புதன், 5 அக்டோபர், 2011

76. தமிழும் சமஸ்க்ருதமும் இரு கண்கள் -1


அறிவன் என்னும் 5 –ஆம் வகை மக்களை ஆராய்ந்தோமானால்,
பல ஆயிரம் ஆண்டுகளாகவே ஜோதிடம் என்பது
தமிழ் மண்ணில் வேறூன்றி இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
மூவகைக் காலத்தையும் கவனித்து,
ஊழ்வினைப் பயனைச் சொல்லுதல்,
வானிலை பலன்களைச் சொல்லுதல்.
இவை தவிர விண்ணில் நடப்பவற்றைக் கவனித்துப்
பலவித பலன்களைச்  சொல்லுதல் என்பது அறிவனது இலக்கணம்.
இதைச் சொல்லும் புறப்பொருள் வெண்பா மாலைப் பாடல் ஒன்று உள்ளது.


புரிவின்றி யாக்கைபோற் போற்றுவ போற்றிப்
பரிவின்றிப் பட்டாங் கறியத்திரிவின்றி
விண்ணில் வுலகம் விளைக்கும் விளைவெல்லாம்
கண்ணி உரைப்பான் கணி” (வாகைத் திணை 20)


இதன் பொருள்:-
பகலும், இரவும் இமையாமல் ஆகாயத்தைப் பார்த்து,
ஆண்டு நிகழும் வில்லும், மின்னும்,
ஊர்க்கோளும், தூமமும், மின் வீழ்வும்,
கோள் நிலையும், மழை நிலையும் பிறவும் பார்த்துப்
பயன் கூறுதல் கணியின் இயல்பு


இதற்கு உதாரணமாகப் புறநானூறில் 229 ஆம் பாடல் விளங்குகிறது.
அந்தப் பாடலில் பல முக்கியச் செய்திகள் இருக்கின்றன.
சமஸ்க்ருத்த்தை வெறுப்பவர்களுக்கு ஒரு செய்தி இருக்கிறது.
பகுத்தறிவு பேசுபவர்களுக்கும் ஒரு செய்தி இருக்கிறது.
தமிழ்ப் புத்தாண்டை தம் விருப்பம் போல் மாற்றுபவர்களுக்கும்,
ஒரு செய்தி இருக்கிறது.
அந்தப் பாடலை ஆராய்ந்தோமானால்,
பல முக்கியப் புதிர்களை விடுவிக்கலாம்.
அவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.  


முதலில் அந்தப் பாடல் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

அந்தப் பாடலில்
ஓரிரவின் குறிப்பிட்ட நேரத்தைச் சில நக்ஷத்திரங்களின் அமைப்பின் மூலம்
சொல்கிறார் புலவர் கூடலூர் கிழார்.
நள்ளிரவைத் தாண்டிய அந்த நேரத்தில்
ஒரு எரி நக்ஷத்திரம் ஒலியெழுப்பிக்கொண்டு,
வேகமாக வந்து கிழக்கிலும் இல்லாமல்,
வடக்கிலும் இல்லாமல் கீழே விழுந்தது.
அதைக் கண்ட புலவரும், மற்றவர்களும்,
தங்கள் அரசன் நோய் எதுவும் இல்லாமல் நன்றாக இருக்க வேண்டுமே
என்று கவலைப்பட்டனர்.
அந்த எரி நக்ஷத்திரம் விழுந்து ஏழாவது நாள் வந்தது.
அன்று அவர்கள் மன்னனான 
கோச்சேரமான் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
உயிர் நீத்து தேவருலகத்தை அடைந்தான்
என்னும் செய்தி கிடைத்தது என்கிறார் புலவர்.


இந்தப் பாடலில், எரிகல் (meteor) ஒன்று விழுந்தது என்று சொல்லப்பட்டுள்ளது.
இது வால் நக்ஷத்திரமாக இருக்கலாம்
என்று சிலர் சொல்கிறார்கள்.
ஆனால் இது வால் நக்ஷத்திரம் இல்லை.
வால்நக்ஷத்திரத்தைத் தூம கேது என்று அழைத்தார்கள்.


கனைஎரி பரப்பக் கால் எதிர்பு பொங்கி
ஒரு மீன் விழுந்தன்றால் விசும்பினானே.
என்று இந்தப் பாடல் சொல்வதன் மூலம்,
ஒலியுடன், தீ பரப்பிக் கொண்டு, காற்றைக் கிழித்துக் கொண்டு
ஒரு மீன் விழுந்தது என்று அர்த்தமாகிறது.
இதை எரி கொள்ளி என்றும், எரி நக்ஷத்திரம் என்றும் சொல்வார்கள்.
பண்டைய உரையாசிரியரும் அவ்வாறே எழுதியுள்ளார்.
இப்படி விழுவது உற்பாதம் எனப்படும்.
ஏதோ ஒரு கெடுதல் ஏற்படும் என்று பொருள்.
எல்லா எரி நக்ஷத்திரமும் உற்பாதமில்லை.


ஓரிரவில் பல எரிகற்கள் வீழலாம்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட  மாதத்தில்,
குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட திசையில்
எரி கல் விழுவது அரச பீடை என்று
ஜோதிட நூல் சொல்வதாக உரையாசிரியர் எழுதியுள்ளார்


இந்தப் பாடல் சொல்லும் அமைப்பு,
பங்குனி பாதம் வளர் பிறையில்
சந்திரன் கார்த்திகை நக்ஷத்திரத்தில்,
மேஷ ராசியில் இருக்கையில்,
அந்தச் சந்திரன் மறைந்த பிறகு
நள்ளிரவுக்குப் பிறகு விழும் எரி நக்ஷத்திரத்தைக் குறிக்கிறது.


இந்தப் பாடலில் உள்ள சில முக்கியக் குறிப்புகள் கவனத்துக்குரியன.
அவற்றில் முதலாவதாக நம் கவனத்தைக் கவர்வது,
தமிழ் மொழிக் காவலர்கள் என்று தங்களை நினைத்துக் கொள்பவர்களது
சமஸ்க்ருத எதிர்ப்புக்குக் கிடைக்கும் அடி!


அந்த எரிகல் கிழக்கிலும், செல்லாது, வடக்கிலும் செல்லாது என்பதை,
பாசி செல்லாது, ஊசி முன்னாதுஎன்கிறார் புலவர்.
பாசி என்பது கிழக்கு என்னும் பொருள்படும்
ப்ராசீ என்னும் சமஸ்க்ருதச் சொல்லின் சிதைவு.
ஊசி என்பது வடக்கு என்னும் பொருள்படும்
உதீசி என்னும் சமஸ்க்ருதச் சொல்லின் சிதைவு
என்று உரையாசிரியர் எழுதியுள்ளார்


ப்ராசீ, உதீசி என்னும் சமஸ்க்ருதச் சொற்களைப்
பாசி, ஊசி என்று எழுதியுள்ளார் புலவர்.
இதன் மூலம் அப்படிப்பட்ட சொல் வழக்குகள்
அவரது காலத்தில் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது

அன்றைய மக்களுக்கு இல்லாத தமிழ் ஞானமா,
அல்லது தமிழ் மொழியில் இல்லாத சொல் வளமா?
கிழக்கு, வடக்கு என்பதற்கான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தாமல்
இப்படிப் பட்ட சொற்களைப் பயன் படுத்தியுள்ளனரே!
அவர்களுக்குத் தமிழ்ப் பற்று இல்லையா?

சமஸ்க்ருதச் சொற்களைத் தமிழிலிருந்து ஒழிக்க வேண்டும்
என்கிறார்களே திராவிடவாதிகள்,
அந்த சங்கப் புலவருக்கு இல்லாத தமிழ்ப் பற்று இவர்களுக்கு வந்து விட்டதா?


அப்படிப்பட்ட சொல்லாட்சிகளைக் கொண்ட மொழிதானே தமிழ் மொழி?
தமிழில் அவற்றுக்கான சொற்கள் இருந்தும்
சங்க இலக்கியத்தில்
பல சம்ஸ்க்ருதப் பெயர்ச் சொற்களை அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.
சமஸ்க்ருதத்தை அவர்கள் வெறுக்கவில்லை. ஒதுக்கவில்லை


இதைப் போலவே முஹூர்த்தம் என்னும் சமஸ்க்ருதச் சொல்லை
தமிழில்முழுத்தம் என்று சொல்லியுள்ளார்கள்.
சேரன் செங்குட்டுவன் கண்ணகி சிலைக்குக் கல் கொண்டுவர
இமய மலைக்குப் புறப்பட வேண்டும் என்று முடிவு செய்த போது,
அவனது ஜோதிடன்,
முழுத்தம் நன்றாக இருக்கிறது,
அரசன் செல்ல விரும்பிய திசை நோக்கிச் செல்லலாம் என்கிறான்


ஒரு முஹூர்த்தம் என்பது 2 நாழிகைகள் கொண்டது.
ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்.
நாழிகை என்பது தமிழ்ச் சொல்.
ஆனால் முஹூர்த்தம் என்பது சமஸ்க்ருத்தச் சொல்.
அதற்குத் தனியாக ஒரு சொல்லைத், தமிழில் பயன்படுத்தவில்லை.
அதை முழுத்தம் என்று சொல்லியிருக்கிறார்கள்


இப்படிப் பல சொற்கள், அதிலும் பெயர்ச் சொற்கள்
சமஸ்க்ருத்துக்கும் தமிழுக்கும் பொதுவாக இருக்கின்றன.
அதை மறுக்க முடியாத திராவிடவாதிகள்,
அந்தச் சொற்களை ஆரியர்கள் திணித்து விட்டனர் என்று கூறுகின்றனர்.
இல்லையேல், தமிழில்தான் அந்தச் சொற்கள் இருந்தன,
அவற்றை சமஸ்க்ருத்த்தில் அபகரித்து விட்டார்கள் என்கின்றனர்.
இந்த இரண்டு சாத்தியங்களுக்குமே அவர்கள் எந்தவிதமான
விளக்கங்களும், ஆதாரங்களும் தருவதில்லை.


சமஸ்க்ருத்த்தைப் பொருத்தமட்டில், அது சிறப்பாக கட்டுவிக்கப்பட்ட மொழி
என்பதை இன்றைக்கு ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக் கொண்டுள்ளனர்.
அந்த மொழியில் எத்தனை புதுச் சொற்களை வேண்டுமானாலும் உருவாக்க முடியும்,
அந்த மொழியில் அர்த்தத்திலிருந்து சொல் உருவாகிறது.
அதனால் பல புதுச் சொற்களை உருவாக்க முடியும்.
அந்தப் புதுச் சொற்களை விளக்க அகராதி தேவையில்லை.
எந்த ஒரு புதுச் சொல்லாக இருந்தாலும்,
அதன் வேர்ச் சொற்களையும், சொல் உருவாக்கத்தையும் கொண்டு
அதன் பொருள் என்ன என்று சொல்ல முடியும் என்கிறார்கள்.


அப்படி உருவான பல சொற்களைத்
தமிழ் மொழி ஏற்றுக் கொண்டுள்ளது.
அவற்றுக்கு இணையான சொற்களைத் தமிழில்
உண்டாக்க முடியாதபோது,
அவற்றை அப்படியே தமிழில் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
பல காலமாகவே அப்படிப்பட்ட சொற்கள் தமிழில் வழங்கி வந்துள்ளன
என்பதைத் தொல்காப்பிய சூத்திரங்கள் மூலம் அறிகிறோம்.


உதாரணமாக, பகுதி 74 இல் கண்ட மந்திரம் என்னும் சொல்லைப் பற்றித்
தொல்காப்பியச் சூத்திரம் இருக்கிறது என்று பார்த்தோம்.
அது போல பிண்டம் என்னும் சொல்லுக்கும் தொல்காப்பியச் சூத்திரம் இருக்கிறது.
இந்தச் சொல், தமிழ்ச் சமுதாயம் பற்றிய ஒரு முக்கியத் தகவலைக் கொடுக்கிறது.


பிண்டம் என்னும் சொல் சமஸ்க்ருத்த்தில் உண்டான சொல்.
இறந்தவர்களுக்குப் பிண்டோதக்கிரியை செய்வார்கள்.
அது ஹிந்து மதத்தின் ஒரு முக்கியப் பழக்கமாகும்..
மஹாபாரதப் போர் ஆரம்பமாகும் நேரத்தில்,
அர்ஜுனன் தன் கையில் இருந்த வில்லைக் கீழே போட்டு விட்டு,
போர் செய்ய மாட்டேன் என்றானே,
அதற்கு அவன் சொன்ன முக்கியக் காரணம் -
போரில் பலரும் இறப்பார்கள்.
அதனால் பெண்களும், குடும்பங்களும் பாதிப்படைவார்கள்.
முன்னோர்களுக்குச் செய்யும் பிண்டோதகக் கிரியையைச்
செய்ய இயலாத நிலை தோன்றும்.
அப்படிப்பட்ட ஒரு நிலையைத் தோற்றுவிப்பதால்,
போரிட விரும்பவில்லை என்றான்.



முன்னோர்களுக்குப் பிண்டக் கிரியை செய்வது,
ஆரியப் பழக்கம் என்பார்கள் திராவிடவாதிகள்.
ஆனால், மூன்றாம் ஊழிக்கு முன்,
கபாடபுரத்தைத் தலைநகரமாக்க் கொண்டு ஆண்ட
பாண்டிய மன்னனான முதுகுடுமிப் பெருவழுதியைப் போற்றும்
புறநானூற்றுப் பாடல் – 9 இல் பிண்டோதகக் கிரியை பற்றின விவரம் வருகிறது.,
அந்த மன்னன் தர்ம யுத்தம் செய்பவன்.
தர்ம யுத்தம் என்றால் பசுக்கள், பெண்கள் போன்றவர்களைக் கொல்லக் கூடாது.
அந்த வரிசையில்,
பிண்டம் போட பிள்ளை இல்லாதவர்களை அவன் கொல்ல மாட்டான்
என்று சொல்கிறது அந்தப் பாடல்.


இறந்தால் ஈமக் கிரியை செய்ய
ஒரு ஆண் குழந்தை பிறக்கும் வரை, ஒருவனுக்கு எந்தத் தீங்கும் செய்யக்கூடாது
என்ற எண்ணம் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வந்திருக்கிறது.
அது மட்டுமல்ல,
ஒரு ஆண் குழந்தையேனும் பெற வேண்டும் என்ற எண்ணமும்
முற்காலத் தமிழர்களிடையே இருந்து வந்திருக்கிறது என்றும் தெரிகிறது.
ஆஸ்திக்காகவோ, ஆசைக்காகவோ ஆண் குழந்தையை விரும்பவில்லை.
பெற்றோர் இறந்தவுடன் ஈமக் கிரியை செய்து,
வருடந்தோறும் பிண்டோதக்க் கிரியையும் செய்ய வேண்டும் என்பதற்காக
ஆண் குழந்தையை விரும்பியிருக்கிறார்கள்.



அதனால்தான் ஐந்து குரவர்கள் என்று
தாய், தந்தை, மூத்த சகோதரன், ஆசிரியன், தெய்வம்
என்று மூத்த சகோதரனையும் சேர்த்துச் சொல்கிறார்கள்.
ஒரு குடும்பத்தில் முதலில் பிறக்கும் மகன்,
பிண்டக் கிரியையைச் செய்வதால்,
பெற்றோருக்கும், குருவுக்கும், தெய்வத்துக்கும் ஒப்பான மரியாதை
மூத்த சகோதரனுக்கும் கொடுக்கப்பட்டது.


பிண்டோதகக் கிரியை குறித்து,
அர்ஜுனன் சொன்ன அதே காரணத்தை,
யுத்த தர்மமாக,
முது குடுமிப் பெருவழுதியும் கைக்கொண்டிருக்கிறான்
என்பதைப் புறநானூறு மூலம் தெரிந்து கொள்கிறோம்.
இந்த வழக்கத்தை ஆரியன் கொண்டு வந்தான் என்று சொல்ல முடியாதபடி,
இங்கு சொல்லப்பட்ட அரசன்,
ஆரியப் படையெடுப்புக்கு முன்பே இருந்தவன் என்பது நினைவில் கொள்ளத்தக்கது




தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன் போல் புதல்வர் பெறாதீரும்
என்று இந்தப் பாடல் சொல்லும் வரிகளில்,
பார்ப்பார், க்ஷத்திரியர் என
ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தைச் சொல்லாமல்
பொதுவாகச் சொல்லியுள்ளதால்,
இது அனைத்து மக்களுக்குமே அது பொருந்துவது என்று தெரிகிறது.


இதே கருத்தை இல்வாழ்க்கை அதிகாரத்தில்,
திருக்குறள் தேவனார் கூறுவதைக் காணலாம்.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல்..’ என்னும் 43 ஆவது குறளில்
முன்னோர்களுக்கு உணவிடுதலை
இல்லறத்தானது தலையாய கடமை எனக் கூறுகிறார்.

இல்லறத்தான் என்று சொல்லியுள்ளதால்,
திருமணமான அனைத்து மக்களும் செய்ய வேண்டிய கடமை
என்பது தெளிவாகிறது.
இந்தப் பழக்கம் ஹிந்து மதப் பழக்கம்.
தமிழ் நாட்டில் இருந்த அனைத்து மக்களுமே
ஹிந்து மதப் பழக்கங்களைக் கொண்டிருந்தனர்
என்பதை இந்தப் புறநானூற்றுப் பாடலும், திருக்குறளும் தெரிவிக்கிறது.


பஃருளி ஆற்றங்கரையில் இருந்த கபாடபுரத்தை ஆண்ட
பாண்டிய மன்னன் காலம் தொட்டு
பழந்தமிழ் மக்கள் எந்த மதத்தைப் பின் பற்றி வந்தார்கள்
என்பதில் இனியும் யாருக்கும்,
எந்த சந்தேகமும் இருக்க முடியாது

.
இந்தப் பாடல் என்று மட்டுமல்ல,
புறநானூறு 360, 234 ஆகியவற்றிலும்,
இறந்தோருக்குப் பிண்டம் அளித்தல் சொல்லப்படுகிறது.
இனி பிண்டம் என்றால் என்ன என்று பார்ப்போம்.


உண்டி முதற்றே உணவின் பிண்டம் (பு-நா -18)
ஆனால் பிண்டம் என்னும் சொல்
ஒரு குறிப்பிட்டப் பொருள் பொதிந்து உருவானது.
அப்படிப்பட்ட சொல்லுக்குச் சரியான தமிழ்ப் பதம் இல்லாததால்,
அச்சொல் அப்படியே தமிழில் வழங்கி வருகிறது.


அதைப் பற்றி ஒரு சூத்திரமும் தொல்காப்பியத்தில் இருக்கிறது.
அதன் பொருளை எங்கெங்கெல்லாம் அருமையாகப் பயன் படுத்த முடியும்
என்பதைத் தொல்காப்பியச் சூத்திரம் காட்டுகிறது.


எழுதப்படும் நூலின் வகையைச் சொல்லும் போது,
பிண்டத்தைப் பற்றிச் சொல்கிறது தொல்காப்பியம்.
நூல் என்பது நான்கு வகைப்படும்.
அவற்றுள் பிண்டம் என்பது ஒரு வகை.
(சூத்திரம் என்பதும் ஒரு வகை.
சூத்திரம் என்பதும் சமஸ்க்ருதச் சொல்லாகும்.)
பிண்டம் என்றால், அது தனக்குள் மூன்று உறுப்புகள் அடக்கியது
என்கிறது தொல்காப்பியம் (செய்யுளியல் 165)
பிண்டம் என்னும் சமஸ்க்ருதச் சொல்லும் அந்த அர்த்தத்தில் உருவானது.


ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்னால்.
கருவில் உருவாகும் காலத்தில் இருக்கும் நிலைக்குப் பிண்டம் என்று பெயர்.

உணவால் உருவாக்கப்பட்ட ஒரு திரளாகக் கருவில் இருப்பதும் பிண்டம்.
இறந்த பிறகு உருவே இல்லாத நிலையில் இருக்கும் ஒரு உயிருக்கு,
கொடுக்கப்படும் உணவும் பிண்டம் ஆகும்.
இந்தப் பிண்டம் என்பது திட, திரவ, வாயு என்னும் மூன்று பொருள்களைக் கொண்டது.
பிறப்பதற்கு முன், கருவாக இருக்கும் போது,
பிண்டமானது உயிரைத் தாங்கி நிற்கிறது.
உடலை விட்டு உயிர் பிரிந்த பின்,
அந்த உயிரைத் தாங்க நாம் பிண்டம் அளிக்கிறோம்

பிண்டம் என்னும் சோற்றுத் திரளில் உள்ள  
அரிசிச் சோறு திடப் பொருள்,
சோறாக்கி, அதில் தொக்கி நிற்கும் நீர், திரவப் பொருள்,
அந்த உணவை முன்னோருக்கு அளிக்கும் நமது எண்ணம் அல்லது சிரத்தை,
வாயு ரூபமான பொருளாகும்.
இந்த திட, திரவ, வாயு என்னும் மூன்று உறுப்புகளை,
பூர், புவர், ஸுவர் என்னும் மூன்று தத்துவங்களாக
உபநிடதங்கள் சொல்கின்றன.



இந்த வகையில் உலகமே ஒரு பிண்டம்தான்.
பூமி, நீர், காற்று என்னும் மூவகை உறுப்புகளைக் கொண்டதால்
உலகமும் ஒரு பிண்டமாகும்.


இந்த மூன்று உறுப்புகளும், உலகுக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கின்றன.
அவை மாசு பட்டால், உலகம் உயிரிழக்கும்.
எனவே அவற்றின் மூலமாகவே நாம் உலகுக்கு
உயிரூட்ட வேண்டும்.
அந்த மூன்று உறுப்புகளிலும் சேரும் மாசுவை நீக்குவதே,
நாம் உலகுக்குச் செய்யும் பிண்டக் கிரியை ஆகும்.
மூன்றுறுப்புகளால் இயங்கும் எந்த பொருளுமே பிண்டத்துக்குள் அடங்கும்.
அவை பிண்டக் கிரியையும் ஏற்றுக் கொள்ளும்.


இந்தக் கருத்தை
மூன்று உறுப்படக்கிய தன்மைத்தாயின்
தோன்று மொழிப் புலவர் அது பிண்டம் என்ப
என்கிறது தொல்காப்பியம் (செய்யுளியல் 165).
மூன்று உறுப்படக்கிய பிண்டம் என்பதே
ஒரு நூல் அதிகப்படியாக அமையக் கூடிய நிலையாகும்.
இந்தச் சூத்திரத்துக்கு உரை எழுதிய பேராசிரியர்,
அகத்தியத்தை மேற்கோளிடுகிறார்.
அது இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்ற மூன்று
உறுப்புகளைக் கொண்டதால், மூன்று பிண்டத்தைக் கொண்டது என்கிறார்.
அதாவது அகத்தியத்துக்குப் பிண்ட சரீரம் உள்ளது.


அது போல தொல்காப்பியமும் பிண்ட சரீரம் கொண்டது என்கிறார் நச்சினார்க்கினியர்.
அது எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டதால்
தொல்காப்பியம்மூன்று உறுப்படக்கிய பிண்டம்என்கிறார் அவர்.


அதைப் போலவே திருக்குறளும், அறம், பொருள், இன்பம்
என்னும் 3 உறுப்படக்கிய பிண்டமாகும்.
பிண்ட சரீரத்தில் உள்ள இந்த உயர்ந்த நூல்கள்
ஒரு கரு 3 நிலைகளால் உயிருடன் இருப்பதைப் போல
என்றும் உயிருடன் இருப்பவை

முன்னோர்களுக்குப் பிண்டோதக்கிரியை செய்வதைப் போல,
இவற்றையும், இவற்றை ஆக்கினோரையும்,
நாம் தவறாமல் நினைத்து வாழ்விக்க வேண்டும்.
வாழையடி வாழையாக என்றென்றும்,
மக்கள் கூட்டத்துக்கு இவை உயிரூட்டிக் கொண்டிருப்பதால்,
இத்தகைய நூல்களைப் பிண்டமாக வடித்துள்ளனர்.
இந்தப் பிண்டம் என்னும் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் இல்லாமையால்,
பிண்டம் என்பது தமிழிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு
இலக்கணமும் கற்பிக்கப்பட்டிருக்கிறது


இதற்கு மேலும் யாரேனும்
தமிழ்ப் பற்று என்றால், சமஸ்க்ருத்த்தை வெறுக்க வேண்டும்,
ஒதுக்க வேண்டும் என்று நினைத்தாலோ
அல்லது
பழந்தமிழர் எந்த மதத்தையும் பின்பற்றவில்லை என்று சொன்னாலோ
அல்லது
பழந்தமிழர் ஹிந்துக்கள் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலோ,
அவர்களுக்கென்றே ஒரு புறநானூற்றுப் பாடல் இருக்கிறது


சிறப்பில் சிதடு என்று ஆரம்பிக்கும் 28 ஆம் பாடலில்
பயனில்லாத பிறவிகள் என்று 8 பிறப்புகள் சொல்லப்பட்டுள்ளது.
அவை குருடு, பிண்டம் (உடல் இருக்கும், உணர்ச்சி இருக்காது.)
கூன், குறள், ஊமை, செவிடு, விலங்கு வடிவு,
அறிவுக் குறையுடன் பிறத்தல் என்பன.


பிறவிக் குறையுடன் ஒருவர் இப்படிப் பிறந்து விட்டால்,
அவருக்குப் பரிவு காட்டி அவர் குறையின்றி வாழ உதவி செய்வோம்.
ஆனால் பிறவிக் குறைகள் இல்லாமல்,
ஆனால் குறையுள்ளவர்கள் போல
கண்ணிருந்தும் குருடராய், உயிர் இருந்தும் பிண்டமாய்,
மேலே சொல்லப்பட்ட பலவாய் ஒருவர் இருப்பாரெனில்,
அவர் திராவிடவாதம் செய்பவராகத்தான் இருக்க முடியும் என்பதைச்
சந்தேகமில்லாமல் சொல்லி விடலாம்!


இனி இந்தக் கட்டுரையின் முக்கியப் பொருளுக்கு வருவோம்.
ப்ராசீ, உதீசி என்னும் சமஸ்க்ருதப் பதங்களை ஏன் புலவர் பயன் படுத்தினார்?
கிழக்கு, வடக்கு என்று அவர் சொல்லியிருக்கலாம் அல்லவா?
சொல்லியிருக்கலாம்.
ஆனால் அவர் சொல்ல வந்த பொருளுக்கு ஏற்றவாறு
அந்த இரு தமிழ்ச் சொற்களும் அமையவில்லை.


கிழக்கு, வடக்கு என்பவையும் திசைகள்தான்,
ப்ராசீ, உதீசி என்பவையும் திசைகள்தான்.
ஆனால் அந்த ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு பொருள் இருக்கிறது.
கிழக்கு என்றால் கீழ்த் திசை அல்லது கீழே உள்ளது என்றும் பொருள்படும்.
கிழக்கு என்பதை குணக்கு அல்லது குணதிசை என்று தமிழில் சொல்வார்கள்,
குணக்கு என்றால் வளைந்தது என்றும், கீழ் உள்ளது என்றும் பொருள்.
கிழக்கிலிருந்துதான் வானம் நகர்ந்து கொண்டு வருவது போல உள்ளது.
ஆனால் அந்த உதயத்தைப் பார்க்க வேண்டும் என்றால்,
கீழ் நோக்கிப் பார்க்க வேண்டும், அதனால் அது கீழ்த்திசை என்றானது.  


மேற்கு என்பது மேல் திசை எனப்படும்.
கீழே உதயமானது, மேல் நோக்கி நகர்ந்து,
நமக்கு மேல் புறமாகச் சென்று விடுகிறது.
அதனால் அது மேற்கு எனப் பெயர் பெற்றது.


மேற்குத் திசையைக் குடக்கு அல்லது குடம் என்றும் சொல்வார்கள்.
தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில், மேற்கில் குடகு மலை இருப்பதால்
இப்படி ஒரு பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
மேலும் குடம் என்றாலும் வளைந்தது என்ற பொருள் உண்டு.
வானம் வளைந்து இருப்பதாகக் காட்சி அளிப்பதால் இப்படிப் பெயர் ஏற்பட்டது.
சமஸ்க்ருத்த்தைப் போல, தமிழிலும், காரணப்பெயராகவும்,
ஒரு அர்த்தத்திலிருந்து உண்டானதாகவும் இப்படிப் பல சொற்கள் இருக்கின்றன.


வளைந்து இருப்பதால் குடத்தைக் ‘குடம்’ என்கிறோம்.
ஆனால் மந்திரிக்கப்பட்ட அல்லது ஜபிக்கப்பட்ட நீர் உள்ள குடத்தைக்
‘கும்பம்’ என்கிறோம்.
பூஜைகளில் ’பூரண கும்பம்’ வைக்கிறோம்.





கும்பம் என்பது சமஸ்க்ருதச் சொல்.
கும்பம் என்றால் உள்ளே அடைக்கப்பட்டது என்பது பொருள்.
மூச்சுப் பயிற்சியின் போது, மூச்சுக் காற்றைக் ’கும்பிக்கிறோம்’.
அது போல குடத்து நீரில், ஜபம், பூஜை, மந்திரம் ஆகியவற்றின் மூலம்
சக்தியை உள்ளடைக்கும் போது அது கும்பம் எனப்படுகிறது.
அந்த அர்த்தத்தை வலியுறுத்த நேரிடும் போது,
கும்பம் என்றே சொல்கிறோம்,
அப்படித்தான் சொல்லி வந்திருக்கிறார்கள்.

‘ஜபிக்கப்பட்டுள்ள நீர் உள்ள குடம்’
அல்லது “மந்திர சக்தி அடைப்பட்ட குடம்’ என்று சொல்வதற்குப் பதிலாகக்
’கும்பம்’ என்று ஒரு சொல்லாக இருப்பதைத்
தமிழில் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
(குடத்தில் அடைக்கப்பட்ட சக்தியிலிருந்து உண்டானவராதலால்,
அகஸ்த்யரைக் கும்ப முனி என்று அழைத்தார்கள்.)

அந்த வகையில், சங்கப் புலவர் கூடலூர் கிழார் அவர்கள்
தான் சொல்ல வந்த பொருளுக்கு ஏற்றாற் போல,
கிழக்கு என்னும் சொல்லும்,
வடக்கு என்னும் சொல்லும் அமையவில்லை என்பதால்
ப்ராசீ, உதீசி என்று
சிறப்புப் பொருள் பொதிந்த சொற்களைப் பயன் படுத்தியுள்ளார்.


ப்ராசீ என்றால், ப்ராசீனமாது, அதாவது பழமையான திசை என்று அர்த்தம்.
உதீசி என்றால், வளர்ந்து கொண்டே இருப்பது,
மேன்மை என்பது போல பல அர்த்தங்கள் உள்ளன.
இந்த இரண்டு திசைகளில் உற்பாதம் நடக்காத்தால்,
அரசனது குடியின் தொன்மைக்கும், மேன்மைக்கும், வளர்ச்சிக்கும்
எந்த்த் தீங்கும் நேராது என்று தெரிவிக்கிறார்.


இதே பாடலில், நக்ஷத்திரங்களப் பற்றிச் சொல்கையில்,
தொன் நாண்மீன், தலை நாண்மீன், நிலை நாண்மீன் என்று
குறிப்பிட்ட அர்த்தங்கள் தொக்கிய சொற்களைப் பயன்படுத்தியுள்ளதால்,
குறிப்பிட்ட கருத்துக்களை வெளிப்படுத்தத் தகுந்த சொற்களாக
ப்ராசீ, உதீசி என்னும் சமஸ்க்ருதச் சொற்களைச்ப்
பயன்படுத்தியுள்ளார் என்று தெரிகிறது. 


சமஸ்க்ருதமும், தமிழும் ஒரே இடத்தில் வாழ்ந்தும், வளர்ந்தும் இருந்திருந்தால்தான்
இப்படித் தகுந்த சொற்கள், தமிழில் அமைந்திருக்க முடியும்.
அதைப் பற்றிய மொழியியல்- தொல் பொருள்- மரபணு என்னும்
முக்கூட்டு ஆராய்ச்சிகள் (Archeo- Genetic and linguistic reserach)
நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.
அவற்றின் முடிவுகள் 2005 ஆ ஆண்டு முதலே வெளி வர ஆரம்பித்து விட்ட்ன.
அவற்றை அடுத்த கட்டுரையில் ஆராய்வோம்.




30 கருத்துகள்:

  1. ஜெயஸ்ரீ ஐயரே அதான் சமஸ்கிருதம் காணாமல் போய்விட்டதே பின்பு அதை ஏன் வாழும் தமிழோடு இணைத்து வாழ வைக்க முயற்சிக்கரீர், ஒருகாலத்தில் பிராமணர்கள் போட்ட ஆட்டத்தில்தான் தற்போது தலையில் குட்டுபட்டு உட்கார்ந்து இருக்கிறார்கள். மீண்டும் அதை தமிழோடு இணைத்து நியாயப்படுத்த வேண்டாமே, தமிழன் திராவிடன் இல்லைதான், ஆனால் தமிழன் வேற்று மொழி கலப்பை நேசிப்பதில்லை, தமிழ் தமிழ்தான்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பெயரில்லா7 அக்டோபர், 2011 5:20 PM//
      இப்படி அவர்களை வெறுப்பேத்திதான் இன்று அனைத்து பார்பனர்களும் அமெரிக்க சென்று விட்டனர்
      சமஸ்கிருதத்தில் தமிழில் இல்லாத அல்லது மறந்துபோன சொற்றகள் அதிகம் உள்ளன. அதாவது ஒரு உயர்ந்த ஜாதிகாரனுக்கும் தாழ்ந்த ஜாதிபெண்ணுக்கும் பிறந்த குழந்தைக்கு இந்த பெயர் தாழ்ந்த ஜாதிகாரனுக்கும் உயற்ந்த ஜாதி பெண்ணுக்கும் பிறந்த குழந்தைக்கு இந்த பெயர் போன்றவைகள் நிறைய உள்ளது தமிழில் தற்போது வழக்கில் இல்லை

      நீக்கு
  2. சமஸ்க்ருதம் காணாமல் போனது தமிழ் நாட்டில்தான். உங்கள் சொத்தை நீங்கள் இழந்து விட்டீர்கள். தமிழ் நாட்டுக்கு வெளியே சமஸ்க்ருதம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இன்று உலகம் அதைக் கையில் எடுத்துக் கொண்டு விட்டது. வரப்போகும் காலக் கட்டத்தில் அறிவு வளர்ச்சிக்கு அது பயனாகப்போகிறது. அறிவுள்ளவர்களுக்குத்தானே அது தேவை. பெயரில்லாதவர்களுக்கு எதற்கு? 75 கட்டுரைகள் படிக்காமல், 76 க்குத் தாவுபவர்களுக்கு தேவையில்லை.

    பதிலளிநீக்கு
  3. தமிழில் உள்ள சமஸ்க்ருதச் சொற்களை நீக்கி, சமஸ்க்ருதத்துக்கும் பொதுவான தமிழுக்கான இலக்கணங்களை நீக்கி விட்டால், பாதி தமிழ் காணாமல் போய் விடும்.

    பதிலளிநீக்கு
  4. // சமஸ்க்ருதம் காணாமல் போனது தமிழ் நாட்டில்தான். உங்கள் சொத்தை நீங்கள் இழந்து விட்டீர்கள். தமிழ் நாட்டுக்கு வெளியே சமஸ்க்ருதம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இன்று உலகம் அதைக் கையில் எடுத்துக் கொண்டு விட்டது. வரப்போகும் காலக் கட்டத்தில் அறிவு வளர்ச்சிக்கு அது பயனாகப்போகிறது. அறிவுள்ளவர்களுக்குத்தானே அது தேவை. பெயரில்லாதவர்களுக்கு எதற்கு? 75 கட்டுரைகள் படிக்காமல், 76 க்குத் தாவுபவர்களுக்கு தேவையில்லை. //

    // தமிழில் உள்ள சமஸ்க்ருதச் சொற்களை நீக்கி, சமஸ்க்ருதத்துக்கும் பொதுவான தமிழுக்கான இலக்கணங்களை நீக்கி விட்டால், பாதி தமிழ் காணாமல் போய் விடும். //



    நான் உன்,( மறியாதைக்காக ) உங்களின் அனைத்து கட்டூரைகளையும் படித்திருக்கிறேன். அதில் பாதிக்கும் மேல் பொய் என்றாலும் கற்பனை நன்றாக இருக்கின்றதே என்று படித்தேன்.
    ஆனால் மேலே (நீ) நீங்கள் உரைத்த கறுத்துரையை கண்டு வெகுண்டுவிட்டேன்.
    உன்னைப்போன்ற அகந்தை பிராமணர்களால் தான். உங்களுடைய சமஸ்கிருதம் காணாமல் பொய்விட்டது.
    எங்களுடைய வீரத்தமிழ் இன்னும் வீறுகொண்டு வளர்கிறது.
    உங்களுடைய திராவிட எதிர்ப்பை ஆதரிக்கிறேன்.அதுபோலவே ஆங்கிளேயர் இந்தியாவிற்கு எதிராக செய்த சூழ்ச்சிகள் போன்ற கருத்துக்களிலும் எனக்கு பாதி உடம்பாடு உண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும் தமிழுடன் சமஸ்கிருத்தை ஒப்பிட்டு இழிவு படுத்தினால், உங்கள் மறியாதை பறிபோய்விடும். இது ஒரு எச்சரிக்கை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நான் உன்,( மறியாதைக்காக ) உங்களின் அனைத்து கட்டூரைகளையும் படித்திருக்கிறேன். அதில் பாதிக்கும் மேல் பொய் என்றாலும் கற்பனை நன்றாக இருக்கின்றதே என்று படித்தேன்.
      ஆனால் மேலே (நீ) நீங்கள் உரைத்த கறுத்துரையை கண்டு வெகுண்டுவிட்டேன்.
      உன்னைப்போன்ற அகந்தை பிராமணர்களால் தான். உங்களுடைய //
      யாரப்பா அது முகவரியில்லாத கோழை அறிவுள்ளவரை மதிக்கத்தெரியாத ஆள் இவரது கட்டுரைகளை படித்தாயா தம்பி(தங்கை)

      நீக்கு
    2. தமிழன் என்று பெயர் வைத்துக் கொண்டால் மட்டும் போதாது. தமிழைப் பிழையின்றி எழுதவும் பேசவும் முயற்சிக்க வேண்டும்.
      முதலில் அதைச் செய்யுங்கள்.

      நீக்கு
  5. @ thamizhan

    நீங்கள் எல்லாக் கட்டுரையையும் படித்தாற்போலத் தெரியவில்லையே. இந்தத் தொடரில் மனித மொழி பற்றிய கட்டுரைகளை நீங்கள் படித்திருந்தால், இப்படி ஒரு கருத்து உங்களுக்கு வந்திருக்காது. மேலும், அடுத்த கட்டுரையை இன்னும் நீங்கள் படிக்கவில்லை என்று தெரிகிறது.

    பன்முனை ஆராய்ச்சிகள் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சமஸ்க்ருதமோ, தமிழோ எந்த மொழியானாலும் அவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகள் உலகளாவிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றையும் சேர்த்து பன் முனை ஆராய்ச்சிகளை இந்தத் தொடரில் கொண்டு வந்து கொண்டிருக்கிறேன். இந்த ஆராய்ச்சியின் ஆங்கிலப் பதிப்புக்குப் பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பலரும் என்று நான் சொல்வதில் சில ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் அடக்கம். அதனால் இங்கு நான் என் விருப்பங்களை வைக்க முடியாது. எது எப்படி இருக்கிறது, அதன் மூலம் நமக்குத் தெரிவதென்ன என்பதைத்தான் நான் சொல்ல முடியும், அதைத்தான் சொல்லிக் கொண்டு வருகிறேன்.

    இந்தப் பன் முனை ஆராய்ச்சியில் தமிழ் நூல்களும் பாரதம் தழுவிய நூல்களும் அடங்கும். இப்படி ஒரு ஆராய்ச்சியைத் தர தமிழும், சமஸ்க்ருத நூல்களும் அறிந்த ஒருவரால்தான் முடியும். இதனால் நான் இங்கு இருக்கிறேனே தவிர, நான் யார் என்ற அடையாளத்தால் இங்கு இல்லை.

    ஒவ்வொரு முறையும் தமிழுடன் சமஸ்க்ருதத்தை ஒப்பிடு செய்வதாக எழுதியுள்ளீர்கள். இந்த ஒப்பீடு 76 ஆவது கட்டுரையான இந்தக் கட்டுரையிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. இந்த ஒப்பீட்டுக்குக் காரணம், கூடலூர் கிழார் அவர்கள் புறநானூறு 229 ஆம் பாடலில் சில சமஸ்க்ருத சொற்களது தமிழ் அமைப்பை உபயோகித்துள்ளார். அது ஏன் என்ற கேள்விக்குப் பதிலே இந்தக் கட்டுரையும், இதைத் தொடர்ந்து வரபோகும் சில கட்டுரைகளும். வீரத் தமிழனான நீங்கள் முதலில் அவரைக் கேளுங்கள். பல சமஸ்க்ருத இலக்கணங்களைத் தமிழுக்குக் கொடுத்துள்ள தொல்காப்பியரைக் கேளுங்கள். என்னிடம் வீராப்பு காட்டுவதற்கு முன் அவர்கள் சொன்னவற்றைப் படியுங்கள்.


    இந்தத் தொடரைப் படிப்பதன் மூலம், ஏன், எப்படி, எதற்கு என்று தேடும் முயற்சியில் நீங்கள் இறங்கினால் அது உங்களுக்குப் பெருமை. அதை விட்டு விட்டு இப்படி ஒரு கருத்துரை இடுவதன் மூலம் தமிழர்களே இப்படித்தானோ என்று எண்ணும் வண்ணம் தமிழர்களுக்கு இழுக்கைத் தேடித் தருகிறீர்கள். அதன் மூலம் உங்கள் மரியாதையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. ஏங்க உண்மையாலுமே உங்கள் பதிவு பாதியென்ன கற்பனைதான், அப்படி இருக்கலாம், இப்படி இருந்திருக்கும் அது போல் தான் சொல்லி உள்ளீர்கள், உதாரணமாக அகத்தியரை “கும்பமுனி” அப்பிடின்னு அழைத்தார்கள்னு சொல்லிர்கிங்க, யார் சொல்லிர்பாங்க? உங்க ஐய்யர் ஆளுங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //“கும்பமுனி” //
      அட என்னப்பா அகத்தியர் எங்கு பிறந்தார் என்று தெரியாமல் கேட்கிற அவர் குடத்தில் பிறந்தவர் அதனால் அவரை கும்பமுனி என்றார்கள் குடம்=கும்பம்
      பெயரியது கேட்கின் வரிவடிவேலோய் பெரிது பெரிது புவனம்
      ........குருமுனியின் கையடக்கம் ----------அவர்பிறந்ததோ குடம் ---புவியில் சிறு மண் போங்க்பா உனக்கு பெயரே இல்லை

      நீக்கு
  7. அதென்னங்க ஜெயஸ்ரீ திருமால்க்குன்னு தனியாக ஒரு பதிவு போட்டுறுகிங்க, உங்க குல சாமிங்கறதுநாலயா?........

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லாமல் ஒளிந்து கொண்டிருப்பவரே,

    கும்பமுனியைப் பற்றி திராவிடவாதிகளிடம் கேளுங்கள். அந்தப் பெயர் விளக்கம் தருவார்கள்.

    சூடாமணி நிகண்டி 1-2 ஆம் பாடலின் கடைசி வரியில்
    “கூரிய கும்பயோனி குறுமுனி அகத்தியன் பேர்” என்று காணலாம்.

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா அவர்களே, நீங்கள் பெயரில்லாமல் கருத்துப் பதிவது நல்லதுதான். பெயர் போட்டுக் கொள்கிறேன் என்று ‘தமிழன்’ என்று போட்டுக் கொண்டு இப்படி கருத்துரைகள் இட்டு, தமிழனுக்குத் தமிழ் அறிவும் கிடையாது, தமிழ் நூலறிவும் கிடையாது, உலக அறிவும் கிடையாதும், ஆராய்ச்சி அறிவும் கிடையாது என்பதைப் பறை சாற்றுவது போலத், தமிழனைக் கேவலப்படுத்தாதீர்கள்.

    விவரம் தெரிந்து கொண்டு பேசுங்கள், அல்லது விவரம் தெரிந்துக் கொள்ளப் பேசுங்கள். அப்படி இல்லாத கருத்துரைகள் மட்டுறுத்தப்படும்.

    பதிலளிநீக்கு
  10. அடடா நீங்கள் மட்டும்? அப்படியே உங்கள் புகைப்படம் போட்டு உண்மையான பெயரில் பதிவு இடுகிரீர்களோ, உங்களுக்கு பெயரில்லததே போதும்,,,,

    பதிலளிநீக்கு
  11. Dear Author,

    Very good posts and good comparison.
    Avoid answering people of above mentioned nature. They are both ignorant and innocent. This is a result of continuous Non-righteous propaganda that was made against a particular culture and sect of the society for past few decades that happened in the holy land of 'Tamil'. Once Tamil people were the becon light to the entire world. But today they are the most useless lot! Thanks to the continuos cultural intoxication made by some foolish mob. But our Lord's Grace through the Lotus Eyes will make these people understand and uplift this tradition of us! The 'Tamil' society has been polluted by useless Western uglier motives and thus they have started differentiating the humane and divine, for they donot understand that human-things are more important that divinely-beings. We say devotion towards a human-guru is more important than a Divine intervention. So kindly donot get dis-hearted by people of unjust claims. Kindly continue with your good work and publish all your works in good volumes! May our Lord, who danced for the 'Butter' from very humble girls of Vrundhavan be with you, in all your Righetous endeavours!

    பதிலளிநீக்கு
  12. Thanks for the empathy. I am not going to respond to such comments. But I cleared his comments (3 more now) for readers to see.

    பதிலளிநீக்கு
  13. திரு ஜெயஸ்ரீ தங்களுடைய கட்டுரைகளுக்கு எம்து 10- அடுக்கு 10 பாரட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். எமது ஐயங்ளை 360 பாகையில் அராய்ந்து பதில் சொல்லவும்.
    1.ஒரு பூவின் பல்வேறு நிலைகளை துல்லியமாக குறிக்க => அரும்பு, முகை, போது, மலர், அலர், வீ என்ற பெயர்கள் இருக்கின்றன… மேலும் வெகு சிலசில எடுத்துக்காட்டுகள்…
    பெண்ணின் பருவ நிலைகள்=> பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை,
    >தெரிவை, பேரிளம்பெண்…
    தமிழில் இயம்புதல், மொழிதல், சாற்றுதல், கழறுதல், விளம்புதல், செப்புதல்,
    >அறைதல் எனச் சொல்லுவதற்குரிய சொற்கள்
    >ஞாயிறு, கதிரவன், சுடரவன், பரிதி, எல்லோன், வெயிலோன், வெய்யோன்
    >எனப் பகலவனுக்குப் பல பெயர்களைக் கண்ட தமிழ் ஒங்கல், பிறங்கல்,
    >பொருப்பு, வெற்பு என மலையின் வகையறிந்து பெயரிட்ட தமிழ்
    >பண்ணை, பணை, செய், கழனி, பழனம், புலம், வரப்புள் என்னும் பல
    >சொற்களால் விளைநிலத்தை விளக்கிய தமிழ், என்பதை போன்று “ஒன்றின்” பல்வேறு பன்புநிலைகளை குறிக்க பல்வேறு பெயர்கள், இவைபோன்று இன்னும் ஈறிலியான பெயர்கள் உள்ளன.

    எனவே நான்கு திசைகளுக்கு இடைப்பட்ட(பண்புகளை)திசைகளை குறிக்க ஊசி, பாசி போன்ற பெயர்கள் ஏன் இருந்திருக்கக்கூடாது… மேலும்….
    நாம் நன்கு அறிவோம் சமஸ்க்ருதம் “செயற்கையாக சிறப்பாக” உருவாக்கப்பட்ட மொழி என்று, எனவே அப்பொழுதிருந்த சில மொழிகளை சார்ந்துதானே உருவாக்கியிருக்க முடியும், ஆகவே ஏன் தமிழிலிருந்து மாற்றிய(ச)மைக்கப்பட்ட சொற்க்களாக ப்ராசீ, உதீசி ஏன் இருந்திருக்கக்கூடாது….. அதற்க்காக சமஸ்க்ருதத்திலிருந்து எந்த சொற்க்களும் வரவில்லையென்று யான் செப்பவில்லை, சமஸ்க்ருதத்திலிருந்து வந்த சொற்க்களை போன்று தமிழிலிருந்து மாற்றிய(ச)மைக்கப்பட்ட சொற்க்களாக இருக்கலாம் அல்லவா… என்பதே யனது தாழ்மையான ஐயம்.
    இதை என் தாய்மொழி தமிழ் என்பதால் கேட்க்கவில்லை உலகின் காலம் கணிக்கமுடியாத மிகத்தொண்மையான மொழி என்பதாலயே அற்ப்புதமான கட்டுரையாளரான தங்களிடம் கேட்க்கின்றேன்.

    -மெய்யப்பஅருண்

    பதிலளிநீக்கு
  14. நன்றி அருண் அவர்களே.

    சில விளக்கங்கள்:-

    # தத்துவ மேதை பெட்ராண்ட் ரஸ்ஸல் அவர்கள் ஒரு முறை சொன்னார் - என் மொழி, என் நாடு, என் கலாசாரம் என்று மனிதன் சொல்ல ஆரம்பித்த பிறகுதான் உலகில் அமைதி நீங்கி, போர் மனப்பான்மை ஏற்படலாயிற்று. அது உண்மை, அதிலும் தமிழ் இனம் என்று இல்லாத ஒரு இன ஈடுபாட்டை வளர்த்து விட்டதால், தான் விரும்பும் வழியில்தான் இன்றைக்குப் பெரும்பாலான தமிழர்கள் சிந்திக்கிறார்களே தவிர, அறிவு, ஆராய்ச்சி பூர்வமாகச் சிந்திப்பதில்லை. தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அந்த மன நிலையிலிருந்து வெளி வந்தால்தான் தமிழின் உண்மையான வரலாறு தெரியும்.

    # தமிழ் தொன்மையானது என்கிறீர்களே, அந்தத் தொன்மை என்ன, எப்பொழுது? அதை அறுதியிடாமல், சமஸ்க்ருதத்தின் தொன்மையை எப்படிக் குறைத்துக் கூற முடியும்?


    # நீங்கள் கொடுத்துள்ள ஒரு பொருட் பன்மொழிகளில், தமிழ்ச் சொற்கள் என்று நீங்கள் நினைக்கும் சொற்கள் உண்மையில் சமஸ்க்ருதச் சொற்கள் என்று தெரியுமா? அவை ஏன் தமிழிலிருந்து சமஸ்க்ருதத்துக்குச் சென்றிருக்கக் கூடாது என்று நீங்கள் கேட்கலாம். சமஸ்க்ருதச் சொற்களுக்கு derivation உண்டு. ஒரு வேர்ச் சொல்லிலிருந்து அவை எப்படி உருவாகும் என்று விதிகள் உண்டு. நீங்கள் மேற்கோளிட்ட சொற்களுக்கு சமஸ்க்ருதத்தில் derivation இருக்கிறது. தமிழில் இல்லை. அதனால் அவை சமஸ்க்ருதத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டவை என்கிறார்கள் மொழி ஆராய்ச்சியாளர்கள்.

    # தானம், தவம் தங்கா வியனுலகம் என்றாரே திருக்குறள் தேவனார், அந்த தானம், தவம் என்னும் சொற்கள் சமஸ்க்ருத derivation இல் எழுந்தவை. தானம் என்னும் சொல்லுக்கு உபநிஷத்தில் அந்தச் சொல் எழுந்த விதம் சொல்லப்பட்டுள்ளது.

    # 30 சதவிகித சொற்கள் சமஸ்க்ருதத்துக்கும், தமிழுக்கும் பொதுவாக இருக்கின்றன என்கிறார்கள். அவற்றைப் பழந்தமிழர்கள் ஒதுக்கவில்லை என்பதை இன்றைய ‘இனமானத் தமிழர்கள்’ அறியவில்லை.

    # சமஸ்க்ருதத்திலிருந்து தனியாக யாரும் எடுத்துத் தமிழில் சேர்க்கவில்லை. உ-ம்- மந்திரம், பிண்டம், சூத்திரம், அதிகாரம் என்று இது வரை சொன்ன சொற்கள். ஆனால் தமிழில் இல்லாத ஒலிக் அமைப்புகளுடன் கூடிய சமஸ்க்ருதச் சொற்களுக்குக்குத்தான் தொல்காப்பியர் வடசொல் திரிபைச் சொல்லியுள்ளார். அந்த சூத்திரத்தை அவர் எச்சவியலில் வைத்துள்ளார். அதுவரை சொல்லாமல் விட்டுப்போன, அல்லது முந்தின பகுதிகளில் சொல்லப்படாத விவரங்களை எச்சவியலில் சொல்வார்கள். எச்சவியல் சூத்திரத்தைக் கொண்டு தமிழில் வடசொல் கிடையாது என்றும், வட சொல் வந்தேறிய சொல் என்று நினைப்பது அறியாமை. அதுமட்டுமல்ல தமிழ்ப் பண் என்பதைப் பற்றி இந்த மொழி ஆராய்ச்சியில் சொல்ல இருக்கிறேன். இந்த இரு மொழிகளும் சாதாரண மக்களிடையே அமைந்திருந்த பாங்கினை அதில் அறியலாம்.

    # இரு மொழியாளர்களான ஒரே சமுதாய மக்களால்தான் அப்படிப் பொதுவான சொற்களை இரண்டு மொழியிலும் கொண்டிருக்க முடியும் என்பதே இந்தத் தொடரில் இனி வரப் போகும் கட்டுரைகளில் சொல்லப்படும்.

    # தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர் என்று ஒருவர் சொல்லிக் கொள்ளலாம், ஆனால் சமஸ்க்ருதம் யாருக்கும் தாய் மொழி அல்ல. அது கம்ப்யூடர் மொழி போல. அதை எல்லோரும் தெரிந்து கொண்டார்கள். அதைத் தெரிந்து கொண்டால்தான் அறிவு பெருகும். உயர்வு கிடைக்கும். அதை அறிந்து கொள்ளவில்லையென்றால் நஷ்டம் அந்த மொழிக்கல்ல.

    (தொடரும்)

    பதிலளிநீக்கு
  15. # இந்தத் தொடரில் பல முறை சொல்லியுள்ளேன் - பழைய செப்பேடுகளில் சமஸ்க்ருதத்திலும், தமிழிலும் ஒன்றாகத்தான் எழுதியுள்ளார்கள்.

    # நன்றாக சமைக்கப்பட்ட சமஸ்க்ருதம் வெறும் பேச்சுக்காக எழுந்தது அல்ல. ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் ஒருவர் இயங்கும் போது தானாகவே வாயில் எழும் என்பதை, வால்மீகியின் வாழ்க்கை மூலம் தெரிகிறது என்னும் விளக்கங்களை முன்பே இந்தத் தொடரில் எழுதியுள்ளேன்.

    # தமிழ் மொழி தற்போதைய மனித வர்கத்தின் ஆதி மனித மொழியாக இருந்தது. அதை மதுர மொழி என்று அழைத்தனர். அது செப்பனிடப்பட்டு இன்றைய தமிழ் மொழியாக ஆக்கப்பட்டது 12,000 வருடங்களுக்கு முன்புதான். அதற்கும் முன்பே சமஸ்க்ருத மொழி இருந்தது. இன்னும் பல விவரங்கள் இந்தத் தொடரில் வருகின்றன.

    # நீங்கள் சொல்வது போல பாசி, ஊசி என்னும் சொற்கள் கிழக்கு, வடக்கு என்னும் திசைகளுக்கு, தமிழில் இயல்பாக எழவில்லை. அவை வட சொல் திரிபு என்றே புற நானூறு உரையாசிரியர்கள் எழுதியுள்ளனர். எந்த அகராதியிலும், நிகண்டிலும் தேடிப் பாருங்கள். ப்ராசி, உதீசி என்றும் போட்டிருப்பார்கள், பாசி, ஊசி என்றும் போட்டிருப்பார்கள், அவை ப்ராசீ, உதீசி என்பவற்றின் வடசொல் திரிபு என்றும் எழுதியிருப்பார்கள், மேற்கோளாக இந்தப் புற நானூற்றுச் செய்யுள் எண்ணைக் குறிப்பிட்டிருப்பார்கள்.

    # இதனால் அந்தச் சொற்கள் வழக்கில் இருந்திருக்கவில்லை என்று தெரிகிறது. ஆனால் அவற்றைப் பயன் படுத்தினால் பொருத்தமாக இருக்கும் என்று கூடலூர் கிழார் நினைக்கவே, அவற்றின் வட சொல் திரிபைத் தந்துள்ளார்.

    # உதாரணமாக என் பெயர் வட சொல்.அதைச் தமிழில் எழுத வேண்டும் என்றால், வட சொல் திரிபைப் பயன் படுத்த வேண்டும். அதன் படி ஜெயஸ்ரீ என்னும் பெயரை ‘செயசிரி’ என்றே தமிழில் எழுத வேண்டும். என்னுடைய நாடி ஜோதிடச் சுவடியில் அப்படித்தான் எழுதப்பட்டுள்ளது. நான் ஏன் அப்படி எழுதவில்லை என்கிறீர்களா? இந்தத் திரிபு செய்யுள் யாத்தலில் செய்யப்படும் என்கிறது அந்தச் சூத்திரம். அதாவது நான் ஒரு செய்யுளில் என் பெயரை எழுத வேண்டும் என்றால், செயசிரி என்றே எழுத வேண்டும்.

    ஆனால் உங்கள் பெயர் அருண் என்பது சமஸ்க்ருதப் பெயர். அது அப்படியே தமிழில் இருக்கிறது. ஆனால் அந்தச் சொல் உருவான முறை சமஸ்க்ருதத்தில்தான் உண்டானது.

    அருண், அருணன் என்பது சூரியனது மற்றொரு பெயர். அது அ- ருணாதி என்பதிலிருந்து எழுந்தது. ருணாதி என்றால் தடுப்பது. அதற்கு முன் ‘அ’ சேர்த்தால் எதிர் மறைப் பொருள் வரும் என்பது சமஸ்க்ருதத்தில் விதி. அதனால் அருண் / அருணன் என்றால் ‘தடுக்க முடியாமல் இருப்பது’ என்று பொருள்.

    ‘அருண கிரண கம்ய:” என்று அகஸ்திய முனிவர் ராமனுக்கு உபதேசித்த ஆதித்ய ஹ்ருதயத்தில் கூறுகிறார். தடுக்க முடியாத கிரணங்களால் அவன் அறியப்படுகிறான் என்பது பொருள். அதனால் அவன் அருணன். இது ஒரு பொருள்.

    ’ரு” என்னும் சமஸ்க்ருத வேர்ச் சொல்லிலிருந்தும் அருணம் என்ற சொல் உண்டாகும். ‘ரு’ என்றால் உடைத்தல் (break) என்று பொருள். இருளை உடைத்துக் கொண்டு கிளம்பி வருவதால் அவன் அருணன் எனப்படுகிறான். அருணம் என்னும் ஒரு சாகை யஜுர் வேத தைத்திரிய சம்ஹிதையில் உள்ளது. அதில் அப்படி உதயத்தில் கிளம்பி வரும் சூரியனை விவரிக்கிறது.

    சமஸ்க்ருதத்தில் உள்ள இந்தப் பெயருக்கு ஏற்றாற்போல தமிழ்ச் சொல் கிடையாது. அதனால் அதை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். சூடாமணி நிகண்டின் 1-55 ஆம் செய்யுளில் சூரியனது பல பெயர்களில் இதுவும் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பெயரில் வட சொல்லுக்கே உரிய சிறப்பு ஒலி அமைப்பு இல்லாததால், இதை எந்த மாறுபாடும் இல்லாமல் தமிழில் பயன்படுத்துகிறார்கள். அதனால் அதன் மூலம் சமஸ்க்ருதம் என்று இன்றைய மக்களுக்குத் தெரியவில்லை. என்னுடைய பெயரில் வடசொல் ஒலிகள் இருப்பதால் என் பெயரை வட சொல் என்று எளிதில் சொல்லி விடலாம். ஆனால் அருண் என்னும் பெயர், வேதத்திலேயே விவரிக்கப்பட்ட பெயர். அருணன் என்னும் சூரியன் உதயத்தில் மான் போலப் புறப்படுபவன். அவனை வணங்கினால் ஆரோக்கியம் (வடசொல்), ஆயுள் (வடசொல் திரிபு), அபமிருத்யு இல்லாமை (அகால மரணம் இல்லாமை - அ-காலம் என்பதும், மரணம் என்பதும் சமஸ்க்ருத்தில் உண்டானவையே) ஏற்படும் என்கிறது அருணனைப் பற்றிய வேத சாகை!

    பதிலளிநீக்கு
  16. {ஏனென்று தெரியவில்லை google-கணக்கு ஏற்றுக்கொள்ளவில்லை}

    திரு.ஜெயஸ்ரீ தங்களுடைய (நம்ப தகுந்த)பதிளுரைக்கு மிக்க நன்றி. இருப்பினும் தாங்கள் விளக்கியுள்ளதை போன்று யானறிந்தவரையில் திரு ம.சோ.விக்டர்(பல தமிழ் ஆய்வு நூல்கள்), திரு.குணா(வள்ளுவத்தின் வீழ்ச்சி), மற்றும் பல இணையதள கட்டுரைகள்(ஞால முதன்மொழிக்கு மிக நெருங்கியது தமிழ் என்று ஆய்வு நோக்கில்), தங்களுடைய வேர்சொற்க்கள் என்ற விளக்கத்திற்க்கு எதிராக இலக்கண, அறிவியல் மற்றும் வரலாறு வழியாக அற்ப்புதமாக விளக்கியுள்ளனர். மேலும் நான் ஒரு இயற்பியல் மாணவனாக ஒய்வு இல்லாமல் இருப்பதால் யமது ஐயங்களை கேட்க முடியவில்லை. எனக்கு ஒய்வு கிடைக்கும் பொழுது தஙக்ளிடம் தெளிவுபெறவிரும்புகின்றேன்.

    ஒரு சிறுவேண்டுகோள் வியாசர் மஹாபாரதம் மூலபுத்தகம் முழுவதும்(ஓரளவாவது) தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எங்காவது கிடைக்குமா தெரிந்தால் தயவுசெய்து சொல்லவும். தங்களுடைய கட்டுரைகள் என்றும் சிற்ப்படைய எனது
    வாழ்த்துக்கள்.

    -மெய்யப்பஅருண்
    aruntao8@gmail.com

    பதிலளிநீக்கு
  17. இந்த இணைப்பில் வியாச பாரதம் முழுவதையும் படிக்கலாம்.

    http://ancientvoice.wikidot.com/source:mahabharata


    இந்த இணைப்பில் வால்மீகி ராமாயணம் முழுவதையும் சமஸ்க்ருத மூலத்துடன் படிக்கலாம்.


    http://www.valmikiramayan.net/

    நீஙகளே படித்து அறிய வாழ்த்துக்கள்.

    அடுத்த மூன்று கட்டுரைகள் முக்கியமானவை. அதில் மூன்றாவது கட்டுரையில் கடல் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தவற்றின் மூலம் திராவிடம் என்ற ஒரு பகுதி 13,000 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை அவர்கள் கொடுத்துள்ள படங்களுடன் விளக்க உள்ளேன். படிக்கவும். இந்தத் திராவிடம் திராவிடேஸ்வரன் என்று சொல்லப்பட்ட வைவஸ்வத மனு வாழ்ந்த இடம். அவனிடமிருந்துதான் திராவிடம் என்ற சொல்லே வந்தது. தமிழனுக்கும், திராவிடத்துக்கும் சம்பந்தமில்லை. முன் எழுதின கட்டுரைகளையும் படிக்கவும். அப்பொழுதுதான் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புலனாகும்.

    இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல ஒரு கிளைமாக்ஸ் இருக்கிறது. ஆனல் அது 100 கட்டுரைகளுக்கு மேல் வரும் என்று நினைக்கிறேன்.

    படித்ததற்கும், கருத்துரைக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  18. //(ஞால முதன்மொழிக்கு மிக நெருங்கியது தமிழ் என்று ஆய்வு நோக்கில்),//

    தமிழ் தான் ஆதியான மனித மொழி என்பதில் சந்தேகமில்லை. இந்தத்தொடரில் அதை நிரூபிக்கும் கட்டுரைகளைக் காணலாம். ஆனால் சமஸ்க்ருதக் காழ்ப்புணர்ச்சியில் உண்மையை நாம் மறுக்கக்கூடாது.

    இனி வரும் கட்டுரைகளில், சமீப காலக் கல்வெட்டுகளிலும் தமிழ் - சமஸ்க்ருத சொல்லாட்சி இருந்தது என்பதை எடுத்துக் காட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  19. நீங்கள் பொன்னியின்செல்வன் நந்தினி போன்றோ என்று தோன்றுகிறது.

    ### தமிழ் தொன்மையானது என்கிறீர்களே, அந்தத் தொன்மை என்ன, எப்பொழுது? அதை அறுதியிடாமல், சமஸ்க்ருதத்தின் தொன்மையை எப்படிக் குறைத்துக் கூற முடியும்? ###



    தொல்காப்பியம் இருக்குவேதத்திற்கு முந்தையது! - முனைவர் க. நெடுஞ்செழியன்
    தொல்காப்பியம் இருக்குவேதத்திற்கு முந்தையது!
    - முனைவர் க. நெடுஞ்செழியன்
    19-ஆம் நூற்றாண்டின் இறுதி யில் (கி.பி.1875) அறிஞர் பர்னல் இரண்டு ஆய்வு நூல்களை வெளியிட்டார். அவற்றுள் ஒன்று, 'தென்னிந்திய எழுத்தி யல் வரலாறு.' மற்றொன்று 'அய்ந்திரப் பள்ளியைச் சார்ந்த இலக்கண ஆசிரி யர்கள்.' இவ்விரு நூல்களுள், இந்திய எழுத்தியல் வரலாறு எனும் நூலில் 'பிராமி முதலான இந்திய எழுத்து வடிவங்களுக்குத் தமிழே அடிப்படை' என்பதை உறுதி செய்திருந்தார். ஆனால் எழுத்தியல் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் இவரின் கருத்தைக் கூடுமானவரை புறக்கணித்தனர். 'அய்ந்திரப் பள்ளியைச் சார்ந்த இலக்கண ஆசிரியர்கள்' (ஒய் ற்ட்ங் ஆய்ண்க்ழ்ஹ நcட்ர்ர்ப் ர்ச் நஹய்ள்cழ்ண்ற் ஏழ்ஹம்ம்ஹழ்ண்ஹய்ள்) என்ற நூலில், 'அய்ந்திரம் என்பது ஒரு சிந்தனைப் பள்ளியே தவிர அது ஒரு தனிமனிதரால் செய்யப்பட்ட இலக்கண நூல் அன்று' என்றார். மேலும் அய்ந் திரம் என்ற இலக்கண நூல் இந்திரன் என்ற கடவுளால் அல்லது தனிமனித ரால் இயற்றப்பட்டது என்பதற்கான எவ்விதச் சான்றும் கிடைக்கவில்லை என்றும் உறுதி செய்திருந்தார். ஆனால் இந்திய அறிஞர்கள், ஏ.சி. பர்னல் அவர் களின் கூற்றை ஒரு தலையாக 'அய்ந் திரம் என்பதைப் பாணினிக்கும் காலத் தால் முற்பட்ட சமற்கிருத இலக்கண நூலாகவே' கருதிவிட்டனர்.

    அய்ந்திரத்தைச் சமற்கிருத 'மொழியிலமைந்த இலக்கணப் பள்ளி யாகப் பர்னல் குறிப்பிட்டாலும் கூட, அவர் தரக்கூடிய எடுத்துக்காட்டுகள் அக்கருத்தை வலியுறுத்தக்கூடிய வகை யில் அமையவில்லை. அவர் குறிப்பிடும் அவ் எடுத்துக்காட்டுகளுள் தலையா யவை இரண்டு. ஒன்று பெளத்த இலக்கியமாகிய 'அவதான சாதகத்தில்' புத்தரின் தலைமாணாக்கருள் ஒருவராகிய சாரிபுத்தன் தமிழ்நாட்டில் தன் பிள்ளைப் பருவத்தில் 'அய்ந்திரம் கற்றான்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகும். இதனை விளக்கும் சக்கரவர்த்தி நயினார், 'அய்ந் திரம் என்பதற்கு உலகாய்தம் எனப் பொருளுரைத்தார் (அ. சக்கரவர்த்தி நயினார், நீலகேசி நூலுக்கான ஆங்கில முன்னுரை (ஆய் ஒய்ற்ழ்ர்க்ன்cற்ண்ர்ய் ற்ர் சங்ங்ப்ஹந்ங்ள்ண்). சக்கரவர்த்தி நயினார், அய்ந்திரத்தை உலகாய்தம் எனக் குறிக்க அவரின் ஆங்கில முன்னுரையைத் தமிழ்ப்படுத் திய பேராசிரியர் நா. வானமாமலை, உல காய்தம் என்பதைப் பூதவாதம் எனக் குறித்தார்.

    உலகாய்தம், பூதவாதம் ஆகிய இரண்டும் ஒரு பொருள் குறிப்பன. அவை நிலம், நீர், தீ, வளி, விசும்பு என்ற அய்ந்து பூதங்களின் இயல்பை விளக்கிய அணுக்கோட்பாடுகளாகும். அறிவியலையும் தருக்கவியலையும் இணைத்த இக்கோட்பாடுகள் பேச்சுக் கலைக்குச் சிறப்பிடம் தந்தன. தருக்க முறையினால் உண்மையை நிலைநாட்ட வேண்டிய தேவை இருந்ததால் இக் கொள்கையாளர்கள் பேச்சுக் கலைக்குச் சிறப்பிடம் தந்தனர். இதனை விளக்கும் வகையில் அறிஞர் பர்னல் தரும் மற்றொரு சான்று பாணினி பற்றியதாகும்.

    காஷ்மீரைச் சார்ந்த சோமதேவா என்பவர் எழுதிய கதாசரிதசாகரம் எனும் நூலிலிருந்து தரும் எடுத்துக்காட்டு அதுவாகும். இந்நூலில் 'சமற்கிருத இலக் கண ஆசிரியராகிய பாணினி அறிவிலியாக இருந்தார் என்றும், அதனால் வரரு சிகாத்தியாயனார் நடத்திய குருகுலத்திலிருந்து விலக்கப்பட்டார் என்றும், அப்படி விலக்கப்பட்ட பாணினி சிவனை நோக்கித் தவம் இருந்தார் என்றும், சிவன் அருளைப் பெற்றபின் மீண்டும் குருகுலத்திற்கு வந்து அவர்களோடு வாதம் புரிந்தார் என்றும் ஏழுநாட்கள் நடந்த அந்த வாதத்தில் பாணினி தோற்றார் என்றும் தன் அருள்பெற்ற பாணினி தோற்றதனால் ஆத்திரமுற்ற சிவன் குருகுலம் பின்பற்றிய அய்ந்திர நூல்களை எல்லாம் அழித்தான்' என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

    மேற்காட்டிய இரண்டு சான்று களுமே அய்ந்திரம் அணுக்கோட்பாடு என்பதையும், அவ் அய்ந்திரம் தருக்க முறையில் வாதமுறையை விளக்கிய பேச்சுக்கலையின் இலக்கணம் என்ப தையும் வற்புறுத்தக் காணலாம். எனவே பனம்பாரனார் 'அய்ந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' எனக் குறிப்பது தொல் காப்பியர் பின்பற்றிய மெய்யியலின் அடிப்படை என்பதும், அம்மெய்யியல் தருக்க முறையினை உள்ளடக்கியது என்பதும் தெளிவு. இதனை,

    நிலம்நீர் தீவளி விசும்போ டைந்தும்

    கலந்த மயக்க முலக மாதலின்

    எனும் நூற்பா உறுதிசெய்யும். தொல் காப்பியர் பொருளதிகாரத்தின் இறுதியில் விளக்கும் பத்து அழகு, காட்சி, ஐயம், தெளிவு முதலான தருக்கவியல் இலக்கணங்கள், 32 தந்திர உத்திகள் ஆகிய செய்திகள் யாவும் அக்கருத்தை உறுதிப்படுத்தும் சான்றுகளாகும்.

    தொடரும்...

    பதிலளிநீக்கு
  20. 2)தொல்காப்பியம் இலக்கண நூலாதலால் அய்ந்திரத்தையும் இலக் கண நூலாகவே கருதிவிட்டனர் அறிஞர் கள். அப்படிக் கருதிய அறிஞர்கள்கூட அய்ந்திரத்தைச் சமற்கிருத நூலாகக் கருதவில்லை. பெளத்த வரலாற்றாசிரி யராகிய தாரநாதர், ''இந்நூல் மிகவும் பழ மையானது; தென்னகத்தில் வழங்கியது; கடவுள் உலகைச் சார்ந்தது; ஆரிய தேசத்தது அன்று'' என உறுதி செய்வார்.

    தாரநாதரைப் போலவே இருக்கு வேதத்தையும் தொல்காப்பியத்தையும் ஒப்பாய்வு செய்த எம். சுந்தர்ராஜ், அய்ந் திரத்தைத் தமிழ் இலக்கண நூலாகக் கருதினாலும், அது இருக்கு வேதத்திற்கு முந்தையது என்று உறுதிசெய்கிறார் (ஓங்ம்ள் எழ்ர்ம் டழ்ங்லிஐண்ள்ற்ர்ழ்ண்c டஹள்ற்). எனவே அய்ந்திரம் என்பது இலக்கண நூலன்று. அது அணுவியலும் தருக்கவியலும் சார்ந்த அறிவுமரபுக்குரியது என்பது தெளிவாகும். ஒருவேளை அதை இலக் கண நூலாகக் கருதினாலும் கூட அது இருக்குவேதத்துக்கு முந்தைய தமிழ் மரபுக்குரியது என்பதே மாற்று உண்மை. இருக்குவேதம் எழுதாக்கிளவியாக வாய்மொழியாகவே வழங்கப்பட்டுள்ளது. சமற்கிருதத்திற்கு இன்றைய வரிவடிவம் அமைந்ததே மிகவும் பிற்காலத்தில்தான். எனவே எழுத்துமுறையே இல்லாத ஒரு மொழியில் எழுத்துகள் பற்றிய இலக் கணம் எப்படி இருந்திருக்க முடியும்?

    மேலும் பானம்பாரனார், தொல் காப்பியரை 'முந்துநூல் கண்டு முறைப் பட எண்ணிப் புலம் தொகுத்தவராகப்' புகழ்கின்றார். இங்கு சொல்லப்படும் 'முந்துநூல்' என்பதில் தொல்காப்பியரின் இலக்கணப் புலமையும் அடங்கிவிடும். அதனால் அய்ந்திரம் என்பதை நாம் இலக்கண நூலாகக் கருதவேண்டியது இல்லை. அப்படிக் கருதினால் பனம்பார னார் 'கூறியது கூறல்' எனும் குற்றம் புரிந்தவராகிவிடுவார்.

    நான்மறை

    அதங்கோட்டாசான் நான்மறை முற்றியவர். இந்நான்மறை என்பது நச் சினார்க்கினியர் குறிப்பிடும் தைத்திரியம், பெளடிகம், தலவகாரம், சாமவேதம் எனும் கருத்தும் அண்மைக்கால ஆய்வு களால் மாற்றம் பெற்றுள்ளன. இருக்கு, யஜுர், சாம, அதர்வணம் என நான்காக எண்ணப்படும் முறை மிகவும் பிற்கால வழக்காகும். சாணக்கியரின் பொருள்நூல், வேதங்கள் மூன்று மட்டுமே என்ற பொரு ளில் ''திரையீ'' எனக் குறிப்பிடுகின்றது. அதனால், நான்மறை முற்றிய அதங் கோட்டாசான் என்ற தொடர்கூட ஆய் வுக்குரியதாகிறது. மாகறல் கார்த்திகேய னார், 'நான்மறை என்பதற்கு மூலமறை' எனப் பொருள்கொள்வதையும் இங்கே எண்ணிப்பார்க்க வேண்டும்.

    மயங்காமரபின் எழுத்துமுறை காட்டி

    பனம்பாரனாரின் பாயிரம் அரிய கருத்துப்புதையலின் திறவுகோலாகும். அறத்தைப் பரப்பும் இயல்பும், வேதப் புலமையில் தேர்ச்சியும் உடைய அதங் கோட்டாசானுக்குத் தொல்காப்பியர், 'மயக்கம்தராத மரபினை உடைய தமிழ் எழுத்துமுறையினைக் காட்டினார்' எனக் குறிப்பது மிகுந்த கவனத்துடன் ஆராயத் தக்கதாகும். வேதத்தில்வல்ல அதங்கோட் டாசானுக்குத் தொல்காப்பியர் தமிழ் எழுத்துமுறையைக் காட்ட வேண்டிய தேவை ஏன் வந்தது? இக் கேள்விக்கான நுட்பத்தை அறிஞர் டி.டி. கோசாம்பி விளக்கக் காணலாம். அவர் தம் நூலில்,

    'கி.மு. 14ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியின்போது, தென்னிந்தி யாவில் இருக்குவேதப் பாசுரங் கள் சரியானபடி தொகுத்து ஒழுங்கு செய்யப்பட்டதுடன் எழுத்து வடிவம் பெற்றுக் குறிப் புரையும் வழங்கப்பட்டது. அதற்கு முன்னர் இருக்குவேத மூலத்தைச் செவிவழியே கேட்டு அப்படியே அசை உச்சரிப்புடன் ஒப்பிக்கும் வழக்கமே இருந்தது.... ஆனால் பொதுவாக இது எழுத்து வடிவத் தில் பத்திரப்படுத்தி வைக்கப்பட வில்லை.'

    எனக் குறிக்கின்றார். இருக்குவேதம் கி.மு. 14ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டு எழுத்து வடிவில் கொண்டுவரப்பட்டது தென்னாட்டில்தான் எனும் டி.டி. கோசாம் பியின் கூற்றைப் பனம்பாரனாரின் மயங்காமரபின் எழுத்துமுறை காட்டி என்ற கூற்றோடு எப்படிப் பொருத்திப் பார்க்காமல் இருக்கமுடியும்?
    தொடரும்...

    பதிலளிநீக்கு
  21. 3) வேதத்தை உச்சரிக்கும் முறை

    தமிழ் எழுத்துமுறையின் சிறப்பை அறியாத ஒருவருக்கு எழுத்துக்களின் எண்ணிக்கை, அவை பிறக்கும் இடம் ஆகியவற்றை விரிவாக விளக்கக்கூடிய வகையிலேயே தொல்காப்பியர் எழுத்த திகாரத்தின் பிறப்பியலை அமைத் துள்ளார். அதங்கோட்டாசான் வேதம் வல்லவராதலால் வேதத்தை ஒலிக்கும் உச்சரிப்பு முறையை எடுத்துக்காட்டி, அப்படி உச்சரிக்கும் முறைக்கும், தமிழ் எழுத்துக்களுடைய பிறப்பிடம், அவற்றின் மாத்திரை (உச்சரிக்கும் கால அளவு) ஆகியவற்றுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை விளக்கக்கூடிய வகையில் இரு நூற்பாக்களை அமைத் துள்ளார். அவை,

    எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து

    சொல்லிய பள்ளி யெழுதரு வளியின்

    பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்(து)

    அகத்தெழு வளியிசை யரில்தப நாடி

    அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே - நூற்பா - 102.

    அஃதிவண் நுவலா தெழுந்துபுறத் திசைக்கும்

    மெய்தெரி வளியிசை அளபுநுவன் றிசினே

    - நூற்பா - 103.

    என்பனவாம். இந் நூற்பாக்கள் இரண்டும் சமற்கிருத ஒலிப்புமுறை, தமிழ் எழுத்து முறைக்கு மாறானது என்பதைப் புலப்படுத்துகின்றன. 'வேதத்தின் ஒலிப் புமுறை பற்றி நான் விளக்க வரவில்லை; மாறாகப் பொருண்மை தெரிகின்ற காற்றினால் ஆகிய தமிழ் எழுத்தின் (மாத்திரையின்) அளவினைக் கூறினேன்' என உறுதி செய்கின்றார். தொல்காப்பியத்தின் அந்நூற்பாக்களுக்கு 'வேதத்தின் ஒலிப்புமுறை பொருள்தெரியா நிலைமை ஆகலின் அவற்றிற்கு அளவு கூறமாட்டார்கள்' என்று உரையாசிரியர் இளம்பூரணார் தரும் விளக்கமும் எண்ணத்தகும். இதனால், அதங்கோட்டாசான் காலத்தில் வேதம் எழுத்து வடிவைப் பெறவில்லை என்பதும், அதன் காரணமாகவே தொல்காப்பியர் மயக்கம் தராத மரபினை உடைய தமிழின் எழுத்துமுறையைக் காட்டினார் என்பதும் உறுதியாகின்றது.

    தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையும் வேதக் கடவுளரின் எண்ணிக்கையும்

    வேதக் கடவுள்களின் எண் ணிக்கை 33 என்பதை இருக்குவேதம், அதர்வண வேதம் ஆகியவையும் அவற் றின் வழியாகத் தோன்றிய பிராமணங் களும் உறுதிசெய்கின்றன. அவை,

    ஆதித்தியர்கள் 12

    வசுக்கள் 8

    உருத்திரர்கள் 11

    வசத்காரர் 1

    பிரஜாபதி 1

    என்பன. 33 என்ற எண்ணிக்கை வேதநூல்களில் வரையறுக்கப்பட்ட தற்கான காரணத்தை ஆராயும் சுந்தர்ராஜ் அம் முப்பத்து மூன்றும் தொல்காப்பியர் குறிப்பிடும்

    உயிரும் உடம்புமாம் முப்பது முதலே

    சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே.

    எனும் நூற்பாவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்பதைத் தம்நூலில் (தண்ஞ் யங்க்ண்c நற்ன்க்ண்ங்ள் ஆக்க்ங்ய்க்ஹம்) விரிவாக விளக்கியுள்ளார். ஆதித்தியர்கள் 12 என்பது தமிழின் 12 உயிர் எழுத் துக்களே என உறுதி செய்யும் அவர், வசுக்கள் பற்றியும் தக்க சான்றுகளுடன் ஆராய்ந்துரைக்கிறார். 'வழு' என்னும் தமிழ்ச்சொல்லே 'வசு' என ஆகியதை அறிஞர்கள் எமனோ, பர்ரோ தொகுத்த 'திராவிட வேர்ச்சொல் அகராதி'யிலிருந்து (உங்க்.4336) எடுத்துக்காட்டி நிறுவு வார். இந்த வசுக்கள் மொழிக்கு முத

    லில் வாரா தமிழ் மெய்யெழுத்துக்கள் என்பதும் இந்த எட்டும் தொல் காப்பியருக்குப் பிந்திய வழக்கு என்பதும் இங்கே எண்ணத்தகும்.

    'க' எனும் மெய்யெழுத்து

    இருக்குவேதக் கடவுள்களில் ஒன் றாகக் குறிக்கப்படுவது 'க' என்பதாகும். இக்கடவுளைப் பற்றிய வரலாறு தெரி யாமல் அறிஞர்கள் குழம்பியுள்ளனர். (இராகுல சாங்கிருத்தியாயன், ரிக்வேத கால ஆரியர்கள்) பிரஜாபதியாகக் கருதப் படும் 'க' என்பது தமிழ் உயிர் மெய் எழுத்தான 'க' வேயாகும். சங்க காலத்தில் 'க' என்பது ற் என எழுதப்பட்டது. இவ் வடிவத்தையே மனித உருவிலிருக்கும் 'க' வே என இருக்குவேதம் போற்று வதை ஆய்வுகள் உறுதிசெய்கின்றன.


    தொடரும்...

    பதிலளிநீக்கு
  22. 5)தொல்காப்பியத்தின் பழமை

    இருக்கு வேதம் முதன்முதலாகத் தென்னாட்டில் எழுத்து வடிவில் தொகுக் கப்பட்டு குறிப்புரைகளும் எழுதப்பட்டன எனவும், அக்காலம் கி.மு. 14 ஆம் நூற் றாண்டு எனவும் டி.டி. கோசாம்பி கூறுவ தாலும், இருக்குவேதம், தொல்காப்பியர் கூறும் தமிழ் எழுத்திலக்கணம் முதலான இலக்கணக் கூறுகளைத் தழுவி அமைந் துள்ளதாலும், இருக்குவேதம் தொகுக்கப் பட, அதாவது தொல்காப்பியர் விளக்கிய எழுத்துமுறையை வேதமொழிக்குரிய வகையில் வடிவமைத்து, அதனடிப்படை யில் வேதத்தை எழுத்துவடிவில் கொண்டுவரக் கொஞ்சம் கால இடை வெளி தேவைப்பட்டிருக்கும். எனவே, தொல்காப்பியம் இருக்கு வேதத்திற்கு முற்பட்டது என்பது தெளிவு.

    தொல்காப்பியர் குறிப்பிடும் வழி பாட்டு முறைகளான கொடிநிலை, கந்தழி, வள்ளி எனும் மூன்றும் தந்திர வழி பாட்டுக்குரியன என்பதையும், அவை முறையே சிந்துவெளி அகழாய்வில் கண்டெடுக்கப் பெற்ற லதாசாதனம் (லதா - கொடி, சாதனம் - நிலை) இலிங்கம், பகயாகம் எனும் சகம்பரி (ஆறு வகையான செல்வங்களை வழங்கும் வள்ளன்மை மிக்க தந்திரச் சடங்கு) எனவும் அடையாளம் காணப் பட்டுள்ளன. சிந்துவெளி எழுத்துமுறை பற்றி ஆராய்ந்த உருசிய நாட்டு அறிஞர்கள், அவ்எழுத்துமுறை தொல்காப்பியர் காட்டும் இலக்கண அமைதியோடு மட்டுமே பொருந்துகிறது என்பதை முப்பது ஆண்டுகளுக்கு முன்பே உறுதி செய்தனர். (பட்ங் ஐண்ய்க்ன்

    15லி4லி80).

    கி.மு. எட்டாம் நூற்றாண்டில் பிரா மணங்கள், ஆரண்யங்கள், தர்மசாத்திரங் கள் முதலான வைதிக இலக்கியங்கள் தோன்றின. இவை உருவாக்கிய சமூகக் கோட்பாடுகளுக்கு மறுப்பாக ஓர் அறிவுப் புரட்சி தோன்றியது. அப்புரட்சியைப் பரிவிராசகர் அமைப்பு நாடுமுழுவதும் கொண்டு சென்றது. அவ் அமைப்பின் மூலவர் எண்ணியக் கோட்பாட்டின் நிறுவனராகிய கபிலர் ஆவார். எண்ணியம் (சாங்கியம்) தொல்காப்பிய அய்ந்திர மரபிலிருந்து கிளைத்தது. வேத வேள்வி எதிர்ப்பும், அணுவியலும், கடவுள் மறுப்பும், எண்ணியத்தின் கூடுதல் அடிப்படை. இவ் எண்ணியம் கி.மு. ஆறாம் நூற்றாண் டில் ஆசீவகத்தோடு இணைந்தது. அதனால் கி.மு. 8ஆம் நூற்றாண்டிலோ, அல்லது அதற்குப் பின்போ தொல் காப்பியம் இயற்றப்பட்டிருக்குமானால் எண்ணியத்தின் தாக்கம் அல்லது ஆசீவகத்தின் தாக்கம் அதில் இருந்தாக வேண்டும். ஆனால், அப்படி ஒரு சுவடே தொல்காப்பியத்தில் இல்லை.

    எனவே மெய்யியல், பண்பாட்டி யல், தருக்கவியல், எழுத்தியல், தொல்லியல் முதலான அனைத்துத் துறைகளின் அடிப்படையில் ஆராய்கின்றபோது, இருக்குவேதத்திற்கு மட்டுமல்ல. உலகில் எழுதப்பெற்ற நூல்கள் அனைத்திற்கும் தொல்காப்பியமே முந்தையது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை; உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.

    (மேலும் கூடுதல் செய்திகளுக்கு கட்டுரையாசிரியரின் 'தொல்காப்பியம் - திருக்குறள் காலமும் கருத்தும்' எனும் நூலினைக் காண வேண்டுகிறோம்)

    -நட்புடன்
    வைரன்

    பதிலளிநீக்கு
  23. டேய் வேன்னப்பயளுகளா வெள்ளையான வேற இனத்தவன்னு சொல்றிங்க அரபிக்காறன வேற இனத்தவன்னு சொல்றிங்க, ஆனா சமஸ்கிரதம் பேசறவன் மட்டும் வேற இனத்தவன்னு ஏண்டா ஒத்துக்க மாற்றிங்க. சமஸ்கிரதத்த ஏற்காத மயிரானுங்க, ஹிந்து மத்த மட்டும் எதுக்குடா எர்க்கிரிங்க, எதிர்த்த மொத்தமா எதிருங்க இல்லாட்டி மொத்தமா ஆதரிங்க டா வெண்ணைகளா அரவேக்காட்டு மண்டைகளா.

    பதிலளிநீக்கு
  24. தொல்காப்பியம் இருக்குவேதத்திற்கு முந்தையது! - முனைவர் க. நெடுஞ்செழியன்
    http://thiruneri.blogspot.com/2010/09/blog-post_54.html
    -------------------------------------------------------

    ""சமஸ்கிருதம், ஆங்கில மொழிகளெல்லாம் தமிழிலிருந்து பிறந்த மொழிகள்தான்!''
    ம.சோ. விக்டர் நேர்காணல்

    http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=1527
    ------------------------------------------------------

    சமஸ்கிருதம் தமிழிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு மொழி
    http://aryandravidian.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/

    இன்னும் பலப்பல.....
    -வைரன்

    பதிலளிநீக்கு
  25. tamil il pathi samaskirutham illai endral azhinhu vidum endru sonnathu vethanaiaga ullathu.nan ella katturaigalayaum padithukondu irukiren neengal sanskrit ae uyarthiyum tamizh ae thazhthiyum oru sila idangalil kuripidugireergal (oru pen vasagar engo ithe karuthai kuripittu irunthar ).manthirangal vedangal sanskrit il matume varum enbathu manithargaluku theriakudathu enbatharkaga ezhuthapattirukalam endru ninaikiren melum mukthi adaiyum pothu samaskiruthathil matum than vedam varum enbathum satru nambum padi illai

    பதிலளிநீக்கு
  26. திரு அருண் அவர்களே,

    //nan ella katturaigalayaum padithukondu irukiren //

    எல்லாவற்றையும் படித்து விட்டு வாருங்கள். ஆங்கில வலைத்தளத்திலும் பல கட்டுரைகள் இட்டுள்ளேன்.

    // neengal sanskrit ae uyarthiyum tamizh ae thazhthiyum oru sila idangalil kuripidugireergal //

    நீங்கள் எல்லாக் கட்டுரைகள் அவற்றில் நான் இட்டுள்ள கருத்துரைகளைப் படிக்கவில்லை என்று தெரிகிறது. இந்த கட்டுரையிலும் சொல்லியிருப்பேன்.

    தமிழும், சமஸ்க்ருதமும், 12,000 வருடங்களுக்கு முன் ஒரே மக்களால் பேசப்பட்டவை. தமிழ் பேச்சு மொழியாகவும், சமஸ்க்ருதம் வேத மொழியாகவும் இருந்தது. 12,000 வருடங்களுக்கு முன் தமிழுக்கு வரி வடிவம் கொடுக்கப்பட்டது. கொடுத்தவர் அகத்தியர். வரி வடிவம் கொடுத்த, தமிழ் இலக்கணம் கொடுத்த அகத்தியரே சமஸ்க்ருதம் அறிந்தவரும், வேதம் அறிந்தவரும், யாகம்செய்தவரும் ஆவார். பாணன் என்றால் நமக்குத் தெரியும். பாணினி என்பவர்தான் சமஸ்க்ருத இலக்கண கர்த்தா என்பது தெரியுமா? அந்த சமஸ்க்ருத இலக்கணம், செய்யுள் இயற்ற உண்டாக்கப்பட்டது. தமிழ் இலக்கணமும் செய்யுள் இயற்ற உண்டாக்கப்பட்டது. ஒரே சமயத்தில், அகத்திய்ருக்குத் தமிழ் இலக்கணமும், பாணினிக்கு சமஸ்க்ருத இலக்கணமும் சிவ பெருமானால் உபதேசிக்கப்பட்டது என்பதே ஐதீகம். கால்டுவெல் கட்டுரை இந்தத் தளத்தில் இருக்கிறது. அதன் கருத்துரையில் எழுதியிருப்பதைப் படிக்கவும்.

    தமிழ் இலக்கணத்தில் எழுத்து, ஒலியாக உடலில் பிறக்குமிடம் சொல்லப்பட்டுள்ளது. அது சமஸ்க்ருத இலக்கணத்தில் சொல்லப்படவில்லை. ஆனால் ஒரு எழுத்து பிறக்கும் போது அதன் அளவை (மாத்திரை) எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை அது விரிவாகச் சொல்கிறது. அதன் அடிப்படை வேத ஒலியே. பிறப்பியல் சூத்திரங்களின் முடிவில் தொல்காப்பியரும், இந்த மாத்திரைக் கோடல் வேதத்தின் கண் உள்ளது என்று சொல்லியிருக்கிறார். 61 ஆவது கட்டுரையைக் காண்க.

    சரி. தொல் காப்பியம் என்கிறோமே, அதில் தொல் தமிழ்ச் சொல். காப்பியம் சமஸ்க்ருதச் சொல். அதன் வேர்ச் சொல் சமஸ்க்ருதத்தில்தான் உள்ளது.

    தொல் காப்பியரது இயற் பெயரைப் பார்ப்போம். அது “திரண தூமாக்கினி” இது நூறு சதவீதம் சமஸ்க்ருதப் பெயர். தொல்காப்பியம் அரங்கேற்றிய போது இருந்த பாண்டிய மன்னன், நிலம் தரு திருவிற் பாண்டியன். அவனை “மாகீர்த்தி” என்றே அழைத்தனர். அவன் பெயரை அப்படித்தான் நச்சினார்ர்கினியர் உரையில் எழுதியுள்ளார். அது சமஸ்க்ருதச் சொல். தொல்காப்பியத்தை ஆராய்ந்து அங்கீகரித்த அதங்கோட்டு ஆசிரியர் (ஆசிரியர்- சமஸ்க்ருதம் சார்ந்த சொல்) நான்மறை அறிந்தவர். எவை நான் மறை என்று ஒரு கருத்துரையில் எழுதியிருப்பேன். படிக்கவும். தொல்காப்பியத்தை எழுத, தனக்குள்ள தகுதி என்று தொல்காப்பியர் கூறுவது ஐந்திரம் என்னும் சமஸ்க்ருத வியாகரண நூல். மயனது ஐந்திறம் அல்ல அது. சந்தேகமிருந்தால் மயனது புத்தகம் குறித்த குறு நூல் மைலாப்பூர் ஓரியண்டல் புக்ஸ் கடையில் இருக்கிறது. வாங்கிப் படிக்கவும்.

    சமஸ்க்ருத ஐந்திர வியாகரணம் படித்து, தொல் காப்பியத்தை இயற்றியிருப்பதால், தமிழ் இலக்கணத்துக்கும், சமஸ்க்ருத இலக்கணத்துக்கும் உள்ள ஒட்டுறவை அது காட்டுகிறது.

    //manthirangal vedangal sanskrit il matume varum enbathu manithargaluku theriakudathu enbatharkaga ezhuthapattirukalam endru ninaikiren//

    உங்கள் ஹேஷ்யங்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால், ஆதாரங்கள் கொடுங்கள். நான் ஆதாரங்கள் கொடுக்கிறேன் அல்லவா? அது போல ஆதாரங்களைக் காட்டுங்கள்.

    // melum mukthi adaiyum pothu samaskiruthathil matum than vedam varum enbathum satru nambum padi illai//

    முக்தி அடையும் போது சமஸ்ருதத்தில்தான் வேதம் வரும் என்று எங்கே சொன்னேன்? முக்தி என்றா சொன்னேன்? ஒழுங்காகப் படிக்கவும். முக்தி என்றால் என்ன என்று தெரியுமா?

    பதிலளிநீக்கு