வியாழன், 18 நவம்பர், 2010

1. "நான் திராவிடன்" என்னும் சந்திரமுகி நோய்தமிழ் நாட்டை ஒரு நோய் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. இது பழைய நோய்தான். புதிதில்லை. என்றாலும் கொஞ்சம் தீவிரமாக இப்பொழுது பரவிக்கொண்டு வருகிறது. இதைச் "சந்திரமுகி நோய்" என்று சொன்னால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். நல்ல வேளையாக  இது அரசியல்வாதிகளின் மத்தியில்தான் அதிகம் காணப்படுகிறது. மக்களுக்குப் பரவினாற்போலத் தெரியவில்லை. ஆனால் அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால், அண்டை வீட்டுக் காரனுக்கு இரைச்சல் லாபம் என்பார்களே அதுபோல அரசியல்வாதிக்கு இந்த நோய் வந்துள்ளதால், மக்களுக்குத் தலைவலிதான் லாபமாக இருக்கிறது. அப்படி என்ன நோய் இது என்று கேட்கிறீகளா? தொந்திரவு பிடித்த இந்த நோயின் பெயர் 'திராவிட நோய்'இதைதான் நான் சந்திரமுகி நோய் என்கிறேன்.
 
சந்திரமுகி நோய், கங்காவைப் பாடாகப் படுத்தியது. கங்காவை யாரால் மறக்க முடியும்?  ஜோதிகாவின் ஆக்டிங்கில் கங்காவையும், சந்திரமுகியையும் மாறி மாறி நாமெல்லாம் பார்த்தது இன்னும் நினைவில் நிற்கிறது. கங்காவுக்குத் தான் யார் என்பது அவ்வபொழுது மறந்து விடும். சந்திரமுகியின் கொலுசைப் பார்த்தால் அது தான் போட்டு ஆடியது என்று நினைப்பாள்.  சந்திரமுகியின் உடையைப் பார்த்தால் அது தன்னுடையதுதான்   என்று  நினைப்பாள். சந்திரமுகி சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் தொடர்புபடுத்திதானே சந்திரமுகி என்று கங்கா நினைத்து விடுவாள். நினைப்பது மட்டுமில்லை,   சந்திரமுகியைப் போலவே நடந்து கொள்ளவும் ஆரம்பித்து விட்டாள். இதுதான் சந்திரமுகி நோய். 

                              
நாம் நாமாக இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நாமே இன்னொருத்தர் என்று கற்பனை செய்யக்கூடாது. நம்மைப் பற்றித் தெரிந்து கொள்ளவில்லை என்றால்தான் இப்படியெல்லாம் பிரமை வரும். தன்னையே  இரண்டு வேறுவித மனிதனாகப் பார்க்கும் ஒருவித  மனோ வியாதி இது.  

இப்படிப்பட்ட  ஒரு நோய்தான் இன்று  திராவிடம் பேசும் தமிழ் நாட்டுத் தலைவர்களைப் பற்றியுள்ளது. நாம் தமிழர்கள் என்பது அவர்களுக்கு  நன்றாகத்  தெரியும். இவ்வளவு வருடங்களாக தமிழ், தமிழ் என்று தமிழைப் பற்றியே பேசி இருக்கிறார்கள். சங்கத் தமிழைக் கரைத்துக் குடித்தேன் என்றும் சொல்லி வருகிறார்கள். அந்த நாள் தமிழ் அரசர்கள் போல, தமிழ் வளரச் சங்கம் கூட்டுவோம் என்று மாநாடும் நடத்துகிறார்கள். கூடவே  நாம்  திராவிடர்கள் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.

ஒரு தெலுங்கரைப் போய்க் கேளுங்கள், நீங்கள் திராவிடரா என்று, இல்லை என்பார். கேரளத்தவரைக்   கேளுங்கள், கர்நாடகத்தில்  இருப்பவரைக் கேளுங்கள். அவர்கள் எல்லாம் தாங்கள் திராவிடர் என்று ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் தஞ்சை மண்ணில் வந்தவர்களும், மதுரைத் தமிழைக் குடித்தவர்களும் தாங்கள் திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்களேவேடிக்கையாக இல்லை
நாம் தமிழர்தான் என்று நம் பழந்தமிழ் நூல்கள் சொல்கின்றன. நம்  தாத்தா  காலம் வரை  திராவிடன் என்ற ஒரு வார்த்தையே அவர்களுக்குத் தெரியாது.  சங்கத் தமிழ் நூல்களில் ஒரு இடத்திலாவது  நம் நாடு திராவிட நாடு என்றும், தமிழ் பேசும் நாமெல்லாம் திராவிடர் என்றும் சொல்லப்படவில்லை. நமக்கு ஒரு திராவிட அடையாளம் இருந்திருந்தால் சங்கம் வளர்த்த நம் தமிழ் முன்னோர் அதைச் சொல்லாமல் விட்டிருப்பார்களா?  அரசியல்வாதிகள் தாங்கள் விரும்புகிறதைச் சொல்லிவிட்டுப் போவார்கள். இரட்டை மன நிலையில், சந்திரமுகி  நோயில் சிக்கி, அவர்கள் இப்படிச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் என்று நாம் கண்டு கொள்ளாமல் விட்டு விடலாம். ஆனால் நம்மையுமல்லவா திராவிடர்கள் என்று நம்ப வைக்க  முயலுகிறார்கள்?  நாம் தமிழர்கள் இல்லையாநம் பூர்வீகம் தெற்கு பாரதத்தில் இல்லையாநம் பேசும் தமிழ் வாழ்ந்தது, வளர்ந்தது எல்லாம் தென்னவன் என்று போற்றப்படும் தென் பாண்டி அரசர்களது நிழலில் இல்லையாஇப்படித்தானே மலை மலையாகக் குவிந்திருக்கும் நம் பழந் தமிழ்  நூல்கள் கூறுகின்றன?அப்படியல்ல. நம் முன்னோர்கள் சிந்து சமவெளிப் பகுதியில் வாழ்ந்தவர்கள். அவர்களை ஆரியர்கள் விரட்டி விடவே தென் பகுதிக்கு வந்து விட்டார்கள் என்று சொன்னால் மறத்தமிழன் நம்பலாமாதமிழர்களும், பாண்டியன் மூதாதையரும் பயந்து ஓடி வந்தவர்கள் என்று சொல்வது போல இருக்கிறதே? விரட்டி விட்டால் ஓடி வருகிறவனா பாண்டியன் (அல்லது அவன் முன்னோன்)? அவன் நின்று போர் புரிந்து, வந்தவனை ஒரு கை பார்க்காமலா போயிருப்பான்?  குறிப்பாக பாண்டியன் லேசுப் பட்டவனாஇன்றைக்கும்  மதுரைக்காரனைப் பாருங்கள். திருவுக்கும், மங்கலத்துக்கும் பேர் போனவனான அவன் யாருக்காவது அஞ்சுகிறானா? யாராவது அவனை எதிர்த்துப் பேச முடியுமா? அப்படிப் பேசினால் பொசுக்கி விட மாட்டானாஅவனுக்கு ஒன்றும் தெரியவில்லை என்றாலும்பெயருக்காவது வடக்கில் உட்கார்ந்திருப்பானே தவிர, விரட்டி விட்டுவிட்டார்கள், அதனால்  தெற்கிற்கு ஓடி வந்து விட்டேன் என்ற கதை பாண்டி நாட்டுத் தமிழர்களிடம் எடுபடாது. 

விரட்டப்பட்டு ஒடக்கூடியவன் தமிழன் அல்லன் என்று சங்கத் தமிழ் நூல்களும் காட்டுகின்றன. ஒரு யானை எதிர்த்தால்கூட பயந்து ஓடி வராமல், அந்த யானையுடன் போரிட்டு அதை அடக்கி வருவான் மறத் தமிழன் என்று சங்க நூல் கூறுகிறது. அவனைப் பெற்ற தமிழ்ப் பெண்ணோ முறத்தால் புலியையே அடித்து விரட்டியவள். இன்று அவள் அடிப்பது கொசுவென்றாலும் அஞ்சாமையும், ஆற்றலும், துணிச்சலுடன் எதிர்த்து நிற்பதும் தமிழர்கள் ரத்தத்தில் வந்த பண்பு. அப்படிப்பட்ட தமிழனுக்கு ஏன் இந்த சந்திரமுகித்தனமான  பிரமை?  இந்தப் பிரமைக்குக் காரணம், சிந்து சமவெளிப் பகுதியில் காணப்பட்ட சில பொருட்கள், மொழி பற்றிய ஆராய்ச்சிகள் முதலியன.  அவற்றுக்கும் நமக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதால்  அவர்கள்தான் நாம் என்று சந்திரமுகித்தனமாக  நினைத்துவிடுகிறார்கள்  இந்த நோயாளிகள். உண்மையில் அந்த மக்களது நாகரீகத்துக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை என்று அங்கு கிடைத்துள்ள சின்னங்கள் காட்டுகின்றன. சின்னங்கள் தவிர பிற காரணிகளும் தமிழன் அங்கிருந்து வந்தவன் இல்லை என்று காட்டுகின்றன. அது புரியாமலும், தமிழனின் மூலத்தை அறியாமலும், தங்களைப் பீடித்த நோயைப் பரப்ப முயலுகிறார்கள்.  
 
கங்காவைக் குணப்படுத்த டாக்டர் சரவணன் வந்தார். அரசியல்வாதிகளைத் தாக்கியுள்ள இந்த சந்திரமுகி நோய் தமிழ் மக்களுக்குப் பரவாமல் இருக்க அந்த டாக்டர் சரவணன் தான் வர வேண்டும் போல இருக்கிறது. ஆனால் எப்பொழுது வருவார், எங்கே வருவார் என்று அவரைப்பற்றி அவருக்கே தெரியாது. ஆனால் வர வேண்டிய நேரத்தில் வந்து விடுவேன் என்று சொல்லியிருக்கிறார். அப்படி அவர் வரவில்லை என்றாலும் டாக்டர் வசீகரனாக அவர் ஆகி விட்டார். நல்லது செய்யும் எந்திரனை அனுப்பி நோயைத் தீர்க்கலாம். அவரே வரலாம். வராமலும் போகலாம். 

ஆனால் இவர்கள் யாரையும் நம்ப முடியாது. நம்மை நாமேதான் காத்துக் கொள்ள வேண்டும். திராவிடப் பேச்சில் உள்ள ஓட்டைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏவுகிறவனுக்கு வாய்ச் சொல், செய்கிறவனுக்கு தலைச் சுமை என்பதைப் போல அரசியல்வாதிகள்  வாய்ச் சொல் கேட்டு, தமிழ் மக்களாகிய நாம் தலைவலி அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டாம்.  தமிழன் விரட்டப்பட்டு வரவில்லை. அவன் பூர்வீகம் இங்குதான், அவன் அடையாளம் தமிழன் என்பதுதான் என்ற  விழிப்புடன் நாம் இருப்போம்.

48 கருத்துகள்:

 1. உண்மையான கருத்துக்கள்.. ஆனால் நம்ப மாட்டார்கள். அனுபவித்தாலே புரியும் நிகழ்வுகள் இவை

  பதிலளிநீக்கு
 2. Guys first of all we wanna know what dravidians means. dravidians=Nomads(nadodigal). "Thiraikadal thaandiyum thiraviyam thedu" yaathum oore yavarum kealir" so permanent place was not for us i think. you cant chose any place as birth place for tamil. May be kumari continent, afghanistan, across saraswathy river or across indus river or else Greek or mexico. In africa there is a god name murungu(mountain god). Godesses name (amun). Aryan invasion theory was proved wrong. Ramyanam was written by valmiki a tamil pundit.(source:Bogar 7000 verse 5834 and 5835). In greece street name tamil shale. In hebrew month calendar Iyer and sivan were the 2nd and 3rd month respectively. America belongs to Red indians. In american continent there is more than 260 languages still spoken by the tribes which had the dialect of tamil. In madagascar their malaghasy language contains 40% of tamil. In pakistan, afghanistan and turkey there is lot tribes speaking dravidian languages such as bhraui, Dhangar and kurdish. australia and newzealand base people were maori peoples. Their maori language contains More than 90% of tamil. In japanese more than 200 tamil words were there. Tamale is one of the food in mexico. Mani is one of the oldest prophet in afghanistan. Nalanda was destroyed by bakthiyar(= tamil origin) khilji. buddhism and jainism was established by tamil kings and peoples during kalabhar dynasty.
  So we cant predict the base of tamilians. More chance is kumari continent. Because 1st sangam period was more older than any other history. But no body is willing to do archeaological studies about kumari continent. If it is to done then world would have re write the history.


  Darwins theory was proved wrong. Then how human exist!!! Big question right!!!!. all we know the 10 avatars of lord vishnu. Take a deep look into that characters stage by stage growth. Surely you will come to the conclusion.

  Kalidasan
  From Gr8 pandyan kingdom

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. apologize jayashree,
   I got the link from facebook mam.
   I wrote this after reading this article alone. we both travelling in a same path searching for the history. But your postings are jaw dropping ones. Big Hats off. If i have any doubts surely contact you. Kudos for you mam.

   Regards
   Kalidasan

   நீக்கு
 3. நம் தாத்தா காலம் வரை திராவிடன் என்ற ஒரு வார்த்தையே அவர்களுக்குத் தெரியாது. சங்கத் தமிழ் நூல்களில் ஒரு இடத்திலாவது நம் நாடு திராவிட நாடு என்றும், தமிழ் பேசும் நாமெல்லாம் திராவிடர் என்றும் சொல்லப்படவில்லை. நமக்கு ஒரு திராவிட அடையாளம் இருந்திருந்தால் சங்கம் வளர்த்த நம் தமிழ் முன்னோர் அதைச் சொல்லாமல் விட்டிருப்பார்களா?

  "dravida" is a mutation of "thamizha" which linguists clearly prove. Tamil people or "Thamizha" when being called by people of other tongues became "dravida". so you will not find "dravida" in tamil literature.

  for example, tamil people now call andhra people as "thelungu" but in andhra its not "thelungu" but its "telugu".

  if we assume that after some time due to some reason, if andhra people adopted the tamil way of pronounciation and called themselves "thelungu", you cant argue that there is no reference to "thelungu" in andhra literature. it wont be because "thelungu" is a tamilised pronounciation of "telugu".

  same way "dravida" is a aryanised pronounciation of "thamizha"

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தத் தொடர் முழுவதையும் படித்தால் உங்கள் கருத்து தவறு என்று தெரிய வரும். முழுவதும் படிக்க நேரமில்லை என்றாலும் 51 முதல் 55 வரையிலான கட்டுரைகளைப் படிக்கவும். அதற்கும் நேரமில்லை என்றால், இன்னொரு வலைத்தளத்தில் நான் இட்ட கருத்துரையை இங்கு தருகிறேன். ‘திராவிடம்’ என்பதன் சுருக்கத்தை அதில் அறியலாம். அது இடப்பட்ட வலைப் பதிவின் முகவரி கீழே:-

   http://ethiroligal.blogspot.in/2012/02/blog-post_25.html

   அதில் நான் இட்ட கருத்துரை வருமாறு:-


   “இன்றைக்குத் திராவிடன் என்ற பெயரில் யாரேனும் இருக்கிறார்கள் என்று தேடினால், இருக்கிறார்கள் - அவர்கள் ‘கோண சீமைத் திராவிடர்கள்’. இவர்கள் பார்ப்பனர்கள்! ஊன்றிக் கவனித்தால், இதுவரை திராவிடர்கள் சொல்லிக் கொண்ட ஆதிசங்கரர், திரமிளேஸ்வர் போன்றோர் பார்ப்பனர்களே. கோணசீமைத் திராவிடர்களும் பார்ப்பனர்களே.

   இவர்கள் இன்று ஆந்திர மாநிலத்தில் கிழக்குக் கோதாவரிப் பகுதியில் வாழ்கின்றனர். 11-ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட ராஜேந்திர சோழன், தன் மகள் அம்மங்கா தேவியை, ராஜமுந்திரிப் பகுதியை ஆண்ட வேங்கி நாட்டு அரசனான ராஜ ராஜ நரேந்திரன் என்னும் சாளுக்கிய அரசனுக்கு மணம் முடித்த போது, அவளுடன் 18 பிராம்மணக் குடும்பங்களைச் சீதனமாக அனுப்பி வைத்தான். கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர்களாதலால், அந்தப் பிராம்மணர்கள் ‘கும்பகோண சீமை” யைச் சேர்ந்தவர்கள் என்னும் பெயரில், கோண சீமத் திராவிடர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டார்கள்.

   காஷ்மீரப் பரம்பரையைச் சொல்லும் ராஜதரங்கிணியில் (10 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது), விந்திய மலைக்கு வடக்கில் வாழ்ந்த பிராம்மணர்களைப் பஞ்ச கௌடர்கள் என்றும், விந்திய மலைக்குத் தெற்கில் வாழ்ந்த பிராம்மணர்களைப் பஞ்ச திராவிடர்கள் என்றும் சொல்கிறது.

   அந்த வரிகள்:-

   ”கர்நாடகாஸ்ச தைலங்கா த்ராவிடா மஹாராஷ்ட்ரகா:
   குர்ஜராஸ்சேதி பஞ்சைவ த்ராவிடா விந்த்ய தக்ஷிணே //
   ஸாரஸ்வதா: கான்யகூப்ஜா கௌடா உத்கல மைதிலா:
   பஞ்ச கௌடா இதி க்யாதா விந்த்யஸ்யோத்தர வாஸின: //


   இதன் பொருள்:-
   விந்திய மலைக்குத் தெற்கே கர்நாடகர், தைலங்கர், திராவிடர், மஹாராஷ்டிரர், குர்ஜரர் என்னும் ஐந்து திராவிடர்களும் (பஞ்ச திராவிடம்).
   விந்திய மலைக்கு வடக்கில் ஸரஸ்வதர், கான்யகூப்ஜர். கௌடர், உத்கலர், மைதிலர் என்னும் ஐந்து கௌடர்களும் (பஞ்ச கௌடம்) வசித்து வந்தனர்.

   இவர்கள் அனைவரும் பிராம்மணப் பிரிவுகள்.
   ராஜ தரங்கிணி மட்டுமல்ல, ப்ராமமணர்கள் வரலாறை ஆராயும் ’ப்ராம்ணோத்பத்தி மார்தாண்டம்” என்னும் வடமொழி நூலும், இந்தப் பஞ்ச கௌடர், பஞ்ச திராவிடர் என்னும் பத்து பிரிவினரையும் பிராம்மணர்களது பிரிவுகளாகச் சொல்கிறது.

   (continued)

   நீக்கு
  2. (continued from previous part of the comment)

   ராஜதரங்கிணியின் இந்த ஸ்லோகம் வட இந்தியாவில் சமீப காலம் வரை பரவலாக அறியப்பட்டு இருந்திருக்கிறது. அதையே தாகூரும் இந்திய தேசிய கீதத்தில் எடுத்தாண்டுள்ளார். தேசிய கீதத்தில், "பஞ்சாப, சிந்து, குஜராத, மராட்டா, திராவிட, உத்கல, வங்கா’ என்று 7 இடங்கள் சொல்லப்படுகின்றன. இவற்றுள் பஞ்சாப், சிந்து ஆகியவை ஸரஸ்வதி பிராம்மணர்கள் வசித்த இடம். குஜராத், மராத்தா, திராவிடம் என்பவை குர்ஜரர்கள், மஹாராஷ்டிரா பிராம்மணர்கள் வசித்த இடம். திராவிடம் என்னும் இடம் இந்தப் பஞ்ச திராவிடத்தில் அடக்கம்.

   உத்கல, வங்கம் என்பவை உத்கல பிராம்மணர்கள் வசித்த இடம். சென்ற ஆயிரம் வருடங்களாக ராஜ தரங்கிணி சொல்லும் பத்து இடங்கள் வட இந்திய மக்களால் அடிக்கடி சொல்லப்பட்டிருக்கவே, தாகூர் அதைத் தேசிய கீதத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

   பஞ்சத் திராவிடத்தில் திராவிடம் என்று ஒரு இடம் இருந்தது என்பதை, 1500 ஆண்டுகளுக்கு முன் எழுந்த பிருஹத் சம்ஹிதை. அதற்கு முன் எழுந்த மஹாபாரதம், தமிழ் நிகண்டான திவாகர நிகண்டு ஆகியவை கூறுகின்றன.

   பிருஹத் சம்ஹிதையில், திராவிடம் என்னும் இடம் குஜராத், மஹாராஷ்டிராவை ஒட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஹேமகிரி, சிந்துகலகம்,ரைவதகம், சௌராஷ்டிரம்,பாதரம், திராவிடம், மஹார்ணவம் என்று வரிசைப்படுத்துவதன் மூலம் இந்த இடம் தென் மேற்கு இந்தியாவின் கடலோரப்பகுதி (அரபிக் கடலோரம்) என்று அந்த நூல் அடையாளம் காட்டுகிறது.

   மஹாபாரதத்தில் திராவிடம் என்னும் நாட்டில் பாண்டவர்களும், கிருஷ்ணனும் தீர்த்த யாத்திரை செய்துவிட்டு, பிரபாசத்தை அடைந்தனர் என்று வருகிறது. பிரபாசம் என்பது குஜராத்தின் தென் கடலோரம் உள்ள சோமநாதர் ஆலயம் உள்ள இடமாகும். இந்தத் தீர்த்த யாத்திரையை விவரிக்கும் போது, தென் கடலில் உள்ள திராவிடம் என்று சொல்லப்பட்டுள்ளது. அது தென்னிந்தியக் கடல் அல்ல, அவர்கள் தீர்த்த யாத்திரை ஆரம்பித்த துவாரகைக்குத் தென் கடலான அரபிக் கடலாகும். இந்த இடம் தற்சமயம் அரபிக் கடலுக்குள் முழுகி விட்டது. துவாரகைக்குத் தென்கடலில் இருந்த திராவிடத்தில் குளித்து விட்டு, தென்கரையில்; இருந்த பிரபாசத்தில் சிவனை வழிபட்டிருக்கிறார்கள்.

   திவாகர நிகண்டில் முத்தமிழ் நிலங்களைச் சுற்றியுள்ள இடங்களில் ஒன்றாக திராவிட நாட்டைச் சொல்லியுள்ளதும், அந்த இடம், மேற்சொன்ன நூல்கள் தரும் வர்ணனையுடன் ஒத்துப் போகிறது.
   தமிழ் நாட்டைச் சுற்றி இருந்த 18 நாடுகள் என்று திவாகர நிகண்டு தரும் பெயர்களில் திராவிடம் இருப்பதைக் காணலாம்.

   1.அங்கம்
   2.வங்கம்
   3.கலிங்கம்
   4.கௌசிகம்
   5.சிந்து
   6.சோனகம்
   7.திராவிடம்
   8.சிங்களம்
   9.மகதம்
   10.கோசலம்
   11.மராடம்
   12.கொங்கணம்
   13.துளுவம்
   14.சாவகம்
   15.சீனம்
   16.காம்போஜம்
   17.பருணம்
   18.பர்ப்பரம்.

   இந்தத் திராவிட நாட்டிலிருந்த பிராம்மணர்கள், காஞ்சிபுரத்தில் குடியேறியபோது, அவர்களுடன் வந்த திராவிடப் பெயரும் காஞ்சிக்கு ஒட்டிக் கொண்டு விட்டது. காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ராமானுஜரால் பிரபலப்படுத்தப்பட்ட ஆழ்வார்கள் அருளிச் செய்த திவ்வியப் பிரபந்தத்திற்கும் திராவிட வேதம் என்ற பெயர் ஏற்பட்டது.

   அந்தப் பெயர் தமிழை முன்னிட்டு எழவில்லை. திராவிடப் பிராம்மணர்களை ஒட்டி எழுந்தது. தமிழுக்குத் திராவிடம் என்ற பெயர் இருந்திருந்தால், தேவார திருவாசகங்களுக்கும் அல்லவோ திராவிட மறை என்ற பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். அவற்றை மட்டும் தமிழ் மறை என்று ஏன் சொல்ல வேண்டும்?

   இவற்றைப்பற்றியும் திராவிடத்தைப் பற்றியும் நான் எழுதி வரும் தொடரை இங்கே படிக்கலாம்.

   http://thamizhan-thiravidana.blogspot.in

   கால்டுவெல் அவர்கள் திராவிடம் என்பதை எப்படிக் “கண்டுபிடித்தார்’ என்பதை இங்கே படிக்கலாம்.
   http://thamizhan-thiravidana.blogspot.in/2011/05/54.html

   திராவிடம் என்றும், திராவிட இன மானம் என்றும் கருணாநிதி ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறாரே, இதன் மூலம் உண்மையில் அவர் பிராம்மணர்களைத்தான் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார். என்ன தலையெழுத்தோ அல்லது பண்ணின பாவத்துக்குப் பரிகாரமோ இப்படிச் செய்து கொண்டிருக்கிறார் தெய்வம் சிரித்துக் கொண்டிருக்கிறது.“

   (அந்தக் கருத்துரை முடிந்தது)

   (இந்தக் கருத்துரை தொடர்கிறது)

   நீக்கு
  3. பெயரில்லாதவரே,

   மேலே சொல்லப்பட்ட கருத்துரையில் “தைலங்கா: என்னும் பெயர் ராஜ தரங்கிணியில் வருகிறதே, அந்தப் பெயரே தெலுங்கு என்பதன் ஆதி பெயர். தெலுங்கு வேறு ஆந்திரம் வேறு.

   ஆதாரங்களின் அடிப்படையில் ஆந்திரர் என்பது மக்களைக் குறிக்கப் பயன்பட்ட சொல். தெலுங்கு என்பது இடப்பெயர். த்ரிலிங்கா என்னும் பெயர், தைலங்கா என்று உருமாறி தெலுங்கு என்றானது. கிருஷ்ணா, கோதாவரி நதிகளுக்கிடையே ஸ்ரீசைலம், த்ரக்ஷராமம், காலேஸ்வரம் என்னும் மூன்று க்ஷேத்திரங்களில் சக்தி வாய்ந்த சிவலிங்கக் கோவில்கள் இருந்தன (இருக்கின்றன). இவற்றை உள்ளடக்கிய பகுதியைத் “த்ரிலிங்கம்” (மூன்று லிங்கம்) என்றழைத்தார்கள். 1000 வருடங்களுக்கு முன் அந்தப் பெயர் தைலங்கம் என்று உருமாறியது. அதுவே நாளடைவில் தெலுங்கு தேசம், தெலுங்கானா என்றெல்லாம் ஆனது. இந்த இடம் வேத மரபில் தழைத்தோங்கிய புண்ணிய க்ஷேத்திரம். அது பின்னாளில் நிஜாம்கள் ஆட்சியி்ன் கீழ் வந்தது.

   ஆந்திரர் என்பவர் ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையின் பெயர். இவர்கள் வேத மரபைப் பின்பற்றாதவர்கள் என்று பல குறிப்புகள் மஹாபாரதத்தில் இருக்கின்றன. வைஸ்யப் பெண்ணுக்கும், பிராம்மண ஆணுக்கும் பிறந்த மக்களில், வேத மரபை விட்டவர்களை ஆந்திரர்கள் அல்லது ஆந்திரகர்கள் என்று அழைத்தனர் என்பதை மஹாபாரதம் 13-149 மூலம் அறிகிறோம். அதற்காக இவர்கள் ஒதுக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமல்ல. கம்சனது அவைக்கள மல் யுத்த வீரனான சாணுரன் என்பவன் ஆந்திரன். கிருஷ்ணனைக் கொல்ல, கம்சன் அவனை ஏவினான். ஆந்திரர்கள் யமுனை நதிக் கரையில் ஆதியில் வசித்தனர் என்று சொல்லும் வண்ணம், அந்தப் பகுதியில்தான் ஆந்திரர்கள் பெயர் மஹாபாரதத்தில் வருகிறது.

   அவர்கள் தென்னிந்தியாவின் மேற்குப் பகுதியிலும், வட மேற்கு இந்தியாவிலும், இன்றைய காஸ்பியன் கடல் வரையிலும் ஆங்காங்கே வாழ்ந்திருகின்றனர். மல்யுத்தம், போர்த்தொழில் ஆகியவற்றில் இவர்கள் சிறந்திருந்தனர். மஹாபாரதப் போரில், இரண்டு பக்கமுமே இவர்கள் போரிட்டிருக்கின்றனர். இவர்கள் இருந்த நாடுகளை (இன்றைய ஆந்திரா அல்ல) அர்ஜுனன், சஹாதேவன், கர்ணன் ஆகியோர் வென்றிருக்கின்றனர். ஆந்திரா என்பது ஒரே ஒரு நாடாக இருந்திருந்தால், இவ்வாறு சமகால வீரர்களான மேலே சொன்ன அர்ஜுனன் முதலானோர் மீண்டும், மீண்டும் அதே நாட்டை வென்றிருக்க முடியாது. அவர்கள் பல இடங்களிலும் வாழ்ந்திருக்கவே, பல ஆந்திர நாடுகள் இருந்திருக்கின்றன என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. (இதைப் போலவே காம்போஜ நாடு என்னும் பெயரில் பல நாடுகள் இருந்திருக்கின்றன.)

   மேலும், திரிலிங்க தேசம் என்பது வேத மரபில் வந்த க்ஷேத்திரமாக இருக்கவே அங்கு வேத மரபிலிருந்து வழுவிய ஆந்திரர்கள் வாழ்ந்திருக்க முடியாது. ஆனால், ஆந்திரர்கள், த்ரிலிங்கத்துக்கருகே குடியேறி இருந்திருக்கவே, அந்தப் பகுதியை ஒட்டி ஆந்திர தேசம் உருவாகியிருக்கிறது.

   1959 இல் Edward Eastwick என்பவரால் எழுதப்பட்ட "Handbook for India Part 1" என்னும் நூலில் அப்பொழுது பரவலாக இருந்த ஒரு கருத்தைக் கூறுகிறார். கடலோரப் பகுதியில் உள்ள ஸ்ரீகாகுளம் (இன்றைய கடலோர ஆந்திரா) என்னும் பகுதியை ஆண்ட மன்னன் பெயர் ஆந்திரராயுடு. சுசந்திரன் என்பவனது மகனான இந்த அரசன், தன் தந்தை காலமான பிறகு, தனது இருப்பிடத்தை கோதாவரி நதிப் பகுதிக்கு மாற்றிக் கொண்டான். இது தைலங்க தேசமாகும். அவனது ஆஞ்ஞைக்கு இணங்கி கன்வ ரிஷி, தெலுங்கு இலக்கணம் எழுதினார். அவன் காலத்திலும், அவனுக்குப் பிறகும் தெலுங்கு மொழி தழைத்தது. வேத மரபும் தழைத்தது.

   இந்த விவரத்தின் அடிப்படியில், ஆந்திரர் - தைலங்கர் ஒருங்கிணைப்பும், தெலுங்கு ஒருங்கிணைத்தும் தெரிய வருகிறது. இதைப் போல எத்தனையோ விவரங்கள் இருக்கின்றன. எனவே மனம் போன போக்கில் கருத்துக்களை உருவாக்கிக் கொண்டு, அவற்றை நம்பிக் கொண்டு, உண்மைக்குப் புறம்பான திராவிடவாதித்தனமாக நடந்து கொள்ளாதீர்கள்.

   நீக்கு
  4. பெயரில்லாதவரே,

   நீங்கள் சொல்வது போல தெலுங்கு என்பது தெலுகு என்பதன் Tamilised pronunciation என்றால், அதற்குக் காரணம் ஒரு இலக்கணம் இருக்கிறது. அது மட்டுமல்ல, த்ரிலிங்கம் – தைலங்கம் என்னும் சொற்களில் உள்ள லிங்கம் என்பதை விட்டுவிடாமல், தெலுங்கு என்று தமிழர்கள் வைத்துக் கொண்டுள்ளனர் என்பதையும் இது காட்டுகிறது.

   இனி இலக்கணத்தைப் பார்ப்போம், தமிழில் ka, ga ஒலி வித்தியாசம் காட்டும் எழுத்துக்கள் கிடையாது. ஆனால் 'ங்’ என்ற எழுத்தை அடுத்து வரும் ‘க’கரம் ga ஒலியில் வரும். அதாவது தெலுங்கர்கள் சொல்வது போல ‘தெலுகு’ என்றால், அதில் வரும் ‘கு’ என்பதன் உச்சரிப்பு 'gu' என்றாக வேண்டுமென்றால் அதற்கு முன் ‘ங்’ சேர்க்க வேண்டும். “ங்” என்ப்தைத் தொடர்ந்து வரும் ‘க- வர்கம்’ ga என்னும் ஒலியில் வரும். உ-ம் வங்கம், கலிங்கம், பங்கு. அதனால் அவர்கள் தெலுகு என்று சொல்வதை, நாம் தெலுங்கு என்று சொன்னால்தான் ‘கு’ உச்சரிப்பு சரியாக இருக்கும். மாறாக ‘தெலுகு’ என்றே எடுத்துக் கொண்டால் அதைத் ‘தெலுக்கு’ என்றுதான் உச்சரிக்க வேண்டும்.


   இதைப் புரிந்து கொள்ள “கொங்கு”, “கொக்கு” என்னும் சொற்களைப் பாருங்கள். Ga ஒலி வரவேண்டுமென்றால் அதற்கு முன் ‘ங்’ வரும். Ka ஒலி வர வேண்டுமென்றால் அதற்கு முன் ‘க்’ வரும்.
   முன்பே சொன்னது போல த்ரிலிங்கம் என்னும் பெயரில் உள்ள லிங்கம் என்னும் சொல் திரிந்த போது, லிங்கு, லுங்கு, தெலுங்கு என்றாகி இருக்கிறது. இப்பெயரின்படி, தெலுகு என்பதைவிட தெலுங்கு என்பதே சரியானது. எனவே Tamilaised ஆக ஒன்றும் ஆகவில்லை. இலக்கணப்படி தமிழில் அழைத்திருக்கிறார்கள். தைலிங்கம் – தெலுங்கம் – தெலுங்கு என்றாகி இருக்கிறது. இந்த உருமாற்றம் இயல்பாக ஏற்படுவது.
   இப்படிப்பட்ட இயல்பான உருமாற்றமோ, இலக்கண அடிப்படையோ திராவிடம் – தமிழ் உருமாற்றத்தில் இல்லை. திராவிடம், திரமிளம் இரண்டுமே வடமொழிச் சொற்கள். இவை எப்படி தமிழ் என்று உருமாற முடியும்?

   இந்தத் தொடரின் 54 ஆவது கட்டுரையிலிருந்து:-

   “திரமிளம் என்பது தமிழ் ஆனது என்பது
   தொல்காப்பிய வட சொல் திரியும் சூத்திரத்தை ஒட்டி அமையவில்லை.
   இதில் ‘த்ர’ என்னும் சொல் உருமாற வேண்டும்.
   ள என்னும் எழுத்து ழ என்று உருமாற வேண்டும்.

   ளகரம் ழகரமாகலாம் (சோள = சோழ)
   ஆனால் திர அல்லது த்ர என்பது தகரம் ஆகாது.

   ஒலிக் குறிப்பில் ‘த’கரம், தகரம் ஆகலாம்.
   அதாவது தமிள (damiLa) என்பது தமிழ (thamiza ) என்றாகலாம்.
   ஆனால் திரமிள என்றால் அது திரமிழம் என்றுதான் ஆகும்.
   த்ரமிள என்றாலும், திரமிழம் என்றுதான் ஆகும் ,
   த்ரவ்யம் என்பது திரவியம் என்பது ஆவது போல.”

   நீக்கு
  5. உங்கள் பதிவு மிக நன்று!! மிகப் பெரிய ஆராய்ச்சியைத் தொடங்கி இருக்கிறீர்கள்! நிற்க! ஆந்திரா என்ற வடமொழிச் சொல்லுக்கு 'குடல்' என்ற பொருளால், 'ஆந்த்ர மாலாதாரம்... (ஸ்ரீ லக்ஷ்மிநரஷிம்ஹா ருண விமோசன ஸ்தோத்திரம்) இரணியனைக் கொன்று அவன்தன் "குடல் மாலை" அணிந்த ஸ்ரீநரசிம்மன், பிரகலாதன் சேவிக்க, லக்ஷ்மிதேவியுடன் சாந்தமாக அமர்ந்த 'அஹோபிலம் ' அதனைச் சேர்ந்த இடங்கள் "ஆந்திரா" என்று விளங்கியது அல்லவா?! இதனால் ஆந்திரர்கள் வேதமரபை வழுவியவர்கள் என்று சொல்ல முடியுமா? வேத மரபை இன்றுள்ள சில வேடதாரிகளே பழித்து வருகின்றனர்! ஆந்திரர்கள் அப்படி இருந்திருக்க மாட்டார்கள் என்பது என் தாழ்மையான கருத்து!

   நீக்கு
  6. திரு ராஜேஷ் கன்னா அவர்களே. மிக நல்ல கருத்து. தற்பொழுது நான் எழுதிக் கொண்டிருக்கும் 113 ஆவது கட்டுரையில், ஹிரண்யபுரத்தில் ஹிரண்ய கசிபுவின் தொடர்பைக் கொண்டு வருகையில் தக்க நேரத்தில் இந்தக் கருத்தைக் கொடுத்துள்ளீர்கள். இதையும் ஆராய்கிறேன்.

   ஆனால் ருண விமோசன ஸ்தோத்திரத்தில் வரும் ஆந்த்ரா என்னும் சொல்லில் உள்ள எழுத்துக்கள் வேறு. அது் अन्त्र ஆகும். இதற்குக் குடல் என்று பொருள். ஆந்த்ரா என்னும் மக்களை आन्ध्र என்றுதான் மஹாபாரதத்தில் எழுதியுள்ளனர். இதன் ஸ்பெல்லிங் வேறு.

   எனினும், ஆந்திரர்கள் மல்லர்கள் (உ-ம் சாணுர மல்லன்) என்பதாலும், மல்லன் என்பவன் க்ஷத்திரியம் விட்ட மக்களில் மூன்றாவது தலைமுறை மக்கள் என்பதாலும், ஹிரண்ய புரத்தில் ஹிரண்ய கசிபு அடக்கப்பட்டதால், பயந்து க்ஷத்திரியம் விட்ட தைத்தியர்கள் மல்லர்களாகி, பிறகு ஆந்திரர்கள் என்று பெயர் பெற்றிருக்கலாம். த்ர என்பதன் உச்சரிப்பு வித்தியாசம் காலப்போக்கில் ஏற்பட்டிருக்கலாம்.

   ஆந்திரர் (Andhra) என்னும் சொல்லுக்கு தனி அர்த்தம் சமஸ்க்ருதத்தில் கிடைக்கவில்லை என்பதால், antra என்பது andhra என்றாகியிருக்க வாய்ப்பிருக்கிறது.

   Andhra என்பவர்கள் வட மேற்கு இந்தியாவில் ஆரம்பித்து காஸ்பியன் கடல் வரை இருந்திருக்கின்றனர் என்பதை மஹாபாரத வர்ணனைகள் மூலம் அறிகிறோம். அவர்கள் கிருஷ்ணன் காலத்தில் வட மதுரையில் இருந்திருக்கின்றனர். அப்பொழுதெல்லாம் அவர்கள் வேத மரபுக்கு வெளியில் இருந்தவர்கள்தாம். பின்னாளில் இன்றைய ஆந்திராவுக்கு வந்த பிறகு, தைலிங்க க்ஷேத்திரத் தொடர்பால், வேத மரபுக்கு வந்திருக்கின்றனர்.

   அல்லது இன்னொரு கோணத்தில் பார்த்தால், அதாவது ஹிரண்யனது வம்சாவளியினராக இருந்தால், அவர்களில் ஒரு பகுதியினர் ஆந்திரக் கரையோரத்தில் ஆதியிலேயே இருந்திருக்கலாம். ஹிரண்யபுரத்திலிருந்து (சுந்தாலாந்து / இந்தோனேசியா) காஞ்சிபுரம் வரை தொடர்பு இருந்திருக்கிறது. அதனால் அருகில் ஆந்திரக் கரையோரம், ஹிரண்யன் வம்சாவளியினர் தங்கியிருக்கலாம்.

   ஆந்திரக் கரையோர விஷாகப் பட்டினம் என்ற பெயரில் இருக்கும் விஷாகா என்றால் பிளவுபட்டென்று அர்த்தம். ஹிரண்யன் வயிற்றைப் பிளந்ததனால் இப்படி ஒரு பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லலாம்.

   விஷாகப் பட்டினத்தில் சவரர்கள் (சௌரா) மொழியைப் பேசினவர்கள் இருந்தனர் என்று ஆங்கிலேயரது பழைய சென்ஸஸ் ரிப்போர்ட் கூறுகிறது. சவரர், முண்டா ஆகியோர் பரசுராமருக்குப் பயந்து க்ஷத்திரியம் விட்டவர்கள். அவர்கள் தங்கள் அடையாளத்தை மறைக்க, வேத மரபைப் பின்பற்றுவதை விட்டவர்கள். அவர்கள் மொழியைப் பேசியவர்கள் விஷாகப் பட்டினத்தில் 200 ஆண்டுகளுக்கு முன் வரை இருந்தனர் என்பதாலும், பழங்குடிகளான சென்சுக்கள் ஆந்திராவில் இருப்பதாலும், க்ஷத்திரியம் விட்டு ஓடி வந்த மக்கள் அங்கு இருந்திருக்கின்றனர் என்று தெரிகிறது.

   மேலும் ஆந்திர மக்களில் ஒரு பகுதியினர் இந்தியாவின் மிகப் பழமையானவர் என்று ஒரு மரபணு ஆராய்ச்சியைப் படித்திருக்கிறேன். இவற்றையெல்லாம் இணைத்து ஆராய்ந்து வரப்போகும் கட்டுரைகளில் எழுதுகிறேன்.

   இதில் ஹிரண்யனது தொடர்பை ஆராயும் வண்ணம் ஒரு கருத்து கொடுத்திருக்கிறீர்கள். கருத்துக்கு நன்றி.

   நீக்கு
  7. மேலே ஒரு கருத்துரையில் //1959 இல் Edward Eastwick என்பவரால் எழுதப்பட்ட "Handbook for India Part 1" என்னும் நூலில் அப்பொழுது பரவலாக இருந்த ஒரு கருத்தைக் கூறுகிறார்// என்று எழுதியிருப்பேன். 1959 என்பதற்குப் பதிலாக 1859 என்று திருத்திப் படிக்கவும்.

   அந்தக் கருத்து இருக்கும் சென்ஸஸ் ரிப்போர்ட் பக்கத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் படிக்கலாம். பக்கத்தில் கடைசியில் அந்த விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

   http://www.chaf.lib.latrobe.edu.au/dcd/page.php?title=&record=1878

   நீக்கு
 4. விந்திய மலைக்குத் தெற்கே கர்நாடகர், தைலங்கர், திராவிடர், மஹாராஷ்டிரர், குர்ஜரர் என்னும் ஐந்து திராவிடர்களும் (பஞ்ச திராவிடம்).
  விந்திய மலைக்கு வடக்கில் ஸரஸ்வதர், கான்யகூப்ஜர். கௌடர், உத்கலர், மைதிலர் என்னும் ஐந்து கௌடர்களும் (பஞ்ச கௌடம்) வசித்து வந்தனர்.

  YOu have the verses, but the wrong interpretation.

  the versses by clearly identifying the current states of south india, Karnataka, andhra, tamilnadu, maharashtra, implies that all these were "region" tags attributed to the brahmins coming from those regions. It was just another way of classifying brahmin geneaology used by the brahmins.

  "dravida" was used a "region" tag here to identify people coming from a certain region and since they were only concerned with only brhamins, they mentioned it only along with brahmins. but it doesnt mean that there were no non-brahmins living in those regions.

  do u conclude that because "karnatakar, thailangar, maharashtrar" is used to denote brahmins, there were nobody else except brahmins living in karnataka, andhra, maharashtra" at that time.

  Pancha dravida and pancha gowda was a "regional" classification of brahmins and nothing more. and it proves that "dravida" was a term used to identify people from a particular region south of india.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Read the series fully before making comments. For your query read form 49th article onwards.

   The brahmins only were identified as pancha gowdas and pancha dravidas in the Raja Tarangini verse. They got that identity due to the regional connection. But this region was not Tamil land. Wherever there is mention of Dravida, it is in addition to Chera, Chola and PAndyas only and not as a substitute for these three. These three (3 kingdoms of Tamils) were not Dravidas nor was their land Dravida.

   As an additional information, Vaivasvatha Manu was known as Deavida king. I have not yet posted articles on why he was known as Dravida Raja. For your quick understanding, it was because he came in a lineage of a previous era (before the end of Ice age around 13,000 years ago) who quit Kshatriyahood. From the 7th generation in the lineage of Kshatriyas who quit ksahtriyahood, they were known as Dravidas. No Tamil king or no veera-th- thamizhan was a Dravida. If you had said that to them, they would silenced you with their sword.

   Read the articles from 49th onwards.

   நீக்கு
  2. //do u conclude that because "karnatakar, thailangar, maharashtrar" is used to denote brahmins, there were nobody else except brahmins living in karnataka, andhra, maharashtra" at that time.//

   Please have patience and analytical mind to read these passages. Like Kona seemai Dravidas, these Dravidas were known by the name of the place where they hailed from. In Kona seemai (Kumbakonam) there were all types of people. But the Dravida Brahmins who came from Kona seemai identified themselves as Kona seemai dravidas. Like this, Karnataka, Thailanga and Maharashtra has all types of people including kings. The Dravida Brahmins hailing from these places were identified by the place names.

   Together they were known as Pancha Dravidas, thereby showing their common origin from or affiliation to Dravida desam.

   I can sense your brahmin hatred in your comment. Read the article given in the link below and continue to read the 10 articles following that article to know the actual condition vis-a-vis Brahmins until the British systematically destroyed the truth. The Dravidian movement took it up further and blinded the reason of a century of people.

   http://thamizhan-thiravidana.blogspot.in/2012/02/who-is-dravida-mr-karunanidhi.html

   நீக்கு
 5. “திரமிளம் என்பது தமிழ் ஆனது என்பது
  தொல்காப்பிய வட சொல் திரியும் சூத்திரத்தை ஒட்டி அமையவில்லை.

  why do you have to see everything in non-tamilian perspective.

  dramila did not become thamizha, thamizha became dramila and then dravida.

  when persians heard of "sindhun" and people living across "sindhu" river, they called these people "hindus" not because the sindhu people called themselves, hindus but because persians were unable to pronounce "s" and even though "hindus" is not the original word to denote people in india, it stuck because it got popular outside india.

  and now we are using "hindu/hinduism/hindustan" the name given by outsiders though it should have been "sindhu/sindhiusm/sindhustan"

  same way people outside dravida regions could not pronounce "thamizh" and it became "dravida". so people outside thamizh speaking regions addressed thamizh speaking people as "dravida" and which is what you see in the verse you quoted.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. I feel sorry for you because you are remind me of the proverbial horse which is taken to the water trough, but it is upto the horse to drink or not. There is huge cache of information based on proof in this series. Without reading them, you are cutting a sorry figure for yourself. Even the Sindhu - Hindu name had been discussed in this series. The only reply that deserves to be given to your comment is for

   //and now we are using "hindu/hinduism/hindustan" the name given by outsiders though it should have been "sindhu/sindhiusm/sindhustan"//

   Our nation was called by us only as Bharat and not as Sindhusthan.

   நீக்கு
 6. Together they were known as Pancha Dravidas, thereby showing their common origin from or affiliation to Dravida desam.

  there you are. thats what I am also saying. that just means that "dravida" like "dakshina" was meant to signify south of india. and not just "brahmins". It meant people coming from a particular region, here it meant south of vindhyas.

  Our nation was called by us only as Bharat and not as Sindhusthan.

  ok, then why the name of the country is now "india" derived from the word given by outsiders, "hindu" and why "hinduism" is now the major religion in india and why people who follow it are called as "hindus"

  "india/hindu/hinduism" is a classic example of people taking up the name given to them given by outsiders to them.

  "dravida" is a similar example of people using the term given by outsiders.

  "dravida" came from "thamizh" and when outsiders started interacting with people from dravida region, they started calling them "dravida".

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. I understand that there is no need to explain things to you as you keep writing what you want without reading the other articles. So keep writing like this - but give explanation about these terms and give proof of why and how these terms came up.

   May be you can begin with explaining

   1) what does dakshina mean? Was that used in old Tamil texts? If so how?

   2) Did they use the word Dravida as a substitute for Dakshina? If so show proof.

   3) Were Dakshina and Dravida inter changeable? If so give proof.

   4) What does Dravida mean? Show the places where that word is used in literature or epigraphy.

   5)From when India came to be called as India?

   6)Where do you find the reference to India in olden texts or epigraphy? Have you read any one olden text that called our country as India? If so what explanation that text gave for India?

   7) Do you know what is Hinduism?

   8) Do you know what was the religion of our country or even Tamilnadu, say, before 1000 years, before 2000 years? Show proof - either literary or inscriptional.

   9)Give proof for who called Tamils as Dravida?

   10) Give proof for who were called as Dravidas?

   Don't write here without proofs and don't show Caldwell as a proof. Give proof for every idea you write here.

   நீக்கு
  2. Whatever is the matter, we are meaninglessly and unnecessarily, dividing the Tamilians of the present day into unwanted parochial categories and kindling unethical passion and dividing for the purpose of politics. I accept a Punjabi and Pope as Tamilian as long as he is interested and using this language and not damaging in any manner the Tamil interest. I do not know all the web sites - painfully almost 60 percent of them follow only this ethics unethically.

   நீக்கு
 7. 1) what does dakshina mean? Was that used in old Tamil texts? If so how?

  dákṣiṇā [diś] is the Sanskrit name of the Deccan plateau.

  2) Did they use the word Dravida as a substitute for Dakshina? If so show proof.

  Have you heard of anything called "context", a word taking a meaning depending on the context where its used.

  ”கர்நாடகாஸ்ச தைலங்கா த்ராவிடா மஹாராஷ்ட்ரகா:
  குர்ஜராஸ்சேதி பஞ்சைவ த்ராவிடா விந்த்ய தக்ஷிணே //


  in the verse you quoted from the context in first line bcos it was used with other words like karnatakar (karnataka), thailangar (andhra), maharashtrar (maharashtrar), "dravida" is used as a region tag. Ideally from this context I would understand that "dravida" is thamizh speaking regions, whatever that maybe at that time. we dont see keralam being mentioned here, bcos malayalam was not formed at that time.


  In the second line since the name given to these 5 types of people coming from south of deccan is "pancha dravida", dravida is used synonomously with "dakshina".


  3) Were Dakshina and Dravida inter changeable? If so give proof.

  The proof is the same verse you quoted. By using "dravida" to signify group of people from south of vindhyas, it is being used in a place where "dakshina" could also be used.

  4) What does Dravida mean? Show the places where that word is used in literature or epigraphy.

  AsI told earlier, Dravida is the pronounciation of "thamizh" in non-thamizh speaking regions, the same way "hindu" is the pronounciation of "sindhu" in outside world.

  The verse you quoted is the popular one which uses "dravida" and clearly helps us to get the meaning of "dravida".

  5)From when India came to be called as India?


  6)Where do you find the reference to India in olden texts or epigraphy? Have you read any one olden text that called our country as India? If so what explanation that text gave for India?

  This is my whole argument. we wont find "india" in older indian texts like rig veda like the same way we wont find "dravida" in thamizh literature.

  If you want proofs for "dravida" in sangam literature, you should show proofs for "india/hinduism/hindu" in Rig veda also.

  7) Do you know what is Hinduism?

  I know what it is , but I do know that literally "hinduism" is not the term used in older indian texts to address the religion followed .
  if you ask me hinduism is not that old, since the oldest indian texts like Rigveda dont mention "hinduism".

  8) Do you know what was the religion of our country or even Tamilnadu, say, before 1000 years, before 2000 years? Show proof - either literary or inscriptional.

  9)Give proof for who called Tamils as Dravida?

  You are repeating the same question in many ways. The rajatarangini verse you quoted is the proof for people using "dravida" to address people coming from "thamizh" speaking regions and from south of vindhyas.

  10) Give proof for who were called as Dravidas?

  The same verse is the proof for thamizh speakers being identified as "dravidas" and also people south of vindhyas as being identified as "dravida". Please see [2]

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. For question 1, you have not given the Tamil word.

   For question 2, using the same logic as you say, can I say that Maharahtriyans were known as "pal vel kattiyar" by Tamils because Silappadhikaram says Kongkanar, kalingar, kodum karunadar, Bangalar, Gangar, pal vedl kattiyar" where there is no mention of maharashtriyars?

   For question no 3, I have given many other quotes on Dravida. Didn't you notice Divakara Nigandu which mentions Dravida as a country outside Tamilagam?

   For question 4, why quote Raja Tarangini? It does not say anything about Tamils. Refer my reply to Q-3.

   For question 5, no answer from you.

   For question no 6, do you think that Rik Vedas are geography books?

   For question no 7, give a straight answer. It is obvious you don't know what Hinduism means.

   For question no 8, you have not replied.

   For question no 9, I am repeating, only you are repeating. If you think that I am repeating, read your previous comment. I have split what you have written into these 10 questions. It shows how you have kept on repeating the same idea - without any proof but by basing your repetition on RajaTarangini verse!!

   For question 10 - how many lands / countries were there in the south of Vindhyas? Were the people of all those countries called as Dravidas? If so why Kongkanar, kodum karunadar reference in Silappadhikaram?

   Simple advice :- Read all the articles before writing comments like this which merit no response.

   நீக்கு
 8. For question no 6, do you think that Rik Vedas are geography books?

  Hmm AFAIK, Rigveda speaks so eloquently about Saraswati river, and the geography of the land that the people lived in.

  பதிலளிநீக்கு
 9. Irony is that the Anonymous commentator gives lecture on context, but doesn't follow the same for self. Context is arrived as a whole like how Madam Jayashree has taken references from multiple sources and arrived at the contextual reference to dravida and not just stick to the content of one shloka. All through this blog one would find multiple references to prove a single point contextually.

  பதிலளிநீக்கு
 10. Madam Jayashree with your knowledge and command on the subject I think you should not indugle in silly arguments like Tea Kadai Bench

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. I agree. But you must have noticed the difference in the tone and content of the replies I have given for various other comments under other articles. When the reader refuses to see the relevance of a matter I write and refuse to argue on that on an intellectual plane but instead resort to dogmatic arguments, I would initially try to reason out. But when that doesn't work, I have to write like above. I think if I don't counter their ideas, a impression will come up that their ideas are right. Unfortunately (I regret to say this), there are many Tamils tainted by Dravidian brain wash, who exhibit such refusal to see reason or analytical approach.

   நீக்கு
 11. jayasree,

  Can you pls tell us when was the word "Tamil" first used in our literature. Was the language tamil called "tamil" in ancient times or was it called something else?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழில் பதிலளிக்கிறேன். தமிழ் என்று பெயரிட்ட பிறகுதான் தமிழ்ச் சங்கமே தொடங்கப்பட்டது என்பது என் கருத்து. அதனால் எந்த சங்க நூலிலும் - அதாவது எழுதப்பட்ட எந்த நூலிலும் தமிழ் என்னும் சொல்லே காணப்படும். அதற்கு முன் தமிழை மதுரம் என்று அழைத்திருக்கிறார்கள். தென் மதுரையிலும், கவாடத்திலும், சங்கம் கூட்டி தமிழ் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில், இந்த இடங்களில் அல்லாத மக்கள், தமிழை மதுரம் என்னும் பழைய பெயரால் அழைத்து வந்தனர். ராமாயண காலத்தில் அப்படித்தான் அழைத்தார்கள் என்னும் என் கட்டுரைகளைத் தேடுக பகுதி மூலமாகக் கண்டு, படிக்கவும். மற்றவர்கள் மதுரம் என்றழைத்தாலும், செந்தமிழ் பேசியவர்களும், இலக்கியத் தமிழிலும் தமிழ் என்றே சொல்லப்பட்டுள்ளது.

   உடனடியாக சில மேற்கோள்களைத் தரவேண்டுமென்றால், என்னுடைய குறிப்பேடுகளிலிருந்து, புறநானூற்றில் காண்பவற்றைக் கொடுக்கிறேன்.

   (பு.நா 35 ):- “மண்டினி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்”

   (பு.நா 51) :- “தண்டமிழ்ப் பொதுவென” மூவேந்தர்க்கும் தமிழ் நாடு பொதுவென என்று இப்படிச் சொல்பவர் ஐயூர் முடவனார். இங்கு அவரால் பாடப்பட்ட அரசன், பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி.

   (பு.நா 168):- “வையக வரைப்பில் தமிழகங் கேட்ப” (தமிழகம் என்னும் சொல்லைக் கவனிக்க. இது பிட்டங் கொற்றனைக் கருவூர்க் கந்தப்பிள்ளை சாத்தனார் பாடியது.

   (பு.நா 19):- “தமிழ்த் தலை மயங்கிய தலையாலங்கானத்து”

   இதையே பெருங்கதை, “தலைப் பெருங்சேனை தமிழ்ச்சேரி” என்கிறது. (3-4:10,11)

   நீக்கு
  2. உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி. ஆங்கிலத்தில் கேள்வி கேட்டதற்கு மன்னிக்கவும். இன்னும் சில கேள்விகள். நேரம் கிடைக்கும்பொழுது பதிலளிக்கவும்.

   1. தமிழ் என்ற சொல்லின் வேர் சமஸ்கிருதத்திலிருந்து வந்தது என்று சில பேர் சொல்கிறார்களே? இதை பற்றி உங்கள் கருத்து?
   2. தமிழிலிருந்து தான் மற்ற தென்னிந்திய மொழிகள் அனைத்தும் உருவாயிற்று என்று சொல்கிறார்களே? இதை பற்றி உங்கள் கருத்து?
   3. கால்ட்வெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை நீங்கள் என்றைக்காவது ஆராய்ச்சி செய்ததுண்டா? அது எந்தளவுக்கு உண்மை? இதை ஆதாரமாக வைத்து தான் இந்த பாழாப்போன திராவிட இயக்கத்தினர் தங்களின் பிரித்தாளும் அரசியலையே நடதிக்கொண்டுறிக்கிரார்கள். அதனால் தான் கேட்க்கிறேன்.

   நீங்கள் மொழி மற்றும் சரித்திர ஆராய்ச்சிகள் அதிகம் செய்வதால் உங்களுக்கு ஒரு வலைதளத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

   http://folks.co.in

   திரு என்.எஸ்.ராஜாராம் என்பவர் தான் இதன் ஆசிரியர். உங்களைப்போன்றே மிகவும் தேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளர். குறிப்பாக ஹரப்பன் நாகரீகத்தை பல வருடங்களாக ஆராய்ச்சி செய்து வருபவர். உங்களைப்போன்றோர் ஒன்று கூடினால் போலியாக சித்தரிக்கப்பட்டிருக்கும் நமது நாட்டின் சரித்திரத்தை மாற்றி எழுத மிகவும் உதவியாக இருக்கும் என்பதற்காகத்தான் மேற்கொண்ட வலைதளத்தை சுட்டிக்காட்டினேன்.

   உங்களின் அயராத உழைப்புக்கும், நமது நாட்டின் உண்மையான சரித்திரத்தை வெளிக்கொண்டுவர நினைக்கும் நேர்மையான நோக்கத்துக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

   பி.கு. உங்கள் ஆங்கில மற்றும் தமிழ் தளங்களில் ஏராளமான பொக்கிஷங்களை உங்கள் எழுத்து மற்றும் ஆராய்ச்சிகள் மூலம் சேகரிதுவைதிருக்கிரீர்கள். இன்றைய தலைமுறைக்கு "reading habit" மிக மிக குறைவு. அவர்களுக்காக உங்களின் கருத்துக்களை யூட்யுப் (youtube) போன்ற வலைதளங்களில் வீடியோவாக கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும். இப்பொழுது நேரம் இல்லாமல் போனாலும் பிற்காலத்தில் எப்போதாவது செய்வீர்கள் என்று நம்புகிறேன். இன்றைய இளையதலைமுறைக்கு உங்களைப்போன்றோரின் சேவை மிக மிக அவசியம். அதுவும் குறிப்பாக அவர்கள் ஒருபுறம் அமெரிக்கா போன்ற மேற்க்கத்திய நாடுகளின் சிந்தனையை பின்பற்ற தொடங்கிவிட்டார்கள், மறுபுறம் திராவிட கழகங்களின் சிந்தனை திரிப்புகளால் கலந்கிக்கிடக்கிரார்கள். அடுத்த தலைமுறையாவது உண்மையை அறிந்து நமது பண்பாட்டை மேலோங்கசெய்யவேண்டும். அதற்க்கு உங்களைப்போன்றோரின் பணியைத்தான் மலைப்போல நம்பியிருக்கிறோம். அதை நீங்கள் அயராது செய்துக்கொண்டிருக்கீர்கள். வளர்க உங்கள் பனி. வாழ்க பாரதம்!!!

   நன்றி.

   நீக்கு
  3. நன்றி திரு ராஜன் அவர்களே.

   நீங்கள் கேட்டுள்ள கேள்விகளுக்கெல்லாம் விடைகள் பிற கட்டுரைகளில் இருக்கின்றன. வரிசையாகப் படிக்கவும். குறிப்பாக 54 ஆவது கட்டுரையில் உங்களது 1, 3 ஆம் கேல்விகளுக்குப் பதில் கிடைக்கும். அந்தக் கட்டுரையிலும் ராஜன் என்பவர் கருத்துகள் இட்டுள்ளார்.

   2 ஆவது கேள்விக்குப் பதில் அபப்ராம்ஸத்தில் இருக்கிறது. தமிழும், சமஸ்க்ருதமும் சேர்ந்து பிற இந்திய மொழிகளை உருவாக்கின. அந்த விவரங்களை இன்னும் இந்தத் தொடரில் எழுத ஆரம்பிக்கவில்லை. ஆங்கிலத்தில் அதைப் பற்றி எழுதிய கட்டுரையை இங்கே படிக்கலாம்:-

   http://jayasreesaranathan.blogspot.in/2012/06/cartoon-controversy-on-hindi-agitation.html

   திரு ராஜாராம் அவர்களுடன் கட்டுரைகள் / கருத்துக்கள் பரிமாற்றம் செய்து வருகிறேன். இனி வரப்போகும் அவருடைய ஒரு கட்டுரையில் இந்த மொழி விவரத்தை எடுத்துள்ளார். அந்தக் கட்டுரையின் நகலை அவர் அனுப்பியுள்ளார். அவருக்கு அதைப் பற்றி நான் அறிந்த விவரத்தை ஓரிரு தினக்களில் அனுப்ப இருக்கிறேன்.

   யூட்யூப் போன்றவற்றில் வெளியிடுவதைப் பற்றி சிந்திக்ககூட நேரமில்லை. இன்னும் இரண்டு வருடங்களுக்கு இந்தத் தொடரில் எழுத வேண்டியது இருக்கிறது. யூட்யூப் போன்றவை பற்றி பிறகு பார்க்கலாம்.

   திராவிடம் பற்றி power point presentation செய்கிறேன் என்று திரு சுப்பு (திராவிட மாயை) அவர்களிடம் சொல்லியுள்ளேன். சங்கப் பலகை கூட்டத்தில் செய்யச் சொல்லியிருக்கிறார். அந்த வாய்ப்பு கிடைத்து, நானும் அப்படி ஒன்றைத் தயாரித்தால், கண்டிப்பாக யூட்யூபில் வெளியிடுவேன்.

   Reading habit ஐப் பற்றி: - பெரும்பாலான தமிழ் வாசகர்கள் ஏராளமான per-conceived notions and script களைக் கொண்டிருக்கிறார்கள். அந்த கருத்துக்களுக்கு மாறானதாக இந்த என்னுடைய கருத்துக்கள் இருப்பதால், அவர்கள் படிக்க வரமாட்டார்கள். யார் தேடி வருகிறார்களோ அவர்கள் படிக்கட்டும்.

   ஆனால் ஆங்கிலம் தெரிந்த தமிழ் வாசகர்களும், பிற மொழி வாசகர்களும் இவற்றை ஆர்வத்துடன் படிக்கிறார்கள். என்னுடைய ஆங்கில வலைத்தளத்தில் நாளொன்றுக்கு 1000 வாசிப்புகளுக்கு மேல் இருக்கின்றன என்பது எனக்கு நிறைவைத் தருகிறது. தேடி வந்து, கேள்வி கேட்டு விடை பெற்றுச் செல்கிறார்கள். இன்றும் ஒரு தெலுங்கு வாசகர், லலிதா சஹஸ்ரநாமத்தை ஆராயச் சொல்லி கேட்டுக் கொண்டுள்ளார். கணிணி உபயோகிப்பாளர்களிடம், நிச்சயமாக படிக்கும் ஆர்வம் இருக்கிறது.

   நீக்கு
  4. நன்றி. நீங்கள் ஏற்கனவே ராஜாராம் அவர்களுடன் பணியாற்றிவருகிரீர்கள் என்று தெரிந்தவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களது முந்தைய சுட்டிகளை மேற்கோள் காட்டியதற்கு மிக்க நன்றி. அதை ஒவ்வொன்றாக படித்துவருகிறேன். இறுதியாக ஒரு கேள்வி.

   இப்போதெல்லாம் ராஜாராம் தனது கட்டுரைகளில் மொழியிலுக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மாற்றாக தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் சார்ந்த விஷயங்களை கையில் எடுக்க ஆரம்பித்துவிட்டார். அதை நோக்கிதான் பயணிக்கவேண்டும் என்று சொல்கிறார். அவர் சொல்கிற மாதிரி மொழியியலை மொத்தமாக ஒதுக்கிவிட முடியுமா? இதை பற்றி உங்கள் கருத்து?

   பி.கு. இறுதியாக இன்னொரு வலைதளத்தையும் (கீழே காண்க) உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இதில் செந்தில் என்பவர், பண்டைக்கால இந்திய வாழ்வியல் முறை குறிப்பாக வர்ணாஸ்ரம தர்மத்தை பற்றி ஆழமாக விவாதிக்கிறார். நேரம் கிடைக்கும்பொழுது உங்கள் கருத்துக்களை இதில் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

   psenthilraja.wordpress.com

   நீக்கு
  5. திரு ராஜாராமுடன் பணியாற்றவில்லை, கருத்துப் பரிமாற்றம் செய்கிறேன். சமீபத்தில் தான் பரிச்சயம் ஆரம்பித்தது.

   மொழியியல் சரியான மற்றும் முழுமையான ஆதாரமாகாது. இன்றைக்கு நடக்கும் மொழியியல் என்பது phonetic similarities அடிப்படையில் நடக்கிறது. இந்த ஒலி ஒற்றுமையைக் கொண்டு இடப்பெயர்வு ஏற்பட்டு விட்டது என்று சொல்லி விட முடியாது.

   நான் கவனித்த ஒரு அமைப்பைச் சொல்கிறேன். ஹங்கேரிய மொழியில் பல தமிழ்ச் சொற்களது சாயல் இருக்கிறது என்ற கருத்து சென்ற 100 வருடங்களாக ஹங்கேரிய மொழி ஆராய்ச்சியாளர்களிடையே எழுந்துள்ளது. அவர்கள் காட்டும் சொற்களில் தமிழில் வழங்கும் இரட்டைக் கிளவிச் சொற்கள் போன்ற சாயல்கள் இருக்கின்றன.

   அவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்.


   Tamil Hungarian

   akkam-bakkam bar ákom-bákom
   atta-dutti áta-bota
   sada-buda csata-pata
   sala-bula zene-bona
   turu-duru dirrel-durral

   இவற்றுக்கு அர்த்தம் கிடையாது, ஆனால் ஒரு உணர்வைக் காட்டும் இடத்தில் இப்படிப்பட்ட சொல்லாட்சி உள்ளது. இவற்றைக் கொண்டு எந்த மொழியிலிருந்து எந்த மொழி வந்தது என்றோ, எங்கிருந்து யார் இடம் பெயர்ந்தனர் என்றோ அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்ல மேலும் நமக்கு வேறு ஆதாரங்கள் வேண்டும். Cross- references வேண்டும்.

   அவற்றைத் தேடும் போது, தொல்லியல், இலக்கியம் ஆகியவை என்ன சொல்கின்றன என்று பார்க்க வேண்டியிருக்கிறது. இங்கு தமிழ் இலக்கியம் கைக் கொடுக்கிறது. தமிழ் இலக்கியங்கள் மூலமாக, அந்த நாளில் தலைவன் வியாபார நிமித்தமாகத் தொலை தூரம் சென்ற விவரங்கள் தெரிய வருகின்றன. தலைவன் பாலை நிலங்களைக் கடந்து சென்ற விவரங்கள் நிறையவே இருக்கின்றன. தமிழ் நாட்டுக்கருகே எங்கே பாலை நிலம் இருக்கிறது? நம் மக்கள், பாலைத் திணையைச் சுட்டிக் காட்டுவார்கள். ஆனால் அது வெயில் காலத்தில் முல்லையும், மருதமும் திரிந்த நிலங்களே. அவை கிட்டத்தட்ட ஒரு வருட காலம் தலைவன் பி்ரிந்து செல்லும் போது, எதிர்ப்படும் பாலை நிலமல்ல. அப்படிப்பட்ட நீண்ட காலத்துக்கு, ராஜஸ்தானியப் பாலை நிலமே பொருந்தி வரும்.

   இந்தத் தொடரின் 81 ஆவது கட்டுரையைப் படிக்கவும். அகநானூறு 245 இல், பாலை நிலமும் அங்குள்ள ஒட்டகமும் விவரிக்கப்படுகிறது. அது நிச்சயமாக தமிழ்ப் பாலைத் திணை வர்ணனை அல்ல. ராஜஸ்தானிய அல்லது அராபியப் பாலை நிலமே அங்கு சொல்லப்படுகிறது. அவ்வளவு தூரம் சென்றிருந்தால்தான், அதைத் தாண்டிச் சென்று, வாணிபம் செய்து, திரும்பி வர ஒரு வருட காலமாவது ஆகியிருக்கும்.

   Silk route எனப்படும் வடக்குப் பெரு வழியில், காந்தாரம் வழியாக ஐரோப்பாவுக்கு வாணிப நிமித்தம் மக்கள் சென்று வந்திருக்கிறார்கள். நம் தமிழர்களும் அவாறு சென்றிருக்கிறார்கள். அங்குள்ள மொழியை இவர்கள் இங்கு கொண்டு வருவதை விட, இவர்கள் வாணிப நிமித்தம் பேசும் போது, பல தமிழ்ச் சொற்களை அங்கு பரப்பியிருப்பார்கள். நாமே வட இந்திய வியாபாரிகளுடன் பேசும் போது அவர்கள் பயன் படுத்தும் சில ஹிந்தி சொற்களைப் பயன் படுத்துகிறோம். ஆனால் நமக்கென வளர்ந்த மொழியாக, திருந்திய மொழியாகத் தமி்ழ் இருக்கவே அந்த அளவு அவற்றைத் தமிழில் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படியும் திசைச் சொற்கள் இருகின்றன. அந்த விதமாக ஹங்கேரிய மொழியில் தமிழ்க் கலப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.

   இப்படிச் சொல்ல, நமக்கு, மொழியியலுக்கு அப்பாற்பட்ட பிற துறைகள் (இங்கு இலக்கியமும், அது காட்டும் மகக்ள் போக்குவரத்தும்) தேவைப்படுகின்றன. இங்கு காட்டிய உதாரணத்திலேயே, மொழி ஒற்றுமை இடைப் பெயர்வுக்கு ஆதாரமல்ல என்பதும் தெரிகிறது.

   (தொடர்கிறது)

   நீக்கு
  6. Indology யைப் பொறுத்தமட்டில் அது மேலை நாட்டவர் பார்வையில்தான் இருக்கிறது, நம் நாட்டு மொழிகள் உருவானதைப் பற்றிய எந்த ஆய்வும் அதில் இல்லை. நம் நாட்டு மொழிகள் என்று பார்க்கும் போது, நான் கவனித்த, திரட்டிய ஆதாரங்கள்படி, தமிழும், சமஸ்க்ருதமும், 12000 வருடங்களுக்கு முன்பே எழுந்து விட்டன. ஒரு கலாசாரமாக வைவஸ்வத மனுவால், வட இந்தியாவில் மக்கள் பெருக்கம் ஏற்பட்ட பொழுது (13000 ஆண்டுகளுக்கு முன், பனியுகம் முடிந்தவுடன்)அந்த மக்கள் கொடும் தமிழைப் பேச்சு மொழியாகவும், சமஸ்க்ருதத்தை வேத மொழியாகவும் கொண்டிருந்தனர். அவர்கள் பேசின பேச்சு மொழியை அப-ப்ராம்ஸம் (Apa Brahmsa) என்றனர். அதில் தமிழ்ச் சொற்கள் அதிகம். இதை எப்படிச் சொல்கிறோம் என்றால், இன்றைக்கு மராட்டிய மொழியானது, அப ப்ராம்சத்திலிருந்து வந்தது என்கிறார்கள். எவையெல்லாம் அப ப்ராம்சச் சொற்கள் என்று பார்த்தால், அவை கொச்சையாகப் பேசப்படும் தமிழ்ச் சொற்கள் என்று தெரிகிறது. அதைத்தான் கொடும் தமிழ் என்றனர்.சமஸ்க்ருத அறிவு குறைந்து வந்தாலும், கொடும் தமிழும், குறைப்பட்ட சமஸ்க்ருதமும் சேர்ந்தே ஏனைய இந்திய மொழிகள் ஏற்பட்டிருக்கின்றன.

   1901 ஆம் ஆண்டு சென்சஸ் ரெகார்டில் இந்த அப ப்ராம்ஸாவின் தாக்கத்தை எழுதி வைத்துள்ளனர். சிந்தி மொழியில் ஆரம்பித்து, காஷ்மீரி, அசாமி, பெங்காலி என்று மேறு - கிழக்காக இந்த மொழியின் தாக்கம் இருந்து, அதிலிருந்துதான் மேற்சொன்ன மொழிகள் உருவாகி இருக்கின்றன. திராவிட மொழி என்று சொல்கிறார்களே, அப்படிச் சொல்லப்படும் ஒரிய மொழியிலும் அப ப்ராம்சா இருக்கிறது என்பது 100 வருடங்களுக்கு முன் இருந்த புரிமானம்.
   இந்த இணைப்பில் அந்த ரிப்போர்டைப் படிக்கலாம்.

   http://www.chaf.lib.latrobe.edu.au/dcd/page.php?title=&action=previous&record=1443

   அதே சமயம் தமிழ்நாடு, பெரும் பகுதி ஆந்திரா, பெரும் பகுதி கர்நாடகம், கேரளா ஆகியவை பெரும்பாலும் தமிழ் மன்னர் வசம் இருந்தன. அதனால் இங்கெல்லாம் செந்தமிழின் தாக்கம் இருந்திருக்கவே, அபப்ராம்சாவின் தாக்கம் இல்லை. இப்படித்தான் பிரிவு இருந்திருக்கிறது. ஆனால் 1901 இல் அப ப்ராம்சாவை ஆங்கிலேயர் கண்டு கொண்டதற்கு முன்பே கால்டுவெல்லின் தாக்கம் ஏற்பட்டு விட்டது. முட்டாள் திராவிடவாதிகள் தமிழை வைத்துப் பிழைப்பு நடத்த விரும்பி, தமிழின் பாரதம் தழுவிய வீச்சைக் கோட்டை விட்டு விட்டார்கள்.

   திரு செந்தில்ராஜா என்ன எழுதுகிறார் என்று எனக்குத் தெரியும். எந்த எழுத்தாளரும் எதை ஆதாரமாகக் கொள்கிறார் என்பதைப் பொறுத்து, வெளியாகும் கருத்துக்கள் எப்படிப்பட்டவை என்று சொல்லி விடலாம். வேதத்தை அவர் ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை என்பதை அவரது ஒரு கட்டுரையில் படித்தேன். அதன் பிறகு நான் அவர் எழுதுவதில் நேரமோ, கவனமோ செலுத்துவதில்லை.

   நீக்கு
 12. செந்தில்ராஜா வேதத்தை ஏற்கவில்லை என்று நீங்கள்சொல்வதை என்னால் நம்பமுடியவில்லை. ஏனெனில் அவர் வர்ணாஸ்ரம தர்மத்தை கடுமையாக ஆதரிக்கிறார். அதுமட்டுமின்றி பிராமணர்கள் வேதத்தை வழிமொழிவதை மட்டுமே தங்களது வாழ்வாதாரமாக கொள்ளவேண்டும், வேறு எந்த தொழிலும் செய்யக்கூடாது என்று ஆணித்தனமாக சொல்பவர். அப்படிப்பட்ட அவர் வேதத்தை நிராகரிக்கிறார் என்று சொன்னால் என்னால் நம்ப முடியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவரது வலைத்தளத்தில் இருக்கிறது. தேடித் தெரிந்து கொள்ளுங்கள். எல்லா வர்ணத்தவருமே வேதம் பயின்றார்கள், பிராமம்ணர்கள் கூடுதல் தொழிலாக வேதத்தைப் பயிற்றுவித்தார்கள்.

   நீக்கு
 13. நான் தேடிய வரை அவர் அப்படி சொன்ன மாதிரி தெரியவில்லை. இருந்தாலும் இன்னொருமுறை அவரது வலைத்தளத்தில் தேடிப்பார்க்கிறேன்.

  மற்றொன்று. நீங்கள் வேதத்தை பற்றி சொன்னது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. நான் காஞ்சி பெரியவர் எழுதிய தெய்வத்தின் குரலை ஓரளவு படித்திருக்கிறேன். அதில் அவர் வேதமந்திரங்களை பிறப்பால் பிராமன வர்ணத்தை சேர்ந்த ஒருவன் தான் ஓதவேண்டும் என்று ஆணித்தனமாக சொல்கிறார். அதன் சாரம்சத்தை வேண்டுமானால் மற்றவர்கள் அறிந்துக்கொள்ளலாமே தவிர, அதை ஓதுவது ஒரு பிறப்பாலான அந்தனனாகத்தான் இருக்க வேண்டும் என்று அடித்து சொல்கிறாரே? இதில் யாரை நம்புவது என்றே புரியவில்லை.

  ஒரு புறம் நமது ஹிந்து கலாசாரத்தை நினைத்து மிகவும் பெருமையாகவும் ப்ரகும்மிப்பாகவும் இருக்கிறது. மறுபுறம் பல பேர் பலக்கருதுக்களை சொல்லும்பொழுது எதை நம்புவது எதை விடுவது என்றே புரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னொருவருடைய கருத்தைப் பற்றி, இங்கு விமரிசிப்பது முறையல்ல என்பதால், நான் மேற்கொண்டு கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்கிறேன். எனினும், அவரது அந்தக் கருத்தை நீங்கள் பார்க்கவில்லை என்பதால், இதைச் சொல்கிறேன். அவரது Animal sacrifice கட்டுரை - கருத்துரைகளில் காணலாம்.

   ஹிந்து மதம் சார்ந்த எந்த விவரமாக இருந்தாலும், சந்தேகமாக இருந்தாலும், ஹிந்து மத அடிப்படை நூல்களான பிரம்ம சூத்திரம், கீதை, உபநிஷதங்கள் ஆகியவற்றை, பூர்வ ஆசாரியர்கள் எழுதிய உரையுடன் படிப்பதை ஆசாரியர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். அவற்றைப் படித்தாலே பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். அவற்றை வெளிநாட்டான் பார்வையில் எழுதப்பட்ட நூல்களைக் கொண்டு படிப்பது உதவாது.

   தர்மம் சார்ந்த கேள்விகளுக்கு, ஐந்தாம் வேதம் எனப்படும் ராமாயண, மஹாபாரதத்தில் சம்பவங்கள் வாயிலாக விளக்கங்களும், விடைகளும் இருக்கின்றன. குறிப்பாக மஹாபாரதம், சாந்திவர்வத்தில், பீஷ்மர் வாயிலாக கலியுகத்தின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு விடைகள் இருக்கின்றன.

   Animal sacrifice விஷயத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது, எப்படி அணுக வேண்டும் என்பதை என்னுடைய ஆங்கில வலத்தளத்தில் கட்டுரையாகவும், கருத்துரையிலும் எழுதியுள்ளேன். படிக்கவும்.

   http://jayasreesaranathan.blogspot.in/2009/11/animal-sacrifice-how-veda-dharma-views_06.html

   வேத மதத்தில் தளராத நம்பிக்கை உடையவன்தான், அதில் தெரியும் முரணான மற்றும், ஏற்றுக் கொள்ள கடினமாக இருக்கக்கூடிய விவரங்களை சரிவர ஆராய முடியும். இளமையிலேயே ஹிந்து மதத்தில் நம்பிக்கையை வளர்த்து விட வேண்டும். வளர்ந்து, கேள்விகள் கேட்கத் தொடங்கும் காலத்தில், ஒருவன் ஆராய வேண்டும். அப்படித்தான் உபநிஷதங்களில் மாணவன் உருவாக்கப்படுகிறான். அவனும் பல ஏடாகூடமான கேள்விகளைக் கேட்பான் - ஆனால் ஹிந்து மதத்தின் அடிப்படையைச் சந்தேகிக்க மாட்டான். ஒருவன் தன் தாயை சந்தேகப்படக்கூடாது என்பதைப் போன்றது இது. அந்தத் தாய் சொன்ன சில விஷயங்கள், தனயனுக்கு ஏற்புடையதாக இல்லாமல் போகலாம். ஆனால் அதைச் சொன்ன தாய்க்கு வலுவான காரணங்கள் இருந்திருக்கும். அந்த நோக்கில் ஆராய வேண்டுமே தவிர, அவளையே சந்தேகப்படுவது தவறு.

   ஆனால் கேள்வி கேட்கத் தொடங்கும் பருவத்தில், தாயின் மீது எந்த சந்தேகமுமில்லாமல் விடை தேடுபவனுக்கு அவள் ஏன் அப்படிச் சொன்னாள் என்பது புரிய வரும். இவ்வாறு தேட வில்லையென்றால் அது விதண்டாவாதத்தில் முடியும், தனக்கு அது வரை இருந்த புரிமானத்தையும் அழித்து விடும், கேட்போரையும் குழப்பி விடும். இதைப் பற்றி சில வரிகளில் ஒரு இண்டர்வியூவில் சொல்லி இருப்பேன்.

   // Teach the child blind faith in Hinduism....
   After that, once they grow up to think on their own, let them explore what they learnt as Faith. Let them search, seek, question and argue – but with a strong foundation seeded in their young mind about this Dharma. Only then they will come up with better understanding of this Dharma and not lose it due to ignorance. //

   From

   http://www.hindu-blog.com/2010/01/interview-with-jayasree-saranathan.html

   (தொடரும்)

   நீக்கு
  2. எல்லாம் அறிந்த பரமாசாரியார், பிராம்மணன் வேத ஓத வேண்டும் என்று சொல்லியிருப்பார். அது மட்டுமல்லாமல், பிற வர்ணத்தவரும் அவரவருக்குரிய வேத சாகைகளை கற்றார்கள் என்றும் சொல்லியிருப்பார். எல்லோருக்கும் பூணூல் இருந்த்து. கருணாநிதியின் தந்தை முத்து வேலரது புகைப்படத்தில் பூணூல் இருந்ததாகச் சொல்கிறார்கள். பூணூல் இருந்தா்லே, அவர் வேத பாடம் செய்திருக்கிறார் என்று அர்த்தம். வேத பாடம் ஆரம்பிக்கும் போது பூணூல் போட வேண்டும்.

   100 வருடங்களுக்கு முன் தமிழ் நாடு என்று பல புகைப் படங்கள் வலைத்தளத்தில் உள்ளன. அவற்றில் பொற்கொல்லர், தச்சர் படங்கள் இருக்கின்றன. அவர்கள் மார்பில் பூணூல் இருக்கும். அவரவருக்கென வேத பாடங்கள் உண்டு. அவற்றைக் கற்றிருக்கிறார்கள். இந்த இணைப்பில் உள்ள படத்தைப் பாருங்கள். இதில் உள்ளவர்கள் குன்பி, கும்பி எனப்படும் விவசாயத் தொழிலாளர்கள். இந்தப்படத்தில் இருப்பவருடைய மார்பில் பூணூல் இருக்கிறது. 1916 ஆம் ஆண்டு நிலவரம் இது. இன்று இவர்கள் OBC.

   http://en.wikipedia.org/wiki/File:KunbiCarryingOutTheDead1916.jpg

   பொற்கொல்லரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களை ஆசாரி என்றுதான் அழைப்பார்கள். ஏன் அந்தப் பெயர்? அவர் ஆசாரியரா? ஆசாரியன் என்றால் அவன் பிராம்மண வர்ணத்தவன் ஆவான். சென்ஸஸ் ரெகார்டுகளில் சோனார் (பொற்கொல்லர்கள்) தங்களை பிராம்மண வர்ணத்தவர் என்றே கூறியுள்ளனர் என்று பிரிடிஷ் ரெகார்டுகள் தெரிவிக்கின்றன. வேதம் ஓதுபவன் மட்டும் தான் பிராம்மணன் என்று இன்று சொல்பவர்களுக்கு முன்னோடி பிரிடிஷ்காரன், அவனிடமிருந்துதான் இந்தக் கருத்து தொற்றிக் கொண்டது. சோனார் எப்படி பிராம்மண வர்ணத்தவன் ஆவான் என்று அவர்கள் குடைந்தெடுத்து, அவர்களைத் தொழில் ரீதியாக ஜாதியாக்கி, பிராம்மண குணத்தையும், வர்ணத்தையும் மாற்றியவன் பிரிட்டிஷ்காரன். பிரிடிஷ் காரன் உபயம், திராவிடவாதி உருவானான். அவர்கள் உபயம், இன்று எல்லோரும், தங்களைக் கீழ் ஜாதி என்று சொல்லிக் கொள்ளப் போட்டி போடுகிறார்கள்.

   1000 வருடங்களுக்கு முன் நம் நாட்டில் யாரும், வெங்காயம், பூண்டு கூட சாப்பிட்டதில்லை. 200 வருடங்களுக்கு முன் நம் நாட்டில், தமிழ் நாடு உட்பட யாரும் அசைவம் கூட சாப்பிட்டதில்லை. முஸ்லீம் வரும் வரை பூணூல் இல்லாதவன் எவனும் இல்லை - பரசுராமரால் விரட்டியடிக்கபப்ட்டு, மலை, காடுகளில் ஒளிந்து வசித்த சில குடிகளைத் தவிர (முண்டா, சவரர்கள் இன்னும் சில குடிகள், இந்தத் தொடரில் எழுதப்பட்டுள்ளது).

   அயோத்தியில் ராமர் கோவில் இடிக்கப்பட்ட போது, துளசிதாசர் வாழ்ந்தவர். ஹிந்துக்களுக்கு ஏற்பட்ட இன்னலைத் ‘துளசி சதகம்” என்னும் பாடல்களாக எழுதிய அவர், பூணூல் போட்ட எவரைக் கண்டாலும், அவரது தலையை முஸ்லீம்கள் வெட்டினர், அவ்வாறு வெட்டிக் குவிக்கப்பட்ட தலைகள் பெரும் குன்றுகளாக இருந்தன என்று எழுதியுள்ளார். இந்த நூல் ராம ஜன்ம பூமி வழக்கில், ஆதாரமாக எற்கப்பட்டுள்ள்து.

   இதில் தெரிய வருவது என்னவென்றால், அனைத்து ஹிந்துக்களும் அன்று பூணூல் அணிந்திருந்தனர். பூணூலைக் கொண்டு ஹிந்துவை அடையாளம் கண்டார்கள். முஸ்லீம் கொலை வெறியில் தப்பிக்கப் பலரும் அன்று பூணூலையும், வேத மதத்தையும் விட்டார்கள்.

   இவ்வாறாக காலம் செய்யும் கோலமாக மக்கள் பாதிப்படைந்திருக்கையில், ஹிந்து மதத்தையும் அறியாமல், சரித்திரத்தையும் ஆராயாமல் இருக்கும் நிலை இன்று இருக்கிறது.


   நீக்கு
 14. ஜெயஸ்ரீ அவர்களே,

  உங்கள் விரிவான பதில்களுக்கு நன்றி. உங்களின் சில கருத்துக்கள் எனக்கு முரணாக படுகிறது. நீங்கள் வேதம் என்று குறிப்பிடுவது எதை? நமது நாட்டில் பொதுவாக அறிவையே (knowledge) வேதம் என்று தான் குறிப்பிடுவார்கள். அதை எல்லோரும் அவரவருக்கான குலதர்மத்தின்ப்படி படித்துவந்தார்கள். உபநிஷதுகளில் வேதங்களின் சாராம்சத்தை எழுதியிருக்கிறார்கள். அதை எல்லோருக்கும் கற்றுக்கொடுத்தார்கள். இப்பணியை நீங்கள் சொன்னதுபோல் அந்தணர்களே காலம் காலமாக செய்துவந்தார்கள். ஆனால் நான்கு வேதத்தில் காணப்படும் ஸ்லோகங்களை பிறப்பாலான பிராமணர்களே உச்சரிக்க இயலும். வேறு எந்தக்குலத்தவரும் உச்சரிக்க இயலாது. இன்னும் சொல்லப்போனால் வேத மந்திரங்கள் எழுத்து வடிவம் பெற்றதே விஜயநகர மன்னர்கள் சாம்ராஜ்யத்தின்போது தான் என்று சொல்கிறார்கள்.

  நீங்கள் சொன்னதுபோல் அக்காலக்கட்டத்தில் எல்லோரும் பூணுல் அணிந்தார்கள் தான். ஆனால் அதுவே அவர்களை பிராமணர்கள் என்று ஒரு போதும் சிதரிப்பதர்க்காக அல்ல. ஒரு மனிதன் தனது குழந்தை பருவத்தை விட்டு பிரமச்சரியத்தை மேற்க்கொள்ளும்பொழுது உபநயனம் என்று ஒன்றை நடத்தி விமர்சியாக கொண்டாடுவார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்பொழுதுதான் இந்த பூனூலை அணிவிப்பார்கள். ஆனால் அதுவுமே கூட குலத்துக்கு குலம் வேறுப்பட்ட ஒரு சம்பிரதாயமாக இருந்திருக்கிறது. அவ்வளவு தானே தவிர பூணூல் அனிந்தவனெல்லாம் வேத மந்திரங்களை ஆவாஹனம் செய்யலாம் என்று எங்கும் சொல்லியதாக எனக்கு தெரியவில்லை.

  நீங்கள் சொன்ன இன்னொரு கருத்து மிகவும் வியப்பூட்டுவதாகவும், அதே சமயம் நம்புவதற்கு கொஞ்சம் கடினமாகவும் இருந்தது, அது - பாரத நாட்டில் வசித்தவர்கள் 200 வருடங்களுக்கு முன்பு வரை அசைவமே சாப்பிட்டதில்லை என்பது. வேத வியாசரே மீனவ குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், அப்படி பட்டவர்கள் வேத காலங்களிலேயே அசைவம் சாப்பிட்டார்கள் என்று ஒரு முறை திரு ராஜாராம் சொல்லிக்கேள்விப்படிருக்கிறேன். பசு இறைச்சி வேண்டுமானால் உட்க்கொள்லாமளிருந்திருக்கலாம், ஆனால் அசைவமே சாப்பிடாமல் இருந்தார்கள் என்று சொல்வது ஏற்கக்கூடியதாக இல்லை.

  இறுதியாக ஒன்றை சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன். உங்கள் எழுத்துக்களையும் காஞ்சி பெரியவரின் கருத்துகளையும் ஒப்பிடுவதாக தயவு செய்து நினைக்கவேண்டாம். அந்த மாதிரியான நோக்கமும் எனக்கு அறவே கிடையாது. அவரின் மீதும், அவரின் கருத்துக்களின் மீதும் எனக்கு எப்படி அளவு கடந்த பக்தி இருக்கிறதோ, அதே போல் உங்களின் கட்டுரைகளை படித்தப்பின், உங்கள் கருத்து மற்றும் ஞானத்தின் மீதும் அளவுக்கடந்த மரியாதை இருக்கிறது. உங்கள் இரண்டு பேரின் கருத்துக்களை ஒப்பிட்டு குறை சொல்வது என் நோக்கம் அல்ல. அதில் எனக்கு எது முரனாகப்பட்டதோ அதை தான் உங்களிடம் கேட்டேன். அவ்வளவுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திரு ராஜன் அவர்களே,

   இந்தத் தொடரை முழுவதும் படிக்காமல் கேட்கறீர்கள் என்று தெரிகிறது. அது மட்டுமல்லாமல், நாம் மேலே சொன்னது போல, நம் பாரம்பரிய புத்தகங்களை, அவை அனைத்தையும் படிக்காவிட்டாலும், பிரம்ம சூத்திரம் ஒன்றை மட்டுமாவது படிக்கலாம். ஒருவன் தினமும் பிரம்ம சூத்திரத்தின் ஒரு சூத்திரத்தையாவது படித்து, ஆராய வேண்டும் என்கிறார் ராமானுஜர். இப்படி எழுதுவதற்கு மன்னிக்கவும் - ஐவகை வினாவில் தெரிவினாவுக்கு விரிவாக விடையளிக்க முன் வருவேன். ஆனால் ஏற்கெனவே தலை முழுவதும் scripts வைத்துக் கொண்டு கேட்பவர்களுக்கு பதில் அளிக்கத் தோன்றாது. A mind full of scripts can not imbibe anything. Remove the scripts and start afresh.

   இப்படி எழுதுவதற்கு முதல் காரணம் நீங்கள் கேட்ட முதல் கேள்வி - வேதம் என்பது எதைக் குறிக்கிறது. ஆங்கிலேயன் இந்தியர்களை மூளைச் சலவை செய்ததற்கு முன் இதற்கு ஒரு பதில்தான் இருந்தது. இப்பொழுது scripts நிறைய வந்துவிடவே இப்படிப்பட்ட கேள்வியும் வருகிறது போலும். இந்தத் தொடரில் தேடவும் - வேதம் என்று ஏன், எதைக் குறிப்பிட்டார்கள் என்பதையும், வேதத்துக்கும், சாஸ்திரத்துக்கும் என்ன வேறுபாடு என்று ஒரு கருத்துரையில் எழுதியுள்ளேன்.

   அடுத்த கேள்வி / கருத்து:-
   அந்தணர்கள் கற்றலும், கற்பித்தலும் செய்தார்கள். அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கம் எ்ன்று தொல்காப்பியம் சொன்னது என்ன என்று நச்சினார்க்கினியர் 1000 ஆண்டுகளுக்கு முன் எழுதியுள்ளார். அதுவும் இந்தத் தொடரில் இருக்கிறது. படிக்கவும்.

   அவரவருக்கென, எல்லா வர்ணத்தவ்ருக்கும் வேத சாகைகள் இருந்தன என்பது நான் சொன்னது. அதை விட்டு, அவர்களெல்லாம் பிராம்மணர்களா என்றும், ஆவாஹனம் செய்வதைப் பற்றியும் நீங்கள் கேட்பது, உள்ளெண்ணம் என்ன என்பதைக் காட்டுகிறது.

   பூணூல் போட்டவன் பிராம்மணன் என்பது இன்றைக்கு ஓதப்பட்ட - விதைக்கப்பட்ட மந்திரம். சுபாவத்தை வைத்தே வர்ணம் சொல்லப்பட்டதே தவிர பூணூலை வைத்தல்ல, ஏனெனெனில் எல்லோருமே அன்று பூணூல் போட்டிருந்தார்கள். என்னுடைய ஆங்கில வலைத்தளத்தில் What punishment for rapists" என்னும் கட்டுரையின் கருத்துரையில் சில கீதை ஸ்லோகங்கள் எண்களைக் குறிப்பிட்டிருப்பேன். கீதையை எடுத்து, அந்த ஸ்லோகங்களை எத்தனை பேர் மெனக்கெட்டு படித்திருப்பார்கள் என்பது கேள்விக் குறியே. ஏனெனில் அந்தக் கருத்துரையில் நான் விவரித்த 4-12 ஆவது ஸ்லோகத்துக்கு அடுத்த ஸ்லோகம் சதுர் வர்ணம் பற்றியது. சதுர் வர்ணம் ஏன் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், 4-12 ஸ்லோகம் அவசியம்.

   இதை ஏன் சொல்கிறேன் என்றால், அந்த அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமலும் அல்லது ஏற்றுக் கொள்ளாமலும் கேடகப்படுகிற கேள்விகளுக்கு இங்கு நான் என்ன சொன்னாலும் புரிந்து கொள்ள முடியாது

   அவரவர்க்கென வழிபாடுகள், வழிபாட்டு முறைகள் இருந்து வந்திருக்கின்றன. ஒரு சிற்பி கூட, அவனுக்கான அத்யயனம் செய்திருக்கிறான். மயனது ஐந்திறம் நூலில் ஓங்கார உபாசனையும், தெய்வ வழிபாடும் சொல்லப்படுகிறது. அதற்கென வேத மந்திரங்களை அவர்கள் கற்க வேண்டும், கற்றார்கள்.

   மூன்று வர்ணத்தவருக்கும் உபநயனம் இருந்தது. உபநயனத்தை விட்டவன் வ்ரத்தியன் எனப்பட்டான். தொடர்ந்து வரும் தலைமுறைகளிலும் வ்ரத்தியனாக இருந்தவன் சூத்திரன் எனப்பட்டான். தைத்திரிய பிராம்மணத்திலும், சதபத ப்ராம்மணத்திலும் மொத்தம் மூன்று வர்ணங்கள் என்றே சொல்லப்பட்டுள்ளது. சகாலனிய ரெக்கார்டுகளிலும் எந்த மக்களும் தங்களைச் சூத்திரர் என்று சொல்லிக் கொள்ளவில்லையே என்று ஆதங்கப்பட்டார்கள்.

   (தொடரும்)

   நீக்கு
  2. இனி விவரத்துக்கு வருவோம், மனு ஸ்ம்ருதியை மேற்கோள் காட்டுபவர்கள், மூன்று வர்ணத்தவருக்கும் உபநயனம் செய்வதைப் பற்றியும், அவர்கள் அணிய வேண்டிய பூணூலைப் பற்றியும் அதில் குறிப்பிட்டுள்ளதைப் பார்ப்பதில்லை, அல்லது சட்டை செய்வதில்லை. 14 முதல் 16 ஆம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்ட முஹூர்த்த சிந்தாமணி, தர்ம சிந்து போன்ற தர்ம நூல்களில் மூவர்ணத்தவருக்கும் உபநயனம் செய்விக்க வேண்டிய மாதம், வயது ஆகியவை சொல்லப்பட்டுள்ளது. இவற்றுக்கு ஆதாரம் கர்க ரிஷியிடமிருந்து எடுத்துக் காட்டுகிறார்கள்.
   இவற்றுள் முஹூர்த்த சிந்தாமணியைப் பாட நூலாகக் கற்பித்தார்கள் என்று தரம்பால் எழுதியிருக்கிறார். அதாவது காலனிய ஆதிக்கம் வரும் வரை மூவர்ணத்தவரும் உபநயனம் செய்திருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது.

   எந்த பரமாசாரியார் சொல்லவில்லை என்கிறீர்களோ, அவரது மடத்து வெளியீடாக தர்ம சிந்து வெளிவந்துள்ளது. காமகோடி டாட் ஆர்கில் தர்ம சிந்துவைப் படிக்கலாம். அதில் மூவர்ணத்தவருக்கும் உபநயனம் செய்விக்கும் காலம் எது சொல்லப்பட்டுள்ளது.

   http://www.kamakoti.org/kamakoti/dharmasindhu/bookview.php?chapnum=18

   //To Brahmanas and Kshatriyas mounji bandha or Upanayana is to be performed on Uttaraayana Kaala only. To Vaishyas this might be done in Dakshinaayana too. VasanteyBrahmanamupanayeeta Greeshmey Raajanyam Sharadi Vaishyam, Maghaadi Shukraantaka Panchamaasaah saadhaara -naavaa sakala Dwijaanaam/ ( Upanayana is to be done in Vasanta Ritu to Brahmanas in Greeshma and to Vaishyas in Sharad Ritu) But, as Garga stated : In case Vasanta Ritu is not possible, Greeshma- Shishiraas are also in order as the five months from Maagha to Jyeshtha are normal to Brahmanas.//

   (தொடரும்)

   நீக்கு
  3. அடுத்த கேள்வி:- 200 ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டவர்கள் அசைவம் சாப்பிட்டதில்லை. தரம்பால் அவர்களது Beautiful Tree யில் இருக்கிறது. படிக்கவும்.

   மீனவர்கள் எல்லாம் மீன் பிடிக்காத காலம் இருந்தது. அசைவம் சாப்பிடாத காலம் இருந்தது. பிரிடிஷ் கால சென்ஸ்ஸ் ரெகார்டுகளில் செம்படவர்கள் கடலோரம் வசிக்கவில்லை. உள்நாட்டில்தாம் இருந்தனர் என்றும், வேறு தொழில்களைச் செய்து வந்தனர் என்றும் எழுதியுள்ளனர். செம்படவன் என்றால் எப்படி மீன் பிடிக்காமல் இருக்க முடியும்? அதனால் இதுதான் அவன் ஜாதி என்று முத்திரை குத்தினவன் பிரிடிஷ்காரன்.

   எங்கள் குடும்பத்திலேயே செம்படவ சம்பந்தம் உண்டு. சென்ற 1000 வருடங்களாக, இடம் பெயராத தஞ்சாவூரைச் சேர்ந்த பஞ்ச கிராமிகளுள் ஒன்று எங்கள் குடும்பம். என் தாத்தா காலம் வரை கிராமத்தை விட்டு வெளியே வந்ததில்லை. ராமாயண பிரவசனத்தில் தேறியவர்கள் என் மூதாதையர். என் தாத்தாவுக்கு வலது கை போன்று இருந்தவர் ஆதி என்னும் செம்படவர். அவர்கள் சுத்த சைவம். தீபாவளியன்று என் தாத்தா அனைவருக்கும் புது துணி வாங்கிக் கொடுப்பார். தீபாவளியன்று என் தாத்தா குளித்துவிட்டு வந்ததும், அவர் அணிய வேண்டிய புது துணியை எடுத்துக் கொடுப்பவர் ஆதியே. ஆதிக்கு விஷ்ணு சஹஸ்ரநாமம் தெரியும். தினமும் என் தாத்தா திண்ணையில் உட்கார்ந்து ராமாயணம் வாசித்து, விளக்கம் அளிப்பார். ராமாயணத்தைக் கேட்க 40 கிராமவாசிகளுடன், 25 பாம்புகளும் வெளிவந்து சுருண்டு படுத்திருக்குமாம். ராமாயண விளக்கம் முடிந்தவுடன், ராமாயண புத்தகத்துக்கு நிவேதனம், ஆரத்தி எடுப்பார்கள். அப்பொழுது சுறு சுறுவென்று ஒரு பாம்பு வந்து ராமாயண புத்தகத்தின் மீது ஏறி படம் எடுக்குமாம். ஆரத்தி முடிந்தவுடன், இறங்கிப் போய் விடுமாம். அந்தப் பாம்புகளை வாழும் பாம்புகள் என்று என் தாத்தா சொல்வார். அவற்றை யாரும் அடிகக் மாட்டார்கள். அவையும் யாரையும் தீண்டாது. ஆரத்தி எடுக்கும் போது, பாம்பு வந்து படமெடுக்க வில்லையென்றால், அன்றைய விளக்கத்தில் ஏதோ குற்றம் இருந்தது என்று என் தாத்தா மீண்டும் அதே ஸ்லோகங்களை வாசித்து விளக்கம் தருவாராம். ஆதிக்கும், அந்தக் கிராம மக்கள் அனைவருக்கும், ராமாயணம் அத்துப்படி. தர்ம, நியாயம் அத்துப்படி. அறிவும், தர்ம நியாயமும் அறிந்த, கல்மிஷம் எதுவும் இல்லாத அந்த சமூக அமைப்பைக் கெடுத்தது யார்?


   நீக்கு
  4. 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தர்ம சிந்து நூலில் பிற வர்ணத்தவர் வேத பாடம் ஆரம்பிக்கச் செய்யும் உபநயனம் குறித்த விவரங்கள் இருக்கின்றன. இந்த நூல் எழுதப்பட்ட காலக்கட்டத்தில் க்ஷத்திரிய, வைஸ்யர்களுக்கு உபநயனம் செய்வித்து, பூணூல் போட்டு, காயத்ரி ஜபம் செய்து, அவரவருக்கான வேத சாகை கற்கும் நிலை இருந்திருக்கவில்லை என்றால், இவற்றைப் பற்றி இந்த நூலில் எழுதியிருக்க அவசியமில்லை. இந்த நூல் இன்றும் ஆந்திர மாநிலத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டைக் கேட்கவே வேண்டாம். எல்லாவற்றையும் விட்ட நாடு தமிழ் நாடு.

   மேலே கொடுத்த காமகோடி டாட் ஆர்கில் உள்ள தர்ம சிந்துவில் எல்லா வர்ணத்தவருக்கும் உபநயன விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றை இங்கு கொடுக்கிறேன்.


   யாருக்கு உபநயனம் செய்விக்கலாம்?

   பிராம்மண, வைஸ்ய, க்ஷத்திரியர்கள். ஒருவன் குருடனாக இருந்தாலும், காது கேளாதவனாக இருந்தாலும், உடல் ஊனமுற்றவனாக இருந்தாலும், மனவளர்ச்சி குன்றியவனுக்குப் பிறந்தவனாக இருந்தாலும் அவனுக்கு உபநயனம் செய்விக்கலாம். பேச முடியாதவனாக இருந்தாலும், பார்த்து, புரிந்து, அர்த்த்தை யோசிக்கத் தெரிந்தவனாக இருந்தால் போதும், காயத்ரி ஜபம் செய்யலாம்.

   Upanayana may be performed to any of the Brahmana-Kshatriya-Vaishyaas even to the blind, hard-hearer, or any boy with any kid of physical disability or the progeny of mentally retarded. If a person who has no faculty of speech, he could certainly perform Gayatri Japa as long as he could see, understand and think and so on.

   *****

   உபநயனம் செய்யவிக்கப்பட வேண்டிய வயது:-
   க்ஷத்திரியர்களுக்கு 12 முதல் 22 வயதுக்குள்.
   வைசியர்களுக்கு 12 முதல் 24 வயதுக்குள்.

   The suitable time for this Samskaara is eleventh or twelfth year fot Kshatriyas and for Vaishyaas the time would be during the twelfth or the sixteenth year.
   The outer age limits are sixteen years for Brahmaaas, twenty two years for Kshatriyas, twenty four years for Vaishyaas; these years are counted from the time of Garbhodaya.

   *****

   உபநயனம் செய்விக்கப்பட வேண்டிய காலம்:-
   To Brahmanas and Kshatriyas mounji bandha or Upanayana is to be performed on Uttaraayana Kaala only. To Vaishyas this might be done in Dakshinaayana too. VasanteyBrahmanamupanayeeta Greeshmey Raajanyam Sharadi Vaishyam, Maghaadi Shukraantaka Panchamaasaah saadhaara -naavaa sakala Dwijaanaam/ ( Upanayana is to be done in Vasanta Ritu to Brahmanas in Greeshma and to Vaishyas in Sharad Ritu)

   ****

   வேத சாகைகளைப் பொறுத்தே கிரக பலம் இருக்கும் போது உபநயனம் செய்விக்கப்பட வேண்டும்.
   அதன் படி பிராம்மணர்களுக்கு, சுக்கிரன், குரு பார்வை இருக்கும் போதும், க்ஷத்திரியர்களுக்கு சூரியன், செவ்வாய் பார்வை இருக்கும் போதும், வைஸ்யர்களுக்கு சந்திரன், புதன் பார்வை இருக்கும்போதும் உபநயனம் செய்விக்க வேண்டும். கிரகத்தைக் கொண்டு காரணத்தைச் சொல்லலாம். சுக்கிரனும், குருவும், குருமார்கள். சூரியனும், செவ்வாயும் போர், வீரம் குறித்தவை. சந்திரன் பால் வியாபாரம், புதன் எந்த வியாபாரமும் குறித்தவை. வேத சாகைகளைப் பொறுத்தே இந்த கிரக பலம் பொருந்திய காலம் என்று சொல்லப்பட்டுள்ளதால், அவரவர்க்கென வேத சாகைகள் இருந்தன என்று தெரிகிறது.

   Muhurtha Nirnayas for Upanayanas are difficult to decide as Vaara-Bala-Lagnas are dependent on Veda Shakhaas. Also Varnaadhipatis are Shukra-Brihaspatis to Brahmanas, Surya Angarakas for Kshatriyas and Chandra-Budhas for Vaishyas.

   ****

   உபநயனம் செய்வித்தபின், பிக்ஷை எடுத்தே உணவு சேகரிக்க வேண்டும். ஒவ்வொரு வர்ணத்தவர் கேட்க வேண்டிய விதமும் சொல்லப்பட்டிருக்கிறது.
   பிராம்மணன்:- பவதி பிக்ஷாம் தேஹி.
   க்ஷத்திரியன் :- பிக்ஷாம் பவதி தேஹி
   வைஸ்யன்:- பிக்ஷாம் தேஹி பவதி

   Brahmana Brahmachari would state Bhavati Bhikshaam Dehi; a Kshatriya Vatu would say: Bhikshaam bhavati dehi while a Vaishya Vatu would say: Bhikshaam debi bhavati/

   நீக்கு
  5. நீங்கள் சொல்வது சரி தான். நான் இன்னும் உங்கள் தளத்தில் நிறைய படிக்க வேண்டியிருக்கிறது. முழுவதையும் படிக்க குறைந்தப்பட்சம் ஒரு வருடமாவது ஆகும் என்று நினைக்கிறேன். அவ்வளவு எழுதியிருக்குறீர்கள்.

   நீங்கள் கீதையில் மேர்க்கொள்க்காட்டிய குனதின்ப்படி வர்ணத்தை பற்றி கஞ்சி பெரியவர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.

   http://www.kamakoti.org/tamil/2dk69.htm

   அதுமட்டுமின்றி சமீபாகமாக நான் ஸ்ரீ சேஷாத்ரிநாதன் சாஸ்த்ரிகள் வழங்கும் தர்ம சாஸ்திரம் என்ற ஒரு நிகழ்ச்சியை பார்க்க நேரிட்டது. அதில் அவரும் பிறப்பாலேயே வர்ணம் என்று ஆணித்தனமாக சொல்கிறார். நேரம் கிடைக்கும் பொழுது கீழே கொடுத்துள்ள தளத்திலுள்ள வீடியோக்களை பாருங்கள். என்னைவிட உங்களுக்கு இவர் பேசுவது நன்றாக புரியும்.

   http://www.istream.com/tv/show/1534/Dharma-Sastram

   நீக்கு
  6. http://www.kamakoti.org/tamil/2dk69.htm தளத்தில் பரமாசாரியார் நன்கு தெளிவாக எழுதியிருக்கிறார். அவர் எழுதியதைப் புரிந்து கொண்டால், மனு ஸ்ம்ருதி வர்ணக் கலப்பு பற்றிச் சொல்வது Human resource development கருத்தே என்பது புலனாகும்.

   நீக்கு
 15. Your link "http://www.chaf.lib.latrobe.edu.au/dcd/page.php?title=&action=previous&record=1443" is not working; please verify and provide current link

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. That site is not found since 2 years. The Colonial period census records seem to be in the custody of UK and some University of UK. These records and also the books on Colonial India and travelogues of the Colonial period were archived by an UK University in the web from which I copied down many topics and saved them in my folders. Those pages were shown in the above comments of mine. At the time of writing those comments and giving links, those links were available on net. They were redirceetd for sometime and not found today. Lets hope that they come up with better presentation. It seems India had not done anything to retrieve the colonial period Indian records.

   The specific link that you have asked for pertains to 1901 census record. That is available as a scanned book in the internet. You can access it in this link

   https://archive.org/stream/pts_eastindiacensusg_3720-1115#page/n1/mode/2up

   Suppose your matter of interest is 'apa brahmsa' you can read them from page no 303 onwards in that link.

   https://archive.org/stream/pts_eastindiacensusg_3720-1115#page/n337/mode/2up

   This is the main page of Open Library publication of this book. You can download a copy, I think:

   https://openlibrary.org/books/OL23367761M/East_India_%28Census%29

   நீக்கு