18 – 19 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர் உலகெங்கும் சுற்றிக் கொண்டும், தங்களுக்குப் பரிச்சயமில்லாத புதிய இடங்களையும், புதிய கலாசாரங்களையும் பார்த்துக் கொண்டும் வந்தனர். அந்த காலக் கட்டத்தில்தான் விஞ்ஞானம் முதல் சரித்திரத் தொல் பொருள் ஆராய்ச்சிகள் வரை பல துறைகள் உருவாகிக் கொண்டும், புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டுக் கொண்டும் இருந்தன. சரித்திரத்தைப் பொருத்த வரையில், ஐரோப்பியர்களுக்குத் தங்கள் மூதாதையரைப் பற்றிக் கண்டு பிடிக்க முயன்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இருந்த நாட்டில் இருந்து வந்த கெல்டுகளது பாரம்பரியத்தை அவர்கள் வெறுத்த காலம் அது. அந்தக் கெல்டுகள் தான் தங்கள் மூதாதையர் என்று அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது மட்டுமல்லாமல், கடலில் முழுகின அட்லாண்டிஸ் என்னும் பழைய நகரத்தைப் பற்றியும் கிரேக்க அறிஞர் ப்ளேட்டோ அவர்களது எழுத்துக்களில் அறிந்திருந்தார்கள். அதனால் முழுகிய அந்த இடம் எங்கிருந்தது என்பதை அறியவும் அவர்கள் முயன்றார்கள், இன்று வரை முயன்று வருகிறார்கள்.
அட்லாண்டிஸ் குறித்து அங்கொன்றும் இங்கொன்றுமாக நூல்களில் சொல்லப்பட்டதை வைத்துக் கொண்டு அவர்களது விஞ்ஞானிகளிலிருந்து, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வரை அனைவரும் அந்த இடத்தைக் கண்டு பிடிக்க முயன்று வருகிறார்கள். தங்களுக்கும், அந்தப் பழமையான இடத்தின் நாகரிகத்துக்கும் தொடர்பு உள்ளது என்று நிரூபிக்க முடியுமா என்று தேடுகிறார்கள். ஆனால் நம் நாட்டில், மிக மிக அதிக அளவில் பல பழமையான நூல்கள், நம் பழம் சரித்திரத்தை எடுத்துக்கூறுகின்றன. உலகத்திலேயே அதிக அளவு பழமையான நூல்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன. ஆனால் அவை சொல்லும் எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவற்றை ஒதுக்கியும், தாங்கள் விரும்பிய வழியிலும் தான் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
அப்படி அவர்கள் கண்டு பிடித்த கருத்துதான் ஆரியப் படையெடுப்பு மற்றும் ஆரிய-திராவிடப் போர் என்பது. அது போலவே அறைகுறையாகக் 'கண்டுபிடித்த' கருத்துகள் 'மூ' என்பதும் 'லெமூரியா' என்பதும் ஆகும். பசிஃபிக் பெருங்கடலில் 'மூ' என்னும் ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்தது என்றும் அது இப்பொழுது கடலில் முழுகி விட்டது என்றும் சொன்னார்கள். அது போலவே இந்தியப் பெருங்கடலில் 'லெமூரியா' என்னும் பெரும் நிலப்பரப்பு இருந்தது என்றும் அது இப்பொழுது முழுகி விட்டது என்றும் சொன்னார்கள். இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த இரண்டு கருத்துக்களும் ஒரே ஆண்டில்தான் சொல்லப்பட்டன.
பசிஃபிக் பெருங்கடலில் இருந்ததாகச் சொல்லப்பட்ட 'மூ' கண்டம், கீழுள்ள படத்தில்.
http://en.wikipedia.org/wiki/Mu_%28lost_continent%29
இந்தியப் பெருங்கடலில் இருந்ததாகச் சொல்லப்பட்ட 'லெமூரியா' கண்டம் கீழூள்ள படத்தில்.
http://en.wikipedia.org/wiki/Lemuria_%28continent%29
1864 இல் ப்ரேஸர் டி போர்போர்க் (Charles Étienne Brasseur de Bourbourg) என்னும் ஃப்ரென்சுப் பயணி, 'மூ' என்னும் சொல்லைக் கொடுத்தார். அதுவே தவறாகப் புரிந்து கொண்டு, தவறாக உச்சரித்து உருவாக்கப்பட்ட சொல். அவர் சொன்னதன் அடிப்படையில் அகஸ்டஸ் லி லாங்கியான் (Augustus Le Plongeon) என்னும் ஆங்கிலேயர் "மூ" என்னும் பெயரில் பசிஃபிக் கடலில் முழுகிய கண்டம் இருப்பதாகக் கூறினார். அதே வருடத்தில் ஃபிலிப் ஸ்க்லேடர் (Philip Sclater) என்னும் இன்னொரு ஆங்கிலேயர் லெமூரியா என்னும் முழுகிய கண்டம் இந்தியப் பெருங்கடலில் இருந்திருக்க வேண்டும் என்று தனது புத்தகத்தில் கூறினார்.
இவர்கள் இவ்வாறு சொன்ன காலக் கட்டத்தில் பல புதிய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. ஒருபுறம் விஞ்ஞானமும், மறுபுறம் அதுவரை அறிந்திராத மக்க்ள் தொடர்பும் ஐரோப்பியர்களுக்குக் கிட்டியது. இந்த இரண்டின் தாக்கத்தினால், அவர்களுக்குப் புரிந்த அளவில் உருவாக்கின கருத்துக்களே 'மூ'வும், லெமூரியாவும் ஆகும்.
இவற்றுள் 'மூ' என்னும் கருத்தாக்கத்துக்கு அடிப்படை அமெரிக்காவில் மயன் மக்கள். 'லெமூரியா' என்னும் கருத்தாக்த்துக்கு அடிப்ப்டை, டார்வின் பரிணாமக் கொள்கை. இந்த இரு கண்டக் கருத்துக்களையும் தந்தவர்கள் ஒரு விஷயத்தில் ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதை வேறு எந்த ஐரோப்பிய ஆராய்ச்சியாளரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்தக் கருத்தை அலட்சியப்படுத்திவிட்டே, அந்தக் கண்டங்களைப் பற்றிப் பேசினார்கள். அந்தக் கருத்து, மனித இனம் உலகின் தென் பகுதியில் உருவாகி, காலப்போக்கில் வட பகுதியை நோக்கி நகர்ந்தது என்பதே. அந்த மனித இனத்தை அவர்கள் இந்தியாவுடன் தான் தொடர்பு படுத்தினார்கள். அந்த மனித இனத்தின் சுவடு இந்தியாவில்தான் இருக்கிறது என்றும் சொன்னார்கள். எகிப்து முதலான நாகரிகங்கள் அனைத்துமே இந்த மனித இனத்திலிருந்துதான் உருவானது என்றார்கள். ஆனால் ஐரோப்பாவிலிருந்துதான் மனித நாகரிகம் வந்தது என்ற எண்ணத்தில் இருந்த (இன்னும் இருந்து வரும்) சக ஆராய்ச்சியாளர்கள், அந்த ஒரு கருத்தை எடுத்துக் கொள்ளவில்லை. அப்படி எடுத்துக் கொண்டிருந்தால், ஆரியன் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு வந்து வேதத்தைச் சொல்லிக் கொடுத்தான் என்ற கருத்தாக்கம் என்றோ மறைந்து போயிருக்கும்.
இனி இந்த இரு 'முழுகின கண்ட' விவரங்களை விரிவாகப் பார்ப்போம்.
அமெரிக்காவில் ஐரோப்பியர் குடியேறி, அங்கிருந்த பழங்குடி மக்கள் வாழ்க்கையை அறிய முயன்ற நேரம் அது. அந்த மக்கள், அவர்களது பாரம்பரியக் கதைகள், நூல்கள் ஆகியவற்றிலிருந்து இவர்களாக உருவாக்கின கதையே 'மூ' கண்டமாகும். எப்படி இந்தியாவின் பாரம்பரியக் கருத்துக்களை ஒதுக்கி விட்டு, இவர்களாகவே ரிக் வேதத்துக்கு அர்த்தம் கற்பித்துக் கொண்டு ஆரியப் படையெடுப்புக் கதையை உண்டாக்கினார்களோ, அவ்வாறாகவே மயன் நூல்களிலிருந்து 'மூ' கருத்தை உருவாக்கினார்கள். உண்மையில் 'மூ' என்னும் சொல்லோ அல்லது கருத்தோ, மயன் நூல்களிலும், பாரம்பரியத்திலும் இல்லை. மயன் நூல்களை மொழி பெயர்த்த ப்ரேசர் டி போர்போர்க் என்னும் ஃப்ரென்சுப் பயணி, தனக்குப் புரிந்த அளவில் எழுதி வைத்து விட்டார்.
உதாரணமாக அவர் மொழிபெயர்த்த மயன் நூலான ட்ரோவனோ கோடெக்ஸ் (Troano Codex) என்னும் நூலின் ஒரு பக்கத்தை இங்கு பார்க்கலாம்.
http://en.wikipedia.org/wiki/File:Madrid_Codex_9.jpg
இதில் சொல்லப்படும் விவரம் என்ன என்பதை எடுத்துச் சொல்ல இன்று உள்ள மயன் மக்களுக்கே தெரியாது. ஆனாலும் இதை மொழி பெயர்த்தார்கள். இன்று மேலும் பல ஆராய்ச்சிகள் நடந்து முடிந்த நிலையில், மேலே காட்டப்பட்டுள்ள புத்தகத்தின் கருத்துக்கள் வானவியல், ஜோதிடம் பாற்பட்டவையாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
ஆனால் அன்று ஆரம்பித்த 'மூ' கருத்து நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சியளர்களது கவனத்தைத் தன் பக்கம் வைத்துக் கொண்டது. லி லாங்கியான் எடுத்துக் கொண்ட கருத்தை ஜேம்ஸ் சர்ச்வார்ட் (James Churchward) என்பவர் மூ கண்டம் என்று பிரபலப்படுத்தினார்.
ஜேம்ஸ் சர்ச்வார்ட்.
அதை அவர் எப்படிச் சொன்னார் என்பதை இந்தியர்களாகிய நாம் தெரிந்து கொண்டால், அதில் எந்த அளவு உண்மை இருக்கக்கூடும் என்பது தெரிய வரும். ஏனெனில், அவர் இந்தியாவில் வாழ்ந்த காலத்தில்தான், இந்தியர்கள் உதவியுடன் அந்த 'மூ' கண்டக் கருத்தை உருவாக்கியதாகச் சொல்லியுள்ளார். அவர் இந்தியாவில் காலனி ஆதிக்கம் இருந்த போது, ஆங்கிலப் படை வீர்ராக இந்தியாவில் பணி புரிந்து வந்தார். 'மூ' கண்ட கருத்துக்களில் வரும் பெயர்கள் இந்தியாவிலும் பேசப்பட்டன. அதனால் அவர் ஆர்வம் அதிகரித்த்து.
முக்கியமாக மயன் கருத்துக்க்ளில் நாகம், நாகர்கள் போன்றவற்றைப் பற்றி பல கருத்துக்கள் இருக்கின்றன என்று அவர் நம்பினார். அவை காட்டும் பெயர் நாக்கல் (NACCAL) என்று எண்ணினார். (முந்தின கட்டுரையில் சொன்ன நாஸ்கல் ரிட்ஜ் என்னும் ஆழ்கடல் அமைப்பை நினைவு படுத்திக் கொள்ளவும். நாகர்கள் செல்லக்கூடிய ஆழ்கடல் சுரங்கப்பாதையாக இருக்கக்கூடும் என்பதை அந்தப் பெயர் காட்டுகிறது.)
நாக்கல் என்பது மூ கண்டத்தின் மக்கள் பெயர் என்றும், அவர்கள் பேசின மொழியை நாக்கல் என்றும் அழைத்தார்கள் என்று நினைத்தார். இதைப் பற்றி எங்கிருந்து அறிந்தார் என்றால் அதில்தான் இந்தப் புதிருக்கு விடை இருக்கிறது. அதை அவர் இந்தியாவிலிருந்த ஒரு கோவில் அர்ச்சகரிடமிருந்து அறிந்தாராம். அந்த அர்ச்சகர் அவருக்கு நாக்கல் மொழியில் எழுதப்பட்ட ரகசிய பட்டயத்தைக் காட்டினாராம். அது மிக மிக ரகசியமாக, பூமிக்கடியில் உள்ள அறையில் பாதுகாக்கப்பட்டிருந்ததாம். அந்த இடம் என்று அவர் சொல்வது காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் அடியில் உள்ள சுரங்க அறை!
மிகவும் பாடுபட்டு அந்த அறையை ஒரு முறை பார்த்தும் விட்டார். அங்கு அப்படிப்பட்ட பட்டயங்கள் ஏராளமாகக் குவிந்து கிடந்தனவாம். அவர் பார்த்த ஒரு பட்டயத்தின் படத்தைத் தான் எழுதிய மூ புத்தகத்தில் கொடுத்துள்ளார். அந்தப் படம் இப்படி இருக்கிறது.
இது ஒரு யந்திரத் தகடு. இதில் மந்திர உருவேற்றி, தெய்வமாக வழிபடுவார்கள். தெய்வச் சிலையின் கீழ் பிரதிஷ்டை செய்வார்கள். அப்படிச் செய்யும் பொழுது, இதில் தெய்வம் இறங்கி இருப்பதாக அர்த்தம். இப்படிப்பட்ட தகடுகள் இந்தியாவில் பலரிடமும் உண்டு. இதில் காணப்படும் சித்திர அமைப்புகளை எழுத்துக்கள் என்றும், அதிலும் மறைந்து போன மூ கண்ட நாக்கல் மக்கள் பயன்படுத்திய மொழி என்று அவர் கூறுகிறார். அமெரிக்காவில் மயன் நாகரிகம் இருந்த சுவடுகள் இருப்பதால், நாகர் – மயன் ஆகியோரே மூத்த குடியினர் என்றும், இந்த்த் தகட்டில் இருப்பது அவர்கள் மொழி என்றும், அந்த மக்களிலிருந்து தோன்றியவர்களே எகிப்து நாகரிகம், சுமேரிய நாகரிகம் போன்ற எல்லா நாகரிகங்களையும் உருவாக்கினார்கள் என்றும் கூறியுள்ளார்.
நமக்குத் தெரியும் இதில் இருப்பது மொழியல்ல. ஆனால் இந்தத் தகட்டைப் பற்றியும், இப்படிப்பட்ட 'தடயங்களையுமே' இன்னும் பேசிக் கோண்டு வருகிறார்கள். மூ கண்டத்தைப் பற்றி ஒரு இணைய தளமும் இயங்கி வருகிறது. http://my-mu.com/
அவர் காட்டும் மூ கண்டம் இந்தப் படத்தில்.
Map of Mu by James Churchward
http://en.wikipedia.org/wiki/Mu_%28lost_continent%29
அவர் சொல்லி 200 வருடங்களாகப் போகின்றன. இன்றைய பல துறை முன்னேற்றங்களினால் அங்கு ஒரு கண்டம் இருந்ததில்லை என்று தெரியவந்துள்ளது. ஆனால் நாகர்கள் இருந்தனர் என்று அவர் சொல்வதற்கொப்பாக, பூமிக்கடியில் செல்லும் சுரங்க, குகைப் பாதைகள் அங்கு இருக்கக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன.
நாகர்கள் என்ற பெயரே, ஹிந்து புராண, இதிஹாசங்களின் மூலம் தான் தெரிய வருகிறது. அவர்களைப் பற்றி அறிய இந்த நூல்களைப் படிக்க வேண்டும் அல்ல்து இவற்றை அறிந்த ஹிந்துக்களை அணுகி தெரிந்து கொள்ள வேண்டும். அதுவரை அவர் சரியாகத்தான் செய்திருக்கிறார். ஆனால் அந்த நாகர் உலகம் எங்கிருந்தது என்பதை நிரூபிக்க பிற துறை உதவியும் தேவை. அதன்படி நாம் ஆராயும் போது. நாஸ்கல் ரிட்ஜ் என்னும் பெயரே நாக்கல் – நாகன் என்னும் பெயரிலிருந்து உண்டாகி இருக்க வேண்டும் என்று தெரிகிறது. நெல்லிக்காய் போல ஆங்காங்கே பசிஃபிக் கடலில் சிதறி இருக்கும் அந்த இடமே எரிமலைக் குழம்புகளால்தான் உருவானது. அதை 'நாக லோகம்' என்று சொல்லும் வண்ணம் ஆங்காங்கே கடலுக்குள் குகைகளும் நீண்ட தூரம் சென்றிருக்கக்கூடும். அப்படிப்பட்ட ஒரு குகையைத்தான் கடலுக்குள்ளிலிருந்து வராஹர் எடுத்தார். அப்படி எடுத்த இடமே ஹிரண்யாக்ஷன் வசித்த இடமான ஹிரண்ய புரம். அதைப் பிறகு பார்ப்போம்.
இங்கு மூ என்னும் கண்டம் முழுமையாக இருந்திருக்கச் சாத்தியமில்லை என்றும், ஆனால் அங்கு கடலுக்குள் சுரங்கப் பாதை இருக்க்கூடிய சாத்தியம் இருக்கிறதென்றும் தெரிந்து கொள்வோம்.
பசிஃபிக் கடலில் ஈஸ்டர் தீவையும், தென் அமெரிக்காவையும் இணைக்கும் நாஸ்கல் (நாக்கல்) ரிட்ஜ்.
சுந்தாலாந்து எரிமலைகள் வெடித்தல், அங்கு பல நிலநடுக்கங்கள் ஏற்படுதல் ஆகியவை ஏற்படுத்திய அழிவினால், மக்கள் கூட்டம் சிதறுபட்டு, அதில் ஒரு கூட்டம் பசிஃபிக் கடல் வழியாக தென் அமெரிக்கா வரை சென்றிருக்கிறது. மரபணு ஆராய்ச்சிகளும் இன்று இதை ருசுப்படுத்துகின்றன. பசிஃபிக் பெருங்கடலில் சிதறுண்டது போல இருக்கும் பாலினேசியத் தீவுகளில் உள்ள மக்களது மூலம் தென் கிழக்கு ஆசிய மக்களிலிருந்து செல்கிறது என்றும், இவர்கள் தென் அமெரிக்க்க் கரையிலிருந்து வரவில்லை என்றும் மரபணு ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. சர்ச்வார்டு அவர்கள் சொல்வது போல அந்த மக்களிடையே பழமைச் சுவடுகள் தென் பட்டால், அதன் மூலத்தை சுந்தாலாந்து போன்ற தென்கிழக்கு ஆசியாவில் தேட வேண்டுமே தவிர, பசிஃபிக் பெருங்கடலில் அல்ல.
.
இனி லெமூரியாவுக்கு வருவோம். லெமூரியாவைக் 'கண்டுபிடுத்து'ச் சொன்ன ஃபிலிப் ஸ்க்லேடர் உயிரினங்கள், அவற்றின் வாழ்விடங்களை ஆராய்பவர். டார்வினது பரிணாமக் கொள்கைகளது தாக்கத்துடன் அவர் இந்தியக் கடலில் ஆப்பிரிக்கக் கரையோரம் இருக்கும் மடகாஸ்கர் தீவில் உள்ள உயிரினங்களை ஆராய்ந்த போது, அங்கிருந்தவற்றுக்கும், இந்தியாவில் இருந்தவற்றுக்கும் ஒற்றுமை இருப்பதைக் கண்டார். அவர் ஆராய்ந்தவை ஃபாஸில் (fossils ) எனப்படும் மறைந்த உயிரினங்களது படிமங்கள். அவை அருகிலுள்ள ஆப்பிரிக்காவில் காணப்படாமல், அங்கிருந்து தொலைவிலுள்ள இந்தியாவில் இருந்தன. இதனால், மடகாஸ்கரையும் சேர்த்து இந்தியத் துணைக் கண்டம் இணைந்து ஒரு பெரும் நிலப்பரப்பாக இருந்திருக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்தார். அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட் கண்டமே லெமூரியா ஆகும்.
http://en.wikipedia.org/wiki/Lemuria_%28continent%29
இதன் முக்கிய விவரம் என்னவென்றால், ஒரே பகுதியாக இருந்த போது அங்கிருந்த உயிரினங்கள், கண்டங்கள் பிரிந்து சென்றதால் (continental drift) பிரிக்கப்பட்டன என்கிறார். அவ்வாறு இந்தியா பிரிந்திருக்க்கூடிய சாத்தியம் சமீபகால ஆயிரமாண்டுகளில் இல்லை. அது பல மில்லியன் வருடங்களுக்கு முன்னால் பிரிந்திருக்க வேண்டும் என்பதே விஞ்ஞானம் கூறும் விவரம். ஆனால் குமரி, கொல்லம் என்னும் தென்னன் தேசப் பகுதிகள் நீருக்குள் முழுகி விட்டன என்று தமிழ் நூல்கள் சொல்லவே, இந்த லெமூரியாவைத் தமிழர்கள் பிடித்துக் கொண்டார்கள். பன்முனை விஞ்ஞான ஆராய்ச்சிகளும், இப்படி ஒரு பெரும் நிலப்பகுதி, நீருக்குள் முழுகவில்லை என்றே காட்டுகின்றன. ஒரு பகுதி முழுகினால் இன்னொரு பகுதி எழும்பும். இந்தியக் கடலின் ஆழத்தைப் பார்க்கும் போது, அந்த அளவு ஒரு நிலப்பரப்பு முழுக வேண்டுமென்றால், அதற்குப் பல லக்ஷம் வருடங்கள் ஆகும், அருகிலுள்ள இந்தியப் பகுதிகளையும் அது முழுகடித்திருக்கும்.
இன்றைக்கு விஞ்ஞானம் லெமூரியாவை சாத்தியமற்ற ஒன்று என்று ஒதுக்கி விட்டது. ஆனால் தமிழர்கள் இன்னும் அதைப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். மடகாஸ்கருக்கும், இந்தியாவுக்கும் உள்ள தொடர்பு எப்படி உருவானது என்று தெரிந்து கொண்டால் அவர்கள் மனம் மாறலாம்.
தென்னன் தேசமான பழமையான நிலப்பரப்புகள் ஒரே இடமாக்க் குவிந்து கிடக்கவில்லை. விவரங்களை 46 ஆவது கட்டுரையில் காணலாம். ஏழேழ் நாற்பத்தொன்பது நிலங்களாக இருந்த அவை மடகாஸ்கர் துவங்கி, சுந்தாலாந்து வரை பரவியிருக்கின்றன.
மடகாஸ்கர் அருகிலேயே தமிழ் நாட்டின் அளவுக்கு ஒரு நிலப்பரப்பு 6000 ஆண்டுகளுக்கு முன் வரை இருந்திருக்கிறது.
மாஸ்கரேன் பீடபூமி என்றழைக்கப்படும் இந்த இடம், முழுகிய மலய மலைத்தொடருக்கு அருகில் இருப்பதைக் காணவும். இதையே குமரி மலை என்றிருக்கிறார்கள்.
6000 வருடங்களுக்கு முன் 2ஆம் ஊழியைப் பாண்டியன் சந்தித்தான். அதில் சிதறுண்ட மக்கள் குமரித் தொடர் என்னும் மலயத் தொடரில் இடம் பெயர்ந்து தென் இந்தியாவின் தென்மேற்குக் கரை வரை வந்திருக்கிறார்கள். அங்குதான் கவாடம் இருந்தது என்று முன்னமே விளக்கியிருக்கிறோம்.
கவாடத்தை ஆலவாய் (பாம்பின் வாய்) என்றார்கள். அதே பெயரில் ஆல்வே (ALWAYE) என்றும், இன்றைக்கு அலுவா (ALUVA) என்றும் கேரளாவில் இடங்கள் இருக்கின்றன.
http://en.wikipedia.org/wiki/Aluva
கவாடமும் முழுகின பிறகு உண்டான இடமாக இது இருக்க வேண்டும். கொல்லம் என்னுமிடமும் இந்தப் பகுதியில்தான் இருக்கிறது. இந்தக் கொல்லமும் முழுகின பழைய கொல்லத்தின் நினைவில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 2 ஆம் ஊழியின் போது, அந்தக் குமரி மலையை இருப்பிடமாகக் கொண்டு அது செல்லும் மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக ராஜஸ்தான் வரை மக்கள் பரவியிருக்கிறார்கள். கூழுள்ள பட்த்தில் மாஸ்கரேன் பீடபூமியிலிருந்து குமரி மலைத் தொடரும், அதுவே மேற்குத் தொடர்ச்சி மலையாகச் செல்வதும் காட்டப்பட்டுள்ளது.
மடகாஸ்கருக்கும், இந்தியாவுக்கும் தொடர்பு ஏற்பட்ட இந்த அமைப்புக்கு முக்கிய ஆதாரம், இந்தியாவில் காணப்படும் ஸீபு (ZEBU) எனப்படும் மாடுகள் ஆகும். இவை இந்தியாவில் மட்டுமே காணப்படுகின்றன. மரபணு ஆராய்ச்சிகளின் மூலம் இவை மடகாஸ்கரிலும் இருந்திருக்கின்றன என்று தெரிய வந்துள்ளது. ஆனால் இவை மடகாஸ்கரிலிருந்து இந்தியாவுக்கு வரவில்லை. மடகாஸ்கருக்கு அருகிலுள்ள ஆப்பிரிக்காவிலும் இவை இல்லை. ஆனால் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே இவை இந்தியாவிலிருந்து மடகாஸ்கருக்குச் சென்றிருக்கின்றன என்று மரபணு ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ("Recent studies in Indian Archeo-linguistics and Archeo genetics having bearing on Indian Prehistory" by Dr P. Priyadarshi).
இன்றைக்கு இருப்பது போல 5000 ஆண்டுகளுக்கு முன் மடகாஸ்கரும், இந்தியாவும் கடலால் பிரிக்கப்படவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 3000 ஆண்டுகளுக்கு முன்புதான் கடைசி ஊழி வந்து குமரி மலை முழுவதும் நீரில் முழுகி இருக்கிறது. அந்த்த் தொடர்பு அறுபட்ட தாக்கம், கேரளப் பகுதியில் அன்று இருந்தவர்களுக்கே அதிகம் இருந்திருக்கும். அத்னால்தான் என்னவோ, குமரியும், கொல்லமும் முழுகின விவரத்தைச் சேர நாட்டு மாங்காட்டுப் பார்ப்பனன் சிலப்பதிகாரத்தில் கூறுகிறான்.
அந்த ஊழிக்கு முன் இணைப்பாக அருகருகே தீவுகளாக குமரிமலைத்தொடர் இடம் கொடுத்திருக்கிறது. அவற்றின் வழியாக மாடு மேய்ப்பவர்கள் அங்குமிங்கும் இடம் பெயர்ந்திருக்கிறார்கள். ஆனால் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த 3 ஆம் ஊழியில், முழுவதுமாக இந்தத் தொடர்பு அறுபட்டு, குமரி மலை முழுவதும் முழுகி விட்டது. எனினும் அந்த மலைத் தொடர் வழியாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில், மக்கள் கூட்டம் என்றோ சென்று விட்ட்து.
தெற்கில் அதன் அடையாளம், சிலப்பதிகார வேட்டுவ வரியில் காணப்படுகிறது. மஹிஷாசுரனை வதைத்த மஹிஷாசுரமர்த்தினி என்னும் பெண் தெய்வத்தை அந்த மக்கள் வழிபட்டிருக்கிறார்கள். ஆநிரை கவர்ந்து வந்து ஊர் மக்களுக்கு அளித்து, அந்த தெய்வத்துக்கு மாடு பலி கொடுத்து வழிபட்டிருக்கிறார்கள். அவர்களைப் போலவே மேற்குத் தொடர்ச்சி மலையில் இன்னும் வடக்கு நோக்கிப் போனால மஹர் மற்றும் மாங் மக்கள் இவர்களை ஒத்தே வாழ்ந்திருக்கிறார்கள். மஹர் மக்களால் மஹாராஷ்டிரா என்னும் பெயர் ஏற்பட்டது. இவர்களும், வேட்டுவரி வேடர்களைப் போலவே மாடுகளைப் பலியிடுதல் செய்து பெண் தெய்வத்தை வழிபட்டிருக்கிறார்கள். எங்கு மாடுகள் இறந்தாலும் இந்த மக்களே அவற்றை அப்புறப்படுத்தி அடக்கம் செய்வார்கள். ஆனால் இவரகளது தொழில் வேட்டுவரி வேடர்களைப் போல பசுக்களைத் திருடுதல் (ஆநிரை கவர்தல்). (இதன் பின்னால் இருக்கும் தொல்காப்பியம் கூறும் பழமை மரபை வேறு ஒரு இடத்தில் காண்போம்.). இதனால் இவர்களைத் திருடர் பரம்பரை என்று முத்திரை குத்தி, கீழ் ஜாதி என்றாக்கினவர்கள் ஆங்கிலேயர்க்ளே.
இங்கு நாம் சொல்ல வரும் கருத்து, தென் இந்தியக் கடல் பகுதியிலிருந்து, ஆங்காங்கே இருந்த தென்னன் தேச மக்கள் இந்தியப் பகுதியுடன் கொண்ட தொடர்பினைக் காட்டவே.
இந்தியக் கடலில் லெமூரியா என்னும் கண்டம் இருக்கவில்லை, அங்கிருந்து இவர்கள் வரவில்லை.
இங்கு சொல்ல வேண்டிய இன்னொரு கருத்து இருக்கிறது. அது குமரி என்னும் பெயர் எப்படி வந்தது என்பதே. சமஸ்க்ருத்த்தில் உலகின் வட பகுதி மற்றும், வட துருவத்தை 'சுமேரு' என்றும், தென் பகுதி மற்றும் தென் துருவத்தைக் 'குமேரு" (कुमेरु) என்றும் அழைப்பார்கள். குமேரு என்பது குமாரி, குமரி என்றாகி இருக்கிறது. பெயர்க் காரணத்தில் குமரி என்னும் இடம் இன்னும் தெற்கே செல்கிறது. அதி நாம் காட்டும் தென் மதுரை பொருந்தும்.
42 ஆவது கட்டுரையிலும், 45 ஆவது கட்டுரையிலும் விவரங்களைக் காணவும்.
குமேருவிலிருந்து சிறுகச் சிறுக வடக்கு நோக்கி நகர்ந்த மக்கள் வடபுலத்துக்குச் சென்று விட்டால், அதைச் சுமேரு என்று அழைப்பார்கள். அப்படி ஒரு கூட்டம் சென்றடைந்த இடமே சுமேரியா என்றாகி இருக்கிறது.
இந்தப் படத்தில் அரபிக் கடல் பகுதியில் இருந்தவர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்து ஒரு பிரிவு, சரஸ்வதி நதி வழியாக இந்தியாவில் நுழைந்த்தையும், இன்னொரு பிரிவு, பாரசீகக் கடல் வழியாக மெசபடோமியா பகுதியில் நுழைந்திருக்கக்கூடிய சாத்தியத்தையும் காட்டுகிறது. அந்தப் பகுதியைத்தான் சுமேரியா என்கிறார்கள். இதனால் தமிழ்ப் பெயர்கள் சுமேரியாவிலும் இருப்பதில் ஆச்சரியமில்லை.
சரஸ்வதி நதி வழியாக நுழைந்தது மனுவும் அவனைச் சேர்ந்தவர்களும். இங்கு ஒரு கேள்வி எழலாம். குமேரு பகுதியிலிருந்து வந்த்தால், மனுவே பாண்டியனாக இருக்கலாமல்லவா? அவனைத் திராவிடேஸ்வரன் என்று சொல்லவே இந்தக் கேள்வியை எழுப்புகிறார்கள்.
அவன் பாண்டியன் அல்லன். ஏனெனில் (1) 12,000 ஆண்டுகளுக்கு முன் அவன் இந்தியாவில் சரஸ்வதி நதியில் நுழைந்த பொழுது, தெற்கே தென் மதுரையில் மாண்டியன் தமிழை இலக்கணப்ப்டுத்தி, முதல் சங்கத்தை உருவாக்கிக் கொண்டிருந்தான். (2) மனுவின் மகன் இக்ஷ்வாகு மூலமாக இக்ஷ்வாகு பரம்பரை வட இந்தியாவில் தோன்றியது. அதற்கும் பாண்டியனுக்கும் சம்பந்தமில்லை. (3) பாண்டியன் சந்திர வம்சம் – பெண் வழி மரபணுப் பரம்பரையில் வருபவன். மனு, சூரிய வம்சம் – ஆண் வழி மரபணுவில் வருபவன். ஆதியில் இந்த இருவருக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. ஆனால் 10,000 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து விட்டிருக்கிறார்கள்.
குமேருப் பகுதிகளிலிருந்து வங்கக்கடல் மூலமாகவும் மக்கள் டாக்கா (இன்றைய பங்களாதேஷ், மேற்கு வங்காளம்) போன்ற இடங்களுக்கு இடம் பெயர்ந்திருக்கிறார்கள். தீயர், தீவர் (தீவு என்னும் சொல்லிலிருந்து ஏற்பட்டவை) தீமர், தீச்சர் என்னும் பெயர்களில் பல 'ஜாதியினர்' பெங்கால், மஹாராஷ்டிரா ஆகிய இடங்களில் இருந்த்தாக ஆங்கிலேயர்கள் எழுதின சென்ஸஸ் கணக்கெடுப்பில் 1881 ஆண்டே எழுதப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஏதேனும் கஷ்டம் ஏற்பட்டாலோ, அல்லது மீன் பிடி காலங்களில் தடங்கல்கள், புயல் போன்ற வானிலைத் துன்பங்கள் ஏற்பட்டாலோ இவர்கள் 'கால- குமரி' என்னும் தெய்வத்தை வழிபடுவார்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது. முழுகின குமரிமலை, தென்னன் நாடு, அங்கிருந்த குமரி ஆறு, குமரித் தெய்வம் ஆகியவற்றுக்கும் இவர்களுக்கு தொடர்பு இருப்பதை இது காட்டுகிறது.
தீவர்கள் என்னும் பெயரால், அவர்கள் தீவுப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், ஆதியில் தீவுப் பகுதிகளாக இருந்த இடங்களில் வசித்தனர் என்றும் தெரிகிறது. அவர்களது 'குமரி' வழிபாட்டால் ஆதியில் தென்ன்ன் தேசத்தில் இருந்த குமரியுடன் இருந்த தொடர்பு புலனாகிறது. தென்பாண்டியன் தென் மதுரையில் வாழ்ந்து வந்தாலும், பெரும் கடற்பரப்பில் ஆங்காங்கே இருந்த 49 நாட்டு மக்களும் அந்தத் தென்னன் மரபுகளையே பின்பற்றி வந்திருக்கின்றனர். பசிஃபிக் கடலில் பாலினேசியா என்று பெரும் பகுதியில் தீவுக் கூட்டங்கள் இருந்தது போல இந்தியக் கடலில் மடகாஸ்கரை ஒட்டிச் செல்லும் மலய மலைத்தொடரும், 90 டிகிரி மலைத்தொடரும் தென்னன் மக்களுக்கு இடம் கொடுத்திருக்கிறது.
அப்படியிருக்க லெமூரியாவைப் பெருங் கண்டமாக கற்பனை செய்துக் கொண்டு, அங்குதான் 'குமரிக் கண்டம்' இருந்தது என்று சொல்லிக் கொண்டிருப்பதும் ஆதாரமற்றது.
இனி முந்தின கட்டுரையில் விட்ட இடந்த்திலிருந்து தொடர்வோம். நாகத்தின் பெயர்த் தொடர்பு கொண்ட நாஸ்கல் தொடர் தென் அமெரிக்காவுக்கும், தென்னன் மக்களுக்கும் பாலமாக இருந்ததா என்று ஆராய்வோம்.
தென்னன் பற்றிய கருத்துகளை எந்த அத்யாயத்தில் முதல் முறை சொன்னிர்கள் என்று சொல்ல முடியுமா.
பதிலளிநீக்குஅவரை பற்றி நான் படிக்க தவறிவிட்டேன்.
Please type தென்னன் in the search box and you will all the articles where there is mention of தென்னன்.
நீக்குThank you mam. May you home light up with the joy of Deepavali!!
பதிலளிநீக்குThanks a lot Mr Srikanth. Sorry for the delayed response. I was not in town for the past 5 days and could not access the net often and for long time.
நீக்குDear Mam,
பதிலளிநீக்குI remember reading some articles in some sites claiming something like, Tamils came from Sumeria showing the linguistic resemblance of the two languages.Now I understand that this could have happened in the manner explained by yourself and not the otherwise.
More detailed articles on this had been published by me in English and circulated among international scholars. Please read them.
நீக்குPart 1:-
http://jayasreesaranathan.blogspot.in/2012/12/mu-to-lemuria-kumari-kandam-to-sumeria.html
Part -2
http://jayasreesaranathan.blogspot.in/2012/12/mu-to-lemuria-kumari-kandam-to-sumeria_21.html
On Mayan also I am currently preparing in English after which I will continue the Tamil series here. I will post the links to Mayan articles here and under Mayan articles in this Tamil series.