வெள்ளி, 20 மே, 2011

54. கால்டுவெல் கண்டுபிடித்த திராவிடம்.
திராவிடர் என்பவர் யார் என்று மனுஸ்ம்ருதியில் சொல்லப்பட்டிருந்தாலும், 
திராவிடர்கள் என்பவர்கள் மஹாபாரதப் போரில் இரண்டு பக்கமும் நின்று போரிட்டனர் என்று மஹாபாரதம் பல இடங்களிலும் சொல்லியிருந்தாலும், 
திராவிட நாடு என்ற ஒரு நாட்டை, சேர, சோழ, பாண்டியர் 
அல்லாத ஒரு இடமாகப் பல இடங்களிலும் மஹாபாரதம் சொல்லியிருந்தாலும், 
இவற்றை எல்லாம்  கருத்தில் கொள்ளாமல், 
இவற்றை எல்லாம் ஆராயாமல், 
ஒரு வேத தத்துவப் புத்தகத்தில் ஒரு விளக்கம் அளிப்பதற்காக, 
ஒரு வேத வித்தகர் திராவிட பாஷையில் உள்ள சொற்கள் 
என்று சொன்ன ஐந்து சொற்கள், 
தமிழில் வழங்கும் சொற்களாக இருக்கவே, 
அதன் அடிப்படையில், தமிழ் மொழியும் திராவிட மொழியும் ஒன்று 
என்கருத்தை, 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 
ஆங்கிலேய மிஷனரியான ராபர்ட் கால்ட்வெல் விதைத்தார். 


                                 கால்டுவெல்


அதைத் தொடர்ந்து, சிந்து சமவெளிப் பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடக்கவே, 
இவை இரண்டையும் ஆரியப் படையெடுப்புக் கொள்கைவாதிகள் முடிச்சு போட்டனர். 
சிந்து சமவெளியில் வாழ்ந்த திராவிடர்கள் தமிழர்கள் என்றும், 
அவர்களை ஆரியர்கள் விரட்டி விடவே தென்னிந்தியாவுக்கு வந்து குடியேறினர் 
என்றும் புனைந்தனர். 
தமிழ் நூல்கள் காட்டும் எந்தக் கருத்தையும் அவர்கள் ஆராயவில்லை. 
நம் தமிழ் மக்களோ, மிஷனரி வலையில் விழுந்து 
திராவிடத்தைப் பிடித்துக் கொண்டு, 
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் திராவிடம்,  திராவிடம் என்று பேசி 
நாறடித்து விட்டனர். 
அகில உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவரான  
நொபோரு கராஷிமா அவர்கள், 


இந்தத் திராவிட இயக்கம் சமூக சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம். 
ஆனால் இந்த இயக்கம் அறிவுக்குப் புறம்பானதாகவே இருக்கிறது 
என்று சென்ற வருடம் சொல்லியுள்ளது குறிப்பிடத்தக்கது.  வடமொழியையும், வேதத்தையும் தாக்கும் திராவிடவாதிகள் 
இந்தக் கால்டுவெல் அவர்கள் ஆதாரமாக எடுத்துக் கொண்ட நூல்
தந்திர வார்த்திகா என்னும் மீமாம்சத் தத்துவ உரை நூல் 
என்று அறிந்திருப்பார்களா என்பது சந்தேகமே.
இதை எழுதியவர் கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த
குமாரில பட்டர் என்னும் வேதவித்வான்.
இவர் ஆதி சங்கரர் காலத்தில் வாழ்ந்தவர்.
வேத விவாதங்கள் அதிகம் நடந்த காலம் அது.
அதுவே பௌத்தத்தை வென்று,
வேதக் கருத்துக்களை ஸ்தாபிதம் செய்த காலமும் ஆகும்.அப்படிப்பட்ட காலக்கட்டத்தில் தென்னிந்தியாவில் இருக்கும் காஞ்சிபுரம், 
வேதக் கல்விக்கு ஆதார இடமாக இருந்தது.
வட இந்தியாவில் பீஹாரில் இருந்த  நாளந்தா,
பௌத்தக் கல்விக்கு ஆதாரமாக இருந்தது.
அந்த நாளந்தா பாடசாலை இன்றும் இடிபாடுகளுடன் இருக்கிறது.காஞ்சியில் வேத பாடசாலை இருந்த அடையாளம் இன்று இல்லை.
ஆனால் 1000 ஆண்டுகளுக்கு முன் வரை வேதக் கல்வி பயில
பாரதம் எங்கிலிருந்தும் இருந்து காஞ்சிபுரத்துக்குத்தான் மக்கள் வந்தனர் என்பத
ற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.
அவற்றுள் ஒன்றை பகுதி 49-இல் கண்டோம். (தலகுண்டா கல்வெட்டு)


அப்படி வந்தவர்களுள் ஒருவர் குமாரில பட்டர்.
வர் தமிழர் என்றோ, காஞ்சியைச் சேர்ந்தவர் என்றோ
எந்த ஆதாரமும் இல்லை.
இவர் தன்னைத் திராவிடர் என்றும் அழைத்துக் கொள்ளவில்லை.
ஆனால் காஞ்சி பாட சாலையில் படித்திருக்க வேண்டும்.
அந்தக் காலக் கட்டத்தில் காஞ்சிக்கு வந்து பலரும் படிகக்வே இது சாத்தியம்.


இவர் ஜைமினி ரிஷி அவர்கள் எழுதிய மீமாம்ச சூத்திரங்களுக்கு
ஸபரர் என்பவர் எழுதிய உரைக்கு எழுதிய உரையே
இந்த தந்திர வார்த்திகம் என்பது.
மீமாம்சம் என்பது வேதம் ஒன்றை மட்டுமே ஆதாரமாகக் கொண்டது.
ஒரு கருத்து வேதத்தில் இருந்தால்தான் அதை ஏற்றுக் கொள்பவர்கள் மீமாம்சகர்கள்.
வேதம் அறிந்தவர்கள் சொன்ன அல்லது எழுதிய கருத்துக்களைக் கூட 
ஆதாரமாக எடுத்துக் கொள்ளாதவர்கள் இந்த மீமாம்சகர்கள்.


அந்தச் சூழ்நிலையில் குமாரில பட்டர் ஒரு மாற்றுக் கருத்தை வைத்தார். 
வேதத்தை நன்கு கற்றறிந்த ஒருவர் சொல்லும் வேதக் கருத்தும்,
ஆதாரம் என்று ஒத்துக் கொள்ளத்தக்கது என்று
தந்திரவார்த்திகாவில் வாதிடுகிறார்.
மனு ஸ்ம்ருதி எழுதிய மனுவின் வாக்கை வேத வாக்காக ஏற்றுக் கொள்ளலாம் 
என்று சொல்லுமிடத்தே அவர் இவ்வாறு கூறுகிறார்.இங்குதான் மொழி பற்றிய விவாதங்கள் வருகின்றன.
சமஸ்க்ருதம் என்பது தேவ பாஷை.
வேத ரூபத்தில் இருக்கும் சமஸ்க்ருதம் முற்றிலும் ஒப்புக் கொள்ளத்தக்கது. அதனால் வேதமே பிரமாணம் (ஆதாரம்).
ஆனால் மனித பாஷைகள் அப்படிப்பட்டவை அல்ல.
ஒரு விஷயத்தை ஒரு மனிதன் எப்படிக் கவனித்து,
அதை எப்படி உள்வாங்கி, அதை எப்படி வெளிப்படுத்துகிறானோ,
அது மனித பாஷையாகிறது.
எனவே மனித பாஷையை வேத பாஷையுடன் ஒப்பிடலாகாது
என்பது ஒரு வாதம்.
அதனால் மனித பாஷையில் சொல்லப்படும் வேதக் கருத்து
ஆதாரமாகக் கொள்ளப்பட மாட்டாது
என்று மீமாம்சகர்கள் சொல்லி வந்தார்கள்.


அது ஒப்புக் கொள்ளப்பட்ட முடியாதது என்பது குமாரில பட்டரின் வாதம். 
மனித பாஷையாக இருந்தாலும்
அதன் வாயிலாக ஒரு ஞானி வேதக் கருத்தைச் சொன்னால்
அதுவும் வேதத்தில் சொல்லப்பட்டதற்கு ஒப்பானது
என்று ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதே
என்பது அவர் வாதம்.
மனித பாஷை என்று சொல்லும் பொழுது
அவர் திராவிட பாஷையில் உள்ள சொற்கள் என்று
சில தமிழ்ச் சொற்களை ஆராய்கிறார்.

அவை சோறு, அதர், பாம்பு, மால், வயிறு என்பன.

இந்த வார்த்தைகள் சமஸ்க்ருதத்திலிருந்து வந்தவை என்கிறார்.
சமஸ்க்ருதச் சொற்களது அர்த்தத்தைக் கொண்டும்,
அதே நேரம், அந்தச் சொல்லின் கடை எழுத்தைச் சிறிது மாற்றியும்
இந்தச் சொற்கள் தமிழில் வந்திருக்கின்றன என்கிறார்.
இங்கு தமிழ் என்று சொல்லாமல்
திராவிட பாஷையில் இவ்வாறு இருக்கிறது என்று சொல்லியுள்ளார்.
(இந்தச் சொற்கள் இதே அர்த்தத்தில்
கன்னடம் அல்லது தெலுங்கில் இல்லை.
எனினும் இந்த மொழிகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையது போல இருக்கவே, இந்த மொழிகள் அனைத்துமே திராவிட மொழிகள் என்று சொல்வது பொருந்தும் என்பது கால்டுவெல்லின் கருத்து.)

குமாரில பட்டர் இந்தச் சொற்களைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

சோர என்னும் சமஸ்க்ருதச் சொல் ‘சோர்என்றாகி, சோறு என்று திராவிட பாஷையில் ஆகி விட்டது என்கிறார்.

அதர் என்றால் வழி என்று பொருள்.
இது சமஸ்க்ருதத்தில் துஸ்தர’ (கடப்பதற்குக் கடினமானது)
என்னும் சொல்லிலிருந்து வந்தது என்கிறார்.

பாப என்பது பாபம் என்பதன் ச்மஸ்க்ருத பதம்.
அதனுடன் ஒரு ‘ம்சேர்த்து பாம்பு என்று திராவிட பாஷையில் ஆனது.

மால் என்றால் பெண் என்று சமஸ்க்ருதத்தில் சொல்வார்கள்.
அதன் கடைசியில் ஒரு எழுத்து சேர்த்து ‘மாலா என்றானது.

‘வைரி என்னும் சம்ஸ்க்ருத சொல் எதிரி என்னும் பொருள் கொண்டது.
அதை வயிறு என்கிறார்கள்.
பசியுள்ள மனிதன் தவறான செயல்களில் ஈடுபடுவான்.
அதுவே அவனுக்கு எதிரி.
அதனால் உணவு ஏற்கும் பாகம் வயிறு என்றானது.


இந்த விதமான ஒப்பீடுகள் அந்த நாளில் அமோகமாக நடை பெற்று வந்தன. காஞ்சியில் வேதம் படிக்க வந்தவர்கள், அந்த இடத்து மக்கள் பேசும் மொழியான தமிழைக் கேட்டிருப்பார்கள்.
வேத பாடம் என்பது குறைந்தது 8 வருடங்களாவது நடக்கும்.
பாரதத்தின் பல வேறு பாகங்களிலிருந்து வந்தவர்கள்,
அந்த 8 வருட காலத்தில் தமிழை அறிந்திருப்பார்கள்.
அதையும் சமஸ்க்ருதத்தையும் ஒப்பீடு செய்திருக்கிறார்கள்.


குமாரில பட்டருக்கு இந்த ஒப்பீடு முக்கியமானது.
ஏனெனில் அவர் மனித பாஷையிலும் வேதக் கருத்துக்களை
அதாவது வேத மூலத்துவத்தைக் கொண்டு சொன்னால்,
அது வேதத்துக்கொப்பான ஆதாரம் என்று ஏற்றுக் கொள்லாம்
என்றே வாதாடினார்.
அதில் அவர் வெற்றியும் பெற்றார்.


அந்தக் காலக்கட்டத்தில் மனித பாஷையான தமிழுக்கும் அங்கீகாரம் கிடைக்கவே, 
அதே காஞ்சியில் இருந்த பண்டிதர்கள்
அதை ஒட்டி ஆழ்வார்கள் செய்த ‘அருளிச் செயலை 
திராவிட வேதம் சொல்லி,
வட மொழி வேதத்துக்கு ஒப்பானது என்று நிரூபித்தார்கள்.
இவ்வாறு சொன்னவர்கள் எல்லோருமே
காஞ்சியுடன் தொடர்பு கொண்டவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.

காஞ்சியுடன் தொடர்பு கொண்ட,
விசிஷ்டாத்வைத ஸ்தாபகரான ராமாநுஜர்,
சங்கத் தமிழில் இசைக்கப்பட்ட நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களை வேதமாகக் கருதச் செய்தார்.13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் 
என்னும் விசிஷ்டாத்வைத ஞானி,
தான் எழுதிய ‘ஆசார்ய ஹ்ருதயம் என்னும் நூலில்
இதை நிரூபணம் செய்கிறார்.
முதலில் வேதம் பஹு விதம் (ஆசார்ய ஹ்ருதயம் 1-39)
என்று ஆரம்பிக்கிறார்.
அதாவது வேதம் பலவிதம்.
எப்படியென்றால், பல் வேறு இடங்களில் பல் வேறு பாஷைகள்
பேசும் மக்களும் வேதம் பயிலுகின்றனர்.
அதனால் ஓதுபவர்களது பேதத்தாலும்,
லோக பேதத்தாலும் வேதம் பலவிதம் என்று சொல்லப்படுகிறது என்கிறார்.


‘அதில் சமஸ்க்ருதம் திராவிடம் என்கிற பிரிவு, ருகாதி பேதம் போல
(ஆ-ஹ்ரு 1-40)
அது சமஸ்க்ருத வேதம், திராவிட வேதம் என்று பிரிவுபட்டுள்ளது,
ருக் முதலான வேதங்கள் என்பது போல.
திராவிட வேதமாம் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில்,
திரு விருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய் மொழி
ஆகிய நான்கும் நான்கு வேதங்கள் ஆகும்
இப்படி தமிழில் அமைந்த பிரபந்தங்களுக்கு
வேத அங்கீகாரம் செய்ய வேண்டி வாதிக்கிறார்.


இவ்வாறு சொல்லியும், தமிழைத் தமிழ் என்றுதான் சொல்கிறார்.
அதன் ஆதிப் பெயர் ‘அகஸ்தியம் என்று இருக்கலாம் என்று
நாம் எண்ணும் வண்ணம்
அடுத்து இவ்வாறு சொல்கிறார் :-
செந்திறத்த தமிழ் என்கையாலே ஆகஸ்த்யமும் அநாதி(ஆ-ஹ்ரு 1-41)


வேதம் என்று சொல்கையில் திராவிட வேதம் என்று
ஆழவார்கள் பாடினதைச் சொல்லும் இவர்,
பாஷை என்று வருகையில்,
செம்மைத் திறம் வாய்ந்த தமிழ் மொழி என்கிறார்.
தமிழ் ஏன் செம்மைத் திறம் வாய்ந்தது என்று அடுத்த கேள்வி வருகிறது. 
அதற்கும் விடை தருகிறார்.
‘அநாதியான ஆகஸ்தியம் அது.
எனவே அது செம்மொழி என்கிறார்.  
என்று உருவானது என்று சொல்ல முடியாத,
அநாதி காலம் தொட்டு இருப்பதும்,
அகஸ்தியரால் செம்மைப்படுத்தப்பட்டதுமான மொழி தமிழ்.
அதனால் அந்த மொழியில் உண்டான ஆழ்வார்கள் பாசுரங்கள்
சமஸ்க்ருத வேதத்துக்குச் சமமானவை என்கிறார்.


இவரது காலத்து முன்பே, குமாரில பட்டர்,
வேத மூலத்தைத் தந்தால் போதும்,
அந்த வேத மூலத்தைத் தரும் மனித பாஷையில்,
ஒரு வேத வித்தகர் சொன்னால் அது வேத வாக்கு என்று
ஏற்றுக் கொள்ளப்படத்தக்கது என்று வாதிட்டு வென்றிருக்கிறார்.
அந்த எண்ண வீச்சு அந்தக் காலக்கட்டத்தில் ஒத்துக் கொள்ளப்படவே,
தமிழ்ப் பாசுரங்களுக்கு
வேதம் என்ற அந்தஸ்தைப் பெற முடிந்தது.


இந்தக் கருத்துக்கள் சொல்லி வந்த அனைவருமே
காஞ்சியைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடத்தக்கது.
காஞ்சியில் திராவிட பிராம்மணர்கள் குடியேறவே,
அந்தப் பகுதியை திராவிடம் என்று அழைத்தார்கள் என்று பார்த்தோம்.
(பகுதி 50)
அங்கு மனித பாஷையாகத் தமிழ் பேசப்பட்டு வந்தது.
அதனால் அதைத் திராவிட பாஷை என்று,
அங்கு கற்க வந்த பிற பகுதி மாணவர்கள் கூப்பிட்டிருக்க வேண்டும். 
அவர்களுக்குப் பாடம் சொல்லித்தரும் ஆசிரியர்கள்
சமஸ்க்ருதத்தில் சொல்லித் தந்தார்கள்.
ஆனால் அவர்கள் வெளியில் பேசிய  பாஷையோ தமிழ்.
இதனால் தமிழும், சமஸ்க்ருதமும் கலந்து மணிப்ரவாள நடை எழுந்தது.
காஞ்சியைச் சேர்ந்தவர்கள் இந்த நடையில் எழுதினார்கள், பேசினார்கள்
அதன் காரணத்தை இப்பொழுது ஊகித்துக் கொள்ளலாம்.


காஞ்சி வாழ் வேத ஆசிரியர்களது இரு மொழி வழக்கத்தைக் கண்டு,
அவர்களிடம் பாடம் கற்க வந்த பிற பகுதி மாணவர்கள்
தமிழும் சமஸ்க்ருதமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை
என்ற முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.
குமாரில பட்டர் கூறும் ஒற்றுமைகள்,
அப்படிப்பட்ட ஆராய்ச்சியைச் சேர்ந்தது என்பது,
தமிழைத் தாய் மொழியாக்க் கொண்ட நமக்குப் புரிகிறது.


உதாரணமாக, சோறு என்னும் தமிழ்ச் சொல்,
சோர என்னும் சம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து வந்தது என்கிறார்.
சோறு இல்லயெனில் ஒருவன் சோரன், அதாவது திருடனாகி விடுவான், அதனால் உணவுக்கு இந்தப் பெயர் என்கிறார்.
ஆனால் தமிழ் மொழியில் சோறு என்பதற்கு வேறு பொருள் இருக்கிறது.
உணவைக் குறிக்கும் 27 சொற்களில் சோறு என்பது ஒன்று
என்று சூடாமணி நிகண்டு கூறுகிறது. (6-22)


அவை
அடிசில், போனகம், மூரல், அமலை, அயினி, பொம்மல், மடை, மிசை, உணா, புழுக்கல், வல்சி, பாளிதம், அன்னம், பதம், மிதவை, பாத்து, துற்று, உண்டி, சொன்றி, புன்கம், சரு, அசனம், ஊண், கூழ், ஓதனம், புகா, சோறு என்பன.


இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமான அர்த்தம் உண்டு.
ஒன்று போல மற்றொன்று இல்லை,
அத்தனை வேறுபாடுகள் இந்தச் சொற்களில் உள்ளன.
இவற்றுள் ‘சோறுஎன்பது சமைக்கப்பட்ட உணவு எனப்படும்.
சொன்றி என்ற சொல்லும் சோறு என்ற பொருளில் வரும்.
சொன்றி என்றால்,
ஒரு இயற்கை உணவுக்குள் இருக்கக்கூடிய,  
உண்ணுவதற்கு உகந்த பொருள் (SAP) என்று அர்த்தம். .
வரகின் சோறு என்று
வரகுக்குள் இருக்கும் உணவை (sap) சோறு என்று சொல்லும்
சங்கப் பாடல் உண்டு (புறநானூறு 197)


சமைக்கப்பட்ட உணவே சோறாகும் என்று சொல்லும் சங்கப்பாடலும் உண்டு.
ஏற்றுக உலையே, ஆக்குக சோறே(பு-நா -172)
என்று சொல்லப்படுவதன் மூலம்
சோறு என்பது தனித் தன்மையுடன் தமிழில் வழங்கி வந்த சொல்
என்று தெரிகிறது.
காஞ்சிவாழ் மக்கள் அனைவரும்
உணவு என்பதற்கு சோறு என்று அந்தச் சொல்லைப்
பயன் படுத்தி வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.
அதற்கும், சோர என்னும் சம்ஸ்க்ருதச் சொல்லுக்கும்
ஒலித் தொடர்பு இருக்கவே
சமஸ்க்ருதத்திலிருந்து தமிழ்ச் சொல் வந்து விட்டது
என்று சொல்லி இருக்கிறார்கள்.


அதிலும் குமாரில பட்டர்
தமிழ்ச் சொல்லை வாதத்துக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்.
அதற்குக் காரணம்,
தமிழ் பேசின மக்களிடமிருந்துதான் அவர்
வடமொழி வேதம் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.
அல்லது தமிழ் பேசிய ஊரில் (காஞ்சி)
அவர் வடமொழியும் வேதமும் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.
மனித பாஷையைப் (தமிழ்) பேசினாலும்,
அதைப் பேசும் ஆசிரியர்கள் சொல்வதை
வேத வாக்காக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே
அவரது தந்த்ர வார்த்திகாவின் மூலக் கருத்து.


இன்றைக்குத் திராவிடவாதிகள், தமிழிலிருந்து வட மொழி வந்தது 
என்று தேடிப் பிடித்து வாதம் செய்வது போல,
அன்றைக்கு சமஸ்க்ருதத்திலிருந்து தமிழ் வந்தது என்று
வாதிட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருந்தது.
எது எப்படியாயினும், இரண்டு மொழிகளும்
பல விதத்திலும் ஒப்புமை கொண்டவை.
வட மொழி வேத மொழி என்றால்,
தெம்மொழி (தென் மொழி / தமிழ் மொழி) மனித மொழியாகக் கருதப்பட்டிருக்கிறது.


காஞ்சியின் வேத பாடசாலைகளில்
வேதமும், வடமொழியும் கற்பதற்காக,
பாரதத்தின் பல் வேறு இடங்களில் இருந்து வந்த மக்கள்,
பல்லாண்டுகள் தங்கிப் பயின்ற காலத்தில்,
தமிழ் மொழியையும் அறிந்திருப்பர்.
அவர்கள் தங்கள் இருப்பிடத்துக்குச் சென்ற பின்னாலும்,
அவர்கள் மூலமாகத் தமிழ் என்பது அந்தந்தப் பிராந்தியங்களில்
பேச்சு மொழியில் கலந்திருக்கும்.
தமிழின் சாயல் பல மொழிகளில் இருப்பதற்கு
இது ஒரு முக்கியக் காரணமாக இருக்க வேண்டும்.  

பாரதம் முழுவதும் ஒரு மனித பாஷை, பேச்சு மொழியாகப்  
இருந்து வந்திருக்கிறது என்று முன்பே பார்த்தோம்.

வடக்கில் இருந்த சிபியும், சிபியின் வம்சத்தில் வந்த சோழ வர்மனும்
எந்த மொழியை அறிந்திருப்பார்கள்?

இலங்கையில் அசோக வனத்தில் சிறைப்பட்டிருந்த சீதையிடம்,
மனித பாஷையில் அனுமன் பேசினான் என்று வால்மீகி கூறுகிறாரே
அது எந்த பாஷை?

1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குமாரில பட்டரும்
சமஸ்க்ருதத்துக்கு இணையாக ஒரு மனித பாஷையைத் தேடி,
திராவிட பாஷை என்று தமிழிலிருந்து ஆதாரம் காட்டியுள்ளாரே,
அதிலிருந்து
சகலரும் அறிந்திருந்த மனித பாஷை என்பது
தமிழாக இருந்திருக்கக் கூடிய சாத்தியம் அதிகம்
என்பது புலனாகிறது அல்லவா?
இதைப் பற்றி மேலும் விவரங்களை இந்தத் தொடரின் போக்கில் காண்போம்.


என்றைக்கு ஆரம்பித்தது என்று சொல்ல முடியாத,
அநாதியான அகஸ்தியத்தால் செம்மைப்படுத்தப்பட்ட தமிழ் மொழியானது,
குமாரில பட்டரது உரையில் வேத வாக்கு சொல்லத்தக்க மொழி
என்று மறைமுகமாக அடையாளம் காட்டப்பட்ட நிலையில்,
அந்த முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும்.
ஆனால் நம் பாரம்பரியம் அறியாத
வெளி நாட்டவரான கால்டுவெலுக்கு
அந்த முக்கியத்துவம் தெரிந்திருக்க நியாயமில்லை.
ஆனால் அவர் அந்த முக்கியத்துவத்தைக் குறைத்து விட்டார். 


குமாரில பட்டர் செய்த மொழி ஆராய்ச்சியைப் பார்த்தார் கால்டுவெல்.
சோர என்பது சோறு என்றானது.
வைரி என்பது வயிறு என்றானது.
எவ்வளவு எளிதாகச் சொல்லி விட்டார்கள்?
இந்த சொற்களைத் தமிழ் மொழியில் காண்கிறோம்.
ஆனால் பட்டரோ, திராவிட மொழி என்கிறார்.
பார்த்தார் கால்டுவெல்,
பட்டரது வழியில் திராவிடம் என்னும் சொல் எப்படி தமிழ் என்றாகும்
என்று யோசித்தார்.
திராவிட என்பது, திரவிட என்றாகி,
அது த்ரமிள என்றாகி,
அது தமிள என்றாகி
அதுவே தமிழ் என்றானது என்று
ஒரு அரிய ‘கண்டுபிடிப்பைச் செய்து விட்டார்.


அதை இன்னும் தமிழர்கள் பிடித்துக் கொண்டிருக்கிறார்களே
அதை என்னவென்று சொல்ல?

குமாரில பட்டர் செய்த மொழி ஒப்புமையே சரியல்ல.
இந்தக் கட்டுரையில் தரப்பட்டுள்ள
அந்த ஐந்து சொற்களது விளக்கங்களை 
தமிழ் தெரிந்தவர் யாராவது ஒத்துக் கொள்வார்களா?
ஒரு வாதத்துக்கு, திராவிட என்னும் சமஸ்க்ருதச் சொல்லிலிருந்து
தமிழ என்ற சொல் வந்தது என்று சொன்னாலும்,
தமிழ் தெரிந்தவனால்,  தமிழ் இலக்கணம் படித்தவனால்
அதை ஒப்புக் கொள்ள முடியுமா?

ஏனெனில்,  
திரமிளம்  என்பது  தமிழ்  ஆனது என்பது 
தொல்காப்பிய வட சொல் திரியும் சூத்திரத்தை ஒட்டி அமையவில்லை. 
இதில் த்ரஎன்னும் சொல் உருமாற வேண்டும்.
என்னும் எழுத்து என்று உருமாற வேண்டும்.

ளகரம் ழகரமாகலாம் (சோள = சோழ)
ஆனால் திர அல்லது த்ர என்பது தகரம் ஆகாது.

ஒலிக் குறிப்பில் கரம், தகரம் ஆகலாம்.
அதாவது தமிள (damiLa) என்பது  தமிழ (thamiza ) என்றாகலாம்.
ஆனால் திரமிள என்றால் அது  திரமிழம் என்றுதான் ஆகும்.
த்ரமிள என்றாலும், திரமிழம் என்றுதான் ஆகும் ,
த்ரவ்யம் என்பது திரவியம் என்பது ஆவது போல.

அப்படியிருக்க
குமாரில பட்டரைப் பின் பற்றியும்,
வட சொல் திரியும் முறையை அறியாமலும்,
கால்டுவெல் செய்த சொற்பிரயோகம்
ஒத்துக் கொள்ளத் தக்கதா?
இல்லவே இல்லை.


குமாரில பட்டர் கொடுத்த வாதம் பண்டிதர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டது.
அதாவது மனித பாஷையிலும் வேதக் கருத்துக்களைச் சொல்ல முடியும்.
அதைச் சொல்பவரது தகுதி,
சொல்லப்படும் பொருள் வேத மூலத்தைச் சேர்ந்திருத்தல்
என்னும் காரணங்களால்
அவ்வாறு மனித பாஷையில் சொல்லப்படும் கருத்துக்கள்
வேத ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படத்தக்கவை
என்பது குமாரில பட்டர் சொன்னது.
அவருக்குப் பிறகு அந்தக் கருத்து பரவலாக தங்கி விட்டது.
இதுவே நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைப் பரப்புவதற்கும்,
அதைக் கோவிலில் ஓதச் செய்வதற்கும் உறுதுணையானது.


அதே சமயம் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும்.
திராவிட வேதம் என்ற பெயர் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்துக்குத்தான் தரப்பட்டது.
ஆனால் சைவ நாயன்மார்கள் அருளிய
தேவார, திருவாசகம் உள்ளிட்ட பாசுரங்களைச் சொல்கையில்,
அவற்றைத் திராவிட வேதம் என்று சொல்வதில்லை.
அவை தமிழ் மறை என்றே சொல்லப்படுகின்றன.
இரண்டுமே தமிழ் மொழியில் தான் எழுதப்பட்டுள்ளன.
ஒன்றுக்கு திராவிட வேதம் என்று
திராவிடம் இணைத்துச் சொல்லப்பட்டுள்ளது.
மற்றொன்றுக்கு திராவிடப் பெயர் இல்லை.
அது எப்படி?
இந்தக் கேள்வியைக் கேட்டால் நமக்கு விடை கிடைக்கும். 


காஞ்சி வாழ் பண்டிதர்களால் முன்னிறுத்தப்பட்டவை
திராவிடம் என்னும் பெயரைப் பெற்றன.
சைவப் பாடல்கள் எல்லாம் காஞ்சிக்குத் தெற்கே,
சிதம்பரம் போன்ற இடங்களில் கொண்டாடப்பட்டன.
நாயன்மார்கள் வரலாற்றை எழுதிய சேக்கிழார் அவர்கள்
காஞ்சியைச் சேர்ந்த குன்றத்தூரில் பிறந்தவராக இருந்தாலும்,
அவர் நாயன்மார்கள் வரலாற்றைத் தொகுத்தது சிதம்பரத்தில்.
பாரதத்தின் பிற பகுதிகளிலிருந்து வந்த மக்கள்
வேதக் கல்வி பயில காஞ்சிக்கு வந்தார்களே தவிர,
சிதம்பரத்திற்கு அல்ல.
மக்கள் கலப்பு காஞ்சியில் நடைபெற்ற அளவுக்கு,
சிதம்பரம் முதலான தென் நாடுகளில் நடைபெறவில்லை.
அப்படி ஆகியிருந்தால், திராவிட பாஷை என்ற பேச்சே எழுந்திருக்காது,
தமிழ் பாஷை என்றே சொல்லியிருப்பார்கள்.
அந்தக் காலக்கட்ட்த்தில்
காஞ்சி சார்ந்த இடங்கள் திராவிடம் என்று அழைக்கப்படவே,
அங்கு பேசப்பட்ட தமிழ் மொழியை
திராவிட பாஷை என்ற வெளியிலிருந்து வந்த மாணவர்கள் அழைத்திருக்கிறார்கள்.


திராவிடம் என்னும் பெயர் எப்படி வந்திருக்கக் கூடும் என்று பகுதி 50 –இல் பார்த்தோம்.
காஞ்சிக்கு அந்தப் பெயர் ஆரம்பத்தில் இல்லை.
அது கச்சி என்றே அழைக்கப்பட்டது.
கரிகால் பெருவளத்தான்
அங்கு இருந்த சாத்தன் கோவிலில் வழிபட்டு,
அந்த தெய்வத்தால் வழங்கப்பட்ட செண்டு என்னும் ஆயுத்த்தைக் கொண்டு,
வட திசையில் உள்ள இமயமலையில்
தன் புலிச்சின்னத்தைப் பொறித்தான் என்று கலிங்கத்துப் பரணி கூறுகிறது.
அவ்வாறு செய்த கரிகாலன் வாழ்ந்த காலம்
கண்ணகியின் காலத்துக்கு முற்பட்டது.
ஏனெனில், சிலப்பதிகாரம், இந்திர விழாவூரெடுத்த காதையில்
கரிகாலன் இமயம் சென்ற சம்பவம் நினைவு கூறப்படுகிறது.


எனவே கச்சி என்னும் காஞ்சிபுரம்
2000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது.
அது இருந்த தொண்டை மண்டலத்தை ஸ்தாபித்தவன்  
ஆதொண்டை
என்று நச்சினார்க்கினியர் கூறுவதைக் கண்டோம் (பகுதி 49)
எனவே ஆதொண்டை 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டவன்.
அவன் வழியில் வந்த இளந்திரையனைப் பற்றிய
பெரும் பாணாற்றுப் படை என்னும் சங்க நூல் உரையில்
நச்சினார்க்கினியர் இந்த விவரத்தைத் தருகிறார்.
சங்க நூல்களின் காலமே 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்டது (பகுதி 44)

நம்மிடம் இருக்கும் உள்ளுறைச் சான்றுகள் இவ்விதம் இருக்க,
நமது சரித்திரத்தை எழுத விரும்பிய ஆங்கிலேயர்கள்,
ஆதொண்டை என்பவன், கி.பி.11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த
குலோத்துங்க சோழனுக்குத் தவறான வழியில் பிறந்தவன்
என்று எழுதியுள்ளார்கள்
(ஏஷியாடிக் சொசைடியின் ’மெட்ராஸ் ஜர்னல் ஆஃப் லிட்டரேச்சர் அண்ட் சயன்ஸ்’)
இவர்கள் எழுதியுள்ளதைக் கொண்டு நமது சரித்திரத்தை ஆராய்ந்தால்,
தவறான முடிவுகளுக்குத்தான் அவை நம்மைச் செலுத்தும்.


இவர்கள் சொல்லும் காலக்கட்டத்துக்கு முன்பே
குமாரில பட்டர் வந்து விடுகிறார்.
அதற்கு முன்பே தொண்டை மண்டலம் உண்டாகி விட்டது.
2000 ஆண்டுகளுக்கு முன்பே வேளிர் மக்களை
ஆதொண்டை குடி அமர்த்தி விட்டான்.
அப்பொழுதும் அது திராவிடம் என்று சொல்லப்படவில்லை.
கச்சி என்றே சொல்லப்பட்டது.
(வேளிர் மக்களைப் பற்று அறியும் போது,
இந்தப் பெயர் காரணத்தை நாம் அலசுவோம்)
.

வேளிர் மட்டுமல்லாமல், திராவிடப் பிராம்மணர்களும்,
காஞ்சியில் குடியேறின பிறகே
அவர்கள் தொடர்பால் திராவிடம் என்ற பெயர்
காஞ்சிக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.
அந்தப் பிராம்மணார்களிடம் வேதக் கல்வி கற்க மக்கள் வரவே,
திராவிடப் பிராம்மணர்கள் பேசிய தமிழ் மொழியை
அவர்கள் திராவிட மொழி என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.


அந்தத் திராவிடப் பிராம்மணர்கள்,
திராவிடம் என்னும் அடைமொழியைப் பெற்றதற்குக் காரணம்,
அவர்களது மூதாதையர் திராவிட நாட்டில் இருந்ததே.

மனுவைத்தொடர்ந்த சரஸ்வதி பிராம்மணர்களாகவும்
அவர்கள் இருக்கலாம்.

அல்லது பஞ்சத்திராவிடத்தில் இருந்த திராவிட நாட்டிலிருந்து வந்தவர்களாகவும் 
அவர்கள் இருக்கலாம். (பகுதி 50)

எப்படி இருந்தாலும், இந்தியாவிலுள்ள மற்றவர்களைப் போல
அவர்களும் மனுவின் காலம் தொட்டு இருப்பவர்களே.

பஞ்ச-திராவிடத்தில் திராவிடம் என்னும் ஒரு நாடு
எங்கு இருந்தது என்று வராஹ மிஹிரரது பிருஹத் சம்ஹிதை கூறுகிறது.
அதையும் பார்ப்போம்.

47 கருத்துகள்:

 1. //இதை எழுதியவர் கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த
  குமாரில பட்டர் என்னும் வேதவித்வான்.
  இவர் ஆதி சங்கரர் காலத்தில் வாழ்ந்தவர்.//

  அது கி.பி. 7 ஆம் நூற்றாண்டு இல்லை. ஆதிசங்கரர் காலம் கிமு 1. ம் நூற்றாண்டுன்னு சொல்லுறாங்களே

  பதிலளிநீக்கு
 2. Just for reference:
  http://www.mayyam.com/talk/showthread.php?2979-Tamil-s-elderliness-to-world-languages&highlight=tamil+elder+sanskrit+Gandhi
  http://kaiman-alavu.blogspot.com/2006/08/blog-post.html
  http://forumhub.com/tlit/1390.4443.09.25.44.html.

  பதிலளிநீக்கு
 3. While I am of the view that the purpose of this post is to thwart the myths about the aryan invasion and not to establish the origin of Adi sankara, I would like to draw your attention to this link http://www.tamilbrahmins.com/rituals-ceremonies-pujas/1418-performing-shraddham-yourself-2.html
  and the posts of shri Appaiah. His quotes and research seems pretty authentic.I would request you to take your time to go through his arguments and clarify the same, if at all you deem fit. However, be it BCE or AD the arguments about Kumarila battar still holds good.

  பதிலளிநீக்கு
 4. Thanks for the link Mr Venky. I relied on Mr Gandharvan's analysis of time period of Adi shankara. The link is
  http://www.tamilhindu.com/2010/12/dating-adi-sankara-history-a-view/

  I concur with AD origin of Shankara on one reason. He has effectively argued against the Buddhist point of view in his commentaries. Buddhists and Jains found a foothold only after the 3rd century AD with Pallavas coming to rule Tamil lands. Infact the Bhakthi movement was a 'kaalaththin kattaayam' to overthrow Buddhist and Jain influence. Buddhists and Jains in particular have done more harm to Tamil language itself besides the Hindu way of life. I will write about it when I will be writing in languages.

  This apart, as you have said, Kumarila Bhattar's contribution is the focal point for the above article. So I am not keen on looking into the authenticity of Shankara's time period.

  பதிலளிநீக்கு
 5. //I concur with AD origin of Shankara on one reason. He has effectively argued against the Buddhist point of view in his commentaries.//

  It was one such reasoning that made me interested in the link that I shared. One of Mr. Appaiah's arguments was, when Sankara did not even spare the chandalas and others in debate, how would he have spared the moplah muslims who are said to have set foot in the malabar coast in 7th century and that too sankara would have travelled through that region during his dig vijayams.
  As far as over throwing Budhism and jainism, a few questions cross my mind. Kumarila Bhattar himself is credited of over throwing the Budhists and re-establishing the meemamsa sect, which Sankara later debated and converted his (KB's)desciple mandana mishrar to advaita. So do you think sankara still contributed a lot to overthrowing Budhists? further thiru gnana sambandar is also said to be of 7th century (http://tamilartsacademy.com/articles/article08.xml)who fought against jains. Does it mean Sankara and thirugnana ssmbandhar are of same period? or was it that sambamdar did the unfinished job of sankara?

  பதிலளிநீக்கு
 6. Dear Mr Venky,

  I have not analysed the time period of Adhi shankara. So I am not qualified to pass opinions. The Shankara Mutts would definitely have valuable information which can not be overruled. I wish some one goes through all that and sets at rest the confusion.

  When I read the mention of Thirugyana sambhanda in your comment, I am reminded of the reference to a Paththini-p-peN by Kannagi which you can read in the Chapter Vanjinamalai in Silappadhikaram. It tells about a saatchi that Vanni tree and a well gave. This is similar to an incident on Gyansambhandar's life. If the incident is related to Gyanasambhandar, then his time is prior to 2nd century AD. So far scholars have not come to a conclusion of this incident in Silappadhikaram. Perhaps those working on the time period of Shankara, must look into this incident in Silapapdhikaram too.

  பதிலளிநீக்கு
 7. ஜெயஸ்ரீ அவர்களே,

  வணக்கம். அருமையான கட்டுரை. எனக்கு சில சந்தேகங்கள். தீர்த்து வைத்தால் நன்றாக இருக்கும்.

  //

  திராவிட என்பது, திரவிட என்றாகி,

  அது த்ரமிள என்றாகி,

  அது தமிள என்றாகி

  அதுவே தமிழ் என்றானது என்று

  ஒரு அரிய ‘கண்டுபிடிப்பைச்’ செய்து விட்டார்.
  //

  இதை தானே தெய்வத்தின் குரலில் காஞ்சி மஹா பெரியவரும் சொல்கிறார். அப்பொழுது நீங்கள் அவர் கால்ட்வெல்லை படித்துவிட்டு தான் இதை சொல்கிறார் என்கிறீர்களா?

  இன்னும் சில கேள்விகள்...

  பழங்கால பாரதத்தில் தமிழை தவிர வேறு என்னென்ன மனித பாஷைகள் இருந்தன?

  மகாபாரத காலத்தில் என்ன மனித பாஷை பேசப்பட்டது? அதை பற்றி எதாவது துப்பு கிடைத்திருக்கிறதா?

  "தமிழ்" என்கிற சொல் முதன்முதலில் எந்த காலக்கட்டத்தில் பயன்ப்படுதப்பட்டது?

  கீதையில் திராவிட என்கிற வார்த்தை உபயோகிக்கப்பட்டது என்று சொல்கிறார்களே. அது உண்மையெனும் பட்சத்தில் அது எந்த இடத்தை குறிப்பிடுகிறது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Apologies for writing the reply in English.

   //இதை தானே தெய்வத்தின் குரலில் காஞ்சி மஹா பெரியவரும் சொல்கிறார். அப்பொழுது நீங்கள் அவர் கால்ட்வெல்லை படித்துவிட்டு தான் இதை சொல்கிறார் என்கிறீர்களா?//

   I don't know what Kanchi periyavar said. But this transformation is invalid and improbable.I have explained it in the article.

   //பழங்கால பாரதத்தில் தமிழை தவிர வேறு என்னென்ன மனித பாஷைகள் இருந்தன?//

   Valmiki Ramayana tells about 'Desya bhasha'. When the vanaras discussed the plan of the offensive in Lanka with Vibheehana, each one spoke in their Desiya bhasha. Though it was understood by others around them, they felt that they could not express it in a way that could be understood without doubt by others. So they decided to speak in sanskrit which everybody understood. This info appears in Yuddha Khanda. This shows that many local dialects were there at the time of Ramayana, which was understood by one another. The same Ramayana speaks about Manushya Bhasha which I showed as Tamil.Please read those articles in this series for more info.

   In my opinion these local Desiya bhashas became distinct languages by 2000 years BP. Tamil and Sanksrit contributed in the formation of these languages. Prakruth had more of sanskrit basis, whereas apa- brahmsa had more of Tamil basis. Almost all the languages of India have some contribution from Apabrahmsa. It was known as 'Kodum Thamizh' in Tamil.

   Read my short note on that in
   http://jayasreesaranathan.blogspot.in/2012/06/cartoon-controversy-on-hindi-agitation.html

   //மகாபாரத காலத்தில் என்ன மனித பாஷை பேசப்பட்டது? அதை பற்றி எதாவது துப்பு கிடைத்திருக்கிறதா?//

   It was Apabrahmsa. It has Tamil words spoken in corrupt form. Such Tamil was known as Kodum Thamizh. The Indus people spoke that. Krishna spoke that. Or else what was he doing in 2nd sangam? Many articles are there in this series on how northern rishis had known Tamil and contributed to sangam litt. Kodum Thamiz or non- grammatical Tamil was spoken by all people of India. It was the Manushya Bhasha of people living in the southern latitudes who migrated to India via Dwaraka headed by Manu, who was known as Dravideswara. Tamil was gramatised afterwards and developed through sangam. It happened 11,000 years ago. It means the people who spoke non grammatical Tamil (kodum Tamil) separated form them 11,000 years ago. They formed the Ancient North Indian gene pool and spread throughout North India and moved to Central Europe in waves later. Those who continued to live in scattered islands of Indian ocean and spoke gramatical tamil moved to today's south India after 2nd sangam was submerged. Their movement to Indian main land happened 3500 years ago. They formed Ancient South Indian gene pool.

   All these would sound Greek and Latin to you. Better read all the articles in the order to catch up with what I say.

   //"தமிழ்" என்கிற சொல் முதன்முதலில் எந்த காலக்கட்டத்தில் பயன்ப்படுதப்பட்டது?//
   11,000 years ago when the 1st sangam was established. Before that sages called it (the manushya Bhasha) as Maduram. Madurai came from this term.

   //கீதையில் திராவிட என்கிற வார்த்தை உபயோகிக்கப்பட்டது என்று சொல்கிறார்களே. அது உண்மையெனும் பட்சத்தில் அது எந்த இடத்தை குறிப்பிடுகிறது?//

   This is wrong information.

   PS:-

   The term Abhir came from Apa- Brahmsa. Jews, whose ancestors were 'Calani' were Abhirs of Rajasthan and KAshmir. I will write on them in upcoming articles.

   நீக்கு
 8. //I don't know what Kanchi periyavar said. But this transformation is invalid and improbable.I have explained it in the article.//

  I made a mistake in my previous post. Actually Maha Periyava is mentioning the reverse of what I said previously. He says the word Tamil is the one which became Dravida and not vice versa. Here is the link to that page in Deivathin Kural. Pls give your opinion when you find time.

  http://www.kamakoti.org/tamil/KURAL4.htm

  Also I find some contradictions with what you mentioned in your other article on the Hindi agitation and that of what Maha periyava argues in the link below.

  http://www.kamakoti.org/tamil/Kurall87.htm

  Pls provide your thoughts on the above too.

  What's your opinion on Chandhas? I see many people discussing about a common origin for both Sanskrit and Tamil. Here is one point of view from Deivathin Kural

  http://www.kamakoti.org/tamil/Kurall89.htm

  Have you read the works of Devaneya Paavaanar on the origin of Tamil? If you've read it, how far do you agree with it?

  Was there no time in the history of India when Sanskrit was spoken by common man as manushya baasha? If so, why?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Dear Mr Rajan,
   Thanks for bringing out what Periyavaa told. I am happy to read them and see that they mostly concur with what I have been saying and what I understood in the course of this research. For the purpose of reaching out to Tamil readers, let me switch over to Tamil.

   //I made a mistake in my previous post. Actually Maha Periyava is mentioning the reverse of what I said previously. He says the word Tamil is the one which became Dravida and not vice versa. Here is the link to that page in Deivathin Kural. Pls give your opinion when you find time.

   http://www.kamakoti.org/tamil/KURAL4.htm //

   அந்தக் கட்டுரையில் பெரியவா சொன்னதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று திரவிட என்பது தமிழ் என்றானது. மற்றொன்று திராவிட என்னும் பெயர் பிராம்மணர்களுக்குத்தான் இருந்து வந்திருக்கிறது என்பது.

   முதலாவதான விஷயத்தை, மேற்காணும் கட்டுரையில் ஆராய்ந்துள்ளேன். திராவிட என்னும் சொல், பேச்சு வழக்கு, இலக்கணப் புணர்ச்சி என்று எந்தவிதத்திலும், தமிழ் என்று மாறமுடியாது. பெரியவா அப்படிக் காட்டியிருக்கிறார் என்றால், அவருக்கே அந்தப் புணர்ச்சியில் ஒப்புதல் இல்லை என்று சொல்லும் வண்ணம், மேற்கொண்டு எப்ப்டி சொல்லியிருக்கிறார் என்பதைக் கவனிக்கவும்.:

   “இப்போது எல்லாவற்றிலும் தமிழ் சம்பந்தம் காட்டினால் ஒரு ஸந்தோஷம் உண்டாவதால், த்ரவிடாசார்யாரைச் சொல்லும்போது அவருக்குத் தமிழ் சம்பந்தம் காட்டி நாமுந்தான் ஸந்தோஷப்படுவோமே என்று தோன்றிற்று;சொன்னேன்.” - என்கிறார்.

   பெரியவாளே பல் வேறு இடங்களில் விதிகளுக்குட்பட்ட எழுத்து மற்றும் சொல் புணர்ச்சி அல்லது மாறுபாடுகளைக் காட்டியுள்ளார். ஆனால் திராவிட - தமிழ புணர்ச்சி, விதிமுறைகளுக்குட்படவில்லையாதலால், மேற்கண்டவாறு சொல்லியிருக்கிறார்.

   ***
   அதே கட்டுரையில் ‘திரவிட சிசு’ என்று ஆதி சங்கரர் எழுதியுள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளார். 50, 56 ஆவது கட்டுரைகளில் இதைப் பற்றி நான் எழுதியுள்ளதைப் படிக்கவும். திராவிடப் பார்ப்பனரான சங்கரர், தன்னை திராவிட சிசு என்றழைத்துக் கொண்டார்.

   56 ஆவது கட்டுரையில் திராவிடம் என்னுமிடம் இருந்த இடத்தைக் காட்டியுள்ளேன். அது மஹாராஷ்டிரக் கரையோரம் கடலில் இன்று முழுகி விட்டது. இது விந்திய மலைக்குத் தெற்கே வருவது. இங்குதான் வைவஸ்வத மனு திராவிடேஸ்வரன் என்னும் பெயருடன் வாழ்ந்து வந்தான். அதன் காலம் பனி யுகம் முடிவதற்கு முன்னால், அதாவது இன்றைக்கு 13,000 ஆண்டுகளுக்கு முன்னால். அப்பொழுது பனி யுகம் முடிந்து, கடல் மட்டம் அதிகமானபோது வந்த வெள்ளத்தில், அவனும், முனிவர்களும் பயணித்த படகு, வடக்கு நோக்கி அப்பொழுது 4 மைல் அகலத்துக்குப் பரவியிருந்த சரஸ்வதி நதிக்குள் நுழைந்தது.

   கீழ்க்காணும் கட்டுரையில் அந்த விவரங்களுக்கான ஆழ்கடல் ஆராய்ச்சி விவரங்களைத் தந்துள்ளேன். பெரியவா சொல்வதும், நான் அந்தக் கட்டுரைகளில் விவரிப்பதும் ஒத்துப் போவதைக் காணலாம். பாரதப் பாபரிய சரித்திரத்தை அறிந்தால், இந்தக் கருத்துக்களே எழும்.

   (தொடரும்)

   http://thamizhan-thiravidana.blogspot.in/2012/02/who-is-dravida-mr-karunanidhi.html

   இந்தத் தொடரில் உள்ள கட்டுரைகளை, அதிலும் திராவிடன் என்பதைப் பற்றிய கட்டுரைகளை நீங்கள் படித்திருந்தால், பல சந்தேகங்கள் விளங்கியிருக்கும்.

   நீக்கு
  2. மேலே கொடுத்துள்ளா கருத்துரையில் 2 ஆவதாக கொடுத்துள்ள கருத்து, பார்ப்பனர்களே திராவிடர்கள் என்றழைக்கப்பட்டார்கள் என்பதே.

   http://ethiroligal.blogspot.in/2012/02/blog-post_25.html
   இந்த இணையத்தில் நான் அளித்த கருத்துரையைக் கீழே தந்துள்ளேன். அதில் பல விடைகள் கிடைக்கும்.


   “இன்றைக்குத் திராவிடன் என்ற பெயரில் யாரேனும் இருக்கிறார்கள் என்று தேடினால், இருக்கிறார்கள் - அவர்கள் ‘கோண சீமைத் திராவிடர்கள்’. இவர்கள் பார்ப்பனர்கள்! ஊன்றிக் கவனித்தால், இதுவரை திராவிடர்கள் சொல்லிக் கொண்ட ஆதிசங்கரர், திரமிளேஸ்வர் போன்றோர் பார்ப்பனர்களே. கோணசீமைத் திராவிடர்களும் பார்ப்பனர்களே.

   இவர்கள் இன்று ஆந்திர மாநிலத்தில் கிழக்குக் கோதாவரிப் பகுதியில் வாழ்கின்றனர். 11-ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட ராஜேந்திர சோழன், தன் மகள் அம்மங்கா தேவியை, ராஜமுந்திரிப் பகுதியை ஆண்ட வேங்கி நாட்டு அரசனான ராஜ ராஜ நரேந்திரன் என்னும் சாளுக்கிய அரசனுக்கு மணம் முடித்த போது, அவளுடன் 18 பிராம்மணக் குடும்பங்களைச் சீதனமாக அனுப்பி வைத்தான். கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர்களாதலால், அந்தப் பிராம்மணர்கள் ‘கும்பகோண சீமை” யைச் சேர்ந்தவர்கள் என்னும் பெயரில், கோண சீமத் திராவிடர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டார்கள்.

   காஷ்மீரப் பரம்பரையைச் சொல்லும் ராஜதரங்கிணியில் (10 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது), விந்திய மலைக்கு வடக்கில் வாழ்ந்த பிராம்மணர்களைப் பஞ்ச கௌடர்கள் என்றும், விந்திய மலைக்குத் தெற்கில் வாழ்ந்த பிராம்மணர்களைப் பஞ்ச திராவிடர்கள் என்றும் சொல்கிறது.

   அந்த வரிகள்:-

   ”கர்நாடகாஸ்ச தைலங்கா த்ராவிடா மஹாராஷ்ட்ரகா:
   குர்ஜராஸ்சேதி பஞ்சைவ த்ராவிடா விந்த்ய தக்ஷிணே //
   ஸாரஸ்வதா: கான்யகூப்ஜா கௌடா உத்கல மைதிலா:
   பஞ்ச கௌடா இதி க்யாதா விந்த்யஸ்யோத்தர வாஸின: //


   இதன் பொருள்:-
   விந்திய மலைக்குத் தெற்கே கர்நாடகர், தைலங்கர், திராவிடர், மஹாராஷ்டிரர், குர்ஜரர் என்னும் ஐந்து திராவிடர்களும் (பஞ்ச திராவிடம்).
   விந்திய மலைக்கு வடக்கில் ஸரஸ்வதர், கான்யகூப்ஜர். கௌடர், உத்கலர், மைதிலர் என்னும் ஐந்து கௌடர்களும் (பஞ்ச கௌடம்) வசித்து வந்தனர்.

   இவர்கள் அனைவரும் பிராம்மணப் பிரிவுகள்.
   ராஜ தரங்கிணி மட்டுமல்ல, ப்ராமமணர்கள் வரலாறை ஆராயும் ’ப்ராம்ணோத்பத்தி மார்தாண்டம்” என்னும் வடமொழி நூலும், இந்தப் பஞ்ச கௌடர், பஞ்ச திராவிடர் என்னும் பத்து பிரிவினரையும் பிராம்மணர்களது பிரிவுகளாகச் சொல்கிறது. “

   (தொடரும்)

   நீக்கு
  3. ”ராஜதரங்கிணியின் இந்த ஸ்லோகம் வட இந்தியாவில் சமீப காலம் வரை பரவலாக அறியப்பட்டு இருந்திருக்கிறது. அதையே தாகூரும் இந்திய தேசிய கீதத்தில் எடுத்தாண்டுள்ளார். தேசிய கீதத்தில், "பஞ்சாப, சிந்து, குஜராத, மராட்டா, திராவிட, உத்கல, வங்கா’ என்று 7 இடங்கள் சொல்லப்படுகின்றன. இவற்றுள் பஞ்சாப், சிந்து ஆகியவை ஸரஸ்வதி பிராம்மணர்கள் வசித்த இடம். குஜராத், மராத்தா, திராவிடம் என்பவை குர்ஜரர்கள், மஹாராஷ்டிரா பிராம்மணர்கள் வசித்த இடம். திராவிடம் என்னும் இடம் இந்தப் பஞ்ச திராவிடத்தில் அடக்கம்.
   உத்கல, வங்கம் என்பவை உத்கல பிராம்மணர்கள் வசித்த இடம். சென்ற ஆயிரம் வருடங்களாக ராஜ தரங்கிணி சொல்லும் பத்து இடங்கள் வட இந்திய மக்களால் அடிக்கடி சொல்லப்பட்டிருக்கவே, தாகூர் அதைத் தேசிய கீதத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

   பஞ்சத் திராவிடத்தில் திராவிடம் என்று ஒரு இடம் இருந்தது என்பதை, 1500 ஆண்டுகளுக்கு முன் எழுந்த பிருஹத் சம்ஹிதை. அதற்கு முன் எழுந்த மஹாபாரதம், தமிழ் நிகண்டான திவாகர நிகண்டு ஆகியவை கூறுகின்றன.

   பிருஹத் சம்ஹிதையில், திராவிடம் என்னும் இடம் குஜராத், மஹாராஷ்டிராவை ஒட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஹேமகிரி, சிந்துகலகம்,ரைவதகம், சௌராஷ்டிரம்,பாதரம், திராவிடம், மஹார்ணவம் என்று வரிசைப்படுத்துவதன் மூலம் இந்த இடம் தென் மேற்கு இந்தியாவின் கடலோரப்பகுதி (அரபிக் கடலோரம்) என்று அந்த நூல் அடையாளம் காட்டுகிறது.

   மஹாபாரதத்தில் திராவிடம் என்னும் நாட்டில் பாண்டவர்களும், கிருஷ்ணனும் தீர்த்த யாத்திரை செய்துவிட்டு, பிரபாசத்தை அடைந்தனர் என்று வருகிறது. பிரபாசம் என்பது குஜராத்தின் தென் கடலோரம் உள்ள சோமநாதர் ஆலயம் உள்ள இடமாகும். இந்தத் தீர்த்த யாத்திரையை விவரிக்கும் போது, தென் கடலில் உள்ள திராவிடம் என்று சொல்லப்பட்டுள்ளது. அது தென்னிந்தியக் கடல் அல்ல, அவர்கள் தீர்த்த யாத்திரை ஆரம்பித்த துவாரகைக்குத் தென் கடலான அரபிக் கடலாகும். இந்த இடம் தற்சமயம் அரபிக் கடலுக்குள் முழுகி விட்டது. துவாரகைக்குத் தென்கடலில் இருந்த திராவிடத்தில் குளித்து விட்டு, தென்கரையில்; இருந்த பிரபாசத்தில் சிவனை வழிபட்டிருக்கிறார்கள்.

   திவாகர நிகண்டில் முத்தமிழ் நிலங்களைச் சுற்றியுள்ள இடங்களில் ஒன்றாக திராவிட நாட்டைச் சொல்லியுள்ளதும், அந்த இடம், மேற்சொன்ன நூல்கள் தரும் வர்ணனையுடன் ஒத்துப் போகிறது.
   தமிழ் நாட்டைச் சுற்றி இருந்த 18 நாடுகள் என்று திவாகர நிகண்டு தரும் பெயர்களில் திராவிடம் இருப்பதைக் காணலாம்.

   1.அங்கம்
   2.வங்கம்
   3.கலிங்கம்
   4.கௌசிகம்
   5.சிந்து
   6.சோனகம்
   7.திராவிடம்
   8.சிங்களம்
   9.மகதம்
   10.கோசலம்
   11.மராடம்
   12.கொங்கணம்
   13.துளுவம்
   14.சாவகம்
   15.சீனம்
   16.காம்போஜம்
   17.பருணம்
   18.பர்ப்பரம்.

   இந்தத் திராவிட நாட்டிலிருந்த பிராம்மணர்கள், காஞ்சிபுரத்தில் குடியேறியபோது, அவர்களுடன் வந்த திராவிடப் பெயரும் காஞ்சிக்கு ஒட்டிக் கொண்டு விட்டது. காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ராமானுஜரால் பிரபலப்படுத்தப்பட்ட ஆழ்வார்கள் அருளிச் செய்த திவ்வியப் பிரபந்தத்திற்கும் திராவிட வேதம் என்ற பெயர் ஏற்பட்டது.

   அந்தப் பெயர் தமிழை முன்னிட்டு எழவில்லை. திராவிடப் பிராம்மணர்களை ஒட்டி எழுந்தது. தமிழுக்குத் திராவிடம் என்ற பெயர் இருந்திருந்தால், தேவார திருவாசகங்களுக்கும் அல்லவோ திராவிட மறை என்ற பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். அவற்றை மட்டும் தமிழ் மறை என்று ஏன் சொல்ல வேண்டும்?

   இவற்றைப்பற்றியும் திராவிடத்தைப் பற்றியும் நான் எழுதி வரும் தொடரை இங்கே படிக்கலாம்.

   http://thamizhan-thiravidana.blogspot.in

   கால்டுவெல் அவர்கள் திராவிடம் என்பதை எப்படிக் “கண்டுபிடித்தார்’ என்பதை இங்கே படிக்கலாம்.
   http://thamizhan-thiravidana.blogspot.in/2011/05/54.html

   திராவிடம் என்றும், திராவிட இன மானம் என்றும் கருணாநிதி ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறாரே, இதன் மூலம் உண்மையில் அவர் பிராம்மணர்களைத்தான் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார். என்ன தலையெழுத்தோ அல்லது பண்ணின பாவத்துக்குப் பரிகாரமோ இப்படிச் செய்து கொண்டிருக்கிறார் தெய்வம் சிரித்துக் கொண்டிருக்கிறது.”

   (தொடரும்)

   நீக்கு
  4. திராவிட என்னும் பெயரைத் தமிழுடன் இணைக்கும் முயற்சி 1000 ஆண்டுகளுக்கு முன் தான் ஏற்பட்டது. தமிழில் உள்ள கிரந்தங்களுக்கு சமஸ்க்ருதத்துக்கு இணையான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, ராமானுஜ ஆசாரிய பரம்பரையில் ஆழ்வார்கள் அருளிச் செய்த பிரபந்தங்களைத் திராவிட வேதம் என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. அதை மேற்காணும் கட்டுரையில் விவரித்துள்ளேன். ரிக், யஜூர் முதலானவை வடமொழி வேதம் என்றும், திவ்வியப் பிரபந்தத்தை தமிழ் வேதம் என்றும் சொல்லி, அதைத் திராவிட வேதம் என்று வைணவ ஆசாரியர்கள் சொல்லலானார்கள். அந்தப் பெரியோர்கள் வாழ்ந்த இடம் காஞ்சிபுரமாகும், அங்குதான் திராவிடப் பார்ப்பனர்கள், மேற்குக் கடற்கரை திராவிட தேசத்திலிருந்து வந்து குடியேறினார்கள். அவர்களை முன்னிட்டு, அவர்கள் பேசிய தமிழைத் திராவிட பாஷை என்றி குமாரில பட்டர் கூறியுள்ளார்.

   இதுவரை இந்தத் தொடரில் சொல்லாத விஷயம், ஆனால் இந்தத் தொடரின் பின் பகுதியில் சொல்லப்போகும் விஷயம் என்னவென்றால், இந்தப் பார்பப்னர்கள் காஞ்சிக்கு ஏன் வர வேண்டும்? யாராவது இவர்களைக் காஞ்சிக்கு வரவழைத்தார்களா? என்பதே.

   இதற்கு நேரிடையான ஆதாரம் இதுவரை இல்லையென்றாலும், சுற்றுப்பட்ட ஆதாரங்களின்படி, இவர்களும், பல்வேறு மக்களும் (இன்று இவர்களெல்லாம் ஜாதிப் பெயர்களுடன் இருப்பவர்கள்) பல்லவர்களால் காஞ்சிக்கு அழைத்து வரப்பட்டவர்கள், அல்லது பல்லவர்களைத் தொடர்ந்து காஞ்சிக்கு வந்தவர்கள். அந்தப் பல்லவர்கள் யாருடைய வம்சத்தில் வந்தவர்கள் தெரியுமா? மஹாபாரதத்தில் வரும் துரோணரது மகனான அஸ்வத்தாமனது வம்சாவளியினர். இதற்குக் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.

   அவர்களுக்கு சமஸ்க்ருதமே பிரதான பாஷை. அவர்கள் தமிழ் நாட்டுக்கு வந்த போது, இங்கிருந்த பார்ப்பனரது துணைக் கொண்டுதான் ‘கிரந்தம்’ என்னும் மொழியை உருவாக்கினார்கள். அதற்கு முக்கியக் காரணம், சமஸ்க்ருதத்தில் இருப்பது போன்ற க - க (ka, kha, ga, gha) என்பதான உச்சரிப்பு வேறுபாடுகள் தமிழில் இல்லை. அதனால் தமிழைச் சரியாக உச்சரிக்கத் தெரியாத பல்லவர்களுக்காக கிரந்த மொழி ஏற்படுத்தப்பட்டது. இன்று அந்த மொழியினால்தான், தமிழின் எழுத்து வடிவம் பிராம்மி எழுத்திலிருந்து உருவாக்கப்படவில்லை என்பதை நிரூபிக்கலாம். இந்தத் தொடரில் அதுவும் வரும்.

   இங்கு சொல்ல வருவது என்னவென்றால், தமிழுக்குத் திராவிடம் என்னும் பெயர் தமிழ் பேசிய திராவிடப் பார்ப்பனர்களால் ஏற்படுத்தப்பட்டது என்பதே.

   மேற்காணும் கட்டுரையில் சொல்லப்பட்ட ‘திராவிட வேதத்துக்கு’த் துணையாக, ‘திராவிட மாபாடியம்’ என்னும் சிவ ஞான பாஷ்யத்தைச் சொல்லலாம்.

   சிவஞான மாபாஷ்யம் என்பதைத் திராவிட மாபாடியம் என்று சொல்லியிருக்கிறார்கள். 200 ஆண்டுகளுக்கு முன்னர் சிவஞான சுவாமிகளால் எழுதப்பட்ட இந்த பாஷ்யத்துக்கு, திராவிட மாபாடியம் என்று பெயர் சூட்டப்பட்டது 200 வருடங்களுக்குள்தான்.

   திராவிட வேதம் என்று திவ்வியப் பிரபந்தத்துக்குப் பெயர் சூட்டியதற்குப் போட்டியாக இது எழுந்தது. வேதங்களை ஏற்றுக் கொள்ளாவிடில் சிவாகமங்களைப் பிரமாணமாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணத்தைக் கொண்டவர் சிவஞான ஸ்வாமிகள். திவ்வியப் பிரபந்தத்தை வேதம் வேதாங்கம் என்ற பாணியில் விவரித்து, அவற்றுக்கு வேதத்துக்கு ஒப்பான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆசார்ய ஹ்ருதயத்தில்’ அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் நிறுவினதைப் போல, வேதாகமங்களின் அடிப்படியில் சிவஞான போதத்துக்கு பாஷ்யம் எழுதினார். அதைத் திராவிட மாபாடியம் என்று பிற்காலத்தில் அழைத்தார்கள்.

   தமிழ் மொழிக்குத் திராவிடம் என்ற பெயரை எந்தத் தமிழனும், தமிழுக்கு வரி வடிவம் கொடுத்த அகஸ்தியரும் சொன்னதில்லை. ஆனால் தமிழுக்குத் தாங்களாகவே மற்றவர்கள் ஒரு பெயர் கொடுத்தால், அது தமிழ் மொழியின் பெயராகாது. உதாரணமாக, நான் ஜெயஸ்ரீ தான். ஆனால் எனக்கு வேறு ஒரு பெயரை இட்டு ஒருவர் கூப்பிடலாம். அதுவே எனது இயற்பெயராகாது. அப்படி உண்டானதுதான் இவர்கள் சொன்ன திராவிடம்.

   ***

   பெரியவா சொல்லியுள்ள பிற கருத்துக்கள் என்னுடைய தொடரில் வரும் கருத்துக்களுடன் ஒத்துப் போகின்றன என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. அவற்றையும் அடுத்து எழுதுகிறேன்.

   (தொடரும்)

   நீக்கு
  5. ஜெயஸ்ரீ அவர்களே,

   உங்கள் நேரமின்மையை கூட பொருட்படுத்தாமல் எனது கேள்விகளுக்கு மிக விசாலமாக பதில் அளித்தற்கு முதலில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன். எனக்கு இன்னும் சில சந்தேகங்கள்.

   //திரவிட என்பது தமிழ் என்றானது//

   காஞ்சி பெரியவர் தெய்வத்தின் குரலில் இப்படி சொன்னாற்போல் தெரியவில்லையே. அவர் சொன்னது இதற்க்கு எதிர்மறை. கீழே காண்க.

   "தமிழ் என்பதுதான் 'த்ரவிட' ('திராவிடம்'என்பது) "

   அதாவது தமிழ் என்கிற வார்த்தை தான் த்ரவிட என்றாயிருக்கிறது.

   நீங்கள் சொல்வதற்கும் மஹா பெரியவர் சொன்னதற்கும் வித்யாசம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன?

   நீக்கு
  6. பெரியவர் சொன்ன காலக்கட்டத்தில், திராவிட -தமிழ் உருமாற்றம் இருந்த்து என்ற கருத்து இருந்த காரணத்தால் அப்படிச் சொன்னாற்போல இருக்கிறது. ஏனென்றால்

   “மொத்தத்தில் 'தமிழ்'என்பது 'த்ரவிட்' என்றிருக்கிறது.” என்று சொன்ன அடுத்த வரியிலேயே,

   ”இப்போது எல்லாவற்றிலும் தமிழ் சம்பந்தம் காட்டினால் ஒரு ஸந்தோஷம் உண்டாவதால், த்ரவிடாசார்யாரைச் சொல்லும்போது அவருக்குத் தமிழ் சம்பந்தம் காட்டி நாமுந்தான் ஸந்தோஷப்படுவோமே என்று தோன்றிற்று;சொன்னேன்.” என்கிறார்.

   திராவிட - தமிழ் - உருமாற்றக் குழப்பத்தைக் கால்டுவெல் சொல்லாமலும், அதைத் திராவிடவாதிகள் ஊதிப் பெரிது செய்யாமலும் இருந்திருந்தால், இப்படி ஒரு கருத்தே உருவாகியிருக்காது. பெரியவாளும் அதைப் பற்றிப் பேசியிருக்க மாட்டார்.

   ஏனெனில், மொழித் திரிபுகள் நன்கு அறிந்த பெரியவா சாதாரண சமயத்தில் இதைச் சொல்லி இருக்க மாட்டார்.

   சமஸ்க்ருதச் சொல் திரிந்து தமிழில் வழங்கப்பட்டிருக்கிறது. வடசொல் திரியும் இலக்கணமும் தமிழில் இருக்கிறது. அது போல பிற மொழிச் சொல்லை சமஸ்க்ருதம் ஏற்றுக் கொண்டு, அந்தச் சொல் திரியும் இலக்கணமும் சமஸ்க்ருதத்தில் இருகிறதா? இல்லையே.

   ஆனால் ஒரே சொல் தமிழிலும், சமஸ்க்ருதத்திலும் இருக்கிறது. இதற்குக் காரணம் ஒரே சமுதாயத்தால் ஒரே காலக்கட்டத்தில் பேச்சு மொழியாகத் தமிழ் இருந்த போது, சமஸ்க்ருதமும் உருவாகி இருக்க வேண்டும்.
   உதாரணமாக முருகனின் மனைவி வள்ளி. இந்தப் பெயர் சமஸ்க்ருதத்தில் வல்லி என்றாகிறது. வல்லி என்றால் கொடி. அதன் வேர்ச் சொல் சமஸ்க்ருத்த்தில் இருக்கிறது. அதனால் அதன் ஆரம்பம் சமஸ்க்ருத்தில். ஆனால் தமிழ் மக்கள் அழுத்தம் திருத்தமாக வள்ளி என்றிருக்கிறார்கள். அந்த ளகாரம் சமஸ்க்ருதத்தில் கிடையாது.

   (தொடரும்)

   நீக்கு
  7. பொதுவாகவே தமிழர்களுக்கு நாக்கு நன்கு மடிந்து திரும்பும் போல இருக்கிறது. அழுத்தம் திருத்தமாகச் சொல்லக்கூடிய - நாக்கை நன்கு வளைத்துச் சொல்லக்கூடிய ள், ழ், போன்றவை தமிழில் மட்டுமே இருக்கின்றன. மாறாக நுனி நாக்கில் சொல்லும், ஸ,ஷ போன்றவை சமஸ்க்ருதத்தில் இருக்கிறது. அவற்றை உருமாற்றிச் சொல்கிறோம். அழுத்திச் சொல்வது நமக்கு எளிதாக இருக்கவே, க -வர்க, ச வர்க எழுத்துக்கள் என ga, gha ja, jha போன்றவற்றைத் தனியாகத் தமிழர்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை என்று விட்டு விட்டார்கள் போலிருக்கிறது.

   பெரியவா கோடிக் காட்டினது போல ழ என்பது ஷ ஆக சமஸ்க்ருதத்தில் இருக்கிறது. உதாரணமாக அநிருத்தனின் மனைவியான உஷா என்பது தமிழில் ‘உழை’ என்று சொல்லப்படுகிறது என்பதை அடியார்க்கு நல்லார் எழுதிய சிலப்பதிகார உரையில் காண்கிறோம்.

   சமஸ்க்ருதத்துக்கு உரிய ஆனால் தமிழில் இல்லாத ஸ, ஷ,ஹ, க்ஷ போன்றவற்றுக்கு இணையான எழுத்துக்கள் தமிழில் இருக்கிறன

   ஸ் - த் (கௌஸ்துபம் - கௌத்துபம்)
   ஷ - ட (விஷம் - விடம்)
   ஹ - அ (ஹஸ்தி - அத்தி)
   க்ஷ - ட்ச (பக்ஷம் - பட்சம்)

   தமிழுக்கே உரிய ழ சப்தத்தில் ட ள போன்றவை வேதத்தில் ஒலிக்கப்படுகின்றன என்கிறார். இது அரிய, முக்கியமான விவரம். என்னுடைய ஆராய்ச்சிக்கு உதவக்கூடியது.

   அவர் சொல்லும் விதத்தில் தமிழ் என்பதை சமஸ்க்ருதத்தில் மாற்றினால்,
   த - த
   மி - மி
   ழ் - ள்
   என்றுதான் மாறும்
   தமிள், தமிள் என்றுதான் மாறும். த- வும், மி-யும் மாறாது. மாற அவசியமில்லை.
   தமில், தமிலா என்றுதான் மாற முடியும் ள-காரம் சமஸ்ருதத்தில் எழுத்தாக இல்லை.
   அது தமிலா (Damila) என்று மாறி, த்ரமிளா என்று கூட மாறலாம். ஆனால் த்ரமிளா என்பது த்ரவிடா என்று மாற - மி என்பது வி ஆக மாற புணார்ச்சி இயல்பாக நேரிடாதே? வேண்டுமென்றே மாற்றினால்தானே மாறும்?

   மாறாக திரவிடா என்னும் சொல் சமஸ்க்ருதத்தில் இருக்கிறது. பாகவதம், மனுவை த்ராவிடேஸ்வரன் என்கிறதே, தாமிளேஸ்வரன் என்பது த்ராவிடேஸ்வரம் என்றானதா? அப்பொழுது தாமிளம் என்பது தாமிரம் - தாம்ரம் என்ற ஒலியில் அல்லவா இருக்க முடியும்? ஆராய்ச்சியாளர்கள் தாமிளம், தாம்ரம், தாம்ர லிப்தா போன்ற சொற்களோடு உறவாடிக் கொண்டே அதுவே தமிழ் என்கிறார்கள். ஏன் இப்படி கஷ்டப்பட்டு தமிழ் என்னும் சொல்லை சிதைக்கிறார்கள்?

   இப்படிச் சொல்வதெல்லாம், சமஸ்க்ருதத்திலிருந்து, தமிழ் என்ற சொல் பிறந்த்து என்று காட்டுவதற்குப் பயன்படும். ஆனால் தமிழ் என்பது ஆதியில் மதுர மொழி என்றழைக்கப்பட்டு, 12,000 ஆண்டுகளுக்கு முன் இலக்கணப்படுத்தப்பட்ட போது, தனிப் பெயராகத் தமிழ் என்று பெயரிட்டிருக்க வேண்டும். ஏனெனில், பிறப்பியல் சூத்திரம் 83 -இன் அடிப்படையில் உந்தி முதல் பரவும் காற்றே ஒலியாகப் பிறந்து, அது சொல்லாக வந்து, அது எழுத்தாக வருவதால், தமிழ் என்பது வல்லின, மெல்லின, இடையின சொற்கூட்டாக, த-மி- ழ் என்று மூன்றின் தொகுப்பாக, மிகவும் கவனமாகப் பெயரிடப்பட்ட சொல் என்பது என் கருத்து.
   வேறு ஒரு மொழியிலிருந்து மருவியோ, கடன் வாங்கப்பட்டதோ அல்ல.

   தமிழ் என்றால் மது, இனிமை என்னும் பொருளையும் கொடுத்ததால், இப்பெயர் தனிப்பட உருவாகக்ப்பட்ட பெயராக இருக்க வேண்டும்.

   இந்தப் பெயர் திராவிட என்று உருமாறியது என்று சொன்னால், அது இயல்பாக மாற முடியாது என்பதற்கு த்ராவிடாவில் உள்ள ‘வி’ இடைஞ்சலாக இருக்கிறது என்று மேலே சொல்லியுள்ளேன்.

   நீக்கு
  8. பெரியவா கட்டுரையில், என் கருத்துக்கு வலு சேர்ப்பது தலவாகாரத்தில் (சாம வேதத்தில்) ழ சப்தம் இருப்பது என்பதே. என் கருத்தில் சாம வேதமே மிகப்பழமையானது. மதுர மொழி பேசப்பட்ட காலக் கட்டத்தில் அதில் இருந்த இனிமை, பண் காரணமாக சாம வேதமே ஆரம்ப வேதமாக இருந்திருக்க வேண்டும். மதுர மொழியின் ழகாரம் அதில் தொக்கியிருப்பது ஒரு சாட்சி.

   சாகத்தீவில் மாக பிராம்மணர்கள் பின்பற்றிய வேதத்தில் ஒன்றாக சாம வேதம் இருந்திக்ருக்க வேண்டும், பிறகு மனுவைச் சேர்ந்தவர்கள், அரபிக் கடலில் சிறிது சிறிதாக இடம் பெயர்ந்து, முடிவில் சரஸ்வதி தீரத்தில் வந்த போது அங்கு ரிக் வேதம் உருவானது. யஜூரும் அதற்கு முன் இருந்திருக்க வேண்டும்.

   நீக்கு
 9. திருமதி ஜெயஸ்ரீ அவர்களுக்கு
  இந்த வரிசைநடையை பிராமிணர்கள் ஆவிணிஅவிட்டம் பூணுல் அணியும்நாள் அன்று உச்சரிக்கும் மந்திரங்களில் ஒன்று
  1. அ இ உண் : 2. ருலுக் : 3. ஏ ஓங் ; 4. ஐ ஔச் : 5. ஹயவரட் ; 6.லண் ; 7.ஞம ஙண நம் ; 8. ஜ2 ப4 ஞ் 9. க4 ட4 த4 ஷ் ; 10. ஜ ப3 க3 ட3 த3 ச் ; 11. க2 ப2 ச2 ட2 த2 சடதவ் ; 12. கபய் ; 13. சஷஸர் ; 14 ஹல்-இதி
  மாஹேச்வராணி ஸுத்ராணி ( இந்த 14 ஸுத்திரங்கள்தான் அடிப்படை)
  இதற்கும் தமிழ் சமிஸ்கிரத மொழி உச்சரிப்புகளுக்கும் ஒற்றுமை இருக்கிறதா. இதை பற்றி தெரிந்தால் தெளிவுபடுத்தவும்.

  பதிலளிநீக்கு
 10. Dear Mr Vedamgopal
  Brace yourself for a long explanation.

  These 14 sutras are called maheshwara sutras. They traditionally appear as the first portion in the monumental Ashtadyayi of panini.

  In Avani avittam they are chanted as part of Veda arambham. This involves reciting a portion of all the 4 vedas, some portion of all 6 angas of which grammer is one. The vedic semseter for yajur and rig vedas start in august after shravana pournami mostly. For Sama veda it occurs during the time of pillayar chaturti .Traditionally during this period of 6 months from Aug-jan(Till uttarayana) one does read new portions of his own veda shaka. Then During thai one does adhyayana utsarjana(stopping adyayana formally) and takes up the 6 angas for study till next aug.

  Nowadays even vaidhikas do not do adhyayana utsarjana thus (we also) have to do kaamokaarshitjapa as prayaschita. Please check the sankalpa involved for kamokarshit japam.

  I just say this to give a overview of how the vedas are studied. I just gave you a preview of how the vedas are study .

  Now for the maheshwara sutras. This is actually how the aksharas were taught in ancient times. Not in the current way we learn( A, Aa.. ka, kha.. and so on). The maheshwara sutras(MS from now on) are the backbone of the ashtadyayi and without understanding them one cannot understand it.

  The MS is a really very powerful tool. They can be used to abbreviate or form sets of alphabets.

  For example in அ இ உண் is included the longer அ(AA) which is pronounced for 2 matras and also one special அ called pluta which is pronounced 3 matras. so each vowel in the series அ இ உ includes the short long and protracted forms. The ண் is just for completion of the series and not a part. It is similar for all vowel except for ஏ ஓ that are only long vowels in sanskrit and dont have a shortened one. So all vowels are listed from அ இ உண் till ஐ ஔச்(exclude the last alphabet in each sutra).

  So also starting from ஹயவரட்(exclude the last alphbet)till ஹல், all the consonants are listed. You may see all consonants like ka,kha etc listed. There is a reason why they are grouped like this. Alphabets with similar properties are grouped in one sutra for example சஷஸர் are called Ushmas(சஷஸ alone not ர்) in sanskirt. This is because they are pronouced in the same way except that we have to roll the tongue diffently. Another example is ஞம ஙண நம். This involves all nasal alphabets ஞம ஙண ந. Try closing your nose and pronounce these letters. You can see the genius of panini here in this arrangement. This grouping is based on organ of production of sound and effort required.

  So now lets see another example here. We can group of a set of alphabets with a particulary property using abbrevations. For example when we say அச் i.e start from அ in அ இ உண் till the ச் in ஐ ஔச்((Exclude ச் and consider only till ஔ) this covers all vowels, so அச் abbreviates all vowels and technically called by panini called a pratyahara. To a form a pratyahara take any alphabet, except the last one of a sutra and the ending alphabet of a sutra. and combine them. They mean to include all items between the start and end letter(excluding the end letter). So for example இக் means all alphabets starting only from இ in அ இ உண் excluding அ till லு in ருலுக்(Exclude க்)

  பதிலளிநீக்கு
 11. Continuation of previous comment ..

  So these are very much used in paninis sutras and understanding of them is very vital to understand the ashtadyayi. Paninis first sutra

  "Vriddhihi Aadh ஐச்"

  Here panini defines a technical term called(Samgnya) Vriddhi. This means that that for "Aadh"(meaning long அ)the vriddhi is ஐச் meaning the alphabets in the sutra ஐ ஔச். Take the ஐ and the ச் and then combine to form ஐச். So vriddhi for long அ is ஐ & ஔ(exclude ச்).

  I just gave an example to show how panini used this. There are much more sophisticated usuages also. I know this is a very long comment but i felt the need to enumerate on the importance of this because, when this is chanted by the vaadhyar in avani avittam i feel pained seeing people laughing and making jokes out of such a sophisticated concept. Hence this long comment. Technically this not a mantram but the first portion of the ashtadhyayi, chanted as part of the veda arambha. These are the things that make sanskrit a computer friendly language.
  The arrangement of the sutras is a stroke of genius of panini.

  Not so sure how it is related to tamil pronunciation as most of the alphabets especially the Ushmas(ச ஷ ஸ), maha praanas (Kha, dha cha etc) are absent in tamizh.

  If need i can write and article on the overview of ashtadhyai if Jayashree madam is ok with it

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. I understand that Mr Ramanathan had written the above explanation for Mr Vedam Gopal's comment. Thanks Mr Ramanathan.

   With Aavani avittam starts the study of Vedas. Since it is not done nowadays, sages have just recommended a symbolic start of the study of sanskrit by drawing the vriddhi from Ashtadhyayi.

   My observation from the explanation given by Mr Ramanathan is that Tamil also has its own divisions based on how the letter is pronounced - namely Vallinam, mellinam and idaiyinam. Tholkaappiyams' pirappiyal sutras deal with this in an exhaustive way. It is in that chapter, Tholkaappiyar concludes that for any doubts on pronunciation and maatras, one must refer to Vedas sung by Brahmins - I had written that in the 61st article.

   As for comparison between sanskrit and Tamil in this context (raised by Mr Vedam Gopal)yes, they have a similar grammar governing their respective letters. After reading Mr Ramanathan's explanation I am more convinced that the word "தமிழ்" was coined after deep though as each letter of this word த-மி -ழ் stands for respective group of vallinam, mellinam and idaiyinam based on similarities in pronunciation and movement of tongue and sound origin in the body.

   In other words, similar to how Panini categorized the letters in MS, Agasthya (and Lord Shiva) categorized the 18 letters (uyir mei ezuththu) of Tamil in an abbreviated form as 'தமிழ்'.

   The use of similar methodology and sameness in many grammar rules for Tamil and Sanskrit show that the 2 languages were developed simultaneously. Like how the term "Sanskrit" is a coined term, தமிழ் also is a deliberately coined term to give a concise message of how the 18 letters are formed from 3 different locations within the body.

   I welcome articles from you Mr Ramanathan on Ashtadhyayi like how you have explained in simple language in the above comments. Perhaps you can take up specific mantras like MS and show what they convey. I will post them in my English blog as it would help in reaching to English reading public.

   I welcome such articles from anyone for sharing with others. Don't worry about length, I myself write very long articles. Some times it is unavoidable. Also we are not writing to entertain a crowd or to be read as time-pass. These are important intellectual stuff which we read for enhancing our knowledge. So express fully, without worries about the length.

   நீக்கு
  2. //After reading Mr Ramanathan's explanation I am more convinced that the word "தமிழ்" was coined after deep though as each letter of this word த-மி -ழ் stands for respective group of vallinam, mellinam and idaiyinam based on similarities in pronunciation and movement of tongue and sound origin in the body. //

   This shows that the word தமிழ் itself is a mantram! How does Dravida stand here?

   நீக்கு
 12. Madam good original thought. Can you please elucidate more on this?. Like on what are the alphabets found in the group த and son on??. of This sounds interesting

  பதிலளிநீக்கு
 13. Nothing original about it. The fact is we have forgotten that Tamil and Sanskrit were given grammar simultaneously by Shiva.

  ஒரு புறம் பாணினிக்கும், மறு புறம் அகஸ்தியருக்கும் சிவன் உபதேசித்தார் என்பதே வழக்கு. ஆராய்ச்சியாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், பாணினிக்கு ஒரு காலம் போட்டுக் கட்டம் கட்டி விடவே, ஏதோ 2000 ஆண்டுகளுக்கு முன்புதான் சமஸ்க்ருதத்துக்கு இலக்கணம் தோன்றினது போல ஒரு கருத்தை உருவாக்கி விட்டனர்.

  பாணினி என்பது Panini school of Thought என்று இருக்க வேண்டும். தொல்காப்பியம் என்பது 3 ஆம் சங்கத்திலும் இருந்த்து, 2 ஆம் சங்கத்திலும் இருந்த்து, முதல் சங்கத்திலும் இருந்தது என்றும் சொல்லப்படுவது போல, பாணினியும் தொடர்ந்து வந்த ஒரு இலக்கணப் பாரம்பரியம். ’என்மனார் புலவர்’ என்று வாய்க்கு வாய் தொல்காப்பியம் சொல்வது போல முன்பிருந்த நூல்களைப் பாணினியும் சுட்டிக் காட்டுவதால், ஒரிஜினல் பாணினி பழமையான காலத்தில் இருக்க வேண்டும்.

  நிற்க, பாணினி என்னும் பெயர் பாணன் என்னும் தமிழ்ப் பெயரை ஒத்திருப்பதைப் பாருங்கள். இலக்கண சுத்தமாகச் சங்கப் பாடல்களை இயற்றியவர்கள் பாணர்கள். அப்படிப்பட்ட ஆரம்ப காலப் பாணன், சமஸ்க்ருதத்தில் இலக்கணம் எழுதினாரோ?

  7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாணபட்டர் (Banabhattar) மேலும் எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. அவர் ஹர்ஷ வர்த்தனனுடைய ஆஸ்தான்ப் கவி. ஏன் கவிகளும், இலக்கண கர்த்தாக்களும் பாணன் என்னும் பெயரில் இருக்கிறார்கள்? இதை யாரேனும் ஆராய்ந்தார்களா?

  இன்றைக்கு சமஸ்க்ருதம் அனாதையாக இருக்கிறது. பாணினி, பாண பட்டர் போன்றோர் யார் என்று ஆராய யாரும் இல்லை என்பதால் இப்படிச் சொல்கிறேன். தமிழுடன் ஒட்டுதல் உள்ள மக்கள் இருப்பதால், தமிழில் காணப்படும் பெயர்கள், விவரங்கள் ஆகியவற்றைப் பற்றிப் பேச, ஆராய மக்கள் இருக்கிறார்கள். ஆனால் சமஸ்க்ருதத்துக்கு ஆளில்லை. உங்களைப் போன்றவர்கள் ஆராய்ந்து சொன்னால், பாணினிக்கும், பாண பட்டருக்கும், தமிழ்ப் பாணர்களுடன் தொடர்பு இருந்ததா என்று கண்டு பிடிக்க முடியும்.

  இனி உங்கள் கேள்விக்கும், திரு வேதம் கோபால் அவர்கள் கேட்டதற்கும் வருகிறேன்.

  (தொடரும்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. நீங்கள் ஆவணி அவிட்ட மந்திரத்தை (மாஹேஸ்வர சூத்ரம்) விளக்கிய பிறகு, தொல்காப்பியப் பிறப்பியல் சூத்திரத்துக்கும், அதன் முடிவில், அந்தணர் வேதத்தில் இருக்கிறது என்று சொன்னததற்கும் புது அர்த்தம் கிடைக்கிறது.

   சமஸ்க்ருதத்தில் உயிர் எழுத்துக்களை, அவற்றை ஒலிக்கும் மாத்திரை அடிப்படையில் அஷ்டாத்தியாயியில் (சமஸ்க்ருத இலக்கணம்)வகைப்படுத்துயுள்ளார்கள்.

   ஆனால் தமிழில் தொல்காப்பியத்தில், ஒலி பிறக்கும் இடத்தைக் கொண்டு வகைப்படுத்தியிருக்கிறார்கள். அப்படி வகைப்படுத்தி விட்டு, ஒலி பிறக்கும் வகையை நான் கூறியுள்ளேன், அந்த ஒலிக்கு மாத்தி்ரை அந்தணர் மறையில் உள்ளது. அகத்தில் புறப்படும் ஓசைக்கு அங்கு மாத்திரை கொடுத்தார். புலப்படும் ஓசைக்கு நான் இலக்கணம் கொடுத்தேன் என்கிறார்.

   இதனால் ஒலி எழுவதை தமிழ் மூலமாகவும், அதன் மாத்திரயை சமஸ்க்ருதத்தின் மூலமாகவும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் என்பது புலனாகிறது. இந்தக் காரணத்தால், தமிழ், சம்ஸ்க்ருதம் இரண்டையும் தமிழ் மக்கள் படித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. 61 ஆம் கட்டுரையில் நச்சினார்க்கினியர் கூறும் 6 வகைப் பட்ட பார்ப்பன வாத்தியார்கள் எப்படி உருவானார்கள் என்பதும் புரிகிறது.

   தொல்காப்பியர் கூறும் அந்தச் சூத்திரம்,
   பிறப்பியல் 102.


   ”எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து
   சொல்லிய பள்ளி யெழுதரு வளியிற்
   பிறப்பொடு விடுவழி யுறழ்ச்சி வாரத்
   தகத்தெழு வளியிசை யரிறப நாடி
   யளபிற் கோட லந்தணர் மறைத்தே
   யஃதிவ ணுவலா தெழுந்துபுறத் திசைக்கு
   மெய்தெரி வளியிசை யளவுநுவன் றிசினே.”

   இதன் பொருள்:

   எல்லா வெழுத்துங் கிளந்து வெளிப்பட - ஆசிரியன்
   எல்லாவெழுத்துக்களும் பிறக்குமாறு முந்துநூற்கண்ணே கூறி வெளிப்படுக்கையினாலே,

   சொல்லிய பள்ளி பிறப்பொடு விடுவழி - யானும்
   அவ்வாறே கூறிய எண்வகை நிலத்தும் பிறக்கின்ற பிறப்போடே அவ் வெழுத்துக்களைக் கூறுமிடத்து,

   எழுதரு வளியின் உறழ்ச்சிவாரத்தின் அளபு
   கோடல் - யான் கூறியவாறு அன்றி உந்தியில் தோன்றுங் காற்றினது திரிதருங் கூற்றின்கண்ணே மாத்திரை கூறிக் கோடலும்,

   அகத்து எழு வளியிசை அரில் தப நாடிக் கோடல் - மூலாதாரத்தில் எழுகின்ற காற்றினோசையைக்குற்றமற நாடிக் கோடலும்,

   அந்தணர் மறைத்தே - பார்ப்பாரது வேதத்து உளதே ;

   அந்நிலைமை ஆண்டு உணர்க, அஃது இவண் நுவலாது
   - அங்ஙனம் கோடலை ஈண்டுக் கூறலாகாமையின் இந் நூற்கட் கூறாதே,


   எழுந்து புறத்து இசைக்கும் - உந்தியிற்றோன்றிப் புறத்தே புலப்பட்டு ஒலிக்கும்,


   மெய் தெரி வளியிசை அளவு நுவன்றிசினே - பொருடெரியுங் காற்றினது துணிவிற்கே யான் மாத்திரை கூறினேன்;

   அவற்றினது
   மாத்திரையை உணர்க என்றவாறு.

   (தொடரும்)

   நீக்கு
  2. ஒலி பிறக்கும் இடத்தை அறிய தமிழ் இலக்கணமும், அவற்றுக்கு மாத்திரை கணிப்பதை சமஸ்க்ருத இலக்கணமும் கூறுகின்றன என்பதே தொல்காப்பியர் கூறுவதாகும், அதை மேலே கண்டோம். தமிழ் இலக்கணத்திலும் இந்தெந்த எழுத்துக்கு எவ்வளவு மாத்திரை என்ற கணக்கு தரப்பட்டுள்ளது. ஆனால் அவை எப்படி உருவாகின்றன என்பதை வேதத்தின் மூலம், அதில் நீட்டிச் சொல்லும் பாணியின் மூலம் அறியலாம் என்கிறார். சந்தேகம் வந்தால் வேதததின் உச்சரிப்பின் மூலமாகத் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்.

   இனி தமிழ் இலக்கணத்தில் ஒலியின் அடிபப்டையில் வகைப்படுத்திய விதத்தைப் பார்ப்போம்.
   (தொடரும்)

   நீக்கு
  3. உந்தியில் (கொப்பூழில்) ஆரம்பித்து, இதயம், கண்டம் (மிடறு / தொண்டை), மூக்கு, தலை என்று ஒலி செல்லும் இடங்களைக் கொண்டு எழுத்துக்கள் பிறக்கின்றன. இவற்றுடன் பல், இதழ், நாக்கு, அண்ணம் என்று எவையெவை அதில் ஈடுபடுகிறதோ அதைக் கொண்டு வகைகள் ஏற்படுகின்றன என்கிறார் தொல்காப்பியர்.

   இவற்றுள் அ,ஆ முதலிய உயிர் எழுத்துக்கள் அதிகம் திரியாமல் தொண்டையில் எழுவன.இவை இரண்டும் நாக்கு, தொண்டை போன்ற உருவாக்கும் இடத்தானும், முயற்சியாலும் ஒரே வகையைச் சேர்ந்தவை.

   இ, ஈ,எ,ஏ,ஐ ஆகிய ஐந்தும் உருவாக்கும் இடம், முயற்சியால் ஒரே வகையைச் சேர்ந்தவை.

   உ,ஊ,ஒ,ஓ,ஒள ஆகிய ஐந்தும் உருவாக்கும் இடம் முயற்சி (உதடுகளைக் குவித்து ஏற்படுத்துவன) ஆகியவற்றால் ஒரே வகையைச் சேர்ந்தவை என்று தொல்காப்பியம் கூறுகிறது. (பிறப்பியல் சூத்திரங்கள்)

   இதே போல க,ங என்னும் இரண்டும் ஒலி பிறக்கும் விதத்தால் ஒரு வகை. (முதல் நா (அடி நாக்கு) - அண்ணம் சேருவதால் எழுவது)


   ச, ஞ ஆகியவை இடை நா, அண்ணம் சேருவதால் பிறப்பதால் அவை ஒரு வகை.

   ட, ண ஆகியவை நுனி நாக்கு, அண்ணம் சேருவதால் பிறக்கின்றன.

   இந்த முதல் ஆறும் நாக்கு, அண்ணத்தால் எழுபவை.

   இவையே சமஸ்க்ருதத்தில் க வர்கம், ச வர்கம் ட வர்கம் எனவும் ங ஞ ண சேர்த்தும் வருகின்றன. இவற்றை இவ்வாறு வரிசைப்படுத்த சமஸ்க்ருத இலக்கணம் என்ன சொல்கிறது என்று நீங்கள் எழுதலாம்.


   இவ்வாறே ஒலி பிறக்கும் இடத்தைக் கொண்டு த, ந ஒரு வகை.

   ற, ந ஒரு வகை.

   ர,ழ ஒரு வகை.

   ல, ள ஒரு வகை.

   ப, ம ஒரு வகை.

   வ தனி வகை.

   ய தனி வகை.

   இனி மெய் எழுத்துக்கள் ஆறு ஆறாக மூன்று வகைப்படும். அவை வல்லினம், மெல்லினம், இடையினம் என்பன. அவை தனித்து வராமல் சார்ந்து வரும். அப்படி வரும் உயிர் மெய் எழுத்துக்களை இந்த மூன்று வகைகளாகப் பிரிந்துள்ளார்கள். அதைக் கொண்டுதான் ‘தமிழ்’ என்னும் பெயர் இடப்பட்டது என்கிறேன்.

   இந்தப் பாகுபாடுகள், ஒலியானது நின்று நிலைத்து உருவாகும் இடத்தைக் கொண்டு எழுந்தன.

   உயிர் எழுத்துக்களைப் (அ, ஆ ....) பொறுத்தமட்டில் அவை உருவாகும் இடத்தில் அதிக வேறுபாடு இல்லை என்கிறார் தொல்காப்பியர். வாய் அசைவில்தான் மாறுபாடுகள் உள்ளன.

   ஆனால் மெய் எழுத்துக்களில் தொண்டை, மூக்கு, நெஞ்சு ஆகிய மூன்று இடங்களில் ஒலி பிறக்கின்றன. அழுத்தமான ஓசையுடன், தொண்டையில் பிறக்கும் எழுத்துக்கள் க, ச, ட, த, ப, ற என்னும் 6 வல்லினங்கள். இவற்றில் த எடுத்துக்கொள்ளப்பட்டது.

   மெல்லிய ஓசையுடன் மூக்கில் பிறப்பன ங, ஞ,ண, ந, ம, ந என்னிம் 6 மெல்லினங்கள், இ்வற்றில் ம எடுத்துக்கொள்ளப்பட்டது.

   இவற்றுக்கு இடைப்பட்ட ஓசையுடன் நெஞ்சில் பிறப்பன ய,ர,ல,வ,ழ,ள என்னும் 6 இடையினங்கள். இவற்றில் ழ எடுத்துக் கொள்ளப்பட்டது.

   த - ம- ழ ஆகியவற்றின் கூட்டாகவும், பழைய மதுர மொழியின் அர்த்ததையும் கொண்ட தமிழ் என்னும் சொல் இலக்கணப்படுத்தப்பட்ட மதுர மொழிக்கு அளிக்கப்பட்ட புதுப் பெயரானது.

   இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், ஒலிக்கு இலக்கணம் சொன்ன தமிழ் இலக்கணமும், அதற்கு மாத்திரை சொன்ன சமஸ்க்ருத இலக்கணமும், ஒரே வண்டியை இழுக்கும் இரண்டு குதிரைகளைப் போல இருப்பதைப் பார்க்கவும். இதில் தமிழ் திராவிடம் என்றாகவில்லை, திராவிடம் தமிழ் என்றாகவில்லை.

   மாறாக, தமிழை மனித மொழியாகக் கருதினார்கள், சமஸ்க்ருதத்தை தேவ மொழியாகக் கருதினார்கள். தமிழை வீட்டில் பேசினார்கள். சமஸ்க்ருதத்தைப் பாடமாகப் படித்தார்கள். இதுதான் நடந்திருக்கிறது.


   நீக்கு
 14. Dear Madam,
  I am really happy to see so many valuable and true information being published in your blog. I would like to point out a small correction in wordings in the following para of your reply comments, though this will in no way alter the justification of the views you are trying to express. However, for the sake of correct understanding by the readers I would like to mention this.
  அவர்களுக்கு சமஸ்க்ருதமே பிரதான பாஷை. அவர்கள் தமிழ் நாட்டுக்கு வந்த போது, இங்கிருந்த பார்ப்பனரது துணைக் கொண்டுதான் ‘கிரந்தம்’ என்னும் மொழியை உருவாக்கினார்கள். அதற்கு முக்கியக் காரணம், சமஸ்க்ருதத்தில் இருப்பது போன்ற க - க (ka, kha, ga, gha) என்பதான உச்சரிப்பு வேறுபாடுகள் தமிழில் இல்லை. அதனால் தமிழைச் சரியாக உச்சரிக்கத் தெரியாத பல்லவர்களுக்காக கிரந்த மொழி ஏற்படுத்தப்பட்டது. இன்று அந்த மொழியினால்தான், தமிழின் எழுத்து வடிவம் பிராம்மி எழுத்திலிருந்து உருவாக்கப்படவில்லை என்பதை நிரூபிக்கலாம். இந்தத் தொடரில் அதுவும் வரும்.

  The usage of the word 'language' ('mozhi') for grantham is improper. Instead the word 'script' ('lipi', 'ezhuthu') should have been used as grantham is only a script used to write sanskrit and tamil languages.

  பதிலளிநீக்கு
 15. இந்த வலை தளத்தின் மூலம் நான் நிறய தெரிந்து கொண்டேன். அதற்க்கு முதலில் நன்றி. பூம்புகாரில் அகழ்வாராய்ச்சி எதனால் நிறுத்த பட்டது என்பதை நீங்கள் சொன்னால் அது எனக்கு மிக பயன் உள்ளதாக இருக்கும். ஃபேஸ் புக்இல் ஒருவனுடன் நீங்கள் கொடுத்த மற்றும் எனக்கு தெரிந்த தகவல்களை வைத்து வாதம் செய்து கொண்டு இருக்கிறேன். அவன் பூம்புகார் சம்பந்தமாக கேட்ட கேள்விகளை நான் coppy, paste செய்து commentaga போடுகிறேன். பூம்பு
  கார் அகழ்வாய்வு தரும் செய்திகள்
  ==============================
  1. கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர்


  சிறந்திருந்தனர்.
  2. மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது.
  3. சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது.
  4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. (400 அடி என்றும் கூறப்படுகின்றது)
  5. குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது.
  6. கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை இச் செய்தி உறுதி செய்கிறது.
  7. புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.
  8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றன.
  9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில் வடிவம் பெற்றது.
  10. கி.மு. 17000 - 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள் அழிந்துபோயின.
  11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல் நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில் சிறிது சிறதாக அழித்தொழித்தது.
  12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.
  13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப் பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  ஆய்வுகளின் நம்பகத் தன்மை:
  1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.
  2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.
  3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.
  4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
  5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.
  6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.
  7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.
  ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:
  1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.
  2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.
  3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.
  4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
  5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.
  6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.
  7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.
  8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

   ஆனால் நீங்கள் எழுதியுள்ள பல கரு்த்துகளிலிருந்து நான் மாறுபடுகிறேன். அவற்றைப் பற்றி இங்கு எழுத நேரமில்லை. ஆனால் என்னுடைய அனைத்துக் கட்டுரைகளையும் படித்தால் நான் எங்கு, ஏன் மாறுபடுகிறேன் என்று தெரிந்து கொள்ளலாம். இந்தத் தமிழ்க் கட்டுரைகளுடன், என்னுடைய ஆங்கில வலைத்தளத்தில் அவ்வப்பொழுது எழுதி வரும் கட்டுரைகளையும் படித்தால், முற்காலத் தமிழர், மற்றும், இந்திய மக்களது முந்தின வரலாறு ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.

   உங்களது மேற்காணும் கருத்தைக் குறித்து சில மறு மொழிகள்:
   குமரிக் கண்டம் என்று ஒரு நிலப்பரப்பு இருந்ததில்லை. குமரிக் கோடு என்று குமரி மலைத் தொடரைக் குறிப்பிட்டுள்ளதாகத்தான் ஆதாரங்கள் உள்ளன. அந்த மலைத் தொடர் மெற்குத் தொடர்ச்சி மலை, இந்தியப் பெருங்கடலில் மடகாஸ்கர் வரை நீண்டு சென்றுள்ளது. 3 ஆம் கடல் வெள்ளத்தில் (3500 ஆண்டுகளுக்கு முன்) அது கடலில் இறங்கி (subsidence) முழுகி விட்டது. இந்த வலைத் தளத்திலேயே கட்டுரைகளும், படங்களும் உள்ளன.

   தமிழ் இனம் என்று மொழி ரீதியாக ஒரு இனம் இல்லை. உதாரணமாக மரபியல் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பிறமலைக் கள்ளர் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் 40,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆப்பிரிக்க நாட்டவரிலிருந்து தோன்றியவர் என்று ஆராய்ச்சி இருக்கிறது.

   http://www.hindu.com/thehindu/lf/2002/12/14/stories/2002121401540200.htm

   Prof Pitchappan அவர்களது மரபணு ஆராய்ச்சியின் மூலம், பிறமலைக் கள்ளர்கள், குஜராத் யாதவர்கள், மலேசியாவின் சில பகுதியினர் ஒரே மூலத்திலிருந்து, அதுவும் ஆப்பிரிக்க மூலத்திலிருந்து தோன்றினர் என்று தெரிகிறது. ஆனால் இவர்களுக்கு ஆப்பிரிக்காவுடன் நாம் இணைத்துப் பார்க்கும், முக, நிற ஒற்றுமை இல்லை.

   இது போல பல மரபணு ஆராய்ச்சிகளும், ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வழியாக உலகின் பல பாகங்களுக்கு மனிதன் பரவின அடையாளத்தைத் தருகின்றன. இந்தியா என்னும் பொழுது, இன்றைய இந்தியா ஆப்பிரிக்காவிலிருந்து எங்கோ தள்ளி இருக்கிறது. ஆனால். ஆப்பிரிக்காவுக்கும், ஆஸ்திரேலியா - மலேசியா ஆகிய பகுதிகளுக்கு இடையே ஆங்காங்கே தெளித்து விட்டாற் போல சிதறி இருந்த சிறு சிறு பகுதிகளே குமரிக் கண்டம் என்று நாம் நினைக்கும் பகுதிகள். அவை மொத்தம் 49 நாடுகளாக இருந்தன என்பதே தமிழ் நூல்கள் மூலம் நாம் அறிவது. ஏழு ஏழாக பகுக்கப்பட்ட அவற்றின் பெயர்கள் மூலம் (உ-ம்:- குணகரை நாடு, தெங்க நாடு,) அவை கடல் சார்ந்த நாடுகள் அல்லது தீவுக் கூட்டங்கள் என்று அறிகிறோம், இவ்வாறான தீவுகள் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா ஆகியவற்றுக்கு இடையே இருந்தன, அங்கு முற்காலத் தமிழ் பேசப்பட்டது. அதைத் திருத்தி வரி வடிவம் கொடுக்கப்பட்டது 12,000 ஆண்டுகளுக்கு முன். அதன் தொடர்ச்சியாக முதல் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அங்கிருந்த மக்களிலிருந்து வந்தவர்களே இன்றைய இந்தியாவை ஆக்கிரமிக்கவே, அனைத்து இந்திய மொழிகளிலும் தமிழ் (கொடும் தமிழ் எனப்பட்ட அப-ப்ராம்ஸம்) அடையாளங்கள் உள்ளன.

   3 ஆம் கடல் வெள்ளத்தினால், சிதறிய மக்களில் பலர் பசிஃபிக் கடல் வரை பரவி, இன்றைய பாலினேசியா எனபப்டும் தீவுக் கூட்டங்களில் புகலிடம் கொண்டனர். இந்தத் தொடரின் சமீபத்திய கட்டுரைகளில் இதைப் பற்றி எழுதியுள்ளேன். அங்கிருந்து ஒரு பிரிவு தென் அமெரிக்காவுக்கும் சென்றது. இன்கா மக்களில் இதன் அடையாளம் இருக்கிறது. அது போல ஆஸ்திரேலியாவிலும் அடையாளம் இருக்கிறது. அந்த வெள்ளச் சிதறலில், திரையன் எனப்படும் பாண்டியர்கள் கிரேக்க நாடு வரை சென்றிருக்கிறார்கள். அவர்கள் மூலமாக வேத மதத்தின் அடையாளங்கள் அங்கு சென்றிருக்கிறன. தமிழ்ச் சொற்களும் சென்றிருக்கின்றன. பாண்டியன் என்ற பெயருடனும் கிரேக்கத்தில் மன்னர்கள் ஆண்டிருக்கிறார்கள். அவர்களே முற்காலத் தமிழர்கள் என்பதோ, அவர்களே ஐரோப்பா வழியாக சிந்து சமவெளியில் வந்த திராவிடர்கள் என்பதோ தவறு. ஏனெனில் அந்த திரையன், எட்ருஸ்கான் (ஏயிற்றியர்) மரபணுவால் அந்தப் பகுதியில் உள்ள பிற கிரேக்க, ஐரோப்பியர்களுடன் மாறு படுகிறனர். இப்படி எத்தனையோ விவரங்கள் இருக்கின்றன.இவை அனைத்தையும், தமிழ்ச் சங்க நூல்கள், இதிகாச- புராணக் குறிப்புகளைக் கொண்டு, மரபணு, தொல்லியல் ஆராய்ச்சி மூலமாக நிரூபணம் செய்யலாம், நான் செய்து வருகிறேன். இந்த அணுகு முறைக்குத் தேவை, தமிழன் தனிப்பட்ட இனம், அவன் வேத மதத்திலிருந்து மாறுபட்டவன் என்ற குறுகிய மனப்பான்மை இல்லாமல் இருப்பதே.

   (தொடர்கிறது)

   நீக்கு
  2. சில இணைப்புகளைத் தருகிறேன். படிக்கவும். எனது ஆங்கிலத் தளத்திலும் ஆங்காங்கே எழுதியுள்ளேன், படிக்கவும்:- http://jayasreesaranathan.blogspot.in/

   On Graham Hancock's flood researches and Pumpukaar:-

   http://www.grahamhancock.com/archive/underworld/smithMike_poompuhur.php

   மேற்காணும் இணைப்பின் மூலமாக ஹான்காக்கின் தளத்தை அடையலாம் அதில் Click 'atchive' - from there click 'underworld' Then scroll down and see all the under water reteaches. The last one is on Pumpukaar. If you browse you will come across lot of related articles.

   On Hancock's flood theories with pics:-
   http://frontiers-of-anthropology.blogspot.in/2013/11/global-superfloodsand-te-end-of-ice-ages.html

   Another research:
   http://frontiers-of-anthropology.blogspot.in/search/label/Flood%20Legends

   My articles:-

   On திரையன் in Greece:
   http://jayasreesaranathan.blogspot.in/2013/10/is-vedic-astrology-derived-from-greek_29.html

   இந்தக் கட்டுரையிலிருந்து, தொடராகச் செல்லும் பிந்திய கட்டுரைகளைப் படிக்கவும். தமிழ் எப்படியெல்லாம், எங்கெல்லாம் ஆண்டிருக்கிறது என்று தெரிய வரும்.

   ஸ்கந்தன் என்னும் முருகன் பெயர் ஸ்காண்டினேவியா வரை பரவியிருந்தது என்று சொல்லும் கட்டுரை.
   http://jayasreesaranathan.blogspot.in/2013/09/is-vedic-astrology-derived-from-greek_27.html
   இதிலும் ஒரு மரபணு ஆராய்ச்சிக் குறிப்பு வரும். சிவந்த நிறமும், முடியும் கொண்ட அயர்லாந்தினர், முருகன் வந்த சிவந்த நிற அமைப்பைக் கொண்டவர். ரோஹிதர்கள் என்னும் சிவப்பினத்தவர் ஆஸ்திரேலாயா இருக்கும் தெற்குப் பகுதியில் இருந்தனர் என்று வால்மீகி ராமாயணம் கூறுகிறது. அந்த இனத்தில் வந்தவன் செவ்வேள், செந்தில் எனப்படும் இளம் சிவப்பு நிறமுடைய முருகன். அவனைத் தமிழ்க் கடவுளாக ஏறுக்கொண்டுள்ள தமிழர்கள், நிறத்தால், மரபணுவால் அவனை ஒத்தவர்கள் இல்லை. குற மகள் வள்ளியை அவன் மணந்ததால், இந்த ஒட்டுறவு. ஆனால் அந்த முருகன் வழித் தோன்றலாக வேளிர் மன்னர்கள் இருந்திருக்கக் கூடும். துவாரகையிலிருந்து வந்தவர்கள் அவர்கள். பழனியின் அன்னாளைய பெயர் ஆவினன் குடி. இது வேளிர் குடியின் பெயரும் கூட. நிறைய இருக்கிறது. ஒவ்வொன்றாக எழுதுகிறேன்.

   பிற கட்டுரைகள்:

   http://jayasreesaranathan.blogspot.in/2013/11/similarity-in-death-of-tutankhamen-and.html

   இக்கட்டுரைக்குப் பதில் கட்டுரை அமெரிக்க ஆராய்ச்சியாளாரிடமிருந்து:
   http://frontiers-of-anthropology.blogspot.in/2013/11/longears-from-ceylon-to-easter-island.html

   http://frontiers-of-anthropology.blogspot.in/2013/11/letter-from-jayasree-indians-and.html

   இவற்றின் அடிப்படையில் எனது பதில் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிறேன். வெளியிட்டதும் இங்கு தெரிவிக்கிறேன்.

   On Mu, Lemuria and Kumarik kandam:-

   http://jayasreesaranathan.blogspot.in/2012/12/mu-to-lemuria-kumari-kandam-to-sumeria.html

   http://jayasreesaranathan.blogspot.in/2012/12/mu-to-lemuria-kumari-kandam-to-sumeria_21.html


   http://jayasreesaranathan.blogspot.in/2013/08/20000-years-old-temple-like-pyramid.html

   http://jayasreesaranathan.blogspot.in/2013/11/24000-year-old-remains-of-malta-boy.html

   http://jayasreesaranathan.blogspot.in/2013/05/please-and-share.html (This is on Setu, but you will get many inputs)

   http://jayasreesaranathan.blogspot.in/2013/04/tamil-was-human-tongue-or-manushya.html

   http://jayasreesaranathan.blogspot.in/2013/04/hanuman-and-sita-conversed-in-madhura.html
   (தமிழின் வீச்சு)

   நீக்கு
  3. பூம்புகார் ஆராய்ச்சிகள் ஹான்காக்கினால் அவருடைய முயற்சியால் செய்யப்பட்டது. இந்திய, தமிழ் அரசுகளோ, இந்திய தொல்லியல் துறைகளோ ஒன்றும் செய்யவில்லை.

   இன்றும் தமிழ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள், திராவிடம். தமிழன் தனி இனம், சங்க காலம் மிகச் சமீபத்தியது (கி.மு 3 ஆம் நூற்றாண்டுக்குக்குப் பின் எழுந்தது), ராமாயண, மகாபாரதம் புனையப்பட்ட கதைகள் என்னும் எண்ணங்களின் அடிப்படையில்தான் ஆராய்கின்றனர். பன்முனை ஆராய்ச்சிகளோ, விரிந்த பார்வையோ கிடையாது. உதாரணாத்துக்கு, சித்திரை வருடப் பிறப்பைப் பற்றி என்னுடைய இரு கட்டுரைகளைப் படிக்கவும்.

   http://thamizhan-thiravidana.blogspot.in/2012/04/detailed-reply-to-varalaru-dot-com.html

   http://thamizhan-thiravidana.blogspot.in/2012/04/blog-post.html

   நீக்கு
 16. //இவ்வாறு சொல்லியும், தமிழைத் தமிழ் என்றுதான் சொல்கிறார்//

  எனில் திராவிட என்பது தனிச் சொல்லாகவும் தமிழ் என்பது தனிச் சொல்லாகவும் குமாரிலப்பட்டர் குறிப்பிடுகிறார் அப்படித்தானே? எனில் அதன் சமஸ்கிருத வரிகளை தாருங்களே. நான் சில திராவிட அரசியல் வியாதிகளிடம் இதைச் சொன்னால் நம்ப மாட்டேன் என்கிறார்கள். என் தமிழ் நன்பர்களுக்கும் புரிய வைக்க இது உதவும்.

  சமசுகிருத வரிகளும் அதன் Transliteration வரிகளும் தந்தால் உதவியாய் இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இவ்வாறு சொல்லியும், தமிழைத் தமிழ் என்றுதான் சொல்கிறார்//

   இந்த வரிகள், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அவர்களால் எழுதப்பட்ட ‘ஆசார்ய ஹ்ருதயம்’ என்னும் வைணவ நூலில் சொல்லப்பட்டது. கட்டுரையை மீண்டும் படித்து அறியவும்.

   திராவிட மொழி என்னும் சொல்லாட்சியே, நகரேஷு காஞ்சி எனப்பட்ட காஞ்சியில் இருந்த வேத பாடசாலையில் பாரதம் முழுவதிலிருந்தும் மாணவர்கள் வந்து படித்த காலத்தில் - 7 ஆவது நூற்றாண்டு முதல் 13 ஆவது நூற்றாண்டு வரை தான், அந்த பாடசாலையைச் சார்ந்தவர்களால் சொல்லப்பட்ட சொல்லாகும்.

   அங்கே பாடம் சொல்லிக் கொடுத்தவர்கள் தமிழ் பேசிய பார்ப்பனர்கள். இவர்கள் இன்றைய உடுப்பி, துளு முதலிய இடங்கள் உள்ள மேற்குக் கடற்கரைப் பகுதிகளிலிருந்து வந்திருக்ககூடும். அதைத்தான் திராவிடம் என்றும், திராவிடேஸ்வரனான மனு ஆதியில் வாழ்ந்த இடம் என்றும், பரசுராமர் பார்ப்பனர்களைக் குடியமர்த்திய இடமாகும். இது கட்டுக்கதையல்ல என்றும், அப்பொழுதே தமிழ் பேச்சு மொழியாக இருந்தது என்றும் காட்டும் எனது ‘முண்டா” கட்டுரை தொடரையும் படிக்கவும். http://jayasreesaranathan.blogspot.in/search/label/Mundas
   இதில் 10 ஆவது கட்டுரையில் உள்ள விவரங்கள் ஆதியில் இந்தப் பகுதிக்கு இருந்த முக்கியத்துவத்தை விளக்குவது.

   அந்த இடத்தையும் சேர்த்து பஞ்ச திராவிடம் என்று ஐந்து பகுதிகளை அழைத்தார்கள். இவை பார்ப்பனக் குடியிருப்புகள். மேலேயுள்ள கருத்துரைகளில் இந்த விவரங்களைக் காணலாம்.

   கடம்ப நாட்டைச் சேர்ந்த (இன்றைய உடுப்பி, உத்தர கன்னடம் - முண்டா கட்டுரைகளில் இந்த இடத்தில் விவரங்கள் உள்ளன) மயூர சர்மன், திராவிட நாடு என்று காஞ்சிபுரத்தைக் குறிப்பிட்டு அங்கு வந்து பாடம் பயின்றான். தாளகுண்டா கல்வெட்டில் இந்தச் சொல் இருக்கிறது. காஞ்சியைத் தவிர வேறு எந்த தமிழ்ப் பகுதியையும் திராவிடம் என்று எங்குமே சொல்லப்படவில்லை. இந்த இடத்தில் நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். காஞ்சிபுரம் மூவேந்தர் பகுதியில் கரிகால் சோழன் காலம் வரை இல்லை. அப்பொழுதெல்லாம் அது ‘அருவாளர்கள்’ வாழ்ந்த இடமே. அவர்கள் கல் வேலை செய்பவர்கள். தொல்காப்பியம் எழுதவதற்கு முன் துவாரகையிலிருந்து அகத்தியரால் தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்ட 18 வகை மக்களுள் அருவாளர்களும் ஒருவர். அவர்கள் தங்கியது காஞ்சிபுரம். 3000 வருடங்களுக்கு முன்பே இவர்கள் இங்கு வாழ்ந்ததற்கு தொல் பொருள் அடையாளம் இருக்கிறது. எனது கட்டுரையைப் படிக்கவும். http://jayasreesaranathan.blogspot.in/2012/03/vedic-kurma-excavated-near.html

   பட்டினப்பாலையில் ‘தொல் அருவாளர்கள் தொழில் கேட்ப’ என்று வரும். கரிகாலன் அவர்களை அடக்கி, அவர்களிடமிருந்து வேலை வாங்கிக் கொள்கிறான். என்ன வேலை என்று இதுவரை ஆதாரம் கிடைக்கவில்லை. ஆனால் ஊகிக்க முடிகிறது. கல் வேலை செய்யும் அவர்களைக் கொண்டு, கல்லணை கட்டினான். கல்லணைக்காகக் கரிகாலனுக்குப் பெயர். ஆனால் அதைக் கட்டிய அருவாளர்கள், அவனிடம் தோற்று, உதிரம் சிந்தி, வேலை வாங்கப்பட்டுத்தான் கட்டியிருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த காஞ்சியிலிருந்துதான் கல்லுடைக்கும் கருவி (உளி?)யை சாத்தன் கோவிலிலிருந்து பெற்றுக் கொண்டு இமயம் சென்று பெயர் பொறித்தான். கரிகாலன் காலம் வரை அங்கு வேத பாட சாலை இல்லை. காஞ்சியும் நகரேஷு காஞ்சி என்று பெயர் பெறவில்லை. தொண்டை அரசு உருவாக்கப்பட்ட பிறகுதான் காஞ்சி ஒரு நகரமாக ஆகியிருக்கிறது. அவர்களுக்குப் பிறகு பல்லவர்கள் காலத்தில் சமஸ்க்ருதம் காஞ்சியில் வளர்ச்சி பெற்றிருக்கிறது.

   திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோவிலில் கையில் விளக்கேந்திய கோலத்தில் தொண்டைமான் என்று பெயர் பொறித்த வெள்ளி உருவச் சிலை கிடைத்துள்ளது. இதனால் அந்தக் கோவில் தொண்டை அரசர்கள் காலத்திலேயே உண்டாக்கப்பட்டிருக்க வேண்டும். அது உண்மையில் கிருஷ்ணன் கோவில் (பார்த்த சாரதி). துவாரகைத் தொடர்பு கொண்ட அருவாளர்கள் இருந்திருக்கவே, இந்தக் கோவில் உண்டானதற்குக் காரணம் ஏற்படுகிறது. ஆனால் தொண்டைமான் (ஆதொண்டை) அரசு வந்தவுடன் தான் திராவிட பிராம்மணர்களைக் குடியமர்த்துகிறான். அவர்களுடன் துவாரகை தொடர்பு கொண்ட பலரும், முன்பு அகத்தியரால் கொண்டு வரப்பட்ட பலரும் காஞ்சியில் குடியேறியுள்ளனர். அதனால்தான் காஞ்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் துவாரகை அல்லது வட இந்தியத் தொடர்பு கொண்டவர்கள் என்று சொல்கிறேன்.

   நீக்கு
  2. தொடர்ச்சி

   காஞ்சி என்றால் அண்ணா என்று பலரும் நினைக்கிறார்களே, முதலியார் வகுப்பைச் சேர்ந்த அண்ணா அவர்களது முன்னோர்கள், துவாரகை, வட இந்தியா முதலிய பகுதிகளில் இருந்து வந்து குடியேறியதற்கே அதிக சாத்தியம் இருக்கிறது. மேலும், முதலி என்பது, கோயில் சார்ந்த தொழிலில் கல்வெட்டுகளில் காணப்படும் கலைச் சொல்லாகும். கோயில் தர்ம கர்த்தா அல்லது, பணப்பெட்டி காப்பாளர்கள் முதலி என்றழைக்கப்பட்டனர். கோயிலுக்காக ஊழியம் செய்து, கடவுளிடமிருந்து படியளக்கப்பட்ட வம்சத்தில் அண்ணா அவர்கள் வந்திருக்கிறார்.

   நிற்க, நீங்கள் கேட்ட விஷயத்துக்கு வருவோம்.
   தமிழைத் தமிழ் என்றும் ‘ஆகஸ்தியம்” (அகத்தியம்) என்றும் சொல்லும் ஆசார்ய ஹ்ருதயம் நூலை இங்கே பதிவிறக்கம் செய்யவும். http://www.scribd.com/doc/158472649/Acharya-Hrudayam-of-Azhagiya-Manavala-Perumal-Nayanar-With-Vyakhyanam-of-Sri-Manavala-Mamunigal

   குமரில பட்டர் சொன்ன கருத்து (தத் யதா த்ராவிட பாஷ்யம்....) இந்த இணைப்பில் உள்ளது.
   http://catdir.loc.gov/catdir/samples/cam041/2003282070.pdf

   இணையத்தில் தேடிப் பார்த்த போது, முழு நூலும் சமஸ்க்ருதத்தில்தான் காணக் கிடைக்கிறது.

   அந்த வரிகளில் அவர், சமஸ்க்ருதத்தை மூல மொழியாகவும், அதிலிருந்து தமிழ் வந்ததாகவும் வாதிடுகிறார். சோறு முதலான சொற்களை அவர் அதன் அடிப்படையில்தான் விளக்குகிறார். இதை ஏற்றுக் கொள்ளும் தமிழர் யாராவது இருக்கிறார்களா? அல்லது அவர் சொல்லும் சொல்-மாற்றம் (மேல் காணும் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது), தமிழ் இலக்கணத்துக்கு ஒத்து வருகிறதா?

   அவர், தமிழ் பேசிய தனது ஆசிரியர்கள் சொல்லும் கருத்துகள் வேதம் போல ஏற்கத் தக்கவையே என்று நிரூபிக்க, திராவிட பிராம்மணர் பேசிய மொழி, திராவிட மொழி என்ற எண்ணத்தில் எழுதி வைத்தார். அதைக் கால்டுவெல் எல்லா தென்னிந்திய மொழிக்கும் பொதுப் பெயராகச் சூட்டி விட்டார்.

   ஆனால் தமிழை ‘மதுர மொழி’ என்றே பாரதம் முழுவதும், ஏன், ராமாயண காலத்திலேயே அழைக்கப்பட்டது. ஸீதையும், அனுமனும் பேசிய மொழி மதுரம் என்றழைக்கப்பட்ட தமிழ் மொழியே. எனது விரிவான ஆராய்ச்சிக் கட்டுரையை இங்கே படிக்கவும் : http://jayasreesaranathan.blogspot.in/2013/04/hanuman-and-sita-conversed-in-madhura.html

   மேலும் திராவிடம் பற்றி அறிய, இந்தத் தொடடின் 48 ஆவது கட்டுரை முதல் படிக்கவும்.

   நீக்கு
 17. //ஆசார்ய ஹ்ருதயம்//

  புரிகிறது அம்மா. எனில் "ஆசார்ய ஹ்ருதயம்" நூலில் தமிழை தமிழ் எனக் குறிப்பிடும் சமஸ்கிருத வரிகள் இருந்தால் போதும்.

  என்னிடம் வாதிக்கும் திராவிட வியாதிகள் தமிழை சமச்கிருதத்தில் எல்லா இடத்திலும் திராவிட என்று தான் சொல்கின்றனர் என்கிறார்கள். அவர்களிடம் திராவிடப் பிராமணர், ஆராம திராவிடலு பிராமணர் போன்றவற்றை சொன்னவுடன் தான் அவர்கள் கொஞ்சம் காது கொடுத்து கேட்டார்கள்.

  இருந்தாலும் தமிழ் என்பதும் திராவிட என்பதும் ஆசார்யஹிருதயத்தில் வந்தால் அதற்கான சமஸ்கிருத வரிகள் கூட போதுமானது.

  தமிழ் என்பதை சமஸ்கிருதத்தில் எப்படி எழுதுகிறார்கள்? தமில் என உச்சரிப்பு வரும்படி தானே? எனெனில் ழகரம் சமசுகிருதத்தில் கிடையாதே.

  இல்லை வேறு எப்படியும் எழுதுகிறார்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // "ஆசார்ய ஹ்ருதயம்" நூலில் தமிழை தமிழ் எனக் குறிப்பிடும் சமஸ்கிருத வரிகள் இருந்தால் போதும்.//

   ஆசார்ய ஹ்ருதயம் மணிப்ரவாள நடையில் உள்ளது. அது தமிழ்தான். ஆனால் சமக்ருதம் கலந்த தமிழ். அதுவே மணிப்ரவாளம் ஆகும். உதாரணமாக இதன் பெயரிலேயே ஆசார்யன் என்பது சமஸ்க்ருதம், அதுவே தமிழில் ஆசான், ஆசிரியன் என்று உள்ளது. ஹ்ருதயம் என்பது சமஸ்க்ருதம். அதுவே தமிழில் இதயம் என்று இருக்கிறது. இந்தப் பெயரிலேயே, சமஸ்க்ருதமும் தமிழும் ஒன்றாக இருக்கிறது. ஆனால் உச்சரிப்பில் மாறுபடுகிறது. இதற்கு ஆதாரமாக தொல்காப்பியத்தில் பிறப்பியல் சூத்திரங்களின் முடிவில்

   “எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
   சொல்லிய பள்ளி யெழுதரு வளியின்
   பிறப்பொடு விடுவழி உழற்ச்சி வாரத்
   தகத்தெழு வளியிசை யரில்தப நாடி
   அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே”

   என்றும்,

   “மெய் தெரி வளியிசை அளபு நுவன்றிசினே’
   என்றும் சொல்லியிருப்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
   இதை திராவிடவாதிகளுக்கு நாம் அறிவுறுத்த வேண்டும், இதன் விளக்கங்களை இந்த்த் தொடரின் 61 ஆவது கட்டுரையில் படிக்கவும். http://thamizhan-thiravidana.blogspot.in/2011/07/61_12.html


   உங்கள் கேள்விக்கு வருகிறேன். ஆசார்ய ஹ்ருதயம் சமஸ்க்ருத்த்தில் எழுதப்படவில்லை. மணிப்ரவாள நடையில் உள்ள அதனை இங்கிருந்து தரவிறக்கம் செய்து படிக்கவும்,

   http://www.scribd.com/doc/158472649/Acharya-Hrudayam-of-Azhagiya-Manavala-Perumal-Nayanar-With-Vyakhyanam-of-Sri-Manavala-Mamunigal

   அதில் தமிழைத் தமிழ் என்றும், ஆகஸ்தீயம் (அகத்தியம்) என்றே சொல்லியிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வரியைத்தான் நான் கட்டுரையில் மேற்கோளிட்டிருக்கிறேன். இந்த நூல், முழுக்க முழுக்க செந்தமிழ், நற்றமிழ், இன் தமிழ் என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ள ஆழ்வார்கள் இயற்றிய திவ்வியப் பிரபந்தப் பாடல்களை மேற்கோள் காட்டியே எழுதப்பட்டுள்ளது. இந்த ஒரு நூலில் மட்டும் தான் திராவிட பாஷை என்ற சொல்லாடல்கள் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளன. அது எப்படி என்று விளக்குகிறேன். இந்த நூலைத் தரவிறக்கம் செய்து நீங்களே படித்துக் கொள்ளலாம்.

   முதல் அத்தியாயம் 39 ஆவது சூர்ணையில் ’வேதம் பஹுவிதம்” என்று சொல்லப்படுதிறது. இதற்கு வேதம் பலவிதம் என்று பொருள். அப்படியென்னென்ன பலவிதம் என்றால், அடுத்த சூர்ணையில் சொல்லும்போது ‘திராவிடம்’ வருகிறது.
   “இதில் சம்ஸ்க்ருதம் த்ராவிடம் என்கிற பிரிவு ருகாதி பேதம் போலே” (40 ஆவது சூர்ணை)
   திராவிடவாதிகளிடம் இதைக் காட்டுங்கள். பலவிதமான பிரிவிகளை உடைய வேதத்தின் ஒரு பிரிவு திராவிடம் என்று இங்கு சொல்லியுள்ளார்கள். இதை அவர்கள் ஒத்துக் கொள்கிறார்களா? கேளுங்கள்.

   இந்த வரிக்கு அர்த்தம், ருக், யஜூர் என்பது போல பிரிவுகள் சமஸ்க்ருத வேதத்துக்கு உண்டு. அது போல திராவிட வேதத்துக்கும் உண்டு. இந்தப் பிரிவுகள் ஆழ்வார்கள் அருளிச் செய்த திருவாய்மொழி, திருமாலை போன்றவையே என்று, இந்த நூலில் பின்னால் நிரூபிக்கிறார்கள். திவ்வியப் பிரபந்தத்துக்கு, சமஸ்க்ருத வேதத்துக்குச் சமமான அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்பதற்காக இங்கே திராவிடம் என்ற பேச்சு வருகிறது.

   நான் முன்பே சொன்னது போல, திராவிட பிராம்மணர்கள் பேசிய மொழியைத் (தமிழை) திராவிட மொழி என்றார்கள். இந்தச் சொல்லாடல் காஞ்சிபுரத்தில் மட்டும் தான் இருந்தது. அதிலும், காஞ்சி வேத பாடசாலை பிரசித்தமாக இருந்த 7 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரைதான் இருந்த்து என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

   இனி அடுத்த வரியைப் பார்ப்போம். சமஸ்க்ருதம் போல திராவிடமும் என்று சொல்லிவிட்டு, அடுத்த வரியில் (சூர்ணை)

   “செந்திறத்த தமிழ் என்கையாலே ஆகஸ்தியமும் அநாதி” (41)

   என்று தமிழ் என்னும் சொல்லைத்தானே பயன்படுத்தி உள்ளார்?

   இதற்கு அடுத்த வரியில்,
   “வடமொழி மறை என்றது, தென்மொழி மறையை நினைத்திறே” (42)

   என்று, தென் மொழி என்னும் சொல்லை ஆள்கிறார் பாருங்கள். தமிழ் தென் மொழி, அதனால் சமஸ்க்ருதத்துக்கு வட மொழி என்று பெயர். அதிலும், தென்மொழியில் மறை இருப்பதாலேயே, வடமொழி மறை என்றார்கள் என்று ஒரு போடு போடுகிறார் ஆசிரியர்!

   அடுத்த சூர்ணையில், வடமொழி வேதத்துக்கு அங்கங்கள் இருப்பது போல, தமிழ் வேதத்துக்கும் அங்கங்கள் உள்ளன என்று சொல்ல வருகையில் திராவிடத்துக்கு என்று சொல்லவில்லை. ‘இருந்தமிழ் நூல்ப் புலவர் பனுவல் ஆறும்” என்று தமிழைத்தான் முன் நிறுத்துகிறார். திராவிட மொழியில் இப்படி இருக்கிறது என்று எந்த பாடலையும் இந்த நூலில் மேற்கோள் காட்டவில்லை. மாறாக, தமிழில் இருக்கிறது என்றுதான் பல முறை சொல்லப்பட்டுள்ளது. தமிழைத் தமிழ் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள், திராவிடம் என்று சொல்லவில்லை.

   (தொடரும்)

   நீக்கு
  2. மீண்டும் 45 ஆவது சூர்ணையில், ‘வேத நூல், இருந்தமிழ் நூல் ஆஞ்ஞையாணை” என்று தமிழ் நூல் என்றுதான் சொல்லியிருகிறதே தவிர, திராவிட நூல் என்று சொல்லவில்லை. ஆனால் திவ்வியப் பிரபந்த்த்தைத் திராவிட வேதம் என்று சொல்லும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதை 70 ஆவது சூர்ணையில் காண்கிறோம். அதில்தான் முதன் முதலில் தமிழையும், திராவிடத்தையும் ஒன்றாகச் சொல்லி இருக்கிறது.
   “அதவா, வேத வேத்ய, ந்யாயத்தாலே பரத்வ, பர அமுது வேதம், வியூஹ, வ்யாப்தி, அவதரணங்களில் ஓதின நீதி கேட்ட மனு படுகதைகளாய், ஆகமூர்த்தியில் பண்ணிய தமிழானவாறே வேதத்தைத் த்ராவிடமாகச் செய்தாரென்னும்”.

   வேத வேத்யம் இதெல்லாம் சமஸ்க்ருதத்தில் இருப்பது. இதை மனு கேட்டிருக்கிறான். அவற்றைத் தமிழில் சொன்னது த்ராவிட வேதம் ஆகும் என்பது இதன் பொருள். அதிலும் “ஆகமூர்த்தியில் பண்ணிய தமிழானவாறே” என்று 4000 பாடல்களிலும், திருச்சந்த விருத்தப் பாடலில் வரும் ஆக மூர்த்தி வரியை முன்னிட்டு, அப்படிப்பட்ட தமிழ் என்று சொல்வானேன்? காரணம் தமிழுக்கே உரிய ஓசை நயமும், இசை வளமும் திருச் சந்த விருத்தப் பாடல்களில்தான் மிகுதியாக உள்ளன. இசை நயம் இல்லாதவன் கூட இந்தப் பாடல்களைப் படித்தாலே போதும், அதில் இசை ததும்பும். அப்படிப்பட்ட பாவில் ஒன்றை மேற்கோளாகக் கொண்டு அப்படிப்பட்ட தமிழ் என்கிறாரே, அதை த்ராவிடம் என்று சொல்லவில்லை.

   இந்த சூர்ணையில் ஒரு ‘க்ளூ’ இருக்கிறது. ஆசிரியர் மனுவை இங்கு கொண்டு வருகிறார். சமஸ்க்ருதத்தில் அன்று வேதம் கேட்டவன் மனு. இருக்கட்டும்,.அவனுக்கு இந்த வரியில் என்ன வேலை? காரணம், அவன் திராவிட அரசன், அதனால் தமிழில் உள்ள பாடல்கள் வேதத்துக்கு ஒப்பானவை. அதனால் அது த்ராவிட வேதம் என்று ஆசிரியர் எழுதி இருக்கிறார்.

   மனுவைத் திராவிட அரசன் என்று நம் திராவிட வாதிகள் ஒத்துக் கொள்வார்களா? ஸ்ரீமத் பாகவதம் அவ்வாறு கூறுகிறதே! அந்த வரிகளைப் படியுங்கள். (49 கட்டுரையில் விரிவாகக் கொடுத்துள்ளேன்)

   ”யோசௌ ஸத்யவ்ரதோ நாம ராஜரிஷி திராவிட ஈஸ்வர
   ஞானம்யோதீத கல்பாந்தே, லேபே புருஷ சேவயா
   ஸவை விவஸ்வத புத்ரோ, மனுர் ஆஸீத் இதி ஸ்ருதம்
   த்வதஸ் தஸ்ய சுதாப்ரோக்தா இக்ஷ்வாகு ப்ரமுகா.” (9-1.2&3)


   இதன் பொருள் :-
   ”ராஜ ரிஷியான ஸத்யவ்ரதன் என்றழைக்கப்பட்ட திராவிட தேசத்து அரசன்,
   பரம புருஷனுக்குச் செய்த தொண்டின் காரணமாக,
   முந்தின கல்பத்தின் முடிவில் ஞானம் பெற்றான்.
   உண்மையில் அவன் விவஸ்வானின் மகனான மனு.
   அவனுடைய மகனான இக்ஷ்வாகுவின் வழியில் வந்த மன்னர்கள்... “

   திராவிடம் என்பது ராமன் பிறந்த இஷ்வாகு குலம் உண்டாவதற்கு முன்பே இருந்திருக்கிறது. அதை ஆண்ட மனு சுத்த ஆரியன். ஆனால் அவன் நாடு திராவிடம். அவன் பேசிய மொழி தமிழாக இருந்திருந்தால்தான், தமிழ்ப் பிரபந்தங்களை திராவிட வேதம் என்று குறிப்பிட்டிருக்க முடியும்.

   இதுதான் ஆரம்ப ஆதாரம். இது காட்டுவது, தமிழ், அல்லது, கொடும் தமிழ் அல்லது ஆதி தமிழ் (Proto Tamil) பேசப்பட்டிருக்கிறது. அதைப் பேசிய மனுவின் வழியில்தான் மொத்த பாரத மக்களுமே வந்திருக்கிறார்கள். அவனுடன் இருந்த ரிஷிகளும் அந்த ஆதி தமிழ்தான் பேசியிருக்க வேண்டும். அவனுக்கு ஹோம கார்யங்கள் செய்த பிராம்மணர்களும் தமிழ்தான் பேசியிருக்க வேண்டும்.

   அப்படிப் பார்க்கும் போது, திராவிடம் என்ற இருப்பிடம் எது என்றறிய காஸ்மீர நூலான ராஜ தரங்கிணி சொல்லும் “பஞ்ச திராவிடம்: உதவுகிறது.

   53 ஆவது கட்டுரையில் படமாகக் காட்டியுள்ளேன்.

   http://thamizhan-thiravidana.blogspot.in/2011/05/53.html பார்க்கவும், படிக்கவும். இந்த இடங்கள் மேற்குக் கடற்கரையில் உள்ளன. அதன் விவரங்களையும், படங்களையும் ‘முண்டா” தொடரின் 10 ஆவது கட்டுரையில் காட்டியுள்ளேன்.

   http://jayasreesaranathan.blogspot.in/search/label/Mundas

   அந்த இடங்கள் எல்லாம் முழுகி விட்டன. ஆனால் பரசுராமர் (7000 ஆண்டுகளுக்கு முன்) அவற்றை மீட்டு, ஆதியில் மனுவுடன் இருந்த பிராம்மணர்களை அங்கு குடியமர்த்தினான். அவர்களில் ஒரு பகுதி ஆதொண்டையால் காஞ்சிபுரத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களால் காஞ்சிக்குத் திராவிட நாடு என்ற பெயர் வந்தது (தாளகுண்டா கல்வெட்டு). காஞ்சிக்குக் கல்வி பயில வந்த வட இந்திய மக்கள் அந்த திராவிட பிராம்மணர்கள் பேசின தமிழைத் திராவிட மொழி என்று அழைக்கலாயினர். அதைக் கொண்டு அந்த பிராம்மணர்கள் ஆழ்வார்கள் அருளிய பிரபந்தங்களுக்கு, வடமொழி வேதத்துக்கு இணையான அங்கீகாரம் பெற வேண்டி, வேதத்தைப் போன்றதே ஆழ்வார்கள் பாசுரங்களும், எனவே அங்கு சமஸ்க்ருத வேதம் என்றால், இங்கு திராவிட வேதம் என்று நிலை நாட்டி, திவ்வியப் பிரபந்தத்துக்கு கோயில்களில் முன்னுரிமை பெற்றார்கள்.

   இதன் அடிப்படையில், வேதம் என்னும் அங்கீகாரம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் திராவிட மாபாடியம் 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இதைப் பற்றி மேலே கருத்துரையில் எழுதியுள்ளேன்.

   (தொடரும்)

   நீக்கு
  3. உங்கள் அடுத்த கேள்விக்க்கு வருவோம்.

   // தமிழ் என்பதை சமஸ்கிருதத்தில் எப்படி எழுதுகிறார்கள்? தமில் என உச்சரிப்பு வரும்படி தானே? எனெனில் ழகரம் சமசுகிருதத்தில் கிடையாதே.

   இல்லை வேறு எப்படியும் எழுதுகிறார்களா?//

   எந்த சமஸ்க்ருத நூலிலும் தமிழ் என்று எழுதப்படவில்லை. அது போலவே திராவிட மொழி என்று எந்த சமஸ்க்ருத நூலிலும் எழுதப்படவில்லை. ஆனால் திராவிடம் என்று ஒரு இடத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அவற்றை மற்ற கட்டுரைகளில் எழுதி இருக்கிறேன், படிக்கவும். ஆனால் அந்த திராவிடம் என்பது தமிழ் நாடு அல்ல. பஞ்ச திராவிடம் இருந்த மேற்குக் கடலோரப் பகுதியே. இடத்தைக் கொண்டு அங்குள்ள மக்களுக்குத் திராவிடர் என்று பெயர்.

   மஹாபாரத்த்தில் ஒரு வரி வருகிறது. அதில் திராவிடர், பாண்டியர், சோழர், கேரளர் (சேர்ர்) என்ற அனைவரும் பாண்டவ சைன்யத்தில் இருந்தனர் என்று சொல்லப்படுகிறது.

   In verse Book 8- Chapter 8 – verse 15

   सात्यकिश चेकितानश च दरविडैः सैनिकैः सह
   15 भृता वित्तेन महता पाण्ड्याश चौड्राः स केरलाः

   sātyakiś cekitānaś ca draviḍaiḥ sainikaiḥ saha
   15 bhṛtā vittena mahatā pāṇḍyāś cauḍrāḥ sa keralāḥ

   ”சாத்யகீஸ் சேகிதானஸ் ச த்ரவிடை சைனிகை சஹ
   ப்ருதா வித்தேன மஹதா பாண்டியாஸ் சௌடாஸ் ச கேரளாஹ்”

   (பொருள்:- சாத்யகி, சேகிதானர் ஆகியோர் திராவிடப் படைகளுடன், அதிக பலம் கொண்ட பாண்டியர், சோழர், கேரளர்” ஆகியோரும்)

   எங்குமே தமிழகம் என்று எந்த நூலிலும் சொல்லப்பட்டதில்லை. அன்றைக்கு எந்த நாட்டையுமே மொழியின் பெயரால் குறிப்பிடவில்லை. தமிழ் நாட்டைப் பற்றிச் சொல்லும் போதெல்லாம், ஆண்ட அரசர் பெயரால், பாண்டிய, சோழ, சேர என்றே மஹாபாரதத்திலும், ராமாயணத்திலும் சொல்லப்பட்டுள்ளது. மேற்சொன்ன வரியின் மூலம் இவர்கள் மூவருடன் தமிழ் நாடு முடிந்து விட்டது. செந்தமிழ் மொழியும் முடிந்து விடுகிறது. இவர்களுள் திராவிடம் இல்லை. அது வெளியில் இருந்தது. திவாகர நிகண்டு ஒரு சாட்சி. மேலே ஒரு கருத்துரையில் சொல்லியிருப்பேன் பாருங்கள்.
   (தொடரும்)

   நீக்கு
  4. தமிழ் நாட்டைச் சுற்றி இருந்த 18 நாடுகள் என்று திவாகர நிகண்டு தரும் பெயர்களில் திராவிடம் இருப்பதைக் காணலாம்.

   1.அங்கம்
   2.வங்கம்
   3.கலிங்கம்
   4.கௌசிகம்
   5.சிந்து
   6.சோனகம்
   7.திராவிடம்
   8.சிங்களம்
   9.மகதம்
   10.கோசலம்
   11.மராடம்
   12.கொங்கணம்
   13.துளுவம்
   14.சாவகம்
   15.சீனம்
   16.காம்போஜம்
   17.பருணம்
   18.பர்ப்பரம்.

   இனி உங்கள் அடுத்த கேள்விக்கு வருவோம். ழகரம் – சமஸ்க்ருதத்தில் இது எவ்வாறு எழுதப்படுகிறது?

   மேலே காட்டியுள்ள மஹாபாரத வரியில் சோழா என்பதை சௌடா चौड्राः என்று எழுதியிருப்பதைக் காணலாம். சௌடா அல்லது சோடா அல்லது சௌலா அல்லது சோலா என்றே சமஸ்க்ருத்த்தில் எழுதியுள்ளார்கள்.

   சௌலா என்றால் சமஸ்க்ருதத்தில் குடுமி என்று பொருள். ‘சோழியன் குடுமி சும்மா ஆடாது” என்னும் பழமொழி தமிழில் இருப்பதால், சௌலா – சோழா இரண்டும் ஒரே சொல்லின் வடிவங்கள் என்று நினைக்கிறேன். முதல் சோழன் சிபியின் வம்சத்தில் வருகிறான். சிபி என்றொரு இடம் இன்றைய பாகிஸ்தானில் உள்ளது. அங்கு சிபியின் வம்சத்தினர் வாழ்ந்தனர் என்பதற்கு, மஹாபாரதத்தில் ஆதாரம் உண்டு. அந்த இடத்துக்குப் பக்கத்தில் ‘சோலிஸ்தான்” என்னும் இடம் இன்றும் இருக்கிறது. அது சிந்து சமவெளி நாகரிக அடையாளங்களைக் கொண்டுள்ளது. 5000 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு நகர வாழ்க்கை இருந்திருக்கிறது. அந்தப் பகுதியிலிருந்து சோழவர்மன் சோழ பரம்பரையை பூம்புகாரில் நிறுவியிருக்கிறான். காவிரி ஓடுவதற்கு முந்தின காலம் அது. சோழன் என்னும் பெயருக்குத் தமிழில் அர்த்தம் கிடையாது. அது இடுகுறிப் பெயராக எடுத்துக் கொள்கிறோம். ஆனால், சோலிஸ்தான் என்னும் இடம் சிபி என்னும் இடத்தை ஒட்டி அமைந்துள்ளதாலும், சோலா என்றால் குடுமி என்னும் பொருள் உள்ளதாலும், சோழனும், அவன் பெயர்க் காரணமும் அங்கு இருக்கிறது எனலாம். அந்தகாலச் சோழர்கள் முன் குடுமி வைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் சோழிய பிராம்மணர்கள் முன் குடுமி வைத்திருப்பார்கள்.

   சோலிஸ்தானம், சிபி ஆகிய பகுதிகளுக்கு அருகில்தான் Brahui மொழி பேசப்படுகிறது. இந்த மொழியில் தமிழ்க் கலப்பு அதிகம், சோழன் தொடர்பால் மிச்ச சொச்ச அடையாளமாக அங்கு தமிழ் தங்கியிருக்க வேண்டும்.

   இந்தத் தொடர்புகள், தமிழ் எங்கும் பேசப்பட்டமைக்குச் சான்றாக இருக்கின்றன. திராவிட மனுவே தமிழ் பேசினவன்.

   ழகரம் தான் தமிழ் அன்றே இருந்த்தைக் காட்டும் சான்றாகும். ழ- ட- ல என்பவை ஒன்றுக்கொன்று மாற்றி பயன்படுத்தப்படுகிறன். அதாவது தமிழில் சோழ என்றால், சமஸ்க்ருதத்தில் (இன்றைய பிற மொழிகளிலும்) சோல என்றோ அல்லது சோட என்றோ மாறுகின்றன. இதைப் பற்றி காஞ்சி பரமாசாரியர் அவர்கள் எழுதியவற்றை இங்கு படிக்கவும். தமிழ் ஆர்வலர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று:- http://www.kamakoti.org/tamil/Kurall87.htm

   (தொடரும்)

   நீக்கு
  5. அதில் அவர் கூறுகிறார் – சாம வேதத்தில் ழகரம் உச்சரிக்கப்படுகிறது. ரிக் வேதத்தின் முதல் வரியில் வரும் ‘அக்னிமீலே” என்னும் சொல் உண்மையில் அக்னிமீழே என்று ழகாரத்துடன் உச்சரிக்கப்படுகிறது என்கிறார். அங்கு சமஸ்க்ருதத்தில் எழுதப்படும் எழுத்து ‘ல’ (ल) அல்ல. அது இவ்வாறு இருக்கிறது: ळ

   இது குறித்து சமீபத்தில் வட இந்திய, வேத அறிஞர்களுடன் ஒரு விவாதம் நடைபெற்றது. அதன் மூலம் பல சொற்களில் இந்த ळ இருப்பதை அறிந்தேன். ஆனால் இன்றைக்கு யாருக்கும் அதன் உச்சரிப்பு தெரியவில்லை. சிலர் ‘ல’ என்றும், சிலர் ‘ட’ என்றும் அதை உச்சரிக்க வேண்டும் என்றார்கள். உதாரணாமாக பாணினிக்கு முன் இருந்த ஒரு இலக்கண கர்த்தா வியாலி என்பவர். அவர் பெயர் व्यलि அல்லது व्याळि என்று எழுதப்பட்டுள்ளதாகச் சொன்னார்கள். அத்துடன் ळ என்பது ‘அக்னிமீலே’ யிலும் இருப்பதாகச் சொன்னவுடன், எனக்கு காஞ்சிப் பெரியவர் சொன்னது நினைவுக்கு வந்தது. அவர்களுக்கு அதைத் தெரியப் படுத்தினேன். ஆனால் தமிழ் அதன் ழகரம் தான் அந்த வரியிலும், சாமவேத்த்திலும், பல ரிக் வேத வரிகளிலும் இருக்கிறது என்பதை எடுத்துக் கொள்ளும் மன நிலை யாருக்கும் இல்லை.

   எனக்கு இதில் ஒரு பெரிய பொக்கிஷத்தையே கண்டு பிடித்த சந்தோஷம் ஏற்பட்டது. ஏனென்றால் அந்தப் பெயரைப் பாருங்கள் – வ்யாழி (அவர்கள் வ்யாலி என்கிறார்கள்) ஆனால் அங்கு இருப்பது ல அல்ல ழ (ळ). வ்யாழி என்ற சொல் வியாழன் என்பதன் ஆதி சொல் என்பது போல இருக்கிறது. தமிழில் பெயர்களுக்கு (ஆண்பால்) ‘ன்’ விகுதி சேர்ப்பது செந்தமிழ் விதி. அதாவது வட மொழியில் ராம என்றால் நாம் ராமன் என்போம். அது போல வியாழி என்றால், நாம் வியாழன் என்போம். கொடும் தமிழில் அது வியாழி என்று மட்டுமே இருந்திருக்கும். வியாழன் என்பது தமிழ்ச் சொல். குருவுக்குப் பெயர். சமஸ்க்ருத இலக்கணம் எழுதிய வியாழி தமிழ் பேசிய ஒருவராக இருந்திருக்க வேண்டும்.

   2ஆம் சங்கத்தில் அரங்கேறிய வியாழ மாலை அகவல் எழுதியவரும் ஒரு வியாழியாக இருக்கலாம். இங்கு நமக்குத் தேவையான அம்சம், காஞ்சி பெரியவர் சொன்னாற் போல, வேதத்தில் இருக்கும் ழகரம்!

   மேலே காட்டின இணைப்பில் அவர், பிராந்திய பாஷையின் தாக்கமாக அது இருக்கலாம் என்கிறார். ஆனால் அடுத்தடுத்த கட்டுரைகளை அந்த இணைப்பில் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அதில் அவர் முடிப்பார் – வேத சப்தமே ஆதி, அதிலிருந்துதான் சொல்லும் மொழியும் வந்தது என்றால், ழகரம் வேதத்தில் இருந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் மொழியில் அது வந்திருக்க முடியும் என்கிறார். உண்மை. அதை தொல்காப்பியம் பிறப்பியல் சூத்திரத்தை மேலே காட்டினேனே அதன் மூலமும் மெயிப்பிக்கலாம்.

   அப்படிப்பட்ட தமிழ் மொழியை ‘மது’ மதுரம் என்றே சமஸ்க்ருதத்தில் அழைத்துள்ளனர் என்பதற்கு, ராமாயண மேற்கோள்களையும், ராமாயணத்தில் ‘ பாம்பின் கால் பாம்பறியும்’ என்னும் தமிழ்ப் பழமொழியை சீதை அரக்கியரிடம் பேசும் போது சொல்வதையும் எழுதியுள்ளேன். இங்கு படிக்கவும்

   http://jayasreesaranathan.blogspot.in/2013/04/hanuman-and-sita-conversed-in-madhura.html

   நீக்கு
 18. தமிழ் இலக்கணம் நூல்கள் சார்ந்த ஒரு நூலில் திராவிடம் என்பது வேங்கட மலையை ஒட்டி வடக்கில் இருந்ததாக ஒரு நூல் குறிப்பதாகச் சொல்கிறார் ஒருவர். அது எந்த தமிழ் இலக்கண நூல் சார்ந்தது என உங்களுக்குத் தெரியுமா?

  பதிலளிநீக்கு
 19. அண்ணாத்துரை தந்தை பிராமணர் என்கிறார்கள் சிலர். அதனால் தான் அவர் தந்தை கோயிலில் வேலை செய்தாராம். அவர் தன்னை முதலியார் எனத் தமிழ்ப்பட்டப் பெயரை பயன்ப்படுத்துவதைப் பார்த்து க்ருணாநிதி தன் தெலுங்குச் சின்னமேளம் என்னும் சாதியையும் தமிழ் பெரிய மேளமென்னும் சாதியையும் இணைத்து இசைவேளாளர் சாதியை 1950களில் உருவாக்கியதாகச் சொல்கின்றனர்.

  இவர்கள் இருவருமே தமிழர்களே அல்ல என்கிறார்கள் சிலர்.

  பதிலளிநீக்கு
 20. ळ என்ற எழுத்தை நானும் கண்டுள்ளேன்.
  மராட்டிய தொலைக்காட்சிகளில் நான் கண்டுள்ளேன்.
  ழகரம் தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு என்று கூறினார்கள்
  ஆதலால் அவர்கள் ळ என்ற எழுத்தை ளகரத்தைக் கூற
  பயன்படுத்தியிருக்கலாம் என்று நினைத்துக்கொள்வேன். இதை நான்
  ஐந்தாறு வருடங்களுக்கு முன்னரே கவனித்து எண்ணிப்பார்த்திருக்கிறேன்
  என்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது! :) :)

  எனக்கு இப்படி கூட(கீழ்வருமாறு) ஒரு எண்ணம் என் மனதில் ஓடும்:
  தமிழ் என்பதும் சமஸ்கிருதம் என்பதும் ஒன்றிற்கான
  இரு வேறு ஒலி வடிவ மாறுதல் மட்டுமே(two equivalent and related sound forms denoting same thing).
  ஒன்றை இந்த முறையில் ஒலித்தால் தமிழ் என்றும்
  இந்த முறையில் ஒலித்தால் சமஸ்கிருதம் என்றும் கூறவருகிறேன். (somewhat like encryption decryption).
  கால ஓட்டத்தில் இரு வடிவங்களும் தனிமைப் பட்டுப்போனதால்(distanced from each other)
  அந்த equivalent words factor இல்லாமல் போயிருக்கலாம்.
  (அதாவது இவ்விரு வடிவங்களும் தனித்தனியாக சொற்களை உருவாக்க முற்பட்ட பின் தனி மொழிகளாக அங்கீகரிக்கபட்டிருக்கலாம்).
  இலக்கணங்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம்.
  இது எந்த அளவிற்கு ஏற்கத்தக்கது என்று தெரியவில்லை
  ஆனால் என் எண்ண ஓட்டத்தில் உதித்தது.

  பதிலளிநீக்கு
 21. இத்தனை பழமை வாய்ந்த தமிழில் சமஸ்கிருத்தைக் குறிக்க "வடமொழி", "ஆரியம்" என்ற சொற்கள் உண்டு. அதுபோல தமிழைக் குறிக்கும் சமஸ்கிருதச் சொல் எது என்பது தான் கேள்வி. "திராவிடம்" என்ற சொல் தமிழைக் குறிக்கவில்லை என்கிறீர்கள். "மதுரம்" என்ற சொல் தமிழைக் குறித்திருக்கலாம் என்கிறீர்கள். சரி..அது இராமயண் காலத்தில். பிற்காலத்தில் எவ்வாறு குறித்தனர்?? சமஸ்கிருத படைப்புகளிலிருந்து எடுத்துக்காட்டிக் கூறவும்.

  பதிலளிநீக்கு
 22. According to George L. Hart, who holds the endowed Chair in Tamil Studies by University of California, Berkeley, has written that the legend of the Tamil Sangams or "literary assemblies: was based on the Jain sangham at Madurai:
  In http://en.wikipedia.org/wiki/Jainism it is stated as follows:

  There was a permanent Jaina assembly called a Sangha established about 604 A.D. in Madurai. It seems likely that this assembly was the model upon which tradition fabricated the Sangam legend.

  Your comments please

  பதிலளிநீக்கு