வெள்ளி, 14 செப்டம்பர், 2012

105. தஸ்யு முதல் ட்ரூயிட் (DRUID) வரை.


 

முக்கோண வடிவ நிலங்களில் அதிசய அமைப்புகளாக க்ராப் சர்கிள்கள் உருவாகின்றன என்று கண்டோம். அவை அதிகமாக உண்டாகும் இடம் இங்கிலாந்து என்றும் பார்த்தோம். அவற்றில் ஒன்று ஸ்யாமாகாளி யந்திர வடிவில் அமைந்தது என்னும் விவரத்தையும் கண்டோம். அந்தக் காளி யந்திர அமைப்பு தென்பட்ட வில்ட்ஷையர் பகுதியில் இன்னொரு அதிசயமும் உண்டு. அங்குதான் ஸ்டோன்ஹென்ஞ் (STONEHENGE) என்னும் கல் அமைப்புகள் தென்படுகின்றன. 

இந்த ஸ்டோன்ஹெஞ்சுகளின் காலம் இன்றைக்கு 4000 முதல் 5000 வருடங்களுக்கு முன் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதாவது சிந்து சமவெளி நாகரிகம் தழைத்தோங்கியபோது. இங்கிலாந்தில் இவை எழுப்பப்பட்டன.(1877 இல் எடுக்கப்பட்ட படம்ஸ்டோன்ஹென்ஞ்)இவற்றின் விசேஷம் என்னவென்றால், பல டன் எடையுள்ள இந்தக் கற்கள், இந்தப் பகுதியைச் சேர்ந்தவை அல்ல. குறைந்த பட்சம் 220 கி.மீ தொலைவிலிருந்து இவற்றைக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இவற்றை எப்படிக் கொண்டு வந்தார்கள்? ஏன் கொண்டு வந்தார்கள்? பளுவான இந்தக் கற்களைக் கொண்டு வந்து ஏன் இவ்வாறு ஒரு வட்டமாக அமைக்க வேண்டும் என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. இந்தக் கேள்விகளுக்கு இன்னும் பதில்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் உள்ள ஒரு முக்கிய விவரம் என்னவென்றால், இவை இருக்கும்  இடத்துக்கருகே க்ராப் சர்கிள்கள் உருவாகின்றன என்பதே. கீழ்க்காணும் படத்தில் ஸ்டோன் ஹென்ஞ் பகுதியை அம்புக் குறி காட்டுகிறது, அதற்கு அருகில் க்ராப் சர்கிள் உண்டாகி இருப்பதைக் காணலாம்.


 


இங்கு ஒரு ஸ்டோன் ஹென்ஞ் மட்டுமல்ல, இந்த இடத்துக்கருகே பல ஸ்டோன்ஹென்ஞ் கல் அமைப்புகள் இருக்கின்றன.


ஸ்டோன்ஹெஞ்சுக்கு ஒரு கிலோமீட்டர் தெற்கில் உள்ள பகுதியில் பல கல் அமைப்புகள் அருகருகே காணப்படுகின்றன. நார்மண்டன் டௌன் கூட்டம் (NORMANTON DOWN GROUP)  என்று அழைக்கப்படும் இந்த அமைப்புகளை வரைபடமாகத் தந்துள்ளார்கள். 


 

இந்த வரைபடத்தில் காணப்படும் ஒவ்வொரு வட்டமும், தனித் தனியான கல் அமைப்புகளே. இவற்றை வானிலிருந்து பார்த்தால் இப்படித் தெரிகிறன:-க்ராப் சர்கிள் அமைப்புகளைப் போல இவற்றில் ஒரு ஒழுங்கு தெரிகிறது. ஏன் இப்படி அவர்கள் அமைத்திருக்க வேண்டும் என்று ஆராய்ந்தால், இந்த அமைப்புகள் எல்லாமுமே இறந்தவர்களை அடக்கம் செய்த இடங்கள் ஆகும். இந்தக் கற்கள் எல்லாம் மயானக் கற்களே. அவற்றின் கீழ் இறந்தவர்களைப் புதைத்திருக்கிறார்கள். சில கல் அமைப்புகளில் கும்பலாகப் புதைத்திருக்கின்றனர். உட் ஹென்ஞ் (WOODHENGE) என்னும் அமைப்பில் நடுவில் கும்பலாகப் புதைத்துச் சுற்றிலும், ஒன்றையடுத்து ஒன்றாக 6 வட்டங்கள் வடிவில் மரக் கட்டைகளை எழுப்பியுள்ளனர்.உட்ஹென்ஞ். (WOODHENGE)

 

ஸ்டோன்ஹென்ஞ்சுக்குத் தென் கிழக்கில் 1.6 கி.மீ தொலைவில் ப்ளூஸ்டோன்ஹென்ஞ் (BLUESTONEHENGE)  இருக்கிறது. அங்கு 27 கற்கள் வட்டமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. 27 என்பது 27 நக்ஷத்திரங்களைக் நினைவூட்டுகிறது. மொஹஞ்சதாரோவில் உள்ள அமைப்பு 27 நக்ஷத்திரக் கோவிலைக் காட்டுகிறது என்று 89 முதல் 92 ஆவது கட்டுரை வரை நாம் பார்த்தோம். வட்டமாகத் தெரியும் வானத்தில் கோள்கள் செல்லும் பாதையை 27 நக்ஷத்திரங்களால் அளக்கும் முறை பாரத நாட்டில் மட்டும்தான் உள்ளது. வேத ரிஷிகள் கொடுத்துள்ள ஜோதிட சாஸ்திரத்தில் மட்டும்தான் அவ்வாறு உள்ளது.


 

கிரேக்கர்களும் வான சாஸ்திரம் அறிந்தவர்கள் என்று சொன்னாலும், அவர்கள் சாஸ்த்திரம் நக்ஷத்திரங்களை அடிப்படையாகக் கொண்டதல்ல. அவர்கள் வானத்தில் ஆங்காங்கே இருக்கும் நக்ஷத்திரங்களைப் பற்றிச் சொல்லியுள்ளார்கள். ஆனால் கோள்கள் செல்லும் பாதையை 27 பகுதிகளாகப் பிரித்து, அவை ஒவ்வொன்ற்றிலும் ஒரு நக்ஷத்திரத்தைக் குறிக்கவில்லை. அந்த முறை பாரதத்தின் வேத ஜோதிடத்தில்தான் உள்ளது. 27 கற்கள் பதித்த ஸ்டோன் ஹென்ஞ் வட்டம் வில்ட்ஷையர் பகுதியில் 5000 வருடங்களுக்கு முன்பே அமைக்கப்பட்டது என்றால், ஒன்று வேத ஜோதிடம் தெரிந்தவர்கள் அங்கு இருந்திருக்க வேண்டும். அல்லது இன்னொரு காரணமும் இருக்கலாம். அது என்ன என்று சொல்வதற்கு முன் அந்த ஸ்டோன்ஹெஞ் அமைப்பைப் பற்றிய விவரத்தைச் சொல்ல வேண்டும்.


 

இந்தக் கல் அமைப்புகள&#