சனி, 20 நவம்பர், 2010

4. ஆரிய இனம், ஆரிய மொழியாக மாறிய கதைஆங்கிலேயர்கள் காலனி ஆதிக்கம் செய்தபொழுது, மொழி ஆராய்ச்சியாளர்களுக்கு நிறைய கிராக்கி இருந்தது. இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் ஐரோப்பிய மொழிகள் ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்த நேரம் அது. ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மானிய  மொழி, செக் மொழி, ரஷ்ய மொழி இவையெல்லாம் ஒரே மொழிப் பிரிவைச் சேர்ந்தவை என்று ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது. ஆங்கிலேயர்கள் பல நாடுகளைத் தாங்கள் காலனிகளாக மாற்றிக் கொண்டிருக்கையில், இந்த மொழி ஆராய்ச்சியாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டார்கள். மொழி ஆர்வம் கொண்ட அவர்கள் ஆங்காங்கு உள்ள லோக்கல் மொழியைக் கற்றுக் கொண்டு ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக இருந்தனர்.
 

இங்கு ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த மொழி ஆராய்ச்சியாளர்கள் மிஷனரிகளாகவும் இருந்தனர். அல்லது மொழி ஆராய்ச்சியாளர்களை மிஷனரி வேலைக்குப் பயன் படுத்தினர். இவர்கள் அந்தந்த வட்டார மொழியையும் கற்றுக் கொண்டனர். அங்கு இருந்த மத நம்பிக்கைகளையும் தெரிந்து கொண்டனர். தெரிந்து கொண்டு அதைக் கிறிஸ்துவத்தில் புகுத்தி தாங்கள் கிறிஸ்துவம்தான் முதன்மையானது என்று மூளைச் சலவை செய்து மதம் மாற்றினர். அப்படி செய்து பலன் கண்டவர் முன்னரே சொன்ன நொபிலி என்பவர். இவர் தமிழ் வளர்த்த மதுரையில் உட்கார்ந்து, உங்கள் இந்துமதம் தான் எங்கள கிறிஸ்துவமும் என்று சொல்லி வேலையைக்  காண்பித்தார்.

 
இவரைப் போலவே மற்ற மொழி ஆராய்சியாளர்களும், தாங்கள் வேலையை மொழியுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. நம் மதத்தை ஊடுருவி, நம் சரித்திரத்தையே மறக்கடித்து விட்டனர். அவர்கள் மாற்றி எழுதின சரித்திரத்தைத்தான் நாம் பாடமாகப் படிக்க வைத்தனர். இந்து மதத்தில் ஆழமாக வேரூன்றி இருந்த மக்களை, ஆங்கிலேயனுக்கு அடி வருடியாக மாற்றச் செய்ய வேண்டும் என்றால், அவர்களுக்கு ஆங்கிலக் கல்வி கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கும் கல்வியின் மூலம் இந்தியர்களை தங்கள் ரசனை, எண்ணம், கோட்பாடுகள், அறிவு என்ற வகைகளில் ஆங்கிலேயர்களைப் போல மாற்ற  வேண்டும் என்பதையே கல்விக் கொள்கையாக மெக்காலே கொண்டிருந்தார். 

                                 மெக்காலே 

அப்படி அவர் சொல்லி பதினைத்து வருடங்களாக ஒன்றும் உருப்படியாகச் செய்ய முடியவில்லை. அப்பொழுதுதான் அவர் கண்ணில் பட்டார் மாக்ஸ் முல்லர் என்னும் ஜெர்மானியர்.


முல்லர் பிறப்பால் ஜெர்மானியர். அவர் வேலை பார்த்ததோ இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில். அவர் சம்ஸ்க்ருதம் அறிந்த மொழி ஆராய்ச்சியாளர். மெக்காலே அவரைப் பிடித்தார். மெக்காலேயின் குறிக்கோளை முல்லர் நன்றாகப் புரிந்து கொண்டார். இந்தியர்களது மதமான இந்து மதம் அவர்களை இயக்குகிறது. அதன் பிடியிலிருந்து அவர்கள் வெளியே வந்தால் அவர்களை அடக்குவது சுலபம். இந்தக் கருத்தை தன் மனைவிக்கு 1866 -ஆம் வருடம் எழுதிய கடிதத்தில் இப்படி குறிப்பிடுகிறார். 'ரிக் வேதம் தான் இந்தியர்கள் மதத்தின் ஆதாரம். அந்த ரிக் வேதத்திற்கு  ஆதாரம் எது என்று நாம் காண்பிக்க வேண்டும். அப்படி காண்பித்தால்தான் மூவாயிரம் வருடங்களாக அவர்களைத் தன் பிடியில் வைத்திருந்த அந்த மதத்தை வேரோடு பிடுங்க முடியும் என்று நான் நிச்சயமாக எண்ணுகிறேன்" என்று எழுதினார்.


(“The translation of the Veda will hereafter tell to a great extent on the fate of India and on the growth of millions of souls in that country. It is the root of their religion, and to show them what the root is, I feel sure, is the only way of uprooting all that has sprung from it during the last 3000 years”

Source:- Müller, Georgina, The Life and Letters of Right Honorable Friedrich Max Müller, 2 vols. London: Longman, 1902.)

                                மாக்ஸ் முல்லர்

அந்த ரிக் வேதத்திற்கு ஆதாரம் என்று அவர் கண்டு பிடித்து சொன்னது ஆரியப் படைஎடுப்பு. படையெடுத்து வந்த ஆரியர்கள் கொடுத்ததுதான்  வேதமும், வேத மதமும் என்றார் அவர். ஆரியர்கள் எப்படியெல்லாம் இங்கிருந்த மக்களை அழித்தார்கள் என்று விளக்குகிறது  ரிக் வேதம் என்று சொல்லி, ஞான வழியாக விளங்கிய வேதத்தையும், இந்து மதத்தையும் கொச்சைப் படுத்தினார். இந்தக் கருத்து மொழி ஆராய்ச்சியாக மட்டுமல்ல, மிஷனரி பிரசாரமாகவும்  ஆனது. இதன் மூலம் மக்களுக்கு இந்து மதத்தின் மீது இருந்த பற்றை அழிக்கப் பார்த்தனர். அது மட்டுமல்ல, ஆரியர் விரட்டிய மக்கள் திராவிடர்கள் என்றும் கூறி, இன்றைய இந்தியாவில் இருக்கும் மக்களை ஆரியர்- திராவிடர் என்று பிரித்து ஒரு பகைமை உணர்ச்சியை மூட்டப் பார்த்தனர். ஆங்கிலேயனின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு ஆரிய- திராவிடப் பகை உரமானது.
 


ஆக, மொழி ஆராய்ச்சி என்ற பெயரில், நம் மதத்தை அழித்து, கிறிஸ்துவத்திற்கு மத மாற்றம் செய்வதற்கும், ஆங்கிலேயக் கூலிகளாக நம் மாறுவதற்குமே மாக்ஸ் முல்லர் பாடுபட்டார். இது சரித்திரம் சொல்லும் செய்தி. அப்படி அவர் சொன்னதை நம்பி, ஆரியப் படையெடுப்பில் ஓடி வந்த  திராவிடன் நாம் என்று சொல்லித் திரிவது தமிழனுக்கு மானக் கேடு.

 
ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஆரியன் வந்தான். வட இந்தியாவில் இருந்த தாச்யுக்களை  விரட்டினான். வந்த இடத்தில் உட்கார்ந்து விட்டான். ஆக்கிரமிப்பாளனாக வந்த ஆரியன் கங்கைக் கரையில் உட்கார்ந்ததும் அமைதியாளனாக   ஆகிவிட்டான். வேதம் படைத்தான். இந்து மதத்தைத் தோற்றுவித்தான் என்று அவர் எழுப்பிய கதையில், இந்தியர்கள் மயங்கினார்களோ இல்லையோ, ஐரோப்பியர்கள் மயங்கிவிட்டார்கள். தாங்கள் மூலத்தைத் தேடிக் கொண்டிருந்த அவர்கள் தாங்களே ஆரியர்கள் என்று நம்ப ஆரம்பித்துவிட்டார்கள். 


அந்த நம்பிக்கை தந்த எழுச்சியில் துண்டு பட்டிருந்த ஜெர்மனி ஒருங்கிணைந்தது.
1871 -இல் ஜெர்மனி ஒரு ஒருங்கிணைந்த பேரரசாக அறிவித்துக் கொண்டது. தங்களை 'ஆரிய நாடாகபிரகடனப்படுத்திக் கொண்டது. இதைப் பார்த்த பிரிட்டிஷ் அரசுக்குக் கிலி பிடித்துக் கொண்டது. இவர்கள் சொன்ன கதை இந்திய மக்களைக் கவர்வதற்காக. ஆனால் அதன் எதிரொலி அவர்கள் எதிரி முகாமில் கேட்கிறது. தாங்களே உயர்ந்தவர்கள் என்ற ஆரிய இன வெறியுடன் கூடிய ஜெர்மனி, அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது.
 

மேலும் அந்த நேரத்தில்தான் இந்தியாவிலும் சுதந்திரப் போராட்டம் தலை தூக்கியது. 1857 - ஆம் ஆண்டு நடந்த முதல் சுதந்திரப் போராட்டம் ஆங்கிலேயனைக் கவலையில் ஆழ்த்தியது. ஆரிய இனக் கொள்கையைக் கொண்டு இங்கு கதை பரப்பிக் கொண்டிருக்கையில், அங்கே, ஜெர்மனி தான் ஆரிய நாடு என்று சொல்லிக் கொண்டதும் அபத்தமாக இருந்தது.


பார்த்தார்கள், எந்த ஜெர்மானியரான முல்லர் ஆரிய இனக் கொள்கையைப் பரப்பினாரோ, அவரைக் கொண்டே அந்தக் கருத்தை மறுக்கச் செய்தார்கள். முல்லரைப் பொறுத்தவரை, அவருக்கு சம்பளம் கொடுத்து சோறு போட்டவன் ஆங்கிலேயன். அவனுக்கு விசுவாசமாக் நடந்து கொள்ள வேண்டும். அதனால் ஆரிய இனம் என்று பறை சாற்றியதை, ஆரிய மொழி என்று திருத்திக் கொண்டார்.  ஆரிய நாடாகத் தன்னை ஜெர்மனி அறிவித்துக்கொண்ட சில மாதங்களில், ஜெர்மானிய ஆதிக்கத்தில் அப்போது இருந்த பிரெஞ்சுப் பகுதியில் இருந்த ஸ்டிராஸ்பெர்க் பல்கலைக் கழகத்தில் முதல் முறையாக ஆரிய இனக் கொள்கையை மறுத்தார். பிறகு, இந்த 'ஆரிய ரிஷி' தன் புது கொள்கையை விடாமல் பற்றிக் கொண்டார்.


அதாவது. ஆரியன் என்று ஒரு இனமே இல்லை. அதுவரை அவர் சொன்னதெல்லாம் ஆரிய மொழியைப் பற்றியது. ஐரோப்பிய மொழிகளுக்கும், சமஸ்க்ருதத்துக்கும் ஒற்றுமை உள்ளது. எனவே இம் மொழிகளை ஐரோப்பிய அல்லது ஆரியக் குடும்ப மொழிகள் என்று சொல்லலாம் என்று பல்டி அடித்தார். அவர் சொன்ன வசனம் சூப்பர் வசனம். ஆரிய இனம், ஆரிய ரத்தம், ஆரிய முடி, ஆரியக் கண் என்றெல்லாம் சொன்னால் அது பாபம். அது லோட்டாத் தலையன் அகராதி, சொம்புத் தலையன் இலக்கணம் என்று ஆளை ஒரு அடையாளமிட்டுச் சொல்வது போல ஆகும். ஆரியம் என்பது ஆள் அடையாளம் இல்லை. அது மொழி அடையாளம் என்றார்.
("I have declared again and again that if I say Aryas, I mean neither blood nor bones, nor hair, nor skull; I mean simply those who speak an Aryan language...to me an ethnologist who speaks of Aryan race, Aryan blood, Aryan eyes and hair, is as great a sinner as a linguist who speaks of a dolichocephalic dictionary or a brachycephalic grammar.")


 
இப்படிஎல்லாம் சொன்னாலும்  ஜெர்மனி தாங்கள் உயர்ந்த ஆரிய இனம் என்று சொல்லிக் கொண்டதை மாற்ற  முடியவில்லை. உலகப் போர் வந்து ஹிட்லர் அழிந்து, ஜெர்மனி அடங்கிய பிறகுதான், ஐரோப்பிய உலகமே இந்த இனக் கொள்கையில் வாயை மூடிக் கொண்டது.
 
அப்படியும் ஆரிய இன வாதத்தைத் தங்களுக்கு வசதியாக இருக்கும் போதெல்லாம் ஆங்கிலேயன் சொல்லிக் கொண்டு நம்மை ஆண்டு வந்தான். இப்படித்தான் ஆரிய இன வாதமும், ஆரியப் படையெடுப்பும் அரசியல் ஆதிக்கத்துக்கு உதவியாக ஏற்படுத்தப்பட்டன. இதில் முளைத்த திராவிட இன வாதம் இன்றைய ஆதிக்க சக்திகளுக்கு ஊறுகாயாக உதவுகிறது.


36 கருத்துகள்:

 1. திருமதி ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களே,

  ///இந்து மதத்தில் ஆழமாக வேரூன்றி இருந்த மக்களை, ஆங்கிலேயனுக்கு அடி வருடியாக மாற்றச் செய்ய வேண்டும் என்றால், அவர்களுக்கு ஆங்கிலக் கல்வி கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கும் கல்வியின் மூலம் இந்தியர்களை தங்கள் ரசனை, எண்ணம், கோட்பாடுகள், அறிவு என்ற வகைகளில் ஆங்கிலேயர்களைப் போல மாற்ற வேண்டும் என்பதையே கல்விக் கொள்கையாக மெக்காலே கொண்டிருந்தார்///

  அருமையான கட்டுரை.மிகச் சரியாக மெக்காலேயின் நோக்கத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள்.மிக்க நன்றி.

  25 .10 .10 .அன்று வெளிவந்த தினமலர் -கல்விமலரில் " வேண்டாம் மெக்காலே...வரட்டும் புதிய விடிகாலை." என்ற தலைப்பில் பேராசிரியர் திரு.எஸ்.பி.தியாகராஜன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.அதில் மெக்காலேவின் அறிக்கைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்.அது அப்படியே மேற்கண்ட உங்கள் வரிகளின் சாட்சியாக உள்ளது.அந்தக் கட்டுரையில் உள்ளதாவது ...

  *இந்தியாவில் பிரிட்டிஷாரின் கல்விக்கொள்கையை அமல் செய்த மெக்காலே, பிரிட்டிஷ் பார்லிமெண்டில் 1835 பிப் -2 -இல் ஒரு அறிக்கை சமர்ப்பித்தார்.அதில் அவர்." நான் குறுக்கும் நெடுக்குமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றிருக்கிறேன்.இதுவரை ஒரு பிச்சைக்காரனையோ, திருடனையோ நான் பார்க்கவில்லை.அவ்வளவு வளம் நிறைந்தது அந்நாடு.கலாச்சாரம் மற்றும் ஆன்மீகநெறி எனும் முதுகெலும்பை உடைக்காதவரை நல்ல ஒழுக்கம், நல்ல பண்பு இருக்கும் அந்நாட்டின் மக்களை நாம் எப்போதும் வெற்றி பெறுவது கடினம்.ஆகவே, பழைய கல்வி அமைப்பு, கலாச்சாரம் ஆகியவற்றை மாற்றி, தங்களைவிட வெளிநாடு மற்றும் ஆங்கிலம் ஆகியனதான் உயர்வானது என்பதை மனதில் புகுத்துவதன் மூலம், தங்களைப் பற்றிய உயர்ந்த மதிப்பீட்டையும், பாரம்பரிய கலாச்சாரத்தையும் இழக்கும் படியான கல்வித் திட்டத்தை நான் பரிந்துரைக்கிறேன்.அதன் மூலம் நாம் எது போன்று அவர்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதுபோல் ஆதிக்கத்துக்குட்பட்டவர்களாக அவர்கள் மாறுவார்கள் " என்றார்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம், என்னுடைய எண்ணங்களும் உங்கள் கருத்துகளை போல உள்ளது. சில மாதங்களுக்கு முன் ஒரு ஆராய்ச்சி உரை கண்டேன்.

  http://www.scribd.com/doc/3710598/DNA-Evidence-for-Aryan-Migration-Into-India.

  உங்களின் கருத்து என்ன?

  பதிலளிநீக்கு
 3. நன்றி திரு தனபால் அவர்களே.  மெக்காலேயைப் பற்றி இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியாக மேலும் கருத்துக்களை வெளியிட்டதற்கு நன்றி.


  மெக்காலேயின் குறிக்கோள், இப்பொழுது அவர் எதிர்பார்ப்பை விட அதிகமாகவே நிறைவேறிக்கொண்டிருக்கிறது. ஆங்கிலேயன் வரும் வரை நம் மக்கள் எளிய வாழ்க்கை வாழ்ந்து, ஆன்மீக எண்ணத்திலேயே நிலையாக இருந்தனர். கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க எழுத்தாளர் மெகஸ்தனிஸ் அவர்கள் விவரித்த இந்தியாவும் அப்படி எளிமையாக, நேர்மையாக, தவறு செய்யத் துணியாத மக்களைத் தான் கொண்டிருந்தது. மேல் நாட்டுக் கல்வி முறையானது அவர்கள் கருத்துக்கள், எதிலும் பணம், ஆதாயம் தேடும் மனப்பாங்கு போன்றவற்றை இன்றளவும் நம்மிடம் பரப்பிக் கொண்டிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் திரு பால் அவர்களே.

  நீங்கள் கொடுத்த ஆராய்ச்சியைக் கண்டேன். நன்றி.

  இந்த ஆராய்ச்சி வந்த பிறகு, மற்ற ஆராய்சிகளும் வந்து விட்டன. சொல்லப்போனால், கடந்த ஒன்பது வருடங்களாக உலகில் ஆங்காங்கே நடந்து வந்த மரபணு ஆராய்சிகளின் முடிவுகள் ஒவ்வொன்றாக சென்ற ஒரு வருடமாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. அவற்றின் ஒட்டு மொத்த முடிவு ஆரியப் படை எடுப்பை ஆதரிக்கவில்லை. மக்கள் அங்கும் இங்கும் சென்ற அடையாளங்கள் இந்த மரபணு ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளன. அவை நடந்த காலக் கட்டமும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஆரியப் படை எடுப்பு நடந்ததாகச் சொல்லப்படும் காலக் கட்டத்தில் மக்கள் குடியேற்றம் வட மேற்கிலிருந்து இந்தியாவுக்குள் நிகழவில்லை.

  நீங்கள் சுட்டிக் காட்டிய உரை அந்தக் காலக் கட்டத்தைப் பற்றியது அல்ல.


  இன்று உலக முழுவதும் விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்ட ஆராய்ச்சி ஒப்ன்ஹீமர் தந்துள்ள ஆராய்சிதான். அதை இந்த இணைப்பில் காணலாம்.
  http://www.bradshawfoundation.com/stephenoppenheimer/


  இந்தத் தொடரில் மரபணு ஆராய்சிகளும் தரப்படும். பெரிய அளவில் அதாவது நாடு தழுவிய அளவில் என்று மட்டுமல்லாமல், இந்தியாவுக்குள்ளேயே மக்கள் இடப்பெயர்வும் தகுந்த இடத்தில் இந்தத் தொடரில் எழுதப்படும். அவற்றுடன் இயைந்த இந்திய சரித்திரம், நம் புராண, இதிஹாச, தமிழ் மூலங்களிலிருந்துகொடுக்கப்படும்.


  வேறு ஆராய்ச்சிகள் தங்கள் கவனத்திற்கு வந்தால், பகிர்த்து கொள்ளவும். நன்றி.

  பதிலளிநீக்கு
 5. Anbulla jayashree Madam,

  Enathu neenda Nall asai Indru nanavagi ullathu. Neengal Thamizhilum ezhutha aarambithu vittergal. Nandri....Ungal Pani sirakka vaazhthukkal.

  Pinnottam iduvatharku, Tamilhindu.com ullathu pola aangilathil type saithu, toggle pannum vasathi irundhal nandragha irukkum endru ninaikkiren. Allathu, inge thamizhilil neridayaga type seyyum vithathai villakavum.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் திரு சிவா அவர்களே,

  நான் தமிழில் எழுத வேண்டும் என்று விரும்புகிறவர் இருக்கிறார் என்று தெரிந்து ஆச்சரியப்பட்டேன். சந்தோஷம். தமிழ் தெரியாதவர்கள் பலரே என் கட்டுரைகளைப் படிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். தமிழன் திராவிடனா என்பது பற்றிய கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதிய போது, இடையில் தமிழில் ஒரு கட்டுரை போட்டேன், அப்பொழுது பிற மாநிலத்து வாசகர்கள் தங்களால் படிக்க முடியவில்லை, அதிலும் இந்தத் தலைப்பு மற்ற மாநிலத்தவர்களுக்கும் தெரிய வேண்டிய ஒன்று என்று எழுதினார்கள். இருப்பினும், தமிழ் மட்டுமே படிக்கும் மக்களுக்கு இந்தக் கருத்துக்கள் போக வேண்டும் என்று நினைத்து இந்தத் தொடர் ஆரம்பித்தேன். இந்தத் தொடர் பரவலாக, பலரையும் போய் அடைந்தால் எனக்கு மகிழ்ச்சிதான்.


  தமிழில் கருத்துரைகள் எழுத நான் என்ன செய்ய வேண்டும்? எனக்கு இந்த நுட்பங்கள் தெரியாது. யாராவது வழி முறைகள் தெரிவித்தால் உதவியாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான், எனக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தாலும், தமிழில் மாத்திரமே அதிகம் படிக்கும் பழக்கம் உடையவன், தங்களுடைய இந்த கட்டுரை முழுவதும் படித்துவிட்டு மீண்டும் படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்,
   ஆங்கிலத்தில் தாங்கள் இட்டுள்ள கட்டுரைகளை தவிர, தாங்கள் அழகு தமிழில் எழுதியதற்கு நன்றி.


   மேழும் இந்த கட்டுரைகளை முத்தமிழ் மன்றம் (muthamilmanram.com )என்ற வலைதலத்தில் தங்களுடைய கருத்தாகவே பதிய விரும்புகிறேன், அனுமதியுங்கள்

   Manipandi.G

   நீக்கு
  2. நல்லது மணிபாண்டி அவர்களே. நீங்கள் குறிப்பிட்டது போல // தங்களுடைய கருத்தாகவே பதிய விரும்புகிறேன் // செய்யவும்.
   உங்கள் வலைத்தள முகவரியைக் கொடுக்கவும். இங்கு குறிப்பிட்ட முகவரியில், எதுவும் வரவில்லை.

   நீக்கு
  3. http://muthamilmantram.com/

   அம்மா, முத்தமிழ் மன்ற தளத்திற்கு அவ்வப்போது வாருங்கள். எங்கள் மக்கள் கேட்க்கும் கேள்விக்கு தங்களால் முடிந்த அளவு பதிலையும் தாருங்கள்.

   தங்கள் இ மெயில் ஐடி தந்தால் நலமாய் இருக்கும். என்னுடைய login id மற்றும் pass word தருவேன். அதில் தாங்கள் பதிலை சொன்னாலும் நலம், அல்லது தங்களுக்கென பயனர் ஐடியை உருவாக்கிகொண்டாலும் நலமே!

   நீக்கு
  4. நன்றி. தற்சமயம் நேரமின்மையால் தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் இருக்கிறேன். விரைவில் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்

   நீக்கு
 7. திருமதி ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களே,

  ///தமிழில் கருத்துரைகள் எழுத நான் என்ன செய்ய வேண்டும்? எனக்கு இந்த நுட்பங்கள் தெரியாது. யாராவது வழி முறைகள் தெரிவித்தால் உதவியாக இருக்கும்.///

  இதற்க்கு கூகுளில் translirerate இல் எழுதி காப்பி பேஸ்ட் செய்யலாம்.இதில் "அம்மா" என எழுத "amma " என்று type செய்ய வேண்டும்.இதன் முகவரி. http://www.google.com/transliterate/indic/Tamil

  பதிலளிநீக்கு
 8. நான் அப்படித்தான் transliterate செய்து எழுதுகிறேன், திரு தனபால் அவர்களே.

  ஆனால் இந்த தளத்திற்கு வருபவர்கள் நேரிடையாக கருத்துரைப் பகுதியில் தமிழில் எழுத வசதி உள்ளதா?

  பதிலளிநீக்கு
 9. பிரித்தாளும் சூழ்ச்சி என்பதை சொல் அளவிலே கேள்வி பட்டிருந்தேன்... இந்த அளவிற்கு தமிழில் தெளிவான விளக்கத்தை இன்றுதான் பார்த்தேன்....தொடர வாழ்த்துக்கள்

  ( நேரடியாக கருத்துரை இடுவதற்கு ..NHM writer மென் பொருளை பயன்படுத்துங்கள்..வலையிலிருந்து இந்த மென் பொருளை எளிதில் இறக்கி ALT+2 போட்டு உடனே பயன் படுத்தலாம்...அதில் தான் நேராக அடிக்கிறேன் உங்கள் கருத்து பெட்டியில் இப்பொழுது )

  பதிலளிநீக்கு
 10. நன்றி திரு பத்மனாபன் அவர்களே. இந்த மென் பொருளின் உதவியுடன், இந்தக் கருத்துரையை எழுதுகிறேன்.

  பதிலளிநீக்கு
 11. ஆனால் ஈரானின் மக்கள், தங்களின் சரித்திர கல்வெட்டுக்களையும், தொல்பொருட் தடயங்களையும் காட்டி தாங்கள் தான் ஆரியர்கள், அவ்ர்கள் இந்தியாவுக்கு வந்து, இந்திய உபகண்டத்தின் பூர்வீக மக்களுடன் கலந்ததாதால் தான் திராவிடரல்லாத இந்தியர்கள் உருவாகினார்கள் என்கிறார்கள்

  http://www.yarl.com/forum/index.php?showtopic=9086

  பதிலளிநீக்கு
 12. திரு பாலகுமார் அவர்களே,

  இன்னும் பல கட்டுரைகள் இந்தத் தொடரில் வந்து விட்டன. குறிப்பாக 31 ஆவது கட்டுரையைப் படியுங்கள்.

  ஈரானியர்கள் இன்னும் பின்னோக்கி ஆராயவில்லை. மரபணு ஆராய்ச்சிகள் அவர்களை இன்னும் போய்ச் சேரவில்லை. இன்னும் 10 வருடங்களில் ஈரானியர்கள் உட்பட ஆரியம் பேசும் பல ஐரோப்பிய மக்கள் உண்மை நிலவரத்தைப் புரிந்து கொள்வார்கள். இப்பொழுதுதான் அந்த ஆராய்ச்சிகள் மக்களிடையே இறங்கிக் கொண்டிருக்கின்றன. இந்திய நூல்களான ராமாயணம், மஹாபாரதம் போன்றவற்றை ஆராய்ந்தால், முழு உண்மைகளும் கிடைக்கும் என்று வெளி நாட்டு ஆராய்ச்சியாளர்கள் இப்பொழுதுதான் சொல்ல ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் என்னுடைய இந்தத் தொடர் ஒரு முன்னோடி.

  இந்தத் தொடரில் ஈரான் பகுதியில் இருந்த டேரியஸ் என்னும் மன்னன் தன்னை ஆரியன் என்று சொல்லிக் கொண்ட காரணமும் அலசப்படும். அது மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து அமெரிக்கா வரை தொடர்பு செல்கிறது. அடுத்த சில கட்டுரைகளில் அந்த விவரங்கள் வருகின்றன.

  5000 வருடங்களுக்கு முன்னால், துவாரகை அழிந்த போது (அது 5ஆவது அழிவு, அதற்குப் பிறகு 3500 ஆண்டுகளுக்கு முன் 6 ஆவது முறையாக துவாரகைப் பகுதியைக் கடல் கொண்டது. இன்றைக்கு மீட்டு எடுத்துள்ள பேத் துவாரகா அந்த 6 ஆவது துவாரகை ஆகும்.) அரச குடும்பங்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் துவாரகையிலிருந்து புறப்பட்டு சிந்து நதிக் கரையை அடைந்தனர். அர்ஜுனன் அவர்களை வழி நடத்திச் சென்றான். அப்பொழுது சிந்துவுக்கு மேற்கில் இருந்த மிலேச்சர்கள், பெண்களைக் குறி வைத்து, குறிப்பாக அரச குலப் பெண்களைக் கடத்திக் கொண்டு சென்றனர். அர்ஜுனனால் பலரையும் மீட்க முடியவில்லை. இந்த விவரங்கள் எல்லாம் மஹாபாரதம் முசல பர்வத்தில் வருகிறது. அப்படிச் சென்றவர்களில் பல கர்ப்பிணிப் பெண்கள் இருந்தனர். அவர்கள் வழித் தோன்றலாக டேரியஸ் இருக்க வேண்டும். அவர்கள் கலப்பால் இரானிய, மத்திய ஐரோப்பிய மக்கள் எழுந்தனர். 40,000 வருடங்களுக்கு முன்பும் ஒரு இடப்பெயர்வு இந்தியாவிலிருந்து இரான், ஐரோப்பாவுக்குச் சென்றது. ஆனால் என்றுமே அங்கிருந்து இங்கு வரவில்லை.

  அர்ஜுனன் மீதம் இருந்த மக்களை அழைத்துச் சென்று குடியமர்த்திய பகுதிகளே இன்று சிந்து சமவெளிப் பகுதிகளாக அடையாளம் காட்டப்படுகின்றன. உண்மையில் 2000 த்துக்கும் மேற்பட்ட அந்த பகுதிகள் சிந்து நதிக் கரையில் இல்லை. அவை இருக்கும் இடங்கள் சரஸ்வதி நதிப் படுகையே என்று விண்கலன்கள் தரும் படங்கள் காட்டுகின்றன. அதாவது சிந்து சமவெளி நாகரிகம் என்பது அச்சு அசலான ஆரிய நாகரிகம். அங்கு வாழ்ந்தவர்கள் துவாரகையைச் சேர்ந்தவர்கள். அவர்களைத் தான் திராவிடன், தமிழன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், திராவிடவாதிகள்!!

  இன்று வரை வந்துள்ள சிந்து சமவெளி ஆராய்ச்சியை அறிந்தவர்கள் இதைக் கேட்டு தலையில் அடித்துக் கொள்வார்கள். திராவிட இயக்கம் என்பது அறிவுக்கு சம்பந்தமில்லாத இயக்கம் என்று நொபுரு கராஷிமா அவர்கள் ஏன் சொன்னார்கள் என்று இப்பொழுது தெரியும் என்று நினைக்கிறேன்.

  இன்னும் விஷயம் இருக்கிறது.
  கிருஷ்ணனது முதல் மனைவி ருக்மிணி பாதி வழியில் தீ மூட்டி அதில் இறங்கி உயிரை விடுகிறாள். இன்னொரு மனைவியான சத்யபாமா, சன்னியாசம் கொண்டு,இமய மலையைக் கடந்து ஆஃப்கானிஸ்தானம் நோக்கிச் சென்று விடுகிறாள். அவளுடன் சென்றவர்கள் உண்டாக்கினது மித்தானி ஆட்சியாகும்.

  3500 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் அவர்கள் வாழ்க்கை அவதியுற்றது. அவர்கள் குடியமர்ந்த நதிப் படுகையில் - (இது சிந்து நதி அல்ல. சரஸ்வதி நதிப் பகுதி) பூகம்பம் ஏற்பட்டு, நீர் ஆதாரங்கள் முழுவதும் மறைந்து விட்டன.

  அதனால் பலரும் கிழக்கு நோக்கி கங்கை நதிப் புறத்துக்குச் சென்றனர்.

  அந்த நேரத்தில் 6 ஆவதாக ஏற்படுத்தப்பட்ட துவாரகையில் தண்ணீர் புகுந்தது. அந்தத் துவாரகையில் வசித்த மக்கள் எங்கு சென்றார்கள் தெரியுமா?

  அதுதான் இந்தத் தொடரின் சஸ்பென்ஸ் என்று வைத்திருந்தேன். அதை இப்பொழுது போட்டு உடைத்து விடுகிறேன். அவர்கள் தமிழ் நாட்டுக்கு வந்தார்கள். ஆனல் அவர்கள் பிராம்மணர்கள் அல்லர். யாரை வந்தேறிகள் என்றார்களோ அவர்கள் வந்தேறிகள் அல்லர்.

  வந்தேறியவர்களை, இங்கு இருந்தவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, ஏன் தமிழ் மன்னர்களே ஏற்றுக் கொள்ளவில்லை. வந்தேறியவர்களது புரவலர்கள் பலம் குன்றிய பிறகு, அந்த மக்கள் பெற்ற அடையாளம் தாழ்த்தப்பட்டவர்கள் என்பது. மற்றவை இந்தத் தொடரில் வரும்.

  பதிலளிநீக்கு
 13. Shrimathi,

  It may be true according to your analisysis that the English people and the missionaries have created the Aryans-Dravid friction for their self-benefit.

  But no one can doubt that Arya vedam and saiva samayam have operated separately and independantly. Yet, the saiva history shows that Arya Vedam has attempted, and to some extent and for some period of time in history of Tamilians,
  concurred the saivism.

  The oppression of Arya vedam over saivism through their influence over south Rajahs has created the ill-feelings and hatered between the Tamillians and Aryans which is now construed as Arya-Dravid animosity.

  Please clarify.

  பதிலளிநீக்கு
 14. Dear Mr Nathan,

  The anlysis of history of any oppression anywhere in the world will show that such oppressions have happened and can happen only with political and economic clout. Arya Vedham as you call it, has never done that.

  In fact only three religions have wielded power over the rulers and masses. They are Christianity, Islam and Buddhism. Hinduism or Hindu spiritual leaders have never done that. Even today you can see that trend. It is because the Hindu theology or what you call Arya Vedham is non materialistic. Even though Hinduism existed in India from an unknown past and rishis have been venerated all along by kings, the kings have never allowed the rishis or Arya Vedins to have their say in the society or in the running of the government. They may take advice but the decision is theirs. I will devote a chapter on this with evidences in this series later.

  The attempts to influence kings happened only with Buddhists. Even today it can be witnessed in Srilanka. The Jains did not exhibit clout politically but tried to usurp Hinduism by influencing the education and ideology of the Hindus.

  Though Hindu Bhakthi cult encompassing all deities of the Hindu fold, had existed in Tamil lands from sangam times, it had existed as a peaceful cult followed by people on their own volition. Paripaadal stands testimony to it. But with Buddhists casting their influence on Tamil Kings (Goon Pandian is an example) Jains converting Hindus, it provided a need for the Hindus to speak up the glory of Hinduism openly. Until then, Bhakthi was a private affair.

  The Bhakthi movement successfully drove out the Buddhists and Jains from Tamilnadu. The Saivites played a major role in that attempt. But the Saivites did not go back to their previous bhakthi cult. The newly tasted power equation with the rulers actually resulted in influencing the kings to indulge in forceful conversion activities. Their vision was to establish all Saivite land. There are records of wanton destruction of vaishnavite shrines and forceful conversion to saivite shrines.

  This may be unpalatable to certain readers, but the fact of the matter is that most of Navagraha temples in Kumbakonam area are originally Vishnu temples, forcefully converted into Shiva temples. The Budan temple at Thiruvenkadu was originally the Manivannan kottam that Kannaki and Kovalan worshiped before leaving for Madurai. The Budan is infact one of the sons of Vishnu by name Saaman. There is evidence to all this and there is evidence to Kaaman and Saaman as the 2 sons of Vishnu who were worshiped in sangam times (Paripaadal). If you see a Lakshmi sannidhi in any Siva temple, know then that the temple was originally Vishnu temple! Lakshmi sannidhi can never exist alone in a temple where there is no sannidhi to Vishnu. The saivites retained the Lakshmi while they dismantled the other sannidhis of Vishnu temple.

  Through all this, the Vaishnavites did not indulge in counter offense because they are not trained to do so in their Vedanthic grooming. Such being the case, to say that Arya Vedham oppressed others is a gross misunderstanding of the way the Vedic thought influenced its adherents. I don not say that Saivites did oppression on their volition. The ruler did them influenced by the saivites. The time period of this was around and after 10th century AD. That was when the Saiva siddhantham got a final shape.

  (cont'd)

  பதிலளிநீக்கு
 15. (cont'd from above)

  Any oppression or suppression had to happen, that can be possible only when the ruler takes up that. Even today we can see the rise or fall of the clout of sections of people being dependent of the ruler whom they support.

  The The Cholan and Pandyan kings - post Bahkthi movement were influenced by Saivites and not Vaishnavites and did commit atrocities. There are evidences to this. Their target was Vaishnavites, who swore by Vedantha. The conflict between Vedantic and Saivite people was thus foisted by saivites. You will find no evidence of oppression by Vedantins.

  In due course there arose a power struggle among the saivites themselves. The Vaisyas and Vellalars of shiva worshippers could not accept the Saivite Brahmins. In this context let me tell you another thing. In many places in scriptures, both sanskrit and Tamil, we come across reference to the 4 varnas and what accrues to them as a result of such and such a act. Always the middle two varnas will be referred to as gaining power and wealth. The Brahmin and Shudra varnas will be referred as gaining knowledge and mahathwam / greatness. (eg refer 1st chapter in Valmiki Ramayana).

  There is always a nexus between Ksahthriyas (rulers) and Vaisyas (business class) Material gains are best enjoyed by them. From times of yore till today this tendency can be seen around us. The rules and laws are made by them and made by ensuring that their interests are protected / not jeopardised. Only the Brahmins and Shudras are left in the fringe.

  This development became more pronounced after the fall of kings and kingdoms. In Tamilnadu the Saiva Vellalas could not accept the Saiva Brahmins. This developed as anti-brahmanism. Their reasoning was that since they too were ardent Shiva worshippers, they were entitled to privileges in temples that Brahmins enjoyed. Sir P.Thyagaraja's involvement in Dravidian movement started only when he got angry that a Brahmin who worked under him was standing near the deity in Kapaleeshwarar temple to say the chantings while he, who donated money to renovate the temple was seated away from the deity. Read the articles in tamilhindu.com to know all the incidents like this that the wealthy class did in sheer காழ்ப்புணர்ச்சி against Brahmins.

  I suggest you read the google book in the link given below to know how this saivite class provoked anti brahmanism and took advantage of the Dravidian concept proposed by the English and acted in collusion with Periyar.

  http://books.google.co.in/books?id=tk-KZmcUEvAC&pg=PA119&lpg=PA119&dq=gnanasambanda+jains&source=bl&ots=efj0CNCFsi&sig=-abcHM9-L4VnS5geEk8S8sMVyfc&hl=en&ei=KwpgTr2xF4i38gOTzdjaDw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CCAQ6AEwAQ#v=onepage&q=gnanasambanda%20jains&f=false


  I suggest you, Sir to read all the articles written in this blog to know the true picture of Vedic past. There are more to come in which I will be writing on the roots of Shiva worship traced to Thennan desam in the lost lands in Indian ocean.

  Before concluding, I wish to bring to your notice that Thillai anthanars (guardians of Nataraja) were the oldest and true Tamils who came from submerged Thennan lands. They were not from North. I will be writing on them in this series. They follow Vedic tradition. Vedic tradition was the first and timeless, Shiva and Vishnu worship also were timeless and conducted in Vedic tradition only. Saiva siddhantha got shape much later.

  பதிலளிநீக்கு
 16. Thanks for your clarifications. I am reading more articles of yours and others and will have more queries from to time to understand Hinduism better. Thanks again.

  பதிலளிநீக்கு
 17. I just started to read from the beginning. Nice to read interesting facts in each series, corroborated with scientific evidences drawn from various sources. You have also put in great efforts to reply to the posts. I appreciate your impeccable work.

  பதிலளிநீக்கு
 18. Madam,
  You are mentioned tat thiruvenkadu is vishnu temple. History is telling tat King Raja Raja Chola constructed this temple. If chola and Rama are same generation why chola has to built shiva temple in place of vishnu temple.
  Thiruvenkadu matrum nava graha kovil galai pattriya thiru murai paadalgal poiya. Pl reply in tamil.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. For Thiruvenkadu, I had given the explanation above.
   For the other query, let me ask, why do some people worship a God other than their family deity?

   நீக்கு
 19. மேடம்,
  உஸ்ஸ்ஸ் ஷபபாபா முடியல மேடம். படிக்கிற எனக்கே கண்ண கட்டுது. எப்படி உங்களால இவ்வளவு detail collect பண்ணி எழுத முடியுது.
  உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் . என்னுடைய சில doubt - ஐ clear பண்ணுங்க.
  திருவெண்காடு கோவில் மற்றும் நவக்ரஹ கோவில்கள் விஷ்ணு கோவில் என்று சொல்லி உள்ளீர்கள் .
  சோழர்கள் ராமனின் பரம்பரையாக இருப்பின் அவர்கள் எதற்காக விஷ்ணு கோவிலை சிவன் கோவிலாக convert செய்ய வேண்டும். நாம் விஷ்ணுவின் அவதாரமான இராமரின் பரம்பரையை சார்ந்தவர்கள் என்று அவர்களுக்கு தெரிந்து இருக்கவில்லையா?
  ராஜா ராஜ சோழனின் குரு மகான் கருவூராறுக்கு இது விஷ்ணு கோவில் என்று தெரியவில்லையா ?

  முசுகுந்த சக்கரவர்த்தி வட நாட்டில் இருந்தான் எண்ணும் போது திருவாரூர் -ஐ தலை நகராக ஆண்ட முசுகுந்த சோழன் யார்?
  சப்த விடங்க தலங்களை நிர்மாணித்த முசுகுந்த சோழன் யார்?

  மேற்கூறிய இந்த தலங்களை பற்றி திரு முறை பாடல்கள் பொய்யா? ஏன் திருஞான சம்பந்தர் , அப்பருக்கு தெரிந்து இருக்கவில்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாமதமாக எழுதுவதற்கு மன்னிக்கவும். இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது.

   கோயில் தெய்வ பிரதிஷ்டை ஆகியவற்றில் சில நியதிகள் உண்டு. விஷ்ணு சன்னிதி இல்லாமல் லக்ஷ்மி சன்னிதியை உருவாக்க மாட்டார்கள். ஒரு கோயிலில் விஷ்ணு இல்லாமல் லக்ஷ்மி இருந்தால், அது கேள்விக்குரியது.

   திருவெண்காடு கோயிலில் ஸ்வேதவனப் பெருமாள் என்று பாம்பணையில் பள்ளி கொண்டப் பெருமாள் உருவத்தை ஒரு மண்டபத்தில் மேல் வைத்திருப்பார்கள். அந்தப் பெருமாள் எப்படி, ஏன் அங்கு வந்தார்? ஏதோ சிற்ப அழகுக்காக என்றால்,வெறுமனே தானே வைத்திருப்பார்கள்? அந்த ஸ்தலத்தில் பெயரால் (திரு வெண்காடு = ஸ்வேத வனம்) ஸ்வேத வனப் பெருமாள் என்று ஏன் குறிப்பிடப்பட்டுள்ளார்?

   சிலபப்திகாரத்தில், பூம்புகாரை விட்டுக் கிளம்பியவுடன்
   அறிதுயிலமர்ந்த மணிவண்ணன் கோட்டத்தைக் கோவலனும், கண்ணகியும் வலம் வந்தார்களே, அந்தக் கோயில் - அந்தப் பெருமான் எங்கே?

   அது மட்டுமல்ல, விஷ்ணுவுக்குக் காமனும், சாமனும் (புதன்)மகன்கள். இதைச் சொல்லும் பரிபாடலும் இருக்கிறது. இதன் காரணமாக விஷ்ணுவுக்கு அருகே காமன், புதன் சன்னிதிகள் இருப்பது சாத்தியம். ஜோதிடத்தில், புதன் கிரகமே விஷ்ணு அம்சமாகும். அவ்வாறிருக்க சிவனுக்கு அருகே புதன் இருப்பது எவ்வாறு சாத்தியம்? இங்குள்ள புதன் தனி சன்னிதியாக ராஜ கம்பீரமாக இருக்கிறார். ஆதியில் தனிக் கோயிலாக இருந்த பாங்கை இது காட்டுகிறது.

   மேலும், சிலப்பதிகாரத்தில் மணிவண்ணன் கோயிலை வலம் வந்து சங்க முகத் துறையை அடைகின்றனர், கோவலன் - கண்ணகி. அந்த சங்க முகத் துறை எங்கே? அதைப் பற்றிய குறிப்பை வேறொரு இடத்தில் தேவந்தி கண்ணகியிடம் கூறுகிறாள். காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் சோம குண்டம், சூரிய குண்டத்தில் முழுகி காமவேள் கோட்டத்தில் தொழ வேண்டும் என்கிறாள். விஷ்ணுவின் இன்னொரு மகனான காமன் இங்கு வந்து விட்டான். சாமன் திரு வெண்காட்டில் இருக்கிறான். இரண்டும் காவிரி கடலில் கலந்த பூம்புகாருக்கருகே இருக்கிறது.

   விவரங்களை இந்தக் கட்டுரையின் பிற்பகுதியில் காண்க:-
   http://jayasreesaranathan.blogspot.in/2008/12/paavai-nonbu-how-it-was-done.html

   நீக்கு
  2. (தொடர்ச்சி)

   சமீபத்தில் இங்கு அகழ்வாராய்ச்சி நடந்தது. சோம குண்டம், சூரிய குண்டம் என்பதற்கு ஒப்ப இரண்டு கிணறுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோயில் பணியாளர்களைக் கேளுங்கள் அவர்கள் விவரம் சொல்வார்கள். இந்தக் கோவிலின் ஒரு கோபுரத்தில், விஷ்ணு பரிவார உருவங்களே இருக்கின்றன. இந்தக் கோயிலை ஆராய்ந்த வெளி நாட்டவர், இங்கே புதையுண்ட சன்னிதிகளும், பொருட்களும் இருப்பதை ஊர்ஜிதப்படுத்துகின்றனர் என்றும், அதில் கிடைத்த சில பொருட்கள் அவர்கள் நாட்டில் (இங்கிலாந்து) இருக்கிறது என்றும், கோயிலுடன் நீண்ட நாள் தொடர்பு கொண்ட பணியாளர்கள் கூறுவதைக் கேட்கலாம்.

   இந்தப் பகுதியைச் சேர்ந்த அருகத்தானம் (சமணர் கோயில்) போன்ற இடங்கள் சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டாலும், இன்று அவை இல்லை. சமணத்தை விரட்டியபோது, அவர்கள் கோயில்களும் அழிக்கப்பட்டன. அதைச் செய்ய உதவியவர்கள் வீரசைவர்கள். அவர்கள் விஷ்ணுவையும் தூக்கி விட்டார்கள். இது பல இடங்களிலும் நடந்தது. இன்றுவரை இந்த துவேஷம் தொடர்ந்து வந்துள்ளது என்பதை மறைமலை அடிகள் காலம் வரை பார்க்கலாம். நீதிக் கட்சியினர் நாத்திக வாதம் செய்த போதும், சைவ வழக்கங்களை எதிர்த்த போது, அதை வைணவச் சூழ்ச்சியாகவே அவர் பார்த்தார். அந்த விவரங்களை பின் காணும் இணைப்பில் 118 ஆம் பக்கத்தில் காண்க.

   http://books.google.co.in/books?id=tk-KZmcUEvAC&pg=PA119&lpg=PA119&dq=gnanasambanda+jains&source=bl&ots=efj0CNCFsi&sig=-abcHM9-L4VnS5geEk8S8sMVyfc&hl=en&ei=KwpgTr2xF4i38gOTzdjaDw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CCAQ6AEwAQ#v=onepage&q=gnanasambanda%20jains&f=false

   உண்மையில் வைணவச் சூழ்ச்சி எதுவும் இல்லை. சமணத்தையும், பௌத்தத்தையும் விரட்ட உதவிய சைவர்கள், தங்கள் ஆதிக்கத்தை பலப்படுத்த வைணவத்தையும் எதிர்த்தார்கள். அதில் விழுந்தவை வைணவக் கோயிகளே.

   வாஸ்து நியதிப்படி, சிவன் கோயில் அல்லது சிவ லிங்கம் சமுத்திரத்துக்கு அருகிலும் அல்லது நதிக் கரையிலும் அமைக்கபப்டும். ஏனெனில் சம்ஹார மூர்த்தியான சிவனைத் தொழுதே பித்ரு காரியம், செய்வர். அதனால் இந்த இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்வார்கள். ஆனால் இதை மீறி, எங்கெல்லாம் விஷ்ணு கோயில் இருந்த்தோ அதற்கருகில் போட்டியாக சிவன் கோயில் கட்டும் வழக்கம் சமணத்தை வென்ற பிறகுதான் ஏற்பட்டது.

   திருவெண்காட்டைப் பொருத்த மட்டில், அங்கு அருகருகே சிவன் கோயிலும், விஷ்ணு கோயிலும் இருந்திருக்கலாம். ஆனால் சிலப்பதிகார வர்ணனைப்படி அதற்கான சாத்தியம் இல்லை. முசுகுந்தன் ஸ்தாபித்தான் என்றால் அது மிகப் பழமையானதாக இருக்க வேண்டும். அதைக் கடல் கொண்டு விட்டிருக்கலாம். சிலப்பதிகார காலத்திலேயே அவ்வாறாகி இருக்க வேண்டும். பிறகு திரு வெண்காட்டில் மறு பிரதிஷ்டை செய்திருக்கலாம். இங்குள்ள சிவன் பாடல் பெற்ற மூர்த்தியாகவும் ஆகியிருக்கிறார். ஆனால் விஷ்ணுவுக்குத் தனி சன்னிதி எங்கே? அல்லது ஏன் இல்லை?

   இதை சிவா- விஷ்ணு பிரச்சினையாக ஆக்க நான் விரும்பவில்லை. ஏனெனில் எந்தெந்த தெய்வம், எந்தெந்த கரணம், காரணம் போன்றவற்றுடன் இருக்கின்றன என்பதைப் பற்றியும், ஒரு தெய்வத்தில் பல தெய்வக் கருத்து எவ்வாறு இருக்கின்றன என்னும் வேதாந்தக் கருத்தையும், ஒருவருக்கே, ஒரு பிறவியிலோ, அல்லது பல பிறவிகளிலோ ஒவ்வொரு தெய்வத்துடனும், தொடர்பு உண்டாகும் கர்ம விபாகத்தைப் பற்றியும் அறிந்த காரணத்தினால், ஆத்ம ஞானத்தில் பல்வேறு படிகளில் இருக்கும் பலரும் படிக்கும் பொதுத் தளமான இந்த இடத்தில் அவற்றைப் பற்றிப் பேசுவது சரியல்ல என்னும் காரணத்தினால், சிவ- விஷ்ணு கோணத்தில் ஆராய நான் விரும்பவில்லை.

   நீக்கு
  3. முசுகுந்தன் சிபியை முன்னிட்டு சோழப் பேரரசு ஆரம்பிப்பதற்கு முன்பே இருந்தவன். அவன் பாரதமெங்கும் திக் விஜயம் செய்து, எல்லா இடங்களையும் தன் கீழ் (இக்ஷ்வாகு) கொண்டு வந்தான் என்று மஹாபாரதத்தில் காணலாம். பூம்புகாரில் அவன் சில காலம் இருந்திருக்க வேண்டும் என்பதை நாளங்காடி பூதம் ஸ்தாபித்த விவரங்கள் மூலம் அறியலாம். தேவாசுர யுத்தத்தில் அவன் இந்திரனுக்கு உதவினான் என்பதையும் cross - reference ஆக மஹாபாரத்திலும், சிலப்பஹிகார அடியார்க்கு நல்லார் உரையிலும் காண்கிறோம். இவற்றுடன் சப்த விடங்கத் தல புராணங்கள் அந்தப் பழம் கதையை மெய்ப்பிக்கின்றன. எனவே அவன் ஆங்காங்கே தெய்வ பிரதிஷ்டை செய்து இருக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

   இக்ஷ்வாகு - சூரிய வம்சத்தவனான முசுகுந்தன் விஷ்ணுவைத் தானே வணங்க வேண்டும், சிவனை எப்படி வணங்கல்காம் என்று கேட்கலாம். ஒவ்வொரு தெய்வத்தை வணங்குவதற்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது. பொதுவாக சம்ஹாரத்துக்கு உதவவும், ம்ரண பயம் ஏற்படாமல் இருக்கவும், அகால மரணம், கொலை (போர்ச் செயல்)போன்றவற்றில் தனக்கு பாதிப்பு வராமல் தடுக்கவும், கைலாச பதவி அடைவதற்கும் சிவனை வழிபடுவர்.

   கிருஷ்ணனது வழி காட்டுதலின் படி போரிட்டும், அந்தப் போரில் இறந்தவர்களைத் தானே முன்பே கொன்றதாகவும் கிருஷ்ணர் சொல்லியும், பாண்டவர்கள் போர் முடிந்த பிறகு, ருத்ர கங்கையில் உயிர்க் கொலை பாதிப்பிலிருந்து விடுபட பூஜை செய்தனர். அதையும் கிருஷ்ணன் வழிகாட்ட, செய்தனர். இதனால் ஒருவர் விஷ்ணு பக்தராக இருந்தாலும் அவர் எப்படி சிவனை வழிபட்டார் என்னும் கேள்விகளுக்கு இடமில்லை. இன்னின்ன காரணத்துக்காக அல்லது பலனுக்காக இன்னின்ன கடவுளை வழிபட வேண்டும் என்னும் நியதியில் செய்தார்கள். ஜோதிட சாஸ்திரம் அறிந்தவர்களுக்கு இந்த வேறுபாடுகள், அதன் காரணங்கள் தெரியும்.

   இவற்றுக்கெல்லாம் அப்பால் வைணவர்கள் சிவனை வழிபடக்கூடாது என்னும் நியதியைக் கொண்டிருக்கிறார்களே அது ஏன் என்று கேட்டால், மோக்ஷமே குறியாக இருப்பவர்களும், பரம பதத்தை அடைய விரும்புபவர்க்ளும், விஷ்ணுவிடம் பூரண சரணாகதி செய்து, வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவனுக்குத்தான் மோக்ஷம் கிடைக்கும்.

   பரம பதம் என்பது பிறவாமை மட்டுமல்ல, இந்த அண்டங்களுக்கு அப்பாலும் சென்று விடுதல் என்பதாகும். அந்த நிலை பிரம்ம் லோகம் அடைவதிலோ, கைலாச பதவி அடைவதிலோ ஏற்படுவதில்லை. பிரம்ம லோகமும், கைலாசமும் அழியக்கூடிய அண்டத்தில்தான் உள்ளன. ஒருவன் இந்த உலகங்களை அடைந்து பிறவாமையை அடையலாம். ஆனால் அவன் இந்த அண்டங்களை விட்டு அகலுவதில்லை. மஹாப் பிரளயம் வந்து அண்டங்களே ஒடுங்குகின்ற பொழுதுதான் அவர்கள் அனைவரும், அண்டங்களிடமிருந்து விடுபட்டு அப்பால் செல்கிறார்கள். ஆனால் விஷ்ணுவை முன்னிட்டு மோக்ஷம் அடைபவன் உடனடியாக அண்டங்களிலிருந்து விடுபடுகிறான். இதைத் ‘தத்கிருது’ என்னும் கருது கோளால் அறியலாம். அதன் விவரங்கள் பிரம்ம சூத்திரத்தில் இருக்கின்றன.
   பலனை முன்னிட்டுப் பார்க்கையில், இந்தக் காரணத்தினால், விஷ்ணு கோயிலில் சிவனுக்கு சன்னிதி இருக்காது. ஆனால் சிவன் கோயிலில் விஷ்ணுவுக்கு சன்னிதி இருக்கும்.

   இன்னொரு காரணம், ஒவ்வொரு மூர்த்தியும் முக்குண சேர்க்கையில் அமைகிறது. விஷ்ணு மட்டுமே சுத்த சத்துவம். மற்ற மூர்த்திகளுக்கு பிற குணக் கலப்பு இருக்கிறது. அதனாலும், சுத்த சத்துவப் பிரதிஷ்டையான விஷ்ணு கோயிலில் சிவன் இருக்க மாட்டார்.

   ஆனால் சிதம்பரம் போன்ற சில இடங்களில், சிவனும் விஷ்ணுவும் ஒன்றாக இருப்பது எப்படி என்றால், நீர்ப் பிரளயம் நடந்து அழிவும், அதை அடுத்து அங்கே தோற்றமும் உண்டாகும் சூழ்நிலையில் இருவரும் ஒன்றாக இருப்பர். சிதம்பரத்தின் இரு மூர்த்திகளும், தென்னன் தேசத்தில் இருந்து, பிரளயத்தில் தப்பி குடியமர்ந்த மக்களால் ஏற்படுத்தப்பட்டவை என்பது என் கருத்து. அன்றைக்கு இருந்த மக்களுக்கு, எங்கெங்கு, எதற்காக ஒரு தெய்வத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற தெளிவு (clarity of thought) இருந்தது. கடந்த 1800 வருட காலமாகவே அது இல்லை.

   நீக்கு
 20. மேடம்,
  தங்கள் கேள்வி புரியவில்லை?
  (For the other query, let me ask, why do some people worship a God other than their family deity?)
  ----------------
  (If you see a Lakshmi sannidhi in any Siva temple, know then that the temple was originally Vishnu temple! Lakshmi sannidhi can never exist alone in a temple where there is no sannidhi to Vishnu.)

  சிவன் கோவில்கள் அனைத்திலும் விஷ்ணு இருக்கிறார். விஷ்ணுவாக அல்லது லிங்கோத்பவராக.
  மேலும் சிவன் கோவில்களில் விஷ்ணு இருப்பார் ஆனால் விஷ்ணு கோவில்களில் சிவன் இருப்பதில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தக் கேள்விகளுக்கு, மேலே பதில் கூறி விட்டேன். படிக்கவும்.

   நீக்கு
 21. The main content we need to understand out of this article is the fraudulent propaganda of Muller. I think it has been deviated to Siva-Vishnu topic. For debating about Vaishnavite- Sivaite issues, we have more space and time and that has been continuing for milleniums. So I would request everyone not to forget the main content out of this article.

  பதிலளிநீக்கு
 22. உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது நன்றி

  பதிலளிநீக்கு
 23. Why the definition of Aryavarta (आर्यावर्त, "abode of the Aryans") in Manu Smriti (2.22), Vasistha Dharma Sutra (I.8-9 and 12-13) and Baudhayana Dharma Sutra (1.1.2.10) does not include South India? Does this mean that South Indians are Anaryans?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆரியம் என்ற சொல்லுக்குத் தமிழ்ப் பதம் உள்ளது. அது ‘சான்றாண்மை’ ஆகும்.

   இது குறித்து ஆங்கிலத்தில் உள்ள என் கட்டுரைகளை இந்த இணைப்புகளில் படிக்கவும்:

   http://jayasreesaranathan.blogspot.in/2008/01/no-aryan-dravidian-divide-it-was-one_3029.html

   http://jayasreesaranathan.blogspot.in/2008/01/no-aryan-dravidian-divide-it-was-one_29.html

   http://jayasreesaranathan.blogspot.in/2008/01/no-aryan-dravidian-divide-it-was-one_28.html

   வட இந்தியாவில் சமஸ்க்ருதத்தில் ஆரியம் என்று சொல்லிக் கொண்டார்கள். நாம் தமிழில் சான்றாண்மை என்பதற்கு முதலிடம் கொடுத்து வந்தோம். தான் வாழும் ஊரில் சான்றோர்கள் இருப்பதால்தான் தனது தலைமுடி நரைக்காமல் இருக்கிறது என்று பிசிராந்தையார் சொல்வதாக ஒரு புறநானூற்றுப் பாடல் இருக்கிறது. தன் மகன் சான்றோன் எனப் பெயர் பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு பெண் குழந்தையை ஈனுகின்றாள்.இந்தத் தொடரில் இன்னும் ஆரியம் பற்றி எழுத ஆரம்பிக்கவில்லை. எழுதும் போது இன்றுள்ள பல கேள்விகளுக்கும் பதில் தருகிறேன்.

   நிறக், தமிழ்ப் பகுதில் ஆர்யம் என்ற பெயரில் ஒரு நாடு இருந்தது. ஆரியங்காவு என்னுமிடம் கேரளாவில் உள்ளது அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆரியனது காடு என்று பொருள். யாரந்த ஆரியன்? அந்த ஆரியன், ஐயப்ப ஸ்வாமி!

   இன்னொரு விஷயம், ஆரியங்காவுக்கு அருகில் திராவிட நாடு இருந்தது என்று 1800 களில் எழுதப்பட்ட சென்சஸ் ரெக்கார்டுகளில் உள்ளது. தென்னிந்தியாவின் மேற்குக் கரையோரப் பகுதிகளில் திராவிடேஸ்வர மனு, அவனுடன் இருந்த ரிஷிகள், மக்கள் ஆகியோர் 15,000 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்து வந்தனர். கீழ்க்காணும் இணைப்பில் உள்ள எனது கட்டுரையைப் படித்து விட்டு மேலே தொடருவும்.


   http://thamizhan-thiravidana.blogspot.in/2011/12/blog-post.html

   அங்கிருந்து துவாரகை வழியாக சரஸ்வதி நதி மூலமாக வட மேற்கு இந்தியாவில் நுழைந்து இமய மலை வரை அவர்கள் சென்றனர். அவர்கள் சென்ற போது கங்கை பிறக்கவில்லை. தமிழ், மதுரம் என்னும் பெயரில் பேச்சு மொழியாக இந்தோனேசியா, ஆஸ்திரேலியா அருகில் இருந்த தீவுகளில் பேசப்பட்டது. அதற்குப் பிறகுதான் தென் மதுரையும், மீனாக்‌ஷியும் வந்தனர்.

   மனுவுடன் சென்றவர்களின் வம்சாவளியில் வந்த சிபியின் வழித்தோன்றல், இன்றைய பாகிஸ்தானில் உள்ள சோளிஸ்தானம் என்னுமிடத்திலிருந்து, பூம்புகார் வந்து சோழ வம்சத்தை ஸ்தாபித்தான். சேரர்களும் வடக்கிலிருந்து வந்தவர்களே. ஆக இரு தமிழ் மன்னர் பரம்பரையும், ஆரியக் குடிகளே. வடக்கிலிருந்து வந்தவர்களே.

   தென் பாண்டியன் மட்டுமே தெற்கிலிருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் இன்றைய மதுரைக்கு வந்தான். நீங்கள் ஒத்துக் கொண்டாலும், ஒத்துக் கொள்ளாவிட்டாலும், சங்க நூல்களில் பாண்டியனைத்தான் தமிழ்ப் பரம்பரையில் வந்தவன் என்று சொல்லியுள்ளார்கள்.

   நிற்க, ஆரியங்காவு, திராவிட தேசத்து வருவோம். வைவஸ்வத மனுவின் ஆதி இருப்பிடம், தென்னிந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியே. அதனால் அதன் மீது பாசம் இருந்து வந்த்து. அந்தப் பகுதிகளைக் கடல் கொண்டு விட்டாலும், அவற்றை மீட்டு, ஆதியிலிருந்து வந்த குடும்பங்களைப் பரசுராமர் அங்கே குடியமர்த்தினார். அவர்கள் தங்களைத் திராவிடப் பிராம்மணர்கள் என்றே அழைத்துக் கொண்டனர். ஆரியங்காவும், அதற்கு மேற்கே திராவிட தேசமும் வந்தது இவ்வாறாகத்தான் அடையாளம் காட்டப்பட்டு வந்தது.

   இந்தத் தளத்திலும், என்னுடைய ஆங்கிலத் தளத்திலும் நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் படிக்கவும்.

   அனாரியர் என்று தமிழர்களைச் சொன்ன காலக்ட்டம் இருந்தது. அது இலங்கை வாழ் மக்கள், குறிப்பாக புத்த மதத்தினர், தமிழர்களை அனாரியர் என்றனர். காரணம், மண் வெறி பிடித்து, தமிழ் மன்னர்கள் போரிடச்சென்றதும், இலங்கையின் அமைதி வாழ்க்கையைக் குலைத்ததும் ஆகும். இதைச் சொல்வதற்காக என் மீது பாய்வதற்கு முன், தமிழ் இலக்கணத்தில் காஞ்சித் திணை குறித்து படிக்கவும். மதுரைக் காஞ்சி என்னும் பத்துப் பாட்டு சங்க நூலையும் படிக்கவும். நெடுங்செழியனும், பட்டினப்பலை கரிகாலனும், போரிட்டு செய்த அழிவுகள் அதிர்ச்சியூட்டுபவை. அச்செயல்கள் அனாரியமே. அதனால்தான் சங்கப் புலவர்கள் காஞ்சி பாடி அவர்களை நிதானத்துக்குக் கொண்டு வந்தார்கள். கண்ணகிக்குக் கோவில் கட்டிய செங்குட்டுவனையும், மாடல மறையோன் நிதானத்துக்குக் கொண்டு வந்தான்.

   நீக்கு
 24. NaNbargAL! ungaL anaivarukkum en uLamArnda nanRi. Asiriyar matrum ovvoruvarum sindithu, tAm partita, keTTa maRRum ArAicchi seida vaRRIN aDippaDaiyil, indap poruL paRRi ezhudiyirup-padaip paDittu magizhndom. ip poruL paRRi en suya karittukkaL enRu ezhuduvadu enna enRu enakkut- teriyavillai, puriyavillai enbade enadu nilai. viyaasar veNDAm enRu odukki vaitadaiye nammil palar ( merkattiyar, kizhakkattiyar uLpaDa) ezhudugiRom enbadai ingu ninaivu paDutta virumbugiren, tavaRaga eDuttuk-koLLa veNDAm.

  Aga, ippodu ip-poruL paRRI nAn solla munaivadu iduvanRi vERillai :::

  http://www.heritageinstitute.com/zoroastrianism/aryans/western.htm ::

  Inda pakkattil solliyirukkiRa karuttukkaLil silavenum nAm inge kaurdum poruLukkut- todarrbuLLAvaiyAga uLLana enRu KooRi, ittudan nAn mudittuk-koLLugiren.

  nanRi. vaNakkam.

  பதிலளிநீக்கு