சனி, 19 மார்ச், 2011

46. அறிவியல் பார்வையில் குமரிக் கண்ட அழிவு – பகுதி-2
இந்தியப் பெருங்கடலில் இருந்த தென்னன் தேசங்கள் அழிந்ததற்கு
மற்றொரு காரணமும் இருக்கிறது.
கடல் மட்டம்  உயர்ந்தால் தாழ்ந்த நிலப்பகுதிகள் கடலுக்குள் முழுகி விடும்.
இன்றைக்கு 17,000 ஆண்டுகள் தொடங்கி, 7,000 ஆண்டுகள் வரையிலும்,
ஏறத்தாழ 25 மில்லியன் சதுர கி.மீ அளவு நிலம்
உலகின் பல இடங்களிலும், கடலுக்குள் முழுகி விட்டிருக்கிறது
என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இது அமெரிக்க நாட்டைப் போல இரண்டரை மடங்கு அதிகப் பரப்பளவாகும்.
இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் கடல் ஆகிய இடங்களில் அதிக அளவு முழுகி இருக்கின்றன.
பனியுகம் முடிவுக்கு வந்தததும் இதற்கு ஒரு முக்கியக் காரணம் என்கிறார்கள்.   பனி யுகம் ஏன் உருவாகிறது என்றும், அது குறித்த ஆராய்ச்சிக் கருத்துக்களையும் 
பகுதி 16- இல் படித்தோம்.
மொத்தம் ஐந்து முறை கடுமையான பனி யுகங்கள் வந்திருக்கின்றன.
அந்த சமயங்களில் உலகம் முழுவதுமே பனி மூடி இருந்திருக்கிறது.
பூமத்திய ரேகைப் பகுதி வரைக்கும் பனி பரவியிருந்த காலங்களும் உண்டு.
அப்படி ஒரு பனி யுகம் கடைசியாக சுமார் 2 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் வந்திருக்கிறது.
அது படிப்படியாகக் குறைந்திருக்கிறது.
அதில் 41,000 வருட சுழற்சியாகப் பனியுகம் சிறிய அளவில் வந்திருக்கிறது.
அந்தச் சிறிய பனி யுகங்களில் உலகம் முழுவதும் பனி மூடுவதில்லை.
உலகின் வட பாகத்தில் ஐரோப்பா, அமெரிக்கா கண்டங்களில் மட்டுமே 
பனி மூடி இருக்கிறது.
அப்படிப் பட்ட ஒரு பனியுகம் 20,000 ஆண்டுகளுக்கு முன் உச்சம் அடைந்தது 
என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அந்தப் பனி யுகத்தின் போது இந்தக் கண்டங்களின் மீது பல கி.மீ உயரத்துக்குப் பனி மூடியிருந்தது.
இந்தப் பனிக்கான நீர் கடலிலிருந்து கிடைக்கிறது.
பனி மழையாகக் கொட்டுவதாலும்,
நதிகள் ஓடாமல் உறைந்து போவதாலும்,
கடலுக்குச் செல்லும் நீர் உலகளாவிய அளவில் குறைகிறது.
னி யுகம் தீவிரம் அடைய அடைய,
கடல் நீர் குறைந்து,
பல இடங்களில் நிலங்கள் வெளியே தெரிந்தன.ஐரோப்பாக் கண்டத்தின் கடலோரப்பகுதிகளில்
பல இடங்களில் நிலமாக இருந்தது என்பதை
இந்தப் படத்தின் மூலம் காணலாம்.இதில் தெரிவது இங்கிலாந்து உட்பட்ட மேற்கு ஐரோப்பியப் பகுதிகள்.
இதில் ஐரோப்பியக் கடலோரப்பகுதிகளை ஒட்டியவாறு,
கடலில் வெள்ளை நிறத்தில் தெரிவது அதிக ஆழம் இல்லாத பகுதியாகும்.
இவை சுமார் 7000 வருடங்களுக்கு முன் வரை நிலப்பகுதிகளாக இருந்தன.
இதைக் கடல் ஆராய்ச்சி, கடல் நீர் மட்ட ஆராய்ச்சி,
கடலுக்குள் அகழ்வாராய்ச்சி என்று
பன்முனை ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.
இதன் மூலம், இன்றைக்குத் தீவாக காட்சி தரும் இங்கிலாந்து,
7000 ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவுடன் நிலத்தின் வாயிலாக இணைக்கப்பட்டிருந்தது என்று தெரிகிறது.
இங்கிலாந்திலிருந்து, ஃப்ரான்சுக்கு நடந்தே போய் விடலாம்.
அதே போல், ஆசியாவின் வட முனையிலிருந்து அமெரிக்காவுக்கு
நடந்து போகும்படி இருந்தது
என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.


இந்தப் பகுதிகள் எல்லாம் ஒரே நாளில், அல்லது ஒரே காலக்கட்டத்தில் முழுகவில்லை.
பனியுகத்தின் போது, அதாவது 20,000 ஆண்டுகளுக்கு முன்னால்
கடல் மட்டம் இன்றைக்கு இருப்பதை விட 120 முதல் 150 மீட்டர் வரை குறைவாக இருந்திருக்கிறது.
அப்பொழுது மேலுள்ள படத்தில் இருப்பது போல பல இடங்கள் கடலுக்கு மேலே இருந்தன.
17,000 அண்டுகளுக்கு முன் பூமியின் வட பாகத்தில் வெயில் தெரிய ஆரம்பித்து,
அதனால் பனியுகம் முடிந்து, பனி  உருக ஆரம்பித்திருக்கிறது.
உருகிய பனி கடலில் கலக்க ஆரம்பித்தது.


வட பகுதியில் கோடைக் காலம் வரும்போது, பனி உருகுதல் வேகமாக இருக்கும்.
அதன் காரணமாக திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்படுதலும்,
பனிப் பாறைகள் திடீரென்று உடைந்து கடலில் மூழ்குவதால்,
மளமளவென்று கடல் மட்டம் உயர்வதும் நடந்திருக்கிறது.
அந்த நேரத்தில் அடை மழை பொழிந்திருந்தாலும்,
பூகம்பம் ஏற்பட்டிருந்தாலும்,
கடலை ஒட்டிய பூகம்பப் பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் சாத்தியம் இருந்திருக்கிறது.


17,000 ஆண்டுகள் முதல் 14,000 ஆண்டுகள் வரை 
முதல் கட்டப் பனி உருகுதல் நடந்திருக்கிறது.
(இந்த கணிப்பில் அதிக பட்சம் 1000 ஆண்டுகள் வித்தியாசம் இருக்கலாம்
என்பது இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள 
க்ளென் மில்னே, ஹான்காக் போன்றவர்களது கருத்து)
இந்தக் காலக் கட்டத்தில் கடலில் கலக்கும் நீரின் அளவு அதிகமாக இல்லை.
14,000 ஆண்டுகளுக்குப் பிறகு உருகும் வேகம் அதிகமாகி
கடல் மட்டம் உயர ஆரம்பித்திருக்கிறது.
இதில் கடலோரத் தாழ் நிலங்கள் அமிழ்ந்து விட்டன.


12,000 முதல் 11,000 க்குள் இரண்டாம்  ஊழி என்று
பல இடங்களில் திடீர் வெள்ளம் வந்து கடலுக்குள் மூழ்கி இருக்கின்றன.
அட்லாண்டிக் கடலில் இருந்த அட்லாண்டிஸ் எனப்படும் நகரமும்
பூகம்பத்தாலும், வெள்ளத்தாலும் ஒரே நாளில் அழிந்து விட்டது
என்று கிரேக்க ஞானி ப்ளேட்டோ எழுதியுள்ளார்.
இன்றைக்கு 11,500 ஆண்டுகளுக்கு முன் அது மூழ்கி விட்டது என்கிறார்.


தென்னன் தேசம் இருந்த காலக்கட்டத்தைத்
தமிழ்ச் சங்கம் நடந்த காலத்தைக் கொண்டும்,
நூல்கள் சொல்வதைக் கொண்டும் நாம் அறுதியிட்டாற்போல,
கிரேக்க தத்துவ ஞானியான ப்ளேட்டோ அவர்கள் எழுதிய நூல்கள் மூலமாக,
அட்லாண்டிஸ் நகரம் இன்றைக்கு 11,000 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை அறிகிறோம்.


ப்ளேட்டோ எழுதி வைத்ததைப் பலரும் கற்பனை என்றே கூறி வந்தார்கள்.
ஆனால் அவர் சொல்லும் காலக்கட்டத்தில்
அட்லாண்டிக் கடலில் கடல் மட்டம் உயர்ந்தும்,
பூகம்பங்களால் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்ட சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்பதை
ஹான்காக் போன்றவர்கள் ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அட்லாண்டிக் கடலில் கடல் மட்டம் அதிகமாக உயர்ந்திருக்கக் கூடிய சாத்தியம் இருக்கிறது என்று தெரியவே,
அட்லாண்டிஸ் குறித்த கதைகள் உண்மையே, கற்பனையல்ல என்று புலனாகிறது.


1669 ஆம் ஆண்டு வரையப்பட்ட அட்லாண்டிஸ் அமைப்பை இந்தப் படத்தில் காணலாம். 


இதில் தற்காலத்திய வரை படங்களைப் போலல்லாமல், வடக்கு- தெற்கு மாறி இருக்கிறது.
அமெரிக்காவுக்கும், ஆஃப்ரிக்காவுக்கும் நடுவில் அட்லாண்டிஸ் காட்டப்பட்டுள்ளது.

இந்த அமைப்பில் இருக்கும் கடல் பகுதியை இந்தப் படத்தில் காணலாம்.நடுவில் இருப்பது அட்லாண்டிக் கடல்.
1669 ஆம் ஆண்டு வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள பகுதியை வட்டத்தில் காணலாம்.
இந்தக் கடல் பகுதியில் மலைத் தொடர் தெரிகிறது (அம்புக் குறி)


இந்த மலைத்தொடர் இரண்டு பூமித்தட்டுக்கள் சேரும் இடமாகும்.
பூமித்தட்டுக்களின் அழுத்தத்தால் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கும்.
அந்த இடத்தில் கடலுக்கு மேல் நிலப்பரப்பு இருந்திருந்தால்,
அங்கு ஏற்பட்டிருக்ககூடிய பூகம்பத்தாலும்,
11000 ஆண்டுகளுக்கு முன் அட்லாண்டிக் கடல் பகுதியில் இருந்த 
கடல் மட்ட உயர்வாலும்,
அந்த நாடு ஒரே நாளில் கடலுக்குள் மூழ்கியிருக்ககூடிய சாத்தியம் இருக்கிறது.


அதற்குப் பிறகும் கடந்த 11,000 வருடங்களில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பூமித்தட்டு உராய்வால்,
முழுகிய பகுதி அடையாளம் தெரியாமல் மறைந்திருக்ககூடிய சாத்தியம் இருக்கிறது.
அப்படி ஒரு பகுதி இருந்தது என்று ப்ளேட்டோ அவர்கள் எழுதிய நூல் ஆதாரம் இருக்கிறது.
முழுகியிருக்ககூடிய சாத்தியம் இருக்கிறது என்று ஆராய்ச்சி ஆதாரம் இருக்கிறது.


அது போலவே இந்தியக் கடலில் தென்னன் தேசம் இருந்த நாடுகள் இருந்தன என்பதற்குத்
தமிழில் ஒரு நூல் அல்ல, பல நூல் ஆதாரங்கள் இருக்கின்றன.
அங்கும் கடல் மட்டம், நிலநடுக்கம் போன்றவற்றால் அடையாளம் தெரியாமல்
கடலுக்குள் முழுகியிருக்ககூடிய சாத்தியம் இருக்கிறது என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது.


இன்றைக்கு மாலத்தீவுகள் என்று சொல்லும் பகுதியானது முழுகிய பகுதியின் எச்சமே.
அந்தத் தீவுகள் கடல் மட்டத்திற்கு மேல் அதிகபட்சம் 5 அடி உயரமே உள்ளன.
அதிலும் குளிர் காலத்தில் கடல் நீர் மட்டம் உயருகிறதாம்.
பசிஃபிக் கடல் வரை பரந்துள்ள இந்தியக் கடல்
ஒரு குளியல் தொட்டி போல இருக்கிறதாம்.
இந்தியக் கடலின் மீது பூமத்திய ரேகை செல்கிறது.
அதனால் கடலின் மத்திய பாகத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும்.
அந்த வெப்பத்தால் காற்றில் ஏற்படும் அழுத்த மாற்றங்கள் பசிபிக் கடல் வரை செல்கிறது.
அதன் விளைவாகக் கடல் மட்டத்திலும், கடலுக்குள்ளும் இருக்கும் நீரின் வெப்ப நிலையில் மாற்றம் வருகிறது.
கடலுக்கு மேல் உண்டாகும் காற்று ஓட்டங்களும்,
கடலுக்குள் ஏற்படும் நீரோட்டங்களும் கடல் மட்டத்தில் மாற்றத்தை உண்டு பண்ணுகின்றன.
இதனால் குளிர் காலத்தில் கடல் மட்டம் உயருகிறது என்கிறார்கள்.இங்கு இந்தப் படத்தில் இந்தியக் கடலில்
கடல் மட்டத்துக்கு மேல் இருந்திருக்கூடிய பகுதி என்று ஆராய்ச்சியாளர்கள்
சொல்லும் இடங்களைக் காண்போம்.


அம்புக் குறி காட்டுவது குமரி மலை.
இந்தியத் தென் கடலோரப்பகுதியில் சிவப்புப் புள்ளியாக இருப்பது கவாடபுரமாகும்.
இது முழுகி விட்டது.

குமரி மலையில் கடல் மட்டத்துக்கு மேலே தீவுகளாகத் தெரிவன
லட்சத் தீவுகளும், மாலத்தீவுகளும் ஆகும்.
இவை சிறிய வட்டத்துக்குள் காட்டப்பட்டுள்ளன.
கடல் மட்டம் உயர்வதற்கு முன்னால்
இவை தொடர்ச்சியாகவும், நிலப்பகுதிகளைக் கொண்டும் இருந்திருக்க வேண்டும்.


இந்தப் படத்தில் ஆஃப்ரிக்காவுக்குப் பக்கத்தில் உள்ள மடகாஸ்கர் தீவுக்கருகே
ஒரு பெரிய வட்டம் காட்டப்பட்டுள்ளது.
அந்தக் பகுதி கடலுக்குள் இருக்கும் ஒரு பீடபூமி என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இதை ‘மாஸ்கரேன் பீடபூமி (Mascarene plateau ) என்கிறார்கள்.
வடக்கு- தெற்காக இதன் நீளம் சுமார் 2000 கி.மீ இருக்கிறது.
ஒப்பீட்டுக்குச் சொல்வதென்றால் தற்போதைய இந்தியாவின் நீளம் 3,214 கி.மீ தான்.
இந்தப் பீடபூமி பரப்பளவில் தமிழ் நாட்டின் அளவு இருக்கிறது.
இதன் பரப்பளவு 1,15,000 சதுர கி,மீ.
இதை ஆராய்ந்தபோது இது மிகப்பழமையான நிலப்பரப்பு என்று தெரியவந்துள்ளது.
ஆனால் 6000 வருடங்களுக்கு முன் இது கடலுக்குள் மூழ்கி தற்போதைய அமைப்பை எட்டியிருக்கிறது.
தமிழ் நூல்களின்படி 2-ஆம் ஊழி 5500 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்பது நினைவு கூறத்தக்கது.


இந்தப் பகுதியை ஒட்டி மாலத்தீவு போன்றவை 
மலைப் பிரதேசங்களாக 
தற்போதைய மேற்கிந்தியா வரை பரவி இருந்திருக்கிறது.

இந்தப் படத்தில் இந்தியக் கடலுக்குள் உயரமாக இருந்த நிலப்பகுதிகள் காட்டப்பட்டுள்ளன.
படத்தில் கருப்பு வட்டத்தில் இருப்பது மாஸ்கரேன் பீடபூமிப் பகுதி.
குமரி மலையும், 90 டிகிரி மலையும் இரு நீள் வட்டங்களில் காட்டப்பட்டுள்ளன.
அம்புக் குறி காட்டுவது கடல் நடுவில் உள்ள உயர்ந்த இடம்.
அங்கு அழுத்தம் காரணமாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
அத்துடன், கடல் மட்ட உயர்வும், சுனாமிக் கொந்தளிப்பும் சேர்ந்து கொண்டால்
அது அழிந்திருக்கும் என்பது சாத்தியமே.


கடலுக்குள் அழிந்த நிலங்களில் ஒரு ஒற்றுமை இருக்கிறது.
அட்லாண்டிஸ் நகரம் பூமித்தட்டு சேரும் இடத்தில் இருக்கிறது.
அதேபோல், மாஸ்கரேன் பீடபூமியும் பூமித்தட்டுகள் சேரும் இடத்தில் இருக்கிறது.
அதை ஒட்டிய குமரி மலையும், பூமித்தட்டை ஒட்டியே இருக்கிறது.

இந்தப் படத்தில் அதைக் காணலாம்.பச்சை நிறத்தில் உள்ள வட்டங்கள் மாஸ்கரேன் பீடபூமி, குமரி மலைப் பகுதிகள்.
இவற்றுக்கிடையே சிகப்பு நிறக்கோடு பூமித்தட்டு உராயும் இடத்தைக் காட்டுகின்றன.
அந்த உராயும் இடம் என்றுமே நில நடுக்க அபாயம் கொண்டது.
அந்த இடத்தில் பூமிதட்டுகள் நெடுகிலும் ஒன்றன் கீழ் உராய்ந்து இறங்கி விட்டால்,
ஒரே நாளில் அந்தப் பகுதிகள் எல்லாம் கடலுக்குள் முழுகி விடமுடியும்.
அவற்றுள் மாஸ்கரேன் பீடபூமி, 6000 ஆண்டுகளுக்கு முன் வரை
நீர் மட்டத்துக்கு மேல் இருந்திருக்கிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. .
அறிவியல் காட்டும் அந்தக் காலக் கட்டம்,
தமிழ் நூல்கள் கூறும் 2-ஆம் ஊழியை ஒத்திருக்கிறது.


அந்த ஊழியில் உள்ளடங்கி இருந்த குமரி மலையின் வட பாகம் தப்பியிருக்கவே,
தப்பித்த மக்கள் அங்கிருந்த கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு
பாண்டியனது கொடையின் கீழ் வாழ்ந்திருக்கிறார்கள்.


அதற்கு முன் முதல் ஊழியில் 90 டிகிரி மலைப் பகுதி,
இந்திய பர்மா பூமித்தட்டு எல்லைகளின் மீது இருக்கிறது.
அங்கு ஏற்படும் உராய்வு, நிலநடுக்கம்,
மற்றும் இந்தோனேசிய நிலநடுக்கத்தின் எதிரொலியான
சுனாமி போன்றவை காரணமாக
முதல் ஊழியின் போதும், 2-ஆம் ஊழியின் போதும் அழிந்து போயிருக்கிறது.

இந்தியக் கடல் பகுதிகளை ஆராய்ந்தால், ஆங்காங்கே காணப்படும் பகுதிகளை இந்தப் படத்தில் காணலாம்.
சிவப்புக் கோட்டுக்குள் இருக்கும் நிலங்கள் கடல் மட்டத்துக்கு மேலே இருந்திருக்ககூடியவை.
இந்தியாவின் மேற்குக் கடற்கரையை ஒட்டி வெண்மையாகத் தெரியும் இடங்கள் வரை
இந்தியாவின் எல்லை இருந்திருக்கிறது.


இந்தியக் கடல் பகுதியில் கபாடபுரம் முதல் தென் மதுரை வரை
பச்சை நிறக்கோட்டால் காட்டப்பட்டுள்ளது.
அந்த தூரமே 700 காவதம் அல்லது 7640 கி.மீ. ஆகும்.
இதற்கு இடைப்பட்ட தூரத்தில் இந்தியக் கடல் பகுதியில் 
தெங்க நாடு, குணகரை நாடு, மதுரை என ஏழேழ் 49 நாடுகள் இருந்திருக்கின்றன.
அவை அனைத்தும் 2-ஆம் கடல் கோளில் முழுகி விட்டன என்பதே 
தமிழ் நூல்கள் தரும் செய்தி.
15 கருத்துகள்:

 1. Dear Mam,
  Was the 90 degree mountain, Meru or is it somewhere else.

  http://www.abovetopsecret.com/forum/thread678086/pg2

  In the above link, members were discussing about the lost continents, saying that there is no land mass under the Indian ocean.

  One member even suppose that Tamil could have originated around Indonesia(Sundaland).

  I remember reading that both Atlantis and Lemuria co existed for a particular period of time. I think people confuse the lost continents(Lemuria, Atlantis, Mu, sundaland etc) and place them in different different locations.

  Some mystics say Lemuria was older than Atlantis, it could have been that Kumari Kandam
  where the 1st Tamil sangam established was remnants of much vaster Lemuria which may have been destroyed long before.

  I remember reading these at various sources, the time period varies from 30,000 years to 70,000 years.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 41000 ஆண்டுகட்கு ஒருமுறை பூமிப்பந்தின் வட துருவத்தில் ஏற்படும் 23.5 பாகை விலகல் 20500 ஆண்டுகளில் நேராகிப் பின் தென் துருவம் 23.5 பாகை விலகிச்சென்றுவிடுகிறது. இப்படிப்பட்ட தலையாட்டம் கடுமையான பனி யுகச் சுழற்சியை ஏற்படுத்துகிறது. 300 அடி கடல் ஏறி இறங்குகிறது. மீண்டும் 30000 ஆண்டுகளில் தமிழன் தென்னாடு மேலேழும்பலாம். காண யார் இருப்பாரோ?

   நீக்கு
  2. தென்னாடு எழும்புவது இருக்கட்டும். முந்தின முழுகலின் தொடர்ச்சி இன்னும் முடியவில்லை. நீங்கள் சொல்லும் பாகை விலகல் என்பது உண்மையில் பூமி அச்சின் சாய்மானம் ஆகும். இந்த சாய்மானத்தினால், மகர ரேகை (சூரியனது அதிக பட்ச தென் திசைப் பயணம்) இன்னும் மூன்று பாகைகள் தெற்கு நோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. இதன் காரணமாக அண்டார்டிகா பகுதியில் வெப்பம் கூடிக் கொண்டிருக்கிறது. அங்கு ஏற்கெனவே பனிப் பாறைகள் உடைய ஆரம்பித்து விட்டன என்று சென்ற மாதம் செய்திகள் வந்தன. அண்டார்டிகா பனிப் பாறைகள் உடைந்து கடலில் மிதக்க ஆரம்பித்தால், கடல் மட்டம் உயர்ந்து, கிழக்கு ஆப்பிரிக்கா, மாலத்தீவுகள் என்று ஆரம்பித்து, இந்தியாவின் தென்முனை, மேற்குக்கடலோரப் பகுதிகள் கொண்ட கேரளா, கோவா ஆகியவை முழுகக்கூடிய அபாயம் இருக்கிறது. இந்த நூற்றாண்டுக்குள்ளேயே இது நடக்கும் சாத்தியக்கூறு இருக்கிறது. இன்னும் முன்னூறு ஆண்டுகள் முதல் 1000 ஆண்டுகள் வரை இந்த நிலை தொடரப் போகிறது. அதன் ஆரம்பத்தை நம் வாழ்நாளிலேயே பார்க்கும் சாத்தியம் இருக்கிறது. நம் பேரப்பிள்ளைகள் காலத்தில் கண்டிப்பாகப் பார்க்கப்படும். பெரும் பாறைகள் திடீரென உடைந்து கடலில் முழுகினால், பாண்டியன் கண்ட 3 ஆம் ஊழி போல திடீர் கடல் வெள்ளம் ஏற்படும்.

   நீக்கு
 2. Dear Mr Chalam.

  I am in the process of preparing my next article of this series. After posting it I will reply to all your comments. For the time being, I would say that for most of your questions the answers are already there in the series. For some, the answers will be known in future articles.

  பதிலளிநீக்கு
 3. Dear Jayasree Mam,
  That's right, I will be re reading the series again so it would become much more clearer for me.

  பதிலளிநீக்கு
 4. @ Chalam.

  As I said in a previous comment, there is no evidence to call a lost land as Lemuria but there is evidence to call Thennan desam or Shaka dweepa.
  Indian ocean has the missing link in the spread of mankind in the last 1 lakh years from Africa to India.

  More will come in articles on genetic revelations.

  பதிலளிநீக்கு
 5. You mean to say that mankind spread from Africa (via India also) throughout the rest of the world. Is that what you are trying to emphasize what the westerns researchers had evolved a theory? If so, then we know that change of DNA takes place atleast 1 Lakh years of time as per science. But, there is no resemblance between people of Africa and rest of the people around the world. How do you explain it? The facial features, the body structure, bone shape has no link with the existing population of different country men. There might be one or two instances matching of DNA with the earlier homosapiens around 50,000 years back which should not be taken into account to come to conclusion.

  பதிலளிநீக்கு
 6. @ பெயரில்லா

  There is a misconception in your understanding of physiological features. The genetic material decides the continuity of a lineage whereas the physiological features vary for the same genetic lineage. For the children of same parents, the phenotype will vary while the genotype remains the same. That is why scientists of today have discarded the comparison of phenotype and have zeroed in on genotype.

  There are umpteen articles in the internet on this topic. To mention a few, the Mongol features have originated only in India according to genetic studies. Even as far back as 3000 years ago, Austroloid, Negroid and Caucasian featured people have co existed in Tamil nadu as found out from an excavation from a grave. I will writing them in a future article in this series. An excavation in Siberia showed a man sharing similar gene type with people of Australia. The dating of the remains of this person puts at 40,000 years ago! The movement of man as indicated by genetics tallies with archeology and inputs from none other than Indian texts! I think you have not read the entire series of this site so far. You will know when you read them patiently. 40+ articles are yet to be posted in which I will be giving the early connection on the basis of sea level studies and Indian texts.

  You will be surprised to see the exactly African look of none other than a Chidambaram Dheekshitar from a portrait of early 20th century. See this link

  http://bharatkalyan97.blogspot.com/2011/07/chidambaram-temple-podu-dikshitars.html#!/2011/07/chidambaram-temple-podu-dikshitars.html


  On African connection, East Africans migrated westward about 1 lakh years ago.
  The Sunda land (present Indonesia) was Shaka dweepa of olden times where the previous civilization, whom we call as Daksha Prajapthi existed. The eruption of Mount Toba, Indonesia about 50,000 years ago is linked to the destruction by fire which was personified as destruction of Tripurasura by Lord Shiva.

  This resulted a lull in population which spilled to locations in the Indian ocean which we call as Kumari Khandam. The lull continued for 28,800 years after which a renewal of growth of population happened due to favorable climatic conditions in the South, Shiva, Muruga, Pandyas etc came up in this period in visible areas connected to 2 ridges which are now submerged in the Indian ocean.

  This coincided with another branch entering India via Saraswathy river which was flowing as a gigantic river then (13,000 years ago). This branch came to be called as Manu.

  In the immediate context, from the 82nd article onwards I will be taking up the entry of Manu through saraswathy on the basis of climatic, sea level and vegetation aspects in and around present day India at that time.

  One last word, without reading the entire series so far, one may not get adequate answers.

  பதிலளிநீக்கு
 7. I will look into your reply once. Somehow, I am not convinced by the so called geno fact as it just conveys that India is a mix of various races and sects only which pains me. Good effort. Looking forward for future articles. Can't help with my early commenting before finishing your work.

  பதிலளிநீக்கு
 8. //I am not convinced by the so called geno fact//

  Talk to a scientist or even a doctor. He will tell you.

  //Races and sects // what are races?

  Read the 8th article in this series.

  In addition, read the articles in the links given below to know the genetic studies that identify India as an early incubator. My series brings in internal evidence from texts to support them.

  http://www.archaeologyonline.net/artifacts/genetics-aryan-debate.html

  http://www.openthemagazine.com/article/living/the-story-of-our-origins

  http://www.openthemagazine.com/article/living/the-science-of-dna-testing

  பதிலளிநீக்கு
 9. The links are self-explanatory. Thank you for sharing. You look short tempered. I am sorry if I sounded rude in my earlier comments.

  பதிலளிநீக்கு
 10. //You look short tempered. //

  If so, it is unintentional.

  Each article in this series is connected. I request people to go through all articles, or just type the word in the search box to find out whether the issue they want to ask is already discussed. It does take my time to explain them again in the comment box. Perhaps that betrays an impatience which you call as short temper.

  பதிலளிநீக்கு
 11. I am eagerly waiting for your next article. It has been over a month and a half since your last post. I also request you to continue with your original series which you have left off after "ஆதி சிவமா அல்லது அறியாமை தந்த பரிசா?"
  I would also love to see your findings/articles being published in the form of a doctoral study so that it can reach the main stream historical studies happening internationally

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Sure sure. I am coming back to this blog soon. Sorry for making you all wait.

   In the meantime, I request you to read my articles in English written for international scholars on the Indus issues. One link is
   http://frontiers-of-anthropology.blogspot.in/search/label/Jayasree%20Saranathan

   Another on the recent excavations in Sriperumbudur in this link

   http://jayasreesaranathan.blogspot.in/2012/03/vedic-kurma-excavated-near.html

   நீக்கு
 12. I measured the distance approximately using Google maps distance tool. The distance between Kapadapuram and Thenmadurai roughly is around 4000 km or less. So to satisfy a distance of 7600 km Thenmadurai should have been farther down towards east below Australia or ... a weird possibility - in the middle of what is now Antarctica. Which, is not very strange if one thinks about it, many thousand years ago, Antartica was a much warmer place
  and was capable of supporting a civilization according to scientific research.
  Interesting. (Remember Graham Hancock talks about a certain Peri Reis map in his book
  The Finger Prints of the Gods)

  பதிலளிநீக்கு