வியாழன், 12 ஜனவரி, 2012

92. மொஹஞ்சதாரோவின் நக்ஷத்திரக் கோவில் -3


சிந்து சமவெளிப் பகுதிகளில்  27  என்ற எண்ணிக்கை அளவுகோலிலும்,

மொஹஞ்சதாரோவில் ஒரு கட்டுமானத்திலும் காணப்படுகிறது.

 

ஒவ்வொரு எண்ணுக்கும் பின்னால் அதற்கே உரிய ஒரு விவரம் இருக்கிறது.


1 என்றால் முழுமுதல் கடவுளான பரப்பிரும்மம். இந்த ஒன்றே எல்லாமுமாக ஆகிறது.

2 என்றால், அந்த முழுமுதல் பரப்பிரும்ம், புருஷன் (ஜீவன் அல்லது ஆத்மா), பிரக்கிருதி (பௌதிகக் கூறுகள்) என்று இரண்டாக ஆனது.

3 என்றால் நான்முகப் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மும்மூர்த்திகளாக அந்த முழுமுதல் கடவுள் ஆனது.

4 என்றால் அதுவே நான்கு வேதமானது.

5 என்றால் அதுவே ஐந்து இயற்கைச் சக்திகள் என்னும் பஞ்ச பூதமானது.


இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இவையெல்லாம் ஹிந்து மதக் கருத்துக்கள் அல்லவா என்று ஆட்சேபித்தால், இவற்றையே தமிழ் மக்களும் சொன்னார்கள், பாரதம் முழுவதும் இருந்த மக்களும் சொல்லி வந்தார்கள். இவற்றைச் சங்க நூல்களிலும் காணலாம், ஆழவார் பாடல்களிலும் காணலாம்.


 

திருமாலைப் பற்றிய பரிபாடல் 3 –இல் இப்படிப்பட்ட கருத்துக்களைக் காட்டும் எண்கள் சொல்லப்படுகின்றன.

"இருநிழல் படாமை மூவே ழுலகமும் ஒருநிழலாக்கிய ஏமத்தை மாதோ

பாழெனக் காலெனப் பாகென ஒன்றென

இரண்டென மூன்றென நான்கென ஐந்தென

ஆறென ஏழென எட்டெனத் தொண்டென

நால்வகை ஊழியென் நவிற்றுச் சிறப்பினை.."


 

இதில் மூவேழ் இருபத்தொன்று (21) என்னும் எண் அத்தனை உலகங்களைக் காட்டுவது. அதாவது 21 என்னும் எண் எங்கேனும் வந்தால் அது சுவர்கம், மத்தியம், பாதாளம் என்னும் மூன்று வகையான 7 உலகங்கள் கொண்ட 21 உலகங்கள் என்று அர்த்தம்.


இந்தப் பாடலில் 1 என்னும் எண் பஞ்ச பூதங்களில் முதலாவதான வானத்தைக் குறிக்கிறது. அதாவது வானம் என்பதை 1 என்றும் சொல்லலாம். அல்லது 1 என்ற எண் சொல்லப்பட்டால் அதற்கு வானம் என்பது பொருள். இதை நீட்டிக் கொண்டு, வானத்தின் சிறப்பான பண்பான ஓசை, அது ஓம் என்பது – அதுவும் எண் 1 ஐக் குறிக்கும் என்றார்கள். இதையெல்லாம் சங்கத் தமிழ்ர்கள் சொல்லியிருக்கிறார்கள்.


அது போல (இந்தப் பரிபாடலில்)

2 என்னும் எண் காற்று,

3 என்னும் எண் – தீ,

4 என்னும் எண் நீர்.

5 என்னும் எண் நிலம்,

6 என்னும் எண் மனம்,

7 என்னும்  எண் அகங்காரம்,

8 என்னும் எண் புத்தி,

9 என்னும் எண் மூலப்பகுதி என்று சொல்லப்பட்டிருக்கிறது.


 

இவை தவிர இதே பாடலில் திருமாலுக்கு

ஒரு கை, இரு கை, முக்கை, நாற்கை, ஐங்கை,

அறு கை, எழுகை, எண் கை, ஒன்பது கை,

பதிற்றுக் கை, நூற்றுக் கை, ஆயிரம் கை,

பதினாயிரம் கை, நூறாயிரம் கை, ஆம்பல் என்னும் பேரெண் கை

என்று பல கருத்துகளுடன் கூடிய எண்களைச் சொல்லியுள்ளார்

புலவர், கடுவனிளவெயினனார்.


 

ஒவ்வொரு எண்ணுக்கும் இது போன்ற பல விவரங்களைத் தமிழ் நிகண்டுகளில் காணலாம். இந்த வரிசையில் எண் 9 க்கு, ஒன்பது, ஒன்பதாக மும்முறை வரும் 27 நக்ஷத்திரங்களைக் குறிப்பிடுகிறது, சூடாமணி நிகண்டு (12- 102).


அதிலும் இந்த நக்ஷத்திரங்கள் செய்யுளுக்குரிய நக்ஷத்திரங்களைக் குறிப்பது என்று இந்தச் சூத்திரம் சொல்வது முக்கியமானதாகும். அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். இங்கு ஒன்பது ஒன்பதாக மூன்று முறை பிரிக்கப்பட்டு 27 நக்ஷத்திரங்கள் அமையும் என்பது நாம் கவனிக்க வேண்டிய விவரமாகும். அதாவது எண் 27 என்றால் அது அஸ்வினி முதலான 27 நக்ஷத்திரங்களைக் குறிப்பதாகும்.


ஒன்பது ஒன்பதாக மூன்று வரிசையில் 27 அடித்தளங்கள் மொஹஞ்சதாரோவில் அமைந்துள்ளதால், இந்த அமைப்புக்கும் 27 நக்ஷத்திரங்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்பது புலனாகிறது.

 

அஸ்வினி தொடங்கி 27 நக்ஷத்திரங்களை, ஒன்பது ஒன்பதாகப் பிரிப்பது ஜோதிடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஒன்பதையும் ஒரு பரியாயம் அல்லது வட்டம் என்பார்கள். ஒவ்வொரு பரியாயத்தில் உள்ள நக்ஷத்திரங்களுக்குள் பலவிதமான தொடர்புகள் உண்டு. அவற்றைக் கொண்டுதான் நக்ஷத்திரப் பொருத்தம், திருமணப் பொருத்தம் என்று பார்க்கிறார்கள். இதில் நமக்குத் தேவையான விவரம் என்று பார்த்தால், வேத மரபில் நக்ஷத்திர வழிபாடு இருந்தது என்பதும், பாரதம் முழுவதும், 27 நக்ஷத்திரம் சார்ந்த ஜோதிடமே பின்பற்றப்பட்டு வந்தது என்பதும் ஆகும்.


 

உலகத்தில் வேறு எந்த இடத்திலும், எந்த காலக்கட்டத்திலும், வான நக்ஷத்திரங்களில் 27 நக்ஷத்திரங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. வேத மரபில் மட்டுமே 27 நக்ஷத்திரங்கள் உள்ளன. 360 பாகைகள் கொண்ட வான வட்ட்த்தை 27 ஆகப் பிரித்து, அப்படிப் பிரிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதியும் ஒரு நக்ஷத்திரமாகும் என்றும், அதன் அளவு 13 பாகை, 20 கலை என்றும் குறித்துள்ளார்கள். இந்த 13-20 பாகைக்குள் பல நக்ஷத்திரங்கள் இருக்கும். ஆனால் அவற்றுள் இருக்கும் ஒரு நக்ஷத்திரத்தின் பெயரால், அந்த முழு அளவுமே ஒரே நக்ஷத்திரமாக்கச் சொல்லப்படுகிறது. அப்படி அமையும் நக்ஷத்திரத்துக்கு ஒரு தேவதை உண்டு. அந்த தேவதைக்கு வழிபாடு இருந்த்து.


இன்றைக்கு நவ கிரக அமைப்பு பரவலாக இருக்கிறது. மூன்று மூன்றாக மூன்று வரிசைகளில் அமையும் இந்த அமைப்பு கோவில்களில்தான் இருக்கும். அது போல ஒன்பது ஒன்பதாக் மூன்று வரிசையில் அமைந்துள்ள மொஹஞ்சதாரோ அமைப்பும் ஒரு கோவிலில்தான் அமைந்திருக்க முடியும்.

இன்றைய நவகிரக வழிபாட்டில் நாம் அந்த கிரகத்தையே தேவதையாக நினைக்கிறோம்.

ஆனால் உண்மையில், ஒவ்வொரு கிரகத்துக்கும் தனித் தனி தேவதை உண்டு.

அது மட்டுமல்ல,.

தேவதை, அதிதேவதை, பிரத்யதி தேவதை என்று மூன்று தெய்வங்கள் ஒவ்வொரு கிரகத்துக்கும் உண்டு.

நவகிரக வழிபாடுகளை அந்த தேவதைகளுக்குத்தான் செய்கிறார்கள்.
 


இது போலவே, நக்ஷத்திர தேவதைகளை நக்ஷத்திரங்கள் வாயிலாக வழிபட்டிருக்கிறார்கள். இவற்றுக்கு மந்திர, யந்திர வழியில் வழிபாடுகள் இருந்திருக்கின்றன. இந்த 27 நக்ஷத்திரங்களையும் ஓரெழுத்துச் சொற்களாக அழைத்திருக்கிறார்கள். அஸ்வினி தொடங்கி சொல்லப்படும் இந்த நக்ஷத்திரங்களை ஒரு குறிப்பிட்ட வகையில் ஒன்பது ஒன்பதாகப் பிரித்திருக்கிறார்கள். இதைக் காட்டும் ஒரு ஸ்லோகம் லகத ரிஷி அளித்துள்ள ரிக் ஜோதிடத்தில் (ஸ்லோகம் 14) உள்ளது.அஸ்வினி தொடங்கி, ஆறாவதாக வரும் நக்ஷத்திரங்களை, அவற்றுக்கான ஓரெழுத்துப் பெயருடன் இந்த ரிக் வேதாங்க ஸ்லோகம் தருகிறது. அவற்றையும், அவற்றுக்கான முழுப்பெயரையும் கீழுள்ள அட்டவணையில் காணலாம்.ஜோ (அஸ்வினி)

த்ர (திருவாதிரை)

கஹ (பூரம்)

 

கே (விசாகம்)

ஸ்வே (உத்ராடம்)

ஹி (உத்திரட்டாதி)

 

ரோ (ரோஹிணி)

ஷ (ஆயில்யம்)

சித் (சித்திரை)

 

மூ (மூலம்)

சக் (சதயம்)

ந்யே (பரணி)

ஸூ (புனர் வசு)

மா (உத்ரம்)

தா (அனுராதா /

அனுஷம்)

ண (திருவோணம்)

ரே (ரேவதி)

ம்ரு (மிருகசீரிஷம்)

கு (மகம்)

ஸ்வா (ஸ்வாதி)

ப (பூராடம்)

அஜ (பூரட்டாதி)

க்ரு (கிருத்திகை)

ஷ்ய (புஷ்ய /

பூசம்)

ஹா (ஹஸ்தம்)

ஜே (ஜேஷ்டா / கேட்டை)

ஷ்த (தனிஷ்டா/ அவிட்டம்)

 


அப்படி அமைந்துள்ள வரிசைகளில், நக்ஷத்திரங்களுக்குள் உள்ள பல விதமான தொடர்புகள் காட்டப்படுகின்றன. அவற்றுள் ஒரு தொடர்பை, 76 ஆவது கட்டுரையில் நாம் பேசிய, கூடலூர் கிழாரது பாடலான புறநானூறு 229 ஆம் பாடலில் காணலாம். ஆடிய அழல் குட்டம் என்று தொடங்கும் அந்தப் பாடலில், ப்ராசீ, உதீசீ என்னும் சமஸ்க்ருதச் சொற்களை அவர் கையாண்டதைக் காட்டினோம். அந்தப் பாடலில் அவர் சொல்லும் பிற விவரங்கள், மேலே காட்டப்பட்டுள்ள ரிக்ஜோதிட நக்ஷத்திர அமைப்பில் காணப்படுகின்றன.அந்த ஒரு பாடலிலேயே, பாடப்பட்ட அந்த நாளின் நண்பகலில் சூரியன் இருந்த அமைப்பையும், நடு நிசியில் நக்ஷத்திரங்கள் இருந்த அமைப்பையும் கூடலூர் கிழார், பூடகமாகச் சொல்கிறார்.


'முடைபனையத்து வேர் முதலாக்

கடைக்குளத்துக் கயங்காயப்

பங்குனி"


என்று சொல்லுமிடத்தே, பங்குனியின் அந்த நாளில் அனுஷம் முதல் நக்ஷத்திரமாகவும், புனர் பூசம் கடை நக்ஷத்திரமாகவும் அமைந்தது என்கிறார். அதாவது சூரியன் உச்சிக்கு வரும் போது அதற்கு முன்னால் அனுஷம், மேற்கில் தொடுவானத்தில் இருக்கும், பின்னால் புனர்பூசம் கிழக்கில் தொடுவானத்தில் உதயமாகும். சூரியனைப் பொறுத்த வரையில் முன்னும் பின்னும் 9 ஆவது நக்ஷத்திரம் சொல்லப்படுகிறது. ஏனெனில், தொடுவானத்தைத் தாண்டியும் ஒரு நக்ஷத்திர தூரம் வரை வெளிச்சம் பரவியிருக்கும். அதனால், இதற்கு உரை எழுதிய உரையாசிரியர்கள் அனுடத்தின் அடி வெள்ளி, புனர்பூசத்தின் கடை வெள்ளி என்று வெள்ளென்னும் வெள்ளியைக் குறிப்பிடுகின்றனர்.இதை மேற்காணும் நக்ஷத்திர அமைப்பில் காணலாம். அன்றைக்கு சூரியன் பூரட்டாதி நக்ஷத்திரத்தில் நின்றிருக்கிறான். பூரட்டாதிக்கும், அதிலிருந்து சம தூரத்தில் அனுஷம், புனர்பூசம் அமைவதற்கும் உள்ள தொடர்பை மேலே உள்ள அட்டவணையைக் கொண்டு காணலாம். உதாரணமாக, மக நக்ஷத்திரத்தில் சூரியன் இருக்கும் போது நண்பகலில் மேற்கு வெள்ளியில் பரணியும், கிழக்கு வெள்ளியில் மூலமும் இருக்கும்.சூரியன் நின்ற நக்ஷத்திரத்தைச் சொன்ன கூடலூர் கிழார், நடுநிசியின் அமைப்பைச் சொல்கிறார். இருட்டு நேரமாதலால், 90 பாகை, 90 பாகை என்று முன்னும்பின்னும் 8 நக்ஷத்திரங்கள் தான் தென்படும். நடுநிசியின் நடு வானிலிருந்து உத்திர நக்ஷத்திரம் நகரும் போது, உத்தரத்துக்கு முன் உள்ள 8 ஆவது நக்ஷத்திரமான மிருக சீரிஷம் மறையும், உத்ரத்துக்குப் பின்னுள்ள 8 ஆவது நக்ஷத்திரமான மூலம் கிழக்கில் உதயமாகும். இதை மேலேயுள்ள ரிக் ஜோதிட நக்ஷத்திர அட்டவணையில் குறுக்காகக் காணலாம்.


மூ (மூலம்)

சக் (சதயம்)

ந்யே (பரணி)

ஸூ (புனர் வசு)

மா (உத்ரம்)

தா (அனுராதா /

அனுஷம்)

ண (திருவோணம்)

ரே (ரேவதி)

ம்ரு (மிருகசீரிஷம்)

 


அந்த மூல நக்ஷத்திரம் நேர்க் கிழக்காக இல்லாமல், சற்று தெற்கு நோக்கி வானில் அமையும். புலவர் சொல்லும் இரவில், ஒரு எரி நக்ஷத்திரம் கிழக்கிலும் அல்லாமல், வடக்கிலும் அல்லாமல் வீழ்ந்தது என்கிறார். மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வந்த அந்த எரிகல், கிழக்கு, வட கிழக்கு அல்லாமல் தென் கிழக்கில், மூலம் உதயமாகும் பகுதியில் விழுந்திருக்கிறது. பங்குனி மாத்த்தின் நடுநிசியில் மூல நக்ஷத்திரம் உதயமாகிக் கொண்டிருக்கும் போது, அது இருக்கும் இடத்தில் எரி நக்ஷத்திரம் விழுந்ததால், தங்கள் அரசனுக்குக் கெடுதல் வரும் என்று கூடலூர் கிழார் சொல்கிறார். இதனால், அவர் குறிப்பிடும் அரசனான சேரமான் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, மூல நக்ஷத்திரத்தில் பிறந்தவனாக இருக்கக்கூடும் என்று தெரிகிறது. அந்தப் பாடலில் ஒளித்து வைக்கப்பட்டுள்ள ரகசியங்கள் இவ்வளவு இருக்கின்றன!அப்படி ஒரு எரிகல் விழுந்த 7 நாட்களுக்குள் புஷ்ய ஸ்நானம் போன்ற பரிகாரங்களை அந்த அரசன் செய்திருப்பான், அதனால் கெடுதி வராது என்று என்று புலவர் நினைத்திருக்கிறார். அப்பொழுது எந்தப் போரும் இல்லை. எனவே அரசன் நோய் வாய்ப்படாமல் இருக்க வேண்டுமே என்றும் கவலை கொள்கிறார். ஆனால் 7 ஆவது நாள் வந்தது, அரசன் இறந்தான் என்ற செய்தியும் வந்தது என்று செல்கிறது அந்தப்பாடல்.


இந்தப் பாடலை இங்கு விளக்குவதற்குக் காரணம், பாரத