வெள்ளி, 23 டிசம்பர், 2011

89. மொஹஞ்சதாரோவில் நக்ஷத்திரக் கோவில்? -1


மொஹஞ்சதாரோ காட்டும் பல விவரங்களும், மஹாபாரதத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது வேத வாழ்க்கையின் சின்னமாகவோதான் அமைந்துள்ளன.

கிருஷ்ணனையும், ஆயர்களையும் நினைவுபடுத்தும் ஏறு தழுவுதல் முத்திரை இங்கு கிடைத்திருக்கிறது. (பகுதி 79).


இந்த நகரம் அமைந்துள்ள சரஸ்வதி நதிக்கரை, வேத வாழ்க்கை மேற்கொண்டவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

அந்த நதிக் கரையில் பல யாகங்கள் செய்திருக்கிறார்கள்.



யாக கர்மங்களைக் கைவிட்டவர்களும், வர்ணாஸ்ரம க்ஷத்திரிய தர்மத்தை விட்டவர்களும், சரஸ்வதி நதிப் பகுதிகளை விட்டு விலகி வாழ வேண்டும் என்ற நியதி இருந்திருக்கிறது. அப்படி விலகிய ஆபீரர்கள், முண்டா, சவரர்கள், புண்டரர்கள் (இன்றைக்கு இவர்கள் பழங்குடியினர் அல்லது மலை ஜாதியினர்) ஆகியோர் சரஸ்வதி நதியை விட்டு விலகியும், அல்லது சரஸ்வதி நதி மறைந்து விட்ட பகுதிகளிலும் வாழ்ந்தனர் என்று மஹாபாரதம் கூறுவதை (14-29), 53 ஆம் கட்டுரையில் கண்டோம்.

குறுகிக் கொண்டே வந்த சரஸ்வதிக் கரையில், வேத வழிபாடு செய்பவர்களுக்கே இடம் கொடுத்ததால், சரஸ்வதியின் கரையில் அமைக்கப்பட்ட மொஹஞ்சதாரோவிலும், வேத வழிபாடுகள் நடந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.


தோளாவீராவிலும், லோதாலிலும், காளிபங்கனிலும் வேத வாழ்க்கைக்கும், யாக வழிபாட்டுக்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. பாகிஸ்தானில் அமைந்துள்ள மொஹஞ்சதாரோவில் இன்னும் கண்டு பிடிக்க வேண்டிய இடங்கள் அதிகமாக இருந்தாலும், 80 வருடங்களுக்கு முன்னால் கண்டு பிடிக்கப்பட்ட இடங்களைக் கொண்டே அங்கு வேத வாழ்க்கை இருந்தது என்று சொல்லலாம்.


அப்படி நாம் சொல்லக்கூடி ஓரிடம், மொஹஞ்சதாரோவில் காணப்படும் 'கிடங்கு' என்று சொல்லப்படுகிற அமைப்பாகும்.



அது மூன்று வரிசைகளில் ஒன்பது பிரிவுகளாக மொத்தம் 27 பகுதிகளைக் கொண்டிருக்கிறது. 27 என்ற எண்ணிக்கை, அஸ்வினி முதலான 27 நக்ஷத்திரங்களை நினைவூட்டுகிறது. நக்ஷத்திரங்களை வழிபடும் வழக்கம், வேத மரபில் இருந்து வந்தது. இன்றைக்கு நக்ஷத்திர தேவதைகளை நாம் வழிபடவில்லையென்றாலும், மூன்றுக்கு மூன்றாக அமைக்கப்பட்ட மேடைகளில் நவகிரகங்களை வழிபடுகிறோம்.

 

2000 ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டில் 27 நக்ஷத்திரங்களையும் வழிபடும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. இதையொட்டி "நக்ஷத்திர புருஷ விரதம்' என்னும் விரதமும், வழிபாட்டு முறையும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இந்த விரதத்தை வராஹமிஹிரர், தன்னுடைய நூலான பிருஹத் சம்ஹிதையில் கடைசி அத்தியாயமாகஅதாவது எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாகக் கொடுத்துள்ளார்.

 

இந்த வழிபாட்டில், 27 நக்ஷத்திரங்களையும் தலை முதல் கால் வரை உள்ள உடலின் பகுதிகளாக உருவகித்து,. அப்படி உருவகிக்கப்பட்ட உருவத்தை 'நக்ஷத்திர புருஷன்' என்று அழைத்து வழிபட்டிருக்கிறார்கள்.

நக்ஷத்திர புருஷன் என்று தியானிக்கப்படும் அந்த தெய்வம் லக்ஷ்மி நாராயணன் ஆவார் என்றும், இந்த விரதத்தைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை ருத்திரன், நாரதருக்குச் சொன்னதாகவும் 'ஜோதிட வருஷாதி நூல்' என்னும் ஜோதிட நூல் தெரிவிக்கிறது.

 

இந்த விரதத்தைச் சித்திரை மாதத்தின் தேய்பிறையில், சந்திரன் மூல நக்ஷத்திரத்தில் செல்லும் போது ஆரம்பிக்க வேண்டும். இந்த நக்ஷத்திர புருஷனது அமைப்பும் மூல நக்ஷத்திர முதல் ஆரம்பிக்கிறது. மூல நக்ஷத்திரமானது நாம் இருக்கும் பால்வெளி காலக்ஸியின் மையப் பகுதியில் இருக்கிறது. அது இருக்கும் ராசியை தனுர் ராசி என்கிறோம்.



கீழ்க் காணும் படத்தில் நாம் இருக்கும் பால் வெளி காலக்சியின் அமைப்பு காட்டப்பட்டுள்ளது. நடுப்பகுதியில் இருப்பது மூல நக்ஷத்திரத்தில் தொடங்கும் தனுர் ராசியாகும். காலக்சி வட்டத்தின் ஒரு புறமாக, மையப் பகுதியிலிருந்து முக்கால் பங்கு தொலைவில் நாம் இருக்கும் சூரிய மண்டலம் உள்ளது.



மார்கழி மாதத்தில் சூரியன் உதிக்கும் தனுர் ராசி எனப்படும் காலக்சி மையத்தை, நமக்கு மிகவும் பரிச்சயமான ஜாதகக் கட்டம் மூலமாக அறியலாம்.




கும்ப ராசி அமையும் மாசி மாத்திற்கு அதிபதி மாதவன் என்று தொடங்கி 12 ராசிமாதங்களுக்கும் அதிபதியாகத் திருமாலின் துவாதச நாமங்களைச் சொல்கிறார்.

இவ்வாறு மூல நக்ஷத்திரத்தில் தொடங்கி மார்கழி மாத அதிபதியான கேசவன் முதலான மூர்த்திகளை வழிபடும் நக்ஷத்திர புருஷ விரதத்தைத்  தன் வாழ்நாள் முழுவதும் ஒருவன் செய்து வந்தால், அவன் மறு பிறவியில் ஒரு நக்ஷத்திரமாகப் பிறப்பான். அந்தப் காலக்சி மையத்தில் தனுர் ராசி அமைவதை இந்தப் படத்தில் காணலாம்.


நாம் பார்க்கும் வான் வெளி வட்டத்தை 12 ராசிகளாகவும் பிரித்துள்ளார்கள்.

தனுர் ராசி அமையும் மாதம் மார்கழி ஆகும்.


இதை விவரிக்கும் வராஹமிஹிரர், மார்கழி தொடங்கி 12 மாதங்களுக்கும், திருமாலின் 12 நாமங்களையே சொல்கிறார்.

அதாவது நக்ஷத்திர புருஷ விரதம் ஆரம்பிக்கும் மூல நக்ஷத்திரம் இருக்கும் ராசிக்கும், அதன் மாதமான மார்கழி மாதத்துக்கும் அதிபதி கேசவன்,


மகர ராசி அமையும் தை மாதத்துக்கு அதிபதி நாராயணன்,


பிரம்ம கல்பம் முடியும் வரை அந்த நக்ஷத்திரத்துக்கு அழிவு கிடையாது. என்று வராஹமிஹிர்ர் கூறுகிறார்.


இந்த விவரம், துருவ நக்ஷத்திரமாகப் பிறந்த துருவன் கதையை நமக்கு நினைவு படுத்துகிறது. மாற்றாந்தாயின் சுடு சொல் தாங்காமல், துருவன் தவம் செய்ய ஆரம்பித்தான். அதன் பலனாக திருமால் அவனுக்குப் ப்ரத்யக்ஷமாகி, அவன் துருவ நக்ஷத்திரமாகப் பிறப்பான் என்று வரம் கொடுத்தார் என்று புராணங்கள் கூறுவது, இந்த நக்ஷத்திரப் புருஷ விரதத்தைத் துருவன் கடைப்பிடித்திருக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது.






நக்ஷத்திர வழிபாட்டின் இந்த விவரம், இன்றைக்கு நமக்குத் தெரியாது. ஆனால் மஹாபாரத காலத்துக்கும் முன்னால் எப்பொழுதோ நடந்து விட்ட துருவனது காலத்தில் இந்த விரதம் பிரபலமாக இருந்திக்ருக்கிறது என்பது தெளிவாகிறது. அதனால், அந்த நாளில் நக்ஷத்திரங்களை வழிபட்டிருக்கிறார்கள் என்றும் தெரிகிறது.

 

அதிலும் இந்த வழிபாடு, வைவஸ்வத மனு காலத்திலேயே இருந்திருக்க வேண்டும். அது யாதவ மக்களிடையே தொடர்ந்திருக்க வேண்டும். ஏனெனில், கிருஷ்ணன் நடமாடிய துவாரகை இருக்கும் குஜராத் பகுதியில், மூல நக்ஷத்திரம் இருக்கும் மார்கழி மாதத்தை 'நக்ஷத்திர மாதம்' என்றே இன்றும் அழைக்கிறார்கள்.

அந்த மாதத்தை நாம் மார்கழி என்கிறோம்.


சமஸ்க்ருதத்திலும், வட நாட்டிலும், மார்கசிர என்கிறார்கள்.

ஆனால் குஜராத்தியர்கள் 'நக்ஷத்திரா' என்றே இந்த மாதத்தை அழைக்கிறார்கள்.



இந்த மாதத்தை ஏன் இந்தப் பெயரில் அவர்கள் அழைக்க வேண்டும்?

மூல நக்ஷத்திரத்தில் தொடங்கி நக்ஷத்திர புருஷன் தியானிக்கப்படுவதால் மூல நக்ஷத்திரம் இருக்கும் மார்கழி மாதத்தை 'நக்ஷத்திர மாதம்' என்று அழைத்தார்கள் என்பதே பொருத்தமாக இருக்கிறது.



பொதுவாக மாதங்களின் பெயர்கள், அந்தந்த மாதத்தின் பௌர்ணமியன்று இருக்கும் நக்ஷத்திரத்தின் பெயரில்தான் அழைக்கப்பட்டிடுக்கின்றன. குஜராத்தில் வழங்கப்படும் மாதப் பெயர்களும் அவ்வாறேதான அமைந்துள்ளனமார்கழி மாதத்தைத் தவிர!

அவர்களது வருடம், தீபாவளிக்கு (ஐப்பசி அமாவசைக்கு) மறுநாள் ஆரம்பிக்கிறது. அதிலிருந்து ஆரம்பிக்கும் முதல் மாதத்தில் கார்த்திகையில் பௌர்ணமி வருகிறது. கார்த்திகை தீபம் வரும் அந்த மாதத்திலிருந்து அவர்கள் வருடம் ஆரம்பிக்கிறது. அவர்களது மாதங்களின் பெயர்களைப் பார்த்தாலே, மார்கழி மாதம் மட்டும், பெயர் மாறி வருவது தெரிகிறது.



அவர்களது 12 மாதங்கள்:-

1-   கார்தக் (கிருத்திகையில் பௌர்ணமிதமிழில் கார்த்திகை)

2-   நக்ஷத்திரா (இதன் பெயர்க் காரணம் பௌர்ணமி காணும் நக்ஷத்திரத்தில் இல்லை. நாம் மேலே சொன்னவாறு நக்ஷத்திர புருஷனில்தான் இருக்க வேண்டும்மிருக சீரிஷ நக்ஷத்திரத்தில் பௌர்ணமி - தமிழில் மார்கழிபிற இடங்களில் மார்கசிர.)

3-   போஷ் (புஷ்யத்தில் பௌர்ணமிதமிழில் தை, பிற இடங்களில் புஷ்ய)

4-   மாஹ் (மகத்தில் பௌர்ணமிதமிழில் மாசிபிற இடங்களில் மாகம்)

5-   ஃபல்குன் (பல்குனி நக்ஷத்திரத்தில் பௌர்ணமிதமிழில் பங்குனிபிற இடங்களில் பால்குனி)

6-   சைத்ர (சித்திரையில் பௌர்ணமிதமிழில் சித்திரை - பிற இடங்களில் சைத்ர)

7-   வைஷாக் (விசாகத்தில் பௌர்ணமிதமிழில் வைகாசி - பிற இடங்களில் வைஷாக்)

8-   ஜ்யேஷ் (கேட்டை / ஜ்யேஷ்டையில் பௌர்ணமிதமிழில் ஆனிபிற இடங்களில் ஜ்யேஷ்டா)

9-   ஆஷாட் (ஆஷாட நக்ஷத்திரத்தில் பௌர்ணமிதமிழில் ஆடி - பிற இடங்களில் ஆஷாட)

10-  ஸ்ரவண (ஸ்ரவண / திருவோணத்தில் பௌர்ணமிதமிழில் ஆவணி - பிற இடங்களில் ஸ்ரவண)

11-  பாத்ரபத் (பாத்ரபத நக்ஷத்திரத்தில் பௌர்ணமிதமிழில் புரட்டாசி - பிற இடங்களில் பாத்ரபத)

12-  ஆஷோ (அஸ்வினி நக்ஷத்திரத்தில் பௌர்ணமிதமிழில் ஐப்பசி - பிற இடங்களில் ஆச்வயுஜ)


இந்த 12 மாதப் பெயர்களையும் நோக்கும் போது, மார்கழியைத் தவிர பிற மாதங்களுக்கு, பௌர்ணமி காணும் நக்ஷத்திரப் பெயர்களை வைத்திருக்கிறார்கள் என்றும், மார்கழிக்கு மட்டும் பொதுப் பெயராக நக்ஷத்திர மாதம் என்றும் பெயரிட்டிருக்கிறார்கள் என்றும் தெரிகிறது.


இன்றைக்கும் மார்கழி மாதத்தின் இந்தப் பெயர் குஜராத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த குஜராத்தில்தான் பண்டைய யாதவ சமூகம் வாழ்ந்த துவாரகை இருந்தது. இன்றும் இங்கு இருக்கும் துவாரகை கோவிலிலும், 3500 ஆண்டுகளுக்கு முன் கடல் கொண்டு விட்டு, தற்சமயம் ஆராயப்பட்டு வரும் பேட் துவாரகை கோவிலிலும் நக்ஷத்திர மாதத்தைக் கொண்ட இந்த 12 மாதங்களைத்தான் கடைபிடிக்கிறார்கள். துவாரகைப் பகுதியும், குஜராத்தும், சிந்து சமவெளி காலத்தைச் சேர்ந்தவை என்பதையும், அந்த நாகரிக அடையாளங்களைக் கொண்டவை என்பதையும் நாம் நினைவுபடுத்திக் கொள்வோம்.

முன்பே ஆராய்ந்த இந்தப் படத்தில், சிந்து சமவெளி நாகரிகப் பகுதியில் குஜராத் வருவதைக் கவனிக்கவும்.

 



துவாரகையில் நக்ஷத்திர மாதம் கடைப்பிடித்தார்கள் என்றால்,

மோஹனஸ்ய தருவிலும் (மொஹஞ்சதாரோ),

தோளாவீராவிலும்,

லோதாலிலும்,

காளிபங்கனிலும் அதையே கடைபிடித்திருக்க வேண்டும்

என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்லவா?








33 கருத்துகள்:

  1. மொஹஞ்சதாரோ ஹரப்பா தமிழர் நாகரிகமா???
    அகதியரோட தமிழ்நாட்டுக்கு வந்தார்கள் என்று சொல்கிறார்களே

    பதிலளிநீக்கு
  2. //மொஹஞ்சதாரோ ஹரப்பா தமிழர் நாகரிகமா???///
    அல்ல.
    தற்போது பேட் துவாரகை என்று சொல்லப்படும் துவாரகை (கிருஷ்ணன் காலத்துக்குப் பிறகு ஏற்பட்டது இது) முழுகிய போது, அகஸ்தியர் அங்கிருந்த வேளிர் உள்ளிட்ட அரச வம்சத்தினரையும், 18 விதமான தொழில் வன்மை பெற்றிருந்த 18 குடி மக்களையும் தென்னிந்தியாவுக்கு அழைத்து வந்து பொதிகைக்கு அருகே காடழித்து நாடாக்கிக் குடியமர்த்தினார்.

    இது நடந்த்து பொ.மு 1500 இல். அப்பொழுது வட மேற்கு இந்தியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நில நடுக்கங்கள் காரணமாக, சரஸ்வதி நதி முழுவதும் பூமிக்குள் இறங்கி விட்டது. அதன் படுகையில் தான் இன்றைக்கு நாம் சிந்து சமவெளி நாகரிகம் என்கிறோமே அந்த மக்களில் முக்கால்வாசி பேர் வசித்து வந்தனர். அவர்களில் ஒரு பகுதி கங்கைக் கரை நோக்கி இடம் பெயர்ந்தனர். வட மேற்கில் இருந்தவர்கள் மேலும், வட மேற்கு நோக்கி நகர்ந்து ஈரான், ஈராக், மத்திய ஐரோப்பா பகுதிக்குச் சென்றனர். அந்த மக்களின் அடையாளம் இன்று சொல்ல முடியாதவாறு பிறருடன் கலந்து விட்டது.

    ஆனால் துவாரகைப் பகுதியில் இருந்த மக்களை அகஸ்தியர் தமிழ் நாட்டுப் பகுதிக்கு அழைத்து வந்தார். அவர்கள் சேர, சோழ , பாண்டிய அரசுகளின் எல்லைப் புறங்களில் குடியமர்ந்தனர். தர்மபுரி, க்ருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஹோசூர், பெங்களூர், வயநாடு, மைசூர், கோயம்புத்தூர், பழனி போன்ற இடங்களில் குடியமர்ந்தனர். இந்த மக்களது குடியிருப்புகள் மஹாரஷ்டிரா துவங்கி, கர்னாடகா வழியாக கன்னியாகுமரி முனை வரை சென்றது.

    கடை எழு வள்ளல்கள் அனைவரும், இந்த மக்கள் கூட்டத்தைச் சேர்ந்த வேளிர் அரசர்களே.ஔவைக்கு நெல்லிக் கனி தந்த அதியமான் தர்மபுரிப் பகுதியை ஆண்டான். அவனும் இந்த மக்கள் கூட்டத்தைச் சேர்ந்தவனே. இவர்கள் வந்த பிறகுதான் ஐந்திணைகளாகத் தமிழ் நிலம் பகுக்கப்பட்டது. தொல்காப்பியம் எழுதப்பட்டது. காடழித்து நாடாக்கிய முல்லைத் திணை உருவாக்கப்பட்டு அங்கு இந்த மக்கள் குடியமர்த்தப்பட்டனர். முல்லைக் கலியில் கிருஷ்ணனைப் பற்றி தூக்கலாகச் சொல்லப்படுவதற்கு இவர்களது துவாரகை மூலமே காரணம். துவாரகைக்கு வருவதற்கு முன் இந்த 18 குடிகளும் கங்கைக் கரைப் பகுதியில் இருந்தனர் என்பதற்கு மஹாபாரதத்தில் சாட்சி இருக்கிறது.

    இன்றைக்கு இந்த மக்கள் தமிழ் மக்களில் இரண்டறக் கலந்து விட்டனர். தச்சன், குயவன், கல் வேலை, பொன் வேலை போன்ற கைத் தொழில் அனைத்தும் இவர்கள் வசம்தான் இருந்தன. இதனால்தான் இவர்கள் மூலமாக தமிழ் நாட்டில் இவர்கள் குடியமர்ந்த இடங்களில் உண்டான அடையாளங்கள் சிந்து சமவெளி அடையாளங்களுடன் ஒத்துப் போகின்றன. அதைக் கொண்டு சிந்து சமவெளியில் இருந்தவர்கள் தமிழர்கள் என்றும், அவர்கள் ஆரியர்கள் விரட்டவே தமிழ் நாட்டுப்பகுதிக்கு வந்தனர் என்பதும், மாக்ஸ் முல்லர் துவங்கி, கருணாநிதி வரை சொல்லப்படும் ஆதாரமில்லாத கருத்துக்களே.

    இன்றைய கர்நாடக மகக்ளும், பெரும்பான்மையான கேரள மக்களும் இந்த துவாரகை வம்சாவளி மக்களே.

    பதிலளிநீக்கு
  3. மேடம் விளக்கத்திற்கு மிக்க நன்றி இதை நீங்கள் புத்தகம் அல்லது வீடியோ வடிவில் குடுத்த இன்னும் நல்லா இருக்கும் மேடம் அப்ப அந்த மக்கள் கிருஷ்ணருடன் நெருங்கிய தொடர்பு உடையவர்களா... அவர்கள் தற்பொழுது தமிழ்நாட்டில் உள்ளார்களா

    பதிலளிநீக்கு
  4. முல்லை நில மக்கள் சிந்து சமவெளி மக்களா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலும் ஆம். ஆனால் இன்று எல்லாம் கலந்து விட்டது. அவர்களைச் சிந்துவெளி மக்கள் என்பதை விட, துவாரகை மக்கள் என்பதே சரியாக இருக்கும். நச்சினார்க்கினியர் அவ்வாறுதான் கூறுகிறார். அவர்களுக்கு இன்னும் மூலம் கங்கை புறத்துக்குச் செல்கிறது. கிருஷ்ணனுடைய நெருங்கிய மரபணுத் தொடர்பு என்றால் அது வாண்டையார் எனப்படும் குடும்பத்தினருக்குத்தான் இருக்கும். கிருஷ்ணனுக்கும், நப்பின்னைக்கும் பிறந்த 'பாண்டையா' என்னும் மகள் வம்சாவளியினராக இவர்கள் இருக்க வேண்டும்.

      நீக்கு
  5. நப்பின்னை கண்ணனின் மாமன் மகள் என்று கூறுகிறார்கள் கிருஷ்ணருக்கும் தமிழகத்துக்கும் என்ன உறவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறு. நப்பின்னை யார் என்பதைப் பல பழந்தமிழ் நூல்கள் மூலம் அறியலாம். அவ்வாறு நான் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையை இந்த இணைப்பில் படிக்கலாம்.

      http://www.tamilhindu.com/2009/12/who-is-nappinnai/

      நீக்கு
  6. பாண்டியர்களும் சந்திர குலத்தை சேர்ந்தவர்கள் இவர்களும் சந்திர குலம் என்கிறார்களே மேடம் ஐயத்தை தெளிவிக்கவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேளிர்கள் ஹோம குண்டத்திலிருந்து வந்தவர்கள் என்பது கபிலர் புற நானூறில் கூறுவது. இது அக்கினி குலத்தைக் குறிப்பதாக இருக்கலாம். 3500 ஆண்டுகளுக்கு முன் சரஸ்வதி- சிந்துப் பகுதி இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டபோது சிதறிய மக்களில் வேளிரும் ஒருவர். அப்பொழுது அக்கினி வம்சம் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில் அக்கினி குலத்தைச் சேர்ந்த கூர்ஜரப் பிரதிஹாரர்கள், சிந்து சமவெளியில் உள்ளதைப் போல ஒற்றைக் கொம்பு வராஹ முத்திரையை வெளியிட்டனர். அதே போல இதே பகுதியில் வாழ்ந்த யௌதேயர்கள் தான் ஆறுமுகக் கடவுளை நாணயத்தில் அச்சிட்டனர். அவற்றை இந்த இணைப்பில் பார்க்கலாம்.

      http://en.wikipedia.org/wiki/Yaudheya

      முருகனுக்கு வேள் என்று பெயர். வேளிரும் வேள் என்னும் பெயர் கொண்டவர்கள். அக்கினி குல க்ஷத்திரியர்கள், முருகனைக் குறிக்கும் அக்கினி, வீரம், போன்றவற்றுக்குப் பெயர் போனவர்கள், இவர்கள் உண்டானதே, வட மேற்கு இந்திய எல்லைப் பகுதியைக் காக்கவே. இன்றும் அந்தப் பகுதியில் வேள் என்னும் பெயரின் ஹிந்திச் சொல்லான பேள் என்னும் பெயரில் மக்கள் இருக்கின்றனர். அவர்களை பேல்தார் - அதாவது வேலை ஏந்தியவர் என்றும் அழைப்பர். பிரிடிஷ் காலத்தில் இவர்கள் நலிவுற்றனர். வேளிருடன் தமிழ் நாட்டுக்கு வராமல் அங்கேயே தங்கிய வேள்களாக இவர்கள் இருக்கலாம்.

      நீக்கு
  7. வன்னியர்களும் அக்னி குலம் என்கிறார்களே அவர்களுக்கம் இவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா

    பதிலளிநீக்கு
  8. குஜராத்தின் Banya வன்னியர் என்ற பெயரை ஒத்திருக்கிறது. வாஹினி அல்லது பாஹினி அல்ல. இது இருக்கட்டும், வன்னியர்கள் அக்கினி குலம் என்றால், அவர்கள் தமிழ் மண்ணில் பாரம்பரியமாக இருந்தவர்கள் இல்லை என்றாகிறதே, ஒத்துக் கொள்வார்களா?

    பதிலளிநீக்கு
  9. அவர்கள் ஆந்திராவில் வேறு பெயரில் உள்ளதாக கூறுகிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதிலிருந்து என்ன தெரிகிறது? எல்லோரும், எல்லா இடத்திலும் கலந்து இருக்கிறார்கள். இதில் தனியாக மொழி அடையாளமோ, இன அடையாளமோ சொல்வது சரியா?

      நீக்கு
  10. தமிழகத்தில் இருந்து சென்றிருக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கினி குலம், தமிழகம், ஆந்திரா - இந்த மூன்றுடனும் தொடர்பு வருவதால், வன்னியர்கள் தமிழரா. தெலுங்கரா அல்லது குஜராத்தியரா? எது அவர்கள் உண்மையான அடையாளம்?

      சரி, தமிழகத்திலிருந்து சென்றிருந்தாலும், அக்கினி குலம் என்கிறீர்களே, தமிழ் நாட்டில் அக்கினி குலம் ஏது? அதனால் வன்னியர்கள் தமிழர்கள் இல்லை என்பதை ஏற்றுக் கொள்வார்களா?

      நீக்கு
  11. சரி அவர்கள் எதாவுது ஒரு மாநிலமாக இருக்கட்டும் அவர்களுக்கும் வேளிர்களுக்கும் தொடர்பு உள்ளதா?

    பதிலளிநீக்கு
  12. அவர்கள் வேளிர்கள் அல்லர். ஆனால் வேளிருடன் வந்த 18 குடிகளில் ஒரு குடியினராக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. துவாரகையிலும், அதர்கு முன் கங்கைப் புறத்திலும் அவர்களது பரம்பரை செல்லக்கூடும்.

    பதிலளிநீக்கு
  13. தமிழக ஆயர்களும் (இடையர் கோனார் ) பிற மாநிலங்களில் வாழும் யாதவர்களுக்கும் என்ன தொடர்பு ? அனைவரும் யது வம்சாவளியினரா ? கண்ணனை வழிபடுகிறோம் , கால்நடை வளர்ப்பு இந்த ஒத்த அடையாளத்தை கொண்டு அனைவரும் தங்களை ஒரு குலம்(யது) கட்டிகொள்வது சரியா ? சரியெனில் அவர்களுக்குள் மொழி பலவாக உள்ளதே ? திராவிட (திராவிடம் பேச விருபதவன் நான்) மொழிக்குடும்ப மக்கள் தங்களை யாதவர்கள் அல்லது ஆயர் எனக்கூறினால் நபுவதர்க்கான மூலக்கூறுகள் உண்டு . அதே வட மாநில மக்களோடு தென் மாநில மக்களும் சேர்ந்து தாங்கள் அனைவரும் ஒரே குலம் என கூறுவது எப்படி உன்னமையாக இருக்க முடியும் ? மொழி கலாச்சாரம் எல்லாம் வேறுபடுகிறதே . அணைத்து யாதவர்களும் தங்களை கண்ணன் வழி வந்தவர்கள் என கூறிக்கொண்டால் எந்த மொழியில் தான் கண்ணன் பேசியிருப்பான் ? மிக பழமையான மொழி தமிழும் சமஸ்கிருதமும் , அவன் (கண்ணன் ) வாழ்ந்த பொது இவ்விரு மொழியில் ஒன்றினையே பேசியிருக்க வேண்டும். கண்ணன் தமிழ் பேசியிருப்பான் எனில் தென்னக மாநில யாதவர்கள் கூற்று உண்மை . சமஸ்கிருதம் பேசியிருப்பார் எனில் வட இந்திய மக்கள் மட்டுமே உரிமை கொண்டாட முடியும் . ஆனால் இங்கே அணைத்து யாதவ மக்களும் ஓர் குடி எனக் கூறுவது ஏற்புடையதாக தோன்றவில்லை எனக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொழிலை வைத்து ஒரு குடி என்கிறார்கள். மொழி பாறுபடலாம். ஆனால் கலாசாரம் ஒன்றே.

      தொழில் அடிப்படையில், திருமண உறவுகள் நிகழ்ந்திருக்கின்றன. இது எல்லா வர்ணத்தவர், தொழில் முறை ஆகியவற்றுக்குப் பொருந்தும். 19 ஆம் நூற்றாண்டு வரை பார்ப்பனர்கள் மத்தியிலும், மொழிக்கு அப்பாற்பட்டு பிற பகுதிகளில் இருந்த பார்ப்பனர்களுடன் திருமண உறவு முறை இருந்தது என்று சொல்லக்கூடிய ஒரு கருத்து செப்பேடுகளில் இருக்கிறது. வண்ணார் மக்கள் மத்தியில் இவ்வாறு உறவு இருந்தது என்று சொல்லும் வண்ணம் ஒரு செப்பேடு கிடைத்துள்ளது. ஆயர்களைப் பொறுத்தவரையில், கொல்லேறு தழுவுபவன், ஆய மகளுக்குக் கணவனாகக் கூடிய அருகதை உள்ளவன். காங்கேயம் உள்ளிட்ட பகுதிகள், துவாரகை மக்கள் குடியேறிய பகுதிகளே. இதைப் பற்றியும் இந்த தளத்திலேயே கட்டுரை உள்ளது. கிருஷ்ணன், தமிழ் நிலத்தைச் சேர்ந்த உபகேசி என்னும் நப்பின்னையை, ஏறு தழுவி மணந்திருக்கிறான். என்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரையை இங்கே படிக்கவும். http://www.tamilhindu.com/2009/12/who-is-nappinnai/

      சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர்க் குரவையில் மாதரி முதலியோர் ஆடிப் பாடும் ஆட்டம், பால சரிதம் என்னும் சமஸ்க்ருத நாடகமாகும். மாதரியே, வால சரிதத்தில் வரும் ஒரு பகுதியை ஆடுவோம் என்று அழைக்கிறாள். இவ்வாறு பல சான்றுகள் உள்ளன. எனது ஆங்கிலக் கட்டுரைகளில் ஆங்காங்கே எழுதியுள்ளேன்.

      நீக்கு
  14. //// துவாரகைப் பகுதியில் இருந்த மக்களை அகஸ்தியர் தமிழ் நாட்டுப் பகுதிக்கு அழைத்து வந்தார். அவர்கள் சேர, சோழ , பாண்டிய அரசுகளின் எல்லைப் புறங்களில் குடியமர்ந்தனர். தர்மபுரி, க்ருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஹோசூர், பெங்களூர், வயநாடு, மைசூர், கோயம்புத்தூர், பழனி போன்ற இடங்களில் குடியமர்ந்தனர். இந்த மக்களது குடியிருப்புகள் மஹாரஷ்டிரா துவங்கி, கர்னாடகா வழியாக கன்னியாகுமரி முனை வரை சென்றது.

    கடை எழு வள்ளல்கள் அனைவரும், இந்த மக்கள் கூட்டத்தைச் சேர்ந்த வேளிர் அரசர்களே.ஔவைக்கு நெல்லிக் கனி தந்த அதியமான் தர்மபுரிப் பகுதியை ஆண்டான். அவனும் இந்த மக்கள் கூட்டத்தைச் சேர்ந்தவனே. இவர்கள் வந்த பிறகுதான் ஐந்திணைகளாகத் தமிழ் நிலம் பகுக்கப்பட்டது. தொல்காப்பியம் எழுதப்பட்டது. காடழித்து நாடாக்கிய முல்லைத் திணை உருவாக்கப்பட்டு அங்கு இந்த மக்கள் குடியமர்த்தப்பட்டனர். முல்லைக் கலியில் கிருஷ்ணனைப் பற்றி தூக்கலாகச் சொல்லப்படுவதற்கு இவர்களது துவாரகை மூலமே காரணம். துவாரகைக்கு வருவதற்கு முன் இந்த 18 குடிகளும் கங்கைக் கரைப் பகுதியில் இருந்தனர் என்பதற்கு மஹாபாரதத்தில் சாட்சி இருக்கிறது.///// அப்படி எனில் தொல்காப்பியர் கூறும் தகவல்கள் முரண்படுகிறதே , தமிழர் வாழ்க்கைமுறை நிலங்களின் அடிப்படையில் கூறும்போது ஒவ்வொரு நிலமாக மனிதன் (மலை காடு ஆற்றங்கரை கடல் ) இடம்பெயர பெயர நாகரிகம் வளர்ந்ததாக குறிப்பிடப் படுகின்றதே ? மகாபாரதத்திற்கு பிறகு நிலங்கள் பகுக்கப்பட்டிருந்தால் ஏன் பாரத போர் பற்றி குறிப்பிடவில்லை ? மாயோன் என எழுதுவதற்கு பதிலாக கண்ணன் (அ) கிருஷ்ணன் என்று ஏன் முல்லை நில மக்களின் கடவுளாக குறிப்பிடப் படவில்லை ? கற்ப்பானது முதன் முதலில் முல்லை நிலத்தில் தோன்றியதாக ஏன் பாட வேண்டும் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இடம்பெயர பெயர நாகரிகம் வளர்ந்ததாக குறிப்பிடப் படுகின்றதே ?//

      இவ்வாறு தொல்காப்பியத்தில் எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது?

      //மகாபாரதத்திற்கு பிறகு நிலங்கள் பகுக்கப்பட்டிருந்தால் ஏன் பாரத போர் பற்றி குறிப்பிடவில்லை ? //

      பாரதப் போர் பற்றி எழுத, தொல்காப்பியம் சரித்திரப்புத்தகம் அல்ல. முதல், கரு, உரிப் பொருள் பற்றிச் சொல்லுமிடத்தில்தான் இந்த நிலப் பகுப்பு வருகிறது. இவற்றில் காடும் காடு சார்ந்த நிலமுமான முல்லை என்பது 'காடழித்து நாடாக்கிய நிலம்" என்பதைப் பற்றி விவரிக்கும் போது 9- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உரையாளர் நச்சினார்க்கினியார், துவாரகை முழுகிய போது அங்கிருந்தவர்களை அகத்தியர் தமிழகத்துக்கு அழைத்து வந்தார் என்று மூன்று இடங்களில் கூறுகிறார். பாயிரம், அகத்திணை இயல் 30 ஆவது சூத்திரம், 32 ஆவது சூத்திரம் ஆகியவற்றை விளக்கும் போது இந்தச் செய்தியைக் குறிப்பிடுகின்றார். அப்பொழுது அந்த மக்களுடனும், அகத்தியருடனும் வந்தவர் அவரது சீடர் தொல்காப்பியர்! தொல் காப்பியம் நச்சினார்க்கினியர் உரையைப் படிக்கவும்.

      //மாயோன் என எழுதுவதற்கு பதிலாக கண்ணன் (அ) கிருஷ்ணன் என்று ஏன் முல்லை நில மக்களின் கடவுளாக குறிப்பிடப் படவில்லை ? //

      மாயோன் என்பது திருமாலைக் குறிக்கும். கிருஷ்ணனுக்கும், ராமனுக்கும் முன்பே திருமால் வழிபாடு பாரதத்தில் இருந்தது. "மா அயோயே, மா அயோயே" எனத்துவங்கும் 3 ஆம் பரிபாடலைப் படிக்கவும். மா- அயோன் என்பது மாயோன் ஆனது.

      //கற்ப்பானது முதன் முதலில் முல்லை நிலத்தில் தோன்றியதாக ஏன் பாட வேண்டும் ? //

      தொல் காப்பியர் எங்கே அப்படி எழுதியிருக்கிறார்?

      நீக்கு
  15. முல்லை நில மக்கள் அல்லது வேளிர் கிருஷ்ணனை தான் வழிபடவேண்டும் என்று இல்லை, அவர்கள் கிருஷ்ணன் காட்டிய வழியில் வந்தவர்கள் மேலும் மகாபாரத போரில் வேளிர் ஈடுபடவில்லை மற்றும் அவர்கள் சிவ வழிபாட்டை சார்ந்த கொற்றவை வழிபாடு கொண்டு இருந்தனர். வேளிர் கங்கை குலத்தவராக தான். ஒரு வேளை அவர்கள் சூத்திரராக கருதப்பட்டு merkathiya கங்கை இன குழுக்களில் இருந்து பிரிந்து அல்லது தனித்து சென்று வாழ்ந்து இருக்கலாம் அல்லது ஒதுக்கப்பட்டு இருக்கலாம். இப்படி அவர்கள் தனித்து வாழ்ந்த இடம் துவாரகை ஒட்டி இருந்து இருக்கும், அவர்கள் ஆயர்,யாதவ இன குழுக்களுடன் சேர்ந்து வேளாண்மையில் ஈடு பட்டு இருக்க வேண்டும் அல்லது நிலத்தை ஆள்பவர்களாக இருந்து இருக்க வேண்டும். கிருஷணன் மகாபாரத போரில் இவர்களை ஈடுபடுத்த முயன்று இருக்கலாம் ஆனால் இவர்கள் போரினை தவிர்த்து இருக்கலாம். கௌரவர் மற்றும் பாண்டவர் இருவருமே தங்களுக்கு உறவினர் ஆவர் மற்றும் ஒரே குலதவரவர். இவிருவரும் அடித்து கொள்வதில் இவர்களுக்கு விருப்பம் இல்லை.இருப்பினும் இவர்கள் பாண்டவர் பக்கம் நின்றனர் தவிர போரில் ஈடுபடவில்லை. மகாபாரத போருக்கு முன்போ அல்லது பின்னரோ இவர்கள் அகத்திய முனிவருடன் சேர்ந்து தென் பகுதி நோக்கி புறப்பட்டனர். கிருஷ்ணர் இவர்களுடன் சேர்த்து ஆயர்,யாதவ மற்றும் பல குடிகளை அனுப்பி வைத்தார்.

    பதிலளிநீக்கு
  16. The vel refers to the "Velvi" (Yagam), (i.e) "Sacrificial Fire", "Agni-Kunda", "Yaga-Kunda", "Anala-Kunda". Therefore, the velirs (Kshatriyas) were referred in the history that, they were brought out from the "Fire-Pit" (Yaga-Kunda) to rule the earth and establish Dharmam. This theory is to be taken for the origin of Kshatriyas and also a theory that, Kshatriyas came from the shoulders of Lord Brahma.


    In the "Purananuru" (Hymn-201), the sangam age poet "Kabilar" clearly says that, the velirs (Kshatriyas) were brought out from the "Fire-Pit" of sage "Vadapal Thava Muni", whom has been identified as "Sambu Maha Muni" by the eminent scholar U.V Saminatha Iyer with the help of Tamil Literatures such as "Vishwapurana Saram" and the "Theiviga Ula" of Irrattai Pulavar. The "Irrattai Pulavar", who had contributed "Theiviga Ula" , "Ekkabaranathar Ula" etc. were patronised by the "Sambuvarayar Kings". The "Sambuvarayar Kings", who hails from the velir clans had ruled "Oyma Nadu" in the sangam age and also during the early imperial cholas period as Chieftains/Feudatories.


    The "Sambuvarayar Kings" clearly mentioned in the imperial cholas inscriptions that. they were from the line of "Sambu-Kulam", which means, they came from the "Fire-Pit" of sage "Sambu Maha Muni". The 12th century poet, Kambar in one of his great work "Silai Ezhupathu" clearly says about the "Vanniyas" (Agni Kulas) came from the "Fire-Pit" of sage "Sambu Maha Muni" and ruled the earth to establish Dharma. Vanniya Puranam and several copper plates pertaining to "Vanniya history" says the similar origin. Obviously, "Vanniyas" are from the line of "Agni" is the reality. In Sanskrit "Vanni" means "Fire". Both are synonyms.


    In the "Purananuru" (hymns-201&202), the sangam age poet "Kabilar" (Belongs to Bramin community) says that, the velir king (Kshatriya) "Irungovel" was the 49th generation king and their ancestors were the rulers of "Dwaraka". The poet "Kabilar" also describes velir "Irungovel" as "Pulikadi Mall" (A valour hero, who killed a Tiger). The eminent scholars in the opinion that, Irungovel belongs to "Hoysala Clan", since, the velir king Irungovel described as "Pulikadi Mall" by sangam age poet "Kabilar".

    (Cont'd.....)

    பதிலளிநீக்கு
  17. The "Hoysala Dynasty" founder "Sala" is said to be "Killed a Tiger" in many "Kannada Inscription". Even many ikons of "Sala killing a tiger" have been placed in the Hoysala temples as their symbol. The "Hoysala" rulers hails from "Yadu-Kulam" (from the line of Moon, Lunar Race, Yadava, Kshatriya). They named their capital (Halibedu) as "Dwaraka", which resembles their ancestors ancient capital "Dwaraka", which was immersed in to the sea nearby the provinces of the present Gujarat. The ancient Dwaraka rulers hails from the line of "Yadu-Kulam" (Yadavas, Kshatriyas) and their clans had spread throughout India such as "Chalukyas", "Kalachuris", "Hoysalas", "Rashtrakutas", "Vilandai Vel", "Kodumbalur Irukkuvel" etc. The "Kulottunga Chola-I", referred in the 12th century "Kulottunga Cholan Ula" as he belongs to the clan of "Duvarapathi Velir" (முகில்வண்ணன் பொன்துவரை இந்து மரபில்) and also "Thee Kon" (தீக்கோன் நிகழ்நிலா அன்று நிருப குல துங்கன்). The noted poet "Kambar" of 12th century A.D. in his work "Silai Ezhupathu" also says, the Kulottunga Chola-I as "Vanni Kulottungar" (கலையா வன்னி குலோத்துங்கர்) and his son as "Agni Kulatharasar Vikramar" (அக்கினி குலத்தரச விக்ரமர் ).


    The "Hoysalas" mother tongue is "Kannadiga" (The old Kannada inscriptions is almost in the form of Tamil script only). The "Kodumbalur Irukkuvel" also refer them as "Irungolan", which is evident from the name "Parantaka Irungolan", one of the Chieftains of imperial cholas. According to the Muvarkoil Inscription, Bhuti Vikrama Kesari built Kodumbalur temple with three shrines. A fragmentary "Kannada Record" found at Kodumbalur mentions "Vikramakesarisvara" (A.R.E. No.140 of 1907) thus confirming the Muvarkoil Sanskrit record which also says that they are from "Yadu Vamsa" and "Yadava". The Sanskrit record also mentions one of the Kodumbalur Irukkuvel kings name as "Aditya Varma", which denotes them as "Kshatriyas" (Varma).


    Irungovel was one of the Velir Chiefs of the sangam age, who ruled from his capital city "Pidavur" was defeated by Karikala Chola. His capital city "Pidavur" has been identified with the modern "Pudaiyur" in Kattumannar Kudi Taluk. Imperial cholas inscriptions refers a territory called "Irungolappadi", which comprising parts of Udaiyarpalayam, Kattumannarkudi, Tittakudi, Virudachalam taluks on both the banks of the vellar river (The river vellar obtained its name from the Velir as "Vel Aar" (வேலாறு). The "Irungolappadi" was ruled by the "Irungolar Chieftains" during imperial cholas times. The "Vilandai Kuttram" was one of the nadu which existed in the "Irungolappadi Region" was ruled by "Vilandai Vel", a chief of Vilandai in the sangam period.

    (Cont'd.......)

    பதிலளிநீக்கு
  18. During the period of Vikrama Chola in the year 1130 A.D, a Velir Chieftain named "Palli Kuttan Madurantakan alias Irungola Raman" referred in the Pennadam inscription (A.R.E. No.259 of 1928-29, Tittakudi Taluk). He belongs to "Vanniya Caste". The "Erumbur" (situated on the northern bank of river Vellar) inscription mentions a Velir Chieftain named "Irungolan Gunavan Aparajitan" as a feudatory to Parantaka Chola-I. The Kattumannar Kudi taluk, Srimushnam inscription refers a Velir Chieftain named "Irungolar Kon alias Narayanan Pugalaippavar Kandan" during the period of Sundara Chola. In Virudhachalam, during the period of Uttama Chola, a Velir Chieftain named "Irungolar Naranan Pirutivipatiyar" had ruled as feudatory to imperial cholas. Similarly during the period of Raja Raja Chola-I, the Velir Chieftains named "Irungolar Prithivipathi Amani Mallar" and "Irungolarkkonar Amani Mallan Sundara Cholar" were referred in the Virudhachalam inscriptions. The "Irungolar Chieftains" had the close matrimonial relationship with imperial cholas.


    The Tittakudi taluk, Vasistapuram inscription of Kulottunga Chola-III, mentions "Kulothunga Choliyar, daughter of Navalur Irungolar and wife of Tundarayan Tiruchchirrambalamudaiyar of Tenur". A line of Chieftains, who ruled during the imperial cholas period were called as "Tundarayar". Around 20 inscriptions mentioned about them, they are "Palli" (Vanniya) by caste. Tittakudi taluk, Tiruvattaturai inscription pertaining to Virarajendra Chola (1067 A.D) mentions, a Chieftain named "Palli Kuttan Pakkan alias Jayankonda Chola Tundanattalvan". The Virudhachalam inscription of Rajadhiraja Chola-I (1050 A.D) mentions a Chieftain named "Visayapurathu Palli Amani Mallan Palli Kondan alias Maravattumalai". The "Irungolar" and "Tundarayar" Chieftains had matrimonial relationship with each other.


    The great "Surutiman Community", who were also called "Irungolar" during the period of imperial cholas. A record of 1218 A.D of Kulothunga Chola-III in Uttattur mentions that, the "Surutimans" were created from the "Fire-Pit" (Yaga-Kundam) by the sage Kasyapa to wage war against the Asuras. Obviously, the great "Surutiman Community" is "Kshatriya Community". They served as Chieftains during imperial cholas period. The "Irungolar Chieftain" named "Surutiman Nayan Soran alias Irungolan referred in the Uttattur inscription of Raja Raja Chola-III (1233 A.D). In the same uttattur during the period of Jata Varman Sundara Pandiyan (1308 A.D), the "Irungolar Chieftains" named "Nerkulam Kani Udaiya Surutiman Mattiyandan alias Soran Irungolan" and "Surutiman Devan Poril Mikaman alias Irungolan" were referred.

    (Cont'd.......)

    பதிலளிநீக்கு
  19. The great "Nattaman Community" were created from the "Fire-Pit" (Yaga-Kunda) of "Guha Munivar". The inscription record of 1227 A.D in valikandapuram mentions Nattamakkal as one among the castes of Idangai 98 kalanai and as the leaders of Chitrameli Periya Nadu (alias) Yadava Kula. This shows, the "Nattamans" were in possession of "Fertile Agricultural Nadus". The term "Yadava-Kula" refers them as "Kshatriyas". The "Vettavalam Chieftains" belongs to "Nattaman Udaiyar Community". The later Malayaman Chieftains refer them as "Bargava Gotra" and suffixed their names with "Varman" which shows them as "Kshatriyas". The later Malayaman Chieftains referred in more than 36 inscriptions as "Vanniyan", "Vanniya Nayan", "Vanniyanar". "Palli Cheriyadi Nambi Kovalaperaraiyan" (Bramins living areas were also called as Cheris during chola period). The inscription evidences says that, the "Kadavarayas" (Vanniyas) had the matrimonial relationship with "Malayamans" proves both belongs to "Vanniyas". The "Udaiyar Palayam" Chieftains refer them as "Bargava Gotram in Ganganooja Family that took its origin from Vanniya Kulam (the family of the Gof of Fire)". The "Siriya Krishnapuram" copper plate published by my guru "Thiru. Natana Kasinathan Sir", clearly says that, "Vanniyas, Surutiman and Nattaman" are from the same clan, they are "Velirs" (Kshatriyas).


    The above mentioned points clearly shows, the "Vanniyas", "Surutiman" and "Nattaman" (Agni Race) are "Kshatriyas". They all were brought out from the "Fire-Pit" (Yaka-Kunda) to rule the earth and to establish Dharmam.

    பதிலளிநீக்கு
  20. The Yadavas means "Yadu Line" (Lunar race, the moon). The Yadavas are Kshatriyas (Velirs). The present "Idaiyars", who called themselves as "Yadavas" in very very later period, after the decline of all the major dynasties. In cholas inscriptions they referred as "Idaiyar", "Konar" (Ko-means, the cow not the King), "Manradi". and "Nanda Gopar Vamsam" only. Even in their "Meikirthi inscription" during pandiya period they never referred as "Yadavas". So, kindly don't confuse the "Velir Yadavas" with the present "Idaiyars", who were called as "Yadavas" of their own in very very later period.

    பதிலளிநீக்கு
  21. The "Vanni" (or) "Agni" means "Fire". The kings (Kshatriyas) created from the "Fire Pit" (Yaga Kunda) to rule this earth and establish "Dharmam".


    In this connection, I hereby submit the "Mount Abu Vimala Temple Inscription of 1378 A.D", which says, the "Kings" generated from the "Fire-Pit" :


    "The first part begins with the well-known story how on the mountain Arbuda there sprang from the fire-pit (anala-kunda, agni-kunda) of the sage vasishtha the hero Paramara. In his lineage appeared the hero Kanhada Deva ; and in his family there was a chief named Dhandhu (Dhandhu Raja), who was Lord of the town of Chandravati and who, averse from rendering homage to the Chaulukya King Bhima Deva"

    (Epigraphia Indica, Vol-IX, No.18, page-151).


    The Rajapura plates of Madhurantaka Deva, 1065 A.D. says, there are 36 "Agni Kulas" :

    "The grant was made by the King Madhurantaka Deva, who belonged to the Chhindaka family of the Naga (Cobta) race" (page-178).

    "Madhurantaka Deva belonged to the Chhindaka family, one of the 36 Agnikulas mentioned by Chand Bardai, the court poet of Prithviraja" (page-178). (Epigraphia Indica, Vol-IX No.23).


    The "Nagavamsi Inscriptions" reveals, that they are "Kshatriyas" and they belongs to "Kasyapa Gotra" and their symbol is "Tiger with a calf" :


    "The dynasty claims to belong to the Nagavamsa and the Kasyapa gotra, to have a tiger with a calf as their crest and to be the lords of Bhogavati the best of the cities"

    (Epigraphia Indica, Vol-IX, No.19, page-161), (Narayanpal stone inscription of queen Gunda-Mahadevi, the mother of Somesvara Deva).


    "In front of this temple, I found a slab with a ancient sanskrit and Telugu inscription on both sides ; the temple of Mahadeva where the slab was found was built by a Raja Somesvara Deva, a Nagavamsi Kshatriya, in the year 1130 A.D."

    (Epigraphia Indica, Vol-IX, No.19, page-162), (Barsur inscription of Ganga-Mahadevi wife of Somesvara Deva).


    From the above evidence, it is established that, Agni kula Kshatriyas generated from the "Yaka-kunda" to rule this earth. "Vanniya Kula Kshatriyas" are called as "Agni Kula Kshatriyas" in Andhra Pradesh. "Vanniya" is the synonym of "Agni".

    (Cont'd........)

    பதிலளிநீக்கு
  22. In the sangam literature "Purananuru" (hymns-201) the poet "Kabilar" says that, the "Irungovel" (Pulikadimal) came from the "Fire-pit" (Agni-kunda) of the sage "Vadapal Munivan" to rule "Dwaraka". The king "Irungovel" hails from the "Velir clan" and the scholars thinks that, "Irungovel" descendants were "Hoysala kings".

    "நியே, வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச்" (புறம்-201), (Purananuru Age - 2nd century B.C.)


    The eminent scholars Dr. U.V. Swaminatha Iyer and Avvai Duraiswamy Pillai, considers the "Vadapal Munivan"
    with "Sambu Maha-munivar" with the help of evidences such as "Vishwapurana-Saram" and "Deiviga-Ula of Irrattai Pulavar". The "Vishwapurana-Saram" (15th poem) says the following :-

    "சம்புமா முனிவன் வேள்வி தழல் தருமரபில் வந்தோன்"


    In the Thirumoolar's Thirumanthiram, the sage "Vadapal Thavamuni" is mentioned that, he created the "Fire-pit" :

    "அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
    அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடும்
    அங்கி உதயஞ்செய் வடபால் தவமுனி
    எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே" (திருமூலர் திருமந்திரம் - 338)


    The "Vanniya Puranam", "Silai Ezhupathu" clearly says that, Vanniyar came from the Fire-pit of sage "Sambu Maha Munivar" to rule the earth and to establish "Dharmam". The "Sambuvarayar Chieftains" referred them in the inscriptions/Ekkambaranathar Ula, as "Sambu-Kula Chakravarthy" and the "Pannattar" (Vanniyas) referred them in inscription as "Sambuvar-Kulapathi Pannattar".


    The great Hoysala king "Vira Vallala Deva-III" referred as "Vanni Kulathinil Varum Manna" (வன்னி குலத்தினில் வரு மன்னா) and "Anal Kulathon" (அனல் குலத்தோன்) in the the authentic work "Arunachala Puranam" of 14th century A.D. The Velir "Irungovel" (Pulikadimal) of Sangam Age is considered as the ancestors of "Hoysalas".

    (Cont'd.......)

    பதிலளிநீக்கு
  23. The great "Hoysalas" referred them as :


    "பிருதிவல்லபன் மகாராசாதிராச பரமெஸ்வர
    துவாராபதி புரவராதீஸ்வர யாதவகுலாம்"

    (S.I.I. Vol-VI, No.35), (Bosala Vira Ramanatha Devar, Jeyangondanatha temple, Mannargudi, Tanjore).


    "Hoysala race, sprung from Yadu" (Epigraphia Indica, Vol-VII, page-72).


    "In the lineage of Yadu (the legendary) king sala, sasakapura acquired the named Hoysala"

    (Epigraphia Indica, Vol-VII, Page-73).


    Therefore, the great "Hoysala Kings" (Kshatriyas) emerged from the line of "Yadu", "Yadava". "Vanni Kula" (Agni Kula).


    The great "Hoysalas Kings" descedants are "Vijayanagara Kings" (Sangama, Chaluva, Tuluva) :


    "In the Yadu's race, Samgama ; his sons Harihara and Bukka" (Epigraphia Indica, Vol-VII, Page-80).


    "Vijaya Nagara lamp pillar inscription of the time of Harihara-II (the son of Bukka-I, of the Yadava race)"

    (Epigraphia Indica, Vol-VII, Page-80).


    "In the race of the Yadavas, Samgama ; his son Vira-Bhukka or Bhukka (Bukka-I) married Gauri ; their son Harihara (II)"

    (Epigraphia Indica, Vol-III, Page-120), (Nallur Plates of Vira Pratapa Harihara (Harihara-II).


    The "Devula Palli Plates of Immadi-Nrisimha" (Epigraphia Indica, Vol-VII, Page-78) states that :

    "It would appear also that Nrisimharaya was probably related to the kings of the first dynasty of karnata empire, since both claimed to belong to the Yadava line of the lunar race of Kshatriyas. Saluva Nrisimharaya, father of Immadi-Nrisimha, the donor of the present grant, and the second by Nrisimharaya's general 'Narsenaque' or 'Narasimha', the founder of the Tuluva dynasty".


    The "Krishnapuram Plates of Sadasivaraya" (Epigraphia Indica, Vol-IX, No.52, page-340) states that :

    (Verse-1) : Invokes Sambhu

    (Verse-2) : The boar incarnation of Vishnu

    (Verse-4&5) : Trace the geneology of the family from the Moon

    (Verse-6&7) : In his (i.e. Turvasu's) line was born the husband of Devaki. King Timma, as famous among the Tuluvas and krishna was among the Yadus.

    (Verse-28&30) : King Sadasivaraya, who was like the santana tree on the hill of devas, was duly installed on the throne that was the jewel of the prosperous town, Sri-Vidyanagari, by king Rama, his sister's husband, the protector of the goddess sri of the great kingdom of Karnata, who was an ornament to all Kshatriyas, who was endowed with valour, nobility and kindness and by the chief ministers.

    (Cont'd.......)

    பதிலளிநீக்கு
  24. "In the temple of simhachalam in the vizagapatnam district there is an inscription dated in the saka year 1350 (1428 A.D). It records that Telunguraya, son of Samburaya of Kannada-Desa". There is another inscription of Telungaraya, also dated in the saka year 1350 (1428 A.D), at Santaravuru in the Bapatla taluka of the Kistna District, in which the king is described as the Mahamandalesvara Misaraganda Kathari Saluva Telunguraya"

    (Epigraphia Indica, Vol-VII, No.8, page-76)


    In the Thiruvannamalai, Aavur inscription, the king Rajanarayana Sambuvarayar-III mentioned that, the king Kampana Udaiyar as his "Maithunanar" (மைத்துனனார் ). Therefore, it is evident from the 1379 A.D. inscription that, Sambuvarayar Kings and Vijayanagar Kings (Sangama) were relatives. They are "Velirs" (Kshatriyas).

    (A.R.E. No.306 of 1919), (23rd year, 1379 A.D).


    In the "Unjini Copper Plate" of 1463 A.D, says that, the "Saluva King Mallikarjuna Deva Maharayar" came from the "Fire-pit" (Yaka-kunda) of "Sambu Maha Muni". Even in the "Villiyanoor Copper Plate", the same king referred as "Raja Vanniyan".

    "சம்புமா முனியார் யாகத்தில் அவதரித்தானவர்
    அய்யன் சூரர் (திரு) புவனம் தெக்ஷனாதிபதிக்கு
    விசையர் மகா வீரப்பிறதாபர் வன்னிய வேட கண்டர்
    அக்கினிப் புரவி யுள்ளவர் மகா பிறாக்கிறம சாலியறானவர்"

    (Avanam - 19, Jul-2008, Page-104), (Mallikarjunarayar, 1463 A.D).


    From the valid points above discussed, it is proved beyond doubt that, the "Vannia Kula Kshatriyas" (Agni Kula Kshatriyas) came from the "Fire-pit" to rule the earth. Since, Purananuru (song-201) also clearly says with out any doubt that the "Velir" (Kshatriyas) generated from the "Fire-pit". The sangam age "Purananuru" date back to 2nd century B.C (2200 years). The "Purananuru" (song-201) further says about the "Velir Irungovel" as 49th Generation. If you calculate a generation gap as 25 years then (49 x 25 = 1225) it works out to 1200 years (approx). Then the "Dwaraka Age" is (2200 + 1200 = 3400) is 3400 years (approx). Lets us take to 3000 years. Therefore, the existence of "Agni Kula Kshatriyas" (Vannia Kula Kshatriyas) in Southern India dates back to 10th century B.C.

    பதிலளிநீக்கு
  25. History is fact based on valid evidence. Evidence along conquer the victory. I have placed the appropriate evidence in connection with the "Velirs", which is absolutely correct. But I don't know the reason for not publishing the same.

    பதிலளிநீக்கு
  26. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு