வியாழன், 10 நவம்பர், 2011

82. மொஹஞ்சதாரோவில் பிருந்தாவனத் தெருக்கள்!



மோஹனஸ்ய தரு என்ற பெயரே 
மொஹஞ்சதாரோ என்றாகி இருக்க வேண்டும்
என்ற எண்ணத்தை வலுப்ப்டுத்தும் பிற விவரங்களைப் பார்ப்போம்.
மோஹஞ்சதாரோவின் முக்கிய அம்சம் அதன் நகர அமைப்பு ஆகும்.

மொஹஞ்சதாரோவில் உள்ள
திருத்தமாக அமைக்கப்பட்ட தெருக்கள்,
வரிசையாக, சதுரம் அல்லது செவ்வகமாக 
அமைக்கப்பட்ட வீடுகள்,
அந்த வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்வதற்காக
உருவாக்கப்பட்ட மூடிய சாக்கடை வசதிகள்
போன்றவையே ஆராய்ச்சியாளர்களால் பெரிதும் பேசப்படுகின்றன.

அவற்றுள் அவர்களுக்குப் புரியாத புதிராக இருப்பது,
குறுகிய சந்துகள் போன்ற தெருக்களே.

இந்தப் படத்தைப் பாருங்கள். 

















\
http://www.mohenjodaro.net/induslane68.html


நகரெங்கும் இப்படி குறுகிய தெருக்களே காணப்படுகின்றன. 

அந்த்த் தெருக்களில் தெரியும் வீட்டு வாசலையும் 

இந்தப் படத்தில் காணலாம். 





கீழ்க்காணும் பட்த்தில் இன்னும் ஒரு விவரத்தைக் காணலாம்.

குறுகிய தெருகள் கொஞ்சம் அகலமாகும் போது,

நடுவில் தடுப்புகள் நட்டு 

இன்னும் குறுகிய அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.




(Looking south along the street to the east of the Great Bath. In the foreground is a unique brick platform with hollow sockets used to place upright beams that may have formed a gate or traffic control device. A large street drain covered with limestone blocks runs the length of the street.)  









இவ்வாறு செய்ததற்குக் காரணம் என்ன?
ஆராய்ச்சியாளர்கள் சொல்வது, ட்ராஃபிக்கை
அதாவது போக்கு வரத்தை வழிப்படுத்த என்பதே.

இங்கு என்ன போக்குவரத்து இருந்திருக்கும்?

ஏற்கெனெவே குறுகிய தெருவில், மக்கள் நடந்து செல்லவே சிரம்மாக இருக்கும்.
அதில் மக்கள் கும்பலாகச் செல்ல அவசியம் என்ன?

ஏதேனும் கோவில் அல்லது கடைத்தெரு இருந்தனவா?

அதனால் நெரிசலை ஒழுங்குபடுத்தினார்களா? 

ஆனால் இந்த நகரம் முழுவதும் அல்லவா இப்படிக் குறுகிய தெருக்க்ள் இருக்கின்றன? 



  


















வீட்டு வாயிலை விட்டு இறங்கினால் அகலமே இல்லாத தெருக்கள்!
ஒற்றையடிப்பாதை போன்ற தெருக்களில்
மேலும் ஒழுங்குபடுத்த தடுப்புகள்!! 

நகர அமைபிலும், வீடுகள் அமைப்பிலும்
புத்திசாலித்தனமாக்க் கட்டிக் கொண்டவர்கள்,
தெருக்கள் அமைப்பில் ஏன் இப்படி கஞ்சத்தன்ம் கொண்டு
அவதியுற வேண்டும்?


இங்குதான் நாம் சிந்திக்க வேண்டும்.
மக்க்ள் புழங்குவதற்கு வசதியில்லாமல்,
எதற்காக இப்படிக் கட்டினார்கள்?

அந்தத் தெருவில் வாழும் மக்களுக்கே
அந்த்த் தெருக்களில் நுழைவதும், நடப்பதும் கஷ்டமாக இருக்கும்.
அப்ப்டியென்றால் எதற்காக இப்படிப்பட்ட தெருக்களை அமைத்தார்கள்?


இப்படிச் சிந்திக்கும் போது,
நம் நாட்டில் இன்றும் இதே போல  தெருக்கள் உள்ள
சில இடங்கள் நினைவுக்கு வருகின்றன.

அவற்றில் முக்கியமானது பிருந்தாவனம்!

மோஹன் என்றழைக்கப்பட்ட பாலகிருஷ்ணன் 
விளையாடிய பிருந்தாவனத்தில்
இன்றும் இப்படிப்பட்ட அமைப்பில்தான் 
தெருக்கள் உள்ளன.














பிருந்தாவனத்தில் ஒரு தெரு.


கிருஷ்ணன் காலத்தில் இருந்தாற்போலவே
இன்றைக்கும் இப்படிப்பட்ட தெருக்கள் இருக்கின்றன என்கிறார்கள்.














இப்படிக் குறுகிய தெருக்கள் இருப்பதற்கு 
பிருந்தாவன மக்கள் ஒரு காரணம் சொல்கிறார்கள்.

மாடுகள் சென்று வர குறுகிய தெருக்க்ளே சரியானவை என்கிறார்கள்.
அதுமட்டுமல்ல,
இப்படிப்பட்ட அமைப்பில்தான் 
கிருஷ்ணன் காலத்திலும்
தெருக்கள் இருந்தன என்கிறார்கள்.


பிருந்தாவனம் என்பது யாதவர்கள் வாழ்ந்த இடம். 

கிருஷ்ணன் காலத்தில் எல்லா வீடுகளிலும் மாடுகள் இருந்தன.

அந்த மாடுகளைக் காலையில் 
மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
அவற்றை மாலையில் 
வீடுகளுக்கு அழைத்து வர வேண்டும். 

ஒரே சமயத்தில் பல மாடுகள் மேய்ச்சலுக்குச் செல்லும் போதும்,
மாலையில் திரும்பும்போதும்,
அவை ஒன்றுடன் ஒன்று முட்டி மோதி,
தங்களையே காயப்படுத்திக் கொள்ளும்.

அதிலும், மாலையில் எல்லா மாடுகளும் 
ஒன்றாக ஊர் திரும்பும் போது
அவர்றின் கன்றுகளை நினைத்து 
மடியில் பால் சொரிய ஆரம்பிக்கும்.

தாய்ப் பசுக்களுக்காக்க் காத்திருக்கும் கன்றுகளும் கத்தும்.
கன்றுகள் குரலைக் கேட்ட மாத்திரத்தில்
மாடுகள் முண்டியடித்துக் கொண்டு செல்லப்பார்க்கும்.

அதனால் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்கவும்,
அந்தந்த மாடுகள் 
அவ்வவற்றின் வீடுகளுக்குள் வரிசையாகச் செல்வதற்காகவும்
அப்படி குறுகிய தெருக்களை அமைத்தார்கள் என்கிறார்கள்
பிருந்தாவனவாசிகள்.


கிருஷ்ணன் காலத்தில் பிருந்தாவனம், கோகுலம், மதுரை
ஆகிய இடங்களில் இப்படித்தான் தெருக்கள் இருந்தன. 

இந்த இடங்களிலிருந்து மக்கள் இடம் பெயர்ந்தாலும்,
அவர்கள் சென்ற இடங்களில் இந்த அமைப்பிலேயே
தெருக்களை அமைத்துத், தங்கள் வீடுகளைக் கட்டிக் கொண்டனர்.

கிருஷ்ணன் இருந்த இடங்கள் எல்லாமே,
முஸ்லீம் அரசர்களால் பல முறை தாக்கப்பட்டன.

அவர்கள் ராஜஸ்தான் பகுதிகளுக்கு இடம் பெயர நேர்ந்த்து. 

ராஜஸ்தானத்தில் ஜெய்சால்மீர்ப் பகுதிகளில்
வஜ்ரன் பரபரையினர் (கிருஷ்ணன் பரம்பரை) குடியேறினர் 
என்றும் ஒரு கருத்து இருக்கிறது.

ஜெய்சால்மீரில் உள்ள குறுகியத் தெரு:-

 



கிருஷ்ணன் காலத்திலும்,
கம்சனது மாமனாரான ஜராசந்தனால் மதுரா மக்க்ள் பலமுறை தாக்கப்பட்டனர்.
அதனால் அவர்கள் கிருஷ்ண்னுடன் துவாரகைக்கு இடம் பெயர்ந்தனர்.

அவர்கள் ஸ்தாபித்த துவாரகை அழிந்து விட்டாலும், 
அதையொட்டி எழுப்பப்பட்ட -
இப்பொழுது இருக்கும் துவாரகையின் 
கிருஷ்ணன் கோவிலைச் சுற்றி
குறுகிய தெருக்களே இருப்பதைக் காணலாம்.


                          துவாரகையில் உள்ள துவாரகாதீஷ் கோவில்
 

கிருஷ்ண்னுடைய கொள்ளுப் பேரனான வஜ்ரன
கிருஷ்ணன் கோவில்களை கட்டின பிறகு,
அந்த இடங்களை விட்டு மக்க்ள் நீங்கவில்லை.
அதன் பிறகு பலமுறை கிருஷ்ணன் கோவில்களும்,
கிருஷ்ணன் பிறந்த இடமும் புதுப்பிக்கப்ப்ட்டிருக்கின்றன.

தொல்பொருள் ஆதாரத்தோடு இருப்பது
கிருஷ்ண ஜன்ம பூமியைச்
சந்திர குப்த விக்கிரமாதித்தன் புதுப்பித்தான் என்பதே.
இந்த்த்தொடரின் 28 ஆவது கட்டுரையில்
துருப்பிடிக்காத இரும்புத்தூணை டில்லியில் விக்கிரமாதித்தன் கட்டினான்
என்பதைக் கண்டோம்.
கிருஷ்ணன் சரிதம் உண்மையாக இருந்திருக்கவே, 
அந்த இடம் கிருஷ்ண ஜன்ம பூமியாக இருக்கவே,
அந்த அரசன் கிருஷ்ண ஜன்ம பூமியைப் புதிப்பித்திருக்கிறான்.


ஔரங்கசீப் காலத்தில், கிருஷ்ண் ஜன்மபூமியும்,
யமுனைக் கரை நகரங்களும் கடும் பாதிப்புக்குள்ளாகவே,
வஜ்ரன் வடித்தக் கிருஷ்ணன் விக்கிரகத்தைக் காப்பாற்ற,
கோகுல மக்க்ள் ராஜஸ்தானில் உள்ள உதயபூருக்குச் சென்றனர்.
அவர்களுடன் அவர்கள் வளர்த்த மாடுகளும் சென்றன.




குறுகலான ஸ்ரீநாத்துவாரகைத் தெருக்கள்.




கிருஷ்ணன் வளர்த்த மாட்டின் வம்சத்தில் 
வந்த மாடுகளும் இன்று ஸ்ரீநாத் துவாரகையில் இருக்கின்றன.
கோபூஜையில் அந்த மாடுகளுக்கு முதல் இடம் தரப்படுகிறது. 

யமுனைக் கரை மக்களான இந்த மக்கள் 
சென்ற இடங்களிலெல்லாம்
குறுகிய தெருக்களைக் காணலாம்.

யமுனைக் கரையில் கிருஷ்ணன் வாழ்ந்த பகுதிகளில்
பிருந்தாவனம் மாறவில்லை.
கம்சனைக் கூப்பிட்டனுப்பியதால் போய் வருவதாகச் சொன்ன
கிருஷ்ணன் பிறகு அங்கு திரும்பவேயில்லை.
என்றைக்காவது அவன் வருவான் என்ற நம்பிக்கையில்
அந்த மக்கள் இருக்கிறார்கள் என்ற கதை வழியாக வழியாக இருந்து வருகிறது.
ஆனால் நம்மை ஆச்சரியப்ப்டுத்துவது,
அந்த ஊரின் அமைப்பே.


மாடுகளை மேய்க்கும் யாதவ குல மக்கள் பிருந்தாவனத்தில் வாழ்ந்தனர்.
எல்லா வீடுகளிலும் பசு மாடுகள் இருந்தன.
எல்லா வீடுகளிலும் பால், தயிர், வெண்ணைக்குப் பஞ்சமில்லை
கிருஷ்ணனது முக்கியக் குறும்புகளில் ஒன்று
பிறர் வீடுகளில் வெண்ணை திருடித் தின்று விட்டு, மாயமாக மறைந்து விடுவதுதான்.
அப்படி அவன் எளிதில் மறைந்து விட உதவியாக இருந்தது,
அந்த நகரத் தெரு அமைப்பே ஆகும்.
இன்றைக்கும், பிருந்தாவனத்தில்,
கிருஷ்ணன் காலத்தில் எப்படி இருந்தனவோ அப்படியே
வீடுகளும், தெரு அமைப்புகளும் இருக்கின்றன.


அங்குள்ள குறுகிய தெருக்களை மாற்றாமல்
வழி வழியாக அப்படியே வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அங்கு செல்பவர்களிடம் பெருமையாகக் காட்டுகிறார்கள்.



இப்படிப்பட்ட குறுகிய சந்துகளில்,
கிருஷ்ணன் எளிதில் தப்பி மறைந்து விட வசதியாக இருக்கிறது.
இந்த ஊர் மக்களை மொஹஞ்சதாரோவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
அந்த இடம் தங்கள் ஊர் அமைப்பில் இருப்பதை அவர்கள் ஊர்ஜிதம் செய்வார்கள்.


இந்தக் குறுகிய தெருக்களின் ஓரத்தில் பாதாள சாக்கடை செல்கிறது.
மொஹஞ்சதாரோவில் இருப்பது போல,
பிருந்தாவனத்திலும் இருக்கும் அமைப்பை இந்தப் படத்தில் காணலாம்.



தெருவோரம் இரண்டு பக்கமும்
வரிசையாக்க் கல் வைத்து மூடின அமைப்பில்
பாதாள சாக்கடையைக் காணலாம்.

அப்படிப்பட்ட அமைப்பை மொஹஞ்சதாரோவிலும் பார்க்கலாம். 



















இது பிருந்தாவனத் தெரு. தெருவோரம் மூடப்பட்ட சாக்கடை.

















அதே அமைப்பில் 
மொஹஞ்சதாரோ.
 

















மொஹஞ்சதாரோவின் தெரு அமைப்பிலும், 
பிருந்தாவனத் தெரு அமைப்பிலும்,
அங்கு வாழ்ந்த மக்களது வாழ்வாதார ரகசியத்தைக் காண்கிறோம்.

மொஹஞ்சதாரோவிலும், ஒவ்வொரு வீட்டிலும் மாடுகள் வளர்த்து, 
அவற்றைத் தினந்தோறும் மேய்யச்சல் நிலங்களுக்கு 
அழைத்துச் செல்பவர்களாக இருந்தால் மட்டுமே 
இப்படி குறுகிய தெருக்களை அமைத்திருக்க முடியும்.


மொஹஞ்சதாரோ மக்கள் கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்து 
மதுரா, பிருந்தாவனம் போன்ற பகுதிகளில் குடியேறி இருக்கலாமே 
என்று கேட்கலாம். 

அப்படியென்றால் அதற்கப்புறம்தான் கிருஷ்ணனே தோன்றி இருப்பான்.

இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டால், 
இடம் பெயர்ந்த மொஹஞ்சதாரோ மக்களிடமிருந்து
கிருஷ்ணன் தோன்றியிருப்பான் என்ற கருத்து எழும்.


ஆனால் கிருஷ்ணாவதார காலம் என்பது 5000 வருடங்களுக்கு முன் என்பதால்,  
கிருஷ்ணாவதார காலத்தை ஒட்டியோ
அல்லது அதற்குப் பிற்பட்டோ 
மொஹஞ்சதாரோ உண்டாகியிருக்க வேண்டும் என்று தெரிகிறது.
அதற்கு முன்பும் மக்கள் இருந்த அடையாளம் ‘மெஹர்கர்’ என்னும் இடத்தில் இருந்திருக்கிறது.
ஆனால் மொஹஞ்சதாரோவைப் பொருத்த மட்டில்,
அது கிருஷ்ணனை அறிந்த ஒரு சமுதாயம்,
அல்லது யாதவ சமுதாயம் என்று சொல்லும் வண்ணம் இருக்கிறது.

மொஹஞ்சதாரோ போன்ற இடங்களில் இருந்த மக்கள் 
மாடு மேய்த்த மக்கள் என்பது உறுதிப்படுகிறது. 

மொஹஞ்சதாரோ போன்ற இடங்களில் 
கி.மு. 3000 முதல் கி.மு 1500 வரை மக்கள் வாழ்ந்த அடையாளம் இருக்கிறது. 

ஆனால் அங்கிருந்து மக்க்ள் இடம் பெயர்ந்த்தாகச் சொல்லவும் சான்றுகள் இல்லை.

உதாரணமாக மொஹஞ்சதாரோவுக்கு அருகில் உள்ள பகுதிகளில், 
மொஹஞ்சதாரோவில் உள்ளது போன்ற அமைப்பிலேயே 
இன்றைக்கும் வீடுகளும், வீட்டுக் கிணறுகளும் கழிவு நீர்ச் சாக்கடைகளும் இருக்கின்றன.  
அப்படி ஒரு வீட்டை இந்தப் படத்தில் காணலாம்.





அங்கிருந்த மக்கள் அதே விதமான 
வாழ்க்கையைத் தொடர்ந்திருக்கின்றனர் என்று தெரிகிறது. 

இன்னொரு கருத்தும் இருக்கிறது.
1500 ஆண்டுகள் காணாப்பட்ட இந்த நாகரிகம், 
சிந்து நதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அங்கிருந்து இடம் பெயர்ந்திருக்கலாம் 
என்ற ஒரு கருத்து இருக்கிறது. 

ஆனால் அது சரியான கருத்தல்ல. 
அந்த இடத்தில் உள்ள வீடுகளது அமைப்பில் 
இன்னும் அந்தப் பகுதி மக்கள் வாழவே, 
தொடர்ந்து வரும் வாழ்க்கை முறையாகத்தான் தெரிகிறது. 
அவர்கள் பெரிதாக இடம் பெயர்ந்திருக்க மாட்டார்கள். 
எனினும் மொஹஞ்சதாரோ பகுதி 
மண் மூடிப் போனதற்கு ஒரு காரணம் இருக்கலாம். 
அதை அடுத்த கட்டுரையில் காண்போம்.

கிருஷ்ணன் காலத்து வாழ்க்கை முறையைக் கொண்ட மக்களாக, 
கிருஷ்ணனது நினைவச் சுமந்த மக்களாக 
அவர்கள் இருந்தார்கள் என்று நாம் சொல்வதை 
மெய்ப்பிக்கும் மற்றொரு சின்னம் அங்கு இருக்கிறது. 

அது ஒரு கிணற்றின் அமைப்பு.

 
















http://www.mohenjodaro.net/heartwell81.html


இந்தக் கிணறு ஆலிலை வடிவில் இருப்பதைப் பாருங்கள்.
இந்த வடிவம் பிரளய காலத்தில் 
ஆலிலை மீது கிருஷ்ணன் படுத்திருக்கும் காட்சியை நினைவு படுத்துகிறது.



அந்தக் காட்சி (அல்லது உருவகம்),
கிருஷ்ணாவதாரத்துக்குப் பிறகே உருவாக்கப்ப்ட்டிருக்க வேண்டும்.
மொஹஞ்சதாரோவில் ஆலிலை வடிவில் கிணறு என்றால்,
ஹரப்பாவில் ஒரு ஆலிலையின் அடையாளம்
களிமண்ணில் பதிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.




இதனால் அந்தப்பகுதிகளில் ஆல மரம் இருந்துள்ளது என்று தெரிகிறது.
ஆனால் ஆலிலை வடிவில் ஒரு கிணறு 
மொஹஞ்சதாரோவில் காணப்படுவதால்,
ஆலிலைக்கும், ஆல மரத்துக்கும்
அந்த மக்கள் ஏதோ ஒரு முக்கியத்துவம் 
கொடுத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.


வேத மரபிலும் அந்த மரத்துக்கு முக்கியத்துவம் உண்டு.
ஆனால் மொஹஞ்சதாரோவில் 
வேத வழிபாடுகள் நடந்த்தற்கான
அடையாளங்கள் காணப்ப்டவில்லை.
அப்ப்டிப்பட்ட அடையாளங்கள் காலிபங்கனில் காணப்படுகின்றன 
என்று 29 ஆவது கட்டுரையில் பார்த்தோம். 

சிந்து சமவெளிப் பகுதிகளில் 
பல இடங்களிலும் வேத வழிபாட்டுக்கான அடையாளங்கள் உள்ளன. 
ஆனால் மொஹஞ்சதாரோவில் இது வரை 
அப்படிப்பட்ட அடையாளங்கள் கிடைக்கவில்லை. 
ஆனால் இது ஒரு யாதவக் குடியிருப்பாக இருக்கலாம் 
என்று சொல்லும்படியே அடையாளங்கள் இருக்கின்றன.


மாடுகள் செல்வதற்கு வசதியான தெருக்கள் இங்கு ஏன் இருக்க வேண்டும்?

ஏறு தழுவும் உருவில் ஏன் சின்னம் அமைக்க் வேண்டும்?

மரத்தைப் பிளக்கும் ஒரு குழந்தை உருவத்தை ஏன் அவர்கள் பொறிக்க வேண்டும்? 
அந்த ஊரில் பலவித மரங்கள் வளர்ந்திருக்கலாம்,
ஆனால் வேத மத்த்துக்கு முக்கியமானதும்,
கிருஷ்ண்னை நினைவு படுத்துவதுமான  
ஆலைலை அமைப்பில்
ஏன் கிணறு கட்டிக் கொள்ள வேண்டும்? 

கிருஷ்ணனுக்குப் பின்னால் வந்த -
கிருஷ்ணன் நினைவில் வாழ்ந்த மக்கள் 
அங்கு இருந்தார்கள் என்றுதானே
சொல்லும் வண்ணம் இவை இருக்கின்றன?

 
இவை தவிர மிக முக்கியச் சின்னமாகக் கருதபப்டும்
GREAT BATH  எனப்படும் குளம்
காட்டும் செய்திகளையும் பார்ப்போம்.





20 கருத்துகள்:

  1. வணக்கம், அற்புதமான தொகுப்புகளுக்கு நன்றி. ஒரு சிந்தனை, காசி போன்ற ஊர்களில் சாலைகள் மிகவும் குறுகலாகவே இருக்கும். இதற்கு ''Gulli'' என்று சொல்லுவர். அதற்கான காரணம், போர் காலங்களில் ஊரை எதிரிகள் முற்றுகை இடுவது மிக கடினம். மேலும் குதிரைப்படை நிறைந்த காலத்தில் எதிரிகள் ஒன்றின் பின் ஒன்றாகத்தான் வரமுடியும். உள்ளே உள்ள சிப்பாய்களுக்கு ஒவ்வொரு தலையாக சீவிவிடுவதம் சுலபமாக இருக்கும். நான் கேள்விப்பட்டவரை, இதைத்தான் காரணமாக சொல்கின்றனர் பொதுமக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் காலங்களில், போர் என்பது இரு அரசர்களுக்கு நடக்கும் திறந்த வெளியில் நடந்த சண்டை.நான் அறிந்தவரை, எந்த அரசனும் நகரத்திற்குள் நுழைந்து போரிட்டதாகப் படித்ததில்லை.அந்த கலாசாரமே,முஸ்லிம் மன்னர்கள் கையாண்ட ஒரு கொடூரச் செயல்.இஸ்லாம் தோன்றியதே சிந்து சமவெளி நாகரீகத்துக்கு வெகு காலம் கடந்த பின்பே .ஆதலால், ஜெயஸ்ரீ அவர்களின் துணிபு சரியானதே, என்று எண்ணுகிறேன்.
      ஸாரநாதன்

      நீக்கு
  2. உங்கள் தகவலுக்கு நன்றி.
    காசி, மதுரா போன்ற கோவிலைச் சார்ந்துள்ள நகரங்களில் உள்ள யாதவக் குடியிருப்புகள் இவ்வாறு இருக்க வேண்டும். எந்த காலத்திலும் ஹிந்து அரசர்கள் ஹிந்து மதத்தில் முக்கியத்துவம் கொண்ட இப்படிப்பட்ட நகரங்களை அழித்ததில்லை. ஒருவர் மீது ஒருவர் படையெடுத்தாலும், கோவிலையும், அதை சார்ந்துள்ள மக்கள், பசுக்கள் ஆகியவற்றையும் அழித்ததில்லை. ஆனால் முஸ்லீம் அரசர்கள் காலத்தில்தான் அழிவு ஏற்பட்டது. முஸ்லீம் தாக்குதல்கள் போது, இப்படிப்பட்ட குறுகிய சந்துகள், எதிரியை வீழ்த்த வசதியாக இருந்திருக்கும். அதையே காசியில் சொல்லியிருப்பார்கள். ஆனால் எதிரிகளை வீழ்த்தவென்றே, இப்படிச் சந்துகளைக் கட்டியிருப்பார்கள் என்று சொல்வது ஏற்புடையதாக இல்லை. ஊருக்கு வெளியிலேயே, எதிரிகளைத் தடுத்து நிறுத்தப் பார்ப்பதுதான் உசிதமாக இருக்கும். ஊருக்குள் எதிரி நிழைந்து விட்டால், கடை நிலைப் போராட்டத்தில், இந்தச் சந்துகள் உதவியாக இருந்திருக்கும்.

    பொதுவாகவே பயன்பாட்டின் அடிப்படையில் தெருக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராஜ பாட்டை என்றால் ரதப் படைகள் செல்லும் வண்ணம் அகலமாக இருக்கும். கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களும், கோவில் ரதம் செல்வதற்கு வசதியாக அகலமாக இருக்கும். இப்படிப்பட்ட தெருக்களை உடைய மைசூரின் சில பகுதிகளில், குறுகிய சந்துகள் இருக்கின்றன. அந்தப் பகுதிகள் யாதவக் குடியிருப்புகளாக இருக்க வேண்டும்.


    ஆனால் துவாரகை போன்ற இடங்களில் கோவிலுக்குச் செல்லும் வழியிலேயே இப்படிக் குறுகலாக இருக்கும். இந்தக் கோவில்கள் யாதவர்கள் வசம் இருந்தன. துவாரகாதீஷ் கோவிலுக்கு 56 படிகள் ஏறிப் போக வேண்டும். 56 கோடி யாதவர்கள், துவாரகையில் கிருஷ்ணனுடன் குடியேறவே இப்படி என்கிறார்கள். 56 கோடி இருக்காது. 56 குடும்பங்கள் அல்லது கிராமங்கள் இருக்கும். ஆனால் கிருஷ்ணனுடன் வந்தவர்கள் யாதவரகள் என்பது, கிருஷ்ணன் தொடர்புடைய பிற துவாரகைக் கோவில்களில் காணலாம். அந்தக் கோவிலுக்குள் பசுக்களை ஓட்டிச் செல்லும் சில முக்கிய நாட்கள் இருக்கின்றன. அப்படி ஒரு நாளை, தீபாவளிக்கு மறுநாள், நான் ஸ்ரீ நாத் துவாரகயில் பார்த்தேன்.

    அந்த நாள் கிருஷ்ணன் கோவர்தன கிரியைத் தூக்கின நாள். அன்று கோவில் சன்னிதிக்கு எதிரே கோவர்தன மலை போன்ற அமைப்பை உருவாக்கி, பசுக்களை கோவிலுக்குள் வர வழைகிறார்கள். அவை நிற்பதற்கென்றே சன்னிதிக்கு எதிரில் இடம் இருக்கிறது. அந்த இடத்தில் யாரையும் அனுமதிப்பதில்லை. கிருஷ்ணனுக்கு நேர் எதிரில் உள்ள இடம் மாடுகளுக்குத்தான். அவற்றைக் கொண்டு கோவர்த்தன பூஜை செய்கின்றனர். கிட்டத்தட்ட 60,70 மாடுகள் உள்ளே வந்து அங்கு நிற்கின்றன. இது இப்போதைய எண்ணிக்கை. அந்தக் கோவில் ஆரம்பித்த காலத்தை நினைத்துப் பார்ப்போம். இந்தக் கோவில் ஔரங்கசீப் காலத்தில் பிருந்தாவனத்திலிருந்து இடம் பெயரப்பட்டது. பிருந்தாவனத்தில் கோபால்ஜி கோவில் முஸ்லீம் படையெடுப்பால் தாக்கப்பட்டு இருப்பதை இன்றும் காணலாம். அங்கிருந்த மூர்த்தியை இங்கு கொண்டு வந்துள்ளார்கள். கொண்டு வந்தவர்கள் யாதவர்கள். கிருஷ்ணனை ஒரு மாளிகையில் வைத்து, அவனைச் சுற்றி அவர்கள் குடியமர்ந்திருக்கிறார்கள். அதனால் கோவிலுக்குச் செல்லும் தெருக்க்ள குறுகலாக இருக்கின்றன.

    மாடுகளை மேய்ச்சலுக்குக் கூட்டிச் செல்லவும், கோவிலுக்குக் கூட்டிச் செல்லவும், சந்து போன்ற தெருக்கள் வசதியாக இருக்கின்றன. கிருஷ்ணனே கோபாலகனாக இருக்கவே, கிருஷ்ணனிடம் மாடுகள் பற்றிய செய்தியைச் சொல்ல கோவிலுக்குப் போய் வந்து கொண்டிருந்ததை அந்தக் கோவர்த்தன பூஜையில் பார்த்தேன்.

    இனி பிருந்தாவன விஷயத்துக்கு வருவோம். பொதுவாக பல காலமாக இருந்து வரும் ஊர்களில், ஆரம்பத்தில் இருந்த்து போலவே இப்பொழுதும் தெரு அமைப்புகள் இருக்கும். தெருக்களை ஒட்டிக் கட்டப்பட்ட வீடுகளுக்கு உரிமையாளர்கள் இருப்பதால், அந்த உரிமை, வழி வழியாக யாரிடமாவது இருக்கும். அதனால் தெருவை அகலப்படுத்துவது என்பது கடினம். அதனால்தான் பிருந்தாவனத்துத் தெருக்கள் அமைப்பு, காலம் காலமாக இருந்திருக்க வேண்டும். அதனுடன் இணைந்த கிருஷ்ணன் காலமும், மொஹஞ்சதாரோ காலமும் ஒத்திருக்கவே நாம் இவ்வாறு கட்டுரையில் எழுதினோம்.

    பதிலளிநீக்கு
  3. Mr. MK Krishnaswamy wrote:-

    A very thought-provoking article which I read completely with interest.
    I am proud of the quality & volume of research behind the article
    and the inferences and conclusions arrived at. You may consider
    translating it into English in and publish it in a suitable magazine.
    MKK

    பதிலளிநீக்கு
  4. Mr R SRINIVASAN wrote:-


    DEAR JAYASHREE

    YOU TOOK ME TO BRINDAVAN TODAY MORNING. VERY FINE.
    WISHES AND BLESSINGS

    CHEENU

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள ஜெயஸ்ரீ அவர்களே,

    மீண்டும் ஒரு அற்புதமான கட்டுரை. மேலை நாட்டவர்களே இப்பொழுது கி. மு. கி. பி. எனச் சொல்லாமல் பொ. மு. மற்றும் பொ. பி எனக் குறிப்பிடுகிறார்கள். நாம் ஏன் கிறிஸ்துவை மேற்கோள் காட்ட வேண்டும். உங்கள் கட்டுரையில் நீங்கள் இவ்வாறே குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.

    அன்புடன்
    சிவா

    பதிலளிநீக்கு
  6. உங்கள் கருத்துக்கு நன்றி சிவா அவர்களே,

    படிப்பவர்கள் அனைவருக்கும் பொ.மு., பொ.பி. போன்ற சொற்கள் பழகியிருக்குமா? எனக்கு இன்னும் பழகவில்லை:-)

    இன்னும் ஓரிரு கட்டுரைகளுக்குப் பிறகு, பெர்சியாவில் வரும் மித்ரனைப் பற்றி எழுதுவேன். அந்த மித்ரனது பிறந்த நாள் டிசம்பர் 25 ஆகும். சீசர் காலம் வரை அதைக் கொண்டாடி வந்தார்கள்.
    அந்த நாளையே வருட முதல் தினமாகக் கொண்டு காலண்டர் ஆரம்பிக்க விரும்பினார் சீசர். ஆனால் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம் அது வரை மக்கள் அமாவாசையை அடிப்படையாகக் கொண்டே வருடம் / மாதத்தை ஆரம்பித்தனர் (சாந்திர மானம் - நம்மிடமிருந்து அங்கு சென்றது.) அந்த வருடத்தில் ஜனவரி 1 ஆம் தேதி அமாவாசை வந்தது. (கி.மு.45). மக்கள் விருப்பத்தை ஏற்றுக் கொண்ட சீசர் ஜனவரி 1 ஆம் தேதி வருடம் தொடங்குகிறது என்று ஆரம்பித்தார். ஆதாரம்:- History of the Calendar, by M.N. Saha and N. C. Lahiri பக்கம் 168.

    மித்ரனது நாளை விட விரும்பாமல், அந்த நாளைக் கிருஸ்துவின் பிறந்தத நாள் என்று ஆக்கிக் கொண்டார்கள். உண்மையில் கிருஸ்து டிசம்பர் 25 ஆம் தேதி பிறக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  7. உங்களின் கடின உழைப்பு இந்த வலைத்தளத்தில் தெரிகிறது.
    இந்த பதிவில் எனக்கொரு சந்தேகம்.
    மனிதர்களுக்கும் மாட்டிற்கும் ஒரே வீட்டு வாசலையா அவர்கள் பயன்படுத்தி இருப்பார்கள்?

    இப்பொழுது இருக்கும் பிருந்தாவனத்திலும் மாட்டை வீட்டின் உள்ளா கட்டுகிறார்கள்?
    நன்றி

    பதிலளிநீக்கு
  8. @ புரட்சி மணி.

    அந்த நாட்களில் ஒரே வீட்டில் மாடுகளும், மக்களும் குடி இருந்திருக்கின்றனர். இப்பொழுது எல்லா இடமும் குடியிருப்பாக ஆகி விட்டது. சில தெருக்களில் சில வீடுகளுக்குள் மாடுகளைக் கட்டி வைத்திருப்பதைப் பார்த்தேன்.

    இந்தப் பதிவில் 11 ஆவது படத்தைப் பாருங்கள். அதில் வரிசையாக இருக்கும் வீடுகளில் ஜன்னல்கள் தெரிகிறதல்லவா? உண்மையில் அங்கு ஜன்னல்கள் கிடையாது. ஜன்னல் இருந்த இடங்களில் திறந்த வெளியாக இருந்திருக்கிறது. இடுப்புயரத்துக்கு சுவரும் தூண்களும், கொண்ட மாட்டுக் கொட்டிலாக இருந்திருக்கிறது.

    அவற்றைத் தாண்டி உள்ளே சென்றால் வீட்டு மனிதர்கள் இருக்கும் இடம் இருக்கிறது. இரண்டு பக்கமும் வீட்டு வாசல் இருந்திருக்கிறது. கிருஷ்ணன் ஓடி ஒளிந்தது எப்படியென்றால், யார் வீட்டிலாவது மாட்டிக் கொண்டால், மாடுகள் இருக்கும் இடத்திலுள்ள திறந்த அமைப்பின் வழியாகக் குதித்து , வீட்டின் மறு புறத்துக்குச் சென்றிடுவான். வீட்டின் மறுபுறம் இன்னொரு சந்தில் முடியும். அங்கிருந்து அதற்கு எதிர்ப்புற வீடுகள் வழியாகக் குதித்து ஓடி, கையில் கிடைக்காமல் போய் விடுவான்.

    சிலசமயம் தப்பிக்க நேரம் இல்லையென்றால், மாட்டுத் தொழுவத்திலேயே கன்றுக் குட்டிகளுக்கிடையே தன்னை மறைத்துக் கொள்வான். அப்படியே பசுவின் பாலையும் குடித்திருக்கிறான் என்ற கதைகளும் உண்டு.

    தொழுவம் என்றாலும் கோத்ரம் என்றாலும் ஒரே அர்த்தம் தான். மாட்டுத்தொழுவத்தில்தான் ரிஷிகளும் உண்டானார்கள். கோத்ரம் என்னும் சொல்லைப் பலரும் ஆராய்ந்திருக்கிறார்கள். கோத்ரம் என்றால் தொழுவம் என்பது பொருள். தொழுநை (ஆறு) என்றாலும் தொழுவம் என்றே பொருள். கோத்ரத்தில்தான் ரிஷிகளும், அவர்கள் கோத்ர சிஷ்யர்களும், அவர்கள் வழியில் இன்றைக்கு இருக்கும் எல்லா பாரத மக்களும் உண்டானார்கள் என்று சொல்லப்படுகிறது. இதற்கு என்ன அர்த்தம் என்று யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் பசுக்களை வாழ்வின் ஒரு அங்கமாகவும், தெய்வமாகவும் கருதியதை யோசிக்கும் போதும், அந்தப் பகுதிகளைச் சென்று பார்த்த போதும், ஒரு தாயாக இருக்கும் அந்த வாயில்லா ஜீவனின் அருகாமையில், நமக்கும் உன்னத எண்ணங்கள் மனதில் உதிக்கின்றன என்று தோன்றுகிறது.

    உயர்ந்த அறிவான ஆன்மீக அறிவைப் பெற வேண்டுமானால் மாடு மேய்த்து வா என்று சத்யகாம ஜாபாலிக்கு கௌதம ரிஷி சொன்னார் என்று இந்தத் தொடரில் 78 ஆவது கட்டுரையில் சொல்லியிருப்பேன். பசுக்கள் அதி-சாத்வீகப் பிராணிகள். தெய்வத்தைப் போல அவையும் சுத்த சத்துவமானவை. அந்த சுத்த சத்துவம், aura எனப்படும் சக்தியாக அவற்றிலிருந்து பரவுகின்றன. அது அவற்றின் அருகில் இருப்பவர்களது aural energy ஐ சாத்வீகமாக ஆக்குகிறது போலும். பசுக்கள் இல்லாமல் ஒரு ரிஷி உண்டானதாகக் கதை கிடையாது.

    ஸ்ரீநாத் துவாரகாவில் கோவர்தன பூஜையின் போது நான் இருந்தேன். கிருஷ்ணர் வளர்த்த பசுவின் வம்சாவளிப் பசுக்கள் இரண்டு இன்னும் இருக்கின்றன. அவற்றைப் பார்த்தாலே நல்ல ஜாதிப் பசுக்கள் என்று தெரிகிறது. அந்த மாதிரி பசுக்களை நான் தமிழ் நாட்டில் பார்த்ததில்லை, பசுப் பண்ணைகளிலும் பார்த்ததில்லை. அவற்றுக்கு ஒரு அழகு, லக்ஷ்மிகரம் இருக்கிறது. அவற்றுடன் கிட்டத்தட்ட 60 பசுக்களை கிருஷ்ணர் மூர்த்தியின் முன்னிலையில் பூஜை செய்கிறார்கள். அங்கு கூடியிருந்த மக்களது மன நிலையும், பக்தியும், பிரேமையுமாக இருந்தது. அப்படிப்பட்ட பிரேமை கலந்த பக்தியைத் தமிழ் நாட்டில் கண்டதில்லை.

    அந்த பசுக்களுக்கருகே இருந்த ஒரு மணி நேரமும் மனதில் இனம் சொல்ல முடியாத உணர்வுகள் இருந்தன. ஆயர்பாடியில் ஆநிரைகள் மேய்த்து, கிருஷ்ணனது புல்லாங்குழலில் மயங்கிய மக்களது மன நிலை எப்படி இருந்திருக்கும் என்று புரிந்தது. ஆன்மீகத்தைத் தேடுபவனுக்கும், ஆன்மீக ஞானம் கிடைக்கும் என்று தோன்றுகிறது. என்னென்னவெல்லாம் தேடுகிறார்களோ அவையெல்லாம் கிட்டும் என்று தோன்றுகிறது. அதனால்தான் பசுவைக் காமதேனு என்கிறார்களோ?

    பதிலளிநீக்கு
  9. Dear Jayasree Mam,
    ''மித்ரனது நாளை விட விரும்பாமல், அந்த நாளைக் கிருஸ்துவின் பிறந்தத நாள் என்று ஆக்கிக் கொண்டார்கள். உண்மையில் கிருஸ்து டிசம்பர் 25 ஆம் தேதி பிறக்கவில்லை.''

    Christu yendru oruvar pirakkavae illai yendru sollum melai nattu research articles i padithirukkirean.Unmai yennavendru theriyavillai.

    May be in the future articles you can touch on these topics.

    Also eagerly expecting the articles related to Lord Muruga and his exploits in Thennan Desam.

    Sorry I do know how to type in tamil fonts in this blog.

    Chalam

    பதிலளிநீக்கு
  10. Dear Mr Chalam,

    Please read Dan Brown's Da vinci Code to know about scientific evidence behind Jesus Christ. There is evidence in Tibetan chronicles that he visited India and stayed in a Tibetan monastery till his death. I will not be writing on these as they are not connected with my series.

    On Muruga, I will be writing on cosmological meaning of Karthikeya as a concept that was in place after a period of lull in human growth and the spread of Muruga cult in deep south that entered India through 2 routes - one through Pandyan presence and another via aravalli hills through Meena tribes and also as VeL and Yaudeyas who settled in North India. A group of these people later became Vishnu bhakths due to association with Krishna and came and settled in lands surrounding Cholas and Pandyas about 3500 years ago. They were the people who spoke Kodunthamizh - the Tamil that was not refined. Tamil was not refined until Agasthya did so at the start of first Tamil sangam. The north Indian Vel tribes were speaking the Tamil that existed prior to refined Tamil because they got separated from Deep south long before that. Almost all of 18 castes who have been identified as backward castes by Maraimalai adikaL come in the lineage of these people who migrated from Dwaraka.

    There are a number of ironies in the present day concepts of Tamils and Tamil ianam. If we say that by speaking the same language, the speakers become one inam, then it is absurd and unscientific. If by speaking Tamil, if we call a people an inam, then all the Indians are one and same inam. Scientifically there is no variation between Indians.

    The unrefined Tamil came to be called as Apabrahmsa having in it 70% of words of corrupted Tamil. Marathi language has 70% Apabrahmsa! Hindi was born from Apabrahmsa. While unrefined Tamil was undergoing changes like this in North India, refined Tamil was nurtured in Pandyan lands in the South. We continue to have this refined Tamil now. The unrefined and corrupted Tamil now lives on in the Braj Bhasha of the people connected with krishnavathara namely - in Mathura, Gokula and Brindhavan.

    பதிலளிநீக்கு
  11. Dear Jayasree Mam,
    Thanks for the new information.Its a fortune that
    we speak and write the refined Tamil.

    பதிலளிநீக்கு
  12. ஆரியப் படையெடுப்பை உண்மையில்லை என்பவர்கள் ஈரானியர்களின் சரித்திரத்தையும், பாரசீகத்தின் சரித்திர ஆராய்சியாளர்களையும் பொய்யன்களாக்குகிறார்கள்.

    இன்றும் ஈரானியர்கள் தாங்கள் தான் ஆரியர்கள் என்றும், இந்தியர்கள் தங்களுடையதும் திராவிடர்களினதும் கலப்பினால் வந்தவர்கள் என்றும் வாதாடுகிறார்கள்.

    http://www.iranchamber.com/history/article...ple_origins.php

    பதிலளிநீக்கு
  13. 85 ஆவது கட்டுரைக்கும் இதே கருத்துரை இடப்பட்டுள்ளது. அதன் கீழ் நான் எழுதியுள்ள கருத்துரையைப் படிக்கவும்.

    பதிலளிநீக்கு
  14. பாகவதத்தின் ஐந்து காண்டத்தையும் படித்து முடித்தவுடன் இது கர்ப்பனை அல்ல என்பது தெளிவாக உணர்ந்தேன். நம்முடைய கலாச்சாரத்தில் பின்னிப்பினைந்துள்ள சரித்திரத்தையும் விஞ்ஞானத்தையும் அறிய முடியுமானால் ஒரு காலத்தில் நாம் பூமியில் எல்லா வகையிலும் தலைசிறந்த நாடு என்பதை நம்முடைய அறிவு ஜீவிகள் ஒத்துக்கொள்வார்கள்.

    பதிலளிநீக்கு
  15. @ Baskaran

    இந்த பாரத கலாச்சாரம் ஒன்றானது, பழமையானது, இங்கிருந்துதான் உலகம் முழுவதும் சென்றது என்பதை மரபணு ஆராய்ச்சிகள் நிரூபித்து வருகின்றன. சமீபத்திய (டிசம்பர் 9 ஆம் தேதி வெளியானது) ஆராய்ச்சியைப் பற்றிய என்னுடைய ஆங்கிலப் பதிவு :- (இதில் ஈரானில் காணப்படும் பாரத (ஆரியச்) சுவடுகளுக்கு விளக்கம் கிடைக்கும். இங்கிருந்து போனவர்களே ஈரான் நாடடில் ஆரியம் பேசியவர்கள்)

    http://jayasreesaranathan.blogspot.com/2011/12/yet-another-genetic-study-that.html

    இன்றைக்கு இருக்கும் மனித குலத்தின் முதல் சுவடு - திரிபுர சம்ஹாரத்தின் மூலமாக அறியப்படுகிறது:-
    http://jayasreesaranathan.blogspot.com/2011/11/sundaland-was-location-of-tripura.html


    இந்தியாவிலிருந்து - இந்தியா வழியாக அமெரிக்கா வரை ஹிந்து கலாச்சாரம் சென்ற வழி:-

    http://jayasreesaranathan.blogspot.com/2011/11/indus-girl-and-indra-loka-have-remnants.html

    (இந்தக் கட்டுரையில் நான் கொடுத்துள்ள வரைபடத்தை அமெரிக்க anthropology ஆராய்ச்சியாளர் எடுத்தாண்டுள்ளார்.)

    இதற்கிடையே, ஆரிய- திராவிடப் போரும், திராவிடமும் யூதர்கள், கிருத்துவர்கள், முஸ்லீம்கள் ஆகியோருக்கு வசதியாக இருக்கவே அதைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மரபணு ஆராய்ச்சியாளர்கள் (இவர்கள் இந்தியர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது) , சமீபத்திய (டிசம் -9) ஆராய்ச்சிக்குப் பிறகு சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

    இங்கே படிக்கவும்:-
    http://bharatkalyan97.blogspot.com/2011/12/peeling-population-genetic-indian-onion.html

    பதிலளிநீக்கு
  16. மேடம்,
    ராமர், கிருஷ்ணர் உண்மையாகவே இருந்தார்களா அல்லது அது வெறும் கதைகளா ஐயத்தை தெளிவிக்கவும் உங்களுடைய தொகுப்புகள் அற்புதமகாக உள்ளது நன்றி இது போன்ற நெறைய தொகுப்புகள் வெளியிடவும் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். ஆங்கிலத்தில் நான் எழுதியுள்ள கட்டுரைகளில் விளக்கங்கள் காணலாம்.

      ராமர் வாழ்ந்த காலம்:-

      http://jayasreesaranathan.blogspot.in/2010/10/when-was-rama-born.html
      http://jayasreesaranathan.blogspot.in/2010/10/ramas-birth-date.html
      http://jayasreesaranathan.blogspot.in/2009/07/did-rama-rule-for-11000-years.html

      கிருஷ்ணர் வாழ்ந்த காலம்:-

      http://jayasreesaranathan.blogspot.in/2010/09/krishna-is-not-myth-he-is-reality.html

      http://jayasreesaranathan.blogspot.in/2009/01/krishna-reality-archeological-proof.html

      http://jayasreesaranathan.blogspot.in/2009/07/sky-map-at-time-of-mahabharata-war.html

      நீக்கு