திங்கள், 7 நவம்பர், 2011

81. மருதனிள நாகனாரும், மொஹஞ்சதாரோவும்.




மொஹஞ்சதாரோவின் முக்கிய அமைப்புGreat Bath  எனப்படும்,
அது ஒரு குளியல் குளமாக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.
அந்த அமைப்பை இந்தப் படத்தில் காணலாம்.



12 மீட்டர் நீளமும், 7 மீட்டர் அகலமும், 2.4 மீட்டர் ஆழமும் உள்ள
இந்த அமைப்பின் பக்கவாட்டில் அறைகள் இருக்கின்றன.
இந்த குளம் போன்ற அமைப்புக்கும்,
மொஹஞ்சதாரோ என்ற பெயருக்கும் உள்ள ஒற்றுமையைக் காண்போம்.


குளம் அல்லது ஆறு, அதற்குப் பக்கத்தில் ஒரு மரம்,
அந்த மரத்தில் மோஹனனான கிருஷ்ணன்
இந்த மூன்று பாத்திரங்களும்
கிருஷ்ணன் காலம் தொடங்கி வழி வழியாகப் பேசப்பட்டு வருவன.
ஒரு சமயம்  
கோபிகைகள் யமுனை நதியில் குளித்துக் கொண்டிருக்கும் போது,
அவர்கள் ஆடையை இழந்து விடுவதாகவும்,
அவர்களது மானத்தைக் காப்பாற்ற கிருஷ்ணன்
அருகிலிருந்த மரத்தின் கிளைகளைத் தழைத்துக் கொடுத்ததாகவும்
கதை உண்டு.


இந்தக் கதையில்
கிருஷ்ணனே கோபிகைகளது உடையை மறைத்து வைத்ததாகவும்
சொல்வது உண்டு.
அப்பொழுது அங்கு பலராமன் வந்துவிடவே,
கோபிகைகளது மானத்தை மறைக்க
தான் அமர்ந்திருந்த மரத்தின் கிளைகளைத் தாழ்த்தி
அவர்கள் தங்களை மறைத்துக் கொள்ள உதவினான் என்று கதை இருக்கிறது.


ஆனால் இந்த விவரங்கள் வட மொழி நூல்களில் இல்லை.
கிருஷ்ண சரிதத்தைக் கூறும்
விஷ்ணு புராணம், பாகவத புராணம் போன்ற நூல்களில்
இந்தச் சம்பவம் சொல்லப்படவில்லை.

ஆனால் இந்தக் கதையும்,
இதைப் போல கிருஷ்ணன்
கோபிகைகளுடன் ராசலீலையில் ஈடுபடுவது போன்ற கதைகளும்
கிருஷ்ண பக்தியைப் பரப்பும் நோக்கத்துடன்
கி.பி. 15 ஆம் நூற்றாண்டுக்கு மேல்தான் சொல்லப்பட்டன


சமஸ்க்ருத நூல்களில் காணப்படாத இந்த விவரம்,
பிற்கால நூல்களில் மட்டுமே சொல்லப்பட்ட இந்த விவரம்,
அகநானூறில் காணப்படுகிறது என்பது ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.
அதிலும், கிருஷ்ணன் வேண்டுமென்றே உடைகளை மறைத்தான்
என்று அகநானுறு சொல்லவில்லை.


மதுரை மருதன் இளநாகனார் அவர்கள் எழுதியுள்ள பாடலில்
யமுனை ஆற்றங்கரையில் நடந்த அந்தக் கதையை நினைவு கூர்கிறார்.


”… வடாஅது
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை,
அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர்
மரம் செல மிதித்த மாஅல் போல..” (அகநானுறு 59).


இதன் பொருள்:-
வட திசையில் உள்ள நீர் வளம் குன்றாத யமுனை ஆற்றின்,
மணலை உடைய அகன்ற துறையில் நீராடிய ஆயர் மகளிர்,
குளிர்ச்சி பொருந்திய தழையை உடுத்துக் கொள்வதற்காக
குருந்த மரக் கிளை வளையுமாறு அதனை மிதித்த கண்ணன் போல..” 




இங்கே கோபிகைகளது உடையை,
கிருஷ்ணன் ஒளித்து வைத்ததாகச் சொல்லவில்லை
என்பது கவனிக்கத்தக்கது

கோபிகைகள் தங்கள் உடைகளை ஆற்று நீர்ப் போக்கினால் இழந்திருக்கலாம்.
அதனால் தவித்த அவர்களைக் காப்பாற்ற,
கிருஷ்ணன் அருகிலிருந்த மரத்திலேறி அதன் கிளைகளைத் தாழ்த்த,
அதைப் பறித்து அவர்கள் தங்களை மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி ஒரு காட்சியைத்தான் அகநானூறு விவரிக்கிறது


குருந்த மரம் என்பது ஒருவித எலுமிச்சை மரம்.
அது எப்படி இருக்கும் என்பதை இந்தப் படத்தில் காணலாம்.




இந்த மரத்தில் கிருஷ்ணன் ஒளிந்து கொண்டான் என்றால்
அவன் கோபிகைகள் கண்ணில் படாமல் இருந்திருக்க முடியாது.
இந்த மரத்தின் தழைகளும் சிறியவை.
அவற்றால் ஒருவர் தன்னை மறைத்துக் கொள்ளவும் முடியாது

ஆனால் கிளைகளை ஒடித்து அவர்கள் தங்களை மறைத்துக் கொண்டிருக்க முடியும்.

ஆனால் அந்தச் செயலை,
பலராமன் வந்து விட்டான் என்பதற்காக
அவசர அவசரமாகச் செய்திருக்க முடியாது.
இதனால் இந்தச் சங்கப்பாடல் கூறுவது போல
கிருஷ்ணன் ஆபத்துக்கு உதவியாக,
மரக் கிளையைத் தழைத்திருக்கிறான்.
அவரவர்கள், அதைப் பிடித்து, கிளைகளை உடைத்து எடுத்துக் கொண்டு
அவற்றால் தங்களை மறைத்துக் கொண்டிருக்கின்றனர்.


எங்கோ யமுனைக் கரையில் நடந்த இந்த சம்பவம்
மதுரை இள நாகனார் வாயில் வருகிறதே அது எப்படி?

நேரில் கண்டது போல விவரிக்கிறாரே அது எப்படி?

அவர் நேரில் காணவில்லை என்றாலும்,
அந்தச் சம்பவத்தை அறிந்தவர் யாரோ சொல்லியிருக்கிறார்களே, அவர்கள் யார்?

அவர்களுக்குத் தெரிந்த இந்தச் சம்பவம்
கிருஷ்ணன் வாழ்க்கையை விவரிக்கும்
எந்த வடமொழி நூலிலும் சொல்லப்படவில்லையே,
அது எப்படி?

ஆனால் இந்தச் சம்பவமே நடக்கவில்லை என்றும் சொல்ல முடியாதவாறு,
15 நூற்றாண்டுக்குப் பிறகு இந்தக் கதை மெருகூட்டப்பட்டு.
வட இந்தியாவில் வழங்கப்பட்டிருப்பதால்,
என்றைக்கோ அகநானூறு விவரித்த சம்பவம்
உண்மையானது என்றுதானே சொல்ல முடியும்?


கிருஷ்ணன் காலத்திலேயே, வட மதுரை மக்கள்
பாண்டிய நாட்டில் குடியேறியிருந்தால்தான்,
கிருஷ்ணனுடன் அனுபவித்த ஒரு சம்பவத்தை,
உருக்குலைக்காமல் அப்படியே வழி வழியாகச் சொல்லி வந்திருக்க முடியும்.
அல்லது கிருஷ்ணன் வாழ்ந்த இடங்களுடன் தொடர்பு கொண்ட மக்கள்
தமிழ் நாட்டில் குடியமர்ந்திருந்தால்தான்,
அவர்கள் வாயிலாக வழிவழியாகச் சொல்லப்பட்டு
மதுரை இள நாகனார் போன்ற ஒரு புலவர் வாயிலாக
வெளிப்பட்டிருக்க முடியும்.


இங்கு இன்னொரு விவரத்தையும் பொருத்திப் பார்க்கலாம்.
இந்தப் பாடலை இயற்றிய மதுரை மருத இளநாகனார் அவர்கள் எழுதிய
இன்னொரு அகநானூறுப் பாடலை ஆராய்ந்துள்ளார்கள்.


அந்த ஆராய்ச்சியின் அடிப்படையில்,
இந்தப் புலவர் சிந்து சமவெளியுடன் தொடர்பு கொண்டவர் என்றும்,
அது மட்டுமல்லாமல்,
ஈரான், அரேபியா போன்ற பகுதிகளில் பரவியிருந்த திராவிடர்களே
தமிழ் நாட்டில் குடியேறியவர்கள் என்றும்
இவரது பாடல் தெரிவிக்கிறது என்றும் சொல்கிறார்கள்.  


அந்தப் பாடல் அகநானூறு 245 ஆம் பாடலாகும்.
அதில் தலைவியை விட்டுப் பிரிந்து தலைவன் சென்ற வழி சொல்லப்படுகிறது.
அந்த வர்ணனையில் ஒரு பாலை நிலம் விவரிக்கப்படுகிறது.
அந்தப் பாலை நிலத்தில் உள்ள ஒட்டகமானது பசி மிகுதியால்,
பாறையினூடே காய்ந்து கிடக்கும்
சுள்ளி போன்ற வெள்ளை நிற எலும்புகளைத் தின்று
தன் பசியைப் போக்கிக் கொண்டது என்று சொல்லப்பட்டுள்ளது.





ஆங்கண்
குறும்பொறை யுணங்குந் ததர்வெள் என்பு
கடுங்கால் ஒட்டகத் தல்குபசி தீர்க்கும்” (-நா-245)

ஒட்டகங்கள் பாலை நிலத்தில் இருக்கும்.
ஆனால் அவை வழிப் பயணத்தில் சோர்ந்து,
உண்ண எதுவும் கிடைக்காமல்,
பாறைகளுக்கிடையே சிக்கி
என்றைக்கோ இறந்து போன ஒரு மிருகத்தைப்
பிற மிருகங்கள் தின்ற பிறகு, எலும்பு மட்டுமே மிச்சமாகி,
அந்த எலும்பும் சுள்ளி போலக் காய்ந்து கிடக்க,
அதைத் தின்கிறது என்றால்
அப்படிப்பட்ட கொடுமையான பாலைவனம் எங்கு உள்ளது?

புலவர் எந்தப் பாலைவனத்தைப் பற்றிப் பேசுகிறார்?

அவர் நேரில் பார்த்தது போல விவரிக்கிறாரே,
அவர் அந்தப் பாலைநிலப் பகுதியிலிருந்து வந்தவரா
என்று கேட்கும் ஆராய்ச்சியாளர்கள்,
அப்படிப்பட்ட பாலைவனம் ஈரான் போன்ற அரேபிய நாடுகளில் உள்ளது.
அங்கிருந்து வந்தவர்களால்தான் இப்படி ஒரு வர்ணனையைத் தர முடியும்
என்ற நோக்கில்
மருத இள நாகனாரை ஒரு திராவிடக்காரராகப் பார்க்கிறார்கள்.



இந்த வர்ணனையின் காரணமாக,
மருத இள நாகனார் சிந்து சமவெளிக்காரர் ஆகிறார் என்றால்,
தொழுனை ஆற்றங்கரையில் கிருஷணன் செய்த செயலை
59 ஆம் பாடலில் விவரிக்கிறாரே அதன் அடிப்படையில்,
அவர் வட மதுரைக்காரர் என்று சொல்லலாம் அல்லவா?


கிருஷ்ணனுடனான அனுபவத்தைச் சொல்வதால்
அவர் கிருஷ்ணாவதார காலத்தில் இருந்தவர் என்று நான் சொல்ல வரவில்லை.

ஆனால், சிந்து சமவெளி எங்குள்ளதோ,
எந்த இடங்களில் சிந்து சமவெளி நாகரிகச் சின்னங்கள் காணப்படுகின்றனவோ,
அந்தப் பகுதிகளுக்கான வர்ணனையில்
கிருஷ்ணனும் வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியென்றால் அந்த நாகரிகம் யாருடைய நாகரிகம்?


பாலை நில ஒட்டக வர்ணனையில் ஒரு முக்கிய விவரம் இருக்கிறது.
புலவர் சொல்லும் ஒட்டகத்தைக் காண அரேபியப் பகுதிக்குச் செல்ல வேண்டாம்.
சிந்து சமவெளிப் பகுதிகள் விரிந்து கிடக்கும் ராஜஸ்தானத்தில் பாலை நிலம் உள்ளது.

அந்தப் பகுதிகளில் ஒட்டகங்களும், நெருப்புக் கோழிகளும்
25,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வந்தன என்று காட்டும் வண்ணம்
புதைபொருள் ஆராய்ச்சியில் அவற்றின் முட்டைகள் கிடைத்துள்ளன.

இவற்றின் சமஸ்க்ருதப் பெயருக்கும்,
பெர்சிய (பழைய ஈரான்) மொழிப் பெயருக்கும் ஒற்றுமை இருக்கிறது
என்று மொழியியலார் சுட்டிக் காட்டுகிறார்கள்.
ஆனால் இந்தப் புதை பொருள் ஆராய்ச்சிகள் மூலம்,
அந்த விலங்குகள் இந்தியாவிலேயே இருந்தன என்று தெரிகிறது.
அதனால் இந்தியாவில்தான்,
அவற்றின் பெயர்களது மூலம் இருந்திருக்க முடியும். 


அது மட்டுமல்ல, இந்திய ஜோதிட சாஸ்திரத்தில்,
வருஷ பலனைக் கணிக்க
நவ நாயகர்கள்,
அவர்களுக்கு உப-நாயகர்கள் என்ற முறைகள் உள்ளன.
உப-நாயகர்களில் மிருக அடையாளங்கள் உள்ளன.
அவற்றில் ஒரு மிருகம் ஒட்டகமாகும்.
ஒரு வருடத்தில் உற்பத்தியாகும் தானியங்களின் அளவைக் காட்டும்
தானியாதிபதியின் உப-நாயகன்,
ஒட்டகம் என்னும் பெயரில் வழங்கி வருகிறது. 


அரேபியாவிலும், சுமேரியாவிலும்,
ஒட்டகத்தைக் கொண்டு பலன் சொல்லும் ஜோதிடம் இல்லை.
ஆனால் இந்தியாவில் தான் இருக்கிறது.
இந்தியாவுக்கே உரித்தான ஒரு மிருகமாக ஒட்டகம் இருந்திருந்தால்தான்
இது சாத்தியம்.



ஒட்டகத்தைப் பற்றிய ஒரு கதையும் மஹாபாரதத்தில் வருகிறது.

சாந்தி பர்வத்தில் பீஷ்மர் அதை யுதிஷ்டிரரிடம் சொல்கிறார் (சா-பர்- 101)
ஒட்டகம் ஏன் சோம்பேறித்தனமாக இருக்கிறது என்பதை விளக்கும் கதை அது.
ஒட்டகம் நிதானமாக நடப்பதால்,
அதற்குக் காரணம் என்று ஒரு கதையைச் சொல்லி,
அந்தக் கதையின் மூலம்,
ஒருவன் சோம்பலுடன் இருக்கக்கூடாது என்கிறார் பீஷ்மர்.  

இந்த காரணங்களினால், ஈரான், அரேபியப் பகுதிகளில் இருந்துதான்
இந்தியாவுக்கு ஒட்டகம் வந்தது என்றும்,
அதைக் கொண்டு வந்தவன்
திராவிடன் என்றும் தொடர்புபடுத்த முடியாது


அகநானூறுப் பாடல், மற்றும் பிற பாடல்கள் மூலம்,
அன்றைய தமிழ் மக்கள் ராஜஸ்தான் பாலைவனத்தைத் தாண்டிச் சென்று
வாணிபம் செய்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்


இனி இந்தக் கட்டுரையின் மூலக் கருத்துக்கு வருவோம்.
யமுனை ஆற்றங்கரையிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்த மக்கள்
கிருஷ்ணன் - மரம் தொடர்புடைய சம்பவத்தை
மறக்காமல் இருந்து சொல்லி வந்திருக்கிறார்கள் என்பது,
மருத இளனாகனார் பாடல் மூலம் தெரிகிறது

அப்படியென்றால்
அதே மதுராவைச் சேர்ந்த மக்கள் சிந்து நதிக் கரையில் குடியமர்ந்திருந்தால்
அதை மறக்காமல் இருந்திருப்பார்கள் அல்லவா?


தொழுனை ஆற்றங்கரைச் சம்பவத்தைப் பற்றிப் பேசும்
இந்த அகநானூற்றுப் பாடல் ஆயர் வாழ்க்கையைக் கூறும்
முல்லை நிலப்பாடல் அல்ல.
இது பாலை நிலப்பாடல்.
ஆனால் மதுரையைச் சேர்ந்த புலவரால் பாடப்பட்டிருக்கிறது.
மதுரைப் பகுதியில் பாண்டையா என்னும் தனது மகளுக்கு உதவ,
தன் நாடான வடமதுரையைச் சேர்ந்த மக்களைக்
கிருஷ்ணன் குடியேற்றியது உண்மையாக இருந்திருந்தால் மட்டுமே,
அந்த ஆயர்கள் கொண்டு வந்த நினைவுகள்,
மதுரைக்காரர்கள் மத்தியில் தங்கியிருக்க முடியும்.


அது மட்டுமல்ல. சங்கப் பாடல் இயற்றிய சாண்டில்யர் பெயரில்
கிருஷ்ணன் குடும்பத்துடன் தொடர்பு கொண்ட சாண்டில்ய முனிவரைப் பற்றி
முந்தின கட்டுரையில் பார்த்தோம். 

கிருஷ்ணனும், அவன் நாட்டு ஆயர்களும்
தமிழ் நாட்டுக்கு வந்திருக்கையில்,
அவனது குடும்ப குருவான
சாண்டில்யர் ஏன் வந்திருக்க முடியாது?

அதிலும் அவர் சிவ பக்தர்.
புலவர்கள் தமிழ்ச் சங்கத்தில் பாடல் அரங்கேற்றினதற்கு முதல் காரணமே,
இறையனார் எனப்படும் தென்னாட்டுடைய சிவன்
தன்னுடைய சங்கத் தோடு அணிந்த காதினால்,
பாடல்களைக் கேட்பான் என்பதே என்று பார்த்தோம் (பகுதி 43, 65)

அதற்காக வால்மீகி முதலாக பல முனிவர்களும்
சங்கத்தில் பாடல் அரங்கேற்றிடிருக்கிறார்கள்.  
கடம்பனூர்ச் சாண்டில்யரும் அப்படிப் பாடிய சாண்டில்ய முனிவராக இருக்கலாம்.
கிருஷ்ணனைச் சேர்ந்த பக்கள், மதுரையில் குடியேறி இருக்கின்றனர்.
கிருஷ்ணனை நன்கு அறிந்த முனிவர் தமிழில் பாடல் எழுதியுள்ளார்.
அவர்கள் மூலம் கிருஷ்ணனது வாழ்க்கைச் சம்பவங்கள்
தமிழ் நாட்டில் பரவியிருக்கின்றன.


தமிழ் நாட்டில் இது சாத்தியமாகும்போது,
கிருஷ்ணன் வாழ்ந்த மதுரா, துவாரகா போன்ற இடங்களுக்கு அருகில் இருந்த
மொஹஞ்சதாரோவில் இது ஏன் சாத்தியமாக இருக்க முடியாது?

அந்த மோஹனனது நினைவைத் தாங்கிய ஒரு சமுதாயம்
அவன் நினைவிலும்,
தங்கள் குல வழக்கத்தின் காரணமாகவும்,
ஏறு தழுவும் சின்னத்தை வடித்திருக்க முடியும்.
அந்த மோஹனன் மரத்தைப் பிளந்த லீலையை வடித்திருக்க முடியும்.

அந்த மோஹனனது நினைவில் குளியல் குளம் அமைத்து
அதன் அருகிலும் அவன் ஏறிய குருந்தை மரத்தை நட்டிருக்க வேண்டும்.

அந்த நினைவில் மோஹனஸ்ய தரு என்றும் அந்த இடத்தைக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
அதுவே மோஹஞ்சதாரோ என்றாகி இருக்க வேண்டும்.


இந்த வரைபடத்தைக் க்ளிக் செய்து பெரிதாக்கிப் பாருங்கள்.




சிந்து நதிக்கரையில் மொஹஞ்சதாரோ இருப்பதைக் காணலாம்.

அதற்குத் தென் கிழக்கில் சன்னு தாரோ என்னும் இடத்தையும் காணாலாம்.
இங்கும் மொஹஞ்சதாரோ கால நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சன்ன (छन्न) என்னும் சமஸ்க்ருதச் சொல்லுக்குமறைக்கும் என்று பொருள்.
சன்ன தாரோ என்றால் மறைக்கும் மரம் என்பது பொருள்

ஏன் இப்படி மரத்தையும், மறைப்பையும் வைத்து
அந்தப் பகுதியில் பெயர்கள் எழுந்துள்ளன


இதே படத்தில் மதுரா இருக்கும் இடத்தையும் பாருங்கள்.
மதுராவிலிருந்து மறைக்கும் மரத்தின் கதை
தமிழ் நாட்டு மதுரை வரை வந்திருக்கிறது.
அந்த வட மதுரா நகர மக்கள்,
கிருஷ்ணனைப் பின் தொடர்ந்து, துவாரகை சென்று குடியேறியிருக்கிறார்கள்.
(துவாரகையின் இருப்பிடத்தையும் படத்தில் காணலாம்.)
அருகில் உள்ள மொஹஞ்சதாரோவுக்குச் செல்ல எவ்வளவு நாள் ஆகியிருக்கும்?


கிருஷ்ணன் கதையை அறிந்தவர்கள்,
கிருஷ்ணாவதாரத்துக்குப் பின் வந்தவர்கள் அங்கு இருந்திருக்க முடியும்.
சிந்து சமவெளி நாகரிகம் என்பதே கிருஷ்ணாவதாரத்துக்குப் பின்,
அதாவது மஹாபாரத்த்துக்குப் பின் எழுந்த நாகரிகமாகும்
என்பதற்கு மொஞ்சதாரோவே ஒரு சாட்சி.

பிற சாட்சிகளைப் பார்ப்பதற்கு முன்னால்,
மேலே காட்டப்பட்டுள்ள படத்தில் உள்ள
பிற இடங்களையும் ஒரு நோட்டம் விடுவோம்


படத்தின் மேல் புறம் இடது பக்கமாகரெஹ்மான் டேரி
என்னும் ஒரு இடம் பார்க்கிறோம்.
இது மொஹஞ்சதாரோவுக்கும் முன்பே இருந்த இடம்
என்று ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது.
ஆனால் தொல்பொருள்கள் அதிகம் கிடைக்கவில்லை.

மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வருவதால் கிடைக்காமல் இருக்கலாம்.
இதன் அருகே டேரா இஸ்மாயில் கான்என்ற ஒரு இடம் உள்ளது.
இவை இரண்டும் முஸ்லீம் பெயர்களில் இருந்தாலும்,
இவற்றின் பெயர்களில் உள்ள
டேரி’, ‘டேரா என்பவை
கிருஷ்ணன் வாழ்ந்த துவாரகை இருக்கும் பகுதியில் வழங்கி வரும்
குஜராத்திய மொழியில்
கோயில்என்ப் பொருள் படும்.


இன்றைக்கும் குஜராத்தில் சிறிய கோயில்களைடேரி என்கிறார்கள்.
வடிவில் பெரிய கோயில்களைடேரா என்கிறார்கள்.

இதனால் ரெஹ்மான் டேரியும், டேரா இஸ்மாயில் கான் என்னும் இடமும்
முதலில் ஹிந்துக் கடவுளர்களைக் கொண்டதாக இருந்திருக்கிறது,
முஸ்லீம் ஆக்கிரமிக்குப் பிறகு, கோயில் அழிந்து விட்டது,
ஆனால் பெயரில் இருந்த டேரி, டேரா தங்கி விட்டது

ஒரு ஊரின் பெயர், 
அங்கிருக்கும் முக்கியக் கோயில்
அல்லது அங்கு குடிகொண்ட தெய்வத்தின் பெயரால் அமைவது என்பதை,
இந்தியாவின் எந்தப் பக்கத்தில் திரும்பினாலும் பார்க்கலாம்.
அப்படி உண்டான
மேலே சொன்ன இரு இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொண்டால்,
அங்கிருந்த கோயில்களது அடையாளம் நிச்சயம் கிடைக்கும்.
அங்கிருந்த மக்களும் வேத மரபினராக இருந்தானர் என்பதும் புலனாகும்.


மேலே கொடுத்த படத்தின் வலது பக்கத்தைப் பாருங்கள்.
அங்கு ஹரியானா மானிலம் இருக்கிறது.

அங்குதான் மஹாபாரதப் போர் நடந்த குருக்ஷேத்திரம் இருக்கிறது.
கிருஷ்ணனது சரித்திரத்திலேயே,
அவன் பார்த்தனுக்குத் தேர் ஓட்டியதுதான் பெரிதாகப் பேசப்படுகிறது.
ஹரியானா என்ற சொல்லுக்கு
ஹரியின் யானம், அதாவது ஹரியின் ஊர்தி (வாகனம்) என்பதே பொருள்!


அடுத்து காலிபங்கம் என்னும் இட்த்தைப் பாருங்கள்.
இங்கும் சிந்து சமவெளி நாகரீகச் சின்னங்கள் பல கிடைத்துள்ளன.
இந்த இடம் கி.மு.2500 க்கும் முற்பட்ட்தென்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து.
இங்கு வேத முறைப்படி யாகங்கள் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது
என்றும் ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது.
இந்த இடம் சரஸ்வதி நதியின் தென் கரையில் அமைந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


காலிபங்க் என்னும் இந்த இடத்தின் பெயரை
எப்படியெல்லாமோ பொருள் காணப்பார்க்கிறார்கள்.
ஆனால் அந்தப் பெயரே வெளிப்படையான சமஸ்க்ருதச் சொல்.
காலி என்றால் இருள்.
பங்கம் என்றால் நீக்குதல்.
காலிபங்க் என்றால் இருட்டை நீக்குதல்
அல்லது இருட்டை நீக்கும் இடம் என்பது பொருள்.
அந்த இடம் ஒரு யாக சாலையாக இருக்கலாம்.
சரஸ்வதி நதிக்கரையில் இருப்பதால்
அங்கு வேத காரியங்களுக்கு நிச்சயம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.


சிந்து சமவெளி நாகரிகம் என்று சொல்லப்படும் இடங்கள் எல்லாவற்றிலுமே
கிருஷ்ணாவதாரம் அல்லது
வேத மத மரபுகளுடன் தொடர்பு கொண்ட
அமைப்புகளையும், பெயர்களையும் பார்க்கிறோம்.
மொஹஞ்சதாரோவைப் போன்ற
முக்கியத்துவம் பெற்ற ஹரப்பா என்னும் இடத்தை
மேலேயுள்ள படத்தில் பாருங்கள்.


இங்கு பல தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.
இந்த இடம் சிந்து நதியின் கிளை நதியான ராவியின் கரையில் அமைந்துள்ளது.
இதன் பெயர்க் காரணத்தைப் பற்றி ஒரு முடிவும் இன்னும் கிடைக்கவில்லை.
ஆனால் மஹாபாரதத்தில் ஒரு க்ளூ இருக்கிறது.


இந்த இடம் இருக்கும் ராவி நதியை, மஹாபாரத காலத்தில்,
இராவதி அல்லது ஐராவதி என்று அழைத்து வந்தார்கள்.
இராவதி என்பது ராவி என்றாகி இருக்கிறது.
மஹாபாரதம், கர்ண பர்வத்தின் 44 ஆவது அத்தியாயத்தில்
இந்த நதியைக் கடந்ததும் வரும் ஒரு நாட்டைப் பற்றிய குறிப்பு வருகிறது.
அங்கு மாத்ரகர்கள் என்பவர்கள் வசித்து வந்தனர்.


மஹாபாரத்த்தில் பாண்டவர்களில் கடைசி இருவரான
நகுலன், சகாதேவன் என்பவர்களது தாயான மாத்ரி என்பவள்
இந்த நாட்டைச் சேர்ந்தவள்.
யுதிஷ்டிர்ர் ராஜசூய யாகம் செய்த பொழுது,
நகுலன் மேற்குப் பகுதி நாடுகளுக்கு வருகிறான்.
அப்பொழுது இந்த மாத்ர நாட்டுக்கும் வருகிறான்.
அந்தப் பகுதியில் இருந்த ஹரஹூனர்கள்’,
ரமதர்கள்ஆகியோரை வெல்கிறான். (சபா பர்வம் – 31)

ஹூனர்கள் என்பவர்கள் கி.பி 4 – 5 ஆம் நூற்றாண்டுகளில்
இந்தியாவின் மீது படையெடுத்தார்கள்.
ஆனால் இந்த ஹரஹூனர்கள் என்பவர்களை, இராவதி நதியை அடுத்த பகுதிகளில்
நகுலன் வெல்கிறான் என்பது
மஹாபாரதக் காலமான 5000 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்டுள்ளது.
ஹரஹூன என்னும் பெயர்த் தொடர்பால் ஹரப்பா
என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்



மேலும் ஹரஹூனர்களை வென்ற பிறகு நகுலன்,
கிருஷ்ணனுக்குச் செய்தி அனுப்புகிறான் என்று மஹாபாரதம் சொல்கிறது.
அதை ஏற்று கிருஷ்ணனும்
யாதவர்களை அந்த இடத்துக்கு அனுப்புகிறான். (சபா பர்வம் -31)
ஹரஹூனர்கள் இருந்த பகுதி, மிலேச்சப் பகுதியாகும்.
அங்கு தம் மக்களைக் குடியேற்றியதன் மூலம்,
கிருஷ்ணன் அங்கு தன் உருவத்தைப் பதித்தான் என்று சொல்லும் வண்ணம்,
ஹரிரூப என்னும் பெயர் பெற்று,
அந்தப் பெயர் நாளடைவில் ஹரப்பா என்றாகி இருக்கலாம்


இந்த ஹரப்பா நகரம், சிந்து சமவெளி நாகரிகத்தின் முக்கிய நகரமாகக் கருதப்படுகிறது.
கிருஷ்ணனைச் சேர்ந்த யாதவர்கள் அங்கு இருந்தனர் என்று சொல்லும் வண்ணம்,
அங்கு சங்குகள் கிடைத்துள்ளன.



இந்தப் படத்தில் காணப்படும் சங்குகளைச் சுற்றி
வளையம் போலச் செதுக்கி இருக்கிறார்கள்.
அவற்றில் குங்குமம்  (Vermilion) பூசிய அடையாளம் இருக்கிறது.
இதை பற்றிய விவரத்தை இந்த இணைப்பில் காணலாம்.


சங்குகள் வேத வழி வழிபாட்டில் முக்கியத்துவம் பெற்றவை.
மஹாபாரதத்தில் அவரவர்கள் தங்களுக்கென்று சங்கு வைத்திருந்தனர்.
கிருஷ்ணன், தன் நகர மக்களை சங்கு வைத்திருக்கச் சொன்னான்
என்னும் செய்திகளும் உள்ளன.
அந்தச் சங்கு,
குங்கும அடையாளத்துடன்
ஹரப்பாவில் கிடைத்துள்ளதால்,
மஹாபாரதம் சொல்வது போல,
நகுலனது அழைப்பை ஏற்று, கிருஷ்ணனால் பணிக்கப்பட்டு,
அங்கு குடியேறிய யாதவர்கள் அல்லது வேத மரபினரது
நாகரிகத்தைத்தானே இது காட்டுகிறது?

அதைத் திராவிட நாகரிகம் என்றோ,
சிந்து சமவெளி நாகரிகம் என்றோ சொல்வது எப்படி பொருந்தும்? 






11 கருத்துகள்:

  1. நான் தங்கள் படைப்புக்களை விரும்பி எதிர்பார்த்து படிப்பவன். தெளிவான கருத்துக்கள், ஆணித்தரமான வாதங்கள்,
    சான்றுகளுடன் கூறும் நயம், சொல்லாட்சி,விலாசமான அறிவு ஆஹா ஆஹா அற்புதம். இவை ஒவ்வொன்றின் பின் இருக்கும் உங்களின் கடுமையான உழைப்பு பிரமிக்கத்தக்கது.உங்கள் அறிவை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் உங்களின் சேவை பாராட்டுதற்குரியது. எல்லாம் வல்ல இறை உங்களுக்கு எல்லா நலன்களும் அருள நான் பிரார்த்திக்கிறேன்.

    சிவசுப்ரமணியன்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி சிவசுப்ரமணியன் அவர்களே.

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நல்ல கட்டுரை.இவை ஆங்கிலத்தில் அப்படியே வரவேண்டும்.நீங்கள் விரும்பினால் எனது பிளாக்.கில் லிங்க் கொடுக்கிறேன். சுவாமிநாதன்,லண்டன்

    பதிலளிநீக்கு
  5. நன்றி திரு ஸ்வாமிநாதன் அவர்களே. லிங்க் கொடுக்கவும். இந்தத் தொடர் முடிய இன்னும் 6 ஆறு மாதங்கள் ஆகும் என்று நினைக்கிறேன்.அதன் பிறகு இவற்றை ஆங்கிலத்தில் என் வலைப் பதிவில் எழுத இருக்கிறேன். இப்பொழுதே அவ்வப்பொழுது, சூழநிலைக்குத் தக்கவாறு ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன். சமீபத்தில் பகவத் கீதையைக் குறித்து சைபீரியக் கோர்ட்டில் வழக்கு வந்ததால்,
    "Why ban Gita when Russia has a Vedic past?" என்று என் ஆங்கிலத்தளத்தில் எழுதினேன். இந்த லிங்கில் படிக்கவும்:-

    http://jayasreesaranathan.blogspot.com/2011/12/why-ban-gita-when-russia-has-vedic-past.html

    International audience including American anthropologists have read it and one of them sought my permission to publish it in his website.

    பின் வரும் இணைப்புகளில் உள்ள என் ஆங்கிலக் கட்டுரைகளுக்கும் அவர்களிடம் வரவேற்பு இருக்கிறது. இவற்றில் இருப்பதை ஆங்காங்கே இந்தத் தொடரில் எழுதியுள்ளேன்.

    http://jayasreesaranathan.blogspot.com/2011/11/sundaland-was-location-of-tripura.html

    http://jayasreesaranathan.blogspot.com/2011/11/indus-girl-and-indra-loka-have-remnants.html

    http://jayasreesaranathan.blogspot.com/2011/12/yet-another-genetic-study-that.html

    உலகளாவிய ஆங்கில வாசகர்களுக்கு இந்தத் தொடரின் கட்டுரைகள் போய்ச் சேர வேண்டும். ஆனால் திராவிட நஞ்சு நம் தமிழ் நாட்டில்தான் பரவியிருக்கிறது. பாரம்பரியம் மிக்க நம் தமிழ் மக்கள் தங்களைச் சூழ்ந்திருக்கும் மாயையிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக முதலில் தமிழ் வாசகர்களுக்காக எழுதுகிறேன். பிறகு ஆங்கிலத்தில்.

    தினமணியில் சென்ற மே மாதம் இந்தத் தொடரின் இணைப்பை அறிமுகம் செய்திருக்கிறார்கள்.
    இங்கே பார்க்க:-

    http://www.dinamani.com/edition/BlogStory.aspx?&SectionName=BlogNews&artid=424776&SectionID=184&MainSectionID=184&Title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%22%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D

    பதிலளிநீக்கு
  6. The strange thing about the camel is they have excavated a full size camel skeleton from the Indus site. Everybody is keeping quiet because they cant explaining how it came there.Though it happened in the very beginning of excavations "scholars" maintain an eerie silence.

    Another big fraud done by the scholars is about Brahui language. There are very few Tamil words and still they argue Brahuis are Tamils.What happened was a small business community set up their colony there to do business long long ago.

    If it is not then we can argue the whole of North Syria and Turkey were occupied by Sanskrit speaking people. We have excavated a sanskrit inscription in Bogazkoy in Turkey with Indra,Mitra,Nasatya and Varuna names dated 1350 BC. Another horse training manual gives 1,2,3 in Sanskrit.
    So the "scholars" apply two different scales for Tamil and Sanskrit!!!

    The place where the first excavation took place was known as BRahmanabad. They hid this fact as well.They dont want to say anything with Brahmins name

    Please read my articles Indus New approach required, Indra seal in Indus valley on Airavata and Vishnu seal in Indus valley
    swami

    பதிலளிநீக்கு
  7. Dear Mr Swaminathan,
    I read most of your posts. On Indus issues, I will be writing on Unicorn (Shringi) in the upcoming post.

    For the benefit of only-Tamil readers, let me switch over to Tamil.

    பனியுகம் ஆரம்பிப்பதற்கு முன் ஒட்டகங்களும், நெருப்புக் கோழிகளும் வட இந்தியாவில் வாழ்ந்தன என்று காட்டும் தொல் பொருள் ஆராய்ச்சிகளைக் கீழ்க் காணும் இணைப்பின் 28 ஆவது பக்கத்தில் காணலாம். ஒட்டகம் இந்திய மிருகமே என்று இந்த ஆராய்ச்சி காட்டுகிறது.

    http://www.scribd.com/doc/70907951/Witzel-s-Claims-Found-Wrong

    இந்த இணைப்பில், இந்தியாவின் பல மிருகங்கள், செடி வகைகள் ஆகியவை குறித்து நடந்துள்ள மரபணு ஆராய்ச்சி முடிவுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய மொழிகளில் காணப்படுவதாகச் சொல்லப்படும் இந்த வகைகளைக் குறிக்கும் சொற்கள், இந்தியாவில் உண்டானவையே என்றும் இந்த ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

    வட மேற்கு இந்தியாவில் (ப்ரூஹி) காணப்படும் ‘திராவிட’ மொழி ஒற்றுமை குறித்து நீங்கள் சொன்னவற்றைக் குறித்துக் கொண்டேன்.
    இந்த விஷயத்தில் என் கருத்து வேறானது. அதைப் பற்றி இந்தத் தொடரில் விரிவான விவரங்கள் வர இருக்கின்றன. சுருக்கமாக அதன் விவரம் இங்கே தருகிறேன்.

    இந்தத் தொடரில் ஏற்கெனெவே மனித மொழி பற்றிக் கூறியுள்ளேன். அந்த மொழி தமிழாகும் என்றும் கூறியுள்ளேன். தமிழ், சமஸ்க்ருதம் இரண்டும் ஒன்றாக இருந்தது. ஒரே சமூக மக்களால் கல்வி மொழியாக சமஸ்க்ருதமும், பேச்சு மொழியாக தமிழும் பேசப்பட்டிருக்கின்றன. அதன் காலம் தமிழுக்கு இலக்கணம் கொடுத்து, அதைப் பிரபலப்படுத்த சங்கம் ஆரம்பித்ததற்கு முன்பாகும்.

    இது ஒரு புறம் இருக்க, இன்றைக்குத் திராவிட மொழிகள் என்று, கால்டுவெல் போன்றோர் சொன்னது, இந்த மொழிகளின் தற்போதைய நிலையில் காணப்படும் ஒற்றுமையைக் கொண்டு சொல்லப்பட்டது. 1000 வருடஙக்ளுக்கும் முன்னால் இவை எப்படி இருந்தன, 2000 வருடங்களுக்கு முன்னால் இவை எப்படி இருந்தன என்றெல்லாம் ஆராயப்படவில்லை.

    ஆனால் இவற்றுடன் ஒற்றுமை அல்லாத மொழி என்று அவர்கள் நினைத்த ஹிந்தி, மராட்டி போன்ற வட இந்திய மொழிகள் 1000, 2000 வருடங்களுக்கு முன்னால் தமிழின் சாயலைக் கொண்டிருந்தனவே, அது எப்படி?


    இன்றைய ஹிந்தி 1000 வருடங்களுக்கு அபப்ராம்சா என்னும் மொழியிலிருந்து உருப்பெற்றது. அபப்ராம்சாவில், ஆவாதியும் (அயோத்தி நகர மக்கள் பேசினது) ப்ரஜ்ஜும் (கோகுல மக்கள் பேசினது) கலந்திருந்ததன. அபப்ராம்சாவில் 70 % சொற்கள், கொச்சையாகப் பேசப்படும் தமிழ்ச் சொற்கள்! மராட்டி மொழியில் 70% அபப்ராம்சா கலந்துள்ளது.

    அப்ப்ராம்சா (Apabrahmsa) என்பதே ஆபீரர்கள் பேசின மொழி. ஆபீரர்கள் யார் என்று எனது இந்த வலைத்தளத்தில் தேடுக பகுதியில் தேடிப் பார்த்தால் விடை கிடைக்கும், 53 ஆவது கட்டுரையில் வரும் திராவிட ராஜா, ஆபீரன் ஆவான்.

    ஆபீரர்கள் சரஸ்வதி நதி தீரத்தில் வாழ்ந்த மனுவின் வழி வந்த மக்கள்தான். ஆனால் வேத முறையை விட்டதால் ஆபீரர்கள் என் அழைக்கப்பட்டனர். ஆபீரன் என்பதற்கு இன்னொரு பொருளும் மனுஸ்ம்ருதியில் உள்ளது. அதைப் பற்றி பிறகு இந்தத் தொடரில் எழுதுகிறேன். இவர்கள் வேதம் பயில்வதை விட்டவர்கள். வேதம் பயில்வது நின்று விட்டால், மூன்று தலைமுறைகளில் சமஸ்க்ருதம் என்பதே மறந்து விடும். ஆனால் பேச்சு மொழியாக தமிழ் இருந்திருந்தால் மட்டுமே, அவர்கள் வேத வாழ்க்கையை விட்டாலும், பேச்சுக்கு தமிழைப் பயன் படுத்தவே, அது அவர்கள் மொழியில் காணப்பட்டிருக்கும்.

    இவர்களது கொச்சைத் தமிழ் தான் உருமாறி, உருமாறி இன்றைய ஹிந்தியை உருவாக்கினதில் 70 % பங்கு கொண்டது. உதாரணமாக பட்டத்து ராணி என்கிறோமே, அதைப் ‘பட்ரானி’ என்கிறார்கள் ஹிந்தியில். இது அபப்ராம்சாவின் உபயம். அதாவது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல தமிழ் மொழி, ஒரு சுற்று சுற்றி அபப்ராம்சா என்ற வடிவம் எடுத்து, இன்றைய வட இந்திய மொழிகளுக்கு அடி கோலியிருக்கிறது.

    கொடுந்தமிழ் என்று சொல்லப்பட்டது, வட இந்தியாவில் உருமாறிய தமிழ் மொழியே. வட இந்தியாவுக்கு, சரஸ்வதி நதி தீரம் வழியாக நுழைந்த மக்கள் வாயிலாகக் கொடுந்தமிழ் சென்றிருக்கிறது.

    அங்கிருந்து ஒரு பகுதி 3500 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டுக்கு வந்த்து. கொடுந்தமிழ் பேசிய வேளிர்களும், பிற வட இந்திய (குறிப்பாக துவாரகை) மக்களும் தமிழ் மூவேந்தர்கள் நாடுகளைச் சுற்றி குடியமர்ந்தனர்.

    இன்னொரு கோணத்தில் பார்த்தால், சிபியின் வம்சத்தில் வந்த சோழவர்மன், கொடுந்தமிழ்தான் பேசியிருப்பான், சிபியின் நாடு ப்ரூஹி பேசப்படும் இடம் என்று முன்பே இந்தத் தொடரில் சொன்னோம். சிபி என்னும் அந்த இடத்திற்குப் பக்கத்தில் இன்றும் சோளிஸ்தான் என்னும் இடம் இருக்கிறது (இன்றைய பாகிஸ்தான்). சிபியின் அரசன் கௌரவர்கள் வீட்டு மாப்பிள்ளையான ஜெயத்ரதன்! இவ்வாறு தொடர்பு சென்று கொண்டே இருக்கிறது. ஆனால் தமிழ் என்பதன் வட இந்தியத் தொடர்பையும் நாம் ஆராய வேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. //ஆனால் தமிழ் என்பதன் வட இந்தியத் தொடர்பையும் நாம் ஆராய வேண்டும். //

    "அதனால் தமிழ் என்பதன் வட இந்தியத் தொடர்பையும் நாம் ஆராய வேண்டும்" என்று படிக்கவும்.

    பதிலளிநீக்கு
  9. மேடம் யாதவர்கள் அரியர்களா???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எவன் எந்த நேரத்திலும் மனம் தளராமல், மனம் தடுமாறாமல், யாருக்கும் தீங்கு செய்யாமல், சுய நலம் பாராமல், பிறர் நலம் பார்த்து நடு நிலமையான மனதுடன் இருக்கிறானோ அவன் ஆரியன். அப்படிப்பட்ட குணம் கொண்டவர் யாராக இருந்தாலும், அவர் யாதவராக இருந்தாலும் ஆரியரே. அப்படி ஒரு பறவை, மிருகம் இருந்தால் கூட அதை ஆரியன் என்று சொல்லும் வழக்கம் இருந்தது.

      நீக்கு