தலையில் ஒற்றைக் கொம்பைக் கொண்டிருந்த யூனிகானை, எகிப்து நாட்டிலிருந்து கடவுள் கொண்டு வந்தார் என்று பைபிள் கூறுகிறது.
- "God brought them out of Egypt; he hath as it were the strength of an unicorn."—Numbers 23:22
- "God brought him forth out of Egypt; he hath as it were the strength of an unicorn."—Numbers 24:8
எகிப்திலிருந்து வந்ததென்று சொல்லப்படவே, இந்த மிருகத்தை இந்தியாவுடன் எப்படி தொடர்புபடுத்தலாம் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு விடை தேடினால், பண்டைய பாரத நாட்டிலிருந்து பல கருத்துக்கள் கடன் வாங்கப்பட்டு எகிப்து வரை சென்றிருந்த விவரங்கள் தெரிய வரும். அவற்றை இந்தக் கட்டுரையில் காண்போம்.
யூத மொழியில் முதலில் எழுதப்பட்ட பைபிளில் (OLD TESTAMENT) யூனிகானை, ரீம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இது எந்த மிருகம் என்று ஒருவருக்கும் தெரியாது. ரீம் என்ற சொல்லின் பொருளும் இன்று வரை ஒருவருக்கும் தெரியாது. ஆனால் இது ஒற்றைக் கொம்புடையது என்றும், வலிமை மிக்கது என்றும் எழுதப்பட்டுள்ளது. ஒற்றைக் கொம்புடைய மிருகம் எதையும் ஐரோப்பாவில் அவர்கள் கண்டதில்லை. ரீம் என்னும் இந்தப் பெயரை வழிவழியாக மக்கள் சொல்லி வந்திருக்கவே, அப்படியே அதைத் தங்கள் நூலில் கையாண்டிருக்கின்றனர் என்று தெரிகிறது.
கண்ணால் கண்டிராத, ஒற்றைக் கொம்பு மிருகத்தை ஏற்றுக் கொள்ள முடியாத ஆராய்ச்சியாளர்கள், இந்த ஒற்றைக் கொம்பு விவகாரத்துக்கு ஒரு விளக்கம் அளிக்கிறார்கள். ரீம் என்னும் மிருகம் உண்மையில் இரண்டு கொம்புகள் கொண்டதாகத்தான் இருக்க வேண்டும், பக்கவாட்டில் பார்க்கும்போது, இரண்டு கொம்புகளும் ஒரே இணையாக அமைந்து, ஒரு கொம்பு மட்டுமே இருப்பதாகத் தோற்றமளிக்கும். அதைத் தவறாகக் கவனித்து, ஒற்றைக் கொம்பு மிருகம் என்று யூனிகான் என்னும் மிருகத்தைக் கற்பனையில் உருவாக்கியிருக்கிறார்கள் என்பது இவர்களது கருத்து. இதை நிரூபிக்க ஒரு பழைய சிற்பத்தைக் காட்டுகிறார்கள்.
பொ.மு. 9 ஆம் நூற்றாண்டில் மெசபடோமியாவில் உள்ள அசிரியா நாட்டை ஆண்ட 2 ஆம் அசுர்நாசிர்பால் என்னும் அரசனைச் சித்தரிக்கும் சிற்பம் இது. இந்த இடம் இன்றைய ஈராக் நாட்டில் இருக்கிறது. அதாவது பண்டைய பாரதத்தை ஒட்டி அதன் மேற்கெல்லையில் இந்த இடம் இருந்தது. ஆரிய – தஸ்யு போராட்டம் என்று சொல்லப்பட்ட யாயதியின் ஐந்து மகன்கள் (பஞ்ச மானவர்கள்) போட்ட சண்டையின் போதே மிலேச்சர்கள் என இரண்டு மகன்கள் தங்கள் பரிவாரங்களுடன் வெளியேற்றப்பட்டு, அவர்கள் சென்றடைந்த இடம் இது என்பதை நாம் நினைவில் கொண்டு இதை ஆராய வேண்டும்.
இந்தப் படத்தில் இடது புறம் இருப்பவன் அசுர்நாசிர்பால் என்னும் அரசன். அவனுக்கு அருகே கீழே படுத்துள்ள நிலையில் உள்ள மிருகத்தின் தலையில் ஒற்றைக் கொம்பு அமைப்பு காணப்படுகிறது. ஒற்றைக் கொம்பு மிருகத்தை மறுப்பவர்கள் சொல்வது போல, இரண்டு கொம்புகள் ஒருங்கிணைந்து, பக்கவாட்டுத் தோற்றத்தில், ஒற்றைக் கொம்பு போலத் தெரியவில்லை. முன் தலையின் நடுப்பகுதியில், ஒற்றைக் கொம்பாகவே இருப்பது போலத்தான் இந்தச் சிற்ப அமைப்பில் தெரிகிறது.
இந்த மிருகத்தின் பெயர் ரிமு. இது ஒற்றைக் கொம்புடைய மிருகம் என்றே இந்த அரசனைப் பற்றிய செய்திகளில் சொல்லப்பட்டுள்ளது. இந்த அரசன் ஒற்றைக் கொம்பு மிருகத்தை வேட்டையாடுவதில் வல்லவன் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்தச் சிற்பத்தில் அவன் அந்த மிருகத்தைக் கொன்றதாகத் தெரியவில்லை. அந்த மிருகம் அடக்கப்பட்டு, சாதுவாக அவனிடத்தில் அடங்கியுள்ளதாகத் தெரிகிறது. மெசபடோமியச் சிற்பத்தில் காணப்படும் ரிமு என்னும் இந்த மிருகத்தின் பெயரே, யூத மொழியில் ரீம் என்றாகி இருக்க வேண்டும்.
ரிமு என்னும் இந்த மிருகம், பாரதத்துக்கு அருகிலுள்ள ஈரான், ஈராக் பகுதிகளைக் கொண்ட மெசபடோமியச் சிற்பங்களில் காணப்படுகையில், இதை எகிப்துடன் ஏன் தொடர்புபடுத்தினார்கள் என்ற கேள்வி எழுகிறது. அதற்குக் காரணம், யூதர்களது சரித்திரத்தில் இருக்கிறது. எகிப்துக்கும், மெசபடோமியாவில் உள்ள பாபிலோனுக்கும் இடையில், யூதர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். முதலில் எகிப்து நாட்டில் அடிமைகளாக இருந்தார்கள். அப்பொழுது அவர்களுக்குப் பல எகிப்தியப் பழக்க வழக்கங்கள் தெரிய வந்தன. அதற்குப் பிறகு அவர்கள், பாபிலோனியா, அசிரியா போன்ற பகுதிகளிலும் அடைக்கலம் புகுந்து வாழ்ந்து வந்தார்கள், அங்கிருக்கும் போது, ரிமுவைப் பற்றி அறிந்திருக்கலாம். பிறகு அங்கிருந்தும் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
அவர்கள் சென்ற இடங்களிலிலிருந்த கருத்துக்களை தங்கள் மதக் கொள்கைகளில் சேர்த்துக் கொண்டார்கள் என்று சொல்லும் வண்ணம் பல ஒற்றுமைகளை இவர்கள் எழுதிய நூல்களில் காணலாம். அவர்கள் பாபிலோனில் இருந்த போது, பொ.மு 6 ஆம் நூற்றாண்டில் தங்கள் இடப்பெயர்வைப் பற்றி 'புக் ஆஃப் எக்ஸோடஸ்" என்று எழுதினார்கள். அதே பகுதியைச் சேர்ந்த அசிரியாவை அதற்கு முன்பே நாம் மேலே சொன்ன அசுர்நசீர்பால், பொ.மு 9 ஆம் நூற்றாண்டில் ஆண்டு வந்தான். இதனால், ரிமு என்னும் மிருகம் குறித்த கருத்துக்கள் யூத மக்களுக்கு அப்பொழுதே தெரிய வந்திருக்கும்.
அதற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பைபிளின் பழைய ஏற்பாட்டை எழுதிய போது, அந்த மிருகத்தை எகிப்திலிருந்து இறைவன் கொடுத்தார் என்று சொல்லி விட்டார்கள். அவர்கள் மூதாதையர் எகிப்து நாட்டில் அடிமைகளாகப் பல கொடுமைகளைச் சந்தித்தனர். முடிவில் இறைவன் அருளால் தப்பித்தனர். இதனால், அடிமைத்தனத்திலிருந்தும், துன்பங்களிலிருந்தும், தங்களை விடுவிக்க வலிமை வாய்ந்த ரீம் என்னும் யூனிகானை இறைவன் அனுப்பினார் என்ற கருத்து உருவாகியிருக்கிறது. அதே கருத்தை ஆங்கில பைபிளிலும் காப்பி அடித்து விட்டனர்.
யூனிகானின் ஆரம்பம், அசுர்நசீர்பால் காலத்துக்குச் செல்கிறது. அவன் அந்தக் கருத்தை பாரதத்திலிருந்து கடன் வாங்கினான் என்று சொல்லும் வண்ணம் சில விவரங்கள் இருக்கின்றன. முதல் விவரம், அந்த அரசன் ஆண்ட அசிரியா என்னும் நாடு, பாரதத்துக்கு மிக அருகாமையில் இருந்தது என்பதே.
இந்த அரசனைக் காட்டும் ஒரு சிற்பம் கிழே தரப்பட்டுள்ளது.
அதில் அவன் முகத்துக்கருகே சில சித்திர அமைப்புகள் இருக்கின்றன.
அவற்றுள் சக்கரம் போன்ற அமைப்பை அவன் விரல் நீட்டிக் காட்டுவது போல அமைந்துள்ளதைப் பார்க்கலாம்.
வலது புறத்திலிருந்து, இடது புறமாகப் பார்க்கும் போது, முதலில் மகுடம் போல ஒரு அமைப்பு, அதற்குப் பிறகு சூரியன், பிறகு பிறைச் சந்திரன், அதற்குப் பிறகு ஆயுதம் போல ஒரு அமைப்பு, அதைத் தொடர்ந்து கடைசியில் சக்கரம். அந்தச் சக்கரத்தை இந்த அரசன் சுட்டிக் காட்டுகிறான்.
சக்கரம் என்பது தர்மச் சக்கரம் என்றும், அது வராஹம் என்னும் வ்ருஷாகபியின் உருவகம் என்றும் இதற்கு முன் பார்த்தோம். அந்த கருத்தைப் பிரதிபலிப்பது போல இந்த அசிரிய அரசனும், ஒற்றைக் கொம்பு மிருகத்துடன் தொடர்பு கொண்டவனாகவும், சக்கரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவனாகவும் தன்னைக் காட்டிக் கொள்கிறான்.
வராஹத்துடன் கூடிய சக்கரத்தைக் காட்டும் சின்னங்கள், மொஹஞ்சதாரோவில் 5000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வந்திருக்கின்றன.
அதை ஒத்த அமைப்புகளைக் காட்டும் சிற்பங்கள் இன்றைக்கு 2800 ஆண்டுகளுக்கு முன்புதான் அசிரியாவில் ஏற்பட்டுள்ளன. வராஹக் கருத்து, மொஹஞ்சதாரோ அல்லது பாரதப் பகுதிகளிலிருந்து அங்கு சென்றிருக்க்கூடிய சாத்தியத்தையே இது காட்டுகிறது.
அசிரிய மொழியில் ரிமு என்று அழைக்கப்பட்ட இந்தச் சொல், வராஹ என்னும் சொல்லிலிருந்து உருவானது என்று சொல்லலாம். ரகரத்துக்கு முன்னால், வகரம் வரும் போது, வகரத்தை விட்டுவிடும் வழக்கம் இருக்கிறது, விருஷபம் என்பதை ரிஷபம் என்று சொல்லலாம். விருஷாகபி என்பதை, ரிஷாகபி என்று சொல்லலாம். அது போல வராஹ என்னும் சொல்லிலிருக்கும் வகரம் விடப்பட்டு, ராஹ, ரஹ, ரக என்றாகி, ரிஹி, ரிமி, ரிமு என்று உருமாற முடியும்.
ரிமு என்னும் இந்த மிருகமே யூத மொழியில் எழுதப்பட்ட பழைய ஏற்பாடு பைபிளில் சொல்லப்படும் ரீம் என்னும் ஒற்றைக் கொம்பு மிருகமாக இருக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. ஏனெனில் ரீம் என்ற சொல்லுக்கு யூத மொழியிலும் எந்த அர்த்தத்தையும் காண முடியவில்லை. அந்தச் சொல் காட்டக்கூடிய அமைப்பில் எந்த மிருகமும் இல்லை. இதனால், இந்த மிருகமும், இதன் பெயரும், இந்த மிருகம் குறிக்கும் கருத்தும், இந்தியாவிலிருந்து அசிரியா வழியாக, யூதர்கள் இருந்த எகிப்து வரை சென்ற கருத்தே என்று தெரிகிறது.
ஒற்றைக் கொம்பு மிருகத்தை, பாரதத்துக்கு வெளியே முதலில் காட்டிய அசுர்நாசிர்பால் என்னும் மன்னனது பெயரும், இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட அல்லது, பாரதத்தின் வேத நெறியிலிருந்து ஒதுக்கப்பட்ட ஒரு மிலேச்சப் பெயராக இருக்கிறது. 31 ஆவது கட்டுரையில், பாரதத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அஹுரா மஸ்தா என்பவன் தன்னை அசுரன் என்று கூறிக்கொண்டு, தனக்குத் தெரிந்த, மற்றும் நினைவில் இருந்த வேத மரபின் அடிப்படையில் சமயக் கருத்துக்களைத் தோற்றுவித்தான் என்று பார்த்தோம்,
ஏற்கத்தகாதவன் என்று வெளியேற்றப்பட்ட அவனை அன்றைய பாரத மக்கள் (ஆரிய வர்த்தம்) அசுரன் என்று வர்ணித்திருக்கிறார்கள். அதை அவனும் ஏற்றுக் கொண்டு தன்னை அசுரன் அல்லது அஹுரன் என்றே அழைத்துக் கொண்டான். அவனுக்கும், அவனைச் சேர்ந்தவர்களுக்கும், அசுரர்களே உயர்ந்தவர்கள், அவர்களது எதிரிகள் மோசமானவர்கள் என்ற கருத்து எழுந்தது இயல்பே. அசுரனுக்கு எதிரி தேவன் என்பதால், அவர்கள் தங்கள் எதிரிகளை தேவர்கள் (தேவா, தெய்வா என்று) சித்தரித்தார்கள். அதாவது அவர்களைப் பொறுத்தவரையில் அசுரர்கள் நல்லவர்கள், உயர்ந்தவர்கள் ஆவார்கள். தேவர்கள் கெட்டவர்கள், கொடியவர்கள் ஆவார்கள்.
இவர்கள் அசுர் என்ற ஒரு இடத்தையும் ஸ்தாபித்தார்கள். அதைத் தலைநகரமாகக் கொண்டு அசிரியா என்ற நாடு எழுந்தது. கீழுள்ள வரைபடத்தில் அசுர் என்னும் நகரத்தைக் காணலாம்.
ஊர், உருக் என்னும் பெயர் கொண்ட இடங்கள் இன்றைய ஈராக்கில், அதாவது அன்றைய மெசபடோமியாவில் அருகருகே இருப்பதை இந்தப் படத்தில் காணலாம். இந்த பெயர்களும் பாரத நாட்டிலிருந்து வெளியேறியவர்கள் எடுத்துச் சென்ற பெயர்களே என்று 53 ஆவது கட்டுரையில் கண்டோம் என்பதை நினைவுபடுத்திக் கொள்வோம்.
மஹாபாரதம் சாந்தி பர்வம் 49 ஆவது அத்தியாயத்தில் ஊர் என்னும் பெயர்க் காரணம் விளக்கப்ப்டுகிறது. ஊரு என்பது சமஸ்க்ருத்த்தில் தொடையைக் குறிக்கும் சொல். நிலநடுக்கத்தால், சில பகுதிகள் பூமிக்குள், புதைந்து, வேறு பகுதிகள் மேலெழுந்தன. அதை ஒரு உருவகமாக, காஸ்யப முனிவர், பூமி தேவியைத் தன் தொடையில் தாங்கிக் கொண்டார் என்று சொல்லப்பட்டது. அதனால் அப்படி மேலெழுந்த பகுதியை ஊர் என்றும் ஊரு என்றும் அழைத்தார்கள். இதனால் பூமாதேவிக்கு, உர்வி என்ற பெயரும் ஏற்பட்டது.
இதேவிதமான பெயர்க் காரணத்தை மெசபடோமியாவில் உள்ள – மேலே படத்தில் காட்டப்பட்டுள்ள ஊர் என்னும் இடத்துக்குச் சொல்லலாம். மஹாபாரதத்தில் உர்வி என்று சொன்னதைப் போல, இந்த ஊர் என்னும் இடத்தின் தெய்வமாக உரிம் என்னும் பெண் தெய்வத்தை வணங்கியிருக்கின்றனர். ஊர், உருக் என்ற பெயருள்ள இந்த நகரங்கள் நதிப் படுகையை ஒட்டி அமைந்துள்ளன. முதலில் நீருக்குள் முழுகியும், பிறகு மேலே வெளிப்பட்டு, மக்கள் வாழத் தக்க வகையில் அவை ஏற்பட்டிருக்க வேண்டும். அப்படி வெளிப்பட்ட இடங்களுக்கு பாரத தேசத்தில் இடப்படும் பெயரை அறிந்தவரே அந்த இடங்களுக்கு அப்படிப் பெயரிட்டிருக்க வேண்டும்.
அந்த பகுதிகளெல்லாம், பாரதத்திலிருந்து வெளியேறிய மிலேச்சர்கள் வாழ்ந்த பகுதிகள் ஆகும். ஊர், உருக் ஆகியவை இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன் எழுந்தவை. அசுரன் என்னும் பெயரில் உள்ள அசுர் என்னும் நகரமும் ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன் உருவாகியிருக்கிறது. அதை ஆண்டவன் அசுர்நாசிர்பால் என்னும் அரசன். அவன் பெயரை ஆராய்ச்சியாளார்கள் அசுர் –நாசீர்- பால் என்று பிரிக்கிறார்கள். அசிரிய மொழியில் "சந்ததியைப் பாதுகாக்கும் அசுரன்" என்று பொருள் தருகிறார்கள்.
ஆனால் இந்தப் பெயர் சமஸ்க்ருதத்தை ஒத்திருக்கிறது. அசுர் என்றால் அசுரன். அவன் பெயரில் உள்ள நாசீர் नासिर என்பதும், ஒரு சமஸ்க்ருதச் சொல். இதன் பொருள் முன்னோக்கிச் செல்பவன் அல்லது முன்னணியில் இருப்பவன்.
பால் என்பது பரிபாலனம், அல்லது காப்பற்றுபவன் என்னும் பொருளைத் தரும் சமஸ்க்ருதச் சொல்லாகும்,
அசுர்நாசீர்பால் என்னும் சொல்லுக்கு, முன்னின்று பரிபாலிக்கும் அசுரன் என்று சமஸ்க்ருத்தில் பொருள் அமையும்.
இதையே "சந்ததியைப் பாதுகாக்கும் அசுரன்" என்று அவர்கள் பொருள் கொள்கிறார்கள். மூலம் சமஸ்க்ருதமாகவும், அசிரிய அர்த்தம் அதன் திரிபாகவும் காணப்படுகிறது.
பெயர்ச் சொற்கள் பாரதத்திலிருந்து வெளிச் சென்றதைப் போல, இந்த அரசன் அடக்க விரும்பிய மிருகமும் பாரத்த்திலிருந்து வெளியே சென்றிருக்கிறது.
ஒற்றைக் கொம்பு மிருகம், பாரதத்தில் அதாவது ஆரிய வர்த்தத்தில் தெய்வமாகப் பார்க்கப்பட்டது. தெய்வம் என்பதையே இகழும் அசுர்நாசிர்பால் போன்ற அசுர மக்களுக்கு அந்தத் தெய்வத்தை அடக்குவது ஒரு பெரிய வெற்றியாகும், அதனால்தான் அந்த ஒற்றைக் கொம்பு மிருகத்தை வேட்டையாடி, அடக்குவதில் அவனுக்கு ஆர்வம் இருந்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே அவனது காலத்தில் ஒற்றைக் கொம்பு மிருகம் இருந்திருக்காது. ஆனால் தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள, அவன் அந்த மிருகத்தை அடக்கினது போன்ற தோற்றத்தில் சிற்பம் வடிக்கச் செய்திருக்கிறான்.
இதைச் சொல்ல ஒரு காரணம், அந்த மிருகம் எப்படி இருக்கும் என்று அவர்களுக்குத் தெரியாது. அதனால் அவர்கள் அறிந்த ஒரு மிருகத்தின் அமைப்பில், முன் கொம்பு ஒன்றை அமைத்து சிற்பமாக வடித்திருக்கிறார்கள். மேலே காட்டப்பட்ட சிற்ப அமைப்பில் உள்ள மிருகம் Bos Primigenius என்னும் காளையை ஒத்திருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அது ஒற்றைக் கொம்பு மிருகமல்ல, அதற்கு இரண்டு கொம்புகள் இருந்தன.
அந்த மிருகம் இப்படி இருக்கும்.
இதனுடன் அசுர்நாசீர்பால் அருகில் இருக்கும் மிருகத்தை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
மிருக உருவம் எப்படியானாலும், அவர்கள் விரும்பியது ஒற்றைக் கொம்பு மிருகத்தையே. வேத மரபிலிருந்து கடன் வாங்கிய கருத்து ஈராக் தொடங்கி, மேற்கு ஐரோப்பா, மத்தியத்தரைக் கடல் பகுதிகள் வரை பரவியிருக்கிறது. முடிவில் பைபிளிலும் இடம் பெற்று விட்டது.
எகிப்திலிருந்து இந்த மிருகத்தைக் கொண்டு வந்த்தாக பைபிளில் சொல்லப்பட்டுள்ளது.
அதற்கு ஒரு காரணம், நாம் முன்பே சொன்னது போல, எகிப்து நாட்டிலிருந்த யூதர்கள் அசிரியா, பாபிலோன் போன்ற இடங்களுக்கு இடம் பெயர்ந்த போது அங்கிருந்து தெரிந்து கொண்ட இந்த மிருகத்தைப் பற்றித் தங்கள் நூலில் எழுதியிருக்கலாம். அது மட்டுமல்லாமல், அவர்களே இந்த மிருகத்தைப் பற்றி அறிந்திருக்கலாம்.
ஏனெனில் யூதர்களது சரித்திரமே ஆபிரஹாம் எனப்படும் அப்ரம் என்பவனிடத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது. பிரம்மம் என்பதற்கு எதிர்ப்பதம் அப்பிரம்மம் அல்லது அப்ரம் ஆகும். பிரம்மத்தை எதிர்த்தவன் அல்லது, பிரம்மத்தைப் போற்றும் வேத நெறியிலிருந்து வழுவினவனுக்கு அப்பிரம்மம் அல்லது அப்பிரம் அல்லது ஆப்பிரஹாம் என்ற பெயர் ஏற்பட முடியும். பிரம்மத்தைப் பர்றிப் பேசிய நாடு பாரதமாகும். பாரத நாட்டவனாக அவன் இருந்திருந்தால், பிரம்ம நெறியிலிருந்து வழுவினால், அவனை வெளியேற்றியிருப்பார்கள். அவன் தனது தாய் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டான் என்றுதான் யூதக் கதை ஆரம்பிக்கிறது!
தனது தாய் நாட்டை விட்டு வெளியேறிய இவன் ஹீப்ரு என்றழைக்கப்பட்டான். ஹீப்ரு என்றால் சுமேரிய மொழியில் 'கடந்து செல்வது' என்று பொருள். அவன் யூப்ரடீஸ், டைக்ரீஸ் நதிகளைக் கடந்து செல்லவே ஹீப்ரூ எனப்பட்டான் என்பதே அவர்கள் கதை சொல்லும் விவரமாகும். இந்த நதிகள் இந்தியாவுக்கு மேற்கில் இருக்கின்றன. தங்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு, இந்த நதிகளைக் கடந்து சென்றான் என்றால், அவன் இந்த நதிகளுக்குக் கிழக்கே வாழ்ந்திருந்தான் என்று தெரிகிறது.
இந்த நதிகளுக்குக் கிழக்கே இருந்த நாடு சிந்து நதி வரை பரவி இருந்த அன்றைய பாரத நாடாகும்.
இந்த ஆப்பிரஹாம், பாரத நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறான்.
இதை உறுதிபடுத்துவது போல, அவனது கதையில் 'அபிமிலேச்சன்' என்னும் பெயரும் வருகிறது. (Gen. 12:10 ff.)
அபிமிலேச்சன் என்னும் அரசன் சாராவை, ஆபிரஹாமின் மனைவி என்றும், சகோதரி என்றும் சொல்கிறான்.
அபிமிலேச்சன் என்பது, மிலேச்சனைத்தான் குறிக்கிறது.
அசுர் நாட்டவர்கள் தங்களை அசுரர்கள் என்று அழைத்துக் கொண்டது போல,
மிலேச்சர்களும் தங்களை மிலேச்சர்கள் என்ற பெயரில் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தச் சொல்லாட்சிகளெல்லாம், பாரதத்தில் இருந்து வந்த கருத்துக்களிலிருந்துதான் ஏற்பட்டன.
சாரா என்னும் பெயர் சரஸ்வதியையும், ஆபிரஹாம் என்னும் பெயர் பிரம்மாவையும் குறித்து எழுந்தவை. பிரம்ம ஞானத்தைப் பெற்ற குடும்பத்தில் பிறந்து, ஏதோ ஒரு காரணத்தால், தேசப் பிரஷ்டம் செய்யப்பட்டவனாக ஆபிரஹாம் தெரிகிறான். தேசப் ப்ரஷ்டம் என்பதில் உள்ள பிரஷ்டம் என்பது 'தள்ளி வைப்பது' என்று பொருள்படும். பிரஷ்டம் என்பதே ஹீப்ரு என்றாகி, கடந்து செல்லுதல் என்ற பொருள கொண்டிருக்க வேண்டும், அதாவது ஹீப்ரூ என்பவன், நாட்டை விட்டு, தன் குலத்தை விட்டுக் கடந்து சென்றவன் என்றும் பொருள்படும். அரிஸ்டாடில் அவர்களும், யூத சரித்திர ஆராய்ச்சியாளர்களும், ஆபிரஹாம், இந்தியாவிலிருந்து வந்தவன் என்று சொன்னது உண்மையே என்பது இதன் மூலம் மேலும் உறுதியாகிறது.
ஆபிரஹாமிலிருந்து யூதர்கள் உண்டாயினர் என்கிறது யூதர் வரலாறு. அவ்வாறு உண்டானவர்கள், ஆபிரஹாம் சஞ்சரித்த மெசபடோமியா தொடங்கி, எகிப்து வரை வாழ்ந்து வந்தார்கள். இதை அவர்களைப் பற்றிய மரபணு ஆராய்ச்சிகள் உறுதிபடுத்துகின்றன. இந்தியாவிலிருந்து வெளியே சென்றவன் அவன் ஒருவன் மட்டுமே. அவன் மூலமாகவும், அவனுடன் நட்பு பாராட்டியும் இணைந்தவர்கள் இன்றைய அரேபியா, இஸ்ரேல் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களே. அவர்களுக்குள் மரபணு ஒற்றுமைகள் காணப்படுகின்றன. அதாவது யூதர்களுக்கு ஜன்மப் பகைவர்களாக இருக்கும் அராபிய முஸ்லீம்களுக்கும், யூதர்களுக்கும் மரபணு ஒற்றுமை இருக்கிறது,. ஒருகாலத்தில் இவர்கள் ஒரே நம்பிக்கை கொண்ட மக்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை இது உறுதிப்படுத்துகிறது, இஸ்லாம் தோன்றிய பிறகு, மத மாற்றம் காரணமாகப் பிரிந்தவர்கள் அராபிய முஸ்லீம்களாக ஆகியிருக்கிறார்கள். ஆனால் மரபணு ஒற்றுமையால் இவர்கள் யூதர்களுடன் தொடர்பு கொண்டவர்களே.
யூதர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பகை இருந்தாலும், யூத மதத்திலிருந்து இஸ்லாம் பல கருத்துக்களைக் கடன் வாங்கியிருக்கிறது.
பாரதநெறிகளை அறிந்த ஆபிரஹாமினால் உருவாக்கப்பட்ட யூத மதத்தில் பாரதக் கருத்துக்களை ஒட்டி பல கருத்துக்கள் எழுந்தன என்பதில் ஆச்சரியமில்லை.
அதில் ஒன்றாக ஒற்றைக் கொம்பு வராஹம் (யூனிகான்) இருந்திருக்கக் கூடிய சாத்தியம் இருக்கிறது.
அது பின்னாளில் – கிருஸ்துவத்திற்குச் சென்றிருக்கிறது.
யூனிகான் மட்டுமல்ல,
பல யூதக் கருத்துக்களும் கிருஸ்துவத்தில் புகுந்தன.
கிருஸ்துவத்திலிருந்து இஸ்லாம் கடன் வாங்கிக் கொண்டது.
தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல,
பாரத நெறியிலிருந்து, யூதமும், கிருஸ்துவமும், இஸ்லாமும்
பல கருத்துக்களை எடுத்துக் கொண்டிருக்கின்றன.
இன்னும் ஒரு முக்கியக் கருத்து இருக்கிறது.
அதுவும் தலையில் கொம்பு முளைத்த கதைதான்.
அதன் விவரத்தை அடுத்தக் கட்டுரையில் காண்போம்.
Madam,
பதிலளிநீக்குwaiting eagerly for the next post. If dictating is easier than writing I would like to offer a transcription service for you. You may record and upload your voice in FTP. I can transcript it and send it back to you by e-mail for your editing. What an idea sirji! thus I can read faster...LoL
Thank you Sir. I think I can do myself for now. At the moment I am in need of translators into English - not verbatim but general.
பதிலளிநீக்குActually madam, i have a small doubt.
பதிலளிநீக்குYou have mentioned it that, Varaha form in India has two horns. But here in the post it is 'Unicorn'. Also you have given that, the concept of Unicorn might have arrived on seeing the Varaha from its sides. Even this matches with your claim that, if you see a Varaha from side posture, both the horns would appear as a single frame! But could you give a better explanation on why Varaha was considered to have one horn and what exactly relates the 'Milecha Unicorn' with the 'Indian Wild boar'. Also the Baghavath Swaroopam of Varaha is again different from the actual Varaha. As it is described as 'Swetha Varaha' - The White Boar. Requesting Clarifications...
Also, i donot understand why the pictures that you give are not viewable. Your Bible quote "God brought them out of Egypt; he hath as it were the strength of an unicorn."— means that somebody was brought from Egypt and he had the strength of an Unicorn. It doesnot say that, the Unicorn is brought from Egypt. Please Clarify. Also, i have seen in parables that,the Unicorn in a form of a Horse. So this is very new to hear that, the Boar is considered as Unicorn. Could you kindly make it clear on what basis, this claim of calling a Boar to be an Unicorn is made! - Thanks in advance
பதிலளிநீக்கு@ Anonymous.
பதிலளிநீக்குAnswering to your doubts
* I have not said that Varaha has 2 horns. I have only said that it has 1 horn and even quoted from Ramayana - Eka srungi.
* In depictions of Varaha today, there may be 2 or even 3 horns. But that does not conform with old texts. The reason for the discrepancy is that the iconography of Varaha is not available prior to 1800 years BP. Varahamihira clearly describes the iconography of some deities, but Varaha is not found mentioned there giving rise to the opinion that it is a later evolved one. Such an evolution can be related from the sequence of pics I have shown from Gurjars onwards.
* The pictures look fine from my computer. Perhaps your computer is slow and the download is slow.
* I can not - no one can say why Varaha was depicted with a single horn. The reason could be philosophical. Explanation on such lines is unnecessary for this series and topic.
* The relating factor to Mlecha unicorn is Rushya srunga's story. I hope you have read the previous articles also.
*Sweta varaha is white and worshiped in yajnas as yajna varaha. This is in contrast to Adhi varaha or Pralaya varaha which is blue in colour. What is depicted in Mohanjadaro is Adhi varaha. The Gurjara Prathihara varaha of the 7th AD is mentioned as Adhi varaha which I have hypothesized as an extension of Indus varaha. The 3 headed varaha which I am speaking in the next article is perhaps Sweta varaha. The differences are beyond the scope of this series.
* Two horns looking as a single one is hypothesized by western researchers who are working on Unicorn in the Bible and Reem in Jew's Old testament. The picture I showed of Ashurnasirpal shows a single horn only. Explanations can be read in that article (previous one)
* Unicorn's Egypt connection or someone coming from Egypt etc are not my concern. Let researchers in Bible explain all that. what I want to show is that unicorn is connected to the context related to Egypt. In 99 th article I will be showing more of Egyptian connection.
* the unicorn in Indus symbols is shown as horse except one where we find the image resembling a Hippo. I find it as a process of evolution of ideas on pictorial representation of deities. I will speak on this in future articles.
* In Tamil it is identified as a boar - பன்றி. That will be discussed in future articles to show that ideas developed independently with no scope of Indus people migrating to Tamil lands.
Hope I answered all your doubts.
ஜெயஸ்ரீ மேடம் எனக்கு சில மதங்களுக்கு முன்பு ஒரு வீடியோ பதிவு கிடைத்தது அதில் எல்லா நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு கன்னி பெண்ணிற்கு பிறந்த குழந்தையை கடவுளாக உருவக படுத்தியுள்ளனர் இந்தியாவில் கிருஷ்ணர் சூரிய ஒளியின் மூலமாக கன்னி பெண்ணிற்கு பிறந்தது போல, கிறிஸ்துவத்தின் ஏசு, எகிப்தில் “ஹாரஸ்”(Horus), பெர்சியாவில் “மித்த்ரா”(Mithra), கிரீஸில் “ஆட்டிஸ்”(Attis) போன்றவர்கள் அதே போல் பிறந்து பல அற்புதங்கள் செய்து மக்களால் வணங்கபடுவதாக அதில் சொல்லப்பட்டுள்ளது, இதை பற்றி நீங்கள் கேள்விபட்டுள்ளீர்களா? அந்த வீடியோ பதிவை நான் உங்களுக்கு இதன் மூலம் அனுப்ப ஏதேனும் வழி உள்ளதா?
பதிலளிநீக்குஇப்படிப்பட்ட கதைகளை நீங்கள் எப்படி நம்புகிறீர்கள்?
நீக்குகிருஷ்ணர் சூரிய ஒளியின் மூலமாகக் கன்னிக்குக் பிறந்தார் என்று அந்த வீடியோவில் சொன்னார்கள் என்றாலே, அது மேற்கொண்டு பார்வையிடத் தகுதியானது அல்ல என்று தெரிகிறது. அப்படிப்பட்ட வீடியோ செல்ல வேண்டிய இடம் குப்பைக் கூடையாகும்.
கிருஷ்ணர் பிறப்பைப் பற்றிச் சொல்லும் எத்தனை பழமையான நூல்கள் இந்தியாவில் உள்ளன? அவற்றில் ஒன்றிலாவது இப்படி ஒரு பிறப்பைக் கிருஷ்ணருக்குச் சொல்லியுள்ளார்களா? ஏசுவின் பிறப்புக் கதையை நியாயப்படுத்த இப்படி விஷமத்தனமாகச் சொல்லியுள்ளார்கள் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் நீங்கள் மேற்கோள் போல குறிப்பிட்டுள்ள அத்தனை விஷயங்களும் அபத்தங்கள். அவற்றைப் பட்டியலிடுகிறேன்.
1)கன்னிக்குக் குழந்தை பிறந்தது என்று சொல்வதே ஒரு அபத்தமல்லவா?
2) Horus எனபதும் பாரதத்திலிருந்து சுட்டது. துல்லியமாகக் காலத்தின் படி நடக்கும் யமனைப் பின்பற்றி அடித்த காப்பி அது. Horus பற்றி இந்தத் தொடரில் சில செய்திகள் சொல்ல இருக்கிறேன்.
3)மித்ரன் என்பதும் நம்மிடமிருந்து சுட்ட கருத்து. அதையும் பற்றி இந்தத் தொடரில் எழுதுகிறேன். மித்ரன் என்றாலே நண்பன் என்று பொருள். மித்ரனின் பெண்பால் பெயரான மைத்ரேயி என்னும் பெயரில் வேத ரிஷி யஞ்ஞ வாக்கியரின் மனைவி இருந்தாள். அந்த மித்ரன் மாடுகளுக்கு நண்பன் என்பது வேதக் கருத்து. அதைச் சுட்டவர்கள் நாளடைவில் மித்ரனின் தாத்பரியத்தை மறந்து விட்டார்கள் - அவர்களது சொந்தக் கருத்தாக இருந்தால்தானே நினைவிருக்க்கும்? அவர்கள் உருவாக்கின கருத்து என்ன தெரியுமா ? எந்த மாடுகளுக்கு மித்ரன் நண்பனோ, அந்த மித்ரன் மாடுகளைக் கொன்று, சூரியனுடன் அமர்ந்து அதை உண்பான் என்று ஆக்கி விட்டார்கள். அதையே 2000 ஆண்டுகளுக்கு முன்னால் ரோமானியர்களும் சுவீகரித்துக் கொண்டார்கள். அந்த தமாஷ்களையெல்லாம் சொல்லாமல் இந்தத் தொடர் முடியாது.
4)பெண் தெய்வக் கருத்துக்கள் ஹிந்து மதத்தில்தான் முதலில் தோன்றின. அதைத் தாய் தெய்வமாகக் கொண்டாடினார்கள். தாய்க்கு மரியாதை என்பது இன்றுவரை நம் நாட்டில்தான் இருந்து வந்திருக்கிறது. தாயால் உருவாக்கப்பட்டவர்கள் சிவாஜி, காந்தி என்று சமீப காலம் வரை இருந்து வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட பாரம்பரியம் அந்த மிலேச்ச நாடுகளில் கிடையாது.
தற்போது பூமி கும்பத்தில் இருப்பதாக உங்கள் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தீர்கள், அதே போல் ஏசுவின் காலத்தில் அது மீனத்திலும், எகிப்தில் யூதர் காலத்தில் மேசத்திலும், அசுர் காலத்தில் ரிஷபத்திலும் இருந்திருக்கிறது அந்த குறியீடுகள்தான் நீங்கள் சொல்லும் ஹரப்பா, மொஹஞ்சதாதரா முத்திரைகளில் இருப்பது, ஏசு இரு மீன்களை பகிர்ந்தளித்தார் என்பது போல் மறைமுகமாகவே அவை சொல்லப்பட்டுள்ளது.....
பதிலளிநீக்குAbsurd.
நீக்குMoreover I never said in this series that earth is in Kumbham