சனி, 29 ஜனவரி, 2011

34. ரஷ்யாவில் வேத நாகரிகம்.


   
ஆரியப் படையெடுப்பு நடந்தது என்பதற்கு ஆதாரம் இல்லை என்று பல வெளி நாட்டு ஆராய்ச்சியாளார்களும் முடிவுக்கு வந்த இந்த நேரத்தில், சில ஆரியச் சின்னங்கள் ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஹோம வழிபாடு அமைப்புகளும், ஸ்வஸ்திக் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பொருட்களும் ரஷ்யாவில் கிடைத்துள்ளன. அது மட்டுமல்ல குதிரைகள் அடக்கம் செய்யப்பட்ட சமாதிகள் பலவும் இருப்பது தெரியவந்துள்ளது. அஸ்வமேத யாகம் என்னும் யாக முறைப்படி செய்யப்படும் பலியில் உள்ள அமைப்பிலேயே குதிரைகள் புதைக்கப்ப்ட்டுள்ள விவரங்கள் தெரிய வந்துள்ளன. இதை ஆராய்ச்சி செய்தவர்கள், வேத முறையில் சொல்லப்பட்டுள்ள விவரங்களிலிருந்து இவை ஒரு மில்லிமீட்டர் அளவு கூட பிசகவில்லை என்கிறார்கள். இது குறித்த பிற விவரங்கள் இன்னும் வெளி வரவில்லை. இந்த அமைப்புகள் இன்றைக்கு 3,700 முதல் 4000 ஆண்டுகளுக்குள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது.


ஆரியப் படையெடுப்புவாதிகள் 3500 ஆண்டுகளுக்கு முன் ஆரியப் படையெடுப்பு நடந்தது என்று சொல்கிறார்கள். அதனால் அதற்கு 500 ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவில் வாழ்ந்த மக்களே இந்தியாவுக்கு வந்தனர் என்று எண்ண வாய்ப்பிருகிறது. அப்படி ஒரு எண்ணம் உருவாகும் போன்ற சூழ்நிலை இப்பொழுது இருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட முடிவுக்கு வருவது தவறு என்று நிரூபிக்க இரண்டு முக்கிய விவரங்கள் உள்ளன.
ஒன்று அந்த அகழ்வுகளில் தென்படும் ஒரு சின்னம்.
மற்றொன்று ராமாயண, மஹாபாரதம் மூலம் பாரதம் உள்ளடக்கிய ஆசிய- ஐரோப்பிய சரித்திரத்தைப் பற்றி நாம் அறிவது.


ஷ்யாவில் 20 இடங்களில் புதையுண்ட குடியிருப்புப் பகுதிகளைக் கண்டு பிடித்துள்ளார்கள். இந்த அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ள சில பொருட்களில் காணப்படுவது ஸ்வஸ்திக் சின்னம் ஆகும்.

குடியிருப்புகளின் வட்டமான அமைப்பு மேலே, 
ஸ்வஸ்திக் சின்னங்கள் கீழே தரப்பட்டுள்ளன..

இந்த ஸ்வஸ்திக் சின்னத்தைதான் அவர்கள் ஆரிய அடையாளமாகப் பேசுகிறார்கள்.
ஸ்வஸ்திகா என்ற சொல்லே சமஸ்க்ருதச் சொல்தான்.
இது ‘ஸ்வஸ்தி என்ற சொல்லிலிருந்து வந்தது.
தமிழில் நாம் 'சொஸ்து' என்கிறோமே  அது ஸ்வஸ்த்  என்னும் சம்ஸ்க்ருதச் சொல்லின்  தமிழ் மருவுதான்.
ஸ்வஸ்த் என்றால் குணம் அடைதல்நலமாக இருத்தல் என்று பொருள். இன்றைய வழக்கில் சொல்வதென்றால் 'வாழ்க வளமுடன்' என்று நமக்கு ஊக்கம் தர ஒரு சின்னமாக் ஸ்வஸ்திகா இருந்திருக்கிறது.
 

ரஷ்யாவில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கைவினைப் பொருள்கள் மீது ஸ்வஸ்திகா  அடையாளம் வரையப்பட்டுள்ளது அல்லது முத்திரையாகக் குத்தப்பட்டுள்ளது.
ஸ்வஸ்திகா சின்னத்தைப் பார்த்த  ஆராய்ச்சியாளர்கள் அங்கிருந்த  மக்கள் ஆரியர்களே என்று புளகாங்கிதம் கொண்டிருக்கிறார்கள்.
நம் திராவிட அரசியல்வாதிகள் இதை அறிந்தால் இன்னும் ஒரு படி மேலே போய் விழாவே எடுத்து விடுவார்கள் - ஆரியன் என்பவன் இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்தவன் என்பதற்கு இது ஒரு சான்றாகி விடும் அல்லவா?


ஆனால் ஒரு நிமிடம் அவர்கள் யோசிக்க வேண்டும்.
சிந்து சமவெளிப் பகுதியை சொந்தம் கொண்டாடுகிறார்களே,
அங்கு மட்டும் கிட்டத்தட்ட 60 ஸ்வஸ்திகா சின்னங்கள் கிடைத்துள்ளன.
அவை பெரும்பாலும் முத்திரை எனப்படும் சீல்களாக உள்ளன.
சிந்து சமவெளிப்பகுதியில் என்றோ கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பிரிட்டிஷ் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள  இந்த ஸ்வஸ்திகா சீல்களைப் பாருங்கள்.




இவை ஈரமான களிமண் மீதோ அல்லது ரஷியாவில் கிடைத்துள்ளதே அந்த மாதிரி பொருள்கள் மீது பெயின்டிங்கில், ஒரு டிசைனாக ஸ்வஸ்திகா வடிவத்தைப் பதிக்கவோ பயன்படுத்தப்பட்டுள்ளன.


ஸ்வஸ்திகா சின்னம் வேத மரபின் அதாவது இந்து மதத்தின் ஆதார வடிவம். இது ஆரியனுக்கு உரியது, ஆனால் திராவிடனுக்குச் சம்பந்தம் இல்லாதது  என்று சொல்ல முடியாதவாறு, ஸ்வஸ்திகா சின்னங்கள் சிந்து சமவெளிப்பகுதியில் அதிகம் கிடைத்துள்ளன.

ஸ்வஸ்திகா சின்னங்களும் பாதுகாப்பு குறித்து ஒரு ரட்சை போல பயன்படுத்தப்படுகின்றன. சிந்து சமவெளிப் பகுதியில் இன்றும் தொடர்ந்து வாழும் வட இந்திய மக்கள், இந்த ஸ்வஸ்திகா  சின்னத்தை, நாம் போடும் வாசல்படி கோலம் போல வாசல் படியில் இப்பொழுதும்  போடுகிறார்கள்.




தமிழ் நாட்டில் நாம் வாயிலில் போடும் கோலங்களிலும் ஸ்வஸ்திக் சின்னம் இடம் பெறுகிறது.

 

இந்த ஸ்வஸ்திகா என்பது வேதமரபில் வருவது. இன்றும் இந்தியா முழுவதும் தெய்வ  வழிபாட்டில் அங்கம் வகிக்கிறது.


                            ஸ்வஸ்திகா வழிபாட்டு யந்திரம்.

வேதம் தந்தவன் ஆரியன் என்றால், சம்ஸ்க்ருத மொழி அந்த ஆரியனின் மொழி என்றால், இவர்கள் சொல்வது போல ஆரியன் படையெடுத்து  வருவதற்கு முன் ஸ்வஸ்திகா சின்னம், சிந்து சமவெளி திராவிடனிடத்தில் எப்படி நுழைந்திருக்க முடியும்


சிந்து சமவெளியிலும் ஸ்வஸ்திகா இருக்கிறது.
ரஷியாவிலும் அதே காலக் கட்டத்தில் ஸ்வஸ்திகா டிசைன் இருந்திருக்கிறது. அந்த ஸ்வஸ்திகாவின் அடிப்படையில்  ரஷியாவில் வாழந்தவன் ஆரியன்  என்றால் அந்தப் டிசைன்களுக்கான  அச்சைத் தயாரித்த சிந்து சமவெளிக்காரன் யார்
அவனும் ஆரியன் என்றுதானே ஆராய்ச்சியாளர்கள் முடிவு கட்டுவார்கள்? அல்லது ரஷியாவில் இருந்தவன் திராவிடன் என்று முடிவு கட்டுவார்களா? இந்தக் குழப்பத்திற்கு விடை ஆரிய - திராவிட வேறுபாட்டில் இல்லை. பாரதத்தின் பழமையான சரித்திரத்தில் இருக்கிறது.


ரஷ்யாவில் காணப்படும் குடியிருப்பு அமைப்புகள் உள்ள இடம், முன் பகுதியில் பார்த்தோமே ஸ்த்ரீ ராஜ்ஜியம் அதற்குக் கிழக்கே உள்ளது. அர்ஜுனன், காஷ்மீர அரசர்கள் போன்றவர்கள் உத்தர-குரு சென்ற பாதையில் இது வருகிறது.


இந்தியாவிலிருந்து வட மேற்குத் திசையில் உள்ள ஸ்த்ரீ ராஜ்ஜியத்தை அடைந்து அங்கிருந்து கிழக்கு நோக்கித் திரும்பி, இந்தியாவுக்கு அப்பால் வட பகுதியில் உள்ள உத்தர-குருவுக்குச் சென்றிருக்கிறார்கள்.


மேலும் கண்டெடுக்கப்பட்ட இந்தப் பகுதிகள் ராமாயணத்தில் வரும் கைகேயியின் பிறந்த வீடான கேகய தேசம் இருந்த பகுதியை ஒட்டியது!!
கைகேயினது தந்தை பெயர் அஸ்வபதி.
அதாவது குதிரைளுக்கு நாயகன்.
அவன் நாடு குதிரைகளுக்குப் பெயர் போனது.
பார வண்டிகளை இழுத்துச் செல்லும் கழுதைகளும், சிறந்த அங்க லக்‌ஷணங்கள் கொண்ட குதிரைகளும், சிறு தேர்களும், குளிருக்குத் தேவையான கம்பளங்கள் தயாரித்தலும், பொன்னும், ரத்தினங்களும் அவனது தேசத்தில் அதிகம்.
ராமாயணத்தில் வரும் குறிப்புகள் மூலம் இந்த ராஜ்ஜியம் தற்போதைய கஸக்ஸ்தான் பகுதியில் சக்‌ஷுஸ் (ஓக்சஸ்) நதிக்கு வடக்கே இருந்தது என்று சொல்ல முடிகிறது.


ராமாயணத்தில் தசரதன் இறந்த போது ராமர் காட்டுக்குச் சென்றுவிட்ட்டார். அடுத்த பிள்ளையான பரதன் தன் தாய் வழிப் பாட்டனான அஸ்வபதியின் கேகய தேசத்தில் இருந்தான். அவனை அழைத்து வர வீரர்களை அனுப்பினார்கள். அங்கிருந்து பரதன் கிளம்பி வந்த வழித்தடத்தை வால்மீகி விவரிக்கிறார்.
அவன் வருவதற்கு 7 நாட்கள் ஆயின.
அதாவது 7 நாட்கள் பயணம் செய்து அவன் அயோத்தி திரும்பினான்.
இதற்கும் அவன் நடந்து வரவில்லை.
குதிரை மீதோ அல்லது தேரில் பயணம் செய்தோதான் வந்தான்.
அபப்டியும் ஒரு வாரம் ஆனது என்றால், கேகயம் சற்று தொலைவில் இருந்தது என்று தெரிகிறது.  


அவனை வெறும் கையுடன் அஸ்வபதி அனுப்பவில்லை.
அவனும், அவன் மகனும்  (பரதனது மாமன் யுதாஜித்) பல வெகுமதிகளைக் கொடுத்தனுப்பினார்கள்.
அந்தப் பொருட்கள் மத்திய ஐரோப்பா அல்லது கசக்ஸ்தான் பகுதிகளிலும், ரஷ்யாவிலும் கிடைப்பவை.


ஆரிய- தஸ்யு போராட்டத்தில் விரட்டப்பட்ட யயாதியின் மகனான அநு என்பவனின் பரம்பரையில் வந்தவர்கள் கேகய நாட்டவர்கள் என்று பாகவத புராணம், வாயு புராணம், மத்ஸ்ய புராணம் போன்றவை தெரிவிக்கின்றன. அநு, சிந்துவின் மேற்கே ஆண்டான்.
அவனைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கே பிரிந்திருக்கின்றனர்.
சோழனது முன்னோனான சிபியின் தந்தை உசீனரன், அநுவின் வம்சாவளியைச் சேர்ந்தவன் என்று பாகவத புராணம் கூறுகிறது.
எனவே இவர்கள் ஆண்ட நாடுகள் எல்லாம் சிந்துவுக்கு அப்பால் மேற்கு, வட மேற்கில்தான் அமைந்திருக்க முடியும்.
சிபி சிந்துவுக்கு மேற்கில் தங்கி விட்டான்.
கேகயர்கள் வட மேற்கில் சென்றிருக்கின்றனர்.
ஆயினும் அவர்கள் வேத வாழ்க்கையை விடவில்லை.


கைகேயினது தந்தையான கேகய மன்னன் அஸ்வபதி பல ரிஷிகளும் அறியாத வைஸ்வானரம் என்னும் ஆத்ம ஞானத்தை அறிந்திருந்தான் என்பதை சாந்தோக்கிய உபநிஷத்து மூலம் அறிகிறோம்.
அவனை அண்டி மற்ற ரிஷிகள் அந்தப் பிரம்ம ஞானத்தைத் தெரிந்து கொண்டனர்.
எனவே அஸ்வபதி வேத ஞானத்தில் தலை சிறந்து விளங்கினான் என்று தெரிகிறது.

இனி அவன் கொடுத்த பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.



  • சித்திரக் கம்பளங்கள் (கம்பள உற்பத்தி அந்தப் பகுதியில் அதிகம்)
  • மான்தோல் (அபூர்வ வகை மான்கள் அந்தப் பகுதியில் காணப்படுகின்றன)
  • பலவித தனங்கள், 2000 பொன். (சக்‌ஷுஸ் நதிப்பகுதி பொன் உற்பத்திக்குப் பெயர் போனது.)
  • 1,600 சிறந்த குதிரைகள் ( விஸ்வாமித்திரர் கவலரிடம் குரு தட்சிணையாகக் கேட்டது போன்ற அஸ்வமேதக் குதிரைகளாக இருக்க வேண்டும், ஏனென்றால் அப்படிப்பட்ட அபூர்வக் குதிரைகள் இந்தியாவில் இல்லை. அந்தக் காலக் கட்டத்தில் மொத்தம் 600 குதிரைகளே மூன்று அரசர்களிடம் இருந்தன. அபூர்வ குதிரைகள் கேகய நாட்டிலிருந்து வந்தன.) இன்றைக்கும் குதிரை விளையாட்டுகள் அந்தப் பகுதியில் மிகவும் பிரசித்தம். இன்றைய மக்கள் உணவும் குதிரை மாமிசம்தான். அந்த அளவுக்கு அவர்கள் வாழ்க்கையில் குதிரை கலந்துள்ளது.
  • அஜீனா என்னும் மரப்பட்டைகள். இதை பூர்ஜபத்ரம் என்று சமஸ்க்ருதத்தில் சொல்வார்கள். இது எழுதுவதற்குப் பயன்படும். எல்லா நூல்களையும் இந்த மரப்பட்டைகளில்தான் எழுதி வந்தார்கள்.




இது கிடைக்கும் மரம் பிர்ச் ( birch)  என்னும் வகையைச் சார்ந்தது. அந்த மரம் இமயமலை தொடங்கி வட ஐரோப்பா, சைபீரியா போன்ற பகுதிகளில் காணப்படுவது. அதன் பட்டையை உரிக்கலாம். அதை ஆடையாகவும் பயன்படுத்தி உள்ளனர்.



உத்தரகுரு மக்களுக்கு இயற்கையிலேயே ஆடைகள் கிடைத்தன.
அந்த ஆடைகள் மரத்தில் தொங்கின என்று சஞ்சயன் பாரதப் போரைக் காண தூர திருஷ்டி பார்வை கிடைத்தவுடன், அதன் மூலம் பார்த்து இவ்வாறு திருதராஷ்டிரனிடம் சொன்னான். அஜீனா எனப்படும் பட்டைகள் கொண்ட மரங்களை அவர் சொல்லியிருக்க வேண்டும்.

  • இந்திரசிர மலையில் காணப்படும் ஐராவதம் போன்ற அபூர்வ யானைக் கூட்டங்கள். இது ஒரு முக்கிய ஆதாரம். கேகயம் என்னும் தேசம் இந்தியாவைச் சேர்ந்தது அல்ல. அது இந்தியாவுக்கு வடமேற்கே இருந்தது என்று ராமாயண வர்ணனைகளின் மூலம் தெரிகிறது. அந்தப் பகுதிகளில் தற்சமயம் யானைகள் தென்படுவதில்லை. ஆனால், சைபீரியப் பகுதிகளில் 10,000 ஆண்டுகளுக்கு முன்வரை அந்தப் பகுதியில் மட்டுமே காணபப்டும் அபூர்வ வகையான உல்லி மம்மொத் எனப்படும் யானைகள் இருந்தன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மம்மொத் அன்ற சொல்லே ரஷ்ய மொழியிலிருந்து வந்தது. கேகயத்தில்ருந்து யானைகள் அனுப்பபட்டன என்றால் அவை ரஷ்யப் பகுதிகளில் அந்நாளில் இருந்த யானைகளாகத்தான் இருக்க முடியும். (இன்று அவை அழிந்து விட்டன).

ரஷ்ய மியூசியத்தில் உள்ள அந்தப் பகுதியில் காணப்பட்ட யானை.


இந்த யானைகள் இந்திரசிர மலையில் இருப்பவை என்கிறார் வால்மீகி.
இந்திர சிரம் என்றால் இந்திரனது தலை போன்ற மலை என்று அர்த்தம். ரஷ்யாவின் வடக்கே செல்லச் செல்ல இந்திரனது தேவலோகப் பகுதிகள் உள்ளன என்று முன்னம் கூறினோம். (இனி வரும் பகுதிகளில் அது குறித்த விவரங்களும் வரும்.) எனவே வட ரஷ்யாவின் அபூர்வ யானைகளை பரதனுக்குக்  கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

  • அவற்றுடன் நன்கு பழக்கப்படுத்தப்பட்ட பெரிய நாய்கள், நூற்றுக்கும் மேற்பட்ட தேர்கள், படைகள் போன்றவற்றையும் அனுப்பியிருக்கிறானர்


குதிரைகள், பார வண்டி இழுக்கும் கழுதைகள் போன்றவற்றுக்குக் கூடவே இந்த நாய்கள் பாதுகாப்பாக வருபவை. கஸக்ஸ்தான் போன்ற மத்திய ஐரோப்பா பகுதிகளில் வேட்டை நாயுடன் குதிரை மேலேறிச் செல்வார்கள். அந்த வர்ணனை பரதன் பயணத்தில் நமக்கு நினைவுக்கு வருகிறது.

யானைகள், படைகள் சகிதமாக வரவே அவன் வந்த வழி நல்ல பாதை உள்ள வழியாகத்தான் இருக்க வேண்டும்.
கேகயர்களின் தலை நகரான ராஜகிருகத்தை விட்டுக் கிளம்பியவுடன், பரதன் கிழக்கு நோக்கிச் செல்லும் இரண்டு நதிகளைக் கடந்தான் என்று வால்மீகி கூறுகிறார்.
அமூதர்யா எனபப்டும் சக்‌ஷுஸ் நதிகள் இரண்டினை அவன் கடந்திருக்க வேண்டும்.
அவற்றைக் கடந்து விட்டால், ராஜ பாட்டை போன்ற பாதையில் பயணிக்கலாம்.
சில்க் ரூட் எனப்படும் பாதை ஐரோப்பாவையும், சீனாவையும் இணைப்பது. பரதன் காலத்தில் பாரதத்தை இணைக்கும் விதத்தில் இந்தப் பாதை ஓரளவேனும் இருந்திருக்க வேண்டும்.
உத்தர-குரு வரை சென்று வரும் பழக்கம் இருந்திருக்கவே கேகயம் வழியாகச் செல்லும் வழி சீராக இருந்திருக்க வேண்டும்.
மேலும், யானைகள், படை முதலியவற்றைக் கொண்டு வரவே அந்தப் பாதை நன்கு அமைதிருக்க வேண்டும்.
இதுவே பின்னாளில் சில்க் ரூட் என்று ஆகியிருக்கலாம்.



இந்தப் படம் 2000 வருடங்களுக்கு முன்பிருந்த பாதை.
இதில் டாக்சிலா (Taxila) என்ற இடத்தைப் பாருங்கள்.
இந்த நகரம் தக்‌ஷசீலம் என்று அழைக்கப்பட்டது.
இதை உண்டாக்கியவன் பரதன்.
இந்தப் பகுதியை வென்று இக்ஷ்வாகு ஆட்சிக்குள் கொண்டுவர்மாறு பரதனுடைய மாமன், யுதாஜித் அவனிடம் சொல்லவே இவ்வாறு செய்தான் என்று காளிதாசர் ரகு வம்சத்தில் கூறுகிறார்.
ஏன் யுதாஜித் இவ்வாறு சொல்ல வேண்டும்?
அந்தப் பகுதி கேகயத்துக்கும் பாரதத்துக்கும் இடையே இருந்த பாதையில் இருந்திருக்க வேண்டும்.
படை, வேட்டை நாய்கள் போன்றவற்றை அனுப்பவே, அந்தப் பாதை பாதுகாப்பு இல்லாமல் இருந்திருக்க வேண்டும்.
அங்கு தனது ஆட்சியை அமைத்தால் பாதை பாதுகாப்பாக இருக்கும்.
இந்தப் பாதை மத்திய ஐரோப்பாவை அடைகிறது. அங்கிருந்து வடக்கே இரண்டு நதிகளைக் கடந்தால் கேகய நாடு இருந்தது.


ரஷ்யாவில் கண்டெடுக்கப்பட்ட இடங்கள் கேகயத்துக்கு அருகில் வடக்கில் வருகின்றன.



நீல நிறத்தில் சக்‌ஷுஸ் நதிகள்.
அவற்றுக்கு வடக்கே கேகயம்.
கேகயத்துக்கு வட மேற்கே ஸ்த்ரீ ராஜ்ஜியம்.
வடக்கில் செல்யாபின்ஸ்க் என்ற இடத்தைக் காட்டும் அம்புக் குறி ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட இடங்கள்.
இந்தப் பகுதிகளில், அஸ்வமேத குதிரைகளை அடக்கம் செய்யப்பட்டது போன்ற அமைப்புகள் இருக்கின்றன.
அப்படி பல அமைப்புகள் உள்ளன என்கிறார்கள்.
100 அஸ்வமேத யாகம் செய்துதான் இந்திரன் இந்திர பதவி அடைகிறான். அந்தப் பகுதிகள் தேவ லோகப் பகுதிகளை ஒட்டியவை என்பதையெல்லாம் தொடர்பு படுத்திப் பார்க்காமல் நம்மால் இருக்க முடியவில்லை.


மேலும் அஸ்வபதி போன்ற கேகய மன்னர்கள் யாகங்கள் செய்த அரசர்கள். ராமன் காலத்தில், அதாவது 7000 வருடங்களுக்கு முன்பே அந்தப் பகுதியில் வேத வாழ்க்கை வாழப்பட்டிருக்கிறது.
பாரதத்தின் தொடர்ச்சியாகத்தான் அவர்கள் இருந்திருக்கின்றார்கள்.


ஆராய்ச்சி செய்த இடத்தின் பெயரைப் பாருங்கள்.
அர்க்கைம்.
சூரியனுக்கு அர்க்கா என்று ஒரு பெயர் உண்டு.
அதை ஒட்டி அந்த ஊரின் பெயரும் அமைந்திருக்கிறது.


இந்தப் பகுதி மலைப் பள்ளத்தாக்கில் இரண்டு நதிகள் கூடும் இடத்தில் அமைந்துள்ளது.
நதி சங்கமம் வேத மரபில் சிரப்பு வாய்ந்தது.
அந்த நதிகளின் பெயரைப் பாருங்கள் கரகங்கா, உத்யகங்கா !!
இரண்டு கங்கைகள்!


ராமன் காலத்துக்கு முன்பே கங்கை உண்டாகி விட்டது.
பனி யுகம் முடிந்த காரணத்தால் கங்கோத்திரி உருகி, கங்கை பிறாக்க ஏதுவாயிற்று.
10,000 வருடங்களுக்கு முன் கங்கை தோன்றியிருக்க வேண்டும்.
அந்தக் காலக் கட்டத்தில் ஆரியப் படையெடுப்புவாதிகளின் ஆரியர்கள் இந்தியாவுக்குள் வரவேயில்லை.
இந்தியாவிலும் கங்கை,
அர்க்கைமிலும் கங்கை என்ற பெயர்கள் எப்படி வந்திருக்க முடியும்?

எது எப்படியோ, இன்றைய ரஷ்யர்கள்  அந்த நதிகளைக் கங்கைக்கு இணையாகக் கருதுகிறார்கள். அர்க்கைம் கண்டுபிடிக்கப்படட் பிறகு, மக்களுக்குத் தங்கள் மூதாதையர் யாராக இருக்கக் கூடும் என்ற ஆர்வம்  உண்டாகி இருக்கிறது.
அந்தப் பகுதிகளை வந்து பார்க்கிறார்கள்.
அந்த கங்கையில் குளித்தால் நல்லது என்று நினைக்கிறார்கள்.


மற்றொரு விஷயம். அந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் பேசும் மொழி ‘மோக்‌ஷம்  எனப்படுகிறது.
ரஷ்யாவின் மிகப் பழைமையான மொழி என்று அது சொல்லப்படுகிறது.
இன்று அதைப் பேசும் மக்கள் குறைந்து விட்டார்களாம்.


வோல்கா நதியின் ஒரு கிளை நதியின் பெயரும் ‘மோக்‌ஷா ஆகும்.
வோல்கா நதியே ரஸா என்று அழைக்கப்பட்டது.
அதன் இன்னொரு கிளை நதியின் பெயர், மோக்‌ஷாவை ஒட்டி மோக்ஸ்வா என்று உள்ளது.
இந்த நதிக் கரையில் மாஸ்கோ உள்ளது.
மோக்ஸ்வா என்னும் பெயரால் இந்தப் பெயர்.

மோக்‌ஷா மொழி பேசும் மக்கள் உருவ வழிபாடு செய்பவர்கள்.
இந்திரன், வாயு போன்ற தெய்வங்களை அவர்கள் வழிபடுகின்றனர்.
இப்படி ரஷ்யாவில் வேத மரபுகள் அதிகம்.
அதன் முக்கியக் காரணம், பாரதத்தின் நீட்சியாக ரஷ்யா இருந்திருக்கிறது.
கேகயம், அர்க்கைம் பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் யயாதியின் முன்னோர்கள் வாழ்ந்தனர். அதனால் அந்தப் பகுதிக்கும், பாரதத்துக்கும் இடையே போக்குவரத்து இருந்து வந்திருக்கிறது.
அந்தத் தொடர்பையும் காண்போம்.

13 கருத்துகள்:

  1. மிகச் சிறந்த அறிவுக் கூர்மையான கவனமான கண்டுபிடிப்பு. படிக்கும் போது அங்கங்கே சென்று கண்ணால் காணத் தோன்றுகிறது. மிக்க நன்றி,

    பதிலளிநீக்கு
  2. அது மட்டுமல்ல குதிரைகள் அடக்கம் செய்யப்பட்ட சமாதிகள் பலவும் இருப்பது தெரியவந்துள்ளது. அஸ்வமேத யாகம் என்னும் யாக முறைப்படி செய்யப்படும் பலியில் உள்ள அமைப்பிலேயே குதிரைகள் புதைக்கப்ப்ட்டுள்ள விவரங்கள் தெரிய வந்துள்ளன. -- இதற்கு அர்த்தம் என்ன? வேதியர்கள் பலி கொடுப்பதலில் ஈடு பட்டார்கள் என்று அர்த்தமா?

    பதிலளிநீக்கு
  3. ஒரு காலத்தில் பலி கொடுக்கப்பட்டு அஸ்வமேத யாகம் நடந்தது. வாரஹமிஹிரர் எழுதியுள்ள ப்ருஹத் சம்ஹிதையில் இந்த யாகம் செய்ய்ம் முறை விளக்கப்படுகிறது. அதில் பலி கொடுப்பது பற்றி எந்தக் குறிப்பும் இல்ல. சிம்பாலிக்காக சிறந்த வஸ்துக்களை மட்டுமே ஹோமத்தில் சேர்த்துள்ளார்கள்.

    யாகத்தில் பலி கொடுப்பது பற்றி கபில ரிஷிக்கும், ஸ்யூரஸ்மி என்ற ரிஷிக்கும் நடந்த சம்பாஷணை மஹாபாரதம், சாந்தி பர்வம் 274, 275, 276 அத்தியாயங்களில் வருகிறது. பலி கொடுக்காமல் யாகம் செய்ய வேண்டியதை கபிலர் வலியுறுத்துகிறார்.

    உத்தம பலனுக்கு உத்தம வஸ்துக்கள் பலி கொடுக்கப்பட்டன. மழை, அரசு, நாட்டு மேன்மை போன்ற உலக நிமித்தம் காரணமாக யாக பலிகள் நடந்தன. சுயநலமும், ஆசையும இல்லாத மக்கள் இருந்த அந்த காலத்தில் அவை உயர்வாக இருந்தன. அவற்றால் உலக க்ஷேமமும் விருத்தி ஆயிற்று. தன்னையே பலி கொடுக்க மக்கள் முன் வந்துள்ளனர். அரவான் அப்படி முன் வந்தவன்.

    ”அஹிம்ஸா பரம தர்மம்” என்று சொல்லும் ஹிந்து மதம்,வைதீஹத்துக்காக ஹிம்ஸையை ஒத்துக் கொள்கிறது.”வைதீ ஹிம்ஸா ந ஹிம்ஸா” என்று சொல்வார்கள். வேத காரியத்துக்காக செய்யப்படுவது ஹிம்ஸை அல்ல. விரதம், பட்டினி போன்றவையும் ஹிம்ஸையில் சேர்ந்தது. இதற்கு ஸ்ருதி பிரமாணம் சாந்தோக்கிய உபநிஷத்தின் கடைசி ஸ்லோகத்தில் மட்டுமே உண்டு.


    ஆனால் யாகத்துக்காகக் கூட ஹிம்ஸை கூடாது என்பது கலி மஹா யுகத்தில் விதி உண்டு.
    யாகம், பலி போன்றவற்றைப் புரிந்து கொள்ள கலி யுக மக்களுக்கு சக்தி கிடையாது. உத்தம பலன்களைத் தரும் யாகங்களைச் செய்யும் குணம் வாய்ந்த மக்களும் கலியுகத்தில் கிடையாது. எனவே யாகபலி கலியுகத்தில் செய்யப்படலாகாது.

    பி-கு:-
    கன்ணகியின் கோபத்தால் மதுரை எரிந்து மக்கள் அவதியுற்றனர். அவளது கோபத்தைத் தணிக்க ஒரு சாந்தி ஹோமம் செய்யப்பட்டது. அதில் ஒரே பகல் பொழுதில் 1000 பொற்கொல்லர்கள் பலி கொடுக்கப்பட்டன்ர் என்று சிலப்பதிகாரம் 2 இடங்களில் சொல்கிறது.

    பதிலளிநீக்கு
  4. நல்ல கதை விடறீங்க மக்களே. இந்த கதையாடல்கள் எதுவும் வரலாற்றியலில் எடுபடாது. இந்த சொத்தை கதை எல்லாம் விட்டுவிட்டு முதலில் மனதை நேர்படுத்தி உண்மை வரலாற்றை கற்றுக்கொள்ள உங்களை அனுமதியுங்கள். புத்தரின் மார்பில் கூட ஸ்வஸ்திக சின்னம் இருக்கிறது, அதற்காக கோதம புத்தர் ஆர்ய வர்ணத்தை சார்ந்தவராக மாற்றிவிடுவீர்களா என்ன? ஸ்வஸ்திக் சின்னம் முழுக்க முழுக்க ஹரப்பா நாகரிக மக்களால் சமுக-பொருளாதார மற்றும் வணிக ரீதியாகப் பயன்படுத்தி இருக்க வாய்ப்பிருக்கிறது. ஹாரப்ப பகுதிக்கு தமது கால்நடைகளுடன் வந்த அரை நாடோடி குடிகள் அங்கிருந்து ஒருபுறம் Rhine ஆற்று படுகைக்கும் மறுபுறம் கங்கை ஆற்று படுகைக்கும் கி.மு. பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. பத்தாம் நூற்றாண்டுக்குள் கொண்டு சென்றிருக்க வாய்பிருக்கிறது. மற்றபடி இதை இந்து சமயத்தோடு தொடர்புபடுத்த முயற்சிப்பது வரலாற்று உண்மைக்கு கேடானதாகும்.

    Sakya Mohan
    Pennsylvania

    பதிலளிநீக்கு
  5. Sakya Mohan.

    நீங்கள்தான் இதற்கு வாய்ப்பிருகிறது, அதற்கு வாய்ப்பிருக்கிறது என்று வரலாற்றியல் இல்லாமல் பேசுகிறீர்கள். இதுவரை இங்கு எழுதப்பட்ட எந்த கட்டுரையையும் நீங்கள் படிக்கவில்லை என்று தெரிகிறது. இந்தத் தொடரில் இவ்வாறு இருந்திருக்கலாம் என்ற ரீதியில் எதுவும் எழுதப்படவில்லை. ஆதாரத்தை வைத்துதான் எழுதப்பட்டுள்ளது.


    மேலும்
    >>கோதம புத்தர் ஆர்ய வர்ணத்தை சார்ந்தவராக மாற்றிவிடுவீர்களா என்ன?<<
    என்று கேட்டிருக்கிறிர்கள்.
    இந்த ஒரு வரியிலேயே சிறிதளவும் புத்த்ரைப் பற்றியும், இந்திய வரலாற்றைப் பற்றியும் நீங்கள் அறிந்திருக்கவில்லை என்று தெரிகிறது.
    எப்படி என்கிறீர்களா?

    1) ஆரியம் இரு வர்ணமல்ல.

    2)புத்தர் சொன்ன கருத்துகளின் பெயரே ‘ஆரிய-மார்கம்’ என்பது.

    3) புத்தர் போதித்த தர்மமும், வினயமும், “ஆரியஸ தம்மவினயம்” எனப்பட்டது.

    4) புத்த மத 4 உண்மைகள் ‘சத்வாரி ஆர்ய சத்யம்’ என்றே அழைக்கப்படுகிறது.

    5) பௌத்தர்கள் தங்களை ஆரிய புத்கலர்கள் என்று அழைத்துக் கொண்டார்கள்

    6) பௌத்தம் பரவின இடஙளில் பௌத்தர்கள் தங்களை ஆரியர்கள் என்றே அழைத்துக் கொண்டனர். இலங்கையின் புத்த நூல்களைப் படியுங்கள். தங்களை ஆரியர்கள என்றும், அவர்கள் அமைதி வாழ்வைக் கெடுத்த தமிழ் மன்னர்களை அநாரியர்கள் என்றும் அழைத்துள்ளார்கள்.

    7) புத்த நூல்களில்தான் தஸ்யு பற்றிய குறிப்பு வருகிறது. புத்தர் தான் கண்ட ஆரிய மார்கத்தை ஆரியர், தஸ்யுக்கள், தேவர்கள், கந்தர்வர்கள் என்று அனைத்து மக்களுக்கும் போத்தித்தார் என்று புத்த நூல்கள் கூறுகின்றன.

    இந்தத் தொடரில் தஸ்யூக்கள் எங்கு குடி அமர்ந்தனர் என்று சொல்லப்பட்டதோ (புத்தரின் காலத்துக்கு முன்னால்) அந்த இடங்களில் (காந்தாரம்) தஸ்யூக்கள் இருந்தனர் என்றும் அவர்களுக்கு ஆரிய மார்கம் போதிக்கப்பட்டது என்றும் புத்த நூல்கள் தெரிவிக்கின்றன.

    ஆரியத்துக்கு எதிர்ப்பதம் அநாரியம் என்பதாகும். திராவிடமோ, தஸ்யுவோ அல்ல. இன்னும் இந்தத் தொடர் அந்த முக்கியச் சொற்களைப் பற்றி அலசப்போகிறது.
    தமிழ் நாட்டில் ஆரியம் இருந்திருக்கிறது.
    தமிழர்கள் ஆரியத்தைப் போறிக் கோவில் வைத்தே கும்பிட்டிருக்கின்றனர்.
    ஆரியம் என்ற சொல்லைத் தமிழ்ப் படுத்தி வைத்திருக்கின்றனர்.
    அவற்றை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சொல்லி விட முடியாது. படிபடியாகத்தான் சொல்ல முடியும். அப்படித்தான் இந்தத் தொடர் சென்று கொண்டிருக்கிறது.

    ’நோக்கம்’ கட்டுரையில் சொன்னதைப் போல ஒரு கண்ணோட்டத்தில் இந்தத் தொடர் எழுதப்படவில்லை. பன்முனைக் கண்ணோட்டத்தில் எந்தெந்த கருத்துக்கள் எல்லாம் ஒருசேர வருகின்றனவோ அவற்றை மட்டுமே இங்கு தருகிறேன்.

    கடைசியில் ஒரு வரி சொல்லியுள்ளீர்கள்.
    >>>மற்றபடி இதை இந்து சமயத்தோடு தொடர்புபடுத்த முயற்சிப்பது வரலாற்று உண்மைக்கு கேடானதாகும். <<<

    அழியாதது, அழிக்க இயலாதது என்பதாக இருப்பது ஹிந்து தர்மம். ஹிந்து தர்மம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு பிறகு நீங்கள் அதைப் பற்றி பேசுங்கள்.மேலும் இன்று உலக அளவில் பழைய சரித்திரத்தைப் பற்றி அறிய இதிஹாசங்கள் முக்கியக் கருவிகள் என்னும் எண்ணம் வலுப் பெற்று வருகிறது. முழுக்க முழுக்க மிஷனரி வெறியில், தங்களுக்குப் பிடித்தாற்போல எழுதிவைத்த ஐரோப்பியக் கயவர்களை இன்னும் நம்புவன் தமிழன் என்பதால்தான் இந்தத் தொடரை முதலில் தமிழில் எழுதுகிறேன்.

    ரஷ்யா விஷயத்தையே எடுத்துக் கொண்டால், இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி 2 லட்சம் வருடங்களுக்கு முன்பே அங்கு வளர்ந்த நாகரிகம் இருந்ததற்கு சாத்தியக் கூறுகள் தெரிகின்றன என்று ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த முடிவுகள் வெளிவர இன்னும் 20 முதல் 50 வருடங்கள் ஆகலாம்.
    இந்தத் தொடரில் நான் கடந்த ஒரு லட்சம் வருடஙகளில் நடந்த மக்கள் இடப்பெயர்வு பற்றி மட்டுமே சொல்லப்போகிறேன். மேலே எழுதியது போல, பன்முனைக் கண்ணோட்டத்தில் இந்தக் காலக்கட்டம் மட்டுமே இப்பொழுது சாத்தியம்.

    அதற்கு முன்பான மனித சரித்திரம் வட துருவத்தில் ஆரம்பித்தது என்று 2 லட்சம் கணக்கு தெரிவிக்கிறது. எந்த ஹிந்து மதக் கதைகளை வெறுக்கிறீர்களோ அவை சொல்லும் பூர்வ கதை, துருவப் பகுதியில், சிவன் இருந்தான் என்பது. அதற்குப் பிறகுதான் அவர் கைலாசத்துக்கு (இமய மலை) வந்தார் என்பது.

    இன்றைக்கு விண்கலம் மூலம் பூமியை ஊடுருவி ஆராய்கிறார்கள். அதன்படி 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ந்த மானுடத்தின் சுவடுகள் தெரிய வந்துள்ளன. இந்தத் தொடரைப் படியுங்கள். அவை பற்றியும் வரும்.

    பதிலளிநீக்கு
  6. புத்தரைப் பற்றி இன்னொரு விஷயம்.
    புத்தர் விஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒன்று. அவர் 9 - ஆவது அவதாரம். இப்படிக் கூறும் மஹாபாரத ஆதாரங்கள் உண்டு. ஜெயதேவரின் அஷ்டபதியும் இப்படித்தான் சொல்கிறது. சமீப காலத்திய அண்ணமாச்சரியார் பாடலிலும் இப்படித்தான் வந்துள்ளது. ஆங்கிலேயன் நமது சரித்திரத்தை எழுதுகிறேன் என்று வந்ததற்கு முன் வரை இப்படித்தான் எல்லா மக்களும் சொல்லி வந்தனர். ஆங்கிலேயன் பௌத்ததை வேறு மதமாகப் பார்த்தான். அவன் சொன்னதை நம்பி இன்று புத்தரைப் பிரித்துவிட்டார்கள்.

    புத்தரையும் சேர்த்து 10 அவதாரங்களையும் ஒரிசா மாநிலம் ஸ்டாம்ப் வெளியிட்டுள்ளது.
    இதைப் பற்றி எனது கட்டுரை:-

    http://jayasreesaranathan.blogspot.com/2009/08/without-krishna-there-is-no-jayadeva_09.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Dear mam,

      Then what about christna? If it was explained in forth coming articles from here no problem. If not kindly explain mam. Thanks in advance.

      Regards
      Kalidasan

      நீக்கு
  7. Fitting Reply. I wish more such bootlickers Macaulay come her and get their fare share.

    "ஆராய்ச்சி செய்த இடத்தின் பெயரைப் பாருங்கள்.
    ’அர்க்கைம்.’
    சூரியனுக்கு அர்க்கா என்று ஒரு பெயர் உண்டு."

    This also reminds me of the term argyam which is an offering to the sun as part of Sandhya vandanam and homams. Wonder if it may have anything to do with this.

    பதிலளிநீக்கு
  8. My recent post in English on Vedic connection to Russia:-

    http://jayasreesaranathan.blogspot.com/2011/12/why-ban-gita-when-russia-has-vedic-past.html

    பதிலளிநீக்கு
  9. In http://en.wikipedia.org/wiki/Woolly_mammoth#Distribution_and_habitat it is stated that "DNA studies have helped determine the phylogeography of the woolly mammoth. A 2008 DNA study showed there were two distinct groups of woolly mammoths: one which went extinct 45,000 years ago and a different one which went extinct 12,000 years ago."
    Then how it is possible to present these elephants to Bharatha, Rama's brother, some 7000 years ago?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Woolly mammoths had been there in northern latitudes and the tentative time of its extinction was 10,000 yrs BP. Ramayana happened in 7000 yrs BP. In the in between period, some elephants of "Uttama" quality had existed there. (that is how Valmiki Ramayana says -"Hathyuuththamam" VR 2-70-19). Since Mammoth closing period comes before that, I wrote it could have been some sort of high variety - like Mammoth or the later versions of it.

      In fact the elephant history is also told in Hindu Epics. I have written that towards the end of 112 nd article and in its comment section. An understanding of that article can not happen without reading my English article here:-

      http://jayasreesaranathan.blogspot.in/2013/03/the-chinese-of-40000-yrs-bp-were-common.html

      This article has been peer-reviewed and accepted by researchers of Mu who have included me as their guest writers in their website.

      ****

      The so-far deciphered history of Woolly Mammoth is that there was an earlier African version from which European and Chinese version evolved. The European version further moved north with solar radiation becoming suitable for the habitat.

      In article 112 of the current series, there comes details of the animals that evolved in the south of the equator deduced from Mathali- Narada dialogue in Mahabharata (5-99). There Iravadam elephants are mentioned. There it is also told that Iravadham was the former evolved variety and then evolved other 3 varieties. This goes well with scientific finding that the first elephants evolved in the South - though it says in Africa as per our currently available info
      - the Mahabharata info on south seas (of which most places are gone now)must be Indonesia or Sundaland.

      From there the Iravadham had moved to North via China (which the wiki article has identified) and Burma. Iravadham elephant and Iravathy river are there in Burma, Burma's earlier name was Indra dweepa - Iravadham was Indra's elephant. The movement to further North had happened through this route upto Siberia when solar radiation was available at that time. (Read my English article quoted above)

      Another route for the elephants is from Africa to Europe to Northern most regions. In that region Indra Shira mountain is there according to Ramayana. As Indra is always identified with the best quality elephant, I infer that the woolly mammoth fits in that description.

      Indra stands for growth of people / population. If he is always identified with elephant, then it means man and elephant had co-existed whenever population had increased and lived in organised societies. I say organised societies, because elephant is an important ashta mangala symbol of kings.

      நீக்கு
    2. Check the spelling - it is Hasthyuuththamam not "Hathyuuththamam" / Hasthi- utthamam हस्ति उत्तमामः

      நீக்கு
    3. அன்பு ஜெயஸ்ரீ அம்மையார் அவர்களே!

      மம்மோத் என்பதை திரும்ப திரும்பக் கூறிப் பார்த்தால் உத்தமம் என்று வருகிறது. உத்தமம் என்பதை திருப்பிப் போட்டால் மம்மோத் என்று வருகிறது.

      "Utthamam - Mamahttu". ஆச்சர்யகரமான தகவல்களளித்தீர்கள். மிக்க நன்றி!

      நீக்கு