புதன், 6 ஏப்ரல், 2011

48. வெள்ளத்தில் தப்பிய மனு குடியேறிய இடம்.



இக்ஷ்வாகு குலத்தரசனான பாகீரதன் காலத்தில்,
இமய மலையில் கங்கோத்திரி என்னும் பனிக் கருவில்
சிறைப்பட்டிருந்த கங்கை,
உருகி ஒரு ஆறாக ஓடத்தொடங்கியது.
அந்த பாகீரதன் இக்ஷ்வாகு குலத்தில் வந்தவன்.
இக்ஷ்வாகு என்னும் மன்னனால் அந்த குலம் ஆரம்பிக்கப்பட்டது. (பகுதி 13)
மனுவின் மகனான இக்ஷ்வாகு,
சரயு நதிக் கரையில் அயோத்தியாவில்
தன்னுடைய நாட்டை, இக்ஷ்வாகு பரம்பரையை ஸ்தாபித்தான் என்று
வால்மீகி ராமாயணத்தில் வசிஷ்டர் கூறுகிறார்.
(இதன் மூலம் கங்கை தோன்றுவதற்கு முன்பே சரயு நதி இருந்திருக்கிறது என்று தெரிகிறது.)
அவனுக்குப் பிறகு அந்தப் பரம்பரையில் 24 ஆவது அரசனாக வந்தவன் பாகீரதன்.
அவன் காலத்தில்தான் கங்கை பூமிக்கு வந்தது.


மனு என்றால் மனிதன் என்பது பொருள்.
ஒவ்வொறு முறை பிரளயம் வந்த போதும்,
மனித குலம் பேரழிவைச் சந்தித்தாலும்,
அந்தப் பிரளயத்திலிருந்து தப்பி வந்த மக்கள் புது வாழ்க்கையைத்
தொடங்கி இருக்கின்றனர்.
அப்படி வந்தவர்கள் தங்களுக்குள் தீரம் மிக்க ஒருவனது தலைமையால்
நாகரிக வாழ்க்கையைத் தொடங்கி இருக்கின்றனர்.
இதைக் கூறும் ஒரு அத்தியாயம் மஹாபாரதத்தில் இருக்கிறது.
(சாந்தி பர்வம் 66)



பிரளயம் என்பது பல கோடி வருடங்களுக்கு ஒருமுறை உலகளாவிய அளவிலும் வருகிறது.
பல ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறையும் உலகில் ஆங்காங்கே வருகிறது.
அவ்வப்பொழுது குறிப்பிட்ட இடங்களிலும் வருகிறது.
கடல் கோள் எனப்படும் அந்த சிறு பிரளயங்கள்
புகார் நகரைப் பல முறை தாக்கி இருக்கிறது என்று மணிமேகலையில் சொல்லப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு தமிழ் நாட்டைத் தாக்கிய சுனாமியும் அப்படிப்பட்ட ஒரு கடல் கோளே.
சமீபத்தில் ஜப்பான் நாட்டைத் தாக்கிய சுனாமியும் அப்படிப்பட்டதே.



பனியுக சுழற்சியின் காரணமாக சில ஆயிரம் வருட காலம்,
அடிக்கடி கடல் கோள் அல்லது பிரளயம் ஏற்பட்டுள்ளது
என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்கிறார்கள்.
இன்றைக்கு 14,000 ஆண்டுகள் தொடங்கி, 7000 ஆண்டுகளுக்குள்
பல கடல் கோள்கள்
உலகின் பல பாகங்களிலும் நடந்தன என்கிறார்கள்.
அவற்றுள், பனியுகம் முடிந்து வந்த முதல் வெள்ளம்,
பல இடங்களையும் அழித்திருக்க வேண்டும்.
அதுவரை பொங்காத கடலையே பல தலைமுறைகளாகப்
பார்த்து விட்ட மக்களுக்கு,
திடீரென்று ஒரு நாள் கடல் பொங்கியபோது தயார் நிலையில் இல்லை.
அதனாலும் அதிக அழிவைச் சந்தித்தார்கள்.
ஆனால் இந்தியப் பகுதி மக்களைப் பொருத்த வரையில்,
அவர்கள் அப்படி ஒரு கடல் தாக்குதலுக்குத் தயாராக இருந்திருக்கின்றனர்.
தற்சமயம் இந்தியாவில் உள்ள மக்கள் கூட்டத்துக்கு
மூலகர்த்தாக்களாக இருந்த மக்கள்
கடல் வெள்ளத்தை எதிர்பார்த்திருந்தார்கள்.
தற்போதைய மனுவின் கதை அவ்வாறு சொல்கிறது.


மனுவின் கதை

பெரு வெள்ளத்திலிருந்து,
ஒரு மீனின் உதவியுடன் மனு தப்பித்த கதை புராணங்களிலும், மஹாபாரதத்திலும் சொல்லப்பட்டுள்ளது.
மஹாபாரதத்தில் வன பர்வம், 186 ஆவது அத்தியாயத்தில்
கொடுக்கப்பட்டுள்ள வர்ணனையின் அடிப்படையில் ஆராய்வோம்.
இந்த மனுவே இன்றைக்கு பாரதத்தில் இருக்கும் மக்களுக்கு முன்னோடி ஆவான்.


அவன் ஒரு முறை ஆற்றங்கரையில் தியானத்தில் இருந்த போது,
ஒரு சிறிய மீன் அவனிடம் வந்தது.
பெரிய மீன்களால் தனக்கு ஆபத்து என்பதால் தன்னைக் காப்பாற்றுமாறு அது கேட்டுக் கொண்டது.
எனவே அதை எடுத்து ஒரு குடத்து நீரில் இட்டான் மனு.
அந்த மீன் பெரிதாக வளர்ந்து அந்தக் குடத்தை ஆக்கிரமித்து விட்டது.
எனவே அதை எடுத்து ஒரு குளத்தில் விட்டான் மனு.
அங்கும் அது பெரிதாக வளர்ந்து, அது குளத்தையே அடைத்துக் கொண்டு விட்டது.
எனவே அதைக் கடலில் விட்டான் மனு.
அப்பொழுது அந்த மீன் அவனுக்கு நன்றி சொல்லியது.
அது மட்டுமல்லாமல், உலகில் ஒரு பிரளயம் வரப் போகிறது.
எனவே எல்லாவிதமான செடி, கொடிகளின் விதைகளைச் சேமித்தும்,
மக்கள் உள்ளிட்ட உயிரினங்களைக் காப்பாற்றுவதற்காக
ஒரு படகைத் தயாரித்தும் வைத்துக் கொள்ளச் சொன்னது.
அப்படிப் பிரளயம் வரும் போது
தான் முன்னுச்சியில் ஒரு கொம்புடன் தோன்றி
அவனைக் காப்பாற்றுவேன் என்று சொல்லி விடைபெற்றது.


மனுவும் அந்த மீன் சொன்னது போலவே தயார் நிலையில் இருந்தான்.
ஒரு நாள் பிரளயமும் வந்தது.
திடீரென்று கடல் கொந்தளித்து, நீர்ப் பெருக்கெடுத்து எல்லா நிலங்களும் கடலுக்குள் முழுகின.
சொன்னபடி அந்த மீனும் வந்தது.
அதன் கொம்பில் தன் படகை மாட்டி விட்டான் மனு.
உப்புக் கடல் நீர் ஆர்பரிக்க, அந்த வெள்ளப் போக்கில் படகானது இழுத்துச் செல்லப்பட்டது.
வெகு தூரம் சென்று
அது இமய மலைப் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் நங்கூரம் பாய்ச்சி நின்றது.
அந்த இடத்துக்கு நௌபந்தனம் என்ற பெயர் அதனால் ஏற்பட்டது.
தப்பித்த தன் மக்களுடன் மனு அங்கு குடி அமர்ந்தான்.
அவனிடமிருந்து மக்கள் தோற்றம் ஏற்படலானது. 


இதுதான் வெள்ளத்திலிருந்து தப்பி மனித குலத்தை மனு ஆரம்பித்த கதை.

இதில் ஒரு முக்கிய க்ளூ இருக்கிறது.
கடலில் வந்த வெள்ளமானது இமய மலைப் பகுதிக்கு இழுத்துச் சென்றிருக்கிறது.
அப்படியென்றால்,


இமய மலையிலிருந்து வரும் ஒரு மாபெரும் நதி
எந்தக் கடலில் கலக்கிறதோ,
அந்தக் கடல் பகுதியைச் சார்ந்த இடங்களில்
மனு முதலான மக்கள் வசித்திருக்க வேண்டும்.
கடலில் வந்த வெள்ளம் நதியில் புகுந்து,
அந்த நதி ஆரம்பிக்கும் இமய மலை வரை,
அந்த மக்கள் பயணித்த படகை இழுத்துச் சென்றிருக்க வேண்டும்.
இவ்வாறு நடக்க இரண்டே இரண்டு இடங்களில் சாத்தியங்கள் இருக்கின்றன.
ஒன்று கங்கை ஆறு கலக்கும் கிழக்குக் கடல்.
மற்றொன்று சிந்து நதி கலக்கும் மேற்குக் கடல்.
கங்கை ஆறு வந்ததே 12,000 ஆண்டுகளுக்குப் பிறகுதான்.
அப்பொழுது வங்கக் கடல் வற்றி இருந்தது.
அந்த கங்கை ஆற்றைக் கொண்டு வந்தவன்
மனுவின் பரம்பரையில் 24ஆவது அரசன்.
எனவே
மனு தப்பி வந்த கடல் கோள் மேற்குக்கடலில்தான் ஏற்பட்டிருக்க வேண்டும்.
அந்தக் கடல் பகுதிகளை ஆராய்வோம்.


அரபிக் கடலின் ஆழ்கடல் அமைப்பை இந்தப் படத்தில் காணலாம்.


இந்தியாவின் மேற்குக் கரையை ஒட்டி தொடர்ச்சியாக
வெளிர் நீலத்தில் கடலுக்குள் தெரியும் அமைப்பு ஒருகாலத்தில் நிலப்பகுதியாக இருந்தது.
அதாவது பனியுகம் இருந்த காலக் கட்டமான இன்றைக்கு 17,000 ஆண்டுகளுக்கு முன்
அந்தப் பகுதிகள் நிலமாக இருந்திருக்கின்றன.
அந்தப் பகுதியில் உள்ள குஜராத் மாநிலத்தைப் பாருங்கள்.
இன்றைக்கு முப்புறமும் கடல் சூழ்ந்த ஒரு தீபகற்பமாக குஜராத் இருக்கிறது.
ஆனால் அன்றைக்கு அது நிலப்பகுதியாக இருந்திருக்கிறது.



இன்றைக்கிருக்கும் குஜராத்தில் வடபுறம் இருப்பது கட்ச் வளைகுடா,
தென் புறம் இருப்பது காம்பே வளைகுடா.
கட்சு முனையில் இருப்பது துவாரகை ஆகும். (சிவப்புப் புள்ளி)


இந்தத் துவாரகைக்கு மேற்கில் கடலில் முழுகியுள்ள பல பகுதிகளைக் கண்டு பிடித்துள்ளனர்.


தற்போதைய துவாரகைக்கு அப்பால், கடலுக்குள் மூழ்கிய பகுதியை இந்தப் படத்தில் காணலாம். 
கடலுக்குள் காணப்படும் நீண்ட சுவரது அஸ்திவாரத்தை, ஆழ் கடல் ஆராய்ச்சியாளர் அளவெடுக்கிறார்.



அதுமட்டுமல்ல காம்பே பகுதியிலும், கடலுக்குள் 20 கி.மீ தொலைவில்
மனிதானால் செய்யப்பட்ட அமைப்புகளைக் கண்டு பிடித்துள்ளனர்.
அவற்றுள் ஒன்று இன்றைக்கு 9,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் தெரிய வந்துள்ளது.


அதாவது தெற்கில் பாண்டியர்கள் கோலோச்சிக் கொண்டிருந்தபோது,
இந்தியாவின் தென் கிழக்கில் பூம்புகாரில் வளர்ச்சி பெற்ற மனித நாகரிகம் இருந்த போது
(11,500 ஆண்டுகளுக்கு முன் முழுகிய புகார நகர அமைப்பினை பகுதி 16 இல் கண்டோம்),
இந்தியாவின் மேற்கிலும் வளர்ச்சி பெற்ற சமுதாயமாக மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.


இந்த மேற்குப் பகுதியின் அமைப்பை மேலும் ஆராய்ந்தால்,
இன்னும் பல உண்மைகள் தெரிய வருகின்றன.
இந்தியாவின் மேற்குக் கடற்கரையோரப் பகுதிகள் கடல் மட்டத்துக்கு மேலே இருந்ததைப் போல,
இந்தியாவை ஒட்டியுள்ள அரேபியப் பகுதியில் உள்ள
பாரசீக வளைகுடாவும் நிலப் பகுதியாக இருந்திருக்கிறது.
இன்றைக்கு 15,000 ஆண்டுகளுக்கு முன் அங்கு கடலே இல்லை
என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.




இந்தப் படத்தில் சிவப்பு நிற அம்புக் குறி பாரசீக வளைகுடாவைக் காட்டுகிறது.
அது வெளிர் நீல நிறத்தில் இருப்பதைக் காணலாம்.
அதாவது அந்த வெளிர் நீலப் பகுதிகள் ஆழம் குறைந்த இடங்கள்.
அம்புக் குறி காட்டும் பாரசீக வளைகுடாவில் இன்றைக்கு 15,000 ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் இல்லை.
அந்த வளைகுடாவில்தான் யூப்ரடீஸ், டைகிரீஸ் என்னும் நதிகள் வந்து விழுகின்றன.
அந்த நதிகளில் அந்தக் காலக் கட்டத்தில் நீர் வரத்து இல்லை இல்லை என்பதாலும்,
பாரசீக வளைகுடா தரை தட்டியிருக்கிறது.
இந்தப் படத்தில் சிவப்புக் கோட்டால் காட்டப்பட்ட பகுதிகள் வரை
அரேபியாவிலும், இந்தியாவிலும் நில நீட்சிகள் இருந்திருக்கின்றன.


17.000 ஆண்டுகளுக்கு முன்னால் பனியுகம் அதீதமாக இருந்த பொழுது,
அரேபியக் கடலிலும், வங்காள விரிகுடாக் கடலைப் போலவே
கடல் மட்டம் மிகக் குறைவாக இருந்திருக்கிறது.
அதனால் அங்குள்ள மலைத் தொடரும்
அதை ஒட்டிய உயரமான பகுதிகளும் மக்கள் வசிக்கத் தகுந்ததாக இருந்திருக்கிறது.



இந்தப் படத்தில் சிவப்பு நிற அம்புக் குறி
குமரி மலைத்தொடரைக் காட்டுகிறது.
லட்சத்தீவுகளும், மாலத்தீவுகளும் அந்தத் தொடரில் கடலுக்கு மேலே தெரிகின்றன.
கடல் மட்டம் குறைவாக இருந்த காலத்தில்
மேற்குக் கரையிலும் நில நீட்சி இருந்திருக்கிறது,
இந்த மலைத் தொடரும், இதைச் சார்ந்த இடங்களும் அந்த நீட்சியை ஒட்டி,
வாழத் தகுந்த பகுதிகளாக இருந்திருக்கின்றன.
கருப்பு நிற வட்டத்துக்குள் அப்படிபட்ட இடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் இன்றைக்கு கடலுக்குள் முழுகி விட்டன!!



இந்தப் பகுதியில் மக்கள் வாழ்ந்திருக்ககூடிய சாத்தியக்கூறுகள் அதிகம்.
ஏனெனில், பனியுகத்தின் பாதிப்பு இமய மலை தொடங்கி
ஆசியாவின் வடக்கிலும், வட ஐரோப்பாவிலும் மட்டுமே இருந்தது.
அரேபியக் கடலின் இந்தப் பகுதிகள் கடக ரேகைக்குத் தெற்கில் அமைந்து
மனித வாழ்க்கைகு உகந்த தட்ப வெப்ப நிலையுடன் இருந்திருக்கிறது.
இந்தப் பகுதிகளில் மனித நாகரிகம் இருந்தது என்பதை,
துவாரகை கடல் ஆராய்ச்சிகளும், காம்பே கடல் ஆராய்ச்சிகளும் நிரூபிக்கின்றன.
காம்பே பகுதியில் 9,500 ஆண்டுகளுக்கு முன் மனித நாகரீகம் வாழ்ந்திருந்தது
என்பதும் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
இந்தப் பகுதியில் வெள்ளம் வந்திருந்தால்
அதிலிருந்து தப்பிய மக்கள்
இன்றைய குஜராத், மஹாராஷ்டிரம் போன்ற பகுதிகளில்தான் தஞ்சம் புகுந்திருக்க வேண்டும்.


15,000 ஆண்டுகளுக்கு முன் வரை அவர்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டிருக்காது.
ஆனால் அந்தக் காலக் கட்டத்தில்தான்
அதாவது 17,0000 ஆண்டுகளுக்கு முன் தான் பனியுகம் முடிந்து
பனி உருக ஆரம்பித்தது.
அதனால் இமய மலைப் பகுதிகளிலும் பனி உருகி அரபிக் கடலில் கலந்த நதிகள் இரண்டு.
ஒன்று சிந்து நதி.
மற்றொன்று சரஸ்வதி நதி!

இன்றைக்கு சரஸ்வதி நதி இல்லை.
ஆனால் அந்த நதி இருந்தது என்பது
விண்கலத்திலிருந்து எடுத்த புகப்படங்களின் மூலம் தெரிகிறது.



இந்தப் படம் பூமிக்குள் ஓடிய நதி அமைப்பைக் காட்டுகிறது.
இதை வரைபடத்தில் அமைத்த போது,
இன்றைக்குள்ள சிந்து நதிக்குக் கிழக்கே இந்த நதி ஓடி இருக்கிறது என்றும்,
இதுவே வேதத்தில் சொல்லப்பட்டுள்ள சரஸ்வதி நதி என்றும்
ஆராய்ச்சியாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.



இந்தப் படத்தில் நீல நிறத்தில் செல்லும் நதி சரஸ்வதி.
சிவப்பு அம்புக்குறி சிந்து நதியைக் காட்டுகிறது.
பல ஆராய்ச்சிகளின் மூலம்
இந்த சரஸ்வதி நதியானது
ஒரு காலத்தில் மாபெரும் நதியாக இருந்திருக்கிறது என்றும் தெரிய வந்துள்ளது.
இன்றைக்கு கங்கையில் கலக்கும் யமுனை ஆறு,
முன்பு சரஸ்வதியின் கிளை நதியாக இருந்திருக்கிறது.
இன்றைக்கு சிந்துவில் சேரும் சட்லெஜ் நதியானது,
முதலில் சரஸ்வதியின் கிளை நதியாக இருந்திருக்கிறது.
இவற்றை வட்டப் பகுதிகளில் காணலாம்.


நல்ல வெள்ளப் பெருக்கோடு இருந்த சரஸ்வதி நதி
இன்றைக்கு 8,000 ஆண்டுகளுக்கு முன் நீர் வரத்து குறைந்ததாக ஆகி விட்டது.
பல இடஙகளில் பூமிக்குள் மறைந்தும், மீண்டும் தோன்றியும் இருக்கிறது.
இதற்குச் சொல்லப்படும் முக்கியக் காரணம்,
சரஸ்வதி நதியை ஒட்டி ஏற்பட்ட நிலநடுக்கங்கள் என்பதே.


இந்தியாவின் அந்தப் பகுதியின் பூமித்தட்டு அமைப்புகளை ஆராய்ந்தால்,
மேலும் சில முக்கிய உண்மைகள் கிடைக்கின்றன.
மேற்கிந்தியப் பகுதியின் பூமித்தட்டு அமைப்பை இந்தப் படத்தில் பாருங்கள்.
அம்புக் குறி காட்டும் திசையில், பூமித்தட்டுகள் நகருகின்றன.



இன்றைய இந்தியாவின் மேற்கு எல்லையில் சரஸ்வதி நதி பாய்ந்தது.
அந்த எல்லை மீது பூமித்தட்டின் எல்லையும் அமைந்துள்ளது.
அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சரஸ்வதியின் கிளை நதிகளாக இருந்த
யமுனையும், சட்லெஜ்ஜும் இடம் மாறி,
முறையே கங்கையிலும், சிந்துவிலும் கலக்க ஆரம்பித்தன.
பூமித்தட்டுகள் ஒன்றன் மீது ஒன்று உராயவே,
சரஸ்வதிப் படுகையும் ஆங்காங்கே பூமிக்குள் சென்று விட்டிருக்கிறது.


அது மட்டுமல்ல.
அரபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள பூமித்தட்டு அமைப்புகளையும் பாருங்கள்.


இந்தப் படத்தில் அரபிக் கடலில் காணப்படும் வட்டம் 
இந்திய பூமித்தட்டும், அரேபிய பூமித்தட்டும் சேரும் இடம்.
அம்புக் குறிகள் அந்த பூமித்தட்டுகள் நகரும் திசையைக் காட்டுகின்றன.
தென் மேற்கு அரபிக் கடலில் உள்ள அரேபிய பூமித்தட்டு,
இந்திய பூமித்தட்டை நோக்கி நகருகிறது.
இந்திய பூமித்தட்டின் மீது அதன் அழுத்தம் அதிகரிக்கும் போது,
அந்தப் பகுதியில் கடலுக்குள் நிலநடுக்கம் ஏற்படும்.
அதனால் ஏற்படும் சுனாமிப் பேரலைகள் செல்லக்கூடிய திசையை
அம்புக் குறிகள் காட்டுகின்றன.
அவை இந்தியப் பகுதிகளை நோக்கிச் செல்கின்றன.

இதனால் மேற்கிந்தியக் கடலை ஒட்டி நில நீட்சிகளாக இருந்த இடங்களும், (குஜராத், மஹரஷ்டிரம், வடக்கு கர்னாடகம்)
ராஜஸ்தானில் உள்ள ஆரவல்லிக் குன்றுகள் வரை சென்ற குமரித் தொடரும்,
எளிதில் பாதிப்பு அடையக் கூடியவை.


அவ்வாறு வந்த சுனாமியின் மூலமாக கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகை அழிந்திருக்கிறது.
கிருஷ்ணர் உலகை விட்டு நீத்த ஒரு வாரம் கழித்து,
பெரிய கடலலைகள் துவாரகையில் நுழைந்தன.
மக்கள் தப்பித்து ஓட ஓட,
அவர்கள் அது வரை இருந்த பகுதிகளை எல்லாம்
பேரலைகள் ஆக்கிரமித்து விட்டன
என்று மஹாபாரத்தில் முசல பர்வம் சொல்கிறது.
அது கட்டுக் கதை அல்ல என்பது
அரபிக் கடலில் ஏற்படக்கூடிய நிலநடுக்கம், சுனாமி போன்றவற்றின் மூலம் இன்று தெரிய வந்துள்ளது.


இந்த சாத்தியக் கூறுகளை
நாம் மனுவின் கதையுடன் ஒப்பிட்டுவோம்
இந்தக் கதையில் சில முக்கிய நிகழ்வுகள் காணப்படுகின்றன.
மிக முக்கியமான  நிகழ்வு, மனு சென்ற படகு
இமய மலை வரை சென்று நௌபந்தனம் அடைந்தது.


அரபிக் கடல் கடல் பகுதியில் இருந்த நில நீட்சியிலும்,
குமரி மலை ஒட்டிய பகுதிகளிலும் இருந்த மக்களை
தெற்கிலிருந்து கடல் கோள் வந்து, பேரலைகள் தாக்கினால்,
அந்த அலைகள் அரபிக் கடலில் கலக்கும் சரஸ்வதி நதிக்குள்
எதிர்த்துச் செல்ல முடியும்.


கடலிலிருந்து நதிக்குள் செல்லும் பேரலைகளின் போக்கில்
படகுகள் (நாவாய்கள்) போன்றவற்றில்
தயார் நிலையில் இருந்த மக்கள் தப்பித்திருக்க முடியும்.
அந்த அலைகள் சரஸ்வதியின் முகத்துவாரத்திலிருந்து
வெகு தூரம் உள் நோக்கிச் சென்றிருக்க முடியும்.
தயார் நிலையில் வைத்திருந்த நாவாய்கள் மூலம் அவர்கள்
கடலலையிலிருந்து பாதுகாப்பான தூரம் வரை சென்றிருகக் முடியும்.
அப்படிச் சென்ற மக்கள் கடைசியாக அடைந்த பகுதி நௌபந்தனம்
நக்கூரம் என்பதற்கு சமஸ்க்ருதச் சொல் இது.
அங்கேயே குடி அமர்ந்தார்கள்.
அங்கேயே தாங்கள் அது வரையிலும் ஈடுபட்டிருந்த வேத நெறியிலும் ஈடுபட்டார்கள்.
அதன் பயனாக ரிக் வேதமும் தந்தார்கள்.
அந்த ரிக் வேதம் வளர்ந்த பகுதி சரஸ்வதி தீரமாக இருக்கவே,
மனுவும், அவனைச் சார்ந்தவர்களும்,
அரபிக் கடலிலில் இந்தியாவின் மேற்குக் கரையின் நில நீட்சியில் வாழ்ந்த மக்கள் என்று தெரிகிறது.


மனுவின் கதையின் மற்றொரு அம்சமும்,
சரஸ்வதியைச் சார்ந்து இருக்கிறது.
ஒரு மீன் அதீதமாக வளர்ச்சி பெரும் விவரம் அந்தக் கதையில் வருகிறது.
குடத்திலும், பிறகு குளத்திலும் அந்த மீனானது அதிக வளர்ச்சி பெருகிறது.
ஒரு மீன் வளர என்ன இருக்க வேண்டும்?
அந்த நீரில் அதற்கான உணவு அபரிதமாக இருக்க வேண்டும்.
பாசி, நுண்ணுயிர்கள் போன்றவை அதிகமாக இருக்க வேண்டும்.
வேத நெறியில் வாழ்ந்த பண்டைய பாரத சமுதாயத்தில்
இந்தக் கருத்தை ஒட்டி, மழை பெய்யும் அளவை நிர்ணயித்தர்கள்.

அதாவது மழைக் காலம் ஆரம்பமாவதற்கு முன்
ஆனி மாதப் பௌர்ணமியன்று ஆஷாட பூஜை
என்று ஒரு பூஜை செய்வார்கள்.
(இந்த விவரங்களை வராஹமிஹிரர் எழுதியுள்ள “பிருஹத் சம்ஹிதை, 26 ஆவது அத்தியாயத்தில் காணலாம்)
அதில் சரஸ்வதி தேவியை, சத்தியவதி, வாக்கு தேவி என்றும்,
அவள் சொல் சரியாக இருக்கும் என்றெல்லாம் பொருள் படும் பிரார்த்தனையைச் செய்து,
அவள் துலாக் கோலில் அமர்வதாக வேண்டிக் கொள்வார்கள்.
அவர்கள் விளைவிக்கும் பயிர்களது விதைகளை
ஒரு அளவாக எடுத்துக் கொண்டு
அந்தத் துலாக் கோலில் எடை பார்ப்பார்கள்.
மீண்டும், மறு தினம், அதே பொருளை எடை பார்ப்பார்கள்.
எடை கூடியிருந்தால், அந்தப் பயிர்கள் அந்த வருடம் நல்ல விளைச்சல் தரும் என்று முடிவு செய்வார்கள்.
அந்தப் பயிர்களையே அவர்கள் அந்த வருடம் பயிரிடுவார்கள்.


அது போல தண்ணீரையும் எடை பார்ப்பார்கள்.
கிணற்று நீர், ஆறு அல்லது குளத்து நீர், கடல் நீர் என்ற
மூன்று வித நீரைக் கொண்டு வந்து எடை பார்ப்பார்கள்.
அதில் ஆறு அல்லது, குளத்து நீர் எடை கூடினால் (மறு நாள் எடை பார்க்கும்போது) அந்த வருடம் நல்ல மழை இருக்கும் என்று முடிவு செய்வார்கள்.


நீர் வாழ் நுண்ணுயிர்கள் அதிகமாக இருந்தால் அதனால் நீரின் எடை கூடும்.
மனுவின் கதையில் சொல்லப்படும் மீன் வளர்ச்சி,
இப்படி சூட்சுமமாக அந்த நாள் மக்கள் மழை வரவைக் கணித்த பாங்கினைக் கூறுவதாக உள்ளது.
முதலில் அந்த மீனை ஆற்றில் பார்க்கிறான் மனு.
அதை எடுத்துக் குடத்தில் இட்டான் என்னும் பொழுது,
ஆற்று நீர் நிரம்பிய குடமாக இருக்க வேண்டும்.
அதில் விடப்பட்ட மீன் அபரிதமான வளர்ச்சியைப் பெற்றது.  
அதைக் குளத்தில் விட்டபோதும், அது அபரிதமான வளர்ச்சியைப் பெற்றது
என்று சொல்லப்படவே
அதிக மழை வருவதற்கான அறிகுறியை அது காட்டுகிறது.
பனியுகக் காலக்கட்டத்தில்,
இந்தியக் கடலிலோ, அல்லது, அரபிக் கடலிலோ
இன்றைக்கு இருப்பது போல பருவ மழை இருந்திருக்க வாய்ப்பில்லை.
உலகமே குளுமை அடைந்ததால், மழை உண்டாகும் சூழ்நிலைகள்
குறைவாகத்தான் இருந்திருக்கும்.
கடல் மட்டம் குறைவாக இருந்தது என்று ஆராய்ச்சிகளில் தெரிவதால்,
இந்தப் பகுதி கடலில் பெருமளவு மழை இல்லை என்பதும் புலனாகிறது.



அப்படிப்பட்ட காலக்கட்டத்தில்,
சிறந்த உலகியல் அறிவு படைத்த ரிஷிகள்
சுற்றுப்புறத்தை நன்கு கவனித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
மீனின் வளர்ச்சியின் மூலமாக
பெரு மழை வருவதை எதிர் பார்த்திருக்கிறார்கள்.
மனுவுடன், சப்த ரிஷிகளையும் அழைத்துச் செல்லுமாறு அந்த மீன் கூறுவதாக
மனுவின் சரித்திரம் சொல்கிறது.
பிரளய காலத்தில் பெரு மழை விடாது பெய்யும் என்றும் நூல்கள் கூறுகின்றன.
தென்னன் பாண்டியன் ஊழியில் தவித்தபோது 
இந்திரப் படைகள் அவனைத் தாக்கின.
அப்படி என்றால் பெருமழை பெய்தது என்று அர்த்தம்.


எனவே பெரு மழையும் பெய்திருக்க வேண்டும்.
பனியுகம் முடிந்த முதல் ஊழியின் காரணமாக அட்லாண்டிக் கடலில் கடல் மட்டம் ஏறி,
அது ஒரு சங்கிலித் தொடராக இந்தியக் கடலிலும் விளைவுகளை ஏற்படுத்தி 
இருக்கக் கூடும்.
பூமித்தட்டு உராய்வு கடலில் நிலநடுக்கத்தை எற்படுத்தி இருக்க வேண்டும்.
அதனால் அலை செல்லும் திசை வடக்கு நோக்கி இருந்திருந்தால்தான், 
சரஸ்வதி முகத்துவாரத்தின் வழியாக,
நாவாய்கள் மூலம் மக்கள் தப்பி இருக்க முடியும்.


அவ்வாறு அவர்கள் நிலப் பகுதியில் சரஸ்வதி நதியில் நுழைந்த இடம் 
துவாரகையாக இருக்க வேண்டும்.


அது இன்றைய துவாரகை அல்ல.
இன்றைக்கு இருக்கும் துவாரகை 7- ஆவது துவாரகை ஆகும்.
இதற்கு முன் 3,500 ஆண்டுகளுக்கு முன் துவாரகை அழிந்திருக்கிறது
என்று ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் எஸ்.ஆர். ராவ் அவர்கள் கண்டு பிடித்துள்ளார்.
அவர் மீட்ட துவாரகைப் பகுதிகளை ‘பேட் துவாரகை என்று இன்றும் காணலாம்.
அது 6- ஆவது துவாரகை.


அதற்கு முன் 5- ஆவது துவாரகை கிருஷ்ணார் மறைந்த பிறகு, அழிந்தது.
அதைப் பற்றிய வர்ணனை மஹாபாரதத்தில் வருகிறது.
அதன் காலக் கட்டம் இன்றைக்கு 5,000 ஆண்டுகளுக்கு முன்.


அதற்கும் முன்னால் கடலுக்குள் மறைந்த துவாரகையை மீட்டு கிருஷ்ணர் 
தனது ராஜ்ஜியமாக ஸ்தாபித்தார்.
அதாவது கிருஷ்ணருக்கு முன்பே 4 துவாரகைகள் கடல் கோளால் அழிந்திருக்கின்றன.
அப்படியும் மீண்டும் மீண்டும் ஏன் அதை ஸ்தாபிக்க வேண்டும்?
கடல் கோள் அபாயம் இருந்தும் ஏன் அதை ஸ்தாபிக்க வேண்டும்?
அதற்கு உள்ள ஒரே பதில்,
அதன் வழியாகத்தான் இன்றைய பாரத மக்களின் முன்னோர்கள்
பிரளயத்திலிருந்து தப்பி
வேத வாழ்க்கையை மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதே.
அந்தப் பழம் நினைவில், துவாரகை ஒரு முக்கிய இடமாக ஆகி இருக்கிறது.


துவாரகை என்னும் சமஸ்க்ருதச் சொல்லுக்கு ‘கதவு அல்லது ‘வாயில் என்பது பொருள்.
துவாரகைக்குப் பெயர் காரணம் என்ன இன்று பலரும் பலவிதமாகப் பொருள் தருகிறார்கள்.
ஆனால், இதே பொருள் கொண்ட மற்றொரு இடத்தையும் நாம் முன்பே கண்டோம்.
அது ‘கவாடம்அலல்து கபாடம்என்னும் கபாட புரம் என்னும் பாண்டியன் தலைநகரம்.
அதற்கும் கதவு அல்லது வாயில் என்பது பொருள்.
அந்த இடத்துக்கு ‘ஆலவாய்என்ற பெயர் இருந்தது என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது என்று பார்த்தோம்.
அதன் பொருளும் வாயில் என்பதுதான்.


பிரளயத்தில் உயிரினங்கள் அழிகின்றன.
அப்படியும் அந்தப் பிரளயத்திலிருந்து தப்பிச் செல்ல
ஒரு வாயிலாக அந்த இடஙகள் அமையவே ‘துவாரகைஎன்றும்,
கபாடம் என்றும் ஆலவாய் என்றும் பெயரிட்டிருக்கிறார்கள்.

மனுவும், அவனைச் சேர்ந்தவர்களும் தப்பித்துச் சென்ற வாயில் துவாரகை என்றால்
அங்குதான் சரஸ்வதி நதியானது கடலில் கலந்திருக்க வேண்டும்.

இன்றைக்கு ஆராய்ச்சி மூலமாக சரஸ்வதி கடலில் கலக்கும் இடத்தை 
இந்தப் படத்தில் காணலாம்.
பட உதவி :-



அம்புக் குறி காட்டுவது இன்றைய துவாரகை.
துவாரகை சிவப்புப் புள்ளியாகக் காட்டப்பட்டுள்ளது.
நீல நிறத்தில் தெரிவது சரஸ்வதி நதியின் வழி.
இது குஜராத்தின் கட்சுப் பகுதியில் முடிகிறது.
இந்தப் பகுதியில் 15,000 வருடங்களுக்கு முற்பட்ட நில அமைப்பைப் பாருங்கள். 
சரஸ்வதி கடலில் சேரும் இடத்தில் இன்னும் நிலப்பகுதி செல்கிறது.
 சரஸ்வதி நதி முடியும் இடத்தில் நிலப்பகுதி இருக்கவே,
அந்த இடத்திலும் அந்த நதியானது ஓடிச் சென்று 
கடலில் கலந்திருக்ககூடிய திசையைப் பாருங்கள்.
அதை சிவப்பு நிற நீட்சியாக இந்தப் படத்தில் காணலாம்.

நில நீட்சி இருந்த காலக் கட்டத்தில் சரஸ்வதி நதி கடலில் கலந்திருக்கக்கூடிய இடம் 
நீலப் புள்ளியாகக் காட்டப்பட்டுள்ளது. 

அதுவே முதல் துவாரகையாக இருக்க முடியும்.

அதற்கு நேர் கிழக்கில் தற்போதைய துவாரகையை சிவப்பு அம்புக் குறி காட்டுகிறது.
கருப்பு நிற அம்புக் குறி மனுவினது நாவாய் சென்ற திசையாகும்.


கடல் அலைகள் இழுத்துச் சென்றபோது
மிகச் சரியாக துவாரகை மூலமாக சரஸ்வதி நதிக்குள் நுழைந்து,
அந்த நதியிலும் வெகு தூரம் சென்று
பாதுகாப்பாகக் கரை சேர்ந்திருக்கிறார்கள்.


மனு சென்ற போது தன்னுடன் சப்த ரிஷிகளையும் அழைத்துச் சென்றான் 
என்று மனுவின் கதை சொல்கிறது.
ரிக் வேதம் 7-89 இல் சுற்றிலும் தண்ணீர் இருந்தும், 
வசிஷ்டர் தாகத்துக்குத் தண்ணீர் கிடைக்காமல் தவித்தார் என்று சொல்லப்படுவது,
கடல் கோளில் தப்பிப் பல தினங்கள் கடலில் சென்று கொண்டிருந்த நிலையைக் காட்டுவதாக உள்ளது.
மேலும் ரிக் வேதத்தில் 133 இடங்களில் சமுத்திரம் என்று 
கடலைப் பற்றி விவரங்கள் வருகின்றன.
கடலில் ஓடும் நாவாய்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன.
100 துடுப்புகள் போடும் ஒரு கப்பலைப் பற்றி ரிக் வேதம் 1-116 கூறுகிறது.
அவ்வளவு பெரிய கப்பலில் மனு முதலானோர் தப்பியிருக்க முடியும்.
சரஸ்வதி நதியும் 
அந்தக் காலக் கட்டத்தில் மிகவும் அகன்று விரிந்து இருந்தது 
என்ற குறிப்புகள் வருகின்றன.


ரிக் வேதத்தை ஆராய்ச்சி செய்கிறேன் பேர்வழி என்று 
களத்தில் குதிக்கும் வெளி நாட்டு ஆராய்ச்சியாளர்கள்,
சமுத்திரம், கப்பல், நாவாய் போன்ற சொற்கள் 
ரிக் வேதத்தில் இருப்பதை எற்றுக் கொள்ள முடியாமல் வாய்க்கு வந்தபடி 
உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
மனுவின் கதையே கடல் கோளில் ஒரு நாவாய் மூலமாகத் தப்பித்ததைப் பற்றியது.


ஒரு மீனைக் கவனித்து, அந்த மீனால் காப்பாற்றப்படவே 
அதுவே தசாவதாரங்களுள் முதன்மையான மத்ஸ்யாவதாரம் ஆயிற்று.
(மத்ஸ்யம் என்றால் மீன் என்று பொருள்)
சரஸ்வதி நதி தீரத்தில் குடி புகுந்த மக்கள் 
தங்களை மத்ஸ்ய குலம் என்று அழைத்துக் கொண்டார்கள்.
அந்த இடமே மத்ஸ்ய தேசம் எனப்படலாயிற்று.
இந்த பின்புலத்தை அறியாமல் இன்றைக்கு ஆராய்ச்சி செய்பவர்கள்,
நட்ட நடு நிலபப்குதியில் மத்ஸ்ய தேசம் என்று எப்படி வர முடியும் என்று விழிக்கிறார்கள். அதனால் ஒரு வேளை மீனவக் குடும்பங்கள் வசித்திருப்பார்களோ 
அதனால் மத்ஸ்ய தேசம் என்று அழைத்துக் கொண்டார்களோ என்று நினைக்கிறார்கள்.


இங்கும் தென்னன் அனுபவித்த கடல் கோள்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
3,500 ஆண்டுகளுக்கு முன் கொல்லம் முதலாகக் குமரி நாடுகளையும்,
700 காவதம் பரந்திருந்த நாடுகளையும் இழந்த பாண்டியன்
இன்றைய மதுரையில் புகல் கொண்டான்.
அதற்குப் பிறகு அவன் கொண்ட சின்னம் மீன் சின்னமாகும்.
பிரளாயத்திலிருந்து உயிர் தப்பி வந்த மனுவும் மத்ஸ்யத்தைக் குலமாகக் கொண்டான்.
பிரளயத்திலிருந்து தப்பிய பாண்டியனும் மீனைத் தன் அடையளாமகாக் கொண்டான் என்றால்,
இறைவன் கருணையால், மத்ஸ்யாவதாரக் கடவுளால் காப்பாற்றப்பட்டு, 
மீண்டும் புது உலகம் படைப்பதாகக் கொண்டு
அந்த மன்னர்கள் மீன் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள்.


சரஸ்வதி நதி தீரத்தில் மத்ஸ்ய நாடு ஏற்பட்டது.
அதை மத்ஸ்ய மன்னர்கள் ஆண்டார்கள்.
மஹாபாரதம் சொல்லும் விவரங்களின் படி,
இந்த மத்ஸ்யர்கள் பல திசைகளிலும் பரவிச் சென்றார்கள்.
மானசரோவர் வரை வட சேடியிலும் மத்ஸ்யர்கள் சென்றனர்.
வடசேடியை ஆண்ட புரூரவஸுக்கும் சோழர்களுக்கும் உள்ள தொடர்பினை முன்பே கண்டோம்.

மத்ஸ்யர்கள் கிழக்கே கங்கை வரை பின்னாளில் சென்றனர்.
வட மேற்கே கைகேயி பிறந்த கேகய நாடு வரை சென்று
அங்கும் மத்ஸ்ய நாட்டை ஸ்தாபித்தனர்.
தெற்கே ராஜஸ்தானம், மத்தியப் பிரதேசம் வரை
தென் மத்ஸ்ய நாடடையும் காலப்போக்கில் ஸ்தாபித்தனர்.
ஆனால் பெருமை வாய்ந்த ஒரிஜினல் மத்ஸ்ய தேசம் என்றால்
அது சரஸ்வதி நதி தீரத்தில்தான் ஒத்துக் கொள்ளப்பட்டது,
பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் செய்த விராட நாடு
சரஸ்வதி அமைந்துள்ள பகுதியில்தான் இருந்தது.


ரிக் வேதம் தந்த ரிஷிகள் சரஸ்வதி நதிப் பகுதியில் வாழ்ந்தனர் என்பதே
ரிக் வேதமும், புராண, இதிஹாசங்களும் தரும் செய்தி.
மஹாபாரத காலத்தில் அந்த நதி பெரிதும் மறைந்து விட்டது
என்று பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.
அந்த சரஸ்வதி நதிப் பகுதியில் இருந்ததுதான்
மஹாபாரதப் போர் நடந்த குருக்ஷேத்திரம்.
அந்த ரிஷிகளுக்கெல்லாம் முன்னோடி மனு ஆவான்.

ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி, 
பனியுகம் முடிந்து வந்த முதல் ஊழி இன்றைக்கு 14,000 முதல் 15,000 ஆண்டுகளுக்குள் நடந்திருக்கிறது. (பகுதி 45)
அந்தக் காலக்கட்டத்தில் மனுவும், சப்த ரிஷிகளும், மற்றவர்களும்
கடல் வெள்ளத்திலிருந்து தப்பி சரஸ்வதி நதிப் படுகையில் குடியேறி இருக்கின்றனர். 
இமய மலை வரை பரவி இருக்கின்றனர்.
மனுவின் மகன்கள் மொத்தம் ஒன்பது பேர்
என்று மஹாபாரதம் மற்றும் பல புராணங்களின் மூலம் தெரிகிறது.
மனுவுக்குப் பிறகு அவனது முதல் மகன் வேணன்,
மனு ஆண்ட பகுதிக்கு அரசனாக ஆகி இருக்க வேண்டும்.
இக்ஷ்வாகு 5- ஆவது மகனாவான்.
அவன் உள்ளிட்ட பிற மகன்கள்
மனு இருந்த நாட்டுக்கு அயலாக உள்ள பிற இடங்களில்தான்
தங்கள் நாட்டை ஸ்தாபித்திருப்பார்கள்.
அதுதான் வழக்கமாக இருந்தது என்பதை,
சிபியின் பரம்பரையில் வந்த சோழவர்மன்
தமிழ் நாட்டுக்கு வந்து அரசு ஸ்தாபித்ததிலிருந்து தெரிகிறது.
அந்த வழக்கத்தை யயாதி மன்னன் கைக்கொள்ளாததால்
அவன் மகன்களுக்கிடையே வந்த போரை
ஆரிய தஸ்யு போராக மாக்ஸ் முல்லர் வருணித்துள்ளார்.


ஆரியன் என்றும், திராவிடன் என்றும் முல்லர்வாதிகள் கூறுவது
மனுவின் வம்சத்தில் வந்த மக்களைப் பற்றித்தான்.
பாரத சரித்திரத்தை அறியாமல் அவர்கள் மனம் போன போக்கில் சொல்லி விட்டது அறியாமைக்கு வழி வகுத்து விட்டது.


ஆனால் திராவிட தேசம் என்பது வேறு இடத்தில் சொல்லப்படுகிறது.
பிரளய வெள்ளத்தில் மனு என்பவன் தப்பி,
திராவிட தேசத்திலிருந்து வந்தான் என்று
ஸ்ரீமத்பாகவதம் (9.1.2-3) கூறவே (பகுதி 38)
திராவிட தேசம் என்று எதைச் சொன்னார்கள்
என்பதை நாம் மேற்கொண்டு ஆராய்வோம்.





17 கருத்துகள்:

  1. Excellent.. but the there is no reference to the calculation of dates..

    but i would appreciate this post, and further research on it.. particularly your point on submerged lands beyond dwaraka is entirely valid.. so far no excavation has been done there, and if we do it, we can find lot of things..

    பதிலளிநீக்கு
  2. Thanks.
    I have given a reference to the probable period.
    Here is that portion:-

    //ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி,
    பனியுகம் முடிந்து வந்த முதல் ஊழி இன்றைக்கு 14,000 முதல் 15,000 ஆண்டுகளுக்குள் நடந்திருக்கிறது. (பகுதி 45)
    அந்தக் காலக்கட்டத்தில் மனுவும், சப்த ரிஷிகளும், மற்றவர்களும்
    கடல் வெள்ளத்திலிருந்து தப்பி சரஸ்வதி நதிப் படுகையில் குடியேறி இருக்கின்றனர்.//

    The first flood after the end of Ice age had been devastating. What I am concentrating here is what happened in the Indian sub continent's surroundings. The worst affected areas were the West European coast lines. We can make out from the Inundation maps.

    On Dwaraka, many researches are happening in Dwaraka. You can google search and know. There is a post on Dwaraka excavation that establishes Krishna's kingdom in my English blog 'Non Random Thoughts.'

    In the coming posts, I will be giving more info on the origin of these people (Manu) and their connection to Tamils in Thennan naadu.From the available Hindu text- narration and geological researches done so far, we can explain upto Daksha's yajna and the devastation by fire by Rudra. That goes further beyond the Ice age - somewhere 40,000 years ago. I will be noting them in appropriate places. Mankind had been doing pretty well in our part of the world for quite long.

    பதிலளிநீக்கு
  3. Right Angle,
    I think you belong to Kongu vellala. I will come to the origin of the kongu vellala also, much later in this series:)

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள அம்மா அவர்களே,

    "In the coming posts, I will be giving more info on the origin of these people (Manu) and their connection to Tamils in Thennan naadu.From the available Hindu text- narration and geological researches done so far, we can explain upto Daksha's yajna and the devastation by fire by Rudra. That goes further beyond the Ice age - somewhere 40,000 years ago. I will be noting them in appropriate places. Mankind had been doing pretty well in our part of the world for quite long."

    உங்களது இடுகையை வாசிக்கும் பொழுது நாங்கள் நேரிடையாக நாற்பதாயிரம் வருடங்கள் முன்னே சென்றது போல் உள்ளது. இன்னும் நிறைய உங்களிடம் இருந்து ஆவலுடன் எதிர்பார்கிறோம்.

    பதிலளிநீக்கு
  5. //இன்றைக்கு 12,000 ஆண்டுகளுக்கும் முன்னால்
    அந்த கங்கை பூமிக்கு வந்தது என்று தெரியவரவே,
    அந்தப் பரம்பரையின் மூல கர்த்தாவான மனு என்பவன்
    அதற்கும் பல நூறு வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்திருக்க வேண்டும்
    என்பது நிச்சயமாகிறது.
    //

    கங்கை ஓட ஆரம்பிச்சு பல கோடி வருஷம் ஆகுது

    பதிலளிநீக்கு
  6. நன்றி திரு சிவா அவர்களே.
    ஒரு வேண்டுகோள். என்னைப் பெயர் சொல்லியே கூப்பிடுங்கள்.

    பதிலளிநீக்கு
  7. //கங்கை ஓட ஆரம்பிச்சு பல கோடி வருஷம் ஆகுது//

    திரு ஜெய்சங்கர் அவர்களே, நீங்கள் முந்தின கட்டுரையைப் படிக்கவில்லையா?

    பதிலளிநீக்கு
  8. Dear Jayasree Mam,
    Excellent clarity here.

    Some researches confused this and claimed that Manu originally belonged to Kumari Kandam(They confused Pandiya king with Manu) and went up towards Indus valley.

    Here its very clear that the two were different and were affected by the divulge at different times.

    Thanks

    பதிலளிநீக்கு
  9. Dear Mr Chalam.

    Hope you had read the 56th post. Manu's origin was indeed in the South in Indian ocean. There is kinship between him and Pandyans, but he was not the Pandyan. In the 57th post, more details will be given.

    பதிலளிநீக்கு
  10. நான் ஒரு ஈழத்தமிழ் இந்து,
    பாரதத்தை தமிழர்களின், இந்துக்களின் ஜென்ம தேசமாக வணங்குகிறேன், மரியாதை கொண்டிருக்கிறேன். பாரதத்தின் தொன்மையையும் நம் கலாசாரத்தின் பழமையையும் அற்புதமாக பதிவிடுவதற்கு என் நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.

    பதிலளிநீக்கு
  11. நன்றி திரு கோபிநாத் அவர்களே.

    பதிலளிநீக்கு
  12. திருமதி ஜெயஸ்ரீ ,

    பிரளாயத்திலிருந்து உயிர் தப்பி வந்த மனுவும் மத்ஸ்யத்தைக் குலமாகக் கொண்டான்.
    பிரளயத்திலிருந்து தப்பிய பாண்டியனும் மீனைத் தன் அடையளாமகாக் கொண்டான் என்றால்,
    இறைவன் கருணையா#
    1 . பிரளயத்தில் இருந்து பாண்டிய மன்னன் மீனை கொண்டு தப்பிக்க வில்லையே ?
    ௨.மனுவும் மத்ஸ்யத்தைக் குலமாகக் கொண்டான். # மனு சூரிய வம்சம் தானே ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்விக்கு நன்றி சக்தி அவர்களே.
      கவனமாகச் சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கவனமாகப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

      பாண்டியன் மீனைக் கொண்டு தப்பித்தான் என்று நான் சொல்லவில்லை. மீனைக் கொண்டு தப்பித்த மனு வாழ்ந்த இடம் மத்ஸ்ய தேசம் என்று அழைக்கப்பட்டது என்பதாலும், அதை மையமாகக் கொண்டே பாரத தேசத்தைப் பிரித்தார்கள் என்பதால் மனுவை மத்ஸ்ய குலம் என்றேன். அவன் சூரிய சூரிய வம்சத்தவனே. பாண்டியன் சந்திர வம்சத்தவனே.

      இருவருக்கும் உள்ள பொதுவான விவரம், இருவரும் பிரளய வெள்ளத்தில் தப்பி மக்களுக்குப் புது வாழ்வு அளித்தவர்களே. பிரளய நீரில் உயிர் தப்பினவர்கள் எதேனும் பெயரால் மீனை வரித்திருக்கிறார்கள் என்பதைக் கட்டுரையில் கோடிக் காட்டியுள்ளேன்.அதற்குக் காரணம், எந்த பிரளயம் வந்தாலும் மீன் சாகாது. மீன் குலம் ஒட்டு மொத்தமாக அழியாது. இந்தக் காரணத்தால் பிரளய வெள்ளத்தில் தப்பின எவரும் தங்களை மீனாகவும், அல்லது மீனால் காப்பாற்றப் பட்டவர்களாகவும் நினைத்திருக்கலாம். இந்தக் காரணத்தாலேயே மீன் என்பதன் முக்கியத்துவம் பாரதமெங்கும் (அ) வேத மரபில் இருந்திருக்கிறது.

      கூடலழகர் கோயில் குளத்தில் நடந்த சம்பவத்தின் அடிப்படையில், பாண்டியன் மீன் சின்னத்தைப் பின்பற்றினான் என்று கோயில் தல புராணம் கூறுகிறது. மீன் துள்ளி விழுந்து உயிர் தப்பினதைப் போல தாமும் தப்பினதைப் பாண்டியன் நினைவு கூர்ந்து இருக்கலாம்.


      மீன் சின்னத்தைப் பற்றியும், மீனா இன மக்கள், மினோவா மக்கள் என இன்னும் நிறைய எழுத இருக்கிறேன். சிந்து சமவெளிச் சின்னங்களில் மீன் சின்னம் இருப்பதைப் பற்றி விவரிக்கும் போது இந்தக் கருத்துக்கள் ஆராயப்படும்.

      இங்கு சுருக்கமாகச் சொல்வதென்றால், மீன் மற்றும் இரட்டை மீன் ஆகியவை அஷ்ட மங்கலச் சின்னங்களாக வேத மரபில் உள்ளன. மீன் போல தப்பித்த காரணத்தால் மீன் சின்னம் மங்கலச் சின்னமாக ஆகியிருக்கலாம். சோழன் திருவாலங்காட்டுச் செப்பேட்டு முத்திரையிலும் இரட்டை மீனைக் காணலாம்.

      அந்த இரட்டை மீனின் தத்துவத்தைப் புத்த மரபின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். பாண்டியர் கட்டிய கோயில்கள், மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள பழமையான கோயில், கட்டட அமைப்புகளில் இரட்டை மீன்கள் (ஒன்றை ஒன்று முத்தமிடுவது போல) இருப்பதைக் காணலாம். அஷ்ட மங்கலச் சின்னமான இதற்குப் புத்த மதம் தரும் கருத்து, சம்சாரக் கடலில் முழுக மாட்டோம் என்னும் பயமின்மையும், சுதந்திரமும் ஆகும். ஜைனர்களும் இத்தகு இரட்டை மீன்களை, சூரிய கலை, சந்திர கலை என்னும் மூச்சு நாடிகளைக் குறிப்பதாகப் பயன்படுத்துகிறார்கள்.

      இந்தக் கருத்து இரண்டுமே (கடலில்) முழுகாமையும், சாவாமையைத் தரும் யோகத்தையும் குறிப்பவை. புத்த, ஜைன மதங்கள் வேத மதத்திலிருந்து பிரிந்தவை என்பதால், இந்தக் கருத்துக்களை வேத மரபிலிருந்துதான் பெற்றிருக்கின்றன எனலாம். வேத மரபில் இவை மங்கலச் சின்னங்களாக இருப்பதால், அதற்கான காரணத்தைத் தேடினால் அது மத்ஸ்யத்தால் மனு தப்பின கதைத் தொடர்பைக் காட்டுகிறது.

      இதே மீன் சின்னம் கிருஸ்துவத்திலும் இருக்கிறது. அதற்கு முன்பே வேத மரபில் இருந்ததால், கிருஸ்துவ மீன் ஒரு கடன் வாங்கப்பட்ட கருத்தே. அவர்கள் நேரிடையாக வேத மரபிலிருந்து வாங்கவில்லை. வேத மரபிலிருந்து கெல்டுகளுக்குச் சென்றது. அவர்களிடமிருந்து கிருஸ்துவர்கள் எடுத்துக் கொண்டார்கள். கெல்டுகளுக்கும், வேத மரபுக்கும் உள்ள தொடர்பை 102 ஆவது கட்டுரையிலிருந்து படிக்கலாம்.

      (தொடரும்)

      நீக்கு

    2. வம்சம், குலம், கொடிச் சின்னம், முத்திரைச் சின்னம் எல்லாம் வேறு வேறு கருத்துக்களோடு எழுந்தன. வம்சம் என்றால் சூரிய வம்சம், சந்திர வம்சம் என்று இரண்டுதான் இருந்தன. வம்சம் என்பதை race எனலாம். Solar race, lunar race என்பவை இனம் என்பதாகக் கொள்ளலாம். அவற்றுள் பல குலங்கள் இருக்கும். அப்படி எழுந்த மத்ஸ்ய குலம் பல இருந்தன.

      பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் இருந்த விராட நாட்டவர்கள் ஆதி மத்ஸ்ய குலமாக, மனுவின் ஆதி இருப்பிடமாக இருக்கலாம். ஏனெனில் அங்குதான் புஷ்கரும், அதன் விளையாட்டுளும் நடைபெற்றன - இன்று வரை நடைபெற்று வருகின்றன. அந்தப் புஷ்கரத்தின் ஆதி இருப்பிடம் பூமத்திய ரேகைப் பகுதியில் கடலில் முழுகிய 90 டிகிரி மலையில் இருந்து என்பதை 112 ஆவது கட்டுரையில் விளக்கியிருப்பேன். அதுவே வைவஸ்வத மனுவின் ஆதி இருப்பிடமாக இருக்கலாம்.

      அதற்கும் தெற்கே வெகு தொலைவில் முதல் சங்கப் பாண்டிய நாடு இருந்தது. இவர்கள் இருவருமே ஆதியில் ஒரே மூலத்தில் உண்டாகி, இந்தியக் கடல் பகுதியிலேயே வேறு வேறு இடங்களில் இருந்திருக்கின்றனர். அதில் கடல் மட்டம் உயர உயர, மனுவானவன், தென்னிந்தியக் கடற்கரையோரமாக வந்து, மேற்குக் கரையோரமாக குஜராத் வரை சென்றிருக்கிறான். அங்கிருந்து துவாரகை வழியாக வட இந்தியாவில் நுழைந்திருக்கிறான்.

      பாண்டியனும், பல் வேறு காலக் கட்டங்களில் கடல் வெள்ளத்தால் இடம் பெயர்ந்து இந்தியாவின் தென் கடலோரத்தைல் கவாடத்தில் இருந்திருக்கிறான். கடைசி கடல் கோளில், தென்னிந்தியாவுக்குள் நிழைந்திருக்கிறான், மனுவைப் போல மேற்குக் கடலோரமாகச் செல்லவில்லை, காரணம், அவன் வந்த போது (3500 ஆண்டுகளுக்கு முன்) மேற்குக் கரை அரபிக் கடலில் முழுகி விட்டது.

      இந்த இரண்டு மக்களும் ஆதியில் ஒரே மூலம் - gene pool. 10,000 வருடங்களுக்கு முன்பே (முதல் சங்கத்துக்கு முன்பே) இந்தியக் கடலில் பிரிந்து விட்டனர். ஆதியில் பேசிய தமிழைக் கொடும் தமிழாக மனு எடுத்துச் சென்றிருக்கிறான். இதனால் பழமையான வட இந்திய மரபணு, பழமையான தென்னிந்திய மரபணு என்று இரு பிரிவுகளாக ஏற்பட்டிருக்கின்றன. (ANI, ASI genomes). மரபணு காட்டும் இந்தப் பிரிவை, நமது பழம் நூல்கள் பேசுகின்றன என்பதையே நான் இந்தத் தொடரில் சொல்லிக் கொண்டு வருகிறேன்.

      நீக்கு
  13. "Water finds its own level"; if so how Bay of Bengal could have been dry or its level low when Arabian Sea level was high? It does not agree with science

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //if so how Bay of Bengal could have been dry or its level low when Arabian Sea level was high?//

      Where did I say so?

      The sea level was 120 meters lower than now during Ice age. As a result the coast line of Bay of Bengal was far extended into the sea. Read the previous article (47th). During Holocene, that is 13,000 years ago, the west coast in Arabian sea too was high a land and people had lived there. In this blog itself I have posted two articles on this showing illustrations.

      http://thamizhan-thiravidana.blogspot.in/2011/12/blog-post.html

      http://thamizhan-thiravidana.blogspot.in/2012/02/who-is-dravida-mr-karunanidhi.html

      There are many in my English blog.

      The current sea level was obtained around 7000 years ago. That was when Ram setu was built.

      For more info on sea level changes read Graham Hancock's researches.

      "Between 17,000 years ago and 7000 years ago, at the end of the last Ice Age, terrible things happened to the world our ancestors lived in. Great ice caps over northern Europe and north America melted down, huge floods ripped across the earth, sea-level rose by more than 100 metres, and about 25 million square kilometres of formerly habitable lands were swallowed up by the waves........."

      More on
      http://www.grahamhancock.com/archive/underworld/

      நீக்கு