வியாழன், 26 ஜனவரி, 2012

95. மொஹஞ்சதாரோவில் வராஹப் பெருமாள்!


இந்தத் தலைப்பே மலைப்பைத் தருவதாக இருக்கிறதா?

மலைக்க வேண்டாம்.


சிறியதும், பெரியதுமாக அதிக அளவில் மொஹஞ்சதாரோவில் கிடைத்துள்ள உருவம், ஒற்றைக் கொம்புள்ள மிருகத்தின் உருவமாகும்.  

இதை ஆங்கிலத்தில் UNICORN  என்பார்கள்.

சமஸ்க்ருதத்தில் வராஹம் என்கிறோம்.

தமிழில் ஒற்றைக் கொம்புப் பன்றி அல்லது கேழல் என்கிறோம்.

ஒற்றைக் கொம்புள்ள மிருகத்தை இந்த முத்திரையில் காணலாம்.அலங்கரிக்கப்பட்டதாகவும், அதற்கு முன்னால் பாத்திரங்கள் போன்ற வடிவத்தில் அமைப்புகள் இருப்பதையும் காணலாம். இதே போன்ற உருவம், பல அளவுகளில் கிடைத்துள்ளது.


மிகச் சிறிய அளவிலும் கிடைத்துள்ளனஇந்தப் படத்தில் இருப்பதைப் போல. 

வெள்ளியில் செய்யப்பட்டவையாகவும் கிடைத்துள்ளன, இந்தப் படத்தில் இருப்பதைப் போல.


 


ஓரளவு பெரிய அளவிலும் கிடைத்துள்ளன இந்தப் படத்தில் இருப்பதைப் போல.