திங்கள், 22 ஏப்ரல், 2013

இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்குச் சென்ற தாய் தெய்வ வழிபாடு – 3




ஆங்கிலத்தில் எனது மூலக் கட்டுரை:-

தமிழாக்கம்:- திரு T.G  சாரநாதன்


மூலக்கருத்துக்கும்,  பிற்காலங்களில் ஏற்ப்பட்ட மாற்றியமைக்கப்பட்ட கருத்துக்களுக்கும், இடைப்பட்ட காலங்களில் தொடர்பு அற்றுப்போனதை, என்னால் நியாயப் படுத்த முடியும். இதற்காக கி.மு. 6000 ஆண்டுகளுக்கு முன்னால், அனதோலியா (Anatolia) பிரதேசத்தில் கண்டெடுத்த  பெண் தெய்வ உருவத்தைப் பார்க்கலாம்.





ஒரு பருமனான உருவம் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க இரு பக்கங்களில் சிறுத்தையோ அல்லது சிங்கமோ இருக்கின்றன. இது பலவிதமான ஊகங்களை எற்படுத்தியுள்ளன. இந்தச் சிலையைப் பார்க்கும் எந்த ஒரு ஹிந்துவுக்கும், அன்று பாற்கடலைக் கடைந்தபோது முதலில் வெளிவந்த ஜ்யேஷ்டா தேவி ஞாபகத்திற்கு வரும். அவள் மிகவும் பருமனாகவும், அழகற்றவளாகவும் இருந்தாள். 

மயன் அளித்த மயமதம் என்னும் நூல் கட்டிடக் கலையைப் பற்றியது. அதில் தெய்வச் சிலைகளைப் பற்றியும் கூறப்பட்டிருக்கிறது.

இந்தப் பெண் தெய்வத்திற்கு தொங்கும் உதடுகள், தீர்க்கமான மூக்கு, தொங்கும் மார்பகங்கள், பெரிய வயிறும் உண்டு. அவள் சிம்மாசனத்தில் வீற்றிருப்பாள். இந்தச் சிலைகளை  கிராமத்தில் தீயவையும், அழுக்கும் நிறைந்த இடத்தில் பிரதிஷ்டை செய்வார்கள். கோவில்களில் கூட இவளுடைய சந்நிதி ஒரு ஒதுக்குப் புறத்தில் இருக்கும்.   இந்த தெய்வத்தை வழி படுவதால், மக்கள் நல்ல ஆரோக்கியமான, மகிழ்ச்சியான இடங்களில் வசிப்பார்கள் என்பது ஐதீகம்.
அனதோலியாவில் இந்த சிலையைக் கண்டெடுத்த இடத்தை, இந்த விவரங்களுடன் ஆராய வேண்டும்.

ஒப்பிடுதலுக்காக நம் கோவில்களில் உள்ள ஜ்யேஷ்டா தேவியின் சிலைகளின் உருவங்களை கீழே காணலாம். 


                   கைலாஸநாதர் கோவில், காஞ்சிபுரம் 



                      இதுவும் கைலாசநாதர் கோவில் 




                   ஜ்யேஷ்டா தேவி, திருப்பாற்கடல் 


முன்காலங்களில் இந்தத் தெய்வத்தை வணங்கி வழிபட்டார்கள். தற்சமயம் இந்த வழிபாடு அறிதாகியுள்ளது. அனதோலியாவில் இதே மாதிரி உருவம் கண்டெடுக்கப்பட்டதால், வேதகாலத் தொடர்பை அறிந்து கொள்ளலாம்.
(http://jayasreesaranathan.blogspot.in/2012/12/celts-from-kelta-and-anatolia-from.html இந்த லிங்கில் என்னுடைய பழைய கட்டுரையைப் படிக்கவும்)
இறுதியாக, ஐரோப்பாவிலும், மத்தியக் கிழக்கிலும் கண்டெடுத்த  பாம்புகளும்,மண்டை ஓடுகளும் உள்ள சிலைகளைப் பார்ப்போம்.



தூக்கிய கைகள்  மிருகங்களிடமிருந்து தடுக்கவோ, அல்லது அவைகளை அழிக்கவோ போன்று இருக்கின்றன. எகிப்திலும், இதே மாதிரியான சிங்கத்தின் மேல் நிற்கும் பெண் உருவத்தைக் காணலாம். 



ஒரு கையில் பாம்பும், மற்றொரு கையில் கதிர்களும் உள்ளன.  கீழே காணும் உருவம் ஸ்வீடனில் உள்ளது.



(இது ஸ்வீடனில், காட்லாண்டில் வாடே சர்ச்சில் உள்ளது. படம் எடுத்தவர் பெரிக், 2008. சர்ச் 1100ம் ஆண்டைச் சார்ந்தது. இது கிறிஸ்துவர்களின் அலங்காரச் சிலை அல்ல. இம்மாதிரி உருவங்களை ஸ்வீடனில் பாம்பு சூனியக்காரி என்பார்கள்)
ஒப்பிட்டு நோக்க, கீழே பாம்புகளுடன் உள்ள பெண் தெய்வத்தைப் பார்க்கவும். இந்த தெய்வத்தை, கர்நாடகாவில் உள்ள பேலூரில் வணங்குகிறார்கள். 



சிரியா தேசத்தில், அஷேரா உருவம், தூக்கிய கைகளுடன், கதிர்களை மிருகங்களுக்கு உணவு அளிப்பதைக் காணலாம். இது ஸிந்து சமவெளி தாய்க் கடவுளை ஒத்திருக்கிறது.


அதே மாதிரி இன்னொரு அஷேரா  உருவம்,  மண்டை ஓடுகளின் மேல் நிற்பது. இந்தக் கருத்து எங்கிருந்து வந்திருக்கும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது.



அது தோன்றியது, ஹிந்து மக்களிடமிருந்து. மயமத நூலில், இரண்டு பெண் தெய்வங்கள் மட்டுமே பாம்புகளுடனும், மண்டை ஓடுகளுடனும் உள்ளனர் என்று கூறப்படுகிறது. அவை, ஒன்று சாமுண்டி, இன்னொன்று காளி. அவள் எதிரிகளை முழுமையாக அழிக்கும் உரு. பிணத்தின் மேல் நின்றுகொண்டு, பாம்பு, மார்பு கச்சையுடன், கையில் மண்டை ஓட்டை வைத்துக் கொண்டிருக்கிறாள். மிகப் பயங்கரமாக இருக்கிறாள். தலை முடியும் சீறும் பாம்புகளாக உள்ளன. அதிசயமாக, இந்த சாமுண்டி உருவம், ட்லாடில்கோ (Tlatilco) கலாசாரத்தில் காணக் கிடைக்கிறது. 





அஷேராவின் முந்தைய படம், சாமுண்டியின் இந்த உருவத்தைக் காட்டிலும், மிகவும் நீர்த்துள்ளது. யுத்தக் களைப்பினால், சாமுண்டியின் மார்பகங்கள் திறந்தே கிடக்கின்றன. கீழே காணப்படும் சாமுண்டியின் உருவம், மத்தியப் பிரதேசத்தில் வணங்கப் படுகிறது. இது கி. பி. 7ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 


அஷேராவின் உருவமும், திறந்த மார்புடன் இருந்தாலும், யுத்தக் களைப்பு இல்லை. இதனால், காலத்தாலும், இடமாற்றங்களாலும், கருத்து மாற்றம் ஏற்பட்டிருப்பது நிதர்சனம். 



அஷேரா, சிரியா கி. மு. 1300
திறந்த மார்பகங்களுடன் இருக்கும் இந்தக் கருத்து, நாளடைவில் ஏற்றுக் கொள்ளப் பட்டது. இது இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் கூறிய, மித்ரா சீரழிவை தழுவி இருக்கிறது.



ஆனாலும் மிநோவாவின் (Minoan) இந்தக் கலைப் படம், வட இந்தியர்கள் புடவை அணியும் பாணியில் உள்ளது. கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.



இது வடஇந்திய, முக்கியமாக குஜராத்தி, ஸிந்திப், பெண்கள் புடவை உடுத்தும் பாணியில் உள்ளது. ஜாக்கெட்டும், நகைகளும் இந்திய பாணியையே ஒத்திருக்கிறது. மிநோவாவின் கலைப் படத்தில் ( மேலே) உள்ள சுவரில் தொங்கும் படத்தில் உள்ள பெண்ணின் உடை (பாவாடையின் மேல், நீல அங்கி), இந்தியர்களின் உடை அணியும் பாணியையே ஒத்திருக்கிறது. 



இன்னொரு கட்டுரையில் இந்திய - மிநோவான் தொடர்பை அலசுவோம். இங்கு ஹிந்து எண்ணங்களில் உண்டான தாய் தெய்வத்துடன் உள்ள தொடர்பைக் காண்பிக்கிறேன்.
இரண்டாவது தாய்க் கடவுள் உருவம் காத்தியாயனி, பாம்புகளுடன் தொடர்பு கொண்டவள். இந்த  உருவத்தின் ஒரு கையில் சுருக்குக் கயிறு போன்ற ஒரு பாம்பு, பாம்புகள் மார்புக் கச்சையாக, சிங்கத் தோல் உடையுடன், சிங்கத்தின் மேல் அமர்ந்துள்ளாள். 

இந்த உருவம் தான் மிக அதிகமாகக் காணப்படுவது. இது இந்திய வெளிப்பாடுகளையே காண்பிக்கிறது. இந்த தெய்வத்தை வழிபட்டால், கல்யாண தடங்கல்கள்  நீங்கி, நல்ல மணவாழ்க்கை ஏற்ப்படும் என்று நம்பப் படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் காலத்தில், மார்கழி பௌர்ணமியன்று, இந்த தெய்வ வழிபாடு சிறு பெண்களால், தொடங்கப் பட்டு வந்தது. ஸிந்து சமவெளியில் காணப்படும் முத்திரைகளில், அக்காலங்களில் வழிபட்ட காத்தியாயனியே என்று கூறலாம். 
சிங்கத்தோடு இருக்கும் ஈஸ்டர் (ISHTAAR ) காத்தியாயனியே ஆகும். ஏனெனில், அவளை வணங்குவது, இஷ்டங்களைப் பூர்த்தி செய்வதற்கு. ஸமஸ்கிருதத்தில், இஷ்டம் என்றால் விரும்பியவை என்று பொருள். 
ஏழு தாய்க் கடவுள் என்பது இன்னொரு தாய் வழிபாடு. இதை ஸப்த மாதா என்று கூறுவார்கள். மயமதம் நூலின்படி அவர்கள்: பிராஹ்மி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, காளி. 
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடையாளமும், படை ஆயுதங்களும் இருந்தன. காளியைப் பற்றி ஏற்கனவே பார்த்துள்ளோம். தாய்க் கடவுள் வழிபாட்டின் தொன்மை அறிய நமக்கு கௌமாரி அல்லது குமரி தான் முக்கியம். மயமதம், அவள் சேவலையும், வேலையும் வைத்துக் கொண்டு, மயில் மேல் வீற்றிருப்பாள், என்கிறது. இந்தக் கோலத்துடன் காண்பவன் தான் ஸ்கந்தன் எனப்படும் குமரன்; சிவன் - பார்வதி மைந்தன்!
சங்க   இலக்கியத் தகவலின் படி, இம்மூவருமே, ஆழியுள் மூழ்கிப்போன நிலங்களில் இருந்தனர். அதனால், ஸப்த மாதாவில், குமரி எனப்படுபவள் ஸ்கந்தனின் (குமரனின்) தாயே!   அவள் தான் சக்தி அல்லது பார்வதி, சிவனின் மனைவி.
குமரி (கண்டம்/தேசம்) இந்தியப்  பெருங்கடலில் இருந்தது. அது நீரில் மூழ்கியவுடன், தற்பொழுது தென்னிந்தியாவின் தெற்கு முனையில், கன்னியா குமரி என்று பிரதிஷ்ட்டை செய்தார்கள். அவள் தன் பழைய இருப்பிடமான கடலை நோக்கி நிற்கிறாள். இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் இங்கு வந்து குமரியை வழிபட்டார்கள்.
கூடா ஒழுக்கத்தினால் ஏற்ப்பட்ட பாவங்களிலிருந்து விடுபட குமரியை வணங்கினார்கள். ஆறாம் நூற்றாண்டு காப்பியமான மணிமேகலையில், காசியில் இருந்த ஒரு பெண்மணி தன கூடா ஒழுக்கத்தினால் ஏற்ப்பட்ட பாவம் தீர, குமரியை இங்கு வந்து வணங்கினாள்  என்று கூறுகிறது. 

குமரி, தென் கடல் பிரதேசத்தில் இருந்தாள் என்பதால், ஸப்த மாதா குழுவில் உள்ள அனைவருமே அதே கடலில் மூழ்கிப்போன நிலங்களில் தான் இருந்திருப்பார்கள். ஆனால் காலப்போக்கில் -  இப்பொழுது அவர்களை   தனிக் கடவுளாக வணங்கி வருகின்றார்கள். ஸப்த மாதக்களுக்கும்,  அஷ்ட மாதாக்களுக்கும்,  பழமையான கோயில்கள் உள்ளன. மயமதம், ஸப்த மாதாக்களுக்கான கோவில், கிராமத்திலிருந்து வெகு தொலைவில் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. ஏழு பெண்களுடைய ஸிந்துவெளி முத்திரை, ஸப்தமாதாவையே காட்டுகிறது.



( தொடரும்) 

2 கருத்துகள்:

  1. http://frontiers-of-anthropology.blogspot.in/2013/04/origin-of-easter-from-ishtar-and-ishtar_4.html

    பதிலளிநீக்கு
  2. எனக்கு தங்கள் இந்த ஆய்வு தொகுப்பு தமிழில் கிடைக்க வழி செய்ய வேண்டும் .

    பதிலளிநீக்கு