திங்கள், 19 நவம்பர், 2012

118. டிடிகாகா புல்லும், பத்தமடை பாயும்.

 

டிடிகாகா ஏரியின் விசேஷமே அங்கு வளரும் கோரைப் புல்தான். 


http://www.environmentalgraffiti.com/lakes-and-rivers/news-lake-titicaca?image=23#QZOKWuSSLLeziSPc.99

 

அந்தப் புல்லைக் கொண்டு ஏரியில் தனித்தனி தீவுகளை உருவாக்குகிறார்கள் இன்கா மக்கள். அப்படி உருவாக்கப்பட்ட தீவுகளை மேலேயுள்ள படத்தில் காண்கிறீர்கள். அங்குள்ள மக்களது வாழ்க்கை இந்த கோரைப் புற்களைச் சுற்றியிருக்கிறது. எல்லாவிதமான பொருட்களையும் அவர்கள் இந்தக் கோரைப் புற்களைக் கொண்டே உண்டாக்குகிறார்கள்.



 


வீடுகள், படகுகள் என்று வாழ்வாதர அமைப்புகள் அனைத்தும் இந்தப் புற்களிலிருந்தே உருவாக்குகிறார்கள். ஏரிக்குள் இருக்கும் இந்த வாழ்க்கையை விட்டு அவர்கள் வெளியே வருவதில்லை. கடலில் இருக்கும் தீவுகளில் வசிப்பது போலவும், அந்த்த் தீவுகளில் காணப்படும் புற்களைக் கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்வது போலவும் இவர்கள் இந்த ஏரியில் இன்று வரை வாழ்கிறார்கள். இவர்கள் என்று வந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்த ஏரிக்குள் புதையுண்ட அமைப்புகள் இருக்கின்றன என்று தெரியவந்துள்ளது. அவற்றை இன்னும் ஆராயவில்லை. இந்தப் புதையுண்ட அமைப்புகளைக் கொண்டு இந்த மக்களின் பழமை இன்னும் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளது. பல் வேறு ஆராய்ச்சிகளின் மூலம், இன்றைக்கு 9500 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு மக்கள் இனம் குடியேறி இருக்கிறது என்று தெரியவந்துள்ளது.


இங்கு இந்தப் புல் வகையைப் பற்றி ஏன் சொல்கிறேன் என்றால், இந்தப் புல் வகை தென் அமெரிக்காவில் வேறு எங்கும் காணப்படுவதில்லை. இது டிடிகாகா ஏரியில் மட்டும் காணப்படுகிறது. பறவைகள், காற்று மூலமாகவும் இந்தப் புல் வகை இந்த ஏரிக்கு வரவில்லை என்பதையும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளார்கள். டிடிகாகா மக்கள் இந்தப் புல்லைச் சாகுபடி செய்வது போல வளர்த்து வருகிறார்கள். அதைக் கொண்டு பாரம்பரியமாகப் பொருட்களைச் செய்து வருகிறார்கள். இந்த இடத்தை விட்டால், இதற்கு அருகாமையில் எங்கு இந்தப் புல் வகை காணப்படுகிறது என்றால், அது ஈஸ்டர் தீவுகளில்தான்! டிடிகாகாவையும், ஈஸ்டர் தீவையும் தவிர வேறு எங்கும் இந்தப் புல் வகை காணப்படுவதில்லை.


டொடோரா புல் (TOTORA) என்றழைக்கப்படும் இந்தப் புல் வகை சுமார் 30,000 வருடங்களாகவே ஈஸ்டர் தீவில் விளைந்து வந்துள்ளது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. http://en.wikipedia.org/wiki/Totora_%28plant%29


ஈஸ்டர் தீவிலிருந்து 4000 கி.மீ தொலைவில் ஆண்டிஸ் மலையில் அமைந்துள்ள டிடிகாகா ஏரியில் இந்தப் புல் வகை காணப்படுகிறது என்றால், அது ஈஸ்டர் தீவிலிருந்தே டிடிகாகாவுக்குச் சென்றிருக்க வேண்டும். இந்தத் தொலைவை கடலில் கடப்பது கடினம், ஏனெனில் நடுவில் தங்கி இளைப்பாற ஒரு நிலப்பகுதியும் கிடையாது. கடல் மட்ட ஆராய்ச்சிகளின் மூலமும், இந்தப் பகுதியில் சமீப பல ஆயிரம் வருடங்களில் நில அமைப்புகள் இல்லை என்றும் தெரிகிறது. எனவே இந்தப் புல் வகை எப்படி டிடிகாகா சென்றது என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு புதிரே.


ஆனால் நாஸ்கல் ரிட்ஜ் என்பது ஒரு சுரங்க வழியைக் கொடுத்திருந்தால், இந்தப் புல் வகையை பச்சகாமக், எடுத்துச் சென்று அங்கிருந்து மலைக் குகை வழியாக டிடிகாகா வரை கொண்டு சென்றிருக்க முடியும். அந்தச் சுரங்க வழியாக ஏன் மக்கள் சென்றார்கள் என்றால், ஈஸ்டர் தீவுக்கருகில் அடிக்கடி ஏற்படும் எரிமலை வெடிப்பு, சுனாமி, நில நடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்ட பொழுது, மக்கள் சுரங்க வழியில் தப்பிச் சென்றிருக்கின்றனர். கூடவே தங்க வாழ்வாதாரமான டொடோரா புற்செடிகளையும் எடுத்துச் சென்றிருக்கின்றனர்.


இப்படிப்பட்ட புல் வகைகளைக் கொண்டு பொருட்களைத் தயாரிக்கும் கலை உலகிலேயே தென் கிழக்கு ஆசியப் பகுதிகளில்தான் கணப்படுகின்றன. இந்தோனேசியப் பகுதிகளில் ஆரம்பித்து, பாலினேசியா வரை இந்தக் கலை பாரம்பரியமாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சமோவா என்னும் பாலினேசிய தீவுக் கூட்டங்களில் வசிக்கும் மக்களது வாழ்வில் புற்களைக் கொண்டு உருவாக்கும் பாய்களும், தோகை எனப்படும் ஆடைகளும் முக்கியமானவை. பத்தமடை பாய்களை நினைவுறுத்தும் இந்தப் பாய்களை உருவாக்கும் இந்த மக்களில் உயர் பதவிகளில் இருப்போருக்குப் பத்தமடை என்னும் பெயரை ஒத்து ஃபாமடை (Fa'amatai) என்றே பெயர். மடை என்பதே ஒரு மரியாதைக்குரிய பட்டம் ஆகும். இந்த மக்களது வாழ்க்கை முறையைக் கவனிக்கும் போது, பத்தமடைப் பாய் முடையும் பாரம்பரியம் இவர்கள் இருக்கும் தென் கடல் வரை செல்கிறது என்று தெரிகிறது. அந்த விவரங்களைக் காண்போம்.


சமோவா என்னும் தீவுக் கூட்டங்களில் வாழும் இந்த மக்களில் 'ஃபாமடை' பட்டம் பெற்றவர்கள் தலமைப் பதவியில் இருப்பவனுக்கும், மக்களுக்கும் பாலமாக இருப்பவர்கள். தலைவன் கூறுவதை மக்களுக்குச் சொல்பவர்கள். பேச்சு வன்மை மிக்கவர்கள். தலைவனது வம்சாவளியையும், பரம்பரைப் பெருமையையும் எல்லோருக்கும் சொல்பவர்கள். பேச்சாளர்கள் என்றழைக்கப்படும் இவர்கள் செவிவழியாகவே எல்லாவற்றையும் கற்று பிறருக்குச் சொல்பவர்கள். பந்தனம் (pandanus ) என்னும் ஒரு வகைப் புல்லால் நெய்யப்பட்ட பாயை ஆடையாக் இவர்கள் உடுப்பார்கள். அந்தப் பாயை 'இ தோகை' ('ie toga) என்கிறார்கள்.  இந்தப் பெயர்களெல்லாம் தமிழ்ப் பெயர்களாக இருப்பதைக் காணலாம்.



இ தோகா எனப்ப்டும் அந்தப் பாய் ஆடை

http://en.wikipedia.org/wiki/File:Samoa_traditional_mat.jpg


கீழ்க் காணும் பட்த்தில் நடுவில் இருப்பவர் பேச்சாளியான ஃபாமடை. அவர் தோகா உடல் அணிந்துள்ளார்.


அவரது தோளில் ஒரு கொம்பு போன்ற அமைப்பு தென் படுகிறது.

http://en.wikipedia.org/wiki/File:Three_Samoan_chiefs_including_two_orators_-_unknown_photographer_and_date.jpg

(இந்த இணைப்பைக் க்ளிக் செய்து இப்படத்தை பெரிதாகப் பார்க்கலாம்)


அவரது தோளில் இருக்கும் அந்தப்பொருள் சாமரம் என்றும் கவரி என்றும் நாம் சொல்லும் விசிறி போன்ற பொருள் ஆகும். கோயில்களில் தெய்வத்துக்குச் சாமரம் வீசுவார்கள்.



இந்தப் படத்தில் லக்ஷமணன் கையில் சாமரம் இருப்பதைக் காணலாம்.

அரசர்களுக்கும் சாமரம் வீசுவார்கள். கீழுள்ள படத்தில் சாமோவாவின் பேச்சாளர் அப்படிப்பட்ட சாமரத்தைக் கையில் வைத்துள்ளதைக் காணலாம்.



Exiled orator Lauaki Namulauulu Mamoe

http://en.wikipedia.org/wiki/File:Lauaki_Namulauulu_Mamoe.jpg


100 வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் உள்ள சாமரம் அச்சு அசலாக நம் நாட்டில் இருக்கும் சாமரத்தை ஒத்து இருக்கிறது. இதற்கு இவர்கள் தரும் முக்கியத்துவத்தால், சமோவா என்னும் பெயரே, சாமரம் என்னும் பெயரிலிருந்து உண்டானதோ என்று தோன்றுகிறது.


இந்த மக்களுக்கும் சாமரத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை இவரக்ளுக்கென சமீப காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தச் சின்னத்தில் காணலாம்.



இந்த விவரங்களுடன் தமிழ் மரபில் இருந்து வந்த சில மரபுகளையும் ஒப்பிடுவோம். இவர்களுக்குத் தலைவன் என்பது போல தமிழ் மரபில் அரசர்கள் இருந்தனர். அரசனுடன் கூடவே இருக்கும் பெரு மக்களில் பட்டோலை எழுதுபவனும் இருப்பான். மரப்பட்டைகளால் தயாரிக்கப்பட்ட ஓலைகளில் அரசன் சொல்வதை எழுதுபவன் இவன். சமோவாவின் ஃபாமடையும் அவனது தலைவனுடன் கூடவே இருப்பவனாக இருக்க வேண்டும். தலைவன் சொல்வதை உடனுக்குடன் பிறருக்குத் தெரிவிப்பவன் அவன். அவனே தலைவனுக்குச் சாமரம் வீசி அருகிலேயே இருப்பவனாக இருக்க வேண்டும். தலைவன் அல்லது அரசன் ஆட்சிகள் போன பிறகும், அவனது அடையாளமாகச் சாமரத்தை எப்பொழுதும் ஏந்திக் கொண்டு, பரம்பரைக் கதைகளைச் சொல்லிக் கொண்டும் இவன் இருந்திருகிறான்.


இவன் உடுத்தும் தோகை ஆடையும், ஏந்தும் சாமரமும், இந்த மக்கள் அமரும் பாயும், பந்தனம் (pandanus) என்னும் மரத்தின் இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்தப் பந்தனம் என்னும் மரமே இந்தோனேசியா, பாலினேசியாப் பகுதிகளில் பாய் முடையவும், ஆடை தயாரிக்கவும் பயன் படுகிறது. ஃபாமடை என்று இன்று வழங்கி வரும் சொல்லே பட்டமடை என்று முன்னாளில் சொல்லப்பட்டிருக்கலாம். பந்தன் மரத்தின் பெயரால் பந்தமடை என்றும் சொல்லப்பட்டிருக்கலாம். பத்தமடைப் பாய் நெய்யும் தொழில் நுட்பமும், பந்தன் பாய் நெய்யும் தொழில் நுட்பமும் ஒன்றாக இருக்கிறது.



பந்தன் இலையிலிருந்து பாய் முடையும் டோங்கா நாட்டுப் பெண்மணி.


பட்டமடை என்னும் சொல்லின் மூலத்தை ஆராய்ந்தால் "பட்டமே ஓடை, தூசு, பதவி, வாள், கவர் மாவாம்" என்கிறது சூடாமணி நிகண்டு (11-13) தூசு என்றால் ஆடை என்று பொருள். பட்டம் என்பதற்கு ஆடை என்றும் ஒரு பொருள் என்று தெரிகிறது. மரப்படையிலிருந்து ஆடை நெய்யும் பாங்கை சமோவா போன்ற மக்களிடையே இன்றும் காண்பதால், அதைத் தரும் மரத்தை பட்டம் என்றும் அதுவே நாளடைவில் மருவி பந்தன் என்றும் ஆகியிருகக்கூடும். அங்கெல்லாம் தமிழ் மொழி பேசப்பட்டிருந்தால் இது சாத்தியமே.


தமிழின் தாக்கமே அங்கெல்லாம் இருந்திருக்கிறது என்பதற்கு 'பட்டிகை' என்னும் சொல்லைக் கூறலாம். பட்டிகை என்றால் இடுப்பில் அணியும் கச்சம். பாலினேசிய மக்களும், சமோவா மக்களும் இந்த்ப் பந்தன் மரத்தைலிருந்து தயாரித்த பாய் போன்றவற்றையே இடுப்பில் ஆடையாக அணிந்திருக்கிறார்கள். தோகை போல இருக்கும் ஆடையை இ தோகா என்றும் அழைத்திருக்கிறார்கள். இடுப்பில் கட்டும் அரைஞாண் கயிற்றுக்கும் பட்டிகை என்றே பெயர். இவ்வாறான ஒரே ஒலிக் குறிப்பிலும், ஒரே பொருளிலும் இருக்கும் தமிழ்ச் சொல்லே, அந்த மக்கள் நெய்த இலைகளத் தந்த மரத்துக்கும் பெயராகும் என்பது ஒரு பழைய தொடர்பினைக் காட்டுவதாக உள்ளது.


டிடிகாகா மக்கள் அவற்றை ஆடையாக அணியவில்லை. ஆனால் ஆடையைத் தவிர எல்லா பொருள்களையும் டொடொரா புல்லைக் கொண்டு செய்தார்கள். அந்தப் புல்லை நீரில் ஊற வைத்து பக்குவப்படுத்த வேண்டும். அது போலவே பத்தமடை பாய்களும் புல் வகைச் செடியிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன. நீரில் ஊறவைத்துப் பக்குவப்படுத்தப்படுகின்றன. டிடிகாகா, பத்தமடையைத் தவிர மேற்சொன்னவை எல்லாம் மரத்திலிருந்து எடுக்கப்படுகின்றன.


டிடிகாகாவின் புல் வகை 30,000 வருடங்களாகவே ஈஸ்டர் தீவில் வளர்ந்து வருகின்றன. எனவே பாய் அல்லது உடை நெய்யும் தொழில் நுட்பம் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ஏற்பட்டிருக்க வேண்டும். அந்தப் பகுதியில்தான் முதன் முதலில் ஏற்பட்டிருக்க வேண்டும். அந்தப்பகுதியுடன், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, முழுகின தென்னன் நாடுகள் என்று இந்தியாவுக்கு அருகாமை வரையில் இப்படிப்பட்ட பாய் நெய்யும் கலை வளர்ந்திருக்கிறது.


தென்னன் தேசங்கள் முழுகின போது, அவர்களில் ஒரு பகுதி தாம்ரபரணி ஆற்றங்கரையில் குடியமர்ந்திருக்கிறார்கள். இல்லாவிட்டால், நிலப் பகுதியில் இந்தக் கலை உருவாக சூழ்நிலைகளே இல்லை. கடலுக்கு நடுவிலும், கடல் நீரில் ஊற வைத்தும் இந்த நார்களைத் தயாரித்த மக்கள், புதிய சூழ்நிலையில் வாழ நேரிட்டாலும், அந்தப் பழைய தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வார்கள். டிடிகாகா மக்கள் அப்படித்தான் தங்கள் ஏரிப் பகுதியில் உருவாக்கிக் கொண்டார்கள்.


பத்தமடை என்பதில் உள்ள மடை என்றால் நீர்நிலை என்று அர்த்தம். பத்தம் என்பது பந்தன் என்னும் பெயருடன் ஒத்துப் போகிறது. பந்தன் மரப் பட்டைகளைக் கொண்டு பாய் நெய்த மக்கள், கடல் சூழ்நிலை மாறின போதும், வந்த இடத்தில் கோரைப் புற்களை வளர்த்து பாய் நெய்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். அல்லது ஃபாமடை என்று மேலே பார்த்தோமே அந்த மக்களினத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. எது எப்படியானாலும், பத்தடைப் பாயைத் தயாரிக்கும் மக்கள் தங்களை இஸ்லாமியர்கள் என்று அடையாளம் சொல்லியும், பாரத கலாசாரத்திலிருந்து தனிப்பட்டும் இருந்தால் அது சரியல்ல. அவர்களது தொழில் நுட்பம் இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லை என்று சொல்லலாம். ஆனால் அதன் மூலம் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இருக்கிறது. அங்கெல்லாம் வேத கலாசாரமும், தமிழ்- சமஸ்க்ருத உறவாடலும் இருந்திருக்கின்றன. அவற்றுக்கப்பால் இவர்களுக்கும், ஏன் பாரதத்தில் வேறு எவருக்குமே புதிய அடையாளங்கள் கிடையாது.


பாய் நெய்யும் தொழில் நுட்பத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் மற்றொரு உண்மை, இந்தியாவில் ஏற்பட்ட இடப்பெயர்வுகளும், கலாசாரமும் தெற்கு, தென் கிழக்கு ஆசியப் பகுதிகளுடன் ஏற்பட்டது. ஐரோப்பாவுடனோ, அல்லது ஐரோப்பாவிலிருந்தோ அல்ல. அது போல தமிழ்- சமஸ்க்ருதச் சொல்லாட்சிகள் ஒருங்கிணைந்து தெற்கு, தென் கிழக்கு ஆசியாவில் தான் காணப்பட்டன என்பதை அடுத்த கட்டுரையில் காண்போம்.

 

3 கருத்துகள்:

  1. Madam

    The people in Samona or Peru look more like tribal habitants. It seems they had not carried with them the scientific advancements of Thennan desam or Sunaland rather took with them what they were practising for living during their migration. If so, was there may people with no access to civilised advancements of Thennan desam or Ancient Indian kings. Even now there are many people living in groups in Andaman, Vietnam, ASEAN, even in Tamil Nadu with limited or no access to outside world. Where these people neglected since ancient times as they seem to not fall in any of four or seven varnas and they also live as coexisting groups

    பதிலளிநீக்கு
  2. I think you have not read other articles following this article. You will read in them more such instances of similarity or sharing of a common past. This is envisaged in Genetic studies. only we the Tamils are in a position to extract the proofs from Tamil texts and culture. That is what I am doing here.

    3500 years BP is the last cut off year when Thennan and his subjects managed to enter the present day South India. At the same time the Polynesian people's culture had started in the Pacific ocean. They including Samoans, and some in Indonesia continue some habits and culture which are strikingly similar to old Tamil customs.

    The separation at that time had made them lose touch with continuing that culture. In addition, Christian evangelists had changed lot of their culture. But if you take a genuine look at their culture, the signs of an old common culture are visible, though most things had vanished due to non-contact and evangelism.

    In the article in the following link, I have shown some of the Indonesian people presumed to have gone from Thennan desam after the deluge. There are more articles to come in the present series. I am hopeful of continuing them after Pongal.

    http://jayasreesaranathan.blogspot.in/2011/11/sundaland-was-location-of-tripura.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. I am happy to note that further support for my line of thinking has come from today's report on genetic study of the Australian people. Please read the article in this link.

      http://www.dailymail.co.uk/sciencetech/article-2262843/Migrants-India-settled-Australia-4-000-years-ago-Captain-Cooks-arrival-took-dingos-them.html

      It says that Indians went to Australia 4000 years ago and suggested that the sudden rise of plant processing, stone tool technologies and microliths that appeared in Australia around that time were due to the introduction of the same by Indians at that time. The foreign researchers split their heads on how the Indians could have gone over there crossing a long route across the Indian Ocean.

      BUT WE from TAMILNADU having the knowledge of TAMIL'S PAST through SANGAM TEXTS know better how this was possible. Indians did not go from today's boundary of South India. At that time (4000 years BP)Thennan Desam was in existence in the Indian Ocean! The last deluge happened 3500 years ago which I have written in several places in this series. From Adiyaarkku nallar's commentary on Silappadhikaram, we know 7 X 7 = 49 lands of Thennan desam were submerged in that deluge! The survivors from that deluge scattered on all directions, one group having gone to Australia, another to Polyneisian islands, some to Indonesia and yet another had landed in South India along with Pandyna king and his தொல் குடி aayars (Kali-th-thogai). From Polynesia, one group had gone to South American Andes and landed in Titicaca and started Inca civilization.

      The Indian Ocean had 49 Tamil lands before the last deluge 3500 years ago. Going by their names (refer 59th article) almost all of them were close to sea. In other words they were scattered islands in the Indian ocean similar to how Polynesian islands look at present.

      The terrible shattering effect that this deluge had on the ancient Tamil people of the 49 lands would have erased many past memories of that ancient culture. But survival modes must have definitely remained at some degree. The skills of labour must have helped them manage their lives and continue thereafter. That is why we see stone works, Lapita pottery and plant processing and mat making suddenly appearing in all the places mentioned above around 3500 to 4000 years ago. All these have resemblance to Indian / Tamil's culture. With this genetic study now proving a mix of Indians with Australians, we get an important proof of our theory which we pick up from Sangam texts and olden Commentators.

      This link to Australia, Polynesia and Indonesia in the Indian ocean offered by the 49 countries of Thennan Desam is known only to us, the Tamil speaking ones. That is why it is my firm opinion that only Tamils and Tamil can unlock the past history of the world. Such being the case, let Tamils not waste their time and brains by listening to or going after Dravidian Chauvinists and instead look for the roots in the Indian Ocean, and not in the Indus!

      நீக்கு