வெள்ளி, 11 மார்ச், 2011

44. ஊழிகளும், சங்கமும் கண்ட குமரிக் கண்டம் – பகுதி - 2


முதல் ஊழிக்குப் பிறகு
வருணனுக்கு விழா எடுக்க ஆரம்பித்திருக்க வேண்டும்.
முதல் ஊழி வருணனால் ஏற்பட்டது.
அதை உக்கிரகுமார பாண்டியன் அடக்கினான்.
2- ஆம் முறையாக வந்த ஊழிக்கும் வருணன் காரணமாகவே,
முந்நீர் நெடியோன் திருவிழா என்பது சிறப்பாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது.
இதைப் பல்யாக சாலை முது குடுமிப் பெரு வழுதியைப்
பற்றிய பாடல் மூலம் தெரிந்து கொள்கிறோம். (பு-நா -9)
அந்த அரசனைப் பற்றிய பாடலில் பஹ்றுளி ஆற்றைத் தொடர்பு படுத்தி வரவே அவன் கபாடபுரத்தை ஆண்டவன் என்று தெரிகிறது.


முந்நீர் நெடியோன் விழா என்பதை
இந்திர விழா என்று
சிலர் நினைத்து விடுகிறார்கள்.
இந்திரன் மழைக்குக் காரணமானவன்.
அவனுக்கு விழா எடுத்தால், மழை கிடைக்கும்.
மழையை நம்பி வாழும் தேசங்களில் இந்திர விழா நடை பெற்றது.
சோழ நாட்டில், புகார் நகரில் இந்திர விழா நடந்தது.


ஆனால் பாண்டியன் தேசத்தில்
இந்திரனை வேண்டத் தேவையில்லை.
அவர்களுக்குத் தொந்திரவு கொடுப்பவன் வருணன்!
வருணன் என்பவன் கடல் நீருக்கு அதிபதி.
முந்நீர் என்றால் மூன்று செயல்களை உடைய நீர் என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் விளக்குகிறார்.
மூன்று செய்கை எவை என்றால்,
மண்னைப் படைத்தல்,
மண்ணைக் காத்தல்,
மண்ணை அழித்தல் என்பவை.
இவற்றைச் செய்வது கடலாகும்.
அந்தக் கடலது செயலால் பாண்டியர்கள் வாழ்ந்தும், வீழ்ந்தும் இருந்தனர்.
எனவே, கடலுக்கு அதிபதியான வருணனுக்கு விழா எடுத்தனர் பாண்டியர்.மஹாபாரதத்தில் பாண்டியன் நாட்டில் வருண தீர்த்தம் இருந்தது
என்று முன் பகுதியில் பார்த்தோம்.
புறநானூறு 9- தரும் செய்தியின் படி,
அந்த வருண தீர்த்தம் கபாடபுரம் அருகே இருந்திருக்க வேண்டும்.


கபாடபுரமும் 3-ஆவது ஊழியில் மறைந்தபின்
வருண தீர்த்தமும் இல்லை.
குமரி தீர்த்தமும் இல்லை.

பின்னாளில் அகஸ்திய தீர்த்தம் பொதிகை மலையில் ஏற்பட்டுவிட்டது.
இன்றைய குமரி முனையிலோ,
அதற்கப்பாலோ குமரித்தீர்த்தம் அமைக்கப்படிருக்க வேண்டும்.


3-ஆவது ஊழியில் குமரி மலை முழுவதும் அழிந்து விட்டது.
அதன் எஞ்சிய் பகுதிகள் லட்சத் தீவாகவும், மாலத்தீவாகவும் இன்றும் தெரிகின்றன.
90 டிகிரி மலைத்தொடரில் இருந்த ரிஷப மலை முழுவதும் மறைந்து விட்டது.
ஒரு மாபெரும் வரலாறே இந்த ஊழியின் காரணமாக
இந்தியக் கடலுக்குள் சமாதி கண்டு விட்டது.இந்தப் படம் Bathymetry எனப்படும். கடலுக்குள் இருக்கும் ஆழம், ஏற்றதாழ்வுகளைக் காட்டுவது. படத்தில் வெளிர் நீலமாக இருப்பவை கடலுக்குள் இருக்கும் உயரமான பகுதிகள்.


அதை அறியாத புல்லுறுவி திராவிடவாதிகள்,
கடல்புறத்திலேயே பெரும்பாலும் வாசம் செய்த முற்காலத் தமிழர்களை,
ஒரு சிறு இடத்தில் குறுக்கி,
சிந்துப் பகுதியில் வாழ்ந்தார்கள் என்றும்,
அவர்கள் கோழைகள் போல ஓடி வந்தவர்கள் என்றும் சொல்வது அடுக்காது.
அப்படிச் சொல்வது
அந்தப் பெருமை வாய்ந்த பழங்காலத் தமிழர்களுக்குச் 
செய்யும் துரோகமாகும்.  


தமிழ் வளர்த்ததும், தமிழ் வளர்ந்ததும் கடல் கொண்ட தென் குமரியிலே என்பதுதான் தமிழ் நூல்கள் சொல்லும் செய்தி.
2-ஆம் சங்கத்து செய்திகளின் படி சமஸ்க்ருதமும், தமிழும் ஒன்றாக வாழ்ந்தன, வளர்ந்தன என்றும் தெரிகிறது.
அந்தச் சங்கப் பலகையை அலங்கரித்த முதல் 48 பேர்
சமஸ்க்ருத எழுத்துக்களின் பிறப்புகளாகச் சிவ பெருமானாலேயே கொண்டு வரப்பட்டவர்கள் என்று திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது..


சோழனாகட்டும், பாண்டியனாகட்டும்
அவர்களது செப்பேடுகளில்
தமிழிலும், சமஸ்க்ருதத்திலும் விவரங்களைச் செதுக்கியுள்ளனர்.
சின்னமனூர் செப்பேடுகளில்,
ஒரு பாண்டிய அரசன் தமிழ், சமஸ்க்ருதம் ஆகிய இரண்டும் கற்றுத் தேர்ந்து பண்டிதர்களுக்கு இணையாக இருந்தான் என்று சொல்லப்பட்டுள்ளது.
இப்படித் தமிழும், சமஸ்க்ருதமும் ஒன்றாக வளர்ந்தது என்பதற்குப்
பிற சான்றுகளும் உள்ளன.
அவற்றை இந்தத் தொடரில் காண்போம்.


சிவனை முன்னிட்டே பாண்டியர்கள் ஆண்டு வந்தனர்.
அந்தச் சிவ பெருமானே இறையனார் என்று அழைக்கப்பட்டு
முதல் சங்கத்துக்குத் தலைமை தாங்கி இருக்கிறார்.
அவரால் தருமிக்குத் தரப்பட்ட பாடல்,
அவர் பெயராலாயே (இறையனார்)  குறுந்தொகையில் உள்ளது.

ஒரு பாண்டியனது முயற்சியாலே மஹாபாரதம் தமிழில் எழுதப்பட்டுள்ளது என்று சின்னமனூர் ஏடுகள் குறிப்பிடுகின்றன.
இது வில்லிபுத்தூரார் எழுதிய மஹாபாரதம் ஆகும்.
இதைச் செய்வித்தவன்  பாண்டியன் என்றிருக்க,
சென்ற வருடம் நடந்த செம்மொழி மாநாட்டில்,
ஆரியத் தாக்கம் செம்மொழித் தமிழில் ஏற்படுத்தியக் கருத்துச் சிதைவு
என்று வாசிக்கப்பட்ட ஒரு கட்டுரையில்,
திருவிளையாடல் புராணத்தையும்,
வில்லிபுத்தூரார் எழுதிய பாரதத்தையும் தாக்கி,
அவை ஆரியத் தாக்கத்தால் எழுந்தவை என்றும்,
தமிழர்களுக்குள் மூட பக்தியை ஊட்டுபவை என்றும் விமரிசிக்கப்பட்டன.


இப்படிப் பேசுவது ஆரியர்களைத் தாக்கும் செயலாக நினைக்கின்றனர்.
உண்மையில் இது தமிழுக்குக் காவலனாக இருந்த பாண்டியர்களையே தாக்குவதாகும்.
அர்ஜுனனையே வென்றான் ஒரு பாண்டியன்.
மற்றொரு பாண்டியன், அந்த அர்ஜுனனது வரலாற்றை உள்ளடக்கிய மஹாபாரதத்தை தமிழில் எழுதச் செய்தான் என்றால்
பாண்டியர்களுக்கு அர்ஜுனன் மீதும் வெறுப்பு இல்லை.
மஹாபாரதத்தின் மீதும் வெறுப்பு இல்லை என்றாகிறது.
தமிழர் பண்பாட்டுக்கும், மொழிக்கும் அது ஊறு விளைவிப்பதாக இருந்தால் பாண்டியன் அதைத் தமிழ்ப்படுத்தியிருக்க மாட்டான்.


மேலும் அந்த பாரதம் விவரிக்கும் போரில் கலந்து கொண்டு வீரசுவர்கம் போனான் ஒரு பாண்டியன்.
அப்படி இருக்க, பாரத, ராமாயண நூல்கள் ஆரியத்தாக்கம் ஏற்படுத்தும் நூலகள் என்றும்
அவை ஒதுக்கப்பட வேண்டியவை என்றும் சொல்லும் கட்டுரைகளே ஒதுக்கப்பட வேண்டியவை.
செந்தமிழை வளர்ப்பதாகச் சொல்லப்படும் ஒரு மாநாட்டில்
அத்தகைய கருத்துக்களுக்கு இடம் கொடுத்திருக்கவே கூடாது.
ஆனால் இடம் கொடுக்கப்பட்டது.
ஏனெனில் அது திராவிடர்கள் மாநாடு.
தமிழுக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை.


இன்றைக்கு தமிழனது பழம் சரித்திரத்தை அறிவதற்கு,
திராவிடவாதிகள் தாக்கும், ‘ஆரியநூல்களே உதவிக்கு வருகின்றன.
குமரிக் கண்டத்தைப் பற்றி அறிய
வால்மீகி ராமாயணமும், மஹாபாரதமும், திருவிளையாடல் புராணமுமே
முக்கியப் பங்காற்றுகின்றன.
அவை தரும் விவரங்களே சங்க நூல்களிலும் சொல்லப்பட்டுள்ளது.


உதாரணமாக, பாண்டியனைப் ‘பஞ்சவரேறு
என்று சொல்லும் புறப்பாடலில் (58)
ரிஷப மலையை நினைவு கொள்ளும் வண்ணம்,
எருது போல அவர்கள் வாழ்ந்த பழைய ஒரு நிலையை
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் நினைத்துப் பார்க்கிறார்.
அவர் சொல்கிறார்,
ஒரு ஆலமரம் நன்கு பரவி நிழல் கொடுத்து இருந்து வந்தது.
ஆனால் ஒரு சமயம் அது வீழ்ந்தபோது,
அதன் ஒரு விழுது தாங்கிக் கொண்டது போல,
அந்தப் பாண்டியன் (வெள்ளி அம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி),
தன் முன்னோர் இறந்தாலும், தான் தளராமல்,
பழைய குடிகள் தடுமாற்றம் அடையாமல்,
அவர்களை அரவணைத்துத்,
தான் சிறிதேயாயினும் கிளையுடனே பாம்பை எறியும் எருது போலப்
பகை ஒழித்துத் தம் மக்களைக் காத்தான் அந்தப் பஞ்சவன் என்கிறார்.


இங்கு ஆல மரம் வீழ்ந்ததும் முன்னோர் இறந்ததும்,
மக்கள் தடுமாற்றம் அடைந்ததும்,
ஒரு சமயம் கடல் பெருகவே,
தன் நாடும், மக்களும் துன்பமுற்ற போது
அவர்களுக்குத் தலைவனாக இருந்து,
காப்பாற்றி மீட்ட கதையைச் சுட்டிக் காட்டுகிறது.


இது புலவர் வாயிலாக, பாண்டியன் மீண்ட கதை.
இதையே மக்கள் வாயிலாகவும் கலித்தொகையில் காண்கிறோம்.
அதில் தெளிவாக விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" என்னும்   பாடலில்
(கலித் தொகை 104)
கடலலைகள் பொங்கி எழுந்து பாண்டியனது நாட்டை விழுங்கியது;
அதனால் பாண்டியன் தளர்ந்து விடவில்லை.
பகைவர்களை வென்று, புதிய பகுதிகளைக் கொண்டு
அவன் பாண்டிய நாடு கண்டான்.
இயற்கையையின் கொடுமையையும் வென்றவன் அந்தத் தென்னவன்.
அவனுடன் சேர்ந்து தப்பி வந்த தொல் குடியைச் சேர்ந்த ஆயர் மக்கள் நாம்;
என்று ஆயர் மகள் கூறுகின்றாள்.


தன் நிலத்தைக் கடல் கொண்டு விடவே ஏற்பட்ட நிலக் குறையைத் தீர்க்க, சோழ, சேரர்களுடன் போரிட்டு நிலத்தைப் பெற்று,
அங்கு தன் மக்களைக் குடி அமர்த்தினான் என்று அடியார்க்கு நல்லாரும் சிலப்பதிகார உரையில் கூறியுள்ளார்.
அப்படிப் பாண்டியன் வென்ற இடங்கள்
சோழ நாட்டெல்லையில் இருந்த ‘முத்தூர்க் கூற்றமும்,
சேரமானாட்டுக் குண்டூர்க் கூற்றமும்என்கிறார் அவர்.
அதாவது பாண்டியன் நாட்டைக் கடல் கொண்டது உண்மை.
அதனால் அவனும், அவனுடன் மீதி பிழைத்தவர்களும் இருக்க இடம் வேண்டி,
தற்போதைய தென்னிந்தியப் பகுதிகளில் சில இடங்களைப் போரில் வென்று அங்கு தன் குடிகளை அமர்த்தினான் என்பது ருசுவாகிறது.
இது 3-ஆம் ஊழிக்குப் பிறகு,
தற்போது உள்ள தமிழ் நாட்டில் நடந்திருக்கிறது.


இந்தக் கலித்தொகை பாடல் மூலமாக ஒரு பெரிய உண்மை தெரிகிறது.
ஆயர்கள் கடல் கொண்ட குமரி நாட்டில் இருந்திருக்கின்றனர்.
அப்படி என்றால்,
மாடு கன்றுகள் மேய மேய்ச்சல் நிலம் அங்கு இருந்திருக வேண்டும்.
விண்கலம் மூலம் நமக்குக் கிடைத்துள்ள இந்தியக் கடல் படத்தில்,
கடலுக்குள் அமிழ்ந்துவிட்ட மலைகள் மட்டுமே பிரதானமாகத் தெரிகின்றன.
அங்கு நிலப்பகுதிகளும் அதிகம் இருந்திருந்தால்தான்,
தொல்குடிகளாகத் தாங்களும் பாண்டியன் நாட்டில் வாழ்ந்து,
ஊழியின் காரணமாக நாடிழந்து,
தற்போதைய நிலங்களுக்கு வந்தோம் என்று சொல்லியிருக்க முடியும்.


தென்னன் தேசமா, குமரிக் கண்டமா?


தெற்குத் திசையில் பல காலம் இருக்கவே பாண்டியன் தென்னவன் என்ப்பட்டான்.
அந்தப் பாண்டியன் சோமசுந்தரரை முன்னிட்டு நாட்டை ஆண்டு வந்தான்.
பல சமயங்களிலும், சிவ பெருமான் அசரீரியாகவோ, சூசகமாகவோ, கனவிலோ வந்து பாண்டிய மன்னர்களுக்கு வழி காட்டியிருக்கிறான்.
அதனால் சிவனுக்கும்
தென்னாட்டுடைய சிவன் என்ற பெயர் வரலாயிற்று.


அந்தத் தென்னாட்டில் மலைகள் பல இருந்தன.
கலித்தொகை 143 இல், பிரிந்து சென்ற தலைவன் திரும்பி வந்ததை விவரிக்கும் அயலார்,
‘தென்னவன் தெளிந்த தேசம் போல பல மலைகளைக் கடந்து தலைவன் வந்து, தலைவிக்குத் தெளிவை ஊட்டினான் என்கின்றனர்.
ஊழி வந்த பொழுது, தென்னவனான பாண்டிய மன்னன்,
பல மலைகளைக் கடந்து
மக்களை அழைத்துக் கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு வந்தமையை
இது பறைசாற்றுகிறது.
அவ்வாறு பல மலை அடுக்குகள் இருந்தது உண்மையே என்று
விண்கலன்கள் காட்டும் இந்தியக் கடலின் ஆழ்கடல் வரைபடமும்
உறுதி செய்கிறது.
இவ்வாறு தென்னவன் தெளிந்த தேசத்தையும்,
தெளிவித்த தேசத்தையும் பற்றி
சிலப்பதிகாரத்தில் பல இடங்களில் சொல்லப்படுகிறது.


தென்னவன் காக்கும் நாட்டில், இயற்கையால் மட்டுமே மக்களுக்குத் துன்பம் நேரும். (சிலம்பு 13-9).
கரடியும், பாம்பும், புலியும், வேறு யாரும் மக்களுக்குத் துன்பம் தர முடியாது. ஏனெனில் தென்னவன் கொற்றம் அப்படிப்பட்டது.
அவன் நாட்டில் இயற்கை மட்டுமே துன்பம் தர இயலும்.
வெய்யில் மட்டுமே துன்பம் தரும்
ஆதலால் இரவில் பயணத்தை மேற்கொள்வோம் என்று
கண்ணகியும், கோவலனும் இரவில் பயணப்பட்டனர்.
ஆரம்பம் முதல் பாண்டியனுக்குச் சவாலாக இருந்தது
இயற்கைச் சக்தி மட்டுமே
என்று உட்பொருளாக இது தெரிவிக்கிறது.உண்மையில் முற்காலப் பாண்டியர் ஆண்ட அந்த நாட்டைக்
குமரிக் கண்டம் என்று எங்குமே சொல்லப்படவில்லை.
அது தென்னன் தேசம்.
தென்னவன் தேசம்
அல்லது தென்னாடு என்று மட்டுமே சொல்லப்பட்டது.
வடநாட்டில் தமிழர் மூலத்தைத் தேடும் திராவிடவாதிகள் இதைத் தெரிந்து கொள்ளட்டும்.
தமிழ் வளர்த்த தேசம் தென்னாடு!
தமிழ் வளர்ந்தது தென் பகுதியில்!


கன்னித் தேயம் என்று தென்மதுரைப் பகுதியில்
கன்னித் தீர்த்தம் இருந்தது என்று முந்தின பகுதியில் பார்த்தோம்.
அந்தக் கன்னி என்பதைக் குமரி என்றும் அழைப்பார்கள்.
அந்தக் குமரி ஆறு மட்டுமல்ல,
சுகுமாரி ஆறும்
அங்கு ஒரு காலத்தில் இருந்தது என்பதைப் பிறகு பார்ப்போம்.
ஆனால் இறையனார் முதலான பாண்டியர்கள் ஆண்ட பொழுது
குமரி ஆறு இருந்திருக்கிறது.


முதல் ஊழியின் போது அந்த ஆறு அழிந்து விடவே,
அதை முன்னிட்டு,
இந்தியாவின்  மேற்கில் உள்ள மலைத் தொடருக்குக்
குமரி மலை என்று பெயரிட்டிருக்க வேண்டும்.
அந்த மலையிலிருந்து புறப்பட்ட நதியைக்
குமரி நதி என்று என்று சொல்லியிருக்க வேண்டும்.
அந்த நதிக்கு நீராட
மஹாபாரத காலத்தில்
மக்களும், ரிஷிகளும் வந்திருக்கின்றனர் என்று மஹாபாரதம் தெரிவிக்கிறது.
ஆனால் குமரி நாடு என்றோ
குமரிக் கண்டம் என்றோ எங்கும் சொல்லப்படவில்லை.
அது தென்னன் நாடு
அல்லது பாண்டிய நாடு.
அவ்வளவே.


சிலப்பதிகாரத்தில் ஊழிகளை நினைவு கூறும் பேச்சில்,
முன்பு உக்கிர குமாரன் வடி வேல் எறிந்து வான் பகை முறிக்கவே,
அதனால் கடல் கோபித்துக் கொண்டாற்போல,
பகை கொண்டு எழும்பி,
குமரிக் கோடு, பன் மலை அடுக்குகள் போன்ற
பல இடங்களையும் விழுங்கி விட்டது என்று சொல்லப்பட்டுள்ளது.
இங்கு வரும் குமரிக் கோடு பேச்சினால்,
தற்காலத் தமிழர்களிடையே
குமரிக் கண்டம் என்ற சொல் வந்து விட்டது.


3-ஆம் ஊழி கண்டும், தன் குடிகளுடன்
மீண்டும் நாட்டை நிர்மாணித்திருக்கிறான் பாண்டியன்.
முதலில் அவன் குடி கொண்டது தென்னிந்தியக் கரையில் இருந்த மணவூர்.
கடல் கோளினால் அவதியுற்று இருக்கவே
உள்நாட்டில் அமைந்துள்ள மதுரைக்குத்
தன் இருப்பிடத்தை மாற்றினான் பாண்டியன்.
அதுவே தற்போதைய மதுரை!
தென் மதுரையில் இருந்த அதே அமைப்புகளை
தான் சென்ற இடத்தில் எல்லாம் அவன் செய்திருக்கிறான்.
இன்றைய மதுரைக்கு முதலில் இருந்த பெயர் ‘இருந்தையூர்
இருந்தையூர் குறுங்கோழி என்னும் புலவர் 2-ஆம் சங்கத்தில் இருந்தார்.
பரிபாடலில் இருந்தையூரில் குடி கொண்ட தெய்வமான
திருமாலைப் பற்றி ஒரு பாடல் வருகிறது.
அது இந்தப் புலவர் எழுதியதாக இருக்கலாம்.
இந்த இருந்தையூர் பெருமான் கூடலழகர் என்று சொல்லப்
பல சான்றுகள் உள்ளன.
பாண்டியர்கள் தாங்கள் குடி வந்த இடத்தில் நான்மாடக் கூடலாக
மீனாட்சி அம்மைக்குக் கோவில் எழுப்பினார்கள்.
மீனாட்சியைப் பெற்றெடுக்க வரம் தந்த திருமாலுக்கும்,
மாலிருஞ்சோலையில் கோவில் எழுப்பினார்கள்.
கடல் கொண்ட பாண்டிய நாட்டில் மீனாட்சிக்குக் கோவில் இருந்தது போல, மாலிருஞ்சோலை என்றும் ஒரு திருக்கோவில்,
மாலுக்கு அங்கு இருந்திருக்க வேண்டும்.
பெரியாழ்வார் பாடும் தென் திருமாலிருஞ்சோலை பாடல்கள் அதை நினைவுறுத்துகின்றன. (பெரியாழ்வார் திருமொழி 4-2)
அதில் 7 ஆம் பாசுரத்தில்
“கொன்னவில் கூர்வேல் கோனெடுமாறன்
தென் கூடற்கோன்,
தென்னன் கொண்டாடும் தென் திருமாலிருஞ் சோலையே
என்று சொல்வதில்
உக்கிரபாண்டியன் கொண்டிருந்த வடிவேல் போல,
கோனெடுமாறன் என்னும் பாண்டியனும்
வேல் ஒன்றைக் கொண்டிருந்தது நினைவு கூறப்படுகிறது.


முதல் சங்கத்தின் கடைசி அரசனது பெயர் ‘கடுங்கோன்
என்று இறையனார் அகப் பொருள் உரை தெரிவிக்கிறது.
மேலும் சின்னமனூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் கிடைத்துள்ள செப்பேடுகளில், கடுங்கோன் என்னும் ஆரம்ப கால அரசனைப் பற்றி எழுதப்பட்டுள்ளது.


முதல் சங்கத்தின் கடைசி அரசன் என்றால்
அவனது ஆட்சிக் காலத்தில் இரண்டாம் ஊழி வந்திருக்க வேண்டும் என்று புலனாகிறது.
ஊழி தோறும், தென்னவன் மக்களைக் காக்கிறான் என்பது சிலப்பதிகாரத்திலும், கலித்தொகையிலும் சொல்லப்படும் செய்தியாகும்.
வழி வழியாகத் தென்னவன் வம்சத்தில்
உக்கிரகுமாரனது வடிவேல் வந்திருக்க வேண்டும்.
அதைக் கொண்டு கடலை ஓரளவேனும் வென்று
இந்தக் கடுக்கோன் என்னும் அரசன்
மக்களைக் காப்பற்றியிருப்பான்.
பெரியாழ்வார் சொன்ன கொன்னவில் கூர்வேல் விவரம்,
அந்த வேலைப் பற்றியும்,
அதைக் கொண்டு கடுக்கோன் ஊழியை வென்றதைப் பற்றியுமாக இருக்கக்கூடும்.


இவனே இமயத்தில் கயல் பொறித்த அரசனாகவும் இருக்க வேண்டும்.
பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலபதி
(பெரியாழ்வார் திருமொழி -5-4-7)
என்று பெரியாழ்வார் இமயத்தில் கயல் பொறித்த பாங்கினைக் கூறுகிறார்.
தான் வந்த வீரத்தையும், பெருமையையும் நிலை நாட்ட
அந்தப் பகுதியின் சிகரமாக விளங்கும் மலையைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவது வழக்கம்.


மேலும்,
பருப்பதம் என்பது சிவனது நான்கு மலைகளுள் ஒன்று என்று என்று திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது.(தி-பு 216)
அவை மேரு, மந்தரம், கயிலை, பருப்பதம் ஆகும்.
அதுவரை சிவனது நாடான ரிஷப மலையில் கோலோச்சிய கடுங்கோன்,
அந்த மலைப் பகுதியைக் கடலுக்கு இழக்கவே,
அந்தச் சிவனாருக்குச் சிறப்பான மற்றொரு மலையான பருப்பதத்தில்
அவரது சின்னத்தைப் பொறித்தான் என்பது பொருத்தமாகும்.பருப்பதம் என்பது இன்றைய காஷ்மீரத்தில் இருக்கும்
அமர்நாத் என்னும் இடமாக இருக்ககூடும்.
திருவிளையாடல் கூறும் நான்கு மலைகளில்
கடைசி இரண்டும் இமய மலையில் உள்ளன.
கயிலை என்று கைலாச மலையைத் தனியாகச் சொல்லவே
இமய மலையில் உள்ள சிவனது இன்னொரு முக்கியத்தலமான
பனி லிங்கம் வளரும் அமர்நாத் என்னும் மலை,
பருப்பதம் என்று சொல்லப்ப்பட்டிருக்க வேண்டும்.இவையெல்லாம் இரண்டாம் ஊழி ஆன பிறகு நடந்த சம்பவங்கள்.

தென் திருமாலிருஞ்சோலை என்பதும்,
மீனாட்சி கோவிலும்,
ஒவ்வொரு ஊழி முடிந்து புது நகரம் அமைத்த போது
அங்கு எழுப்பட்டிருக்க வேண்டும்.


பரிபாடலில், மாலிருஞ்சோலையில் குடி கொண்ட் பெருமானைப் பற்றிச் சொல்கையில் வரும் முக்கிய வர்ணனையான பலராமன் குறித்த விவரம்,
இன்றைய திருமலிருஞ்சோலையில் காணப்படவில்லை.
என்வே அந்தப் பரிபாடல் கடைசி ஊழிக்கு முன் இருந்த மாலிருஞ்சோலையைப் பற்றி இருக்கலாம் என்று எண்ண வேண்டியிருக்கிறது.


இனி சங்கம் நடந்த காலக் கட்டத்தைப் பார்ப்போம்.

முதல் சங்கம் 4,440 வருடங்கள் வரை தென் மதுரையில் நடந்தது.
இரண்டாம் சங்கம்  3,700 வரை கபாடபுரத்தில் நடந்தது.
மூன்றாம் சங்கம்  தற்போதைய மதுரையில் 1,850 வருடங்கள் வரை நடந்தது என்பது இறையனார் அகப்பொருள் உரை கூறுவது.

இந்த மூன்று சங்கங்கள் நடந்த ஆண்டுகளைக் கூட்டிப் பாருங்கள்.
மொத்தம் 9,990 வருடங்கள் சங்கம் நடந்திருக்கின்றது.
இதில் கடைச்  சங்கமான  மூன்றாம் சங்கத்தின் கடைசி மன்னன் பெயரையும் எழுதி வைத்திருக்கிறார்கள்.
அவன் பெயர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி.
அவனைப் பற்றியும் அவன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மற்ற அரசர்களைப் பற்றியும் சங்க நூல்கள் சொல்லுகின்றன.

 
குறிப்பாக நமக்கெலாம் மிகவும்  தெரிந்த ஔவையார்,  இந்த அரசனும், பெருநற்கிள்ளி என்ற சோழ அரசனும் ஒற்றுமையாக ஓரிடத்தில் இருப்பததைப் பார்த்து  மகிழ்ந்து  செய்யுளே பாடி விட்டார். அதனால் இந்த இரண்டு அரசர்களும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் என்று தெரிகிறது.
 
இவர்கள் இருவரைப் பற்றியும் கூறும் செப்பேடுகள் கிடைத்துள்ளன. சின்னமனூர் என்னுமிடத்தில் பாண்டியனைப் பற்றி  கிடைத்துள்ள செப்புத் தகட்டில்  தமிழ்ச் சங்கம் கூட்டினான் ஒரு பாண்டியன் என்ற செய்தி வருகிறது. அவன் காலத்தில் வாழ்ந்த சோழமன்னன் பெருநற்கிள்ளியைப் பற்றி திருவாலங்காடு செப்புத் தகடுகளில் குறிப்பு வருகிறது. 

இந்த பெருநற்கிள்ளியின் காலத்திற்குப் பிறகுதான் கரிகால் சோழன் வருகிறான்.
அவன் காவேரிக்குக்  குறுக்கே கல்லணை கட்டிய செய்தியும் சொல்லப்பட்டுள்ளது.
கல்லணை கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று ஆராச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
 
அப்படி என்றால் பெருநற்கிள்ளியும்,
அவன் சம காலத்தில் வாழ்ந்த பாண்டியன் உக்கிரப் பெருவழுதியும்
கி. பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்திருக்கின்றனர் என்று தெரிகிறது.
அதாவது உக்கிரப் பெருவழுதியால் கடைசி முறையாகக் கூட்டப்பட்ட சங்கம் கி. பி இரண்டாம் நூற்றாண்டுக்கு முன் நடந்திருக்கின்றது.


முன்பு சொன்னபடி சங்கம் கூட்டப்பட்ட  9,990 வருடங்களை இதனுடன்  கூட்டிப் பாருங்கள்.
அப்படிப்பார்த்தால் சுமார் 12,000 வருடங்களுக்கு முன்னால்
சங்கப்பலகையில் தமிழ் வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
அதாவது 12,000 ஆண்டுகளுக்கு முன்பே இலக்கியத் தமிழ் இருந்திருக்கிறது.
அந்த நிலையை அது எட்டுவதற்கு இன்னும் எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் அது பேச்சு வழக்கில் இருந்திருக்க வேண்டும்?


இனி ஊழி உண்டான காலங்களைப் பார்ப்போம்.
உக்கிரப்பெருவழுதியின் காலம் சுமார் 2000 வருடங்களுக்கு முன் என்று எடுத்துக் கொண்டால், கடைச்சங்க வருடங்களான 1850 வருடங்களுக்கு முன் கடைசி ஊழி நடந்திருக்கிறது. (கி மு 1850)


அதாவது இன்றைக்குச் சற்றொப்ப 3500 வருடஙகளுக்கு முன்னால்
கபாடபுரம் கொண்ட குமரிக் கோடும்,
பஹ்ருளி ஆறும் கடலுக்குள் மறைந்தன.
குமரித் தொடரில் உள்ள லட்சத்தீவில் அகத்தி என்னும் தீவில் 3500 வருடங்கள் ஆனவை என்று அகழ்வாராய்ச்சிப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்பது நினைவிருக்கட்டும் (பகுதி 41)அதற்கு முன் 3700 வருடங்கள் இடைச் சங்கம் நடந்தது.
கிமு 1850 + 3700 = 5550.
அதாவது 2-ஆம் ஊழி கி மு 5550 இல் நடந்திருக்க வேண்டும். இன்றைக்கு 7500 வருடங்களுக்கு முன் இது ஆகியிருக்கிறது.

இந்தக் காலக் கட்டம் ராமாயணக் காலக் கட்டத்திற்குச் சற்று முன் என்பது முக்கியமானது. ராமாயணக் காலக் கட்டத்தில் 2-ஆம் சங்கம் நடந்த கவாடபுரம் இன்னும் இருந்தது நினைவு கூறத்தக்கது. ராமாயண காலத்துக்கு முன் 2-ஆம் சங்கம் ஆரம்பித்திருக்கிறது.
கி மு 5550 சமயத்தில் 700 காததூரம் பரவி இருந்த பாண்டிய நாடு அழிந்து விட்டிருக்கிறது. மிகப் பெரிய சேதம் அது.

அதற்கு முன் 5550 + 4440 = 9990, அதாவது கி மு 9990 வருடம்        
முதல் தலைச் சங்கம் ஆரம்பித்திருக்கிறது.

அதுவே சிவனும், பார்வதியும் அவதரித்த காலம்.
அதற்கு முன் முதல் ஊழி வந்து, ஆனால் உக்கிரகுமார பாண்டியனால் காப்பாற்றப்பட்டு விட்டது.
இனி இவற்றை வரிசைப்படுத்துவோம்.
முதல் ஊழி = கி மு 9990
2 ஆம் ஊழி = கி மு 5550
3 ஆம் ஊழி = கி-மு 1850

தென்னவன் காட்டும் சரித்திரம் பன்னிரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே ஆரம்பமாகி விட்டது.

முதல் ஊழியின் போது ஏற்பட்ட கடல் கோளானது சுனாமி போன்றதாக இருக்க வேண்டும் என்று முன் பகுதியில் பார்த்தோம். உக்கிர குமாரன் அடக்கிய அந்த ஊழியின் போது கடலால் அவதிப்பட்ட மற்றொரு ஆதாரம் இருக்கிறது என்றும் நாம் சொன்னோம்.

அது பூம்புகார்!

11,500 வருடஙகளுக்கு முன் கடலுள் மூழ்கிய அமைப்பு                    
தற்போதைய புகார் நகருக்கு அப்பால் 5 கி.மீ தூரத்தில் கடலுக்குள் இருக்கிறது 
என்று பகுதி 16இல் பார்த்தோம்.ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் காலக் கணக்கைப் பாருங்கள்.
அந்த நகரம் 11,500- ஆண்டுகளுக்கு முன்னால் கடலுக்குள் மூழ்கியது.

அதே காலக்கட்டத்தில் அதற்குத் தென் பகுதியில் ரிஷப மலையில் இருந்த தென் மதுரைக்குக் கடல் அபாயம் வந்திருக்கிறது.

இங்கு நாம் கணித்த முதல் ஊழியின் காலமும்,
புகார் முழுகிய காலமும் ஒத்துப் போவதைக் கவனிக்கவும்.

இந்தியக் கடலின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட சுனாமியின் காரணமாக,       
புகார் முழுகி விட்டிருக்கிறது.

திருச்செந்தூர் தப்பித்தது போல, தென்மதுரை தப்பித்திருக்கிறது.

நாம் இதுவரை ஆய்ந்து வந்த காலக் கணக்கு சரியே என்று இது நிரூபிக்கிறது.

இனி இந்தியப் பெருங்கடலுக்குள் பெரும் நிலபப்குதிகள் மறைந்த சாத்தியக் கூறுகளைப் பற்றி அறிவியலும், ஆராய்ச்சியாளர்களும் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.


15 கருத்துகள்:

 1. Dear Jayasree Mam,

  //அர்ஜுனனையே வென்றான் ஒரு பாண்டியன்//

  Could you please shed more light on this.This new information is something odd and interesting.

  curious to know more about this.

  Regards
  Chalam

  பதிலளிநீக்கு
 2. Dear Mr Chalam.

  //அர்ஜுனனையே வென்றான் ஒரு பாண்டியன்//

  This information is found in the unearthed Sinnamanur plates. There is no further explanation. It is just stated that "one Pandyan king was a conqueror of the epic hero Arjuna (v. 7)[4]"

  The link to that deciphered inscriptions is given in this link on 14. ராமனும் , ராவணனும் சரித்திர உண்மைகளே!

  Click this:-
  http://thamizhan-thiravidana.blogspot.com/2010/12/14.html


  The link to the inscriptions is here:

  http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_3/copper_plates_at_tirukkalar.html

  பதிலளிநீக்கு
 3. Dear Jayasree Madam,
  I read about the inscriptions, lot of things were attributed to the pandyas, they also talk about the wall around Madurai..also say that one pandiya king helped Arujuna to get relieved from curse.Interesting.

  பதிலளிநீக்கு
 4. Dear Jayasree Mam,
  //தன் நிலத்தைக் கடல் கொண்டு விடவே ஏற்பட்ட நிலக் குறையைத் தீர்க்க, சோழ, சேரர்களுடன் போரிட்டு நிலத்தைப் பெற்று,
  அங்கு தன் மக்களைக் குடி அமர்த்தினான் என்று அடியார்க்கு நல்லாரும் சிலப்பதிகார உரையில் கூறியுள்ளார்.
  அப்படிப் பாண்டியன் வென்ற இடங்கள்
  சோழ நாட்டெல்லையில் இருந்த ‘முத்தூர்க் கூற்றமும்,
  சேரமானாட்டுக் குண்டூர்க் கூற்றமும்’ என்கிறார் அவர்.
  அதாவது பாண்டியன் நாட்டைக் கடல் கொண்டது உண்மை.
  அதனால் அவனும், அவனுடன் மீதி பிழைத்தவர்களும் இருக்க இடம் வேண்டி,
  தற்போதைய தென்னிந்தியப் பகுதிகளில் சில இடங்களைப் போரில் வென்று அங்கு தன் குடிகளை அமர்த்தினான் என்பது ருசுவாகிறது.
  இது 3-ஆம் ஊழிக்குப் பிறகு,
  தற்போது உள்ள தமிழ் நாட்டில் நடந்திருக்கிறது.
  //

  Which means that the ancient tamils migrated from extreme south to present day Tamil Nadu gradually.In that case who were occupying the present tamil nadu on those periods when the capital of pandyas was Then-Madurai in the south.

  Were the tamils spread in this(Tamil nadu) also or later occupied after the migration of the pandyas with his people.

  In this case there are chances that people might say that the tamils came from south and not from the north.

  Please throw some light on this Mam.

  பதிலளிநீக்கு
 5. @ Chalam

  I think the last part of the recent post (56th) gives some idea about the inhabitants in Tamil nadu. Please wait for further posts as it requires a long answer.

  பதிலளிநீக்கு
 6. Interesting research, mind blowing...

  I have two questions for u,
  1) */இந்த பெருநற்கிள்ளியின் காலத்திற்குப் பிறகுதான் கரிகால் சோழன் வருகிறான். அவன் காவேரிக்குக் குறுக்கே கல்லணை கட்டிய செய்தியும் சொல்லப்பட்டுள்ளது */
  In tiruvalankaddu copper plate it is said like karikalan built embarkment for cauveri but not a word about kallanai. is there any written proof that karikalan built kallanai?
  2) */அப்படிப்பார்த்தால் சுமார் 12,000 வருடங்களுக்கு முன்னால்
  சங்கப்பலகையில் தமிழ் வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
  அதாவது 12,000 ஆண்டுகளுக்கு முன்பே இலக்கியத் தமிழ் இருந்திருக்கிறது/*

  Many historians argue, tamil letters evloved after ashoka brahmi letters and it doesnt have any standard proof for standalone written tamil before 2-3 BC. whats your opinion on this ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thanks for writing.

   (1)The embankment as it stands today is attributed to Kalikala. The Thiruvalangadu plates do refer to the embankment. Perhaps the name as 'Kallanai' came up afterwards - in the last 1000 years only.

   The embankment across the Cauveri by Kalikala is also documented in Malapadu plates of Punyakumara, a Telugu Choda king.

   "karuna - saroruha vihita - vilochana – pallava – trilochana pramukha kilapritvisvara karita kaveri tira"

   (He who caused the banks of the Kaveri to be constructed by all the subordinate kings led by the Pallava Trinetra whose third eye was blinded by his lotus foot.)

   See wiki article
   http://en.wikipedia.org/wiki/Karikala_Chola


   There is a research work also on this Kallanai in this link:-

   http://web.archive.org/web/20070206130842/http://www.hindunet.org/saraswati/traditionwater.pdf

   (2) I will write on written letters in this series later on. In my opinion it is wrong to say that Tamil letters evolved form Brahmi or Ashokan Brahmi.

   Reason no 1:- Brahmi has only 8 uyir ezuththu, whereas Tamil has 12 uyir ezuththu.

   Reason no 2:- The 'zha' (ழ) is peculiar to Tamil only. Asokan Brahmi does not have this. But Brahmi scripts found in Tamil nadu has this zha and it looks similar to the zha written in Cholan times (1000 years ago)and even now. How could that be unless the written form of zha was in existence at 2nd BC itself (times when Brahmi were found in TN.) It shows the written form for Tamil existed then itself. The Brahmi writers have borrowed only that for which they did not have the written letter.

   (continued)

   நீக்கு
  2. 95% of Brahmi found in TN were written for Jains and found in Jain dwellings only. When we analyse the rise of Jains and Buddhists, we find that they departed from Vedic religion and sanskrit. Until their rise there was no written letter for spoken language in North India. The Jains and Buddhists introduced written letters for spoken language (pali) and spread that. When they came to TN they brought that and must have insisted that the grants and gifts given to them must be written in Brahmi (the written form they brought) only.Because almost all the Brahmi inscriptions in TN are on grants or beds prepared for the Jains.

   The scribes who wrote them might even have just copied them without knowing the letters. One example is the inscription found in "Keezha vaLavu" in Pandava malai in Madurai district. The letters were written in reverse. It is obvious that the scribe was given some 'Olai" having the letters and he had copied it without knowing what he was writing.

   When we observe the writings from the epigraphs available for the last 2000 years, we find that Cholan Tamil of 10th century is too close to present day Tamil. But it suddenly cropped up without any trace of previous writings on stone. In my opinion that was the old and original Tamil. It was not seen in epigraphs until then because, people were writing in Olai (palm leaf until then. There was widespread use of Olai to record all orders of the king. Perhaps with the influence of jains and Ashokan culture of writing on stone, it was picked up only during Cholan times. This is further supported by the introduction of Prasasthi (Maykeerthi) - a kind of self boasting that started only from the Cholan times onwards. Until then Tamil kings were humble and assigned everything to God. The self boasting necessitated a means to record it in a lasting form. That resulted in their writing on stone where the original form of Tamil was written.

   When the Jain and Buddhist influence declined in North India, the Hindu kings abandoned the Barhmi as it was non vedic. The rise of Deva nagari coincides with this period (around 10th century). Sanskrit-patronizing was reintroduced by Northern kings and the written form of the spoken language was derived from Sanskrit. This also shows that Brahmi was not the original lipi of Hindus. It was Mleccha lipi which Jains adopted to reach out to the common man and bring him to their fold.

   I will write on all these in this series.

   நீக்கு
 7. Hmmm not so convincin..Expectin your series to get better clarity. Thanks jayasree.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. If you don't want to be convinced, fine. Atleast think from the angle of the huge corpus of Sangam literature. Even if you do not want to believe the long years of sangam age in the past, just think how long it would take for so much expertise in language and literature to develop. Could that have happened in a few centuries after Jains brought it? Read the 2nd article in this series. If possible read all the articles (so far 101 published and more to come)to get a wider picture of the issues.

   The Brahmi carvings are invariably found in jain caves only, that are found outside the towns and near the Highways. You will a similar description in Silappadhikaram. The frequent terms such as "irukkai" "paLLi" that you find in Brahmi carvings of TN, are found mentioned in Indra vizaa Ureduththa kaathai of Silappadhikaram. They were mentioned as dwellings of Jinas (Jain munis).

   The Jain sage Gavunthi adikaL who accompanied Kovalan and kannagi to Madurai took them to Puram cheri - where the Jain dwellings were established. Based on this an entire chapter was named as "Puram cheri iruththa kaathai".

   நீக்கு
 8. இந்த இரண்டாம் சங்கமத்தில் கிருஷ்ணர் வந்ததற்கான அறிகுறியை நீங்கள் குறிப்பிடவில்லையே (ஏற்கனேவே நீங்கள் பதிவு செய்தது)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு குபேந்திரன் கோபால் அவர்களே.

   கட்டுரையின் மையக் கருத்தை ஒட்டி விவரங்களைத் தருவதால், எல்லா விவரமும் ஒரே கட்டுரையில் இடம் பெறுவதில்லை.

   நீக்கு
 9. எனக்கு இரண்டு சந்தேகங்கள் இந்தக் கட்டுரையில். விடைகளுக்கு நன்றி உள்ளவனாவேன்.
  1)||வருணன் என்பவன் கடல் நீருக்கு அதிபதி.\\
  இப்பொழுதும் கூட மழை வேண்டி வருண ஜபம் செய்கிறார்களே, அது எப்படி?

  2)//ஏனெனில் அது திராவிடர்கள் மாநாடு.//
  தமிழர்கள் திராவிடர்கள் அல்ல என்று கூறவிருக்க, திராவிடர்கள் மாநாடு எப்படி இருக்க முடியும். திராவிடவாதிகளின் மாநாடு என்று வேண்டுமானால் கூறலாம் என்று நினைக்கிறேன்.
  ஸாரநாதன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கேள்விகளுக்குப் பதில்கள்:-
   1) வருணன் என்பவன் கடல் அதாவது ஆழிக்கு அதிபதி. ஆழியிலிருந்துதானே மழை? ஆழியுள் புக்கு முகந்து மேகமாகி மழை வருவதால், மழை பொழிய வேண்டி வருண ஜபம்.
   2) ஆம், திராவிடவாதிகள் மாநாடு என்பதே சரி.

   நீக்கு