் ஓதி வந்ததால்,
எழுத்தியல்பும், பிறப்பியலும், 
வேதம் ஓதும் பார்ப்பனர்களுக்கு நன்கு தெரியும்,
எனவே அவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லித்
தொல்காப்பியர் தன் வாயை மூடிக் கொண்டு விட்டார்.


வேதமே தமிழ் எழுத்திலக்கணத்தின் மூலம்.
அதை அறிந்து கொள்ளதா திராவிட மூடர்கள்,
வேதத்தைப் பழிக்கிறார்கள்.
சமஸ்க்ருதத்தைத் தமிழ் நாட்டிலிருந்தே ஒழித்தார்கள்
மூலாதார அறிவைக் கொண்டிருந்த பார்ப்பனர்களை ஏசி அவர்களை விரட்டினார்கள்.
வழி வழியாக வந்த அரிய வேதமோதும் பொக்கிஷத்தை அழித்தார்கள்.
இனிமேலாவது உண்மை நிலவரத்தைத் தெரிந்து கொள்ளட்டும்.
இத்துடன் இது முடியவில்லை.
வேதக் கல்வி முதல் மூன்று வர்ணத்தினருக்கு என்று சொல்லப்பட்டுள்ளது.

அப்படி என்றால் வேளாண் மக்களுக்கு என்ன கல்வி?

அந்த உண்மை நிலவரங்களையும் பார்த்து விட்டு,
பிற பிரிவுகளைப் பற்றியும் தெரிந்து கொண்டு,
இன்னும்  சாகத்தீவின் வீச்சையும் தெரிந்து கொண்டு விட்ட பிறகு
மரபணு ஆராய்ச்சிகளுக்குச் செல்வோம்.




8 கருத்துகள்:

  1. Dear Jayasree Mam,
    //தமிழ் பேசும் எத்தனை பேருக்கு ழகாரம் உச்சரிக்க வரும்?//.Thats absolutely right mam, I have seen many tamil people who cannot pronounce this.

    //தமிழ் மக்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மக்களில் எத்தனை பேர்
    வெளியிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்தவர்கள் என்பதே கேள்வி.
    அதை இந்தத் தொடரின் க்ளைமாக்ஸில் தெரிந்து கொள்வோம்.//.To wait till the end of the series is too long mam, can u break the suspense before that!!

    Regards
    Chalam

    பதிலளிநீக்கு
  2. //To wait till the end of the series is too long mam, can u break the suspense before that!!//

    I have indicated that in one of the comments:)

    பதிலளிநீக்கு
  3. ///தொல்காப்பியம்
    அந்தணர்களிடம் … கேட்டுக் கொள்ளுங்கள் என்கிறதே, ஏன்?
    இடைச் சங்க காலத்திலும்,
    அதற்கு முன் தலைச் சங்க காலத்திலும்,
    வேதம் இருந்தது.
    அதைத் தமிழ்ப் பார்ப்பனன் ஓதினான்.
    அந்த 10,000 வருடங்களுக்கும் மேலாக அவர்கள் ஓதி வந்ததால்,
    பரம்பரை, பரம்பரையாக ஓதி வந்ததால்,
    கடும் பயிற்சியுடன், தவறில்லாமல் ஓதி வந்ததால்,
    எழுத்தியல்பும், பிறப்பியலும்,
    வேதம் ஓதும் பார்ப்பனர்களுக்கு நன்கு தெரியும்,
    எனவே அவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லித்
    தொல்காப்பியர் தன் வாயை மூடிக் கொண்டு விட்டார்.///


    Was தொல்காப்பியர் a Brahmin?

    If so then it will give the dravidavadis a further chance to twist the fact to suit their convenience.

    Bala

    பதிலளிநீக்கு
  4. Dear Madam..
    I happened to read the following post which refutes your theory of Vedic influence in Tamil culture.. Kindly read and comment..
    http://www.mayyam.com/talk/showthread.php?4255-NAAN-MARAI

    பதிலளிநீக்கு
  5. Dear Mr Shanmugham,

    Read the article - it is a typical Dravidian concept. Did you notice that the author has put the date of Tholkaappiyam at 900 to 1000 AD? This itself shows what one can expect from that article.

    Did you also notice that he has avoided mentioning commentary by Nachinarkiniyar while recognizing Ilam puranar and Perasiriyar?
    Nacchinarkiniyar urai is the most popular uari of Tholkaappiyam. But he had avoided that because Nachhinarkiniyar clearly explains what is 'Naan marai' that Tholkaapiyar refers to.

    He says that it is not Rig, yajur, Sama and Atharvana Vedas but "நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையான் நான்மறை என்றார். அவை தைத்திரியமும், பௌடிகமும், தலவகரமும், சாம வேதமும் ஆகும்”

    இவற்றில்
    (1) தைத்திரியம் என்பது தைத்திரிய உபநிஷத்து (தளபதி சினிமாவில் ஷோபனாவின் அப்பா வேத பாடம் சொல்லிக்கொடுப்பார். அவரது மாணவர்கள் ஓதுவார்கள். அது தைத்திரியம். அதில் மித்ரன், வருணன் என்பவர்கள் வருவார்கள். இந்த ஆசிரியர் சொல்வது போல அது கிரேக்கர்களது அல்ல. அது எப்படி என்பதை என்னுடைய 80 கட்டுரையில் விவரிக்கிறேன்)

    (2) பௌடிகம் என்பது போதாயன் சூத்திரங்கள்.
    (3) தலவகரம் என்பது சாம வேதத்தின் ஒரு பிரிவு. இதன் ஒரு பகுதி கேனோபனிஷத்தில் உள்ளது. ஜைமினி ரிஷி அவர்கள் தந்தது.
    (4) சாம வேதம்.
    இவற்றை, தொல்காப்பியர் காலம் முன்பே தொடங்கி, ஆங்கிலேயர்கள் தங்கள் பாட முறையைப் புகுத்திய 18 ஆம் நூற்றாண்டு வரை, படித்து வந்தார்கள்.

    You have said //your theory of Vedic influence in Tamil culture.// இதில் எதுவும் என் கருத்து கிடையாது. நச்சினார்க்கினியர் சொன்னதைதான் இந்தக் கட்டுரையில் எழுதி இருக்கிறேன். நச்சினார்க்கினியர் சொன்னது திராவிடவாதிகளுக்கு சங்கடமாக இருக்கவே அவர்கள் அதைத் தொட மாட்டார்கள்.

    ஆனால் நிறைய தமாஷ் செய்வார்கள்.
    அறம், பொருள், இன்பம், வீடு என்பதை மெனக்கெட்டு விவரிக்கிறாரே, அந்தக் கருத்து எதில் உதயமானது?

    தொல்காப்பியம் ஒரு இலக்கண நூல் என்பதை ஒத்துக் கொண்டு விட்டு, அதை எழுத ஐந்திரம் படித்தார் தொல்காப்பியர் என்று சொல்லப்பட்டுள்ளதால், அந்த ஐந்திரம், வாஸ்து சாஸ்திரத்தில் உள்ள >> Mathematics, Astronomy & Medicine, Science & Anatomy theories were mentioned in Inthiram.<< என்று எழுதும் போதே அதில் உள்ள அபத்தம் ஏன் தெரியாமல் போனது? தொல்காப்பியம் என்ன வாஸ்து சாஸ்திரமா?

    அதை விடுங்கள், சிலப்பதிகாரத்திலும் ஐந்திரம் வருகிறது. (மதுரைக் காண்டம்)அந்தக் கதையில் அதை கவுந்தியடிகள் ஒதுக்கினது போல திராவிடவாதிகள் ஒதுக்கத்தான் செய்வார்கள்.

    இவர் இந்திரனை ஒத்துக் கொள்கிறார். ஆனால் ஐந்திரம் என்பதே இந்திரானால் எழுதப்பட்டதால் வந்த பெயர் என்பதை ஒத்துக் கொள்ள மாட்டார்.
    “விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவீர்” என்று காடு காண் காதையில் (சிலப்பதிகாரம்) சொல்கிறதெல்லாம் யாரைப்பற்றி? விண்ணவர் கோமான் என்று யாரைச் சொல்வார்கள்?

    ஆனால் இவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், அதை அடைய “ஐந்தினும், எட்டினும் வருமுறை எழுத்தின் மந்திரம்” சொல்ல வேண்டும் என்கிறது அந்தப் பகுதி. ஐந்தெழுத்து மந்திரம் என்பது, நமச்சிவாய என்பதும் எட்டெழுத்து மந்திரம் என்பது ஓம் நாராயணாய நம: என்பதும் ஆகும். இந்த மந்திரங்கள் சிலப்பதிகார காலத்திலேயே இருந்திருக்கின்றன என்பதை இவர்கள் ஒத்துக் கொண்டாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுவார்கள். அதனால் இந்திரன் செய்த ஐந்திரம் என்பதை ஒத்துக் கொள்ளவில்லையென்றால், அதைத் தொடர்ந்து வரும் இந்த மந்திரங்களையெல்லாம் ஊதித் தள்ளி விடலாம்.

    சந்தேகம் இருந்தால் நீங்களே படியுங்கள். திராவிட வாதம் தலை தூக்கிய காலத்தில் இந்தப் புத்தகங்கள் எல்லாருக்கும் கிடைக்கவில்லை. அதனால் இவர்கள் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொள்ள வேண்டியதாயிற்று, இப்பொழுது இந்தப் புத்தங்கங்கள் கிடைக்கின்றன. அண்ணா நூலகத்தில் தொல்காப்பியம் உரையுடன் இருக்கின்றன. அடியார்க்கு நல்லார் உரையுடன் சிலப்பதிகாரமும் அங்கு இருக்கிறது. எல்லா உரையாசிரியர்களது உரையையும் ஒப்பிட்டுப் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

    இவர்கள் எழுதுகிற கட்டுரைகளைப் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. நான்மறை என்று நச்சினார்க்கினியர் சொன்னவை உண்மையே என்று உறுதிப்படுத்தும் வண்ணம், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் இந்த சொற்கள் காணப்படுகின்றன.

    ஆய் மன்னன் கோக்கருநந் தடக்கனின் பார்த்திவ சேகரபுரம் செப்பேட்டில் இவை வருகின்றன.

    “இச்சாலைக்குப் பெய்த கலத்தில்
    பவிழிய சரணத்தாருடைய கலம் நாற்பத்தைந்து,
    தயித்திரிய சரணத்தாருடைய கலம் முப்பாத்தாறு,
    தலவகாரச் சரணத்தாருடைய கலம் பதினாலு..”

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் - தங்கள் பதிவுகள் ஏதேனும் புத்தகமாக வெளிவந்துள்ளதா ?
    மேலும் தங்கள் பதிவுகளை நான் எனது வலை தளத்தில் தங்கள் பெயருடன் மறு பதிவு செய்யலாமா ? My site is hinduunityblog.wordpress.com.

    பதிலளிநீக்கு
  8. @vedamgopal,

    "ஆண்டாள் தமிழும் அறியாத வைரமுத்துவும்" என்னும் என் புத்தகத்தை இங்கே பெறலாம். https://www.amazon.co.uk/dp/B07Y759PJX/ref=cm_sw_r_tw_dp_U_x_i62HDb6MHS63V
    புத்தகத்தைப் பற்றிய முன்னுரை இங்கே
    https://jayasreesaranathan.blogspot.com/2019/09/my-book-critiquing-vairamuthus-article.html

    ஆங்கிலத்தில் எழுதிய இந்தப் புத்தகத்தின் கடைசி பகுதி முருகனே முதல் வேள்வியைச் செய்தவன் என்பதை நிறுவுகிறது. https://www.amazon.in/MYTH-EPOCH-ARUNDHATI-NILESH-NILKANTH-ebook/dp/B07YVFNQLD

    இரண்டுமே Kindle Unlimited-இல் இருக்கிறது

    //தங்கள் பதிவுகளை நான் எனது வலை தளத்தில் தங்கள் பெயருடன் மறு பதிவு செய்யலாமா ?//

    அவரவர்கள் என் பெயரையோ அல்லது வலைத்தள முகவரியையோ குறிப்பிடாமல் பிரசுரித்து வருகிறார்கள். நீங்கள் இப்படிக் கேட்பதே மகிழ்ச்சி.தாராளமாக மறுபதிவு செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு