திங்கள், 19 நவம்பர், 2012

120. இன்காவில் (INCA) தமிழும், சமஸ்க்ருதமும்.


இன்கா மக்களது முக்கியக் கடவுள் விரகோசன். அவனது இரு மகன்களுள் ஒருவன் கடலோரப் பகுதியில் இருந்த ஒரு குகை வாயீல் வழியாக வெளி வந்தான். இன்னொருவன் அதற்குச் சற்று தொலைவில் உள்ள டிடிகாகா (TITIKAKA) என்னும் ஏரி இருக்கும் இடத்துக்கருகே குகை வாயில் வழியே வெளியே வந்திருக்கிறான் என்று முந்தின கட்டுரைக்ளில் கண்டோம். அந்த இரண்டு இடங்களும் கருப்பு நிறப்புள்ளியாகவும், (டிடிகாகா ஏரி) சிவப்புப் புள்ளியாகவும் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளது.
டிடிகாகா ஏரியின் அருகில் உள்ள பச்சரிதம்போ (PACARI TAMBO) என்னும் இடத்தில் வந்திறங்கிய மன்கோ  காபக் என்பவனே விரகோசன் என்னும் சூரியக் கடவுளது வழிபாட்டை நிறுவுகிறான்.Colonial image of Manco Cápac


இவனுடன் மேலும் மூன்று சகோதரர்கள் வந்தனர். அப்படி வந்த இவர்களை மானச புத்திரர்கள் என்று வேத மரபில் சொல்வதைப் போல 'மாரஸ் டோகோ' (MARAS TOCO)      என்கிறார்கள். அவ்வாறு வந்தவர்கள் மொத்தம் நான்கு ஆண்கள். நான்கு பெண்கள் அந்த ஆண்கள் ஐயா அல்லது ஆயர் என்ற பெயர் கொண்டவர்களாக இருக்கிறார்கள். (Ayar Auca, Ayar Cachi, and Ayar Uchu) பெண்கள் மாமா என்று அம்மா என்ற பொருளில் பெயர் கொண்டவர்களாக இருந்தனர். (Mama Ocllo, Mama Huaco, Mama Raua, and Mama Cura)


இவரகள் மூலமாக மக்கள் தொகை பெருகி ஒரு நாகரிகத்துக்கு அடிகோலியது.

இவ்வாறு தொடரும் இன்கா கதைகளில் நமக்கு வியப்பைத் தரும் விவரங்கள் பல இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவை:-

·         ஐமர், ஐமரா, ஐயர்மரா, ஆயர்மாரா என அவர்கள் பெயர் இருக்கின்றது. இவற்றின் உண்மையான ஓசை அல்லது பொருள் யாருக்கும் தெரியாது. கெல்டுகள் விஷயத்தில் எவ்வாறு கிரேக்கர்கள், அவர்கள் பாரம்பரியத்தை அழித்து, பெயர்களை மாற்றினார்களோ, அவ்வாறே இன்கா மக்கள் உட்பட தென் அமெரிக்கப் பழங்குடி மக்களது பாரம்பரியத்தையும், பெயர்களையும் ஸ்பெயின் நாட்டவர்கள் மாற்றினார்கள். நம்மைப் பொருத்தவரையில், ஐயா அல்லது ஆய மார் என்னும் பெயர் தமிழ் மரபை ஒத்து இருக்கிறதே அது எதேச்சையானதுதானா?

 

·         அந்த ஐயமார் என்பதில் உள்ள 'ஐய' என்பதை அவர்களது பழைய மரபில் 'ஜய' (JAYA) என்கிறார்களே அது சமஸ்க்ருதச் சொல்லல்லவா? அல்லது தமிழில் எழுதப்படும் என்னும் எழுத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு என்றது போல அல்லவா இருக்கிறது? (விவரங்களுக்குப் பார்க்க :- http://en.wikipedia.org/wiki/Aymara_language#Etymology )

இதை இன்னொரு விதமாகவும் பார்க்கலாம். அவர்களது பழைய மொழியில் ஐய என்பதை ஜய என்றும், மாரா என்பதைக் காலம், நேரம் என்றும் கூறுகிறார்கள். மாரா என்பது மானா என்னும் சமஸ்க்ருதச் சொல்லை ஒத்திருக்கிறது. மானா / மான என்றால் காலக் கணக்கு என்றே பொருள். சௌரமானம், சாந்திரமானம் என்பது போல ஜயமானம் அதாவது வெற்றியின் காலம் அல்லது வெற்றியின் அளவு என்று இதை சமஸ்க்ருதத்தில் பொருள் காணலாம். அதுவே ஜயமாரா என்றாகி, ஐயமாரா என்றானதோ?

எது எப்படியாகினும், தமிழும், சமஸ்க்ருதமும் கலந்த ஒரு பேச்சை இது காட்டுகிறது.

·         இன்கா மக்கள் தாங்கள் இருந்த இடத்தை உரு அல்லது ஊரு, ஊர் என்று அழைக்கிறார்களே அது எப்படி? ஊரு, உருக் என்றெல்லாம் ஈரான் நாட்டில் காணப்படும் பெயர்கள் என்று அங்கிருந்தவன் திராவிடன் என்று திராவிடவாதிகள் கூறுவார்களே, தென் அமெரிக்காவிலும் ஊரு என்ற இடம் இருக்கிறதே, இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்? தென் அமெரிக்காவிலிருந்து திராவிடன் வந்தானா, இல்லை தமிழ் நாட்டிலிருந்து அங்கு போனானா? அவர்கள் விளக்கம் என்ன?

 

·         அந்த மக்களுக்கே ஊரோஸ் (UROS) என்று பெயர். ஊரு பெண்மணியைப் படத்தில் பாருங்கள்.


இந்த மக்கள் இந்தியாவின் வடகிழக்குப் பகுதி, மற்றும் நாகாலாந்து மக்களை ஒத்திருக்கிறார்கள். சீன மக்களையும் ஒத்திருக்கிறார்கள். ஆண்களது சராசரி உயரம் 5 அடி 2 அங்குலம் தான். பெண்கள் ஐந்தடிக்கும் குறைவாகவே இருக்கிறார்கள். சீனர்களைப் போல உருவ ஒற்றுமையும், உயரமும் இருக்கிறது. இந்த மக்களில் பெண்கள் தமிழ்ப் பெண்களைப் போல பின்னல் இடுகிறார்கள். சீன மக்களும் பின்னல் இடுபவர்கள் தான்.

·         ஊரு என்னும் இந்தப் பெயரில் உள்ள மர்மத்தை அவிழ்க்க ஒரு விவரம் இருக்கிறது. ஊரு என்னுமிட்த்தில் இருக்கும் மக்கள் தாங்கள் புகினா (PUKINA) என்னும் நகரங்களிலிருந்து வந்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். (புகினா என்றால் புகுந்த இடம் என்பது போல ஒலிக்கிறது). உண்மையில் இன்கா நாகரிகம் வளர்ந்த நாடே பெரு (PERU) என்னும் நாடாகும். புரா என்பது பெரு என்றும் ஆகி இருக்கலாம். எனினும் புனாஸ் (PUNAS)  என்னும் இடத்தில் 9500 ஆண்டுகளுக்கு முன்பே பழைய இன்கா மக்கள் வந்திருக்க வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். http://www.incas.info/view/archaeology/archaeology.html

 

·         நகரம் – ஊர் என்பவை மயமதத்தின் வாஸ்து சாஸ்திரப் பெயர்களாகும். புரா, புரம், பூர் என்பவை நகரங்களுக்கான பெயர்கள். அரசர்களும், வணிகர்களும் வாழும் இடங்கள் என்று மயமதம் கூறுகிறது (9-40). புரம் என்னும் நகரத்தை விடச் சிறியது ஊர் ஆகும். அங்கு பெருமளவில் வியாபார வேலைகள் நடக்காது. இந்த ஊர், புரம் என்னும் இரு சொற்களும் இந்தியாவில் எங்கு நோக்கினும் இருக்கும்.

 

·         ஊரு மக்கள் புகினா என்னும் நகரப்பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்று அவர்கள் சொல்வதால், புகினா என்பது புனா அல்லது புரம் என்னும் சொல்லிலிருந்து உருவானது போலத் தெரிகிறது. இதே பகுதியில் உருகுவே நாடு இருக்கிறது. உரு மக்கள் வசித்ததால் அந்தப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். அதுபோல பராகுவே நாடும் புரா என்னும் நகரத்தின் பெயரால் உண்டாகி இருக்கலாம்.

 

·         இதில் இன்னொரு ஆச்சரியம் இருக்கிறது. உருக்ரமா என்பது சூரியனது பெயர். திதியின் சகோதரி அதிதி (ADITI) ஆவாள் (மற்றொரு சகோதரி வகை மரபணு) அவளுக்கு 12 சூரியர்கள் பிறந்தனர் என்பது புராண வழக்கு ஆகும். அதாவது தென் புலத்தில் விழுந்த சூரிய வெப்பம், ஒளி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பெயர்கள் உருவான புவியியல் உருவகத்தைக் கூற முடியும். அவர்களில் கடைசிப் பெயர் உரு-க்ரமன். பெரிய பெரிய அடிகளை வைத்துச் செல்பவன் என்று இதற்குப் பொருள். அதாவது சூரியன் வேகமாக (இடப்பெயர்வு) நகர்ந்து செல்கிறான் என்பதை இது குறிக்கிறது. அப்படிப்பட்ட காலக் கட்டத்தில் இந்த மக்கள் இங்கு குடியேறியிருக்க வேண்டும்.

 

·         சூரியன் வேகமாக வடபுலம் நோக்கி நகர்ந்து செல்வதால், அந்திமத்தை நெருங்குகிறான் என்று சொல்லும் வண்ணம் சூரியனை அந்தி என்றழைத்து அதுவே இன்டி (INTI) என்றாகி இருக்க வேண்டும். இன்கா மக்கள் சூரியனை இன்டி என்றே அழைத்தனர். இந்த விளக்கத்துடன் கூடிய அந்தி என்னும் சொல்லை ஒட்டியும் ஆண்டி – ஆண்டிஸ் (ANDES) என்ற பெயர் உருவாகி இருக்கலாம்.

·         ஊரு மக்கள் வாழ்ந்த முக்கிய இடம் தீவநாகு (TIWNAKU) ஆகும். நாகத்தீபம் என்பதை இந்தப் பெயர் நினைவூட்டுகிறது. குகையிலும், பூமிக்கடியிலும் வசிப்பவர்கள் நாகர்கள் ஆவார்கள். அப்படி ஒரு வழிப் பாதையில் வந்த இந்த மக்கள் ஆதியில் இந்துமாக்கடல் பகுதியில் அப்படிப்பட்ட நாகத்தீவுகளில் வசித்தவர்களா?

 

 

·         வேத மரபில் மக்கள் எங்கு சென்றாலும் ஒரு மேருவை அடையாளம் கண்டு விடுவார்கள். இவர்களும் "அரம மூரு" (ARAMA MURU ) என்ற ஒரு மலையை, கற்களால் கட்டி, செயற்கையாக உண்டாக்கினார்கள். அரம மேரு என்பது அரம மூரு என்று திரிந்ததா?

 

·         இது அரவ ஊரு என்பது போலவும் இருக்கிறது. அரவம் என்றால் பாம்பு என்றும் அர்த்தம். நாகர்கள் போல குகைப் பாதையில் வந்ததால் இந்தப் பெயரா? இதன் அமைப்பை கீழ்க் காணும் படத்தில் காணலாம்.


 

·          இந்தப் பெயரில் அரம – அரவ இவை இரண்டில் எது சரி என்று இன்கா மக்களுக்கே தெரியவில்லை. ஆனால் அவர்கள் சொல்லும் ஒரு பழமையான மரபின் அடிப்படியில் அது அரவ மேரு என்றே இருக்க வேண்டும். அந்த மக்கள் இந்தப் பெயருக்கு 'பாம்புகளது நாடு' அல்லது பாம்புகளது மேரு என்றே பொருள் தருகிறார்கள். (http://www.labyrinthina.com/amaru.htm) எனவே இது அரவ மேரு என்றாகத்தான் இருக்க வேண்டும்.

 

·         இந்த அர்த்தம் வேத மரபில் நம் நாட்டில் இருந்து வருகிறது. உதாரணமாக வேங்கடேசப் பெருமான் குடி கொண்டிருக்கும் திருமலையை மேரு என்பார்கள். வாசுகி என்னும் பாம்பு அதைச் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பார்கள். இதைப் பற்றி 55 ஆவது கட்டுரையிலும் விவரித்தோம். எங்கெல்லாம் ஒரு மலையை ஆதாரமாகக் கொண்டு, பூமிக் குழம்புகள் வெளிப்படுகின்றனவோ அங்கு மேரு இருப்பதாகவும் வாசுகி என்னும் பாம்பால் பூமி கடையப்பட்டதாகவும் சொல்வது வழக்கம். ஆண்டிஸ் மலைப் பகுதியில் இப்படிப்பட்ட இயற்கை நிகழ்ச்சி எதுவும் சமீப கால பல்லாயிரமாண்டுகளில் நடைபெறவில்லை. ஆனால் இந்த மக்கள், தாங்களே ஒரு மலையைச் செதுக்கி அதற்கு இந்தப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

·         இதனால் ஒரு முந்தின நினைவில் இந்த மக்கள் இதைச் சொல்லியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அந்த முந்தின நினவு என்னவென்றால், அவர்கள் நாஸ்கல் ரிட்ஜ் வழியாகத் தப்பித்து வந்த பாலினேசியப் பகுதியும், அதை ஒட்டி எப்பொழுது வெடிக்கும் என்று தெரியாமல் பயமுறுத்திக் கொண்டிருக்கும் இந்தோனேசியப் பகுதியும் என்பதே ஏற்புடைய பதிலாக இருக்கிறது.

·         1996 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கல் மலையை அமர மூரு என்றும் பழைய மரபில் அழைத்தார்கள் என்றும் சொல்கிறார்கள். இந்தப் பெயரே உண்மையான பெயராக இருந்தாலும், அங்கும் வேத மரபின் தாக்கம் வந்து விடுகிறது. மேரு என்பது உயரமானது, ஆதாரமானது. பொதுவாக ஓரிடத்தில் தனிப்பட உயர்ந்து நிற்கும் மலையை மேரு என்று குறிப்பிடுவார்கள். ஆனால் இந்த மக்கள் வசிப்பதோ மலைப் பகுதியில்தான். அதனால்தானோ என்னவோ அந்த மலையிலும், தனிப்பட ஒரு அமைப்பை நிறுவி மேரு என்று அழைத்திருக்கிறார்கள்.

·         இந்த அமர மூருவில் ஒரு விசேஷம் இருக்கிறது.  நம் நாட்டில் கோவில்களில் சொர்க வாசல் இருப்பது போல இந்த அமர மூருவில் ஒரே ஒரு வாயில் மட்டும் உள்ளது. அதாவது வாயில் போல செதுக்கியுள்ளார்கள்.