தாங்களே திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்ளும் தமிழ் நாட்டுத் திராவிடவாதிகளைப் பார்த்து சிரிப்பதா அல்லது பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை.
ஏனெனில், திராவிடம் என்பதும், திராவிடன் என்பதும்,
இவர்கள் எதிரியாக நினைக்கும் ‘ஆரியப்’ பார்ப்பனர்களது அடையாளம்
என்பது இவர்களுக்குத் தெரியவில்லை.
ஆராய்ந்து தெரிந்து கொள்ளும் அறிவும் இல்லை. தமிழையே ஆராயாதவர்கள், திராவிடத்தையா ஆராய்ந்து தெரிந்து கொள்ளப்போகிறார்கள்?
அவர்கள் அதிகம் தேட வேண்டாம்.
ஒரு ஆயிரம் வருடங்கள் பின்னால் போனால் தெரிந்து விடும்.
காஷ்மீர நூலான ராஜ தரங்கிணியின் மூலம்
திராவிடம் அல்லது திராவிடன் என்பதைப் பற்றிய
விவரங்ளைத் தெரிந்து கொள்ள முடியும்.
கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் கல்ஹணரால் எழுதப்பட்ட
ராஜ தரங்கிணி என்னும் நூலில்,
பிராம்மணர்கள் குடியிருந்த பகுதிகளைப் பற்றிச் சொல்லும் இடத்தில், திராவிடம் வருகிறது.
விந்திய மலைக்கு வடக்கில் குடியிருந்த பிராம்மணர்கள்,
விந்திய மலைக்குத் தெற்கில் குடியிருந்த பிராம்மணர்கள்
என்று இரண்டு வகையாகச் சொல்லப்பட்டுள்ளது.
விந்திய மலைக்கு வடக்கில் ‘பஞ்ச கௌடர்கள்’ என்னும்
ஐந்து வகையான பிராம்மணர்கள் வசித்து வந்தனர் என்றும்,
விந்திய மலைக்குத் தெற்கே ‘பஞ்ச திராவிடர்கள்’ என்னும்
ஐந்து வகையான பிராம்மணர்கள் வசித்து வந்தனர் என்றும்
சொல்லும் அந்த வரிகள் இங்கே தரப்பட்டுள்ளன.
”கர்நாடகாஸ்ச தைலங்கா த்ராவிடா மஹாராஷ்ட்ரகா:
குர்ஜராஸ்சேதி பஞ்சைவ த்ராவிடா விந்த்ய தக்ஷிணே //
ஸாரஸ்வதா: கான்யகூப்ஜா கௌடா உத்கல மைதிலா:
பஞ்ச கௌடா இதி க்யாதா விந்த்யஸ்யோத்தர வாஸின: //
இதன் பொருள்:-
விந்திய மலைக்குத் தெற்கே கர்நாடகர், தைலங்கர், திராவிடர், மஹாராஷ்டிரர், குர்ஜரர் என்னும் ஐந்து திராவிடர்களும் (பஞ்ச திராவிடம்).
விந்திய மலைக்கு வடக்கில் ஸரஸ்வதர், கான்யகூப்ஜர். கௌடர், உத்கலர், மைதிலர் என்னும் ஐந்து கௌடர்களும் (பஞ்ச கௌடம்) வசித்து வந்தனர்.
இவர்கள் அனைவரும் பிராம்மணப் பிரிவுகள்.
ராஜ தரங்கிணி மட்டுமல்ல, ப்ராமமணர்கள் வரலாறை ஆராயும் ’ப்ராம்ணோத்பத்தி மார்தாண்டம்” என்னும் வடமொழி நூலும்,
இந்த பஞ்ச கௌடர், பஞ்ச திராவிடர் என்னும் பத்து பிரிவினரையும்
பிராம்மணர்களது பிரிவுகளாகச் சொல்கிறது.
வைவஸ்வத மனுவுடன், வந்த பிராம்மணர்கள்
ஸரஸ்வதி நதி தீரத்தில் குடியமர்ந்தனர்.
நாளடைவில் அவர்கள் பல் வேறு இடங்களுக்கும் குடியேறினர்.
அவர்கள் மட்டுமல்ல.
எல்லா வர்ணத்தவருமே ஆங்காங்கே பரவிச் சென்றனர்.
சிந்து நதிக்கு மேற்கே அரசமைத்த சிபியின் வம்சாவளியில்
வந்த சோழவர்மன்,
தமிழ் நாட்டில் – பூம்புகாரைத் தலை நகரமாகக் கொண்டு
சோழ நாட்டை நிர்மாணித்தான் என்று பார்த்தோம்.
பல்லாயிரக்கணக்கான வருடங்களாக மக்கள் பெயர்வு நடந்து,
பாரதம் முழுவதும் பரவியிருக்கின்றனர்.
அந்த வகையில், மிகவும் சமீபத்திய காலக்கட்டம் என்று சொல்லும் வண்ணம், ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்த ஒரு குறிப்பிட்ட குடியமைப்பே
இந்த பஞ்ச கௌடர்களும், பஞ்ச திராவிடர்களும் இருந்த பகுதிகள்.
இதை நிச்சயமாகச் சொல்ல காரணம் இருக்கிறது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள வரிகளில் குர்ஜரம் என்பதை
எல்லோரும் குஜராத் என்று சொல்லி விடுகிறார்கள்.
இன்றைக்கு இருக்கும் குஜராத் என்று நாமும் நம்பி விடுகிறோம்.
ஆனால் விந்திய மலைக்குத் தெற்கே உள்ள குர்ஜரம் என்று சொல்லப்பட்டிருக்கிறதே,
இன்றைய குஜராத் விந்திய மலைக்குத் தெற்கே உள்ளதா
என்று யோசிக்க மறந்து விடுகிறோம்.
விந்திய மலைக்கு மேற்கே குஜராத் உள்ளது, தெற்கில் அல்ல.
அதனால் குர்ஜரம் என்று சொன்னது என்னவென்று
ராஜ தரங்கிணி எழுதப்பட்ட காலக்கட்டத்தில் பார்க்க வேண்டும்.
அப்பொழுது, குர்ஜர ப்ரதிஹாரர்கள் என்னும் அரசர்கள்,
6ஆம் நூற்றாண்டு முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை
தற்போதைய ராஜஸ்தான், குஜராத், விந்திய மலைக்குத்
தென் பகுதியில் இருந்த இடங்களை ஆண்டு வந்தனர்.
குர்ஜர நாடு என்பதே மிகவும் பெரிதாகப் பரவி இருந்தது.
அதன் அரசர்கள் “ஆரியவர்த்த மஹாராஜாதி ராஜா”
என்ற பட்டப் பெயருடன் ஆண்டு வந்தார்கள்.
இதைக் கவனிக்க வேண்டும்.
குர்ஜரத்தை ஆண்ட மன்னர்கள் ஆரியவர்த்த ராஜாக்கள்
என்ற பெயர் கொண்டிருந்தனர்.
அந்த நாட்டின் விந்திய மலைக்குத் தெற்கில் இருந்த பகுதி
பஞ்ச திராவிடத்தில் ஒன்று!
குர்ஜர திராவிடர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் பிராம்மணர்கள்!!
குர்ஜரம் என்பதைப் போல மஹாராஷ்டிரம் என்று
இன்றைய இந்தியாவில் இருக்கும் இருக்கும் பகுதியை நாம் பார்க்கிறோம். அந்தக் குடியிருப்புகள் ஏற்பட்ட காலத்தில் அது இருந்த பகுதி,
இன்றைய மஹாராஷ்டிரத்தின் ஒரு பகுதியாக மட்டுமே இருந்திருக்கும்.
தைலங்கம் என்பது ‘த்ரிலிங்கம்’ என்னும் பெயர் கொண்ட நாடு.
அது நாளடைவில் தெலுங்கம் என்று மாறி,
இன்று கிழக்குக் கரையோர மாநிலமான ஆந்திரா முழுவதுமாக இருக்கிறது.
அதைப்போலவே கர்நாடகமும்.
சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை செய்ய
இமயமலைக்குச் சென்ற போது,
அவனை எதிர்த்துப் போரிட்டு வீழ்ந்த மன்னர்களுள்
‘கொடுங் கருநாடர்’, ’கொங்கணர்’ ஆகியோர் அடங்குவர்.
ஆங்காங்கே சிறு சிறு நாடுகளாகத்தான் இவை இருந்தன.
இன்றைக்கு சுதந்திர இந்தியாவில் நாம் பாகுபடுத்தியிருப்பது போல, கர்நாடகம், மஹாராஷ்டிரம், ஆந்திரா, குஜராத் முழுமையும் என்று இவை சொல்லப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறேதான் திராவிடம் என்று சொல்லப்பட்ட நாடும்.
அன்றைய வழக்கத்தில், தமிழ் நாட்டுக்குத் தனித் தனியாக,
சேர, சோழ, பாண்டிய நாடு என்ற அடையாளம் இருந்தது.
அப்படித்தான் மஹாபாரதத்திலும் அடையாளம் காட்டப்பட்டது
என்று பல இடங்களிலும், இந்தத் தொடரில் பார்த்தோம்.
ஆனால் அவையெல்லாம், 5000 வருடங்களுக்கு முந்தின நிலை
என்று சொல்லலாம்.
சமீப காலம் என்றால், கி.மு 3 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது
என்று சொல்லப்படும் அசோகர் காலக் கல்வெட்டிலும்
சேர, சோழ, பாண்டியர் என்று பிரித்துத்தான் சொல்லப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டு காணப்படும் இடம்
குஜராத் மாநிலத்தில் உள்ள கிர்னார் என்னுமிடம்.
எனவே வட இந்தியா முழுவதும்,
தமிழ் மன்னர்கள் பெயராலேயே தமிழ் நாட்டை அறிந்திருக்கிறார்களே தவிர, திராவிடன் என்னும் பெயரால் அல்ல.
எனவே பஞ்ச திராவிடம் என்று சொல்லப்பட்ட ஐந்து இடங்கள்,
சேர, சோழ, பாண்டியர்களது ஆளுகைக்கு
அப்பாற்பட்டதாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
இதை மேலும் ஆராய, பஞ்ச கௌடர்கள் இருந்த இடங்களைப் பார்போம். பஞ்ச கௌடம் என்று சொல்லப்பட்டுள்ள
ஸரஸ்வதர், கான்யகூப்ஜர். கௌடர், உத்கலர், மைதிலர்
என்னும் இவை எதுவுமே இன்றைக்கு
அந்தப் பெயரில் இருப்பிடங்களாக இல்லை
என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
இவற்றுள் உத்கலர் என்பது, நமது தேசிய கீதத்தில் வருகிறது.
(திராவிட உத்கல வங்கா)
அதாவது, சுதந்திரம் வாங்குவதற்கு முன்
உத்கலம் என்னும் பெயரில் ஒரு இடம் இருந்திருக்கிறது.
தேசிய கீதத்தை ஆராய்ந்தால்,
அதில் சொல்லப்பட்டுள்ள இடங்கள் அனைத்துமே
பஞ்ச கௌட, பஞ்ச திராவிடம் மட்டுமே.
தேசிய கீதத்தில் "பஞ்சாப, சிந்து, குஜராத, மராட்டா, திராவிட, உத்கல, வங்கா’
என்று 7 இடங்கள் சொல்லப்படுகின்றன.
என்று 7 இடங்கள் சொல்லப்படுகின்றன.
இவற்றுள் பஞ்சாப், சிந்து ஆகியவை ஸரஸ்வதர்கள் வசித்த இடம்.
குஜராத், மராத்தா என்பவை
குர்ஜரர்கள், மஹாராஷ்டிர திராவிடர்கள் வசித்த இடம்.
திராவிடம் என்பது பஞ்ச திராவிடத்தில் அடக்கம்.
உத்கல, வங்கம் என்பது உத்கல பிராம்மணர்கள் வசித்த இடம்.
சென்ற ஆயிரம் வருடங்களாக ராஜ தரங்கிணி சொல்லும் பத்து இடங்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கவே,
அவற்றை சொல்லிக் கொண்டு வந்திருக்கின்றனர்.
அதுவே தேசிய கீதத்திலும் வெளிப்பட்டிருக்கிறது.
ராஜ தரங்கிணியில் இந்தப் பத்து இடங்களும்
வரிசையாகத்தான் சொல்லப்பட்டிருக்கின்றன.
கௌடர்கள் வரிசையைப் பார்ப்போம்.
ஸரஸ்வதர், கான்யகூப்ஜர். கௌடர், உத்கலர், மைதிலர்
என்பது வரிசையாக
மேற்கில் ஸரஸ்வதி நதி முதல் ஆரம்பித்து, கிழக்கு வரை செல்கிறது.
மேற்கில் ஸரஸ்வதி நதி தீரத்தில் ஸரஸ்வதி பிராம்மணர்கள் வசித்தனர்.
அதற்குக் கிழக்கே மத்தியப் பிரதேசம், பீஹார் போன்ற இடங்கள் கான்யகூப்ஜம் எனப்பட்டது.
அத்ற்குக் கிழக்கே கண்டகி நதிக்கும், சரயு நதிக்கும் இடையில் இருந்த பகுதி கௌடம் என்று வழங்கப்பட்டது என்று
‘ஆதி கௌட தீபிகா’ என்னும் நூல் கூறுகிறது.
அதற்கும் கிழக்கே உத்கலம் என்பது
இன்றைய ஒரிசாவும், ஜார்கண்டும், பெங்காலும் சேர்ந்த பகுதியாகும்.
அங்கிருந்து வடக்கே சென்றால் இமய மலைப் பகுதியில்
சீதை பிறந்த மிதிலா போன்ற இடங்களைக் கொண்ட
நேபாளப் பகுதிகள் மைதிலி பிராம்மணர்கள் வசித்த பகுதியாகும்.
இவை அனைத்தும் சேர்ந்த பகுதி அதாவது காஷ்மீரிலிருந்து (ஸரஸ்வதியிலிருந்து) பெங்கால் வரை பரவியிருந்த பகுதி
கௌட நாடு எனப்பட்டது என்று ஆதி கௌட தீபிகா கூறுகிறது.
பஞ்ச திராவிட நாடுகளும் அப்படியே
வரிசைக் கிரமமாக இருப்பதைக் காணலாம்.
ராஜ தரங்கிணி தரும் வரிசை :-
கர்நாடகர், தைலங்கர், திராவிடர், மஹாராஷ்டிரர், குர்ஜரர்
தற்போதைய கர்நாடகம்,
அதற்கு வடக்கில் தைலங்கப் பகுதிகள் (இன்றைய ஆந்திரப்பிரதேசம் அல்ல) இருந்திருக்க வேண்டும்.
முந்தின பகுதியில் மஹாபாரதப் போர் முடிந்தவுடன்
அர்ஜுனன், தென் இந்தியாவுக்கு வந்து,
திராவிடர்கள், ஆந்திரர்கள், மஹிஷர்கள், மற்றும் கொல்வ மலை
மக்களுடன் போரிட்டு வெற்றி பெற்றான் என்று பார்த்தோம்.
அவன் வரும் வழியில் வடக்கிலிருந்து தெற்காக
இவை அமைந்திருக்க வேண்டும்.
ஆந்திரர்களுக்குத் தெற்கில் மஹிஷர்கள் (மைசூர்),
அவர்களுக்குத் தெற்கில் கொல்வம் (கொல்லம்) என்று இருக்கவே, ஆந்திரத்துக்கு வடக்கில் திராவிடம் இருந்திருக்க வேண்டும்.
அதே வரிசையை ராஜ தரங்கிணி சொல்லும்
பஞ்ச திராவிடத்திலும் காணலாம்.
பஞ்ச திராவிடப் பகுதிகளில் தெற்கில் இருப்பது கர்நாடகம்,
அதற்கு வடக்கில் தைலிங்கம்,
அதற்கு வடக்கே திராவிடம்,
அதற்கு வடக்கே மஹாராஷ்டிரர்,
அதற்கு வடக்கே குர்ஜரர்.
இப்படி வரிசைக் கிரமமாக அமைந்திருப்பதை
பஞ்ச கௌடர்களிலும், பஞ்ச திராவிடர்களிலும் பார்க்கலாம்.
இந்தப் படத்தில், அரபிக்கடலிலிருந்து குஜராத் (துவாரகை) வழியாக நிலப்பகுதிக்குச் செல்லும் சிவப்புக் கோடு,
வெள்ளத்தில் மனு தப்பிச் சென்ற வழியாகும்.
அவன் சென்றடைந்தது ஸரஸ்வதி நதி.
வட இந்தியாவில் வரிசையாக ஐந்து வட்டங்கள்,
ஐந்து கௌடப் பகுதிகள் ஆகும்.
1- ஸரஸ்வதர்
2- கான்யகூப்ஜர்
3- கௌடர்
4- உத்கலர்
5- மைதிலி
தெற்கில் அரபிக் கடலோரப் பகுதியில் கடலில் வெளிர் நிறத்தில் காணப்படுவது முழுகிய பகுதிகள்.
அவற்றுள் மீட்டெடுக்கப்பட்ட பகுதிகள்
பஞ்ச திராவிட பிராம்மணர்கள் வசித்த பகுதி.
அவை
6. கர்நாடகர்
7.தைலங்கர்
8.திராவிடர்
9.மஹாராஷ்டிரர்
10.குர்ஜரர்.
பிற்காலத்தில் இவை ஒட்டிய பிற பகுதிகளுக்கும் அந்தந்தப் பெயர்களே வந்திருக்க வேண்டும்.
திராவிட – கௌடப் பகுதிகளை தமிழ் நிகண்டுகளும் சொல்கின்றன.
தமிழ் நாட்டைச் சுற்றி 18 நாடுகள் இருப்பதாக திவாகர நிகண்டு கூறுகிறது.
அவற்றுள் திராவிடம் ஒன்று.
அதாவது திராவிடம் என்பதைத் தமிழ் நாடு என்று சொல்லவில்லை.
அது தமிழ் நாட்டுக்கு வெளியே இருந்த நாடு.
அந்த 18 நாடுகள் வருமாறு:-
1.அங்கம்
2.வங்கம்
3.கலிங்கம்
4.கௌசிகம்
5.சிந்து
6.சோனகம்
7.திராவிடம்
8.சிங்களம்
9.மகதம்
10.கோசலம்
11.மராடம்
12.கொங்கணம்
13.துளுவம்
14.சாவகம்
15.சீனம்
16.காம்போஜம்
17.பருணம்
18.பர்ப்பரம்.
இது குறித்து இன்னொரு செய்யுளும் இருக்கிறது. அதன்படி தமிழ் நாட்டைச் சுற்றி 17 நாடுகள் இருந்தன எனப்படுகிறது. அவை
1.சிங்களம்
2.சோனகம்
3.சாவகம்
4.சீனம்
5.துளு
6.குடகு
7.கொங்கணம்
8.கன்னடம்
9.கொல்லம்
10.தெலுங்கம்
11.அங்கம்
12.மகதம்
13.கடாரம்
14.கௌடம்
15.கருங்குசலம்
16.கலிங்கம்
17.வங்கம்
இந்த இரண்டில் திராவிடம் ஒன்றிலும், கௌடம் மற்றொன்றிலும் இடம் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
ஸ்கந்த புராணமும் பாரத தேசத்தில் இருந்த நாடுகள் என்று
ஒரு பட்டியல் கொடுக்கிறது. (மஹேஸ்வர காண்டம்).
அதில் கௌட தேசம் இருக்கிறது. திராவிட தேசம் இல்லை.
பஞ்ச கௌடம், பஞ்ச திராவிடம் என்று பிற்காலத்தில் பிரிந்திருந்தால் இவ்வாறு இருப்பது சாத்தியம்.
அதாவது முதலில் கௌட தேசம் என்று மட்டுமே இருந்தது.
கண்டகி நதியை ஒட்டி அமைந்த பகுதி கௌட தேசம் என்று அழைக்கப்பட்டது. மஹாபாரத காலத்துக்குப் பின் வந்த மன்னனான
ஜனமேஜயன் செய்த யாகத்திற்கு வந்த் பிராம்மணர்கள்
இந்த கௌட தேசத்தில் தங்கினார்கள் என்று
‘பிராம்மணோத்பத்தி மார்த்தாண்டம்’ என்னும் நூல் சொல்கிறது.
இந்த பிராம்மணர்கள் ஸரஸ்வதி கௌடர்
என்னும் பெயரைக் கொண்டிருந்தனர்.
ஆங்காங்கே அவர்கள் வசித்து வந்த இடங்களின் பெயரால்
பஞ்ச கௌடர்கள் என்னும் பெயர் வந்திருக்க் வேண்டும்.
முதலில் இருந்தது கௌடர்கள்.
பிறகு அவர்கள் பஞ்ச கௌடர்கள் ஆனார்கள்..
இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு,
பஞ்ச திராவிடர் என்று ஒரு பிரிவு எற்பட்டிருக்க வேண்டும்.
’திராவிட கௌடகர்’ என்னும் பெயரால் ஒரு முனிவர் இருந்தார்.
கௌடர், திராவிடர் இருவருக்கும், பொதுவான முன்னோர்கள் இருந்தார்கள்
என்பதை இந்தப் பெயர் வலியுறுத்துகிறது.
இதை மேற்கொண்டு ஆராய்ந்தால்,
இந்தப் பெயர்கள், குறிப்பிட்ட சம்பிரதாயத்தைப் பின் பற்றி
உண்டாகி இருக்கலாம் என்று தெரிகிறது.
கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கௌடபதாசாரியார் (ஸரஸ்வதி பிராம்மணர்) என்னும் அத்வைத குருவைப் பின்பற்றிய பிராம்மணார்கள் கௌடர்கள் எனப்பட்டார்கள்.
இவர்கள் பஞ்சாயதன முறையைப் பின்பற்றியவர்கள்.
இந்த முறையில் சிவன் விஷ்ணு, தேவி, சூரியன், கணேசர்
ஆகிய ஐந்து மூர்த்திகளையும் வழிபட்டனர்.
இந்த ஐந்து மூர்த்திகளையும் ஒன்றாக வழிபட்டனர்.
அவரவர்களுக்கு இஷ்ட தெய்வமான ஒரு மூர்த்தியை நடுவில் வைத்து,
மற்ற மூர்த்திகளைச் சுற்றிலும் வைத்து வழிபட்டனர்.
குறிப்பிட்ட தெய்வத்தை மட்டுமே வழிபட வேண்டும்
என்ற கட்டுப்பாடுகளை இவர்கள் வைத்துக் கொள்ளவில்லை.
கௌடபதாச்சாரியர்
இவர்கள் அனைவரும் ஸரஸ்வதி பிராம்மணர்கள்.
அதாவது ஸரஸ்வதி நதிக் கரையில்
மனுவின் காலம் தொட்டு வசித்தவர்கள்.
பிறகு வட இந்தியா முழுவதும் குடியேறினார்கள்.
ஆங்காங்கே இருந்த இந்த மக்கள் முதலில்
கௌட தேசத்தின் சம்பந்தத்தால் கௌடர்கள் என்ற பெயர் பெற்றனர்.
கௌடபதாச்சாரியாரது அத்வைதக் கருத்துக்களையே
இவர்கள் பின் பற்றி வந்திருக்க வேண்டும்.
அதாவது கௌடபதாசாரியாரது காலம் வரை
இவர்கள் சம்பிரதாயத்தில் வேறுபாடு இருக்கவில்லை.
கௌடபதாசாரியரின் சிஷ்ய பரம்பரையில் வந்தவர் ஆதி சங்கரர் ஆவார். அவர் ஒரு மாறுதலைக் கொண்டு வந்தார்.
அவர் பஞ்சாயதன வழிபாட்டுடன் ஆறாவதாக,
சுப்ரமணியர் வழிபாட்டையும் சேர்த்துக் கொண்டார்.
ஷண்மதம் என்று அவர் ஸ்தாபித்தது, ஸரஸ்வதி பிராம்மணர்களது வழிபாட்டுடன் ஆறாவது வழிபாட்டு முறையையும் சேர்த்ததே.
ஆதி சங்கரரைப் பின்பற்றியவர்கள் பஞ்ச திராவிடர்கள்
என அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆதி சங்கரர் தன்னை ‘திராவிட சிசு’ என்று அழைத்துக் கொண்டார் (சௌந்தர்ய லஹிரி -75) என்பதே இதற்கு சாட்சி.
அவரைப் பின்பற்றிய பிராம்மணர்கள் பஞ்ச திராவிடர்கள்
என்று தங்களை அழைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
இதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது.
பஞ்ச திராவிடம் இருந்த பகுதி அனைத்தும்,
பரசுராமரால் அரபிக் கடலிலிருந்து மீட்கப்பட்ட பகுதியாக
இருப்பதைக் காணலாம்.
7000 வருடங்களுக்கு முன் பரசுராமர் அவற்றை மீட்டெடுத்த போது,
அந்த இடங்களில் ஸரஸ்வதி பிராம்மணர்களை அவர் குடியமர்த்தினார்
என்று புராணங்கள் கூறுகின்றன.
ஆதி சங்கரர் அந்த பகுதியைச் சேர்ந்த பிராம்மணர் ஆவார்.
வைவஸ்வத மனு ஆண்ட திராவிட நாட்டின் பகுதிகளாக அவை இருக்கவே தங்களுக்கும் திராவிட அடையாளம் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். ‘திராவிட மார்கம்’ என்று சொல்லப்படுவது
இந்தக் கரையோரப் பகுதிகளாக இருக்கலாம்.
இங்கு இன்னொரு விவரத்தையும் பார்க்கலாம்.
தீர்த்த யாத்திரை செய்த பாண்டவர்கள் (பகுதி 49),
தென் கடலில் திராவிட நாட்டுப் பகுதிகளுக்கு வந்தார்கள் என்றும்,
அதன் தொடர்ச்சியாக அரபிக் கடலோரமாக பிரபாஸம் வரை
சென்றார்கள் என்றும் பார்த்தோம்.
பிரபாஸத்தை அடுத்து இருப்பது துவாரகை.
தீர்த்த யாத்திரையில் கிருஷ்ணரும் வந்தார்.
அவருக்கு இருப்பிடம் துவாரகை என்பதால்,
தென் கடல் என்று சொல்லப்பட்டது,
துவாரகைக்குத் தென் கடலான அரபிக் கடலாக இருக்க வேண்டும்.
அந்தக் கடலிலிருந்து மீட்கப் பட்ட பகுதிகளில் குடியேறிய பிராம்மணர்கள், ஆதி சங்கரரைப் பின்பற்றித் தங்களை திராவிடர்கள்
என்று அழைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
பஞ்சாயதன வழிபாட்டுடன் ஆறாவதாக சுப்ரமணிய மதத்தை சங்கரர்
ஏன் இணத்திருக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பதில் தேடினால், இன்னொரு சுவாரசியமான விவரம் கிடைக்கிறது.
சுப்பிரமணியர், திராவிட தேசத்தை ஆண்ட வைவஸ்வத மனுவுக்கு முன்னோர்கள் வாழ்ந்த தென்னாட்டின் கண் இருந்த தெய்வமாகும்.
வைவஸ்வத மனுவின் பூர்வீகத்தைத் தேடினால்,
அது இந்தியக் கடலுக்குள் முழுகிவிட்ட
தென்னன் தேசப் பகுதிகளுக்குச் செல்கிறது.
வைவஸ்வத மனுவின் தந்தை விவஸ்வான் என்று
ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது என்று பார்த்தோம்.
அந்த விவஸ்வான் யார்?
அவன் சூரியன்!
அந்த சூரியனுக்குப் பிறந்த பிள்ளை கர்ணன்.
இன்னொருவன் ரேவந்தன்.
அதே சூரியனுக்கும் சம்ஞைக்கும் பிறந்தவன் தான் வைவஸ்வத மனு.
அவர்களுக்கும் இனி வரப்போகும் மனுவான ’சாவர்ணி மனு’ பிறக்கப்போகிறான் என்று புராணங்கள் கூறுகின்றன.
இனி வரப்போகும் மனுவும், தற்போதைய வைவஸ்வத மனுவின் பெற்றோருக்குப் பிறக்கப் போகிறவன் என்றால்,
இவையெல்லாம் மறை பொருளாக கூறும் விவரங்கள்
என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
சூரியனை முன்னிட்டே மனுவின் பிறப்பு சொல்லபப்டுகிறது.
எங்கே சூரிய சக்தி நிலவுகிறதோ அங்கே மனித குலம் தளிர்க்கும்.
பனி யுகத்தின் போது, பூமியின் வட பாகம் சூரிய சக்தியைக் காணவில்லை.
அங்கு மூடியிருந்த பனியின் காரணமாக மக்கள்
அங்கு மக்கள் தொகை குறைந்து விட்டது.
அப்பொழுது பூமியின் தென் பாகத்தில்தான் மனித இனம் தழைக்கும் வண்ணம், சூரிய சக்தி இருந்திருக்கிறது.
அப்படித் தழைத்ததால் வந்தவர்களுள் தீரனாக இருந்தவன்
வைவஸ்வத மனு என்றும்,
அவனது முயற்சியால் மனித குலம் பெருகிற்று என்றும்
நாம் பொருள் கொள்ள வேண்டும்.
வைவஸ்வத மனுவின் வம்சாவளி தக்ஷப் பிரஜாபதியிலிருந்து ஆரம்பிக்கிறது. தக்ஷப் பிரஜாபதியின் வழியில் வந்தவன் விவஸ்வான் என்றும்,
அவனுக்குப் பிறந்தவன் வைவஸ்வதன் என்று வருவதால்,
அந்த தக்ஷன் இருந்த தென்னாட்டுக்கு
நாம் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.
தக்ஷன் கதையில் அவன் செய்த யாகத்தில் சிவனுக்கு இடம் கொடுக்கவில்லை என்று சொல்லப்பட்டுள்ளது.
சிவன், அழிக்கும் தொழில் செய்யும் தெய்வம்.
தக்ஷ யாகத்தில் சிவனுக்கு இடம் இல்லை என்றால்,
தக்ஷனது நாட்டில் அழிவின் அறிகுறிகளே இல்லை
என்பதை இது தெரிவிக்கிறது.
ஆனால் காலச் சக்கரம் சுழலுகையில், அழிவும் ஏற்பட்டாக வேண்டும். அதனையே சிவனது கோபமாகவும்,
பிரளய கால அக்கினியாகவும் சித்திரித்துள்ளார்கள்.
பெரும் தீ வந்து மனித குலம் நாசம் அடைந்திருக்கும்.
அப்பொழுது தக்ஷன் சிவனை வேண்டுகையில்,
இந்த அழிவு, பிரளய கால அழிவு,
எப்படியும் செய்யப்பட வேண்டிய அழிவு என்று சிவன் சொல்கிறார்.
இதன் மூலம், முந்தின மக்கள் கூட்டம் தீயினால் ஆபத்தில் சிக்கிப்
பேரழிவு கண்டிருக்க வேண்டும்.
தீ என்னும் வெப்பத்தால் அழிவும்,
அதைத் தொடர்ந்து மழையும் வரும்
என்பது புராணங்கள் தெரிவிக்கும் செய்தி.
அதன் பிறகு மக்கள் தோற்றம் பெருகுகிறது.
அப்படிப்பட்ட காலக்கட்டத்தில்
சிவனும், உமையும்,
அவர்களுக்குப் பிறந்த குமரனும் (சுப்பிரமணியர்),
அவர்களுக்குப் பின் குறுமுனியும்
தோன்றிய இடம் தென்னாடு என்பது
திரு விளையாடல் புராணம் சொல்லும் சரித்திரம்.
அதற்குப் பிறகுதான் பாண்டிய மன்னர்கள் வருகிறார்கள்.
அவர்கள் பரம்பரையில் வந்த மலயத்துவஜ பாண்டியன்
விஷ்ணுவை வேண்டி,
உமையவளே தடாதகைப் பிராட்டி என்னும் மீனாட்சி தேவியாகப் பிறக்கிறாள்.
அதற்கு சில ஆயிரம் ஆண்டுகள் முன்னால் வைவஸ்வத மனு இருந்திருக்கிறான்.
பனியுகம் முடிந்தபின் வந்த முதல் வெள்ளத்தில் அவன் பாதிப்பு அடைந்தான். ஆனால் அப்பொழுது தென்னாடு பாதிப்பு அடையவில்லை.
அந்தத் தென்னாடு பூமத்திய ரேகைக்கு மிகவும் தெற்கே இருந்திருந்தால்
இது சாத்தியம்.
தென் பகுதிக்கு உரியவர்களான அசுரர் பரம்பரையில் வந்த
தாரகாசுரன், சூரபத்மன் போன்றவர்களை
சுப்பிரமணியர் அழித்த போது,
வடக்கில் பனியுகமும்,
தெற்கில் சூரிய ஒளியும் இருந்த காலக்கட்டமாக இருக்க வேண்டும்.
அந்த காலகட்டத்தில் தோன்றிய வைவஸ்வத மனுவுக்கு
சுப்பிரமணியரும், ஒரு கடவுளாக எண்ணப்பட்டிருக்க வேண்டும்.
அதுவரை தென்னாட்டில் இருந்த மக்கள்
சிவன், விஷ்ணு, சூரியன், தேவி
ஆகிய நான்கு தெய்வங்களைத்தான் வழிபட்டிருக்க வேண்டும். வெள்ளத்திற்குப் பிறகு ஸரஸ்வதி நதி தீரத்தை வந்தடைந்த மனுவும் ரிஷிகளும் இந்த நான்கு தெய்வங்களையும் வேதமுகமாகத் துதித்துள்ளனர். நாளடைவில் கணேசர், சுப்பிரமணியரையும் துதித்துள்ளனர்.
அவர்களுள் சுப்பிரமணிய வழிபாடு ஆதி சங்கரர் காலம் வரை முறைப்படுத்தப்படவில்லை.
ஸரஸ்வத கௌடர்கள் சுப்பிரமணியர் நீங்கலாக மீதி ஐந்து தெய்வங்களை வழிபட்டனர்.
மனு ஆண்ட முந்தின திராவிட தேசத்தின்
சுப்பிரமணியர் தொடர்பு காரணமாக,
ஆறாவதான சுப்பிரமணிய வழிபாடும் செய்யவே,
திராவிட அடையாளத்தை அவர்கள் பெற்றிருக்கலாம்.
வைவஸ்வத மனுவின் பூர்வீகம், பூமியின் தென் பாகத்திலிருந்தது என்று சொல்லும் வண்ணம், இன்னும் ஒரு சுவடு இன்றும் இருக்கிறது.
பூமியின் வடபாகத்தில் புது வருடத்தை சித்திரையில் ஆரம்பிப்பது போல,
பூமியின் தென் பாகத்தில் புது வருடத்தை ஐப்பசியில் ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்கும்.
நியூஸிலாந்து போன்ற இடங்களில் ஐப்பசி மாதத்தில்தான் புது வருடம் கொண்டாடுகிறார்கள்.
வட பகுதியிலிருக்கும் நம் நாட்டின் பல பகுதிகளிலும்
சித்திரையில் புது வருடம் தொடங்குகிறது – இரண்டே இரண்டு இடங்களைத் தவிர.
ஒன்று துவாரகை இருக்கும் குஜராத்.
மற்றொன்று மைதிலி பிராம்மணர்கள் வசித்த நேபாளம்.
இந்த இரண்டு இடஙகளிலும் ஐப்பசியில் புது வருடம் கொண்டாடுகிறார்கள்.
தென்பகுதி வழக்கம் இன்றும் இங்கு தொடருவதற்கு
வேறென்ன காரணம் சொல்ல முடியும்?
அரபிக் கடலோரத் திராவிடப் பகுதிகளில் வாழ்ந்த ஸரஸ்வத மக்களை
ஆதொண்டை, தான் ஸ்தாபித்த தொண்டை மண்டலத்தில்
குடியேற்றிருக்க வேண்டும்.
காஞ்சி வாழ் பிராம்மணர்கள் வேதத்தைப் பரப்பினதற்குப் பெயர் போனவர்கள். வேதம் கற்பதற்கு, பாரதத்தின் பிற பகுதிகளிலிருந்து
காஞ்சிக்கு மக்கள் வந்தனர்.
பரசுராமர் காலம் தொட்டே மீட்கப் பட்ட திராவிடத்தில் குடியேறின
ஸரஸ்வத பிராம்மணர்களை, ஆதொண்டை
தன் நாட்டில் குடி வைத்திருக்கிறான்.
அவர்களது திராவிட நாட்டுத் தொடர்பால்,
காஞ்சியும் அதனைச் சார்ந்த இடங்களும் திராவிட நாடு
என்று பெயர் பெற்றிருக்கிறது.
காஞ்சிக்குத் திராவிட அடையாளம் கொடுத்தவர்கள், பிராம்மணர்களே. சாணக்கியர் காஞ்சி நகரைச் சேர்ந்த திராவிடப் பிராம்மணரே.
ஆனால் காஞ்சி நகரம், மஹாபாரதக் காலத்தில் திராவிடம் என்று அழைக்கப்படவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆதி சங்கரருக்குப் பிறகே இந்த திராவிட அடையாளம்
அதிகம் ஏற்பட்டிருக்கிறது.
த்ரமிடாசார்யர் என்னும் வைணவ ஆசாரியர்,
திராவிட தேசத் தொடர்பால் அந்தப் பெயரைக் கொண்டிருந்தார்.
இவர்கள் அனைவருமே பிராம்மணர்கள் என்பதால்,
தமிழ்நாட்டு திராவிடவாதிகளின் திராவிடக்கருத்து அடி பட்டுப் போகிறது.
திராவிடம் இத்துடன் நிற்கவில்லை.
வராஹமிஹிரரும், திராவிட தேசம் என்ற
ஒரு இடத்தை அடையாளம் காட்டியுள்ளார்.
அது நாம் மேற் சொன்ன அரபிக் கடலோரப்பகுதியில்தான் இருக்கிறது.
அந்த விவரங்களை அடுத்தக் கட்டுரையில் பார்ப்போம்.
Excellent article loaded with information .
பதிலளிநீக்குThanks Mr Raman. It continues in the next post also.
பதிலளிநீக்குLot of field work is needed to document the above claims...
பதிலளிநீக்குபலமொழி புராணங்களில் உள்ள அனைத்து தகவல்களையும் தொடர்பு படுத்தி வரலாற்றினை அதன் தற்போதைய குறுகிய எல்லையை விரிக்கும் முயற்சி. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு@ sivakujmar
பதிலளிநீக்குஊக்குவித்தலுக்கு நன்றி.
If Rabindranath refers only the 7 places, then are you saying he has left out tamil countries accidently or intentionally?
பதிலளிநீக்குAlso, the word,dravidian, used in a collective sense to represent the 4 southern states original dwellers has been widely accepted and is being used. I do not see anything wrong here. If Robert Caldwell should have used some other word to represent this, the same should have been used by all.
I think more than the term, it is the intended meaning that is important. If you want to patent a word and take it, Please do it. I totally disagree with your comments on the first paragraph. A well written article in Tamil to offend the Tamil glory and sentiments. Thanks
@பெயரில்லா சொன்னது…
பதிலளிநீக்குWhen Tagore wrote the Anthem, there was Coromandal cosat, Konkan coast and Madras state.There was no identity as Tamil State. The kind of division of South Indian States of today was not there at that time.
Please read all the articles.
Very interesting & exhaustive in nature. Nice dear
பதிலளிநீக்குஉங்களால தெளிவான ஆதாரத்துடன் இந்த கருத்தை நிலை நாட்ட முடியுமா ! திராவிடர் கழகத்தின் திராவிட விளக்கத்திற்கும், உங்களின் விளக்கத்தையும் ஒரு ஒப்பீட்டு கட்டத்துக்குள் முடிந்தால் கொண்டு வரவும். உங்கள் சேவை இந்த நாட்டுக்கு தேவை.
பதிலளிநீக்கு//உங்களால தெளிவான ஆதாரத்துடன் இந்த கருத்தை நிலை நாட்ட முடியுமா ! திராவிடர் கழகத்தின் திராவிட விளக்கத்திற்கும், உங்களின் விளக்கத்தையும் ஒரு ஒப்பீட்டு கட்டத்துக்குள் முடிந்தால் கொண்டு வரவும். உங்கள் சேவை இந்த நாட்டுக்கு தேவை. //
பதிலளிநீக்குஇந்த ஒரு கட்டுரையில் மட்டும் விவரங்கள் இல்லை. ஒவ்வொரு கட்டுரையிலும், திராவிடவாதிகளது ஏதேனும் ஒரு கருத்தையாவது மறுத்திருப்பேன். இன்னும் இந்தத் தொடர் முடியவில்லை. இன்னும் செல்கிறது. செம்மொழிச் சின்னத்தில் தந்துள்ள 7 சின்னங்களையும் ஒப்பிட்டுத் தகர்க்க இருக்கிறேன். தொடரை முடித்தவுடன், நீங்கள் சொல்வது போல செய்கிறேன்.
When Tagore wrote the Anthem, there was Coromandal cosat, Konkan coast and Madras state.There was no identity as Tamil State. The kind of division of South Indian States of today was not there at that time.
பதிலளிநீக்குThis is not a convincing reply. From your own interpretation of this, then Rabindranath has used Dravida to represent the southern people. No mention of madras state, right.
The other point could be if we are called madrasi in bombay/ delhi, it is because, we hail from Madras. Similarly brahmins lived in southern states should have been called denoting this representation (many of the old sangam literature names bear country/ region/ city before their original name). . Please do not make any hill out of a mole. Any way, it is intersting to read your point of view. All the best!
@ anonymous.
பதிலளிநீக்குPlease read the article again with patience. It is highlighted in the article that the names of places that Tagore had written are similar to the places (of Brahmins)written in Raja Tarangini.Look at what Raja tarangini says and you will know that they are about Brahmins and not about people of any State of today. Who are those Brahmins and why were they called as Dravidas is the next question. The dsicourse keeps going like that. Without giving any thought to these and without knowing any of these and without reading any of the info written before and after this article, I am sorry to say that comments like this do not merit any attention.
Really very informative. ThanQ!
பதிலளிநீக்குWell said madam. I request that you should henceforth insist onpeople to use their real names only and not allow anybody to air their opinions anonymously.
பதிலளிநீக்குBala
Another outstanding article,more then the article the replies are informative. After reading i think it will be great if u prepare separate atlas for the name of the places and the reason behind it, just like the way u mentioned about kashmir(becoz of rishi kashyap.)
பதிலளிநீக்குSorry for the delay in my response.
நீக்குThanks for your compliments.
There are enough textual info on location of many places of the earth in Ramayana and Mahabharata. Based on them I will make the maps for Bharatvarsha and the world and post them in this blog. Already some locations have been noted by me in the course of this series.
From http://vsrc.in/திராவிட-புரட்டு/item/15-2013-04-23-06-30-52
பதிலளிநீக்குகால்டுவெல் திராவிட மொழி ஒப்பிலக்கணம் எழுதியது 1856ல். ஆனால், மதம் மாற்றம் செய்ய இந்தப் பாதிரியார் காட்டும் ஏசுவுக்கு 172 ஆண்டுகளுக்கு முன்பே, திராவிடம் என்ற சொல்லின் திரிபான த்ரமிர என்ற சொல் த்ரமிர தேச சங்காதம் (தமிழ் தேசங்களின் கூட்டணி) என்று ஹதிகும்பா கல்வெட்டில் இடம் பெற்றுவிட்டது. இங்கு திராவிடம் என்ற சொல் தமிழ் கூறும் நல்லுலகைக் குறிப்பதாக அமைந்துள்ளது.
புராணங்களில் குறிப்பிடப்படும் 56 தேசங்களில் தென்னகத்தில் சேர, சோழ, பாண்டிய, திராவிட தேசங்கள் இருப்பதாக குறிப்பு காணப்படுகிறது. இந்தக் குறிப்பின் படி, சேர, சோழ, பாண்டியரல்லாத ஏனைய தமிழகம் திராவிட நாடு என்பது புலனாகிறது. விஷ்ணு புராணத்தில் சத்யவ்ரதன் என்ற திராவிட அரசன் என்கிற குறிப்பும் இந்த திராவிட என்ற சொல்லின் தொன்மையை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. இந்தப் புராணங்கள் எழுதப்பட்ட காலம் என்பது குறித்து அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை; இருப்பினும், மிகவும் பிற்காலத்தில் எழுதப்பட்டது என்று வாதிடும் அறிஞர்கள் கூட இதை கால்டுவெல்லுக்கு சுமார் 1300 ஆண்டுகள் முன்பு என்று கணக்கிட்டுள்ளனர்.
8-9ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஆதிசங்கரர், திருஞான சம்பந்தரை திராவிட சிசு என்று வர்ணிக்கிறார். சங்கர்ரின் சமகாலத்தவரான குமரில பட்டர், ஆந்திர திராவிட பாஷா என்பதில் தமிழை திராவிடம் என்றும், தெலுங்கை ஆந்திரம் என்றும் குறிப்பிடுகிறார். இங்கு திராவிடம் என்பது தமிழ் மொழியைக் குறிக்கிறது.
நம்மாழ்வாரின் திருவாய்மொழியை கி.பி.900-950யில் வாழ்ந்த நாதமுனிகள் திராவிட வேத சாகரம் என்று குறிப்பிடுகிறார். இங்கு திராவிடம் என்ற சொல் தமிழ் மொழியைக் குறிக்கிறது.
கி.பி.1705 முதல் கி.பி.1742 வரை வாழ்ந்து அருளிய தாயுமானவ ஸ்வாமிகள் சித்தர் கண பதிகத்தில், வல்லான் ஒருத்தன் வரவும் திராவிடத்திலே, வந்ததா விவகரிப்பேன் என்று அருளுகிறார். இங்கு திராவிடம் என்ற சொல், தமிழ் தேசத்தைக் குறிக்கிறது.
18ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவஞான முனிவரின் சைவசித்தாந்த உரை திராவிட மாபாடியம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு திராவிடம் என்பது தமிழ் மொழியைக் குறிக்கிறது.
Your comments?
Dear Mr Chandru,
நீக்குWhat you have quoted first appeared in a website for which I recorded my replies.Read in the comment section of that article in this link:
http://ethiroligal.blogspot.in/2012/02/blog-post_25.html
The same with additional inputs were written by me in the comment section of 54th article. Read here:
http://thamizhan-thiravidana.blogspot.in/2011/05/54.html
நீங்கள் சொல்லும் கருத்துக்கள் விஸ்வகர்ம பிராம்மணர்களுடன் ஒத்துப்போகின்றது. அப்படி என்றால் இப்போதுள்ள ஐயர் என்னும் பிராம்மணர்கள் மற்றும் ஐயங்கார்கள் எங்கிருந்து வந்தார்கள்.
பதிலளிநீக்கு