புதன், 22 ஜூன், 2011

56. வராஹமிஹிரர் காட்டும் திராவிட நாடு -2

 

 
திசைவாரியாக நாடுகளை வகைப்படுத்தியுள்ள கூர்மச்சக்கர்த்தின் தெற்குத் திசையில் சேர, சோழ, பாண்டிய நாடுகள் குறிக்கப்பட்டுள்ளன என்று அறிந்தோம். இனி தென் மேற்குத் திசையில் குறிக்கப்பட்டுள்ள நாடுகளின் பெயரைப் பார்ப்போம்.


 

கூர்மச் சக்கரத்தில் தென்மேற்குத் திசையை, சுவாதி, விசாகம், அனுஷம் ஆகிய நட்சத்திரங்கள் குறிக்கின்றன. வராஹமிஹிர்ர் பட்டியலிட்டுள்ள வரிசையில் அந்த்த் திசையில் உள்ள நாடுகள் வருமாறு:-பஹல்லவம்
காம்போஜம்
சிந்து
சௌவீரம்
வடவாமுகம்
அரவம்
அம்பஸ்தம்
கபிலம்
நாரீமுகம்
ஆநர்த்தம்
பேணகிரி
யவனம்
மகரம்
கர்ணப்ராவேயம்
பாரசவம்
சூத்திரம்
பர்பரம்
கிராடம்
கண்டம்
க்ரவ்யம்
ஆசீயம்
ஆபீரம்
சன்சுகம்
ஹேமகிரி
சிந்துகலகம்
ரைவதகம்
சௌராஷ்டிரம்
பாதரம்
திராவிடம்
மஹார்ணவம்இந்தப் பெயர்களில் பலவும் இன்று வழக்கில் இல்லை. ஆனால் நம்மால் அடையாளம் காணமுடிகிற பல பெயர்களில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அந்தப் பெயர்களால் வழங்கப்படும் மக்கள், வேத வழி தவறியதால், மிலேச்சர்கள் என்று சொல்லப்பட்டவர்கள். இந்தப் பட்டியலில் உள்ள பஹல்லவம், காம்போஜம், சௌவீரம், அம்பஸ்தம், யவனம், பர்பரம், கிராடம் ஆகிய இடங்களின் பெயரைக் கொண்டவர்கள் மிலேச்சர்கள் என்று கருதப்பட்டவர்கள்.


பொதுவாகவே மிலேச்சர்கள், சிந்து நதிக்கு அப்பால் வாழ்ந்திருக்கிறார்கள். சிந்து நதிக்குக் கிழக்கே ஓடிய சரஸ்வதி நதியே வேத வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்தது. சரஸ்வதி என்பவள் பிரம்மனுடைய துணைவி. அவளுடைய அருளால்தான் வேத வாக்கே எழுகிறது. எனவே வேதமும், வேள்வியும் செய்ய சரஸ்வதி நதி முக்கிய இருப்பிடமாக இருந்தது. வேத வாழ்கை வாழாதவர்களுக்கு சரஸ்வதி நதிப் பகுதியில் வேலை இல்லை. இதன் காரணமாகவும், வேதமரபிலிருந்து தவறிய மக்கள் வாழ்ந்த மிலேச்ச வாழக்கையால், மற்ற வேத மரபினரது வாழ்க்கை முறை திரிந்து விடக் கூடாது என்பதாலும், அந்த மிலேச்சர்களை சிந்து நதிக்கப்பால் அனுப்பினர்ஆரிய- தஸ்யு போராட்டம் எஎறு மாக்ஸ் முல்லரால் சொல்லப்பட்ட போரில்  யயாதியினது மகன்கள் காலத்தில் இவ்வாறு நடந்தது என்பதை நாம் முன்னமே அறிந்தோம்(பகுதி 30)


ஆயினும் அந்த மிலேச்சர்கள் தள்ளி வைக்கப்பட்டவர்களாகக் கருதப்படவில்லை. இந்தக் கூர்மச் சக்கரப் பட்டியலில் உள்ள மிலேச்சர்கள் மஹாபாரதத்தில் ஆங்காங்கே சொல்லப்பட்டுள்ளார்கள். மேலே சொல்லப்பட்ட மிலேச்சர்கள் யுதிஷ்டிரர் செய்த ராஜ சூய யாகத்துக்கு வந்திருந்தனர் என்று கிருஷ்ணர், யுதிஷ்டரிடம் -பா -3-51 –இல் கூறுகிறார். இவர்கள் பாரதப் போரிலும் பங்கெடுத்துள்ளனர். எனவே மிலேச்சம் என்பது ஒரு தீட்டு மாதிரி ஒட்டிக் கொள்ளவில்லை. வேத மரபை விட்டால் அவர்கள் மிலேச்சர்கள் எனப்படுவார்கள். அவர்களே மீண்டு வந்தால் ஏற்றுக் கொள்ளப்படத்தக்கவர்கள் என்ற முறை இருந்து வந்திருக்கிறது.


இந்தப் பட்டியலில் காணப்படும் மிக முக்கிய மிலேச்சர்கள் காம்போஜர்கள். காம்போஜ அரசனான சுதக்ஷிணன் என்பவன் திரௌபதியின் சுயம்வரத்துக்கு வந்தான் என்கிறது மஹாபாரதம், எனவே மிலேச்சத் தன்மை என்பது நிரந்தரமான ஒன்றாகக் கருதப்படவில்லை என்று தெரிகிறது. வேத மரபிலிருந்து வழுவினாலும், பிற்கால சந்ததியர்கள் மீண்டும் வேத மரபுக்கு வந்து அங்கீகாரம் பெற்றிருக்கின்றனர் என்று தெரிகிறது. தமிழ் சித்தர் பாடல் தொகுப்பில் காணப்படும் உரோம ரிஷி (ரோமக ரிஷி எனப்படுபவர்) என்பவரும் மிலேச்சரே. ‘வேதாந்தம் அறியாத மிலேச்சர் தாமேஎன்று அவர் பாடலில் எழுதியுள்ளார். மிலேச்சராகப் பிறந்தாலும், பல மிலேச்ச ரிஷிகள் பாரத நாட்டில் அங்கீகாரமும், மரியாதையும் பெற்றனர். ஒரு மிலேச்ச ரிஷி தமிழில் எழுதியது எவ்வாறு என்ற காரணத்தைத் தேடினால் இன்னும் சில ஆச்சரியங்கள் தெரிய வரும். அவற்றைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளாமல் இந்தத் தொடர் முடியாது!


காம்போஜர்களைப் பார்ப்போம். காம்போஜர்கள் என்னும் பெயரில் வட இந்தியாவின் பல இடங்களிலும் மக்கள் இருந்திருக்கின்றனர். அவர்கள் பாரதத்தில் மட்டுமல்ல, அதற்கப்பாலும் கோலோச்சியுள்ளார்கள். .


காம்போஜர்கள், காஷ்மீர் மாநிலத்தின் வட மேற்கில் வாழ்ந்தவர்கள் என்று சொல்லும் பல குறிப்புகளும் உள்ளன. அதாவது இன்றைய ஆஃப்கனிஸ்தானம், மற்றும் அதற்கும் மேற்கு, வட மேற்குப் பகுதிகளில், காந்தாரம்காம்போஜம் போன்ற நாடுகள் இருந்தன. அந்தக் காம்போஜப் பகுதி இமயமலைப் பகுதியைச் சார்ந்தது. பாண்டவர்கள் செய்த ராஜ சூய யாகத்திற்கு காம்போஜர்கள் இமயமலைப் பகுதிகளில் விசேஷமாகக் காணப்படும் மான் வகைகள், கம்பள வகைகள் போன்றவற்றை வெகுமானமாகக் கொடுத்தனர் என்று மஹாபாரதம் சொல்வது (- பா- 2-48) இமயமலைப் பகுதி காம்போஜமாக இருக்க வேண்டும்.


ஆனால் கூர்மச் சக்கரத்தின் தென் மேற்குப் பகுதியிலும், அதாவது இந்தியாவின் தென் மேற்குப் பகுதியிலும்  ஒரு காம்போஜம் இருந்திருக்கிறது. அது எப்படி?


இங்கு ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வேத மரபில் வழுவினவர்களுக்கு சரஸ்வதிப் பகுதியில் இடமில்லை. அதைத் தவிர பிற இடங்களில் சென்று குடியேறி இருக்கின்றனர். அப்படி ஒரு குழு தென் மேற்குப் பகுதியிலும் வந்திருக்கிறது. அவர்கள் குடியேறின பகுதியே காம்பே என்றும், தற்சமயம் கம்பாட் என்றும் வழங்கப்பட்டுள்ளது; குஜராத் மாநிலத்தை ஒட்டியுள்ள காம்பே வளைகுடா, காம்போஜர்கள் என்ற பெயரால்தான் வந்தது என்ற ஒரு கருத்து இருக்கிறது.


இந்தப் படத்தில் உள்ள காம்பே வளைகுடாவை ஒட்டி காம்போஜம் இருந்திருக்க வேண்டும்.

காம்போஜர்கள்


பொதுவாகவே காம்போஜர்கள் வாணிபத்தில் நாட்டம் கொண்டிருந்தனர். காஷ்மீருக்கு அப்பால் இருந்த காம்போஜம், உத்தர பதம் (பின்னாளில் சில்க் ரூட்) எனப்படும் வட இந்தியாவையும், ஐரோப்பாவையும் இணக்கும் வணிகப் பாதையில் இருந்தது. அந்தக் காம்போஜத்திலிருந்து தெற்கே துவாரகை வரையிலும், சிந்து- சரஸ்வதி நதிகளை ஒட்டியும் ஒரு வணிகப் பாதை இருந்தது. மஹாபாரதப் போரே இந்த வணிகப் பாதைகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, பாண்டவர், கௌரவர் என்னும் இரு தரப்பினராலும், பாரதம் முழுவதும் இருந்த நாடுகளைத் தங்கள் வசம் இழுக்கச் செய்தது என்று எண்ணும்படி சில வாதங்கள் உள்ளன. அவற்றை இந்தத் தொடரின் போக்கில் பிறகு காண்போம்.


வடமேற்கில் இருந்த காம்போஜர்கள் உத்தரபதத்தின் வழியே பெங்கால் வரை சென்று அங்குள்ள அங்க, வங்க நாடுகளிலும் குடியேறி உள்ளனர். அதாவது இந்தியாவின் கிழக்கு, வட கிழக்குப் பகுதிகளிலும் காம்போஜர்கள் இருந்தனர். அவர்கள் பெயர் இருக்கும் இடங்களில் எல்லாம்சிங்க’  என்னும் பெயரில் ஊர்களும் காணப்படுகின்றன. அவர்கள் சிங்கங்களை அடக்குவதில் பெயர் போனவர்களாக இருந்திருக்கலாம். அல்லது அவர்களது தலைவன் சிங்கத்தை அடக்கி இருக்கலாம். அந்தப் பெருமையை அவர்கள் என்றென்றும் பறை சாற்றும் வண்ணம் சிங்கத்தின் பெயருடன் தங்கள் குடியிருப்பை அமைத்திருக்கலாம்.


காஷ்மீருக்கு அப்பால் இருந்த காம்போஜத்தின் முக்கிய நகரம்சிங்கபுரம்ஆகும். ராஜ சூய யாகத்துக்காக அர்ஜுனன் வடக்குத் திசையில் செல்லும் போது ஆபீரர்கள், உரகர்கள் போன்றவர்களை வென்று, காம்போஜர்களது சிங்கபுரத்தை அடைந்தான். (-பா- 2-26). அந்த சிங்கபுரத்துக் காம்போஜர்கள் மிகுந்த தனம் படைத்தவர்கள். அவர்களை வென்று அவர்களது தனத்தை (செல்வத்தை) அடைந்ததால் அர்ஜுன்னுக்குத் தனஞ்சயன் என்ற பெயர் ஏற்பட்டது.

வங்க நாட்டுக் காம்போஜர்கள், அங்கும் சிங்க புரம் (இன்றைய மேற்கு வங்கத்தின் சிங்கூராக இருக்கலாம்) என்னும் நகரை நிர்மாணித்தனர்

காம்பேயில் காம்போஜர்கள் குடியமர்ந்த பகுதியிலும், “சி(ம்)ஹபுரா (பவ நகரில் உள்ள சிஹோர்) என்னும் பெயரில் ஒரு நகரம் அமைக்கப்பட்டது. இந்த இடத்தில் சிங்கங்கள் அதிகம்காம்பே வளைகுடாவை ஒட்டி சிங்கங்களின் சரணாலயம் கிர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிம்ஹபுரா இருந்த பவநகருக்கு அருகில் கிர் பகுதி இருப்பதைக் காணலாம். தற்போதைய துவாரகையும், சரஸ்வதி நதி கடலில் முடிந்த இடத்தையும் காணலாம். சரஸ்வதி முடிந்த இடத்தில் (கடலில் கலந்த இடம்) இருந்த துவாரகை இன்று முழுகி விட்டது. இந்தக் காம்பே வளைகுடாப்பகுதியே, 9000 ஆண்டுகளுக்கு முன் நிலப்பகுதியாக இருந்தது.

பெயர்ப் பொருத்தம் மட்டுமல்லாமல், இன்றைக்கு இருக்கும் நிலையுடனும் பொருந்தி இருப்பதால், பாரதம் கூறும் விவரங்கள் கற்பனையல்ல என்று தெரிகிறது.


நிலவழி, கடல் வழி வாணீபம் செய்த இந்தக் காம்போஜர்கள் மேற்கொண்டு சென்ற இடங்கள் சிங்களம் தொடங்கி, சிம்மபுரம் என்னும் சிங்கப்பூர் வரை இருக்கக்கூடும். அதுபோல, ஆஃப்கானிஸ்தானதுக்கு அப்பால் இருந்த காம்போஜத்திலிருந்து, அரேபியா, எகிப்து, ஐரோப்பா என பல இடங்களுக்கும் அவர்கள் பரவி இருக்க வேண்டும். மரபணு ஆராய்ச்சிகளில் இங்கு சொன்ன எல்லா இடத்து மக்களுக்கும் தொடர்பு தெரிகிறது. அதிலும் இன்றைய ஸ்ரீலங்காவைச் சேர்ந்த சிங்களவர்களுக்கும், இந்தியாவின் வடமேற்கு, மற்றும் கிழக்குப் பகுதி மக்களுக்கும், டெண்டல் மார்ஃபாலஜி டெக்னிக் எனப்படும் பல்-தாடை அமைப்புகளில் ஒற்றுமை இருக்கிறது என்று டா. ஹாக்கே அவர்கள் ஆய்வில் தெரிவித்துள்ளார். இந்தியாவின் இந்த இரண்டு பகுதிகளிலும் காம்போஜர்கள் இருந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


சிங்களவர்கள்

மஹாபாரத காலத்தின் போது, ஸ்ரீலங்காவில் விபீஷணன் பரம்பரையினர் லங்காப் பட்டணத்தை ஆண்டு கொண்டிருந்தனர். (பகுதி 39) அதே காலக் கட்டத்தில் சிங்களவர்களும் பாரதப் போரில் கலந்து கொண்டும், ராஜ சூய யாகத்திற்காக பாண்டவர்களுக்கு வெகுமதி கொடுத்தும் இருக்கின்றனர்.


சிங்களவர் என்னும் பெயர் முதன் முதலாக வசிஷ்டருக்கும், விஸ்வாமித்திரருக்கும் இடையே காமதேனு பசுவுக்காக நடந்த சண்டையின் போதே வருகிறது. இந்தச் சண்டை ராமரது காலத்துக்கும் முன்பே நடந்த்து. ஏனெனில் இந்தச் சண்டையின் முதல் விவரம், ராமாயணத்தில் சொல்லப்படுகிறது. அந்தப் போரில் யவனர், திராவிடர், சாகர், கேரளர் என்னும் பெயர்களுடன் சிங்களவர் என்னும் பெயர் கொண்டவர்களும் வசிஷ்டருக்காகப் போரிட்டனர். அந்தப் போர் நடந்த இமய மலைப் பகுதியை ஒட்டிய இடம், வட மேற்கு இந்தியாவாக இருக்க வேண்டும். ஏனெனில் அங்கு மிலேச்சக் குடியிருப்புகள் இருந்தன. காம்போஜம் அந்தப் பகுதியைச் சார்ந்தது. அது சிங்களவர் குடியிருப்பாக இருந்திருக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் பிற இடங்களில் காம்போஜர்கள் பெயர் வருகிறது.


மஹாபாரதக் காலக்கட்டத்திற்கு முன்பே சிங்களவர்கள் இலங்கைத் தீவில் குடிவந்திருக்க வேண்டும். ஏனெனில் காம்போஜர்கள் என்றும், சிங்களவர்கள் என்றும் மஹாபாரதத்தில் தனித்தனியாகச் சொல்லப்பட்டுள்ளது.


ராஜ சூய யாகத்தில் காம்போஜர்கள் கொடுத்த பொருட்கள் இமயமலையைச் சார்ந்தவை என்றால், சிங்களவர்கள் கொடுத்த பரிசுப் பொருட்கள் கடல் சார்ந்தவை. அவர்கள் கடலிலிருந்து கிடைக்கும் மணி, முத்து போன்ற அரிய மணி வகைகளைக் கொடுத்தனர் என்று மஹாபாரதம் (2-51) கூறவே, இந்தச் சிங்களவர்கள் ஸ்ரீலங்கா பகுதியில் இருந்த சிங்களவர்கள் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. முத்துக் குளித்தல், சிங்களத்தை ஒட்டிய கடல் பகுதியில்தான் நடந்தது. மேலும் சிங்களத்தீவு ரத்தினங்களுக்குப் பெயர் போனது. ரத்ன சாஸ்திர நூலில் மஹாநீலம் என்னும், நீல மணி (Blue sapphire) சிங்களத் தீவில் அதிக அளவில் கிடைத்தது என்ற குறிப்பு காணப்படுகிறது.


இதை மெய்ப்பிக்கும் விதமாக, தென் தமிழ் நாட்டில் உள்ள திருநாகேஸ்வரம் என்னும் ராஹுஸ்தலத்தில் உள்ள ராஹு தேவனின் திரு உருவச் சிலை, நீலமணியால் ஆனது. ராஹு தேவனுக்குப் பாலபிஷேகம் செய்வது இந்தத் தலத்தில் விசேஷமானது. அவ்வாறு பால் அபிஷேகம் செய்யும் போது, ராஹுவின் மேனியில் பட்டு வழியும் பாலானது நீல நிறமாகத்தெரியும். பால் ஊற்றினால் பால் நீல நிறமாகத் தெரிவது நீல மணியின் குணமாகும். எனவே நீலமணிப் பாறைகளிலிருந்துதான் அந்த உருவச் சிலை செய்திருக்க முடியும். அருகில் உள்ள சிங்களத்தீவிலிருந்து நீல மணி அதிகமாகக் கிடைத்ததால், அங்கிருந்து கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும்.


மேலும் சிங்களத்தீவில் ஆரம்பித்து, அந்தமான் தீவுகள் இருக்கும் - இந்தியக் கடலுக்குள் செல்லும் 90 டிகிரி மலைப் பகுதிகளில் வைடூரிய மலை இருந்தது என்று கண்டோம். (பகுதிகள் 41, 55) அந்தத் தொடரின் தென் பகுதியில் தென்மதுரை இருந்தது என்றும் கண்டோம். சிவனுக்கும், மீனாட்சி அம்மைக்கும் பிறந்த உக்கிரகுமார பாண்டியன் அந்த மலைத்தொடரைச் செண்டால் அடித்து ரத்தின்ங்களை எடுத்தான் என்று திருவிளையாடல் புராணம் கூறவே, சிங்களம் தொடங்கி அந்த மலைத் தொடர் வரை ரத்தினங்கள் பெருமளவில் கிடைத்திருக்க வேண்டும்.

ரத்தினங்களும் செல்வமும் இருந்தால், அங்கு குபேரன் சம்பந்தம் இருக்கும். இலங்கைக்கும் குபேரனுக்கும் சம்பந்தம் உண்டு. முதன் முதலில் லங்கா நகரத்தை குபேரன் தனக்காகத்தான் அமைத்தான். அவனிடமிருந்து அவனது மாற்றாந்தாய் மகனான ராவணனுக்கு லங்கை சென்றது. குபேரன் இருக்கும் இடத்தில் நவ மணிகளும் இருக்கும். வால்மீகி ராமாயணத்தில் வரும் லங்கா நகர விவரங்கள் மூலம் அங்கு சிறந்த ரத்தினச் செல்வம் இருந்தது தெரிய வருகிறது.


இந்தக் காரணங்களினால், மஹாபாரதம் சொல்லும் சிங்களவர்கள் இன்றைய ஸ்ரீலங்காவில் வாழ்ந்தவர்கள் என்பது சாத்தியமாகிறது. இவர்கள் கொடுத்தப் பரிசுப் பொருட்களை, வடமேற்கு இந்தியாவைச் சேர்ந்த (காம்போஜம்) சிங்களவர்கள் கொடுத்திருக்க முடியாது, எனவே சிங்களக் குடியிருப்பு மஹாபாரதக் காலத்துக்கு முன்பே (5000 ஆண்டுகளுக்கு முன்பே) ஸ்ரீலங்காவில் ஏற்பட்டிருக்க வேண்டும்.


முதன் முதலில் இலங்கைத் தீவில் குடியிருக்கத்தகுந்த நகரம் அமைத்தது ராவணன் காலத்தில்தான். ராவணனுடன், தென் துருவப் பகுதியைச் சேர்ந்த அசுரர்கள் என்று சொல்லப்பட்டவர்களும் குடியேறி இருக்கின்றனர். (ராவணன் பிராம்மணனுக்குப் பிறந்தவனாக இருந்தாலும், அவனது தாய் அசுரர் குலப் பெண் ஆவாள். ராவணனுக்கு அசுர குணம் இருந்தது. அதனால் அவனை அசுரன் என்றே வர்ணித்தனர். அவன் வீரமும், போரில் ஆர்வமும் கொண்டிருந்து, நாட்டையும் ஆண்டதால் க்ஷத்திரிய குணம் கொண்டவனாகவும் இருந்தான்ராவணனுக்கும் திராவிடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏனெனில் ராவணன் ஒரு போதும் க்ஷத்திரியத்தைக் கைவிடவில்லை. )


ராவணன் ஆண்டபோதே, பாண்டியர்கள் இருந்திருக்கிறார்கள், அவர்களை ராவணன் சீண்டினான் என்றும், அவர்கள் ராவணனை அடக்கினர் என்றும், சின்னமனூர் செப்பேடுகளிலும், காளிதாசர் எழுதிய ரகு வம்சத்திலும் காணப்படுகிறது என்று பார்த்தோம். ஆனால் சங்க காலத் தென்னன் பாண்டியன் இலங்கையைக் கோலோச்சியதாக எந்தக் குறிப்பும் இல்லை.
ராமாயணமஹாபாரத்துக்கு இடைப்பட்ட  காலத்தில்அதாவது இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன், 7000 ஆண்டுகளுக்குள் சிங்களவர்கள் அங்கு குடியேறியிருக்கிறார்கள். ஏனெனில் ராமாயண காலத்தில் சிங்களவர்கள் இந்தியாவின் வட மேற்கில் இருந்தார்கள். அதே பெயருடையவர்கள் மஹாபாரதத்தில் இன்றைய இலங்கையில் சொல்லப்பட்டுள்ளார்கள்.


இந்தியாவின் வடமேற்குக் காம்போஜத்திலிருந்து, காம்பே பகுதிக்கு வந்தவர்கள், மேலும் கடல் வழி வாணிபம் தேடி, இந்தியாவைச் சுற்றி அரபிக் கடல் வழியாக வந்து ஸ்ரீலங்காவில் குடியேறி இருக்கலாம். வங்க நாடு வழியாக வங்காள விரி குடாக் கடல் வழியாக வந்த வாய்ப்பு மிகவும் பிற்பட்ட காலத்ததே. ஏனெனில் காம்பே வளைகுடாவை ஒட்டி இன்றைக்கு 9500 வருடங்களுக்கு முன்பே நல்ல வளர்ச்சி பெற்ற நிலையில் மக்கள் வாழ்ந்தனர் என்ற ஆழ் கடல் ஆராய்ச்சி இருக்கிறது. அப்படிப்பட்டத் தொன்மையான காலத்தில் கடலோரப் பகுதிகளில் மக்கள் நாகரிகம் இருந்ததால், அவர்கள் கடல் வழியாக 5000 ஆண்டுகளுக்கு முன்பே இலங்கைக்கு வந்திருக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. இலங்கையின் ரத்தின வளத்தைக் கண்டு அங்கேயே குடியேறி இருக்கிறார்கள்யுதிஷ்டிரரது ராஜசூய யாகத்தில் இவர்கள் ரத்தினங்களை அளித்ததால், ரத்தினச் சுரங்கத் தொழில், மற்றும் வியாபாரத்தில் அவர்கள் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது.


சிங்களவர்கள் மூலத்தைப் பற்றிக் கூறும் புத்த மத நூலான தீபவம்சம், காம்பே வளைகுடாப் பகுதியிலிருந்து சிங்களவர்கள் வந்தார்கள் என்று கூறுகிறது. சிங்களவர்களின் மூலம், காம்போஜர்களிடம் செல்கிறது என்று நாம் சொல்வதுடன் இது ஒத்துப் போகிறது. அந்தக் காம்போஜர்களும் மனுவழி வந்தவர்கள், காலப்போக்கில் வேத வழியை விட்டதால் மிலேச்சர்கள் எனப்பட்டவர்கள். எனவே மூலம் என்று பார்த்தால், சிங்களவர்கள் பாரத மண்ணிலிருந்தும், மனுவிலிருந்தும் தோன்றியவர்களே.


காம்போஜம் பெயர்க் காரணம்


காம்போஜம் என்னும் பெயர் எப்படி எழுந்தது என்று தேடினால், காம்போஜம் என்னும் சமஸ்க்ருதப் பெயர் ஒரு செடியின் பெயராகும். அதன் விதையை நாம் தமிழில் குந்துமணி (அல்லது பிள்ளயார்க் கண்) என்கிறோம். (Abrus precatorius)


இந்தக் குந்துமணியானது, எடைக்கல்லாகப் பயன் படுத்தப்பட்டது. குந்து மணி தங்கம் என்கிறோம். அப்படி என்றால் குந்துமணி எடையிலான தங்கம் என்று பொருள். மிகவும் குறைந்த எடை கொண்டவற்றை நிறுத்தி எடை பார்க்க்க் குந்துமணி பயன்பட்டது. ரத்தினம், விலையுயர்ந்த மணிகள் போன்றவற்றைக் குந்து மணியால் எடை பார்ப்பார்கள். ரத்தின வாணிபத்தில் ஈடுபட்ட காம்போஜர்களால் இந்தக் குந்து மணி எடை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம். அவர்கள் வாழ்ந்த இடங்களில் இந்தச் செடி அதிக அளவில் இருந்திருக்கலாம். இந்தக் காரணங்களினால் காம்போஜம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.


பொதுவாகவே ஓரிடத்தில் அதிக அளவில் காணப்படும் மரம், செடி வகைகளின் பெயரால் அந்த இடம் அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது. நாவல் மரம் அதிகமாக இருந்ததால், நாமிருக்கும் இந்தப் பகுதி நாவலந்தீவு எனப்பட்டது. காஞ்சி, வஞ்சி, கடம்பு போன்ற மரங்களின் பெயர்களால் அந்தந்த இடப் பெயர்கள் உருவாயின. அது போல காம்போஜம் (Abrus precatorius) அதிகம் விளைந்ததால், காம்போஜ நாடு என்ற பெயர் உருவாகியிருக்கலாம். குந்துமணிச் செடி வட இந்தியாவிலும், மேற்குக் கரையிலும் அதிகம் விளைகிறது என்பதும் காம்போஜர்கள் வாழ்ந்த இடங்களுடன் ஒத்துப் போகிறது. மேலும் சிங்களவர்கள் விலையுயர்ந்த மணிகளை ராஜ சூய யாகத்தில் அளித்தனர் என்று மஹாபாரதம் சொல்வதால், காம்போஜத்துத்துடன், சிங்களவர்களுக்கும் தொடர்பு உண்டு என்று தெரிகிறது.


இனி கூர்மச் சக்கரப் பட்டியலுக்கு வருவோம்.
காம்போஜர், பஹல்லவர்கள் போன்றோர் அடுத்தடுத்த இடங்களில் இருந்திருக்க வேண்டும், அவர்கள் ஒன்றாகவே பல இடங்களிலும் மஹாபாரத்த்தில் சொல்லப்பட்டுள்ளனர்.
இவர்களை அடுத்து சௌவீரம் என்னும் இடம் கூர்மச் சக்கரத்தில் வருகிறது.
இந்தப் பெயரை முன்பே பார்த்தோம் (பகுதி 32). சிந்து நதிப் பகுதியில் சிபியின் வம்சாவளியைச்சேர்ந்தவர்கள் சௌவீர்ர்கள் என்னும் பெயருடன் ஆண்டனர். கௌரவர்களது ஒரே சகோதரியான துச்சலையை மணந்த ஜயத்ரதன் சௌவீர நாட்டு மன்ன்ன். இந்தப் பகுதி சிந்து நதியை ஒட்டி அதற்கு மேற்கே இருந்த்து.


அடுத்து சிந்து என்ற நாடும் சொல்லப்படுகிறது, இது சிந்து நதிப் பகுதியாகும். கூர்மச் சக்கரத்தின் மத்தியப்பகுதிக்குத் தென் மேற்கே உள்ள பகுதியில் இந்த நாடு இருந்திருக்க வேண்டும்.


அடுத்து அம்பஸ்தம், யவனம், கிராடம் போன்றவையும் சிந்து நதிக்கு அப்பாலோ அல்லது அதற்குக் கிழக்கில், இன்றைய தெற்கு ராஜஸ்தானத்திலோ இருக்க வேண்டும். இவர்களுள் கிராடர்கள் வேடர்கள் என்றும், மலை வாழ் மக்கள் என்றும் மஹாபாரதக் குறிப்புகள் உள்ளன. கூர்மச் சக்கரத்தின் தென் மேற்குப் பகுதிகளில் உள்ள மலைகளில் இவர்கள் இருந்திருக்க வேண்டும்.


ஆநர்த்தம் என்னும் இடம் துவாரகையைத் தலைநகரமாகக் கொண்ட நாடு என்று மஹாபாரதம் மூலம் தெரிகிறது. பாண்டவர்கள் காட்டுக்குச் சென்ற போது திரௌபதியின் மகன்கள் ஆநர்த்த நாட்டில் வாழ்ந்தனர். அது அபிமன்யு இருந்த இடம். இந்த விவரங்களின் மூலம், ஆநர்த்தம் என்பது குஜராத் மாநிலத்தில் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. சௌராஷ்டிரமும் இந்தப் பகுதியில் வருகிறது.


மீதியுள்ள நாடுகளில் ஆபீரம், சூத்திரம், திராவிடம் ஆகிய இடத்தின் பெயரில் உள்ள மக்களைப் பற்றி முன்பே விரிவாகக் கண்டோம். இவர்கள் க்ஷத்திரியர்களாக இருந்து, அந்த வர்ணாஸ்ரம தர்மத்திலிருந்து விலகியவர்கள். இவர்களுக்கும் மிலேச்சர்களுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. மிலேச்சர்கள் வேத வழியில் வாழவில்லை. ஆனால் ஆபீரசூத்திரதிராவிடர்கள் வேத மரபுக்குள்தான் இருந்தனர். தங்கள் வர்ணாஸ்ரம குணத்தை விடவேவ்ரத்தியர்கள்என்று இந்தப் பெயர்களைப் பெற்றனர்.


கூர்மச் சக்கர்த்தில் பிற திசைகளிலும் ஆபீரம் வருகிறது. ஆனால் திராவிடம் தென் மேற்குப் பகுதியில் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. மஹாபாரத்த்தில் சூத்திர- ஆபீரர்கள் என்று சொல்லும் இடம் கூர்மச் சக்கரத்தின் தென் மேற்குப் பகுதியாக இருக்க வேண்டும். ஆபீரர்கள் வர்ணத்திலிருந்து பிறழ்ந்தவர்கள், அவர்கள் சரஸ்வதி நதி தீரத்தில் இருக்க முடியாது. சரஸ்வதிக்குத் தென் புறத்தில் அந்த நதியானது மண்ணுக்குள் மறைந்து விட்டவிநாஸனம்என்னுமிடத்தில் இவர்கள் குடியிருந்தனர் ( -பா 9-37). இந்தப் பகுதியில் வந்த அரசனே மிருச்சகடிகம் எழுதிய திராவிட ராஜன் எனப்பட்டவன் என்று முன்பே பார்த்தோம் (பகுதி 53)  ஆபீரம், சூத்திரம் என்னும் நாடுகள் பெயரில் இன்று அந்த நாடுகள் அல்லது இடங்கள் இல்லை. ஒரு குறிப்பிட்ட காலக்கட்டம் வரையில் அந்த மக்கள் இருந்த நிலைமையால் நேரிட்ட வாழ்க்கை, என்றென்றுமே தொடர்ந்திருக்கவில்லை என்பதால் மக்கள் குணம் மாறியவுடன், இருப்பிடத்தின் பெயரும் மாறியிருக்கலாம்.


இவற்றுள் சூத்திரம் என்ற பெயரில் ஒரு நாடு இருந்தது என்பது சில கேள்விகளை எழுப்புகிறது. சூத்திரர்கள் வாழ்ந்ததால் அது சூத்திரம் எனப்பட்டதா? அப்படி என்றால், பாரதத்தின் பிற பகுதிகளில் சூத்திரர்கள் இல்லையா?


ஆபீர்ர்கள் சூத்திரர்கள் ஆனார்கள், திராவிடர்கள் சூத்திரர்கள் ஆனார்கள் என்று மஹாபாரதம் சொல்லவே, சூத்திரர்கள் என்று ஒரு தனிப் பிரிவு இல்லை என்றாகிறது. மேலும் வர்ணங்கள் நான்கல்ல, மூன்றுதான் என்று சதபதபிராம்மணமும், தைத்திரியமும் கூறுகின்றன. மனுவின் கதையிலும், சூத்திரன் என்று ஒரு வர்ணம் முதலில் ஏற்படவில்லை. மனு க்ஷத்திரியனாக ஆண்டான். அவனது ஒரு மகன் தவம் செய்யச் சென்று விடுகிறான். சில மகன்கள் க்ஷத்திரியம் மேற்கொள்கின்றனர்,. ஒரு மகன் வைசியனாக மாடுகளைக் காப்பாற்றுகிறான். அவன் செய்த ஒரு செயலால் அடுத்த பிறவியில் சூத்திரனாகிறான் (பகுதி- 52) என்றே விவரங்கள் வருகின்றன.


சூத்திரன் என்பதும் என்றைக்குமே கூடவே ஒட்டிக் கொண்டிருக்கும் பெயரல்ல. குணத்தின் பாற்பட்டு வரவே அந்தக் குணம் மாறுபடும் போது, சூத்திரன் என்ற அடையாளமும் விடப்பட்டு விடுகிறது, இதன் காரணமாக பாரதத்தின் வேறு எந்தப் பகுதியிலும் சூத்திரம் என்ற தனி நாடு இல்லை. கூர்மச் சக்கரத்தில் மட்டும் சூத்திரம் வரவே, பரசுராமர் காலத்தில், சூழ்நிலைக் கட்டாயத்தால் க்ஷத்திரியம் விட்ட மக்கள் திராவிடர்கள் ஆகி, பிறகு சூத்திரர்கள் ஆகவே, அவர்கள் மறைந்து வாழ்ந்த பகுதிகள் சூத்திரம் என்றும், திராவிடம் என்றும் பெயர் பெற்றிருக்கலாம்.


சூத்திரம் என்ற இடம் எங்கிருந்தது என்று காட்டும் வண்ணம் ஒரு குறிப்பு மஹாபாரதத்தில் வருகிறது. யுதிஷ்டிரர் செய்த ராஜ சூய யாகத்தில், கடல் கரை அருகே வசித்த சூத்திர அரசர்கள் கலந்து கொண்டு, பரிசுகள் வழங்கினார்கள். (-பா 2- 50). அப்பொழுது அவர்கள் கார்பாசிகம் என்னும் நாட்டைச் சேர்ந்த பணிப்பெண்கள் பலரையும், ’ரங்குஎன்னும் மான்களையும் அளித்தார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.


கார்பாசிகம் என்பது பருத்திச் செடியின் சமஸ்க்ருதப் பெயர்.
குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களில், பருத்தி உற்பத்தி அதிகம். எனவே இந்த சூத்திர அரசர்கள் வாழ்ந்த சூத்திர நாடு என்பது இந்த இரண்டு மாநிலங்களின் கடற்கரைப் பகுதிகளில் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.


சூத்திரர்கள் வெறுக்கப்பட்டோ, ஒதுக்கப்பட்டோ இல்லை என்பதைக் காட்டும் வண்ணம் சில விவரங்கள் மஹாபாரதத்தில் இருக்கின்றன. சோழர்கள் கொண்டாடும் சிபியின் தந்தை உசீனரன். அவனுடைய ஒரு மகள் பெயர் உசீனரி. அவள் சூத்திரப் பெண் எனப்படுகிறாள். பிறப்பால் இல்லாமல் செயலால் (பணி விடைகள் மட்டுமே செய்தல்) அவள் அப்படிப் பெயர் பெற்றிருக்க வேண்டும். அவளை கௌதமதீர்கதமஸ் என்னும் தவமுனிவர் மணந்தார். அவர்களுக்குப் பிறந்த மகன்கள் அங்க, வங்க, கலிங்க, சூமம் என்னும் நாடுகளின் மன்னர்கள் ஆனார்கள்


பாண்டவர்களின் சிற்றப்பனான விதுரர் ஒரு சூத்திரப்பெண்ணை மணந்தார். அந்தப் பெண் தேவகன் என்னும் அரசனுக்குப் பிறந்தவளாவாள்.


இதனால் சூத்திரம் என்பது ஒரு இழிவாகவோ, பிற்படுத்தப்பட்டதாகவோ கருதப்படவில்லை என்று தெரிகிறது. ஒரு வர்ண குணத்திலிருந்து, இன்னொரு வர்ண குணத்துக்கு மாறி, அதற்கேற்றாற்போல தொழிலில் ஈடுபடிருக்கிறார்கள், பிற்காலச் சந்ததியர் அதிலிருந்து மாறியும் இருக்கிறார்கள். இந்த நிலை, ஆங்கிலேயர்கள் ஜாதிக் கருத்தைப் புகுத்தும் வரை நம் நாட்டில் இருந்து வந்திருக்கிறது. (பகுதி 52)


இதுவரை ஆராய்ந்த இடங்கள் இன்றைய இந்தியாவின் அரபிக் கடலோரத்தை ஒட்டி, தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளன.
இனி நமக்கு மிகவும் முக்கியமான திராவிடம் எங்கு இருந்தது என்று தேடுவோம். தென் மேற்குப் பகுதியைச் சேர்ந்த இடங்களைச் சொல்லும் கடைசி ஸ்லோகத்தில் திராவிடம் உள்ளிட்ட பின் வரும் இடங்கள் சொல்லப்பட்டுள்ளன.

ஹேமகிரி
சிந்துகலகம்
ரைவதகம்
சௌராஷ்டிரம்
பாதரம்
திராவிடம்
மஹார்ணவம்
என்று வராஹமிஹிரர் முடிக்கிறார்.


இவற்றுக்கு முன்னால் சொல்லப்பட்ட இடங்கள் (அவற்றுள் நமக்கு அறிந்த இடங்கள்) பாகிஸ்தான் தொடங்கி குஜராத் வரை கடலை ஒட்டி வந்துள்ளதைக் காணலாம்.


கூர்மச் சக்கரத்தின் தென் பகுதியில் கொங்கணம் சொல்லப்படவே, இந்தத் தென் மேற்குப் பகுதி, கொங்கணத்துக்கு வடக்கில் முடிந்து விடும். எனவே திராவிடமும் இந்தப் பகுதிக்குள்தான் வர வேண்டும். இந்தப் பகுதியின் எல்லை, சிவப்பு நிறக் கோட்டால் மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.


மேலே சொல்லப்பட்ட இடங்களின் தொடர்சியாக இந்தக் கடைசி இடங்கள் இருக்கின்றன என்று எண்ணும் வண்ணம் ஹேம கிரி, சிந்துகலகம், ரைவதகம், சௌராஷ்டிரம், பாதரம், திராவிடம், மஹார்ணவம் என்று உள்ளன.


இவற்றுள் ஹேமகிரி என்னும் பெயரில் இடங்கள் இந்தியாவின் பல இடங்களிலும் உள்ளன.
சிந்து நதி கடலுடன் கலக்கும் இடத்தில் ஹேமகிரி என்னும் ஒரு மலை இருப்பதாக வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது (வா-ரா- 4-42) அது இங்கு பொருந்துகிறது.
 

அடுத்து வரும் சிந்துகலகம் ஒரு அசாதாரணப் பெயராக இருக்கிறது. இந்தப் பெயர்கள் எல்லாமே சமஸ்க்ருதப் பெயர்கள். சமஸ்க்ருதப் பெயர்கள் காரணப்பெயர்களாகவே ஏற்படுத்தப்பட்டுள்ளன, அதன் அடிப்படையில் ஆராய்ந்தால், சிந்து + கலகம் என்று சொல்லலாம். ஏனெனில் சிந்து என்றால் கடல், அல்லது வெள்ளம் எனப் பொருள் படும். கலகம் என்பது கடலோரம் முளைக்கும் ஒரு விதப் புல் வகையாகும். வெட்டி வேர்ச் செடியும் கலகம் என்னும் வகையைச் சேர்ந்த்து.


துவாரகைக் கரையோரம் கடல் அரிப்பத்தடுக்க கோரைப் புற்களை வளர்த்தனர் என்று மஹாபாரத்த்தின் மூலம் அறியலாம். எனவே சிந்துகலகம் என்னும் இடம் கடலோரமாகவும், கடல் அரிப்பைத்தடுக்கும் கலகப் புற்கள் அதிகமாகக் காணப்படும் இடமாகவும் இருக்கவேண்டும். கடல் அபாயம் அதிகம் இருக்கும் துவாரகைப் பகுதியை ஒட்டி அது இருந்திருக்க வேண்டும்.  


அடுத்து சொல்லப்பட்டுள்ள ரைவதகம் ஒரு மலையாகும். இது ஆநர்த்த நாட்டில் உள்ளது என்றும், துவாரகையிலிருந்து இந்த மலைக்குச் சென்று வழிபாடு செய்வர் என்றும் மஹாபாரதம் கூறுகிறது.ரைவதக விழாவின் போது, கிருஷ்ணனது தங்கையான சுபத்திரை ரைவதக மலைக்கு வருகிறாள். அவளை அங்கு பார்க்கும் அர்ஜுனன் அவள் மீது காதல் கொண்டு அவளைக் கடத்திக் கொண்டு போய் விடுகிறான் என்று மஹாபாரதம் விவரிக்கிறது. எனவே இந்த இடமும் குஜராத் மாநிலத்தில் துவாரகைக்கு அருகில் உள்ளது.

அடுத்து சொல்லப்பட்டுள்ள சௌராஷ்டிரம் என்பதும், குஜராத் தீபகற்பப் பகுதியாகும்.இந்தப் படத்தில் சூத்திரம், ஆநர்த்தம், சௌராஷ்டிரம் போன்றவற்றைக் காணலாம்.


அடுத்து வரும் பாதரம் என்பதன் இருப்பிடம் தெரியவில்லை. அதை அடுத்து திராவிடமும், மாஹார்ணவமும் வருகிறது. மஹார்ணவத்துடன் பட்டியல் முடிந்து விடுகிறது.


பாதரத்துக்கும், மஹார்ணவத்துக்கும் இடையே திராவிடம் சொல்லப்பட்டுள்ளது. மஹார்ணவம் என்பது நர்மதை நதியின் 14 பெயர்களில் ஒன்று. எனவே நர்மதை நதியை ஒட்டி அந்தப் பெயர் கொண்ட நாடு அல்லது நகரம் அமைந்திருக்க வேண்டும்.
இந்தப் படத்தில் நர்மதை ஆறு இருக்கும் இடத்தைப் பார்க்கலாம்.


விந்திய மலைக்குத் தெற்கே நர்மதை ஆறு ஓடுகிறது. நர்மதை ஆற்றுக்கு வடக்கே இருக்கும் பகுதிகள் ஆரிய வர்த்தம் எனப்பட்டன. இந்தப் படத்தில் பச்சை நிறத்தில் ஆரிய வர்த்தத்தின் தென் எல்லை காட்டப்பட்டுள்ளது.


படத்தில் நர்மதை ஆறின் வடக்கே ஹேஹய நாடு காட்டப்பட்டுள்ளது. அங்குதான் கார்த்தவீர்யார்ஜுனன் இருந்தான். பரசுராமர் அவனைக் கொன்றார். அந்தப் பகுதிக்கு வடக்கில் ஆரிய வர்த்தத்தில் இருந்த நாட்டரசர்களையும் அவர் கொன்றார்.
அவருடமிருந்து தப்பி ஓடிய, க்ஷத்திரியம் விட்ட அரசர்களில் ஒரு பகுதியினர்  (அதனால் திராவிடர்கள் என அழைக்கப்பட்டவர்கள்), ஆரிய வர்த்த்த்தை விட்டு வெளியேறி, நர்மதைக்குத் தெற்கே அரபிக் கடலோரம் வந்தனர். (பகுதி 53)

அவர்கள் வந்திருக்கக்கூடிய வழி, வந்து சேர்ந்த இடம் ஆகியவை ஆரஞ்சு நிறக் கோடால் காட்டப்பட்டுள்ளது.
நர்மதைக்குத் தெற்கேயும், கொங்கணத்துக்கு வடக்கேயும், இவற்றுக்கு இடைப்பட்ட எந்த இடத்தில் வேண்டுமானாலும் திராவிடம் இருந்திருக்கலாம்.


வராஹமிஹிர்ர் கொடுத்துள்ள பட்டியலில் வரிசைப்படி இடங்கள் அமைந்திருந்தால், மஹார்ணவத்துக்கு வடக்கே, அதாவது நர்மதை நதி அரபிக் கடலில் கலக்கும் இடத்துக்கு வடக்கில் திராவிடம் இருக்க வேண்டும். அதற்குத் தெற்கே பரசுராமர் குடியேறின சூர்ப்பாரகம் வருகிறது (படத்தில் சூர்ப்பாரகம் காணலாம்)


இங்கு சில கேள்விகள் வருகின்றன.
 • ·         பரசுராமர் குடியமர்ந்த இடத்துக்கு அத்தனை அருகாமையில் ஓடி வந்தவர்கள் குடியமர்ந்திருப்பார்களா? அதனால் அவரது காலத்தில் அவர்கள் அவர் கண்ணுக்கு எட்டாத தொலைவில்தான் குடியேறி இருக்க வேண்டும். அப்படி என்றால் திராவிடம் என்ற பெயருடன் ஓரிடம் அங்கு எப்படி வந்தது?

இதை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். திராவிடன் என்பவன், க்ஷத்திரியம் விட்டவனுக்குப் பிறகு 7 ஆவது தலைமுறையில் வருபவன். அதாவது, ஒருவனது இயல்பான க்ஷத்திரிய குணத்தை மறைத்துக் கொண்டாலும், அப்படியே தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்தால்தான், 7 ஆவது தலைமுறை வரும் போது, அந்தக் குணம் முழுவதும் மறைந்து போய் விடும் என்ற எண்ணத்தில் இது சொல்லப்படுகிறது. ஒரு 100 வருடங்களில் 3 தலைமுறைகள் வரும் என்ற கணக்கில் 7 ஆவது தலைமுறை உண்டாக 200 வருடங்கள் ஆகும். எனவே பரசுராமர் வதம் செய்த பிறகு 200 ஆண்டுகள் கழித்தே திராவிடர்கள் என்பவர்கள் உண்டாகி இருப்பார்கள்.

 • ·         பரசுராமருக்கு அருகில் உள்ள பகுதியில் குடி அமர்ந்தாலும், தங்கள் க்ஷத்திரியத்தை மறைத்துக் கொண்டு வாழவே, அவருடைய கவனத்தைக் கவராமல் அவர்களால் வாழ்ந்திருக்க முடியும். பரசுராமர் சிரஞ்சீவியாக வாழ்ந்தவர். 200 ஆண்டுகள் ஆனாலும் அவருக்கு அருகாமையில் அவரால் விரட்டப்பட்டவர்கள் வாழ்ந்தார்கள் என்பது சாத்தியமாகுமா?

மேலும் மஹாபாரத விவரப்படி, பரசுராமருக்குப் பயந்து ஓடிய மக்கள் இரண்டு வகையினர் விந்தியத்துக்குத் தெற்கே வந்திருக்கின்றனர். ஒருவர் பிருஹத்ரதன் வம்சத்தினர். மற்றொருவர் மருத்தரின் வம்சத்தினர். இவர்களுள் மருத்த வம்சத்தினர் கடற்கரைப் பகுதியில் குடியேறினர். ஆனால் அவர்கள் சந்ததியினர் மீண்டும் தங்கள் நாடுகளுக்குச் சென்று ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருகின்றனர். (பகுதி 53). எனவே ஓடி வந்த திராவிடர்கள் வாழ்ந்ததால் திராவிடம் என்ற பெயர் பெற்ற இடம் தொடர்ந்து அவ்வாறு அழைக்கப்பட்டிருக்க முடியாது.


மேலும் திராவிடர்கள் வாழ்ந்த இடங்களெல்லாம் திராவிடம் என்று சொல்லப்படவில்லை. உதாரணமாக, வசிஷ்டர் காமதேனுவுக்காகச் செய்த போரில் மிலேச்சர்களான திராவிடர்கள் வசிஷ்டர் பக்கம் நின்று போரிட்டார்கள். அந்தப் போர் நடந்த பகுதி இமயமலையைச் சார்ந்த பகுதியோ அல்லது வட மேற்கு இந்தியாவாகவோ இருக்க வேண்டும். அந்தப் பகுதிகளில் திராவிட நாடு சொல்லப்படவில்லை. தென்மேற்கு இந்தியாவில்தான் திராவிட நாடு சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வப்பொழுது ஆங்காங்கே க்ஷத்திரியர்கள் திராவிடர்களாக ஆகி இருக்கின்றனர். அவர்களெல்லாம், திராவிடம் என்னும் ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் வசித்தார்கள் என்றோ, அல்லது அவர்கள் வாழ்ந்த இடங்கள் எல்லாம் திராவிடம் என்று அழைக்கப்பட்டதாகவோ சொல்லப்படவில்லை. வராஹமிஹிரர் சொல்லும் இந்த ஒரு இடத்தில் மட்டும்தான் திராவிடம் என்னும் இடம் சொல்லப்பட்டுள்ளது. இந்த இடத்தை ஒட்டியே பஞ்சத்திராவிடம் என்பதும் விந்திய மலைக்குத் தெற்கே சொல்லப்பட்டுள்ளது.
·         5000 ஆண்டுகளுக்கு முன்னால் மஹாபாரத காலத்தில் இருந்து திராவிடம் என்று அடையாளம் காட்டப்பட்ட ஓரிடம், 2000 ஆண்டுகளுக்கு முன் வராஹமிஹிரராலும் சொல்லப்பட்டு, 1000 ஆண்டுகளுக்கு முன்பும் ராஜ தரங்கிணியில் பஞ்சத்திராவிடமாகச் சொல்லப்பட்டுள்ளதே, க்ஷத்திரியம் விட்ட திராவிடர்களால் இந்தப் பெயர்க் காரணம் ஏற்பட்டிருந்தது என்றால், அது பெருமைப்பட்டுக் கொள்ளத்தக்கதா?


 • ·         பஞ்சத் திராவிடர்கள் என்று பிராம்மணர்கள் திராவிடப் பெயரை ஏன் சுவீகரித்துக் கொண்டார்கள்? திராவிட சிசு என்றும் திராவிடாச்சாரியன் என்றும் பெயர் வைத்துக் கொள்ளும் அளவுக்குத் திராவிடன் என்பதற்கு மனு-ஸ்ம்ருதி அளிக்கும் அர்த்தம் ஒத்து வரவில்லையே?

இந்தக் கேள்விகளை எல்லாம் கேட்டுக் கொள்ளும் போது, திராவிடம் குறித்த பிற விவரங்களைக் கொண்டு ஆராய வேண்டியிருக்கிறது
அந்தப் பிற விவரங்களில் முக்கியமானது வைவஸ்வத மனுவே
அவனே திராவிடேஸ்வரன் என்று அழைக்கப்பட்டான் (பகுதி 49).
அவனே திராவிட நாட்டின் அரசன்
எந்த மனுவை திராவிடம் பேசும் தமிழர்கள் எதிர்க்கிறார்களோ அந்த மனுவே உலகம் அறிந்த முதல் திராவிட அரசன்

மிருச்சகடிகம் எழுதிய இந்திராணி குப்தனும் திராவிட ராஜன் எனப்பட்டான். ஆனால் அவன் ஆபீரதிராவிடன் ஆவான். அது க்ஷத்திரியம் விட்டதால் வந்த திராவிட அடையாளம்.
மனுவும் அப்படி க்ஷத்திரியம் விட்டவனா

இந்தக் கேள்விக்குப் பதில், மனுஸ்ம்ருதி கருத்தின் படிஆம்என்பதே

முன்பே பகுதி 50 -இல் சொன்னபடி, க்ஷனது பரம்பரையில் வந்த  வைவஸ்வத மனு, தக்ஷன் வாழ்ந்த இடத்திலிருந்து ஓடி வந்திருக்க வேண்டும். தக்ஷ யாகத்தில் சிவனுக்குப் பாகம் தராததால், ஊழித்தீ ஏற்பட்டு அழிவு நேரிட்டது என்பது உண்மையில் நிகழந்த சம்பவமாக இருக்க்க்கூடும் என்று கண்டோம். அதிலிருந்து தப்பி ஓடி வந்த மனுவும், அவனைச் சேர்ந்தவர்களும் குடியேறின பகுதி திராவிடம் என்று சொல்லப்பட்டிருக்க வேண்டும். திராவிடன் என்னும் சொல்லேஓடுதல்என்னும் வேர்ச் சொல்லிலிருந்து உண்டானதால், ஓடி வந்த மனுவும் அவனது மக்களும் திராவிடர் என்றும், அவர்கள் குடியமர்ந்த பகுதி திராவிடம் என்றும் சொல்லப்பட்ட்டிருக்கிறது. மனு, திராவிடேஸ்வரன் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறான்.


மனு ஆண்ட திராவிடம் வெள்ளத்தில் அழிந்து விட்டாலும், அதற்குப் பிறகு மனுவும், மற்றவர்களும் புது வாழ்வு தொடங்கியதும், தாங்கள் முன்பு வாழ்ந்த திராவிட நாட்டு நினைவை, வழி வழியாக என்றென்றும் கட்டிக் காத்து இருப்பார்கள். அதுதான் நடந்திருக்கிறது.
 • ·         அப்படி இல்லையென்றால் அரபிக் கடலிலிருந்து பரசுராமர் நிலங்களை ஏன் மீட்க வேண்டும்?

 • ·         அப்படி அவர் மீட்ட இடங்கள் எல்லாம் ஒரு தெய்வீகச் சிறப்பு உடையதாக ஏன் இருக்க வேண்டும்?


 • ·         மனு வாழ்ந்த திராவிடம் அங்கு இருந்தால் அவர் அதை நிச்சயமாக மீட்டிருப்பாரே?

அதிலும் பரசுராமர் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று.
காக்கும் கடவுளான விஷ்ணு, மனுவின் அழிந்த நிலங்களைத் தன்னுடைய ஒரு அவதாரத்தில் மீட்டார் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதே.
 
நிலங்களை அவர் மீட்டது உண்மை என்றே சொல்லும் வண்ணம்  
சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் தில்லை வாழ் அந்தணர் சருக்கத்தில்,  
விறன்மிண்ட நாயனார் புராணத்தின் முதல் செய்யுளில் 
பரசுபெறு மாதவ முனிவன் பரசுராமன் பெறு நாடு
என்று பரசுராமரால், பரசு என்னும் ஆயுதத்தால் கடலிலிருந்து பெறப்பட்ட திருச்செங்குன்றூர் (செங்கண்ணூர்) என்றும், சேர மன்னனால் ஆளப்பட்ட ஊர் என்றும், உமையொரு பாகன் எழுந்தருளியிருக்கும் தலமென்றும் கூறுவது எப்படிப் பொய்யாகும்?


கீழ்க்காணும் படத்தில் செங்கண்ணூர் உள்ளடங்கி உள்ளது.  அவரால் மீட்கப்பட்ட கோகர்ணம் கடலோரம் உள்ளது. அவர் இருந்த சூர்ப்பாரகமும் கடலோரம் உள்ளது. அவர் காலத்தில் மேலும் பல இடங்கள்அவை மட்டுமல்ல - இந்தப் படத்தில் அரபிக் கடலோரம் காணப்படும் வெளிர் நிற நில பாகங்கள் அனைத்துமே 13,000 ஆண்டுகளுக்கு முன் நிலப்பகுதிகளாக இருந்தன. கடல் மட்டம் 120 மீட்டர் அளவு குறைவாக இருந்த காலக்கட்டம் அது.

                                                                                  கடலுக்குள் வெகு தூரம் நிலங்கள் மீட்கப்பட்டன என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் சமீபத்தில் மஹாராஷ்டிரக் கரைக்கு அப்பால், ஸ்ரீவர்தன் என்னும் இடம் முதல் ரெய்காட் வரை, கடல் மட்டத்துக்கு 6 மீட்டர் ஆழத்தில் ஒரு சுவர் இருப்பதைக் கண்டு பிடித்துள்ளார்கள்

2-7 மீ உயரமும், 2.5 மீ அகலமும் கொண்ட இந்தச் சுவர் ஆங்காங்கே உடைந்து விடுபட்டுப் போயிருந்தாலும், மொத்தம் 225 கி.மீ தூரம் செல்கிறது.

ஸ்ரீவர்தன் அருகே தொடர்ச்சியாக 24 கி.மீ வரை இந்தச் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடல் அலைகளைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தச் சுவர் எழுப்பப்பட்ட காலம் இன்றைக்கு 8000 ஆண்டுகளுக்கு முன் என்ற செய்தி பரசுராமர் காலத்துக்குச் செல்கிறது.
இங்கு ஒரு விவரத்தை நாம் ஒப்பு நோக்க வேண்டும். சிந்து சமவெளி நாகரிகம் என்பதே 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதுதான். அதற்கும் முன்னால் மனித நாகரிகம் இந்தியாவில் இருந்ததற்கான அடையாளமாக இந்தச் சுவர் இருக்கிறது. இது எங்கோ ஐரோப்பாவிலிருந்து வரவில்லை. நமது இந்தியக் கரைக்கு அருகேதான் காணப்படுகிறது. இதனால், இந்தியக் கடலோரப்பகுதிகளில் மக்கள் வாழ்ந்தார்கள் என்பது உறுதியாகிறது. அதிலும் அரபிக் கடலோரம் இன்றைக்குக் கடலுக்குள் முழுகி விட்ட பகுதிகளில் மக்கள், எஞ்சினீயரிங் டெக்னாலாஜி தெரிந்தவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு இந்தச் சுவர் ஒரு சாட்சி. மற்றுமொரு சாட்சி காம்பே வளைகுடாப் பகுதியிலும் கிடைத்துள்ளது

இன்றைக்கு 9500 ஆண்டுகளுக்கு முன்னால், காம்பே வளைகுடாப்பகுதியில் மனித நாகரிகத்தின் அடையாளமாக ஒரு மரத்துண்டு கார்பன் டேட்டிங்கில் அடையாளம் சொல்லப்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது, அரபிக் கடல் பகுதியில், மனு வாழ்ந்த திராவிடம் இருந்திருக்க நிறையவே சாத்தியங்கள் இருக்கின்றன. அவதார புருஷரான பரசுராமர், அப்படி அழிந்த அடையாளத்தை எடுத்து நிறுத்தும் வண்ணமாக, மனு ஆண்ட திராவிட தேசப் பகுதியையும் கடலிலிருந்து மீட்டிருக்கலாம்.


பனியுக முடிவில் கடலுக்குள் முழுகிய அந்த இடங்களை, சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன் பரசுராமர் மீட்டிருக்கிறார். அவற்றுள் மனு வாழ்ந்த திராவிடமும் ஒன்றாக இருக்க வேண்டும். அந்தத் திராவிடம் விந்தியத்துக்குத் தெற்கேயும், கொங்கணத்துக்கு வடக்கேயும் இருந்திருக்க வேண்டும். கூர்மச் சக்கரத்தில் இந்தப் பகுதியில்தான் சொல்லப்பட்டுள்ளது. பட்டியல் வரிசையின் படி பார்த்தோமானால், சூர்ப்பாரகத்து வடக்கிலும், அப்படி வரிசைக் கிரமமாக இல்லையென்றால், அந்த்த் திராவிடம் சூர்ப்பாரகத்துக்குத் தெற்கிலும் இருக்க வேண்டும்.

இதற்கு முன் திராவிட நாடு பற்றி நாம் அலசிய பிற விவரங்களின் படி (பஞ்ச திராவிடம்பகுதி 50) சூர்ப்பாரகத்துக்குத் தெற்கே திராவிடம் இருந்திருக்க வேண்டும். பாண்டவர்கள் சென்ற தீர்த்த யாத்திரையின் படியும், (பகுதி 49) கடல் வெள்ளம் ஏற்பட்டபோது, மனுவின் நாவாய் சரஸ்வதி நதிக்குள் செல்லத்தக்க விதமாக இருக்கும் அமைப்பிலும், இந்தத் தென் பகுதியே உகந்ததாக உள்ளது.

இந்தப் படத்தில் நர்மதை தொடங்கி, கொங்கணம் வரை கடலோரம் காட்டப்பட்ட சிவப்பு நிறப் பகுதியில் திராவிடம் மீட்கப்பட்டிருக்கும்.

ஆம். பரசுராமர், தனது பரசு என்னும் ஆயுதத்தால் கடலிலிருந்து மீட்ட ஒரு பகுதியாகப் பிற்காலஅதாவது மனுவுக்குப் பிறகு ஏற்பட்டதிராவிட நாடு இருக்க வேண்டும். பரசுராமர் மீட்ட ஒவ்வொரு இடமும் சரித்திர முக்கியத்துவமும், தெய்வீகமும் கொண்டதாக இருந்திருக்கிறது

 மனுவின் தொடர்பால் திராவிட நாட்டுக் கடலோரப்பகுதிகளில் பல தீர்த்த யாத்திரை ஸ்தலங்கள் இருந்திருக்கின்றன. அவற்றுக்குப் பாண்டவர்கள் வந்திருந்தார்கள். (பகுதி 49)

அப்படி ஒரு முக்கியத்துவம் மிக்க இடமாக இந்தத் திராவிடம் இருந்திருந்தால்தான், வேதம் ஓதுவோரும், தெய்வ சிந்தனை உடைய ஆதி சங்கரர் போன்றோரும், திராவிடத்துடன் தங்கள் பெயரை இணைத்துக் கொண்டிருக்க வேண்டும். அந்தத் திராவிட நாடு, மனுவுடன் சம்பந்தப்பட்டதாக இருந்திருந்தால்தான் அதற்கு சரஸ்வதி பிராம்மணர்களிடம் ஒரு முக்கியத்துவம் ஏற்பட்டிருக்க வேண்டும்

 விந்தியத்தைக் கடந்து அவர்கள் அந்தக் கடலோரப்பகுதிகளில் குடியேறியிருக்க வேண்டும். அதனால் பஞ்சத்திராவிடர்கள் என்ற பெயரையும் அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் அப்படி மீட்கப்பட்ட திராவிடம் 1000 வருடங்களுக்கு முன்னால் படிப்படியாக மீண்டும் கடலுக்குள் முழுகி இருக்க வேண்டும். அதனால் அந்தப் பஞ்சத்திராவிடர்கள் மேலும் தெற்கு நோக்கி ஆங்காங்கே பரவி இருக்க வேண்டும். அல்லது ஆங்காங்கே இருந்த அரசர்கள் அவர்களை வரவழைத்துத் தங்கள் நாட்டில் குடியேற்றி இருக்கலாம். கோண சீமைத் திராவிடர்கள் அப்படிக் குடியேறியவர்களே. ( பகுதி 52)

அவ்வாறு தெற்கு நோக்கி இடம் பெயர்ந்த முக்கிய பிராம்மணக் குழுவினர் நம்பூதிரி பிராம்மணர்கள். திராவிட சிசு என்று தன்னைச் சொல்லிக் கொண்ட ஆதி சங்கரர் நம்பூதிரி பிராம்மணரே.


மற்றொரு குழு, காஞ்சி போன்ற இடங்களுக்குக் குடி பெயர்ந்திருக்க வேண்டும். அவர்களுடன், திராவிடம் என்ற பெயரும் காஞ்சிக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அவர்கள் பேசியது தமிழ் மொழி என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
அவர்களது பேச்சு மொழியாகத் தமிழ் இருக்கவே, குமாரில பட்டர் போன்றோர் திராவிட மொழி என்று, தமிழைக் குறிப்பிட்டிருக்கிறார். அதைக் கால்டுவெல் கையாண்டுவிட்டார். கேரளப்பகுதிகளுக்கு வந்த நம்பூதிரிகளும் அன்று அங்கு வழங்கி வந்த தமிழிலேயே பேசி இருக்க வேண்டும். அவர்களுக்கென்று வேறு மொழி இருந்ததாகத் தெரியவில்லை. வேதக் கல்விக்கு சமஸ்க்ருதம், பேச்சுக்குத் தமிழ் என்று இருந்திருக்கிறது.


இங்கு நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். பேசும் மொழியால் அவர்கள் ஒரு இனமாகவோ, ஒரு குறிப்பிட்ட குழுவினராகவோ அடையாளம் காட்டப்படவில்லை. செய்த செயல் அல்லது வர்ண குணம் என்பது மட்டுமே குழு அடையாளத்தைத் தந்திருக்கிறது. அத்துடன் தாங்கள் இருந்த இடத்தின் பெயரையும் அடையாளமாகக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கருத்தை இந்த்த்தொடரின் போக்கில் பிற விவரங்களுடன் காண்போம்


இங்கு நாம் அறிய வேண்டிய ஒரு விவரம் இருக்கிறது. காஞ்சி வாழ் பிராம்மணர்கள் வேதம் சொல்லிக் கொடுப்பதில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும். அதனால் காஞ்சிபுரம் வேதக் கல்விக்குப் பெயர் பெற்றதாயிற்று. நம்பூதிரி பிராம்மணர்கள் வேள்விகளை செய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும். அதனால் நேபாளம் முதல், கன்னியாகுமரி வரை ஹோமம் மற்றும் கோவில் பூஜைகளை அவர்கள் செய்து வந்தார்கள். அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த முக்கிய வேள்வி ஒன்று இருக்கிறது. அதுவே அக்கினி ஹோமம் ஆகும்.


சமீபத்தில் (ஏப்ரல் மாதம் 2011) கேரளாவில்அதிராத்ரம்என்னும் அக்கினி ஹோமம் செய்யப்பட்டது. இந்த ஹோமத்தைச் செய்யத் தெரிந்தவர்கள் இந்த நம்பூதிரிப் ப்ராம்மணர்கள் மட்டுமே. இந்த ஹோமத்தின் சில விவரங்கள் நம்மை, துவாரகை அருகில் உள்ள ரைவதக மலைக்கும், அங்கிருந்து இந்தியக் கடலுள் முழுகி விட்ட தென்னன் தேசத்துக்கும் அழைத்துச் செல்கின்றன.


இந்த ஹோமம் செய்ய ஆரம்பிக்கும் போது சாவித்ரி மந்திரஙகளும், ரேவதி மந்திரங்களும், குஷ்மாண்ட ஹோமமும் செய்வார்கள். இந்த அதிராத்திர அக்கினி ஹோமம் என்பதே சூரியன் ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் செய்யப்படுகிறது.
இவற்றைச் செய்வதற்குப் பெயர் பெற்ற மலை துவாரகை அருகே உள்ளரைவதக மலை
ரைவதகம் என்னும் பெயர் ஏன் வந்தது

ரேவதி நட்சத்திரம் என்றென்று அந்த மலையின் மீது குடி கொண்டுள்ளதால் என்று மஹாபாரதம் (13-64) கூறுகிறது.

உண்மையில் ரேவதி நட்சத்திரம் அந்த இடத்தில் தெரிகிறதா
இல்லை.
ஆனால் ரேவதி நட்சத்திரம் என்றென்றும் குடி கொண்டுள்ள இடம் ஒன்று இருக்கிறது. அது பூமத்திய ரேகைப் பகுதி.

அங்கும் ஒரு ரைவதக மலை இருந்தது. இந்த விவரத்தை சஞ்சயன், திருதராஷ்டிரனிடம் சொல்கிறான் (-பா 6-11)

உலகத்தில் உள்ள 7 த்வீபங்கள் என்னும் நிலப்பரப்புகளைச் சொல்லும் போது, நாம் இருக்கும் நாவலந்தீவு பற்றி சஞ்சயன் விவரிக்கிறான். பிறகு, சாகத்தீவு என்னும் த்வீபத்தைப் பற்றி விவரிக்கையில் அங்கே ஒரு மலைத்தொடரைப் பற்றி விவரிக்கிறான். அந்த்த் தொடரில் ரைவதக மலை இருக்கிறது என்கிறான். ரேவதி நட்சத்திரம் நிலை கொண்டிருக்கவே அந்த மலைக்கு ரைவதகம் என்ற பெயர் வந்தது என்கிறான். அவன் சொல்லுமிடம் நாவலந்தீவில், பாரத வர்ஷத்தில், துவாரகை அருகே உள்ள ரைவதகம் அல்ல. நாவலந்தீவுக்கு வேறான சாகத்தீவில் அது இருப்பதாகச் சொல்கிறான்


அப்படி அவன் விவரிக்கும் இடம் பூமத்திய ரேகை செல்லும் 90 டிகிரி மலைத் தொடரில் உள்ள சூர்யவான் என்னும் மலை (ராமாயணத்தில் சொல்லப்பட்டது பகுதி 41) இருக்கும் பகுதியுடன் ஒத்துப் போகிறது

ஒவ்வொரு வருடமும் சூரியன் பூமத்திய ரேகையை உத்தராயணத்தில் கடக்கும் போது ரேவதி நட்சத்திரத்தில் கடக்கிறான். ஏனெனில் நமது பூமத்திய ரேகைக்கு அருகில் விண்வெளியில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது.


அப்படிக் கடக்கும் போது சாகத்தீவில் உள்ளவர்கள் ஹோம வழிபாடுகள் செய்தனர். சூரியனுக்கு உகந்த குஷ்மாண்ட ஹோமம் செய்தனர். தானம் கொடுத்து பிறவிப் பிணி தீர்த்தனர். ரேவதி என்னும் நட்சத்திரத்தின் தேவதையான பூஷன் என்பவன், பசு, பால் வளம், செல்வ வளம் தருபவன். ரேவதி என்னும் பெயரும், சூரியனது மகனான ரேவந்தன் என்னும் பெயரால் வந்தது. இவை எல்லாம் சொல்லப்பட்டது சாகத்தீவுக்கு

அதே விவரங்கள் துவாரகை அருகில் உள்ள ரைவதக மலைக்கும் சொல்லப்பட்டுள்ளது. அது எப்படி?


சாகத்தீவில் சூர்யன் மகன் ரேவந்தன் காரணமாக ரேவதி நட்சத்திரப்பெயர் வந்தது. அதே சூரியனுக்குப் பிறந்தவன் வைவஸ்வத மனு. அவன் ஏதோ ஒரு காரணத்துக்காக (ஊழித்தீயாக இருக்கலாம் என்று தக்ஷன் கதை காரணமாக நாம் முன்பே சொன்னோம்) ஓடி வந்து கடல் சூழ்ந்தப் பகுதியில் திராவிடேஸ்வரனாக வாழ்ந்திருக்கிறான். அந்தப் பகுதியைக் கடல் வெள்ளம் தாக்கவே (பனியுக முடிவில் ஏற்பட்ட திடீர்க் கடல் மட்ட உயர்வினால்) அவன் சென்ற நாவாய் சரஸ்வதி நதிக்குள் நுழைந்து, பிறகு அவனுடைய மக்கள் ஆங்காங்கே குடி அமர்ந்திருக்கின்றனர். எனினும் தாங்கள் செய்து வந்த எந்த வேத வேள்வியையும் அவனும் அவனுடன் வந்த முனிவர்களும் விடவில்லை.


பூமத்திய ரேகைப் பகுதியில் செய்யப்பட்ட ரேவதி குறித்த அக்கினி ஹோமத்தை, கடக ரேகைப் பகுதியில் அமைந்துள்ள மலையில் செய்து வந்திருக்கின்றனர். அதனால் அந்த மலைக்கும் ரைவதகம் என்று பெயரிட்டிருக்கின்றனர்


அதைச் செய்த ஆதி மக்கள் இன்னும் விடாமல் அதைத் தொடர்ந்து செய்து வந்ததே அதிராத்ரம் ஆகும்

இந்த விவரங்களிலிருந்து மனு வந்த பாதையை நாம் நிர்ணயிக்கலாம்.
பனியுகம் ஆரம்பிப்பதற்கு முன்னால் அதாவது 30,,000 ஆண்டுகளுக்கு இந்த இந்திய மண்ணில் இன்று வசிக்கும் மக்களின் மூதாதையர்  இருந்த இடம் இன்று கடலுக்குள் முழுகி விட்ட பகுதியாகும், அதைக் குமரிக்கண்டம் என்றும், தென்னன் தேசம் என்றும் சொன்னது 10,000 ஆண்டுகளுக்கு முன் தான்.

அதற்கும் முன்னால் அதே பகுதி சாகத்தீவு என்ற பெயரில் இருந்திருக்கிறது.


ஒரு லட்சம் வருடங்களுக்கு முன்னால், கிழக்கு ஆஃப்ரிக்காவிலிருந்து மேற்கு நோக்கிப் பரவின மக்களுக்கு முதல் தங்குமிடம் அந்த சாகத்தீவு.

சாகத்தீவு என்று இருந்தபோதே அங்கு வேதம் தழைத்து விட்டது.
அங்கிருந்து இன்று நாம் இருக்கும் இந்தியாவுக்கு 60,000 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் பரவ ஆரம்பித்தனர்.

பனியுகம் ஆரம்பிக்கும் முன் மனு முதலானோர் அரபிக் கடல் பகுதிக்குக் குடியேறி இருக்கின்றனர்
13,000 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் சுற்று வழியாக இந்தியாவுக்குள் நுழைந்திருக்கின்றனர்.
தெற்கு வழியாக இந்தியாவில் நுழைந்த மக்களும் ஏற்கெனெவே இருந்தனர்மரபணு ஆராய்ச்சி முடிவுகள் அனைத்தும், நம் புராண, இதிஹாசங்கள் காட்டும் இந்தப் பரவலை ஊர்ஜிதம் செய்கின்றன. இந்தப் படத்தில் கருப்பு அம்புக் குறிகள் 70,000 ஆண்டுகளுக்கும் முன்னால் கிழக்கு ஆஃப்ரிக்காவிலிருந்து மக்கள் வந்ததைக் காட்டுகிறது.

இவற்றுள் இரண்டு கருப்பு அம்புக் குறிகள் இந்தியாவை நோக்கிச் செல்கின்றன. 

ஒன்று இந்தியாவுக்குள் நேரிடையாகவும், மற்றொன்று அரபிக்கடலோரப்பகுதிக்கும் செல்கிறது. 

அதாவது, இந்தியக் கடல் பகுதியிலிருந்து நேரிடையாகப் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக மக்கள் பரவியிருக்கிறார்கள். 
அரபிக் கடலோரம் செல்லும் அம்புக் குறி வைவஸ்வத மனு சென்ற வழி.
அந்த அம்புக் குறியிலிருந்து சிவப்பு அம்புக் குறிகள் இந்தியாவுக்குள் செல்கின்றன. முதல் வழி, சரஸ்வதி நதி வழியாக இமயமலை வரை செல்கிறது. அந்த வழிப்பாதையில் குடியமர்ந்த மக்கள் நாளடைவில் இந்தியாவுக்குள் பரவின திசைகளை மற்ற அம்புக் குறிகள் (சிவப்பு நிற) காட்டுகின்றன.
இன்றைக்குத் தமிழ் நாடு என்று சொல்லப்படும் இடத்துக்குப் புகார் வரை ஒரு அம்பும், கன்னியாக்குமரி வரை மற்றொரு அம்புக் குறியும் காட்டப்பட்டுள்ளன. சோழவர்மன், சேரலாதன் ஆகியோர் வந்த வழியை இவை காட்டுகின்றன.


இதே இடத்தில் நேர்த் தெற்கிலிருந்தும் மக்கள் தமிழ் நாடு வழியாக இந்தியாவுக்குள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நுழைந்திருக்கின்றனர்.
ஒரு உதாரணம், சோழ வர்மன் புகாரில் சோழ நாட்டை நிர்மாணிப்பதற்கு முன்பே அங்கு உயர்ந்த நாகரிகம் கொண்ட மக்கள் இருந்திருக்கிறார்கள். 11,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கட்டமைப்புகள் புகார் அருகே கடலுக்குள் காணப்படுவது ஒரு சான்று (பகுதி 16) இந்தியக் கடல் வாழ் மக்கள் (சாகத்தீவு அல்லது தென்னன் தேச மக்கள்), தமிழ் நாட்டிலும், தென்னிந்தியாவிலும் பல் வேறு காலக்கட்டங்களில் சங்கமித்திருக்கின்றனர். இரண்டு வழிகளிலும் வந்து சங்கமித்திருக்கிறார்கள்.


இவற்றையெல்லாம் தெளிவாக அறிய, சஞ்சயன் வாயிலாக இந்தியக் கடலில் உறங்கும் சாகத்தீவின் வர்ணனையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அப்பொழுதுதான், தென்னன் தேச மக்களுக்கும், மனுவால் கொண்டுவரப்பட்ட மக்களுக்கும் இருந்த பொது மூலம் தெரிய வரும்
அது மட்டுமல்ல, தொல்காப்பியர் அடிக்கடிச் சொல்லும் என்மனார் புலவர் என்னும் முந்தைய காலக்கட்டத்தில் இருந்த புலவர்களும், சான்றோர்களும் கொண்டிருந்த ஒரு முக்கிய வாழ்க்கை முறை - 
திராவிடவாதிகளால் இகழப்படும் அந்த வாழ்கை முறை,
சாகத்தீவில்
பின்னாளில் தென்னன் தேசமான இடத்தில்
அதே காலக்கட்டத்தில் வைவஸ்வத மனு மூலமாக இன்றைய இந்தியாவிலும் -  
எவ்வாறு எழுந்தது என்றும் தெரிந்து கொள்ள முடியும்.


அவற்றை அடுத்தக் கட்டுரையில் தெரிந்து கொண்டு விட்டு, மரபணு ஆராய்ச்சி முடிவுகளை அதற்கடுத்தக் கட்டுரையில் ஆராய்வோம்.


(மிக மிக நீளமான பதிவுக்கு மன்னிக்கவும்.)

Click the images to see the image details.

22 கருத்துகள்:

 1. Dear Jayasree Mam,
  The conclusion is very logical.I think this further goes to the 'Out of Africa' theory right?

  I read somewhere that there were around 21 tribes in different places of Africa who worship a mountain God in the name 'Murungu'.

  I think we can try to go the past as much as possible to get the greater picture.

  பதிலளிநீக்கு
 2. Dear Mr Chalam,

  I will be giving only those issues that have a backing - in literature or science (Genetics here). I will not be going in to out of Africa theory more than what is understood through genetic research. The description of Shaka dweepa given in Mahabharatha matches with the location of Kumari kandam in Indian ocean. The two routes that I said in this post - of Manu and the regular stream from the South have originated in the same Kumari / Shaka dweepa is what I am going to impress upon. This will show how the entire people of India of today including the Tamils have kinship with each others in India. Sangam age started 11,000 years ago in deep south. A few 1000 years before that Manu had entered India. Manu's root in the deep south puts him and Thennan people from the same origin. This will go to prove that the so-called acrimony between Aryans and Dravidians (held so by the Dravidian chauvinists) is wrong. More will be in the next article.

  பதிலளிநீக்கு
 3. அருமையான கட்டுரை அக்கா.(டைம் கிடைக்கும்போது படிச்சு பாக்குறேன்)

  பதிலளிநீக்கு
 4. Dear Jayasree Mam,
  I have started reading the articles in your blogs and read about the spiral galaxies.

  Its spell binding that our ancient seers had a profound knowledge in Astro Physics which the modern science slowly catches up!.

  For some reason these knowledge were not let out to the common man.Very few possessed the knowledge generation after generation.I wonder what might be the reason.

  Anyway, thanks to the internet and blogging, now thousands can read your articles and take the pearls of wisdom from it.


  In another article you said that you have plans to start writing series about our ancient's cosmological wisdom.

  I have heard that Ancient Tamil works have elements of Astro physics.I remember reading that 'Kanian' is the name for the one well versed in Astronomy.

  You have given the true identity of the tamils in this series.

  Please also illuminate us about the scientific knowledge of the ancient Tamils especially about
  Astro physics.

  With your in depth knowledge of Astrology, Astronomy and literature and with you writing style you can make us easily understand the subject.

  Knowing our glorious past and the knowledge possessed, will make us move towards the same in the future.

  I am eagerly waiting for the series.Will you do so after completing the 'Tamizhan Dravidana' series.

  One more thing I would like to add, all your work needs to be published as books so it will reach the masses who were deluded for centuries
  thinking themselves as inferior to the westeners.

  Regards
  Chalam

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. In Tamilnadu, thinking themselves inferior to westerners is not prevalent now.

   But thinking they are intelligent than others in india and world is prevalent as To counteract the inferiority complex they have used superiority complex.

   They are aligning themselves with the westerners.
   What you see,hear and feel here are contradictory and unpredictable notions about life,culture and history.

   Anti- intellectuals are their redeemers.intellectual terrorists are their warriors.dravidian rational Extremists,terrorists are their patriots.actors,politicians are admired as demigods.

   Inspite of all chaos,large portion of good people like you are still living like a man not on the stage

   நீக்கு
 5. Dear Mr Chalam,

  Thank you very much for going through my English blogs. There are a number of issues I would like to write after finishing Tamizhan thiraavidana series. One of them is the cosmic concept of Hindu Thought. Already an unfinished task was done on that topic in TamilHindu. You can read the articles in this site.

  http://www.tamilhindu.com/author/jsreesaranathan/

  Other long term plans include writing astrological references in Tamil sangam texts and writing Hindu Thought that is prevalent in Thirukkural.


  Tamils culture is core Hindu culture. Infact Hinduism had continued to exist due to Tamilnadu in the post Muslim era. Some facets of Tamil culture's Hindu basis will be written in the next article.

  Thanks for your suggestion on bringing out as book. Infact this series on Thamizhan thiraavidannaa was originally planned to be brought out in a magazine, but dropped later. There are space constraints in writing in magazines when I plan each part. If you have noticed, the early articles in this series were written within word limit. That limit puts constraint on the explanation I use. But as I proceeded I decided to brush aside those constraints and started writing as a thought-flow.

  Recently Dinamani online edition made a reference to this series. After finishing this series, may be I will think of getting this published in a daily magazine and then as a book. Let me see.

  பதிலளிநீக்கு
 6. Dear Jayasree Mam,
  Your decision to write in the Blog with the thought flow is perfectly right.
  In the 80s having a TV in a house is a show of wealth but now almost all have that.In the near future same will be the case of PCs.Computer literacy is a must in this century and hence this is the perfect place of knowledge and thought sharing as long as the Government don't impose restrictions as the Chinese did.

  I have heard that 'Satsang' is the process in which people come together and discuss about various topics.

  That's exactly what is taking place in the Blogs with people from far corners of world.

  Thanks for sharing your ideas, am eagerly waiting for the future articles.

  Regards
  Chalam

  பதிலளிநீக்கு
 7. Dear Jayasree Mam,
  Reflecting on the articles here and on the related blogs makes many thought cross over the mind, both personal and social.

  The more I think about it the more questions arise and I hope you don't mind clarifying these and fill the gap in knowledge

  I am worried what will happen to the quality of life of the future generations if the present social and political situation continues.

  I would like my kid to have clear understanding of our religion, our identity and our root.

  With the right understanding and insight one can
  excercise the free well wisely.

  How can I do that, I cant simply tell the mythical stories which will be more like a fantasy and moral stories to the kid.

  I had to back it up with historical and scientific perspective.For that, first I should be equipped with the right knowledge and that is what your blogs give me.

  Many Thanks for your work on this.

  Regards
  Chalam

  பதிலளிநீக்கு
 8. Dear Mr Chalam,
  Happy to know that my blogs are useful to you.
  On 'Kaniyan' poongkunranaar that you expressed in a comment above, I would like to give the link to my old post
  http://jayasreesaranathan.blogspot.com/2010/06/theme-song-world-tamil-conference.html

  This post analyses the theme song of Semmozi maanadu written by Mr Karunanidhi. In this you will get an explanation on Kaniyan and his verse 'yaadum UrE'.

  பதிலளிநீக்கு
 9. இலங்கை தமிழரின் நாடு .....மற்றும் சிங்களவர் ஒருபோதும் இந்தியாவை நண்பனாக பாத்தது இல்லை ..
  சிங்களவர் கி,மு 6 நூற்றாண்டில் வந்தார்கள் என அவர்களின் வரலாறு கூறுகிறது...
  அவர்களின் வரலாற்று நூலை படித்தால் அதில் தமிழர்களை எதிரியாக வர்ணித்து எழுத பட்டு உள்ளதை அறியலாம்..
  (விதி விலக்காக எல்லாளன் )
  உங்களின் சிங்களவர் குறித்த கருத்துகளுடன் எனக்கு உடன்பாடு இல்லை ....
  மற்றபடி மிகவும் நல்தோர் கட்டுரை ....
  திராவிட வாதிகளுக்கு நல்ல அடி .....
  சிங்களரின் நாடு இலங்கை இல்லை அவர்கள் வந்தேறிகள் ...

  பதிலளிநீக்கு
 10. Your statement citing the origin of sinhalese from the eastern and north western India gains credentials from today's statement of the Sri Lankan Ambassador.

  பதிலளிநீக்கு
 11. ரைவதக மலை குறித்த முழு மஹாபாரதப் பதிவைக் காண http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Adiparva-Section221.html என்ற லிங்குக்குச் செல்லவும்.

  இந்தப் பக்கம் குறித்த ஒரு சிறு அறிமுகத்தை மேற்கண்ட பக்கத்தில் கொடுத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. sorry for my poor eng., knoledge- madsam the kumari kandam yenbathu illai yendru jayakaran yenbaver maruppu nool ondru velliyittullar. melum dravider -vada indiar yenbathu prichannayillai. brammnas-dhasus yenbathuthan. chinnthu samaveli nagarigam -vatakkil thamizharkaludaithu yendra varalattru chandrai inddrum vata indiyargal yerppathillai. athai yettrle dravidathamizhar closed. yeninum ungal aivu azhamanathu .puthiya aivugalukku vitthiduvathu. varaverkiren;nandri. munaiver ka. sekar -karaikal. puthuvai maanilam,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி முனைவர் அவர்களே. சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை நிலவரம் மற்றும் குமரிக் கண்டம் போன்றவை குறித்தும் இதே தளத்தில் கட்டுரைகள் இருக்கின்றன. படிக்கவும்.

   குமரிக் கண்டம் குறித்து, ஆங்கிலத்தில் இன்னும் விரிவாக எழுதியுள்ளேன். அவற்றை இங்கு படிக்கலாம் :-
   பகுதி 1 - http://jayasreesaranathan.blogspot.in/2012/12/mu-to-lemuria-kumari-kandam-to-sumeria.html
   பகுதி 2 - http://jayasreesaranathan.blogspot.in/2012/12/mu-to-lemuria-kumari-kandam-to-sumeria_21.html

   தமிழின் முதுமையையும், ஒருமித்த சமுதாயத்தினராக பாரதம் முழுவதும் இருந்த பாங்கு போன்றவற்றை முண்டா மக்கள் குறித்த எனது கட்டுரைகளில் காணலாம். அவற்றின் தொகுப்பு இங்கே :- http://www.scribd.com/doc/221731922/Munda-people-a-product-of-Parashurama-s-fury

   தமிழே வால்மீகி பேசிய மொழி, சீதையும் அனுமனும் பேசிய மொழி, இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி என்னும் கருத்துக்களை இங்கே காணலாம்:-

   http://thamizhan-thiravidana.blogspot.in/2011/08/65.html

   http://jayasreesaranathan.blogspot.in/2013/04/hanuman-and-sita-conversed-in-madhura.html

   http://jayasreesaranathan.blogspot.in/2012/06/cartoon-controversy-on-hindi-agitation.html

   நீக்கு
 13. singhala people did not exist durimg mahabharat times. pls tell mahabharat lines which states singhala ppl?.....i think u r cheating......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Why should I cheat? எவ்வளவு கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அவற்றிலும் எத்தெத்தனை சான்றுகளைக் காட்டியுள்ளேன். நமக்குத் தெரியாதது கடலளவு என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். மற்ற கட்டுரைகளையும் படியுங்கள். குறிப்பாக 48 ஆவது கட்டுரையிலிருந்து திராவிடம் அல்லது திராவிடர் பற்றி எழுதுயுள்ளேன். படிக்கவும்.

   நீங்கள் கேட்டதற்கொப்ப மஹாபாரதத்தில் வரும் சிங்களவர் சான்றுகளை, அத்தியாய, வரிகளுடன் சமஸ்க்ருதத்தில் உள்ளவற்றை, அவற்றின் transliteration உடன் கீழே தந்துள்ளேன்.

   சான்று 1.

   Mahabharata Book 2, chapter -31- verse 12

   12 दरविडाः सिंहलाश चैव राजा काश्मीरकस तथा

   12 draviḍāḥ siṃhalāś caiva rājā kāśmīrakas tathā

   12 த்ரவிடா சிம்ஹலாஸ் சைவ ராஜா காஸ்மீரகாஸ் ததா


   Meaning:- (த்ராவிடர்கள், சிம்ஹலவர்களுடன், காஸ்மீர ராஜாவும்)

   In English:- the Dravidas and the Singhalas and the king of Kashmira,

   (இது சொல்லப்படும் இடம், பாண்டவ அரசனான தர்மர் எனப்படும் யுதிஷ்டிரர் ராஜசூய யாகம் செய்த நேரம். அதற்குப் பல நாட்டரசர்களும் வருகை தந்து, காணிக்கைகள் கொடுத்தனர். அவ்வாறு வந்தவர்களுள் சிம்ஹளவர்களும் ஒருவர்.
   இந்த வரியில் த்ராவிடர் என்றும் சொல்லப்பட்டுள்ளதால், அச்சொல் தமிழர்களைக் குறிக்கிறது என்று எண்ண வேண்டாம். எனது பிற கட்டுரைகளில் திராவிடர் என்று வரும் இடங்களை ஆராய்ந்துள்ளேன் படிக்கவும். கர்ண பர்வத்தில் (8 ஆவது பகுதி) மஹாபாரதப் போரை விவரிக்கும் போது, பாண்டவ சைன்யத்தில் த்ராவிடர், பாண்டியர், சோழர், கேரளர் ஆகியோர் இருந்தனர் என்று வருகிறது. இதிலிருந்து திராவிடர்கள் என்று வேறு யாரையோ சொல்லியிருக்கிறார்கள், தமிழர்களை அல்ல என்று தெரிகிறது. அந்த வரிகள் இதோ:

   In verse Book 8- Chapter 8 – verse 15

   सात्यकिश चेकितानश च दरविडैः सैनिकैः सह
   15 भृता वित्तेन महता पाण्ड्याश चौड्राः स केरलाः

   sātyakiś cekitānaś ca draviḍaiḥ sainikaiḥ saha
   15 bhṛtā vittena mahatā pāṇḍyāś cauḍrāḥ sa keralāḥ

   ”சாத்யகீஸ் சேகிதானஸ் ச த்ரவிடை சைனிகை சஹ
   பர்த்ரா வித்தேன மஹதா பாண்டியாஸ் சௌடாஸ் ச கேரளாஹ்”

   {சோழர் என்பதை சோடா, சௌடா என்று சமஸ்க்ருதத்தில் குறிப்பர்

   Meaning:- Satyaki and Chekitana with the Dravida forces, and the Pandyas, the Cholas, and the Keralas, )

   ***********

   நீக்கு
  2. சான்று 2:-

   Mahabharata Book 2, chapter -48- verse 30

   30 समुद्रसारं वैडूर्यं मुक्ताः शङ्खांस तथैव च
   शतशश च कुथांस तत्र सिन्हलाः समुपाहरन

   30 samudrasāraṃ vaiḍūryaṃ muktāḥ śaṅkhāṃs tathaiva ca
   śataśaś ca kuthāṃs tatra sinhalāḥ samupāharan

   சமுத்ரஸாரம் வைடூர்யம் முக்தஹ சங்காம்ஸ் ச
   ஷதஷஸ்ச்ஹ குதாம் தத்ர ஸிம்ஹளா சமுபாஹரன்.

   Meaning:- And the king of the Singhalas gave those best of sea-born gems called the lapis lazuli, and heaps of pearls also, and hundreds of coverlets for elephants.

   *****************
   சான்று 3:-

   Mahabharata Book 3, chapter -48- verse 19

   19 सागरानूपगांश चैव ये च पत्तनवासिनः
   सिंहलान बर्बरान मलेच्छान ये च जाङ्गलवासिनः

   19 sāgarānūpagāṃś caiva ye ca pattanavāsinaḥ
   siṃhalān barbarān mlecchān ye ca jāṅgalavāsinaḥ

   ”ஸாகரானூபகாம்ஸ் சைவ யே ச பட்டனவாஸினஹ
   சிம்ஹலான் பர்பரான் ம்லேச்ச்ஹான் யே ச ஜாங்கலவாசினஹ”

   Meaning:- the chiefs of many islands and countries on the sea-board as also of frontier states, including the rulers of the Sinhalas, the barbarous mlecchas, the inhabitants of forests

   (These people were present in the Rajasuya yajna done by Yudhishtra of Pandavas. They had come with gifts to be given to Yudhishtira. The previous line mentions Angas, Pandyas, Odras, Cholas and Dravidas. Note that ‘Dravidas’ are in addition to Cholas and Pandyas thereby showing that Dravidas were different from Tamils. The line is

   18.2 सवङ्गाङ्गान सपौण्ड्र उड्रान सचॊल दरविडान्धकान
   18.2 savaṅgāṅgān sapauṇḍr uḍrān sacola draviḍāndhakān

   ********************

   சான்று 4:-

   Mahabharata – Book 7 – chapter 19 – verse 7.

   7 कलिङ्गाः सिंहलाः पराच्याः शूराभीरा दशेरकाः
   शका यवनकाम्बॊजास तथा हंसपदाश च ये

   7 kaliṅgāḥ siṃhalāḥ prācyāḥ śūrābhīrā daśerakāḥ
   śakā yavanakāmbojās tathā haṃsapadāś ca ye

   ”கலிங்கா சிம்ஹலா ப்ராச்யா சூராபீரா தசரேகாஹ்
   ஷகா யவன காம்போஜாஸ் ததா ஹம்சபதாஸ் ச யே”

   Meaning :- The Kalingas, the Singhalas, the Easterners, the Sudras, the Abhiras, the Daserakas, the Sakas, the Yavanas, the Kamvojas, the Hangsapadas,

   (continued in next verse ) the Surasenas, the Daradas, the Madras, and the Kalikeyas, with hundreds and thousands of elephants, steeds, cars, and foot-soldiers were stationed at the neck of Drona's Garuda Military Formation.

   நீக்கு
 14. பகவான் விஷ்ணுவின் 10 வது அவதாரமான கல்கி அவதாரம் பற்றி இணையத்திலும் மற்றும் ஊடகத் தொடர்புடைய சில துறைகளின் மூலமும் பலவாரியாக சர்ச்சைகள், விவாதங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அவற்றில் சில
  1.முஹம்மது நபி தான் கல்கி அவதாரம் என்று இஸ்லாமியர்களும், 2. எசு கிறிஸ்துவின் அடுத்த வருகையே கல்கி அவதாரம் என்று கிருஸ்தவர்களும் , 3. திபேத் பகுதி இருக்கும் இமயமலையின் அடியில் உள்ள வெளிவரத சம்பள என்ற கிராமமே கல்கி தோன்றும் ஊர் என்று புத்தமத நூல்களும் கல்கியை சொந்தம் கொண்டாடுகின்றன. மேலும் 4. பாரதத்தின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருவர் தானே கல்கி என்று கூறிக்கொள்வதலும், 5. கல்கி புராணப்படி கல்கி பகவான் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி நதிக்கரையில் அவதரிப்பார் என்று சிலரும் கூறுவதாலும் ஏற்ப்பட்டுள்ள பெரும் குழப்பத்தை தீர்க்க தம்முடைய ஆய்வு கட்டுரை உதவும் என நான் நம்புகிறேன். ஆதலால் கல்கி பகவானைப் பற்றி கல்கி புராணம் ,பாகவத புராணம், அக்னி புராணம் மற்றும் பத்ம புராணங்களின் கூற்றை ஒரு கட்டுரையின் வாயிலாக விரிவாக விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி கோமதி.

  பதிலளிநீக்கு
 15. தமது கட்டுரைகள் அனைத்தையும் வாசித்தேன். இது வரை யாரும் அணுகாத கோணத்தில் தம்முடைய எழுத்துக்கள் உள்ளன. தமது கட்டுரையின் கூற்றுப்படி திராவிட தேசம் என்பது கூர்மச்சக்கரத்தின் தென்மேற்கு பகுதியில் குறிக்கப்பட்டுள்ள தேசம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. அப்படியெனில் ரிஷி வியாசரால் எழுதப்பட்ட ஸ்ரீமத் பாகவதத்தின் ஆரம்பபகுதியில் தமிழ் தேசத்தை திராவிட பகுதி என்று சுட்டிக்காட்டுவது எதன் அடிப்படையில்? பாகவதத்தில் கன்னட நாடு என்ற பகுதி திராவிடத்திற்கு மேல்பகுதியாக சுட்டிக்கட்டப்படுவதாலும், அணைத்து உபன்யசகர்களும் தமிழ் பகுதியே திராவிடம் என்ற சொல்லால் சுட்டப்படுகிறது என அறுதியிட்டுக் கூறுவதாலும் எனக்கு இந்த ஐயம் எழுந்தது. தங்களின் பதிலை ஆவலுடன் எதிர்பர்ர்த்து இருக்கிறேன். பாகவதத்தின் அந்த கூற்றை அடைப்புகுறிக்குள் கொடுத்து இருக்கிறேன்.(ஒரு பெண் தனது பெயர் பக்தி என்றும், தாம் திராவிட தேசத்தில் பிறந்தவள் என்றும் கன்னடம் மற்றும் மகாராஷ்டிரத்தின் சில பகுதிகளால் வளர்க்கப்பட்டவள் என்றும் மேலே செல்ல செல்ல பக்தியாகிய தாமும் ஞானம் மற்றும் வைராக்கியம் ஆகிய தம்முடைய புத்திரர்களும் துர்பாக்கிய நிலையை அடைந்ததாகவும், பிருந்தாவனத்தை அடைந்தவுடன் தான் மட்டும் புத்துணர்ச்சி பெற்றதாகவும் சொல்கிறாள்............) கோமதி

  பதிலளிநீக்கு
 16. /// மஹாபாரதக் காலக்கட்டத்திற்கு முன்பே சிங்களவர்கள் இலங்கைத் தீவில் குடிவந்திருக்க வேண்டும். ஏனெனில் காம்போஜர்கள் என்றும், சிங்களவர்கள் என்றும் மஹாபாரதத்தில் தனித்தனியாகச் சொல்லப்பட்டுள்ளது. ////

  புராணங்களின் படி ராமாயணம் நடந்தது மஹாபாரதத்திற்கு முன்தானே?

  சிங்களர்களை காம்போஜர்களுடன் இணைப்பது விசித்திரம்??
  9500 வருடத்திற்கு முன் கடலுக்கு அடியில் மூழ்கிய நகரம் பற்றி ஆராய்ச்சி எங்கிருக்கிறது? "மனு திராவிடம்" என்று எந்த குறிப்பை வைத்து சொல்கிறீர்கள்?

  காம்போஜர்களையும், சிங்களர்களை ஒன்றாக குறிப்பதால் மட்டுமே அவர்கள் அடுத்தடுத்து தேசத்தவர்கள் என்கிறீர்களா?

  //வங்க நாட்டுக் காம்போஜர்கள், அங்கும் சிங்க புரம் (இன்றைய மேற்கு வங்கத்தின் சிங்கூராக இருக்கலாம்) என்னும் நகரை நிர்மாணித்தனர். //

  இன்றைய சிங்கப்பூர், சிங்க புரா என்றே அழைக்க பட்டு வந்திருக்கிறது (நன்றி விக்கிபீடியா) பத்தாம் நூற்றாண்டு கல்வெட்டு இதற்க்கு சான்று. மனிதர்கள் தாங்கள் குடியேறும் இதன்களின் பெயர்களை தங்களுக்கு தெரிந்த பர்யர்கள் அல்லது பூர்விக பெயர்கள் இடுவார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. எனினும் இந்தியாவை கடந்து நமது வரலாற்றின் ஆராச்சியை விரிவு படுத்தினால் மட்டுமே தமிழர்களை பற்றிய முழுதுமாக அறிய முடியும். திராவிடம் மறுக்கும் பலரும் குமரிக்கண்ட ஆராய்சசியையும் மறுக்கிறார்கள். பூம்புகார் நகரம் கடலுக்கு அடியில் இருக்கிறது என்று சொல்லிவரும் ஆராய்ச்சியாளர்களின் சொல்லையும் மறுக்கிறார்கள். ஏன்?

  கல்வெட்டுகளும், அகைவாராய்ச்சிகளும் உலகின் வரலாற்றை உறுதி படுத்தி கொண்டிருக்கும் இந்த காலத்தில் வாய்வழி சான்றுகளை மட்டுமே வைத்து வரலாற்றை சொல்லிக்கொண்டிருக்க போகிறதா இந்தியா??


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. You have not read the above article fully. It has answers for all your questions raised in your comment.

   நீக்கு