'ஆரிய இடப்பெயர்வு' (ஆரியப் படையெடுப்பு என்றும் கூறப்படுவது) கோட்பாட்டை முன் வைப்பவர்களால், ஆரிய ஐரோப்பியர்களால் தான் ஹோமம் பாரதத்திற்குக் கொண்டுவரப்பட்டது என்ற கருத்து பரப்பப்படுகிறது. ஹோமத்தின் ஆரம்பம், நம்முடைய வேதங்களிலேயே குறிப்பிடப்பட்டு இருக்கிறது என்பதை அறியாததால் நம்மால் அதற்குப் பதிலடி கொடுக்க முடியாமல் இருந்து வந்திருக்கிறது. அந்தக் குறையைப் போக்கும் வண்ணம் இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் முதலில் வெளியிடப்பட்டு, தற்போது, தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
தமிழ் தெரிந்த அனைத்து மக்களையும் இது சென்றடைய வேண்டுமென்று, இந்தத் தமிழ்ப் பதிப்பை எளிதில் தரவிறக்கம் செய்யுமாறு கொடுத்துள்ளேன்.
படித்து, உங்கள் நட்பு வட்டங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
புத்தகத்தின் பிற முக்கியக் கருத்துக்கள்:
* தமிழ்ச் சங்க கால விவரங்கள்
* தமிழும், சம்ஸ்க்ருதமும் ஒன்றாகத் தோன்றி, வளர்ந்த வரலாறு
* வேத ஹோமம் ஆரம்பித்த இடம், காலக்கட்டம், அது மேலும் பரவிய விதம்
* அப்பொழுது இருந்த விண்வெளி அமைப்புகள்
* மனுவின் காலக்கட்டம், அவன் வாழ்ந்த இடம்
* இராமாயண காலக் கட்டம்
* ஸ்கந்தனே வேத ஹோமத்தை ஆரம்பித்த வரலாறு
* ஸ்கந்தனது குலம் ஐரோப்பா எங்கும் பரவின சுவடுகள்
தரவிறக்கம் செய்ய: முதல் வேத ஹோமம் எப்பொழுது யாரால் செய்யப்பட்டது?