செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

65. வால்மீகியும், தமிழும்.



தொல்காப்பியம் சொல்லும் அறுவகைப்பட்ட பார்ப்பன வகையிரால்
கற்பிக்கப்பட்ட தமிழ்க் கல்வியில்,
தலையாய கல்வி,
இடையாய கல்வி,
கடையாய கல்வி என்னும் மூன்று வகைகளில்

தமிழ்ச் செய்யுட் கண்ணும் இறையனாரும்,  
அகத்தியனாரும்,  
மார்க்கண்டேயனாரும்,
வான்மீகனாரும்,  
கவுதமனாரும் போலார் செய்தன தலை”.
என்று நச்சினார்க்கினியர் சொல்லியுள்ளது சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது.

நமக்குத் தெரிந்த வான்மீகனார், ராமாயணம் எழுதிய வால்மீகி ஆவார்.
அவர் எழுதிய ராமாயணத்தையே தலையாய கல்வியாகச் சொல்லியுள்ளாரோ என்று நினத்தால், அது அப்படியல்ல.
தமிழ்ச் செய்யுட்கண்ணும் என்று தெளிவாகச் சொல்லியுள்ளாதால்,
வான்மீகனார் என்பவர் தமிழில் இயற்றிய நூல்களையே சொல்வதாகப் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.

தமிழில் வான்மீகனார் எழுதியுள்ளாரா என்று தேடினால்
புறநானூறில் 358 ஆம் பாடலை வான்மீகியார் என்பவர் எழுதியுள்ளார் என்ற விவரம் இருக்கிறது
பாடினோர் வரலாற்றில், இவரைப் பற்றி எழுதும்போது, டா..வே.சா அவர்கள் முதற் சங்கத்தில் வான்மீகியார் என்று ஒருவர் இருந்தார் என்று சொல்லியுள்ளார்.  
ஆனால் வேறு குறிப்புகள் கிடைக்காமையால், அவர் வேறு, இந்தப் பாடலை எழுதிய வான்மீகியார் வேறு என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார்.


வான்மீகி என்ற பெயரே காரணப் பெயராக உள்ளதால் அதே பெயரில் மற்றொருவர் இருக்க சாத்தியமில்லை. (வான்மீகி, வால்மீகி என்பவை ஒன்றுக்கொன்று இயைந்து வரும் ஒரே பெயர்களே. லகரம், னகரம் ஒன்றுக்கொன்று மாறிக் கொள்ளும்.)  
வால்மீகியால் கவரப்பட்டு தங்களை வால்மீகி குலத்தினர் என்று சொல்லிக் கொண்ட மக்கள் ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கின்றனர்.  
ஆனால் அவர்கள் தங்கள் குலப் பெயராக இப்படி அமைத்துக் கொண்டது சில நூறு வருடங்களுக்கு முன்புதான்

ஆனால் வான்மீகி அல்லது வால்மீகி என்ற பெயரில் மற்றொருவர் இருந்ததாகத்  தமிழிலும், சமஸ்க்ருத்த்திலும் குறிப்புகள் இல்லை.  
ஆனால் அந்தப் பெயரைக் கொண்ட ஒருவரால் தமிழ்ச் செய்யுள்கள் இயற்றப்பட்டன, அவை தலையாய கல்வியாகக் கற்பிக்கப்பட்டன என்பது நச்சினார்க்கினியர் வாயிலாகத் தெரிகிறது.


வான்மீகனார் என்னும் பெயரில் புறநானூறில் மட்டுமல்ல, சித்தர் பாடல்களிலும் வால்மீகன் பதினாறு என்னும் ஒரு பாடல் தொகுப்பு உள்ளது. இவை தவிர வால்மீகியின் பெயரில் இருக்கும் பாடல், ராமாயணம் ஆகும்.


இவை மூன்றையும் ஆராய்ந்தால், இவை அனைத்தையும் ஒருவரே எழுதியிருக்கிறார் என்பது புலனாகிறது.
ஆம், ராமாயணம் எழுதிய வால்மீகியே,
புறநானூறுச் செய்யுளையும் எழுதியுள்ளார்,
சித்தர்கள் பாடல் தொகுப்பில் உள்ளவால்மீகன் பதினாறும்
அவராலேயே எழுதப்பட்டுள்ளது.
அது எப்படி என்று பார்ப்போம்.


இந்த மூன்று நூல்களிலும் முக்கியமானதாக ஒரு குறிப்பிட்ட செய்தியே  சொல்லப்பட்டுள்ளது
அது சீதையாக அவதரித்ததிருஅல்லது லக்ஷ்மி அல்லது  ‘தாயார்என்றும் சொல்லப்பபடும் திருமகள் ஆகும்.
புறநானூற்றில் வான்மீகியார் எழுதிய செய்யுள், திரு எனப்படும் லக்ஷ்மியை வழிபட வேண்டும் என்று சொல்கிறது



வால்மீகி எழுதிய ராமாயணம்மா நிஷாத என்றே ஆரம்பிக்கிறது
மாஎன்னும் அந்தச் சொல் மாதா என்னும் லக்ஷ்மியைக் குறிக்கிறது என்றே பண்டிதர்கள் கூறுகிறார்கள்.


வால்மீகியார் எழுதிய வால்மீகன் பதினாறிலும் முடிவான செயலாகத்தாயாரைப் பூசித்து வேதம் ஓது என்று  
லக்ஷ்மியான தாயாருக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது
 சித்தர் பாடல் கருத்துக்களிலேயே இது வித்தியாசமானது.


வால்மீகியின் பெயரால் வழங்கப்படும் மூன்று நூல்களிலும், லக்ஷ்மி என்னும் தாயார் குறித்த இந்தக் கருத்து ஒரே மாதிரியாக வருகிறதே, அது எப்படி?  
ஒரே வால்மீகி எழுதியிருந்தால்தானே இது சாத்தியமாகும்?  
அதிலும் அந்த வால்மீகி சீதையிடம் பக்தி பூண்ட ராமாயண கால வால்மீகியாக இருந்தால்தானே அப்படி எழுதியிருக்க முடியும்
அந்த விசாரணைக்குப் போவதற்கு முன், இந்தப் பாடல்களைத் தெரிந்து கொள்வோம்.


புறநானூறு 358:-

"பரிதி சூழ்ந்த விப்பயன்கேழு மாநிலம்
ஒரு பகல் எழுவர் எய்தியற்றே
வையமும் தவமும் தூக்கிற்றவக்துக்
கையவி யனைத்து மாற்றா தாகலிர்
கைவிட்டனரே காதலர் அதனால்
விட்டோரை விடாள் திருவே
விடாதோர் இவள் விடப்பட்டோரே "

ஏழு வரிகளாலான சிறிய செய்யுள் இது. காஞ்சித்திணையில், மனையறம், துறவறம் என்னும் துறையின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இது, வான்மீகியார் அல்லது வான்மீகையார் என்பவரால் இயற்றப்பட்டுள்ளது என்று டா. .வே.சா அவர்கள் கண்டெடுத்த சுவடிகளில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் பொருள்:-

இந்த உலகம் எல்லாப்பக்கங்களிலும் சூரியனால் சூழப்பட்டு, அதாவது அதன் ஒளியால் சூழப்பட்டு, அந்த சூரியன் பொருட்டு கொடுக்கப்படும் அவிப்பயனையும் பெற்று, ஒரு பகலில் ஏழு பேர்களால் (ஏழு ஓரைகள்) அடையப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த உலகத்தின் பொருட்டு கிடைக்கின்ற பயனையும், தவத்தின் பயனையும், ஒரு தராசில் எடை பார்த்தால், உலக இன்பத்தால் கிடைக்கும் பயன், ஒரு வெண்சிறுகடுகளவும் இருக்காது. அதனால் காதலர்கள் (காதலர் = வீடு பேறு விரும்புவோர்). உலக இன்பத்தைக் கைவிட்டனர். அப்படி விட்டவர்களை திரு என்னும் லக்ஷ்மியானவள் கைவிட மாட்டாள். ஆனால் உலக இன்பங்களை விடாதவர்களை லக்ஷ்மியானவள் கை விட்டு விடுவாள்.
இதுவே அந்தச் செய்யுள் தரும் விவரமாகும்.


பொதுவாக உலக இன்பத்துக்கும், செல்வத்துக்கும் லக்ஷ்மியே காரணமாவாள் என்று நினைக்கிறோம்.  
அந்தச் செல்வத்தைத் தருபவள் லக்ஷ்மி. ஆனால் நமக்குச் செல்வம் வேண்டுமா, அல்லது லக்ஷ்மியே வேண்டுமா என்றால்,  
லக்ஷ்மிதான் வேண்டும் என்கிறது இந்தச் செய்யுள்.  
செல்வத்தின் மீது பற்று கொண்டால்,  
லக்ஷ்மி நம்மைக் கை விட்டு விடுவாள்
செல்வத்தை நாம் விட்டால்,  
லக்ஷ்மி நம்மை விடமாட்டாள் என்கிறது இந்தச் செய்யுள்.  
அதாவது உலக இன்பத்தைத் துறக்க வேண்டும்.  
அப்படித் துறந்தாருக்கு லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும்.  
அந்த நிலையில் உள்ளவர்களுக்கு அவள் தரும் கடாக்ஷம், அஷ்டமாசித்திகளும், ஆத்ம சாதனைகளும், வீடு பேறும் ஆகும்.

மேற்சொன்ன புறநானூறின் தொடர்ச்சியோ என்று நாம் நினைக்கும் வண்ணம் இதே கருத்தை வால்மீகன் பதினாறு தெரிவிக்கிறது

பதினாறு செய்யுட்களைக் கொண்ட வால்மீகன் பதினாறு என்பது மற்ற சித்தர் பாடல்களிலிருந்து வேறுபட்டது
எப்படி என்றால், மற்ற சித்தர்கள் சிவனையே முழு முதற் கடவுளாகப் போற்றி, சிவனருளால் முக்தியைத் தேடினர்.  
அது அவர்கள் இயற்றிய பாடல்களிலும் எதிரொலிக்கிறது
ஆனால் வால்மீகன் பதினாறின் முதல் செய்யுளிலேயே,
'சிவசக்தி திருமாலின் ரூபமாகும்.
வருமுருவே சிவசக்தி வடிவமாகும்
என்று சொல்லப்பட்டுள்ளது

அதாவது திருமாலிலிருந்து சிவசக்தி ரூபம் உண்டானது என்கிறார் வால்மீகியார்

இது மற்ற சித்தர்கள் கருத்துடன் ஒத்துப் போகவில்லை.

அதை வால்மீகியாரே ஒத்துக் கொள்கிறார்

11-ஆம் பாடலில் அதைச் சொல்லுகிறார். தன்னுடைய நூலைப் பார்த்து (கருத்தைப் பார்த்து), மற்ற சித்தர்கள் எல்லாம் சிவனிடம் கோள் சொன்னார்கள்.

ஆனால் சிவன் அவர்களைப் பார்த்துத்தான் சினம் கொண்டான் என்கிறார். மற்ற சித்தர் பாடல்களுக்கெல்லாம் திறவுகோல் போன்ற தனது பாடலை ஏற்றுக் கொண்டான் என்று சொல்லுமிடத்தே,  
தாயாரைப் பூஜித்து பயன் பெற வேண்டும் என்று கூறுகிறார்.


அந்தச் செய்யுள் வரிகள் இங்கு கொடுக்கப்படுகின்றன:-

சிவசிவா பதினெண்பேர் பாடற் கெல்லாம்
    திறவுகோல் வால்மீகன் பதினாறாகும்:
சிவம்பெத்த சித்தரேல்லா மென்னூல் பார்த்துச்
    சிவனோடே கோள் சொன்னார் சினந்தான் நாதன்:
அவமாகிப் போகாமல் சிவனுத் தார
    அருளினால் திறந்து சொன்னேன் உலகுக்காக:
நவமான நவக்கிரகம் தன்னுளேயே
    நாக்கு வாய் செவி மூக்கு மத்திக்கப்பால். (11)

நாக்கு வாய் செவி மூக்கு மத்திக் கப்பால்
    நடுவீதி குய்ய முதல் உச்சி தொட்டுத்
தாக்குவாய் அங்கென்ற அதிலே முட்டுத்
   தாயாரைப் பூசித்து வேதம் ஓது: (12)

வேதத்தை விடு என்று சொல்லும் சித்தர் பாடல்கள் இருக்கின்றன
ஆனால் வால்மீகியார் வேத்த்தை ஓது என்கிறார்.  
அதிலும், தாயாரைப் பூசித்து வேதம் ஓது என்கிறார்.  
இந்தத் தாயார் என்பது சிவ-சக்தியில் உள்ள சக்தியைக் குறிக்கலாமே எனலாம்
இவரது பாடலில் வேறொரு இடத்திலும்
மற்ற சித்தர் பாடல்களிலும் தாய்- தந்தை என்று ஒன்றாகவே 
சிவ சக்தியைக் குறிப்பிட்டுள்ளார்கள்.  
அதிலும் அர்த்தநாரீஸ்வர ரூபத்தைச் சித்தர்கள் 
பல இடங்களில் போற்றியுள்ளார்கள்
ஆனால் சிவனில் ஐக்கியமாகி சித்தி பெறுவதையே 
பிற சித்தர்கள் சொல்லியுள்ளார்களே தவிர,  
தாயாரைத் தனியே பூசித்து மேன்மை பெறுவதைச் சொல்வதில்லை. மேலும் சக்தியைப் பற்றிச் சொல்லுமிடத்தில் சக்தி என்றே சொல்லியுள்ளார்களே தவிர,  
வால்மீகியார் போலச் சொல்லவில்லை.

வான்மீகியார் சொல்லும் கருத்து வேதத்திலும் காணப்படுகிறது
திரு என்னும் செல்வத்தைத் தேடுவதைவிட,  
திரு தரும் லக்ஷ்மியைத் தன்னிடம் வரவழைப்பதே மிகவும் சிறந்தது என்று சொல்லும் ரிக் வேதப் பாடல் ஒன்று இருக்கிறது.  
ஸ்ரீ சூக்தம் என்னும் அந்தப் பாடல் கருத்தை ஒட்டி,  
புறநானூற்றுச் செய்யுளும்,  
வால்மீகன் பதினாறு சொல்லும் தாயாரும் அமைந்துள்ளன
ராமாயணம் எழுதிய வால்மீகி,  
தான் எழுதிய அந்த காவியத்தை 
சீதாயா சரிதம் மஹத்என்றே குறிப்பிட்டுள்ளார்.  
அது சீதையின் மகத்தான சரித்திரம் என்பது பொருள்
சீதையுடைய வாழ்கையின் முக்கியக் காலக்கட்டத்தில் 
வால்மீகியே அவளுக்குத் தந்தையாகவும், பக்தனாகவும் இருந்தார். சீதையின் மீது அவருக்கு இருந்த அன்பு மகத்தானது
இந்தப் பாடல்களில் திருவும், தாயாரும் சொல்லப்பட்டுள்ளதால்,  
சீதையைப் போற்றின ராமாயண வால்மீகியே 
இந்தப் பாடல்களையும் எழுதியுள்ளார் என்று எண்ண ஏதுவாகிறது.


வான்மீகனார் என்னும் பெயர் தமிழ் நாட்டின் இரண்டு இடங்களில் சம்பந்தப்பட்டுள்ளது.  
ஒன்று எட்டிக்குடி,  
மற்றொன்று திருவான்மியூர்

சென்னையில் உள்ள திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் ஆலயத்தின் தல புராணத்தில், வான்மீகனாரது வரலாறு சொல்லப்பட்டுள்ளது

இது ராமாயணம் எழுதிய வால்மீகியின் வரலாறுடன் ஒத்துப் போகிறது. ராமாயணம் எழுதிய வால்மீகி உண்மையில் ஒரு முனிவரது மகன். அவரது இயற்பெயர்ப்ராசேதஸ் என்பதே
அவர் சிறுவனாக இருந்தபோது காட்டில் தொலைந்து விடுகிறார்.  
அவரை ஒரு வேடன் வளர்த்து வந்தான்
அவர் வேடனாகவும், திருடனாகவும் இருந்த காலத்தில் ஏற்பட்ட 
ஒரு சம்பவதால் அவர் வாழ்க்கையை வெறுத்து தியானத்தில் அமர்ந்தார். பல வருடகாலம் அவர் அசையாமல் தியானம் செய்து வந்த போது 
அவர் மீது கரையான் புற்று எழும்பி விடுகிறது.  
வெண்மை நிறத்தில் இருக்கும் அந்தக் கரையானைவால்மீகம்என்று சமஸ்க்ருத்த்தில் அழைப்பார்கள்.  
அதனால் அவருக்கும் வால்மீகி என்ற பெயர் ஏற்பட்டது
இப்படி ஒரே வரலாற்றையே நாம் காண்கிறோம்.  
மருந்தீஸ்வரரைப் பூசித்து வந்ததால்,  
அந்தத் தலத்துக்குத் திருவான்மியூர் என்ற பெயர் ஏற்பட்டது




அந்த வால்மீகி முனிவர் நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள எட்டிக்குடி என்னும் தலத்தில் சமாதி அடைந்தார் என்று 
சித்தர்கள் பற்றிய நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.  
எட்டி மரங்கள் அதிகம் காணப்பட்டதால் எட்டிக்குடி என்ற பெயர். இப்பொழுது எட்டுக்குடி என்றும் வழங்கப்படுகிறது.  
இந்தத்தலத்தில் இருக்கும் முருகன் கோவிலில் 
வான்மீகியாருக்கு என சன்னிதியும் இருக்கிறது.


எட்டிக்குடியில் வான்மீகியார் சமாதி அடைந்தது உண்மையே 
என்பதை ஒரு சித்தர் பாடல் தெரிவிக்கிறது
அதுமட்டுமல்ல, தமிழில் எழுதிய வால்மீகியார்,
ராமாயணம் எழுதிய வால்மீகியே ஆவார் என்றும் 
அந்த நூல் தெரிவிக்கிறது.


போகர் என்னும் சித்தர் எழுதியுள்ள போகர் ஏழாயிரம் 
என்னும் நூலின் 5834 ஆம் பாடலில்
ராமாயணம் எழுதிய வால்மீகியும், வான்மீகனாரும் ஒருவரே 
என்று சொல்லப்பட்டுள்ளது.


அதற்கடுத்த பாடலில் (பாடல் எண் 5835),  
வான்மீகியார் தமிழ்ப் புலமை வாய்ந்தவர் என்றும் 
அவர் 700 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.  
அவர் எட்டிக்குடியில் சமாதி அமைந்தார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.


இவ்வாறு தமிழ்நாட்டுடன் சம்பந்தம் பெற்ற வால்மீகியாரும்
ராமாயணம் எழுதிய வால்மீகியும் ஒருவரே என்பதை  
போகர் தெளிவுபட எழுதியுள்ளார்.  
ஆதி காவியம் என்று சொல்லப்பட்ட ராமாயணத்தை சமஸ்க்ருதத்தில் எழுதிய வால்மீகி முனிவரே,  
தமிழிலும் புலமை பெற்றவராக இருந்திருக்கிறார்.  
வால்மீகி வாழ்ந்த காலம் ராமன் வாழ்ந்த காலமாகும்.  
அதாவது இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன் வால்மீகி வாழ்ந்திருக்கிறார்.  
அந்தக் காலம் தென்னன் தேசத்தில் முதல் சங்கம் நடந்து கொண்டிருந்த காலம். முதல் சங்கத்தில் வான்மீகியார் என்ற ஒருவர் இருந்தார் என்று டா. .வே.சா அவர்கள் சொல்வது,  
இந்த வால்மீகிக்குப் பொருந்துகிறது.

சரயு நதிக் கரையிலும், கங்கை நதிக்கரையிலும் ராமனைக் கண்டு  
அவன் புகழ் பாடிய இவர்,  
அங்கிருந்து எங்கோ தென் முனையில் இருந்த தென் மதுரைக்கும் சென்று சங்கப் பலகையில் உட்கார்ந்திருக்கிறார்
அவருக்குத் தமிழ்ப் புலமையும் இருந்திருக்கிறது. அது எப்படி?


அன்றைய பாரதம் முழுவதும் பரவலாகத் தமிழ் பேசப்பட்டிருந்தால் 
இது சாத்தியம். 
மேலும், தமிழ்ச் சங்கத்தில் பங்கு பெற வேண்டும் என்ற அவா 
அன்றைய பாரத மக்களுக்கு இருந்திருந்தாலும், 
அவர்கள் தமிழைக் கற்று இவ்வாறு சங்கத்தில் அரங்கேற்றியிருப்பார்கள்.


இதை இன்னொரு கோணத்திலிருந்தும் பார்க்கலாம். 
அன்றைய தமிழ்ச்சங்கத்தில் 
இறையனார் என்ப்படும் சிவ பெருமானார், 
தனது சங்கத்தோடு அணிந்த செவியைத்தீட்டி, 
பாடல்களைக் கேட்டு ரசித்தார் என்றே சொல்லப்பட்டது 
என்று கண்டோம் (பகுதி 43).


சிவபெருமான் மீது மாறாக் காதல் கொண்ட ஒருவர், 
பாரதத்தின் எந்த மூலையில் இருந்திருந்தாலும், 
சங்கத்தில் பாடல் அரங்கேற்றுவதை ஒரு வரப்பிரசாதமாகவே நினைத்திருப்பார். 
அதற்காகவேனும் தமிழைக் கற்று, பாடல் இயற்றும் திறமை பெற்று, சங்கப்பலகையில் அமர்ந்திருப்பார். 
இந்தக் காரணத்தினாலும், தமிழ் மொழி பாரதம் முழுவதும் 
நன்கு அறிமுகமான மொழியாக இருந்திருக்கும்.

தமிழ்ச் சங்கத்தில் பங்கு பெறுவது பெருமைப்படக் கூடியதாக இருந்திருக்கவேதான், துவரைக் கோமானான கிருஷ்ணன் 2-ஆம் சங்கத்தில் கலந்து கொண்டிருக்க வேண்டும். 
அந்தச் சங்கத்தில் கிருஷ்ணன் பாடல் அரங்கேற்றியதாக எந்தக் குறிப்பும் இல்லை. 
ஆனால் அரங்கேறிய பாடல்களைச் செவிமடுத்திருக்கிறார். 
அவருக்குத் தமிழ் தெரிந்திருந்தால்தான் அப்படிப் பங்கு கொண்டதில் ஒரு அர்த்தம் இருக்கும். 
வெறும் வரட்டு கௌரவத்துக்குக் கிருஷ்ணன் பங்கு கொண்டிருந்திருக்க முடியாது. 
கிருஷ்ணனுக்கும் தமிழ் தெரிந்திருந்தது என்று சொல்லும் வண்ணம் சில விவரங்கள் இருக்கின்றன. 
அவற்றைப் பிறகு பார்க்கலாம்.


இங்கு வால்மீகியாருக்குத் தமிழ் தெரிந்தது என்பதும், 
தமிழின் தலையாய கல்வியான 
இலக்கியத்தையும், இலக்கணத்தையும் அவர் அளித்திருந்தார் என்பதும், தமிழ் மொழி பரவலாக அறியப்பட்டிருந்த மொழி என்பதற்குச் சான்றுகளாகும் என்பதை ஏற்றுக் கொள்வோம். 
சித்தர்களில் தலையானவரான அகஸ்தியர் தமிழைச் செம்மைப்படுத்தினார். பெரும்பாலான சித்தர்களும் தமிழில் பேசியும், எழுதியும் இருக்கின்றனர். சமஸ்க்ருதம் அறிந்த பதஞ்சலி முனிவரும் 
சித்தர் பரம்பரையில் வருபவர்.  
மார்க்கண்டேயரும் அவ்வாறே 
சித்தர்களுடன் சேர்த்துச் சொல்லப்படுபவர். 
அவர்கள் எல்லோருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை 
அவர்கள் சிவ பக்தர்கள் என்பதே. 
அன்றைய காலக்கட்டத்தில் ‘தென்னாட்டுடைய சிவன்’ என்று தென்மதுரையில் சிவபெருமான் குடி கொண்டிருந்து 
தமிழ் வளர்ச்சிக்கு உதவி இருக்கிறார். 
அதனால் பாரதம் முழுவதிலும் இருந்து 
சிவ பக்தர்கள் தென்னன் தேசத்துக்குச் சென்றிருப்பது சாத்தியமானது. 
பாமர மக்களுடன் கலந்துறவாடிய இந்தச் சித்தர்கள், 
அவர்கள் பேசிய மொழியையும் அறிந்திருந்திருந்தது சாத்தியமானதே.

முன்பே சிபியின் வழி வந்த சோழவர்மன், தமிழ் நாட்டில் தனது சோழ நாட்டை ஸ்தாபித்தான் என்று பல கட்டுரைகளில் பார்த்தோம். 
வடக்கு, தெற்கு என்ற வித்தியாசம் இல்லாமல், 
தமிழ் மொழி எங்ஙணும் பேசப்பட்டிருந்தால் மட்டுமே 
இப்படி எளிதில் கலந்திருக்க முடியும். 
இது சாத்தியமாக வேண்டும் என்றால், 
வடக்கில் மனு முதலானவர்களோடு சென்ற மக்களுக்கும், 
சங்கம் வாழ்ந்த தென்னன் தேசத்தில் இருந்த மக்களுக்கும் 
ஒரு ஆரம்பத் தொடர்பு இருந்திருக்க வேண்டும்

ஒரே மூலத்திலிருந்து உண்டான மக்கள் 
ஒரே மொழியைப் பேசியும்,
ஒரே கலாச்சாரத்தைக் கடை பிடித்தும் இருந்திருந்தால் மட்டுமே
இது சாத்தியமாகும்.
அப்படி ஒரு மூலத்தைச் சாகத்தீவு காட்டுகிறது.

அது இருந்த இடம் பெருமளவு கடலுக்குள் மூழ்கி விட்டிருந்தாலும், எஞ்சிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள் 
தென்னன் பாதுகாப்பில் 11,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே 
சங்கம் கண்டு மொழி வளத்துடன் இருந்திருக்கிறார்கள். 
அவர்களில் ஒரு பிரிவாக மனுவும், பிறரும், 
13,000 ஆண்டுகளுக்கு முன்பு சரஸ்வதி நதி தீரத்தில் நுழைந்திருக்கவே, அவர்கள் கொண்டு வந்த பேசு மொழி, 
தமிழாகத்தான் இருந்திருக்க முடியும். 
அவர்கள் வட இந்தியாவில் குடியமர்ந்து 
பல நாடுகளாகப் பிரிந்திருந்த போதிலும் 
சாதாரண மக்கள் பேசிய மொழி தமிழாகத்தான் இருந்திருக்க முடியும்.


அப்படி இருந்திருந்தால்தான், 
நேபாளத்தில் இருந்த மிதிலையில் பிறந்து, 
கங்கை நதி பாயும் கோசல நாட்டின் மருமகளான சீதை, 
லங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த போது,  
அவளைச் சூழ்ந்திருந்த ராட்சசிகளுடன்   
அவர்கள் பேசிய மொழியில் பேசி இருக்க முடியும். 

தென்னிந்தியக் காடுகளில் அமைந்திருந்த 
கிஷ்கிந்தையில் வாழ்ந்த அனுமன், 
அந்த ராட்சசிகள் சீதையை என்ன சொல்லி மிரட்டினார்கள் 
என்பதைப் புரிந்து கொண்டிருக்க முடியும். 
அது மட்டுமல்ல. வானர ரூபத்தில் உள்ள 
தன் மீது சீதைக்கு நம்பிக்கை பிறக்க வேண்டும் என்றால், 
மானுஷம் வாசம் என்றும், மானுஷம் வாக்யம் என்றும் சொல்லப்படும், சாதாரண மக்கள் பேசிய மொழியில் பேச வேண்டும் 
என்று அனுமன் முடிவு செய்கிறானே 
அது அயோத்தி முதல், இலங்கை வரை 
அறியப்பட்டிருந்த மொழியாகத்தானே இருந்திருக்க முடியும்? 
அந்த மொழி தமிழ் மொழியே என்று காட்டும் வண்ணம் 
சில உட்குறிப்புகளை வால்மீகி தருகிறார்.
அவற்றை அடுத்தக் கட்டுரையில் காண்போம்.

21 கருத்துகள்:

  1. மிகவும் அற்புதமான தொடர். புத்தகமாக ஆக்குவீர்களா?

    பதிலளிநீக்கு
  2. நன்றி.
    இன்னும் பல கட்டுரைகள் இருக்கின்றன. அனைத்தையும் முடித்தவுடன் செம்மைப்படுத்தி, ஏதேனும் நாளிதழிலோ, அல்லது புத்தக வடிவிலோ கொண்டுவர எண்ணம் இருக்கிறது. பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல கட்டுரை....இவற்றை நீங்கள் ஆங்கிலத்திலும் வெளியிட வேண்டும் அப்பொழுதுதான் உண்மை உலகெலாம் பரவும்.

    பதிலளிநீக்கு
  4. தொடர் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என்பது என் எண்ணம். ஆனால் தற்சமயம் நேரம் இல்லை. யாரேனும் மொழி பெயர்த்துக் கொடுத்தால் உதவியாக இருக்கும்.

    எனினும் இந்தத் தொடரில் வரும், வரப்போகும் பல கருத்துக்களையும் நான் என்னுடைய ஆங்கில வலைப் பதிவில் அவ்வபொழுது எழுதி வந்துள்ளேன். உண்மையில், திராவிடன் யார் என்ற கேள்விக்குப் பதில் தெரிந்து கொள்ள, மற்ற மாநிலத்தவர் ஆர்வமாக இருக்கிறார்கள். அதனால் தற்சமயம், நான் இங்கு எழுதுவதை அவ்வபொழுது ஆங்கிலத்திலும் பதிவு செய்கிறேன். வலது பக்க அட்டவணையில் ‘என் தர்பார்’ என்பதை க்ளிக் செய்தால் என்னுடைய ஆங்கில வலைத்தளத்திற்குச் செல்லலாம்.

    பதிலளிநீக்கு
  5. தொல்காப்பியர் அந்தணரா ? அந்தணர் என்றால் அதற்கான ஆதரமான தகவல்கள் என்ன?

    பதிலளிநீக்கு
  6. //தொல்காப்பியர் அந்தணரா ? அந்தணர் என்றால் அதற்கான ஆதரமான தகவல்கள் என்ன? //

    ஆம். அவர் அந்தணரே.அவரைப் பற்றிய ஆதாரமான தகவல்கள் இந்தத் தொடரின் தக்க இடங்களில் வருகின்றன.

    ‘அந்தணரா?’ என்று கேட்கப்படுவதன் மூலம், அந்தணர்களைப் பற்றி எந்த அளவு தமிழ் பேசும் இன்றைய மக்களிடையே ஒரு பிரிவினை மனப்பான்மையைத் திராவிடவாதிகள் விதைத்து விட்டார்கள் என்று தெரிகிறது. உண்மையில் அந்தணர்களிலிருந்துதான் பிற வர்ணங்கள் உண்டாயின. 52 ஆவது கட்டுரையைப் படிக்கவும். தமிழ் மட்டுமல்ல, பாரதம் தழுவிய ஹிந்து கலாசாரத்தை உருவாக்கிச் செம்மைப்படுத்தியதற்கு, அந்தணர்களும், வர்ணத்திற்கு அப்பாற்பட்ட முனிவர்களும் காரணம். முனிவர்கள் பூர்வாஸ்ரமத்தில் எந்த வர்ணத்தவர்களாக இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் முனிவர் என்ற அந்தஸ்து பெறும்போது, எந்த வர்ணத்திலும் சேர்த்தி இல்லை.

    தொல்காப்பிய சூத்திரத்தில் 4 வர்ணத்தவருடன் மேலும் 3 வகை சேர்த்து 7 வகைகள் சொல்லப்பட்டுள்லனவ அல்லவா? (கட்டுரை 61). அவற்றில் ‘தாபதர்’ என்பவர்கள் இந்த முனிவர்கள். பூர்வத்தில் அந்தணராக இருந்த தொல்காப்பியர், தாபதராக் ஆனார். தமிழுக்கு இலக்கணம் தந்த அகத்தியரும் தாபதர் ஆவார். இன்னும் அந்த் விவரங்கள் நிறைய இருக்கின்றன. தாபதர், கணியன், பொருந்ர் என்னும் மீதம் இருக்கும் 3 வகைகளை முடித்து விட்டுத்தான் மரபணு ஆராய்ச்சிக்குச் செல்ல முடியும். இவையெல்லாம் என் மனதில் விரைவாக ஓடுகின்றன. ஆனால் அவற்றை எழுத ஆரம்பிக்கும் போது பல கட்டுரைகளாக வருகின்றன. அதனால் தாமதமாகிறது. பொறுத்துக் கொள்ளவும்.

    பதிலளிநீக்கு
  7. Dear Jayasree Mam,
    Every day I eagerly come to the blog to check whether new article appeared..at times it comes with short interval and at times at long intervals.Some times had to wait long to see the new one.

    Chalam

    பதிலளிநீக்கு
  8. Dear Mr Chalam,
    I am very very sorry for making you wait. Since I am writing this among other chores, the delay happens. But this week I will be (hopefully) fully concentrating on this blog only. I suggest you subscribe to your mail box, so that the moment I post a new article you will receive the information. The link is given in the side bar.

    பதிலளிநீக்கு
  9. Dear Jayasree Mam,
    As per your suggestion, added the blog in the Google reader.

    Thanks
    Chalam

    பதிலளிநீக்கு
  10. அன்றைய பாரதம் முழுவதும் பரவலாகத் தமிழ் பேசப்பட்டிருந்தால்
    இது சாத்தியம்.
    மேலும், தமிழ்ச் சங்கத்தில் பங்கு பெற வேண்டும் என்ற அவா
    அன்றைய பாரத மக்களுக்கு இருந்திருந்தாலும்,
    அவர்கள் தமிழைக் கற்று இவ்வாறு சங்கத்தில் அரங்கேற்றியிருப்பார்கள்.
    This point only true to fact.Paripadal also will prove this to some extent. I am new to this blog. Your analysis are enthusiastic. Best wishes.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thanks for your comment Madam.

      I think I can quote here the excerpts from my English article on how Tamil was the root of all the Indian languages. This article was written in the context of Cartoon controversy in text books and the Hindi agitation of DMK in the 50s and 60s. The full article can be read here :-

      http://jayasreesaranathan.blogspot.in/2012/06/cartoon-controversy-on-hindi-agitation.html

      Excerpts:-

      The true history of Tamil is that it was spoken by almost all the people of Bharat in olden days – say about 7000 years ago. It was spoken by Rama, Sita and Vanaras. Hanuman conversed in Tamil with Sita in Ashoka vana. There is even a Tamil adage finding mention in the talks of Sita to the Rakshasis in the Valmiki Ramayana. Tamil was then known as Madhura Bhasha. Sita and hanuman conversed in Madhura Bhasha or Madhuram vaakyam. The first capital of the Pandyas who developed Tamil was known as Madhurai due to this name. The people who migrated to Indian mainland at that time established northern Madhurai now known as Mathura on the banks of Yamuna.


      Usually proper nouns will not changed but pronounced the same in any language. For example Ganga will be called as Ganga only in any language. Almost all the names of sacred places of Bharat except two are known by the same name in Tamil. The exceptions are Mathura and Kailash. Mathura is known as "Thozhunai" (having the special 'zha' of Tamil) and Kailash as "Kuyilaaluvam". Literal translation of Thozhunai is "Gotra"! People of an olden era speaking Madhura Bhasha had settled on the banks of Yamuna and coined names in Madhura Bhsasha for the river and the place situated on its bank. To know more about the movement of people to this region, read

      http://jayasreesaranathan.blogspot.in/2012/02/who-is-dravida-mr-karunanidhi.html

      (cont'd)

      நீக்கு
    2. Tamil was the oldest spoken language of all the people who are now separated in the name of region and language. The name Dalmia was derived from Dalna in Hindi. Some of the meanings of that word are to inflict, to throw, to shoot, to fling etc. Though the words do not start with "da" in Tamil, a prefix "a" is added. As such "Adal" is a Tamil word which comes with the same meaning as dalna. The one engaged in "Adal" is a warrior who can take on his enemies or becomes a protector of a group. The Adal became Dal, dalna, dalma, dalmia. The Dalmias must have been kshatriyas in the past – and engaged in Adal, but turned into vaisyas in course of time.


      Many names have connection with Tamil from where the root meanings can be derived. For instance, the popular name of Ambedkar has a similar word as "Ambalakkaran" in Tamil which signifies the position of a dignified chief.


      Thackeray has a root in "Thakkaar" in Tamil – the title for 'suitable head' of a group. Thakur and Tagore are further variations of this word.


      Kappadam in Tamil means cloth or dress which is also there as kapada in Hindi. Kapadia is a derivative of this word.


      Bacchan was said to be derived from Bacha menaing young. In Tamil 'pacchai' is used to denote young. By pa –ba inter change, pacchai became baccha and Bacchan.

      The term Bacchan also sounds similar to Acchan which is recognized as a Malayalam word for father. But it was originally a term from "Kodum Tamil" (non- grammatical Tamil) spoken Tamil prevalent in regions around ancient Tamil lands. It means both father and God.


      Ganguly may have been derived from the word Ganga. However there are Tamil words such as GangaaLi denoting Parvathy devi. Gangul in Tamil means darkness.


      The silk weavers of Gujarat are known as Patnuli. Pattu-nool is the word in Tamil for silk thread.


      Patnaik means Patta naayakan in Tamil – meaning the crowned chief.

      Patel and Patwari have always referred to Big men of the village according to 1881 census. Though patta exists in Sanskrit (eg - pattabhishekam), the word seems to have come from "patti" of Tamil. Patti means a small village or a place where a group of people live. The name of the chief of Patti came connected to that word and from that pat-nayak, patta-nayakan, patwari, patel etc had sprung up.


      Koli is a weaver in Gujarat. The same word exists in Tamil to mean weaving. Perhaps Kohli was a derivation from this.


      Nehwal is derived from Newal or a village called Newali. Nevi is a Tamil word meaning lotus. A place connected with Nevi can be expected to have a waterway. Newali near Latur in Maharashtra is on the banks of a river and has a dam also.


      Kaivartta or Kaibartta were fisher tribes in early days. This name is derived from Kewat according to early records in census. Kevedan is a Tamil word for fishermen. The name has changed from Kevedan to Kewat to Kaivrat to Kaivartta and Kaibartta.


      Kunbi is a name widespread throughout north India. They were basically identified as tillers / farmers. Kumbi is a Tamil word for the wet mud of the fields. The one who enters wet mud and works on it is a farmer. Kumbi also means stomach in Tamil. Food production is therefore connected to Kumbi and the farmer (kunbi).


      The name Tendulkar also sounds close to Tamil. 'Thandhurai' is used in literature. It is the prologue written in the beginning. The one who deciphers the texts and writes Thandhurai or gives discourses is a Thandhulakan. From that Tendulkar could have sprung up. Like this many derivations can be traced to Tamil.

      நீக்கு
    3. (continued from above)

      I am not saying this with any language chauvinism but to bring to the notice of the readers that almost all regional languages of India had an influence of both Tamil and Sanskrit in the past. Even Tamil and Sanskrit had a common growth as seen by the sharing up of nearly 30% of words among them. The Tamil that was promoted in core Tamil land of Pandyas (situated somewhere in the Indian ocean and submerged subsequently ) was grammatical Tamil that was based on the grammar of Agasthya (called Agasthyam). According to a 10th century book by one Nakkeeranaar, the refinement of Tamil with grammar was done about about 12,000 years ago before present. The people coming under the direct reign of Pandyan kings spoke grammatical Tamil. But the people who had already started moving out and migrating due to various reasons held on to the old form of Tamil which was not refined by grammar. They spread to the rest of India once the climate became conducive in the wake of the end of Ice Age. They were still speaking the old form of Tamil in addition to Sanskrit that was the language of Vedic studies. That spoken language came to be known as "Apa Brahmsa" (near Brahman). In course of time those who left the Vedic life started forgetting Sanskrit completely and were speaking Apa Brahmsa only. Apa Brahmsa became the mother language of many north Indian languages including Hindi. The important part of Apa Brahmsa is that most of the words are Tamil in corrupt form!


      It is recorded in the Census Report of 1901 how most languages of India had Apa Brahmsa basis. Unfortunately people stuck to Caldwell's classification of Dravidian and Indo Aryan group of languages and ignored the Pan Indian Apa Brahmsa basis for all the languages of India including Hindi and Marathi. The main culprit for this ignorance was that the people succumbed to the Dravidian propaganda of the DMK who promoted Tamil chauvinism without realising that Tamil had a much wider prevalence in the past. Consequent to this, polarisation of people took place throughout India around language identity. At least now people must wake up and take away language from the clutches of politicians.

      (cont'd)

      நீக்கு
    4. Apa Brahmsa was considered as secondary Prakrit as it had no Sanskrit basis, whereas Prakrit had Sanskrit influence in it. An important proof for the prevalence of Tamil in non grammatical or corrupt form throughout India was that Tholkaappiyam recognises the use of "Kodum Thamizh" (stunted Tamil) spoken by the people who migrated from Dwaraka and settled around the core Tamil lands of Pandyan kingdom. The Vels (connected to Beldars of Maharashtra, Gujarat and Rajasthan who were degraded into low castes during Muslim invasions and further degraded by the British in their classification of castes) spread throughout the western and northern parts of Tamil lands and made a dignified life for themselves. Verses praising them are found in the sangam of Pura nanuru. They did not speak chaste Tamil, but Kodum Tamil.


      This is proof of the existence of Tamil outside the present-day Tamilnadu in those days. The Vels settled in South India around 1500 BC, as known from Kapilar's verse on Irungovel who was hailed as the 49th descendant in the lineage that shifted to Tamil lands from Dwarka (Byt Dwaraka which got submerged around 1500 BC. This was different from Krishna's Dwaraka that was submerged around 3000 BC. The Indus civilisation flourished in Gujarat between these two submergences. The migration of the people from here to Tamil lands around 1500 BC explains the prevalence of Indus signs in Tamilnadu. )


      The regional dialects of Tamil are indeed the development from Kodum tamizh and not grammatical Tamil. All those Dravidian leaders including Karunanidhi who are swearing to protect Tamil in the name of opposing Hindi are not original speakers of Tamil. Even the identity that they have for themselves as "Dravidian" is not a Tamil word – which is not even a derivation from Kodum tamil. By whipping up language passions, they had only succeeded in isolating Tamil and discouraged cross- language studies that could have helped in exposing the ancient prevalence of Tamil.


      Until the British destroyed our traditional system of schooling, a student anywhere in the Madras Presidency had the knowledge of many languages besides his mother tongue. This helped him to understand the close connection between languages. There was little scope for language chauvinism in that atmosphere. But all those have been destroyed by DMK politicians particularly Karunanidhi and subsequently picked up by politicians of other regions.

      நீக்கு
    5. Dear jayasree,
      You have said:
      "I am not saying this with any language chauvinism but to bring to the notice of the readers that almost all regional languages of India had an influence of both Tamil and Sanskrit in the past..."


      I am just curious to know where did this Sanskrit come from, please give me an answer.
      my guess is: Sanskrit was born separately as there was a need to organize the kodunthamil of the north/prakrit ,( apart from theorganized tamil of the south)
      I appreciate your dedication and talent.
      Thanks.

      நீக்கு
    6. You said:
      //The name Tendulkar also sounds close to Tamil. 'Thandhurai' is used in literature. It is the prologue written in the beginning. The one who deciphers the texts and writes Thandhurai or gives discourses is a Thandhulakan. From that Tendulkar could have sprung up. Like this many derivations can be traced to Tamil.//

      Could be from Thandalkaaran : Tax / maamool collector.

      நீக்கு
  11. Starting from this article, 5 articles are going to be reproduced into English with additional information. There will be extra articles in that series, which I will notify here. Once all those are posted, a compilation will be published for reading them together. Our distinguished reader "Kodhayin Padhai" is translating these articles.

    http://jayasreesaranathan.blogspot.in/2013/03/valmiki-of-ramayana-knew-tamil-spoken.html

    Please don't miss the above article, it has many extra points and extra important evidences.

    பதிலளிநீக்கு
  12. //அவர் வேடனாகவும், திருடனாகவும் இருந்த காலத்தில் ஏற்பட்ட
    ஒரு சம்பவதால் அவர் வாழ்க்கையை வெறுத்து தியானத்தில் அமர்ந்தார். பல வருடகாலம் அவர் அசையாமல் தியானம் செய்து வந்த போது அவர் மீது கரையான் புற்று எழும்பி விடுகிறது. //

    உயிருள்ள பொருள்களின் மீது கரியான் புற்றெடுக்காது என்ற நிலையில் மேற்கூறிய கூற்று எவ்வாறு பொருந்தும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உயிருள்ள பொருள்களின் மீது கரியான் புற்றெடுக்காது என்ற நிலையில் மேற்கூறிய கூற்று எவ்வாறு பொருந்தும்//

      இந்த இடத்தில்தான் வேத மதம் நிற்கிறது. எவனொருவனைக் கண்டு எந்த உயிரும் பயப்படுவதில்லையோ, எவனொருவனால், தனக்கு ஒரு தீங்கும் ஏற்படாது என்று ஒரு உயிர் நினைக்கிறதோ, அவன் தெய்வ நிலையையும், முக்தி நிலையையும் அடையத் தகுந்தவன். அப்படிப்பட்டவன் மீது கரையான் புற்று கட்டும், அவன் தலையில் பறவை கூடு கட்டும்.

      உயிருள்ள பொருளின் மீது கரையான் ஏன் புற்று கட்டாது? உயிருள்ள மரத்தின் மீது கரையான் புற்று கட்டுமே அது எவ்வாறு? தான் கட்டும் புற்றுக்குத் தீங்கோ, அதிர்வோ நேராது என்ற நிலையில்தான் கரையான் புற்று கட்டுகிறது. வால்மீகியும், ஒரு மரத்தைப் போல அசையாது அமர்ந்திருக்கவே அவை புற்று கட்டினது சாத்தியமாயிற்று.

      இதைப் போலவே இன்னொரு சம்பவம் மஹாபாரதத்தில் பீஷ்மர் வாயிலாகச் சொல்லப்படுகிறது. அதைப் பற்றிய குறிப்பை 52 ஆவது கட்டுரையில் கொடுத்திருப்பேன்.
      ஜாஜலி என்ற முனிவர் தவம் இயற்றிய போது, அசையாது இருந்த அவரது நிலையினால், அவர் ஜடப் பொருள் என்ற நினைப்பில், அவரது சடாமுடியில் பறவைகள் கூடு கட்டின. குஞ்சு பொறித்தன. அவையும் வளர்ந்து பெரிதாகி, முடிவில் கூட்டை விட்டுப் (அவரது தலை முடி) போகும் வரையில் அவர் அசையாமல் இருந்து வந்தார். கிளம்பிச் சென்ற அந்தப் பறவைகள் ஒரு மாதம் வரையிலும் திரும்பி வராமல் போன பிறகுதான் அவர் அசைந்தார். அவ்வாறு அந்தப் பறவைகள் தன் தலையில் கூடு கட்டி வசித்து வந்த்து, தனது தவத்தின் மகிமையே என்றும், தன்னால் எந்த உயிருக்கும் தீங்கில்லை என்பதால், அவை அவ்வாறு கூடி கட்டி இருந்தன என்றும் அவர் பெருமைப்பட்டார். மஹாபாரதம் 12-260 இல் இந்த விவரங்களைக் காணலாம்.எனவே வால்மீகியின் மீது புற்று கட்டியது சாத்தியமே.

      நீக்கு
  13. அம்மா ! நன்றி அம்மா ! என் தேடல் பயணத்தின் சரியான பாதை என்று இதை பதிவு செய்வதற்கு இரு தினங்களுக்கு முன்பு தான் தெரிந்து கொண்டேன் . நன்றி ! நிச்சயம் உங்களுடைய வழிகாட்டுதல் என்னுடைய பாதைக்கு துணை நிற்கும் என்று நம்பியே நான் உங்களை தொடர்ந்து பயணிக்கிறேன்... உங்களை என் உள்ளார்ந்த குருவாக நினைத்து என் தேடலை ஆரம்பிக்கிறேன். நன்றி அம்மா ...

    பதிலளிநீக்கு